Everything posted by தமிழ் சிறி
-
சிரிக்கலாம் வாங்க
- அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?
நான் தவறு செய்துவிட்டேன்! -மனம் வருந்திய நடிகர் ஸ்ரீகாந்த். போதைப்பொருள் வழக்கில் நேற்று நண்பகல் கைதான ஸ்ரீகாந்த் இரவு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை ” தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், தனது குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும், தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும், தான் வெளிநாடு செல்லப் போவதில்லை எனவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எனவே தனக்கு பிணை வழங்குமாரும் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இங்கு பிணை கோர முடியாது எனவும் என்டிபிஎஸ் சிறப்பு நீதிமன்றில் தான் பிணையைப் பெற முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து,ஸ்ரீகாந்துடன் சேர்ந்து போதை பொருள் பயன்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ………. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு ‘கொகைன்’ சப்ளை செய்ததாக ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் (38) என்பவர் ஓசூரில் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஜான் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார்? என்ற பட்டியலை பொலிஸாரிடம் கொடுத்தார். அந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து பொலிஸார் நேற்று ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். பொலிஸாரின் விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியதே இல்லை என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்தார். ஆனால் அவருக்கு அடிக்கடி போதைப்பொருள் விநியோகம் செய்ததாக ஜான் குறிப்பிட்டிருந்தது பொலிஸாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது. இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில், ஸ்ரீகாந்த் ‘கொகைன்’ போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்தி 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது போதைப்பொருளை வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரீகாந்த் ஆன்-லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். https://athavannews.com/2025/1436862- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உலகத்தை அழித்துக் கொண்டிருந்தவர்களும், கலகத்தை விளைவித்துக் கொண்டு இருந்தவர்களும், காலம் மாறிவிட்டது என்பதை... காலதாமதமாகவே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். தயாளன் கனியன்- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்! ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (24) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பாதுகாப்பில் அளித்த ஆதரவிற்கும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை ஒழிப்பதில் பங்கேற்றதற்கும் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கு இஸ்ரேல் நன்றி தெரிவிக்கிறது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், எந்தவொரு போர்நிறுத்த மீறலுக்கும் இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பதாகவும், ஈரான் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மீற வேண்டாம் என்றும் ட்ரம்ப் கூறினார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் உலகிற்கு அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இஸ்ரேலிய பிரதமரின் அறிக்கை வந்தது. ஈரான் அதை முதலில் நிராகரித்தது, பின்னர் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவின் போர் நிறுத்தக் கூற்றினை ஆரம்பத்தில் நிராகரித்தார். அத்தகைய ஒப்பந்தம் எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று கூறினார். இருப்பினும், அந்த அறிவிப்புக்கு பின்னர், ஈரானிய அரசு தொலைக்காட்சி போர் நிறுத்தம் தொடங்கியதை உறுதிப்படுத்தியது. Athavan Newsட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்!ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (24) ஒரு அறிக்கையில் தெரிவித்துள...- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உண்மையாவா... 😂 இதையும், அமெரிக்காதான் சொல்லியிருக்கும். 🤣 அப்ப ... நோபல் பரிசு, நிச்சயம் கிடைக்கும். 😂 🤣- கனடா புறப்பட்டார் பிரதமர் ஹரிணி!
கனடா புறப்பட்டார் பிரதமர் ஹரிணி! கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) அதிகாலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபையில் பங்கேற்பதற்காக இன்று (24) அதிகாலை கனடாவுக்குப் புறப்பட்டார். பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபைக் கூட்டம் ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவரில் நடைபெறும். இந்த உச்சிமாநாடு முதன்மையாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி, உயர்கல்வி, ஆசிரியர் கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தொழில்முறைக் கற்றலை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும். புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரித்தல், பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகளை செயல்படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் ஆகிய தலைப்புகளிலும் விவாதங்கள் கவனம் செலுத்தும். https://athavannews.com/2025/1436851- இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்!
இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச் செல்லவில்லை – அரசாங்கம் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது பேசிய அமைச்சர் விஜேபால, இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்கள் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகக் சுட்டிக்காட்டப்படவில்லை என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் போது, கொலை தொடர்பான தகவல்கள் மற்ற சந்தேக நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். இந்த ஆண்டு பெப்ரவரியில் கணேமுல்ல சஞ்சீவா சுட்டுக் கொல்லப்பட்ட கொழும்பு நீதிமன்றத்திற்குள் ஆயுதத்தை கொண்டு சென்று துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததற்காக இஷாரா செவ்வந்தி தேடப்படும் குற்றவாளி ஆவார். https://athavannews.com/2025/1436843- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
போர் நிறுத்தம் அமுலில் – தயவுசெய்து அதை மீறாதீர்கள் – ட்ரம்ப் வலியுறுத்தல்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் “இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். கடந்த சில மணிநேரங்களில் ஈரான் இஸ்ரேலிய பிரதேசங்கள் மீது பல ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, மத்திய கிழக்கில் உள்ள இரண்டு பரம எதிரிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்று அமெரிக்கத் தலைவர் எச்சரித்தார். இது குறித்து ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் டரம்ப், போர் நிறுத்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள் – என்று பதிவிட்டார். செவ்வாய்க்கிழமை காலை 0400 மணிக்கு தொடங்கும் இந்த போர் நிறுத்தம் 24 மணி நேர கட்டமாக இருக்கும் என்றும், ஈரான் ஒருதலைப்பட்சமாக முதலில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தும் என்றும் அமெரிக்கத் தலைவர் முன்னதாகக் கூறியிருந்தார். 12 மணி நேரத்திற்குப் பின்னர் இஸ்ரேல் இதைப் பின்பற்றும் என்றும் அவர் கூறினார். இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்தன. ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் டெல் அவிவ் கூறியது. https://athavannews.com/2025/1436832- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
- இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- கருத்து படங்கள்
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
போர்நிறுத்ததை அறிவித்துள்ளது ஈரான்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு(23) ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது. அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கட்டாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்தார். இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436811- யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு!
யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு! யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதமாகவும் அவர் தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும், சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகளும் ஒரு அடிப்படை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன. அதேசமயம் காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 18பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436816- மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐந்து சர்வதேச விமானங்களை மஸ்கட், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் உள்ள மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சரியான வழித்தடங்களை CAASL குறிப்பிடவில்லை. ஆனால் பயணிகள் நிகழ்நேர புதுப்பிப்புகளுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினர். பிராந்திய வான்வெளி இடையூறுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கையின் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) – எந்தவொரு அவசர தரையிறக்கங்கள் அல்லது மாற்றுப்பாதையில் இயக்கப்படும் விமானங்களையும் பொருத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கட்டார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சிவில் விமான நிறுவனங்களுக்கு உதவ ஆணையம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436779- செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!
இன்று இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடரும் அணையா விளக்கு போராட்டம்! தமிழ் மக்கள் பலரது உடல்களைத் தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துச் செல்கின்றன. எனினும் இதற்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே குறித்த விடயத்தை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதன் மூலம் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ‘அணையா தீபம்’ எனப்படும் போராட்டம்” நேற்று(23) செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் தலைமையில், முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். நேற்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட குறித்த போராட்டமானது 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை தேடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, நாளை யாழ் வருகை தரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436821- இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்; ஆச்சரியப்படுத்தும் வசதிகளுடன் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம்! ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களைத் தாக்கும் ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமருக்காக குறைந்தது ஆறு B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு (B-2 stealth bombers) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஜூன் 20 அன்று மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து உலகம் முழுவதும் 37 மணி நேர விமானப் பயணத்திற்காக படையினர் புறப்பட்டு, ஈரானுக்குச் சென்று திரும்பி வந்தன. ஜூன் 21 அன்று தாக்குதல் 25 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ஆனால், இந்த நீண்ட தூர நடவடிக்கைகள் ஈரானுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. B-2 ஸ்டெல்த் குண்டு வீச்சு விமானம் ஒரு படுக்கை, ஒரு கழிப்பறை, ஒரு மைக்ரோவேவ், ஒரு சிறிய குளிர்சாதனப் பெட்டி மற்றும் மைக்ரோவேவ் அடுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நீண்ட கால மூலோபாய குண்டுவீச்சுப் பணிகளில் விமானிகள் நன்கு உணவளிக்கவும், பயணத்தை குழுவினரால் எளிதாக நிர்வகிக்க உதவும். விமானி அறையில் ஒரு விமானி படுத்துக் கொள்ளவும், மற்றொரு விமானி பறக்கவும் ஒரு இடம் உள்ளது. இது இரண்டு பேர் கொண்ட குழுவினருக்கு கடினமான பயணத்தை நிர்வகிக்க உதவுகிறது. பயணத்தின் போது, குண்டுவீச்சு விமானிகள் நடுவானில் பல முறை எரிபொருள் நிரப்பியதாக அதிகாரிகள் நியூயோர்க் போஸ்ட்டிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு B-2 ஸ்டெல்த் விமானமும் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேல் பெறுமதி வாய்ந்ததாகும். மேலும், 2008 ஆம் ஆண்டு விபத்தில் ஒன்றை இழந்த பின்னர், அமெரிக்க விமானப்படை தற்போது அவற்றில் 19ஐ இயக்குகிறது. பொதுவாக பெரும்பாலான குண்டுவீச்சு விமானங்களில் அத்தகைய ஆடம்பரங்கள் இல்லை. ஆனால் விதிவிலக்குகள் உள்ளன. குறிப்பாக US B-2 Spirit அல்லது B-52 Stratofortress போன்ற நீண்ட தூர மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் அவை 24 மணி நேரத்திற்கும் மேலான பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அண்மைய தாக்குதலில் B-2 ரக விமானங்கள் ஈரானிய வான்வெளியை நெருங்கியபோது, ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் முக்கிய பாதுகாப்புகளை செயலிழக்கச் செய்ய இரண்டு பல டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது. சில நிமிடங்களுக்குப் பின்னர், ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் 14 30,000 பவுண்டுகள் எடையுள்ள பதுங்கு குழி-குண்டுகளை, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது வீசின. அமெரிக்கா போரில் 15 தொன் எடையுள்ள மிகப்பெரிய GBU-57 வகையான பதுங்கு குழி குண்டுகளை வீசியது இதுவே முதல் முறை. 37 மணி நேர பயணத்தின் போது இரண்டு விமானிகளும் மாறி மாறி ஓய்வெடுத்ததாக தி யுகே டெலிகிராஃப் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436802- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் – இஸ்ரேல் முழுமையான போர் நிறுத்தம்; தெஹ்ரான் மறுப்பு! இஸ்ரேலும் ஈரானும் திங்களன்று (23) ‘முழுமையான போர்நிறுத்த’ ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேறிய 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. எனினும், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்களை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் போர்நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது. போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர்நிறுத்தம் ஏற்படும் என்று முழுமையாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது – என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுப்படி, ஈரான் முதல் கட்ட நடவடிக்கையாக போர்நிறுத்தத்தில் ஈடுபடும். தொடர்ந்து இஸ்ரேலும் 12-வது மணிநேரத்தில் போர்நிறுத்தம் மேற்கொள்ளும். அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும். 12 நாள் போரானது அதிகாரப்பூர்வ முறையில் உலகம் வணங்கும் வகையிலான ஒரு முடிவுக்கு வரும். இந்த போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இரு தரப்பினரும் புதிய தாக்குதல்களை அச்சுறுத்திய சில நிமிடங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார். கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பின்னர் இது வருகிறது. போர் நிறுத்தத்தை மறுத்த தெஹ்ரான். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே திங்களன்று போர் நிறுத்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க ட்ரம்ப் கூறிய நிலையில், தெஹ்ரான் அந்தக் கூற்றை மறுத்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து போர் நிறுத்தம் கோரும் எந்த போர் நிறுத்த முன்மொழிவையும் பெறவில்லை என்றும் அது கூறியுள்ளது. இதற்கிடையில், போர் நிறுத்தக் கோரிக்கை குறித்து இஸ்ரேல் அமைதியாக உள்ளது மற்றும் அதன் செயல்படுத்தல் குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியது. எக்ஸில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த “உடன்பாடும்” இல்லை. எனினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4.00 (செவ்வாய்) மணிக்குள் நிறுத்தினால், எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் – என்றார். எண்ணெய் விலை வீழ்ச்சி ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியதால், செவ்வாய்க்கிழமை எண்ணெய் விலைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தன. இது அப்பகுதியில் விநியோக இடையூறு குறித்த கவலைகளைத் தணித்தது. பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 0006 GMT மணியளவில் ஒரு பீப்பாய்க்கு $2.69 அல்லது 3.76% குறைந்து $68.79 ஆக இருந்தது. ஜூன் 11 க்குப் பின்னர் அதன் விலை சரிந்த சந்தர்ப்பமாகும் இது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் பீப்பாய்க்கு $2.7 அல்லது 3.94% சரிந்து $65.46 ஆக இருந்தது. இது ஜூன் 09 க்குப் பின்னர் அதன் விலை சரிந்த சந்தர்ப்பமாகும். ஈரான் OPEC இன் மூன்றாவது பெரிய மசகு எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. மேலும் பதட்டங்களைத் தளர்த்துவது அதிக எண்ணெயை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் மற்றும் விநியோக இடையூறுகளைத் தடுக்கும், இது அண்மைய நாட்களில் எண்ணெய் விலைகள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணியாகும். அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது. கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது. எனினும் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கட்டார் அரசாங்கம் கூறியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். வார இறுதியில் மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகளை ஏவியது. இந்த நடவடிக்கை குறித்தும் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்த தாக்குதல் பலவீனமானது மற்றும் எதிர்பார்க்கப்பட்டது என்று அழைத்தார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் “அழிக்கப்பட்டதை” தொடர்ந்து ஈரான் 14 ஏவுகணைகளை ஏவியதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். அவற்றில் 13 இடைமறிக்கப்பட்டன என்றார். https://athavannews.com/2025/1436783- சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஊரின் பெயர் ஒரு கோடி. 🙂- தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
ரிஷாட் பதியுதீனின் பெயர் இதில் இல்லாத படியால்... தேசிய மக்கள் சக்தியின் விசாரணையில் சந்தேகம் ஏற்படுகின்றது.- இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரானுக்கு ஆதரவாக கொழும்பு தூதரகம் சென்ற இலங்கையின் புத்த, கத்தோலிக்க சமயத் தலைவர்கள்.- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான்-இஸ்ரேல் போரில் அழிந்த 50 மில்லியன் டொலர் பெறுமதியான மீளப்பெற முடியாத அரிதான ஆராய்ச்சி முடிவுகள்! ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைகளால் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் அறிவியல் கல்வி நிறுவனம் (Weizmann Institute of Science) கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல், நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற துறைகளில் பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகளையும் கொண்டிருந்த வைப்பகங்கள் இங்கே இருந்ததாக கூறுகிறது. சர்வதேச விஞ்ஞானிகள் பேரழிவிற்குள்ளான நிறுவனம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பிரபலமான வெய்ஸ்மேன் அறிவியல் கல்வி நிறுவனம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் கடந்த 19ம் திகதி சிக்கியுள்ளது. உயிர் அறிவியலில் அதிநவீன ஆராய்ச்சிக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம், 45 க்கும் மேற்பட்ட ஆய்வகங்களையும் பல தசாப்தங்கள் முன்னெடுக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத ஆராய்ச்சியையும் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. நாடுகளுக்கிடையிலான போர் அழிவுகளை தாண்டி, கலாச்சாரம் மற்றும் அறிவியல் அடிப்படையில் இது போரின் மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் உடைந்த கல்வி நிறுவனத்துக்கு உதவ ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், மனித இனத்துக்கு அவசியமான நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள், புற்றுநோய் மற்றும் வயது வந்தோர் இதய நோய்களைப் பற்றி ஆய்வு செய்து காக்கப்பட்டு வந்த விஞ்ஞான ஆய்வு ஆதாரங்களே அழிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதில் பல விஞ்ஞான ஆதாரங்கள் பல ஆண்டுகால அரிதான ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டு காக்கப்பட்டு வந்ததாகவும் இவை மீளப்பெற முடியாத பெறுமதியானவை எனவும் இந்த கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளில் சர்வதேச மாணவர்கள், மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளும் இணைந்து பங்காற்றியதாக சொல்லப்படுகிறது. இந்த அழிவு $50 மில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. Vaanam.lk- சாரதி இல்லாத டக்ஸி சேவையை ஆரம்பித்துள்ள டெஸ்லா!
சாரதி இல்லாத டக்ஸி சேவையை ஆரம்பித்துள்ள டெஸ்லா! அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தானியங்கி ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரத்தில் நேற்று அதிகாரபூர்வமாக ரோபோ டாக்ஸி சேவை தொடங்கியது. முதற்கட்டமாக தெற்கு ஆஸ்டின் நகரில் மட்டும் ரோபோ டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. செயலியில் முன்பதிவு செய்தால் ரோபோ டாக்ஸி பயணி இருக்கும் இடத்திலேயே வந்து ஏற்றிச் செல்கின்றது. காரில் அமர்ந்த பிறகு செல்லும் இடத்தை பதிவிட்டால் கார் தானாக இலக்கை நோக்கி பயணிக்க தொடங்குகிறது. உள்ளே இருக்கும் திரையில் கார் செல்லும் வழித்தடத்தை பயணிகள் கண்காணிக்க முடியும். பொழுது போக்கிற்காக காரினுள் பாடல்களை கேட்கவும், விரும்பும் விடியோக்களை பார்ப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ரோபோ டாக்ஸி சேவைக்காக நேவியஸின் மென்பொருள் மூலம் இயங்கும் மாடல் லு கார்களை டெஸ்லா களத்தில் இறக்கி உள்ளது. ஓட்டுநர் இல்லாவிடினும் ரிமோட் மூலம் கார்கள் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. தானியங்கி ரோபோ டாக்ஸிக்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் படிப்படியாக அமெரிக்கா முழுவதும் அறிமுகம் செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436744- கருத்து படங்கள்
- அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.