Everything posted by தமிழ் சிறி
-
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ். ”ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள் உலகை வெல்ல வாய்ப்பளியுங்கள்” என்ற தொனிப்பொருளில் விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஆரம்ப வயதுகளில் குழந்தைகள் திரைச் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், கற்றல், சமூக தொடர்பு, மற்றும் விளையாட்டு போன்ற பன்முகவளர்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கான வளர்ச்சி சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும். சிறுவர்களின் மனநலத்தையும், உடல் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்” இவ்வாறு அமைச்சர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439988
-
செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
செம்மணி செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்! இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. அப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.பின்னர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகி ஜூன் மாதம் 7ஆம் திகதியோடு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தன. மொத்தமாக 9 நாட்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணியில் 19 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் மேற்கொள்வது எனவும், 15 நாட்களுக்கு ஒருமுறை சிறிய இடைநிறுத்தல்களுடன் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது எனவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட முதல் 15 நாட்களுக்கான அகழ்வுப் பணிகள் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை என 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. முதலாம் கட்ட அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டத்தின் முதல் 15 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு என மொத்தமாக 24 நாட்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பாடசாலை புத்தகப்பை, சிறுமிகளின் ஆடைகள், பாதணிகள், காற்சங்கிலிகள், சிறிய பிளாஸ்டிக் வளையல்கள், பிளாஸ்டிக் பூமாலை உட்பட பல்வேறு சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று காலை மீள ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439979
-
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி. இந்திய இராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி அடுத்த மாதம் 21ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இந்த நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வெற்றி கொண்டாட்டம் போன்றது. இந்திய இராணுவத்தின் வலிமையை உலகம் பார்த்துள்ளது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய இராணுவம் நிர்ணயித்த இலக்குகள் 100 சதவீதம் வெற்றியடைந்துவிட்டன. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளின் வீடுகள் 22 நிமிடத்தில் தரைமட்டமாக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்தன. உலக நாடுகளின் தலைவர்களை நான் சந்திக்கும்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ ஆயுதங்கள் தங்கள் ஈர்ப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் ஆயுத உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்திய தேசியக்கொடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பறக்கவிட்டப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. அனைத்து எம்.பி.க்களும் நாட்டு மக்களும் ஒரே குரலில் இந்த சாதனையைப் போற்றுவார்கள். நமது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இது ஊக்கமாக இருக்கும். உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா விரைவில் எட்டும். நாட்டில் பண வீக்கம் குறைந்து வளர்ச்சி அதிகரித்துள்ளது ” இவ்வாறுஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439939
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா ஆரம்பம்! வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (21) இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றை திருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காடில் வசிக்கும் கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட்19ஆம் திகதியும் , 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும் , மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று , மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும். https://athavannews.com/2025/1439950
-
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்டோர் உட்பட 12 பேர் விடுதலை
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்டோர் உட்பட 12 பேர் விடுதலை. 2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை மேல் நீதிமன்றம் இன்று (21) விடுதலை செய்தது. மும்பையின் ரயில் வலையமைப்பை உலுக்கிய இந்த குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்ததுடன், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2015 ஆம் ஆண்டு இது குறித்த வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட மேற்கூறிய 12 நபர்களில் 05 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்து 19 ஆண்டுகளின் பின்னர் இந்த விடுதலை வந்துள்ளது. நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு நீதிபதிகள் குழு, அரசு தரப்பு வழக்கில் உள்ள கடுமையான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மேற்கண்ட தீர்ப்பினை அறிவித்தது. “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததாக நம்புவது கடினம். எனவே, அவர்களின் தண்டனை இரத்து செய்யப்பட்டு, தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்று நீதிபதிகள் அமர்வு கூறியது. அதேநேரம், வேறு எந்த வழக்கிலும் அவர்கள் தொடர்புபடாது விட்டால் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதிகள் குழு கூறியது. விசாரணையின் போது மீட்கப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வரைபடங்கள் குண்டுவெடிப்புகளுடன் தொடர்பில்லாததாகத் தெரிகிறது என்றும் நீதிபதிகள் குழு கூறியது. குண்டுவெடிப்புகளில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கூட அரசுத் தரப்பு நிரூபிக்க முடியவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது. 2006 ஜூலை 11 அன்று, மும்பையில் தனித்தனி உள்ளூர் ரயில்களில் 11 நிமிடங்களுக்குள் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகள் இந்தியாவின் மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439946
-
கசூரினா கடற்கரையில் பாரிய தீ விபத்து!
கசூரினா கடற்கரையில் பாரிய தீ விபத்து! யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம்(21) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள் , பனை மரங்கள் என்பன தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1439919
-
"சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதம் அறிமுகம்
பெயரை மாற்றி வைத்தால் மட்டும் போதாது. சகோதர இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு மனப்பான்மையும் மாறவேண்டும்.
-
ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!
ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா! சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான ZEE தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் நான் அணியும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. எனது ஆடைகள் தொடர்பில் வெளியான விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகினேன். அதனால் சரிகமபவில் என்னால் சிறப்பாக பாடமுடியவில்லை. சரிகமப குழுவினர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு ஆதரவளித்து விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பாடலைப் பாடு என்று ஊக்கமளித்தனர். இருப்பினும் என்னால் சிறந்த முறையில் பாடமுடியவில்லை.இதனாலேயே நான் வெளியேறி வந்துள்ளேன்” என சினேகா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439929
-
கருத்து படங்கள்
- சிறையில் ஒபாமா; ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி!
சிறையில் ஒபாமா; ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அண்மைய இலக்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவாகத் தெரிகிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலில், ஒபாமாமோசடி செய்ததாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்திற்குள் புலனாய்வுப் பிரிவு (FBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளியை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி, எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்று கூறுவதோடு தொடங்குகிறது. பின்னர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல்வேறு ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், “யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல” என்று கூறுவதைக் காட்டுகிறது. காணொளியின் சில நொடிகளுக்குப் பின்னர், ஒபாமா செம்மஞ்சள் நிற சிறைச்சலை சீருடையுடன், தடுப்புக் காவலில் இருப்பதை காட்டுகின்றது. ட்ரம்ப் தனது சமூக தளத்தில் வெளியிட்ட இந்த காணொளி வைரலாகி, விமர்சனங்களையும் பெற்றுள்ளது. 2016 தேர்தலில் ட்ரம்பின் வெற்றியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக தேசிய புலனாய்வு இயக்குநர் (DNI) குற்றம் சாட்டியுள்ள பின்னணியில் இந்த காணொளி வந்துள்ளது. ஒபாமா மற்றும் முன்னாள் மூத்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, சுவாரஸ்யமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரியில் நடந்த முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் ட்ரம்ப் மற்றும் ஒபாமா நட்புடன் உரையாடினர். அவர்களின் எதிர்பாராத நட்பு தருணத்தின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியது. https://athavannews.com/2025/1439913- இன்றைக்கு இவன், நாளைக்கு எத்தனை பேரோ?
இன்னைக்கு இவன்.. நாளைக்கு எத்தனை பேரோ? இந்த பையன் மூன்றாண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவனாக இருந்த போது 'சிறுவன்'. அப்பவே ஸ்கூல் ரவுடியாக ஆசிரியரை எதிர்த்து தம்பி பேசிய வீடியோ படு வைரல். அதாவது அந்த ஸ்டைல் பேச்சு என்னென்னா, "ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு.. போட்டா பெயிலு" அப்ப ஏதாவது பண்ணி இருந்தா சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போய் இருப்பான். திண்டுக்கல் தம்பி இப்போ மாட்னது 19 வயசுல. அதுவும் ஏடிஎம்முக்கு கொண்டு போன பணம் 29 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில். ஸோ, நேரடியாக ஜெயில்.. ஒன்னே கால் வயசு தம்பிய ஏமாத்திடிச்சு.. தமிழ்நாடு முழுக்க பள்ளிகளில் இந்த மாதிரி தறுதலை மனநிலையோடு மாணவர்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம், ஒரே நினைப்பு, சட்டம் நம்மளை ஒன்றும் புடுங்கி விட முடியாது. அப்புறம் கைது என்றால் ஏதோ கடைக்கு போய் டீ குடித்துவிட்டு வரும் சமாச்சாரம் என்று நினைக்கிறார்கள்.. இந்த மாதிரி தறுதலைகளுக்கும் இவைகளை வேடிக்கை பார்க்கும் பெற்றோருக்கும் சில விஷயங்கள் புரிவதில்லை. கைது.. பின்னாடி இன்னான்னா? ஜூம் பண்ணி பார்ப்போம். பல விஷயங்களில் இவர்கள் கைது , அவர்கள் கைது என பேப்பரில், கைது என்பதை செய்தியாக சர்வசாதாரணமாக படித்துவிட்டு கடந்து விடுவீர்கள். மற்ற குற்றவாளிகளை விட்டுவிடுங்கள். தற்செயலாய் சிக்கும் புதியவர்களின் நிலைமை இருக்கிறதே, அதுதான் இங்கே பெரும்பான்மை. ஆனால் அவர்களில் பலருக்கும் சட்டத்தின் பின்விளைவுகள் என்பது மருந்துக்கும் தெரியாது. சட்டத்தால் நம்மை தொடக்கூட முடியாது என்று இந்த காலத்து தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் பொதுவெளியில் கெத்து காட்டுகிறார்கள். மாஸ் ஹீரோக்களின் பில்டப் சினிமாக்களை மட்டுமே பார்த்துப் பார்த்து கும்பலைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சாதாரண அடிதடி என்று வைத்துக்கொள்வோம். விசாரணைக்கு என்று காவல் நிலையத்திற்கு கூட்டிக்கொண்டு போவார்கள். காவல் நிலையத்தில் நுழையும்போதே பின்னங்கழுத்தில் ... விழும். டூட்டிக்கு புதிதாக வருபவர்கள், என்ன கேசு இது என்று நாலு தட்டு தட்டிவிட்டுத் தான் மற்ற வேலையையே பார்ப்பார்கள். அதே மாதிரி, அடுத்த டூட்டிக்கு வரும்போது அக்யூஸ்ட்டை பார்க்க வாய்ப்பு இருக்காது என்று நினைத்து போகும்போது கொஞ்சம் விருந்து வைத்து விட்டு தான் செல்வார்கள். சுருக்கமா சொன்னா இருக்கிறவங்க, வர்றவங்க, போறவங்கன்னு எல்லார்கிட்டயும் விழும். இவ்வளவு விழுந்தாலும் குடும்பத்தினரும் உறவினர்களும் காவல் நிலையத்திற்கு அருகிலேயே காத்துக் கொண்டிருப்பதால் நிலைமை பற்றி சீரியஸாக பெரிதாய் தெரியாது. யாரையாவது பிடித்து எப்படியாவது பேசி எதையாவது கொடுத்து வெளியே கொண்டு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருக்கும். அதாவது அடித்ததோடு விட்டுடுவாங்க என்ற அசால்ட்டான நம்பிக்கை . ஆனால் எப்ஐஆர் போட்டு ரிமான்ட் செய்தே ஆகவேண்டும் என்ற சூழல் உருவாகி காவல்நிலையத்தில் பலரும் பேசிக் கொள்ளும் போதுதான், லாக்கப்பில் இருக்கும் பார்ட்டிக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்போதுகூட அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியாது. நீதிமன்றத்திற்கு அழைத்து கொண்டு செல்லும்போது கூட ஏற்கனவே தெரிந்த காவலர்கள்தான் வருவார்கள். கூடவே குடும்பத்தினரும் உறவினர்களும் வருவார்கள். மேஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்து ஜெயிலுக்காக வேனில் ஏற்றும் வரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அருகில் பார்க்க முடியும். இதற்குப் பிறகுதான் சோதனைகள் ஆரம்பிக்கும். வேனில் ஏற்றிய பிறகு குடும்பத்தினர் உறவினர்கள் கட் ஆவார்கள். ரிமாண்ட் க்கு பிறகு சகஜமாக பேசிக்கொண்டு கூடவே வரும் காவலர்கள் சென்ட்ரல் ஜெயிலில் ஒப்படைத்த உடன் காணாமல் போய்விடுவார்கள். ஜெயில்.. முற்றிலும் புதிய இடம்.. உள்ளே அட்மிஷன் போடுவதற்காக அங்க அடையாளங்களை கேட்கும்போதே விதவிதமாக சீர்வரிசை. புழுவை விட கேவலமாக கருதி அவர்கள் நடத்துகிற விதத்திலேயே ஜென்மம் செத்துப் போய்விடும். அதற்கப்புறம் சிறையில் பிளாக் என்கிற வகுப்பு. விதவிதமாக துர்நாற்றங்கள் கலந்து வீசும் அங்கு ஏகப்பட்ட பேருடன் விசாரணைக் கைதி என்ற அந்தஸ்தோடு குடும்பம் நடத்திய ஆக வேண்டும். டாய்லெட் காலியாக இருக்கும் நேரம் பார்த்து அதைப் பிடித்து போய் வருவதற்குள்.. மூன்று வேளையும் கியூவில் நின்று தட்டில் வாங்கித் தின்னுவதற்குள்.. கக்கூசை கழுவ விடலாம், துணிகளை துவைக்க விடலாம் தோட்ட வேலை செய்ய விடலாம் இன்னும் என்னென்ன வேலை இருக்கிறதோ அத்தனையையும் செய்யச் சொல்லலாம். வார்டன்கள் சொல்வதை செய்யாவிட்டால் அடுத்தடுத்த கட்ட நெருக்கடிகளுக்கு ஆளாகிக் கொண்டே போகலாம். ஜெயிலுக்குப் போன ஓரிரு தினங்கள் தொடர்ந்து குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் பிஸ்கட் பழங்களுடன் வந்து அக்கறையாக பார்ப்பார்கள்.. ஜாமின் கிடைப்பதில் தாமதம் ஆகி உள்ளே இருக்க இருக்க, அக்கறை யோடு வந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களின் வருகை என்பது குறைந்து கொண்டே போகும். ஒரு கட்டத்தில் அடியோடு கூட நின்று போகும். ஜாமீன் கிடைத்து வெளியே வரும்வரை ஏண்டா இந்த தவறை செய்தோம் என்று நினைத்து வருந்தாதே தருணமே இருக்க முடியாது. வாரங்கள் கழித்து மாதங்கள் கழித்து ஜாமீனில் வந்த பிறகு, பட்டதெல்லாம் போதும் என நொந்து போய் சொந்த வேலையை பார்க்க ஆரம்பித்து இருப்பார். அப்படியே ஜெயில் சமாச்சாரத்தையும் மறந்து விடுவார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்திலிருந்து நேரில் ஆஜராகும்படி சம்மன் வரும். அப்போது பார்த்தால், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இருக்கலாம். ஒரு வியாபாரம் ஆரம்பித்து நன்றாக போய்க் கொண்டிருக்கலாம். அல்லது புது மாப்பிள்ளையாக மாமனார் வீட்டில் கெத்து கூட காட்டிக் கொண்டிருக்கலாம். எல்லாமே தொலைஞ்சு போச்சு என்று மறந்துவிட்டிருந்தால் இந்த நேரத்தில் பார்த்தா இந்த எழவு வரவேண்டும் என நொந்து போய் தலையில் அடித்துக்கொண்டு உட்காருகிற கட்டம் அது. குற்றப்பத்திரிகை தாக்கல் விசாரணை என நீதிமன்றங்களுக்கு வருடக்கணக்கில் அலைய நேரிடும். உள்ளூரில் வழக்கில் சிக்கி உள்ளூர் நீதிமன்றத்தில் அலைய நேரிட்டால் ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் வெளியூரில் தப்பு செய்துவிட்டு அங்கேயே அங்கேயே மாட்டி அந்த நீதிமன்ற எல்லைக்குள் வழக்கு நடந்தால், சுத்தம். ஒவ்வொரு முறையும், அன்றைய தின எல்லா வேலைகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு வழக்குக்காக ஊரு விட்டு ஊரு போய் வரும் வரை நாய் அலைச்சல்தான். சென்னையிலிருந்து குற்றாலத்திற்கு குளிக்கப் போய் அங்கு தகராறு செய்துவிட்டு வழக்கு பதிவாகி சென்னையில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென்காசி நீதிமன்றத்திற்கு இன்றைக்கும் நடப்பவர்கள் பலருண்டு. இதேபோல நீண்டதூர மாவட்டங்களுக்கு பயணம் செய்யும்போது அங்கு ஏதாவது ஒரு விஷயத்தில் தகராறு வழக்கு பதிவாகி சொந்த ஊருக்கும் தகராறு நடந்த ஊர் நீதிமன்றத்திற்கும் அலையும் பரிதாபங்கள் பற்றிக் கேட்டுப் பாருங்கள். விதவிதமான கண்ணீர் கதைகள் கிடைக்கும் சரி போகட்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பு கட்டம். இதற்குப் பிறகு? வேறென்ன? தண்டனை கொடுத்தால் உள்ளே போக வேண்டியதுதான். விடுதலை என்றால் ஆள விடுங்கடா சாமி என்று புத்தர் ரேஞ்சுக்கும் போகலாம்.. எல்லாமே பழகிவிட்டதால் அடுத்த ரவுண்ட்டையும் பார்த்துவிடலாம் என இன்னும் திமிர் அதிகமாகலாம். அப்புறம் வழக்குகளுக்கான செலவு, சமூகம் மற்றும் சொந்த பந்தங்கள் இடையே அவமானம்.. போன்றவை உள்ளூர் வரிகள்.. முக்கிய குறிப்பு.. சொன்னது கொஞ்சம் தான்.. சொல்லாமல் விட்டது தான் அதிகம்.. இதையெல்லாம் வீட்டில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.. பள்ளிகளில் சொல்லி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை. சொல்ல வேண்டிய கடமை உள்ளதால்தான் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம். Ezhumalai Venkatesan- ஆடி மாத சிரிப்புகள்.
- அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்! தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆன்மீகவாதியான அன்னபூரணி அம்மா யாழ்ப்பாணம் வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முகநூல் வாசிகள் பெரும்பாலும் எதிராகப் பதில் வினையாற்றி இருந்தார்கள். அதில் சிலர் கொலை வெறியோடும் பதில் எழுதியிருந்தார்கள். தமிழ்ச் சமூகவலைத்தளச் சூழல் என்பது தமிழ்ப் பண்பாட்டின் சீரழிவின் குறிகாட்டியாக மாறி வருகிறது. தனக்குப் பிடிக்காத ஒன்றை எதிர்க்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் தமிழ் முகநூல் வாசிகளின் பண்பாட்டுச் சீரழிவைக் காட்டுகின்றன. இவ்வாறு எழுதப்படும் கேவலமான, கீழ்த்தரமான, வன்மம் மிகுந்த, மற்றவர்களின் கவனத்தை வலிந்து ஈர்க்க முயற்சிக்கின்ற பதிவுகளைத் தொகுத்துப் பார்த்தல், அந்த நபர்களுக்கு ஏடு தொடக்கியவருக்கும் ஞானஸ்தானம் செய்த பாதிரியாருக்கும் அதைவிட அவமரியாதை கிடையாது. இதில் மிகச்சிறிய தொகையினர்தான் நாகரிகமாக பதிவுகளை போடுகிறார்கள். அன்னபூரணி அம்மாவுக்கு எதிரான விமர்சனங்களில் ஒரு விடயத்தைத் தொகுத்து விளங்கக்கூடியதாக உள்ளது என்னவென்றால், ஒர் ஆன்மீக வழிகாட்டிக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள் இவை என்ற அளவுகோல்களின் அடிப்படையில்தான் அவர் நிராகரிக்கப்படுகிறார். ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் அதே மகிமையான அளவுகோல்களுக்குள் பொருந்திவரும் ஞானிகள்,தவசிகள்,முனிவர்கள்,ஆன்மீக வழிகாட்டிகள், ஆதீனத் தலைவர்கள்… எத்தனை பேர் தமிழ்ச் சமூகத்தில் உண்டு என்பதுதான். அன்னபூரணியின் விளம்பரம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு மற்றொரு விளம்பரம் வந்தது. அது முதலில் பத்திரிகையில் வெளிவந்தது. பின்னர் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்தது. அது “நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனதில் துறவு வாழ்க்கைக்கு முன்வர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்…”என்று தொடங்குகிறது. அதினத்தின் புதிய குரு முதல்வரை தெரிந்தெடுப்பதற்கு சன்னியாசிகளாக வர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் அங்கே கூறப்பட்டுள்ளது. அதாவது சன்னியாசிகளுக்கு, துறவிகளுக்கு இன்டர்வியூ வைக்கும் ஒரு நிலை. சன்னியாசம் என்பதே உலக பந்தங்களைத் துறப்பது. பற்றுக்களை அறுப்பது. ஆசைகளைத் துறந்த ஒரு சந்நியாசி இன்டர்வியூக்கு வருவாரா? இன்டர்வியூ எதற்காக? ஒரு மடத்தின் குரு முதல்வர் பதவிக்காக. அப்படியென்றால் சன்னியாசிக்கு குரு முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை இருக்குமா? ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டுத் தலைநகரத்தின் குறியீடாகக் காணப்படும் ஓர் ஆதீனம் அதன் வாரிசுகளை உருவாக்கும் விடயத்தில் நிறுவனமயப்பட்ட ஆன்மீகத் தொடர்ச்சியை;துறவுத் தொடர்ச்சியை; தவத் தொடர்ச்சியைப் பேண முடியாமலிருப்பது என்? யாழ்ப்பாணம் ஒரு காலம் மகிமைக்குரிய சித்தர் பாரம்பரியத்தை கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்துச் சித்தர் பாரம்பரியம் எனப்படுவது நகர மையச் சித்தர் பாரம்பரியம். அது யாழ்ப்பாணத்தின் “பெரிய கடைத் தெருக் களின்” தாழ்வாரங்களில் செழித்தோங்கி வளர்ந்த ஒரு ஆன்மீகப் பாரம்பரியம்.அந்த சித்தர் பரம்பரையில் தோன்றிய சித்தர்கள் யாருமே காவி உடுத்ததில்லை என்று யாழ்.பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பா.அகிலன் கூறுவார். அதாவது யாழ்ப்பாணத்துச் சித்தர்களின் தனி அடையாளங்களில் அதுவும் ஒன்று. காவியையும் துறந்த சித்தர்கள். காவிக்கு பதிலாக சாதாரண வேட்டியோடு காணப்பட்டார்கள். இவ்வாறு தோன்றிய சித்தர் பாரம்பரியத்தின் கடைசி வாரிசாக மட்டக்களப்பை சேர்ந்த சன்னியாசி ஒருவர் இப்பொழுது சிவத் தொண்டன் நிலையத்தில் இருக்கிறார். அவரைப் போன்று வேறு சன்னியாசிகள் சமூகத்தில் இருக்கக்கூடும். உண்மையான சன்னியாசிகள் பிரபல்யமாக விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு அந்த ஆசை இருக்காது. ஆனால் அவர்களுடைய தவ வலிமை காரணமாக அவர்களை நோக்கி ஈர்க்கப்படும் மக்கள் அவர்களைப் பிரபல்யப்படுத்தி விடுவார்கள். தமிழ் மக்களுக்கு அது போன்ற தவ வலிமை மிக்க சன்னியாசிகள் தேவை. 2009க்குப் பின்னரான தமிழ் கூட்டு உளவியலை கையாள்வதற்கு அரசியல்வாதிகளால் மட்டும் முடியாது. மனநல மருத்துவர்களால் மட்டும் முடியாது. புத்தி ஜீவிகளாலும் படைப்பாளிகளாலும் மட்டும் முடியாது. அங்கே ஆன்மீக வழிகாட்டலும் தேவை. அது ஒரு கூட்டுக் குணப்படுத்தல் செய்முறை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பான கூட்டு உளவியலை கையாள்வதற்கு ஆன்மீகத் தலைவர்கள் அதிகம் தேவை.ஆனால் அவ்வாறான தலைவர்கள் பற்றாக்குறைவாக இருப்பதைத்தான் அவ்வாறான தலைவர்களுக்கு நேர்காணல் வைக்க வேண்டிய ஒரு நிலை வந்திருப்பதை மேற்படி பத்திரிகை விளம்பரம் நமக்கு உணர்த்துகின்றது. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால், இது யாழ்ப்பாணத்தில் நிலவும் துறைசார் வெற்றிடங்களைக் காட்டுகிறது என்றும் கூறலாம். அரசியலில் தொடங்கிய ஆன்மீகம்வரை எல்லாவற்றிலுமே வெற்றிடம் நிலவுகிறது. இவ்வாறான துறைசார் ஞானிகளுக்கு பற்றாக்குறை நிலவும் ஒரு சமூக,ஆன்மீகப் பின்னணியில்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் தேங்கி நிற்கின்றது. தமிழ்ச் சமூகம் கொந்தளிப்பான கூட்டு உளவியலில் இருந்து விடுபட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது. கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாருடைய காலடியில் தமது பாரத்தை இறக்க முடியும் என்று கூறத்தக்க ஆன்மீக வழிகாட்டிகள் எத்தனை பேர் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் உண்டு? அல்லது இந்த மதபீடம் சொன்னால்,இந்த சமயத் தலைவர் சொன்னால் அரசியல்வாதிகள் அதைக் கேட்பார்கள் என்று கூறத்தக்க அளவுக்கு ஆன்மீக சக்தியும் நிறுவனப் பலமும் மிக்க எத்தனை மத நிறுவனங்களும் மத தலைவர்களும் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஈழத் தமிழர்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது அரசியலை ஒரு கூட்டுச் சிகிச்சையாக அணுகுகின்ற அரசியலை ஒரு கூட்டுக் குணமாக்கல் செய்முறையாக முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வழிகாட்டும் ஆன்மீகத் தலைவர்களும்தான். அவ்வாறான தலைவர்களும் துறவிகளும் மிகக்குறைவாக உள்ள ஒரு வெற்றிடத்தில் தமிழ் அரசியல்வாதிகள் யாருக்கும் பயப்படாத,யாருக்கும் பொறுப்பு கூறத் தயாரில்லாத ஒரு விபரீதமான நிலைமை வளர்ந்து வருகிறது. இன்னொரு புறம் சமூகச் சீர்கேடுகளும் பண்பாட்டுச் சீரழிவுகளும் பெருகி வருகின்றன. இப்படிப்பட்டதோர் ஆன்மீக,அரசியல்,சமூகப் பொருளாதாரப் பின்னணிக்குள் அண்மையில் வெளிவந்த க.போ.த. சாதாரண தர பரிட்சைப் பெறுபேறுகளில் வடக்கு பின்தங்கி விட்டது என்ற விமர்சனங்கள் பூதாகரமாக மேல் எழுகின்றன. அதனால் வடக்கின் மகிமை குன்றிவிட்டது என்று ஒரு பகுதியினர் புலம்பத் தொடங்கி விட்டார்கள்.ஆனால் இத்தனைக்கும் பிரதமர் ஹரிணி, பிள்ளைகளின் அடைவை தனிய பரீட்சைப் பெறு பேறுகளின் மூலம் மட்டும் அளவிட முடியாது என்பதனை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தன்னைக் கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு சமூகமாகக் கருதும் ஒரு மக்கள் கூட்டம் பரீட்சைப் பெறு பேறுகளை வைத்து தன்னை மதிப்பீடு செய்கிறது. ஆனால் அதைவிட வேறு பல விடயங்களில் சமூகம் தாழ்ந்து விட்டது என்பதைத்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட விளம்பரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த வீழ்ச்சி அல்லது தாழ்ச்சி ஒன்று மற்றதுடன் தொடர்புடையது. அவற்றை தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அதனை சமூகத்தின் ஒட்டுமொத்த சித்திரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். அதற்கு தீர்வும் “கலெக்டிவ்” ஆனதாகவே இருக்க வேண்டும். அரசியலில் தொடங்கி எல்லாத் துறைகளிலும் வெற்றிடம் விழத் தொடங்கிவிட்டது.இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளில் துறை சார் ஞானம் மிக்கவர்கள் அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் துறை போனவர்கள் பெரும்பாலும் சன்னியாசிகளைப் போலவே வாழ்வார்கள். தம்மை வெறுத்துப் படிப்பார்கள்;தம்மை ஒறுத்து உழைப்பார்கள். அவர்கள்தான் சமூகத்துக்கு முன்னுதாரணங்கள்.உலகில் தோன்றிய எல்லா மேதைகளின் கதைகளும் அர்ப்பணிப்புகளால் கட்டி எழுப்பப்பட்டவைதான். தத்தமது துறைகளில் அர்ப்பணிப்போடு சன்னியாசிகளைப்போல உழைக்கத் தயாரானவர்களால் மட்டும்தான் ஈழத் தமிழர்களை மீட்க முடியும். https://athavannews.com/2025/1439844- யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்! யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னதாக, விடயம் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ் நீதவான் நீதிமன்றம், அகழ்விற்கான இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இந் நிலையில், நாளை(21) முதல் 15 நாட்களுக்கு செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் என்பு கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டன. இதற்கிடையில், இந்த அகழ்வுப் பணி தொடர்பில் இறுதியாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, செம்மணி- சித்துப்பாத்தியில் குற்றச்செயல் இடம் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439847- அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை - எலான் மஸ்க் தெரிவிப்பு!
அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை - எலான் மஸ்க் தெரிவிப்பு! அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் வேறு வழியே இல்லாமல், இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ரொக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன். என் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் நாட்டின் எதிர்காலத்துக்கு மோசமான ஆபத்துகள் காத்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி, அரசியல் கட்சியை தொடங்குவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன் எனவும் கூறியிருந்தார். https://athavannews.com/2025/1439823- வியட்நாமில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு!
வியட்நாமில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு! வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு ஒன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே இவ்வாறு அனர்தத்திற்குள்ளாகியுள்ளது. ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற நிலையில் தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் நேற்று பிற்பகல் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது, தென் சீன கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட புயல்காற்றினால் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்துள்ளனர். இதன்போது விரைந்து செயற்பட்ட அந்நாட்டு மீட்பு குழுவினர் கடலில் விழுந்தவர்களில் 11 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் ஐந்து பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இவ்விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் அனேகமானவர்கள் வியட்நாமியர்கள் என தெரியவந்துள்ளது. இதேவேளை, தலைகீழாக கவிழ்ந்த படகிற்குள் சிக்குண்டிருந்த 10 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1439820- கருத்து படங்கள்
- பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!
இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ள பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்குமாறு மக்கள் கோரிக்கை! பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும் , நேர மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால் , ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபட முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கி இன்னும் உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படாமையால் , எந்நேரமும் ஆலயத்திற்கு செல்வதனை இராணுவத்தினர் தடை விதிக்கலாம் என்ற அச்சம் தமக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட கடந்த 27ஆம் திகதி அனுமதித்த இராணுவத்தினர் மீண்டும் 28ஆம் திகதி பாதுகாப்பு காரணங்கள் என கூறி ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்திருந்ததுடன் பின்னர் வியாழக்கிழமை முதல் ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். இதன்படி, ஆலயத்திற்கு மக்கள் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினரால் உத்தியோகபூர்வ கடிதம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்காதமையால் எந்நேரமும் பாதுகாப்பு காரணம் என கூறி ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் தடை விதிக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் காணப்படுவதக்கவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை, தற்போது திருவிழா காலம் என்பதால், ஆலயத்திற்கு நேர கட்டுப்பாட்டுடன் அனுமதிப்பதனால் , திருவிழாவை சிறப்பாக செய்ய முடியாத நிலை காணப்படுகிறது எனவும் எனவே நேர கட்டுப்பாட்டை முற்றாக தளர்த்தி சுதந்திரமாக இராஜ இராஜேஸ்வரி அம்மனை வழிபட இராணுவத்தினர் அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். https://athavannews.com/2025/1439812- சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு
சுவிற்சலாந்து சூரிச் நகரத்தில் அதிக தமிழர்கள்தான் வசிக்கின்றார்கள். அவர்கள்... அந்த கடைத் தொகுதிக்கு "குட்டி தமிழீழம்" அல்லது "குட்டி யாழ்ப்பாணம்" என்று பெயர் வைக்காமல் "லிட்டில் ஸ்ரீலங்கா" என்று பெயர் வைதத்தமை அவர்களின் சிங்கள அடிமைக் குணத்தை காட்டுகின்றது. புதிய கடை கட்டி முடித்தவுடன்.... "லிட்டில் ஸ்ரீலங்கா" என்ற பெயரை மீண்டும் வைத்தால்... பெரும் பிரச்சினை காத்திருக்கு.- கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
மு.க.முத்து.... தனது சித்தி ராசாத்தி அம்மாளை விட வயதில் மூத்தவர். அதாவது.... கருணாநிதியின் மகனை விட, (சின்ன) அம்மா இளையவர். திராவிட மாடல்.- கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
முதல்வர் ஸ்ராலின் ஐயாவின் கவனத்திற்கு.... மெரீனா பீச்சில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குப் பக்கத்தில் மு.க.முத்துவை அடக்கம் செய்ய வேண்டும். இப்பவே இவருக்கு அங்கு இடம் ஒதுக்கினால்தான்... நாளை தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், அழகிரி, ஸ்ராலின், கனிமொழி, உதயநிதி, இன்பநிதி என்று இடம் பிடித்து வைக்க வசதியாக இருக்கும். அனுதாபங்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு!
- கருத்து படங்கள்
- புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு!
சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே எமது இலக்கு! – பிரதமர் ”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம் பரந்த மனமுடைய, சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே தமது இலக்காகும்” என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ‘புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அனைவரும் பெரும் அக்கறை கொண்டிருப்பது சமூகத்தில் ஏற்பட்டுள்ள உரையாடல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது எனவும், கல்விச் சீர்திருத்தம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன் ” அபிவிருத்தி இலக்குகளை அடைவதை மாத்திரம் இந்த சமூகம் எதிர்பார்க்கவில்லை எனவும் கல்வியிலும் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம்‘ பரந்த மனமுடைய, சுதந்திர சிந்தனையுடைய, உலகத்தை பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட சிறந்த மனிதர்களை உருவாக்குவதே தமது பிரதான இலக்காகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம் பரந்த மனமுடைய, சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே தமது இலக்காகும்” என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ‘புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அனைவரும் பெரும் அக்கறை கொண்டிருப்பது சமூகத்தில் ஏற்பட்டுள்ள உரையாடல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது எனவும், கல்விச் சீர்திருத்தம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன் ” அபிவிருத்தி இலக்குகளை அடைவதை மாத்திரம் இந்த சமூகம் எதிர்பார்க்கவில்லை எனவும் கல்வியிலும் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம்‘ பரந்த மனமுடைய, சுதந்திர சிந்தனையுடைய, உலகத்தை பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட சிறந்த மனிதர்களை உருவாக்குவதே தமது பிரதான இலக்காகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439714 - சிறையில் ஒபாமா; ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.