Everything posted by தமிழ் சிறி
-
ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய ஏவுகணையைச் சோதிக்கும் இந்தியா!
ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய ஏவுகணையைச் சோதிக்கும் இந்தியா! இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதிக்க தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவையாகும். அந்தவகையில் உலகின் வேகமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக இது அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மூத்த DRDO விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் சுதிர் குமார் மிஸ்ரா சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஹைப்பர்சோனிக் எஞ்சின் சில வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்றும், முழுமையான அமைப்பு தொடர்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433508
-
அதிக தடவைகள் எவரெஸ்ட் சிகரம் ஏறி உலக சாதனை படைத்த காமி ரீட்டா ஷெர்பா!
அதிக தடவைகள் எவரெஸ்ட் சிகரம் ஏறி உலக சாதனை படைத்த காமி ரீட்டா ஷெர்பா! நேபாளத்தை சேர்ந்த காமி ரீட்டா (Kami Rita) என்ற 55 வயதான நபர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிக தடவைகள் ஏறியவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். மலையேற்ற வீரர்களின் வழிகாட்டியான அவர் நேற்றைய தினம் குறித்த சாதனையைப் படைத்துள்ளார். அவர் 31தடவைகள் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். காமி ரீட்டா உட்பட 27 நேபாள ஷெர்பாக்கள் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக சிகரத்தை அடைந்தனர். இப் பயணம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி தொடங்கி 45 நாட்களில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433568
-
எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட் இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து!
எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட் இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து! ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதத்தின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான எலோன் மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஊடாக விண்வெளி சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து நேற்றைய தினம் விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ரொக்கெட்டானது விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் கசிவே இத்தோல்விக்கு முக்கிய காரணமாகும் என ஸ்பேஸ்எக்ஸ் செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார். இதேபோன்று, கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஏழாவது முயற்சி மற்றும் மார்ச் 6 ஆம் திகதி நடைபெற்ற எட்டாவது முயற்சிகளும் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான இத்தகைய தோல்விகள், ஸ்பேஸ்எக்ஸின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் விண்வெளி நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433527
-
"அடிடாஸில்" பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு! யார் அடுத்த குறி?
"அடிடாஸில்" பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு! யார் அடுத்த குறி? அடிடாஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி திருடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டு ஆடை உலகின் ஜாம்பவானான அடிடாஸ், வாடிக்கையாளர் சேவைப் பிரிவுடன் தொடர்பு கொண்டவர்களின் “முக்கியமாக” தொடர்புத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து அடிடாஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தச் சம்பவம் “செயல்பாட்டு ரீதியாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார். கடவுச்சொற்கள், கடன் அட்டைத் தகவல் மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான தரவுகள் இந்தத் திருட்டால் பாதிக்கப்படவில்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது ஒரு சிறிய தகவல் திருட்டு என நிறுவனம் குறைத்துக் காட்டினாலும், வாடிக்கையாளர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் தற்போது பெரிய அளவில் உருவாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வாடிக்கையாளர் நம்பிக்கையை அசைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் தயக்கத்தை ஏற்படுத்தும். அடிடாஸ் மீதான இந்த இணையத் தாக்குதல், சமீப வாரங்களில் மார்க்ஸ் & ஸ்பென்சர், கூப் மற்றும் ஹாரோட்ஸ் போன்ற நிறுவனங்கள் சந்தித்த பெரும் இடையூறுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. மார்க்ஸ் & ஸ்பென்சர் நிறுவனம் ஈஸ்டர் வார இறுதியில் இலக்கு வைக்கப்பட்ட பிறகு, இந்தத் தாக்குதலால் சுமார் £300 மில்லியன் இழப்பு ஏற்படும் என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தது. அடிடாஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “அங்கீகரிக்கப்படாத ஒரு மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவை வழங்குநர் மூலம் சில நுகர்வோர் தரவுகளைப் பெற்றது என்பதை அடிடாஸ் சமீபத்தில் அறிந்தோம். நாங்கள் உடனடியாக இந்தச் சம்பவத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து, முன்னணி தகவல் பாதுகாப்பு நிபுணர்களுடன் இணைந்து ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கினோம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான ஒப்புதல் ஒருபுறம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், இந்தத் தகவல்கள் எப்படி திருடப்பட்டது, யார் இதற்குப் பொறுப்பு என்பது போன்ற முக்கிய கேள்விகள் இன்னும் விடைதெரியாமல் உள்ளன. பாதிக்கப்பட்ட தரவுகளில் கடவுச்சொற்கள், கடன் அட்டை அல்லது வேறு எந்த பணம் செலுத்துதல் தொடர்பான தகவல்கள் இல்லை என்றும், இது கடந்த காலத்தில் வாடிக்கையாளர் சேவை உதவி மையத்தைத் தொடர்பு கொண்ட நுகர்வோரின் தொடர்புத் தகவல்களை முக்கியமாகக் கொண்டுள்ளது என்றும் அடிடாஸ் தெரிவித்துள்ளது. அடிடாஸ் நிறுவனம் பாதிக்கப்படக்கூடிய நுகர்வோருக்கும், பொருத்தமான தரவுப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் நடைமுறை சட்டத்திற்கு இணங்கத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. “எங்கள் நுகர்வோரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட எந்தவொரு சிரமத்திற்கும் அல்லது கவலைக்கும் நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்,” என்று நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், வெறும் தொடர்புத் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டன என்பது ஒருவேளை உண்மைக்குப் புறம்பானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்காலத்தில் இந்தத் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம், வாடிக்கையாளர்களின் அடையாளம் அல்லது பிற தரவுகள் இந்தத் தாக்குதலால் சமரசம் செய்யப்படவில்லையா என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை. இது சைபர் பாதுகாப்பில் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் வாடிக்கையாளர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த தீவிரமான விவாதத்தை தூண்டியுள்ளது. Athavan Newsஅடிடாஸில் பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு...அடிடாஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி திருடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டு ஆடை உலகின் ஜாம்பவானான அடிடாஸ், வாடிக்கையாளர் சேவைப் பிரிவுடன...
-
கருத்து படங்கள்
- வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது!- வட மாகாண ஆளுநர்
வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது!- வட மாகாண ஆளுநர் அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு கவலையுடன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தின் நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது யாழ். மாவட்டத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடல் நீரை சுத்திகரிக்கும் செயற்றிட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்கல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கு அதிகளவில் செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி யாழ்ப்பாணத்தில் முக்கியமானதாக மாறிவரும் நிலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு பொறிமுறை இங்கு இல்லை என்றும் இதன் காரணமாக பல சவால்களை மக்கள் எதிர்கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டு துறைகளினதும் உற்பத்திப் பொருட்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவற்றை முடிவுப்பொருட்களாக்கி ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தியிருந்தார். https://athavannews.com/2025/1433494- பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர்
பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர் பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பிள்ளைகள் ஒரு அரசின் அடிப்படை பொறுப்பாகும். இலங்கை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதன் ஊடாக சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களின் உச்சகட்ட நலனிற்காக செயற்படுவதற்கும் கடமைப்பட்டுள்ளது. இதனூடாக குறித்த பொறுப்பு அரசிற்கும், பாடசாலை கட்டமைப்புக்கு பொறுப்பாக செயற்படும் அரச பிரதிநிதிகளான அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளது. அண்மைக்காலமாக பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை கண்ணோக்கும் போது, பாடசாலை கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் முகம்கொடுக்க நேரிட்டுள்ள துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும் வீடு உட்பட பாடசாலையும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான சூழலாக அமைய வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர். இதனால் பாடசாலை சூழல் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. பாடசாலை கட்டமைப்பிற்குள் பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் எந்த வகையிலான சித்திரவதையும் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாதெனவும், பாடசாலைக்குள் பிள்ளை முகம்கொடுக்கும் உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், வேறு வகையிலான புறக்கணிப்பு, உள ரீதியான துஷ்பிரயோகம் என எதுவாக இருந்தாலும் அதனை மறைத்து அல்லது புறக்கணிப்பு செய்வதை மேற்கொள்ளக் கூடாது. அது மறைப்பதற்கு அல்லது புறக்கணிப்பதற்கான விடயம் அல்ல. பாடசாலையின் பிரதான அதிகாரம்மிக்க நபராக பாடசாலை அதிபரினால் அவை குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளை அலட்சியப்படுத்துவது முழு பாடசாலை கட்டமைப்பும் தோல்வியடைவதற்கு காரணமாக அமைகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிக விரைவாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பதிலளிப்பு தாமதமடையும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு முகம்கொடுத்த பிள்ளை உடல், உள ரீதியாக வழமைக்கு திரும்ப முடியாத அளவிற்கு பாதிப்பை எதிர்கொள்ளும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரித தலையீடு செய்வதன் ஊடாக உயிரைக் காப்பாற்றுவதற்கும், சுய கௌரவத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையிலுள்ள ஏனைய அதிகாரிகள் சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையிலுமான வன்முறைகளை அடையாளம் காண்பதற்கும், தடுப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும் தேவையான அறிவு மற்றும் அது தொடர்பில் செயற்படுவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தான அறிவைக் கொண்டிருப்பதும் மிக முக்கியமானது. தொடர்ச்சியாக பிள்ளைகளுடன் தொடர்புபடும் உங்கள் அனைவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும், சட்டரீதியிலான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அறிந்திருத்தல் வேண்டும். சிறுவர் உள்ளங்களை புரிந்துகொள்வதற்கும், சிறுவர்களுடன் சரியான முறையில் செயற்படுவதற்கும் உதவும் சிறுவர் உளவியல் கல்வியை பெற்றிருப்பதும் மிகவும் முக்கியமானது. சிறுவர்களுக்குள் ஏற்படும் அழுத்தங்களை அடையாளம் காண்பதற்கும், சிறுவர்களுக்குள் ஏற்படும் அதிருப்தி அவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் விதத்தை புரிந்துகொள்வதற்கும் சிறுவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும் கருணையுடனும் பழகி அவர்களுக்கு பதிலளிப்பதற்கு கல்வித் துறையில் சேவையாற்றும் அதிகாரிகள் பயிற்சிகளைப் பெற்றிருப்பது உட்பட தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த அறிவைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியமானது. சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்து வகையிலான சித்திரவதைகளிலிருந்து அவர்களை பாதுகாப்பது அதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் நீதிபதி எல்.டீ.பீ.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா, ஆணையாளர் பேராசிரியர் டீ.தனராஜ், மேல் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் அதிபர்களும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1433466- 5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானம்!
5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானம்! 5ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறையை வளர்க்கும் விதமாக பாதுகாப்புத்துறையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் 5ம் தலைமுறைக்கான போர் விமானங்களை உருவாக்கும் இந்த திட்டத்தில், தனியாரும் பங்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், சுயாதீனமாகவோ அல்லது கூட்டு முயற்சியாகவோ இந்த திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்கலாம். அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு இயங்கும் ஒரு இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 5ம் தலைமுறை போர் விமானம், 2035ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தெரிவித்துள்ளது. ‘இந்தத் திட்டத்திற்கு 2024ம் ஆண்டு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433435- “கோல்டன் டோம்” திட்டத்தில் இணைய கனடாவுக்கு அமெரிக்கா விசேட சலுகை!
“கோல்டன் டோம்” திட்டத்தில் இணைய கனடாவுக்கு அமெரிக்கா விசேட சலுகை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் முன்மொழிந்த “கோல்டன் டோம்” ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் கனடா இணைவதற்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ளார். மேலும், அந்த செயல்பாட்டில் தனது இணைப்பு அச்சுறுத்தலையும் புதுப்பித்துள்ளார். இது குறித்து செவ்வாயன்று (27) சமூக தளத்தில் டரம்ப் இட்ட பதிவில், அவர்கள் (கனடா) ஒரு தனி தேசமாக இருந்தால், கோல்டன் டோமில் சேர கனடாவுக்கு 61 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். ஆனால், அவர்கள் எங்கள் நேசத்துக்குரிய 51 ஆவது மாநிலமாக மாறினால் அவ்வாறு எந்த செலவும் இருக்காது என்று கூறினார். கனடா இந்த சலுகையை “பரிசீலனை செய்து வருகிறது” என்றும் அவர் கூறினார். கனடாவின் இறையாண்மையை வலியுறுத்திய மன்னர் சார்லஸ், நாடாளுமன்றத்தில் அரியணை உரை நிகழ்த்திய அதே நாளில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மேலும், பிரதமர் மார்க் கார்னி தனது அரசாங்கத்தை ஒரு பெரிய ஐரோப்பிய பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் சேர உறுதியளித்தார். கடந்த வாரம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்திற்கான திட்டங்களை வெளியிட்டார். இது 175 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான, பல அடுக்கு அமைப்பாகும், இது முதல் முறையாக அமெரிக்க ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும். ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ட்ரம்ப், இந்த அமைப்பு 2029 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும், “அவை விண்வெளியில் இருந்து ஏவப்பட்டாலும் கூட” ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பதாகக் கூறினார். கோல்டன் டோம் திட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஒப்புக்கொண்டுள்ளார். கனடாவிற்கு இது நல்ல யோசனையா? என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆம், கனடியர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது நல்லது என்று கடந்த வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கார்னி கூறினார். இருப்பினும், கனடா இன்னும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. இந்த மாத தொடக்கத்தில், கனடாவின் இறையாண்மை “விற்பனைக்கு இல்லை” என்று ட்ரம்பின் முன்னிலையில் கார்னி தெளிவுபடுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1433489- சீனாவின் EV சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய BYD விலைக் குறைப்பு!
சீனாவின் EV சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய BYD விலைக் குறைப்பு! BYD பல மொடல்களின் விலையைக் குறைத்து சீனாவில் மற்றொரு மின்சார வாகன விலைப் போரைத் தூண்டியுள்ளது. இதனால், சீனாவில் மின்சார வாகன உற்பத்தியாளர்களின் பங்குகள் சரிந்தன. உலகின் மிகப்பெரிய புதிய ஆற்றல் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனம் (NEV), பல மொடல்களில் 10-30% வரை விலைகளைக் குறைத்துள்ளதாக cnevpost அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மலிவு விலையில் கிடைக்கும் BYD சீகல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் போன்ற மொடல்களுக்கு, இப்போது குறிப்பிட்ட காலத்திற்கு $A7,736க்கும் குறைவான விலையில் விலை தொடங்குகிறது. அதாவது அதன் வழக்கமான தொடக்க விலையான சுமார் $A9,670 இலிருந்து கிட்டத்தட்ட $A1,934 விலைக் குறைப்பு. சீனா உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாகும். சீன மின்சார வாகன உற்பத்தியாளர்கள் பல சந்தைகளில் போட்டியிட அனுமதிக்கப்படாததால், இது மிகப்பெரிய மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மின்சார வாகன சந்தையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433421- விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்... பெண் உள்ளார் என்பது இதைத்தானோ. 😂 அடிக்கின்ற கைதான்... அணைக்கும் என்று மக்ரோன் ஆறுதலைடைய வேண்டியதுதான். 🤣- விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
திருமணம்... சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றது. 😉- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"கூகிள் மேப்"... இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. 😂- கருத்து படங்கள்
- வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ். வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433387- வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு!
வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின் மூலமாக இந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான 2,064 வீதி விபத்துகளில் சுமாமர் 7,000 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1433399- நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!
நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா! உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது பிடிக்கும் என்று இந்திய நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், 2025-26 (FY26) நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.187 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்று கணித்துள்ளது. இது 2025 நிதியாண்டில் ஜப்பானின் $4.186 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை முந்தியுள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான IMF-இன் கணிப்பு, இந்தியாவிற்கும் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான பரந்த இடைவெளியைக் காட்டுகிறது. 2026 ஆம் ஆண்டில் ஜப்பானின் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி $4.373 டிரில்லியனாக இருக்கும் என கணிக்கப்படும் நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டு 2027 ஆம் ஆண்டில் $4.601 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1433219- விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா? பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றிருந்த நிலையில், அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் வேளை அவரது மனைவி மக்ரோன் மீது அறைவது போன்றும் அதனை அவர் சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போன்றதுமான காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளானது. இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இமேனுவல் மெக்ரோன்” தானும் தனது மனைவியும் நகைச்சுவை செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷடமாகும் எனத் தான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 47 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் 72 வயதான தனது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் மெக்ரோனுக்கும் அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433368- பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்
லிவர்பூலின் வெற்றி அணிவகுப்பில் கார் மோதி விபத்து; 50 பேர் காயம்! இங்கிலாந்து நகரில் லிவர்பூல் கால்பந்து கழகத்தின் பிரீமியர் லீக் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட இந்த விபத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 53 வயதான கார் சாரதியான பிரித்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக நம்பப்படவில்லை என்று பொலிஸாரின் ஆரம்ப அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. விபத்தினை அடுத்து சம்பவ இடத்தில் குறைந்தது 20 பேர் சிகிச்சை பெற்றனர். மேலும் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் நான்கு பேர் குழந்தைகள்/சிறுவர்கள் என்றும் அம்பியூலன்ஸ் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெரியவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், தெருவில் வரிசையாக நின்றிருந்த ரசிகர் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்துவதை காண்பிக்கின்றது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் சிலரை முதலில் மோதிய பின்னர் கார் நின்றது. தொடர்ந்து மக்கள் வாகனத்தை நோக்கி விரைந்து வந்து, அதன் கண்ணாடிகளை உடைத்ததாகவும், சாரதி தொடர்ந்து காரை செலுத்தி பலர் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. கார் நின்றதும், ஆத்திரமடைந்த ரசிகர்கள் அதைச் சூழ்ந்துகொண்டு, அதன் ஜன்னல்களை உடைத்தனர், பின்னர், காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு சாரதியை அவர்கள் அடையவிடாமல் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் மிகவும் புகழ்பெற்ற ஆண்கள் கால்பந்து அணியான லிவர்பூல் மற்றும் ஊழியர்கள் பிரீமியர் லீக் கிண்ணத்துடன் நகர மையத்தில் திறந்த மேல் பேருந்தில் அணிவகுத்துச் சென்றபோது இலட்சக்கணக்கான ரசிகர்கள் தெருக்களில் வரிசையாக நின்றபோது இந்த சம்பவம் நடந்தது. https://athavannews.com/2025/1433345- சவுதி அரேபியாவில் மது தடை நீக்கப்பட்டதா?
சவுதி அரேபியாவில் மது தடை நீக்கப்பட்டதா? சவுதி அரேபியா, 73 ஆண்டுகால மது தடையை நீக்கும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை திங்களன்று (26) அந் நாட்டு ஒருவர் மறுத்தார். இது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார். 2034 கால்பந்து உலகக் கோப்பையை நடத்த நாடு தயாராகி வருவதால், சுற்றுலா அமைப்புகளில் மதுபான விற்பனையை அனுமதிக்க சவுதி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவலுக்கான நம்பகத் தகுந்த ஆதாரம் சுட்டிக்காட்டப்படவில்லை. ஒரு காலத்தில் தீவிர பழமைவாத நாடாக இருந்த இந்த இராச்சியம், தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும், எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் ஒரு இலட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளையும் சர்வதேச வணிகங்களையும் ஈர்க்க சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. சவுதி அரேபியாவின் நடைமுறைத் தலைவரான, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 2017 ஆம் ஆண்டில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிப்பதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவந்தது, பொது இடங்களில் பாலினப் பிரிவினை குறித்த சில விதிகளைத் தளர்த்தியது மற்றும் மதக் காவல்துறையின் அதிகாரத்தைக் குறைத்தது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் வெளியான மதுபான விதிகள் பற்றிய அறிக்கை இராஜ்ஜியத்தில் ஒரு தீவிரமான விவாதத்தைத் தூண்டியது. சவுதி அரேபியா மற்றும் குவைத் மட்டுமே மது விற்பனையைத் தடை செய்யும் வளைகுடா நாடுகள். சவுதி அரேபியாவில் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கும் ஒரு சிறிய நடவடிக்கை, கடந்த ஆண்டு தலைநகர் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் முதல் மதுபானக் கடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பு, இராஜதந்திர அஞ்சல் மூலமாகவோ அல்லது கறுப்புச் சந்தையில் மட்டுமே மதுபானம் கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433365- மஹிந்த ராஜபக்ஷ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்
மகிந்த ராஜபக்ச…. புற்று நோயால் மருத்துவ மனையில் என்றால், பசில் ராஜபக்ச… அமெரிக்காவில் கதிரையால் விழுந்து மருத்துவ மனையில் படுத்து இருக்கின்றாராம்.- NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் — கருணாகரன் —
தேசிய மக்கள் கட்சியின் (NPP), உண்மை முகம்... ஜே.வி.பி.- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கோவில் திருவிழாவிற்கு வந்த மேளகாரருக்கு, ஆடு வெட்டி விருந்து வைத்த பரம்பரையில் வந்த ஆட்களுக்கு, பதில் சொல்லுறது இல்லை. 😂 🤣- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது!- வட மாகாண ஆளுநர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.