Everything posted by island
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்வதுல. தொலை நோக்கு சிந்தனையுடன் செயற்பட்டார். தமிழ் எழுத்து சீர்திருத்தம் தமிழ் மொழியின் வளர்சிக்கு மிக முக்ககியம் என்பதை வலியுறுத்தியதுடன் அதனை 1934 ம் ஆண்டிலேயேதனது பத்திரிகைகளான “விடுதலை” , “குடியரசு” பத்திரிகைகளில் பயன்படுத்த தொடங்கிவிட்டார். புதுமையான எழுத்து முறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்திதன மூலம் எழுத்து சீர்திருத்தத்தின் அவசியத்தை பொது மக்களுக்கு விளக்க முயன்றார். இது தமிழ் எழுத்து சீர்திருத்த புரட்சிக்கு வழிவகுத்த முக்கியமுயற்சிகளில் ஒன்றாகும். பெரியாரின் சீர்திருத்த யோசனைகள் தமிழ் எழுத்துக்களை சர்வதேச அளவில் பயன்படுத்த முன்னோடியாக அமைந்தது. எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டது தமிழின் பாவனையை உலக அளவில மேற்கொள்ள முக்கியமான படியாக கருதப்படுகிறது.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
- தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்
கடந்த பல தசாப்தங்களாக தமிழரின் ஏக பிரதிநிதியாக இருந்த சுமந்திரன் அப்போது எல்லாம் தமிழரின் அபிலாசைகளை சிங்கள அரசுடன் பேசி தீர்க்கக் கூடிய சந்தர்பங்கள் பல இருந்தும் அப்போதெல்லாம் பேச்சுவார்ததைகளில் இருந்து வெளியேறி பொறுப்பற்ற தனமாக நடந்து மக்களின் பாரிய இழப்புகளுக்கு காரணமாக இருந்து விட்டு இப்போது தோல்வியடைந்த பின்னர் இவ்வாறு அறிக்கை இடுவது வடி கட்டிய முட்டாள்த்தனம். காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத சுமந்திரன்.- தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
தமிழரசு கட்சி இருந்தால் தானே அதை திட்டி திட்டி எனது அரசியல் பிழைப்பை கொண்டு செல்லலாம் அது இல்லை என்றால் எனது பிழைப்பு என்னவாகிறது என்ற கவலை அவருக்கு. இவரை போல வரட்டு தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்போதாவது தமிழ் மக்களுக்களின் நன்மைக்காக அரசியல் செய்ததை கண்டீர்களா? யாராவது ஒருவனை வில்லனாக சித்தரித்து அவனை காட்டி மக்களைப் பயமுறுத்தி, அதை வைத்து அரசியல் இலாபமும், புலம் பெயர் நாடுகளில் உண்டியல் கொத்துரொட்டி இலாபமும் பார்த்து தமது வாழ்வை தமது முதுமை வரை வளப்படுத்தி வாழ்வதற்கு பெயர் தான் தமிழர் தேசிய செயற்பாடு. அதை யாராவது அம்பலப்படுத்தினால் கோபத்தில் கண்கள் சிவக்க சிவக்க reaction வரும்.- கனடாவில் திருடனுக்கு வந்த சோதனை...
வடிவேலு திரைப்பட காமடியெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது போல…- தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
இவரது நியாயம் என்ன நியாயம் என்று புரியவில்லை. இவரது பாட்டன் தேர்தல்களில் பல முறை தோற்றார். ஆனால், அவர்தான் கட்சி தலைவர். இவரது தகப்பன் குமார் பொன்னம்பலம் மக்களால் நிராகரிக்கப்பட்டார். ஒரு முறை கூட பாராளுமன்றம் போகவில்லை. ஆனால் அவர் தான் கட்சி தலைவர். இப்போது தமிழரசுக் கட்சிக்கு வகுப்பு எடுக்கிறார். தனது கட்சி கடந்த தேர்தலில் படு தோல்வியடைந்தது ஏன் என்று இதுவரை வாய் திறக்கவில்லை.- ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
இதன் உண்மையான அர்த்தம் நிர்வாக சீர்கேடுகளை அகற்றுவதும் நிர்வாகத்தில் உள்ள ஊழல்களை ஒழிப்பது தான். துடைப்ப கட்டைய தூக்குவதல்ல.- ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
தமிழ் திரைத்துறை வீழ்சசி என்பது ஒரு இயல்பான சுற்று என்றே கருதலாம். உலக பொருளாதாரங்கள் எப்படி ஏற்ற இறக்கங்களை கொண்டதோ அதை போல் தான் இதுவும் தற்போதைய OTT தளங்களின் வளர்ச்சி திரையரங்குகளை பாதிப்பதும் ஒரு காரணம். அதை விட தரமற்ற கதைக்களங்கள். தமிழ் திரை உலக வரலாற்றில் வீழ்சசியை சந்திப்பது இது முதல் முறை அல்ல. பல முறை அது சவால்களை சந்தித்த போதும் ஒவ்வொரு முறையும் அதை அடக்கி அது எழுந்தேயுள்ளது. 1980 களில் விசிஆர் களின் வருகை தமிழ் சினிமாவை பாதித்தது. பின்னர் திருட்டு விசிடி ஆகியன முன்னைய காலங்களில் தமிழ் சினிமாவை பாதித்தது.- பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
தலிபான்கள் என்பது இவ்வாறாக சுதந்திரமான மனித வாழ்வுக்கு எதிராக சிந்திக்கும் மனநிலையின் உக்கிரமான வடிவம்( intensiv form) ஆகும். ஆனால் தலிபானை எதிர்ககும் பலரிடம் கூட அவர்களின் soft version இருப்பதை காணமுடியும்.- பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு சமூக வலைதளங்களில் களங்கம்; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ராஜபக்சகளின் கட்சியல்லவா! நாமல் ராஜபக்ச தனது கட்சி உறுப்பினருகு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளாரா?- பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
1970 களில் ஆப்கானிஸ்தான் பெண்களும், அவர்களின் இன்றைய நிலையும் ஒரு ஒப்பீடு.- IMG_8417.jpeg
- யாழ்பாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
யாழ்நகரில் மக்கள் மகிழ்வுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அலங்கார விளக்குகள், வாணவேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் மகிழ்வுடன் கொண்டாடினர். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று அனைவரும் சந்தோசத்துடன் கலந்து கொண்டனர்.- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
உலகில் வாழும் அனைவருமே தமது வாழ்வில் ஓரிரு முறை முட்டாள்த் தனமான காரியங்களை செய்தே இருப்பார்கள். அது இயல்பானது. ஆனால் அதன் விளைவுகளை அனுபவித்த பின்னர் தமது வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நெகிழ்சசி தன்மையுடன் புத்திசாலித்தனத்தை பாவிப்பர். தனது இளவயதில் இளமைத் துடிப்பில் தெருவில் வேகமாக காரோட்டுவதன் மூலமோ drink and drive மூலமோ தனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்த ஒருவர் பின்னர் கல்யாணமாகி தனது பிள்ளைகளுடன் காரில் செல்கையில் அவ்வாறு ரிஸ்க எடுத்து வேகமாக செல்லாமல் நிதானமாக வாகனமோட்டுவர். அது அவருக்கு அனுபவம் கொடுத்த பொறுப்புணர்சசி ஆகும். ஆனால், பிள்ளைகளுடன் செல்கையிலோ அல்லது ஒரு பொது போக்குவரத்து வாகனத்தை ஓட்டுகையிலோ, தன்னை நம்பி தனது வாகனத்தில் பயணம் செய்யும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து உருவாக்கும் வகையில் அதாவது தனது இளவயதில் நடந்து கொண்டதை போல் செய்பவரே முட்டாள் ஆவார். புதிய ஆண்டில் மகிழ்ச்சியுடன் பிரவேசிக்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் கந்தையா.- ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு என்ன காரணம்? பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?
உண்மையில் இது அவமானம் தான். ஆனால், இவ்வாறான சில்லறைகளை ஊக்குவிப்பதே விடுதலை போராட்டம் என்ற மாயை சில குறுகிய மனம் கொண்ட புலம் பெயர் வரட்டு தேசியம் பேசும் இனவாதிகளால் பரப்பப்படுகிறது. பாராளுமன்றத்தில் லூசுத்தனங்களை செய்துவிட்டு முகநூல் நேரலையில் “தமிழேன்டா” என்று கொலரை இழுத்து விடுகையில் அதற்கு விசிலடிக்கும் கூட்டம் அதே போல் ஒரு சிங்கள உறுப்பினர் பாராளுமன்றில் இதே போல “சிங்களவன்டா” என்று கொலரை இழுத்து விட்டிருந்தால் “ ஐயோ! ஐயோ! இனவாதம் என்று மூக்கால் அழுதிருக்கும். இவ்வாறான பித்தலாட்ட அரசியலே தமிழர் பிரச்சனை 75 வருடங்களாக இழுபடுவதற்குஉரிய காரணங்களில் முக்கியமானது.- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
@ஈழப்பிரியன் @Kadancha முட்டாள்கள் என்பது அறிவு குறைவானவர்களை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, திறந்த மனதுடன் உண்மைகளை பார்கக முடியாத, தமது கற்பனைகளையே நிரூபணமாக நினைப்பவர்களைக் குறிக்கிறது. இவர்கள் ஜதார்த்தத்தை அனுசரித்து முடிவுகளை எடுக்காமல், பிடிவாதமாக நான் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பவன் என்று கூறியபடி முடிவுகளை எடுத்து இறுதியில் தாம் விரும்பியதில் பாதியை கூட அல்ல தாம் விரும்பியதை அடைய முடியாமல் அதை முழுமையாக இழந்து தோல்வியை சந்திப்பார்கள். விவாதங்களில் இது போன்ற நபர்கள் முன்கூட்டியே தாம் தீர்மானித்த கருத்துகளில் இருந்து விலக மறுக்கிறார்கள். வாதம் மற்றும் தர்க்கங்களை பொருளாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களது மனநிலை மாறாது ஏனெனில் அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.- தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
பேசாமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போல பரம்பரை தலைவர் என்று அறிவித்து விட்டால் இப்படியான பொது சபை கூட்ட வேண்டிய அவசியமே இல்லை.- முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்
1991 ல் பொருளாதார நெருக்கடி சந்தித்த இந்தியாவில் அன்று நிதி அமைச்சராக பொறுப்பேற்ற திரு மன்மோகன் சிங் மாபெரும் மறுசீரமைப்பை( reform) செய்தவர். இந்திய பொருளாதாரத்தை சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து தாராளமயமாக்கல் பொருளாதாரமாக மாற்றிவர். உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு நாட்டைத் திறந்து விட்டார். பிரதமராக இருந்த காலத்தில், இந்தியா நீடித்த பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தது.- புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
75 வருடங்களாக அதாவது மூன்று நான்கு தலைமுறைகளாக இன முரண்பாட்டை மட்டுமே வைத்து (அதை கூட தீர்கக வக்கற்று) மக்களை உசுப்பேற்றி அரசியல் செய்து சுகம் கண்ட கூட்டத்திற்கு மக்கள் பிரச்சனை என்றால் என்ன என்பதை உணர வைத்ததற்கு அர்சனாவின் வருகை ஒரு தூண்டுதற்புள்ளியாக அமைந்துள்ளது மகிழ்சசியே. ஆனால் அதை தனது சுயவிளம்பரத்துக்காகவும் ஷோ காட்டுவதற்குப் அர்சனா பாவிக்க முயலாமல் சமூக பொறுப்புடன் செயற்படவேண்டும். இவ்வாறான பொறுப்புணர்வுடன் ஏற்கனவே இருப்பவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தான் கூறுவதை சாதிக்க முடியும் என்பதை அர்ச்சனா உணரவேண்டும். அதை விடுத்து தான் மட்டும் தான் புனிதர் என்றும் மற்றயவர்வர்கள் எல்லாம் திருடர்கள், தகுதியற்றவர்கள் என்பது போல் கற்பிதம் செய்யும் செய்யும் அவரது அரசியல் அவரது போக்கினால் அவர் அரசியலில் ஜொலிக்கலாம், ஆனால் அவர் செய்ய விரும்புவதாக கூறுவதைக் செய்ய முடியாது. மக்கள் பிரச்சனைகளை பேசும், புதிய நம்பிக்கை ஊட்டும் இவ்வாறான அரசியல் கலாச்சாரம் என்பது என்பிபி கட்சியை மக்கள் நேரடியாக ஆதரித்து வெற்றி பெற செய்ததன் விளைவே என்பதையும் மறுக்க முடியாது. மக்கள் பிரச்சனைகளை பேசாமல் வெறும் தேசியம், அரசியல் தீர்வு என்று வெத்துவெட்டு வீர அரசியலை இனி செய்ய முடியாது என்பதை மக்கள் புரியவைத்துள்ளது சிறந்த விடயம்.- தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
கோஷான், சாட்சாத் அதே சிவஞானம் தான் இவர். யாழ் மாநகரசபை ஆணையாளராக நீண்ட காலம் கடமையாற்றியவர். புலிகள் பிரேரித்த மூவரில் சிவஞானமும் ஒருவர்.- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
தேர்தல் தரவுகளில் தவறு இல்லை. தனியே வரட்டு தேசியத்தை பற்றி பேசிய அரியநேந்திரனை வட கிழக்கு மக்கள் புறக்கணித்தனர் என்பது உண்மை. மக்கள் பிரச்சனைகளை புறக்கணித்து வெற்று கோசங்களை பேசிய தமிழ் கட்சிகள் தோல்வியடைந்தன. அர்சனா மக்களுக்கு அறிமுகமானதே அவர் மக்கள் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசியதன் மூலமே. மக்கள் அவருக்கு வாக்களித்ததும் அதற்காகவே என்பது வெள்ளிடை மலை. அதை பேசாமல் இருந்துருந்தால் அவர் யார் என்றே எவருக்கும் தெரிந்துருக்காது. இன்று அவர் பேசுவதும் அதையே பேசுவது மக்களின் அன்றாட பிரச்சனைகளை பற்றி மட்டுமே. அதனை நம்பியே அவர் அரசியல் செய்கிறார். நீங்கள் கூறுவதை போன்ற லூசுதனமான face book post களுக்காக. மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதை கடந்து மக்களுக்கு அவரது பேச்சுக்களில் மக்களின் அன்றாட பிரச்சனைக்கு தன்னால் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை வளர்கக அவர் முயல்வதால் தற்போதைய நிலையில் அவருக்கான ஆதரவு தளம் வலுவாக உள்ளது. வெறும் பேச்சோடு நின்றால் அவரை மக்கள் எதிர்காலத்தில் நிராகரிக்கவே வாய்பபு உள்ளது. டக்லஸ் போன்றோர் எந்த காலத்திலும் நேர்மையானவர்களாக மக்கள் பிரச்சனையை அணுகவில்லை என்பது தாயக அரசியல் அறிந்தோருக்கு நன்கு தெரிந்த விடயம். அங்கஜனுக்கு கடந்த தேர்தலில் அதி கூடிய விருப்பு வாக்கு விழுந்ததும் அதற்காகவே. அதை சரியாக செய்ய தவறியதால் அவர் வெற்றி பெற முடியவில்லை.- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மக்களின் சிந்தனை முன்பு அப்படித் தான் இருந்தது. தமிழ் மக்கள் என்ற ரீதியில் தமது அரசியல் உரிமையை நடைமுறை சாத்தியமான உலக நடைமுறைகளை அனுசரித்து தம்மை தலைமை தாங்கியவர்கள் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை செய்வார்கள் என்ற நம்பிகையிலேயே மக்கள் சொல்லொணா துன்பங்களின் மத்தியிலும் தமது வளங்களை முழுமையாக அவர்களிடம் கொடுத்து நம்பி ஏமாந்தார்கள். மக்கள் என்றுமே கடும்போக்குவதிகளாக இருக்கவில்லை. தலைமை தான் அவ்வாறு நடந்து, உலக நடைமுறைகளை புறக்கணித்த அந்த கனவுலக கடும் போக்கு அரசியலே, “ஐயோ சாமி ஆளை விடப்பா முன்பிருந்த நிலையே போதும்” என்று மக்களை நினைக்கவைத்தது. நாங்களும் சாகுறோம், நீங்களும் சாகுங்கள் என்ற கடும் போக்கு அரசியலை விடுத்து, நாங்களும் வாழ்கிறோம் நீங்களும் வாழுங்கள் என்ற மக்கள் அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமையையே மக்கள் எப்போதும், குறிப்பாக 2002 ம் ஆண்டின் பின்னர் எதிர்பார்தது ஏமாந்தனர். 2009 ன் பின்னர் தமிழ் கட்சிகளை மக்கள் தெரிவு செய்ததன் காரணம், போராட்டத்தால் சின்னாபின்னப்பட்ட தமது வாழ்வாதாரங்களையும் நடைமுறைப் பிரச்சனைகள் இவர்கள் தீர்தது தமது பிரதேச அபிவிருத்திகளை இவர்கள் மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே. காலப்போக்கில் அந்த நம்பிக்கையும் அவர்கள் இழந்தனர். அதனால் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு இணைந்த தாயகம், தன்னாட்சி என்ற கோஷத்தை மட்டும் நம்பி போட்டியிட்டவர் வெறும் 20 வீதத்துக்கு குறைவான வாக்குகளை மட்டுமே பெற மக்கள் சிங்கள கட்சி வேட்பாளர்களுக்கு 80 வீதமான ஆதரவைக் கொடுத்தனர். தமிழ் கட்சிகளில் நம்பிக்கையிழந்த மக்கள் NPP ஐ தெரிவு செய்ததும் மூன்றே மாதங்கள் அரசியல் செய்த அர்சனாவை தெரிவு செய்ததும் தமது நடைமுறைப்பிரச்சனைகளை பற்றி இவர்கள் பேசியதாலே. இனியாவது தமிழ் கட்சிகள் வெறும் வரட்டு தேசியவாதம் பேசாமல் மக்கள் பிரச்சனைகளை முக்கிய பிரச்சனைகளாக பேசி அதை தீர்கக முயலவேண்டும். உரிமை அரசியலை பேச பழைய தோல்வி கண்ட எமக்கு பேரவலத்தை தந்த வழிமுறைகளை முன்னுதாரணமாக கொள்ள முடியாது. புதிய வழியில் மக்களின் பிரச்சனைகளை புறந்தள்ளாமல் அவற்றை தீர்பபதுடன் வினைதிறமையுடன் கொண்டு செல்ல வேண்டும்.- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அது தான் உண்மை. சும்மா 1976 ம் ஆண்டு கனவுலகில் சஞ்சரிக்காமல் நடைமுறை உலகத்தை படித்து அதன்படி படி சென்றிருக்க வேண்டும். அந்த கனவால் இப்ப totally damaged. இப்ப உள்ள எவராலும் திருத்த முடியாத அளவுக்கு damaged. எனவே, அடுத்த தலைமுறையாவது அறிவான தலைமுறையாக வளர்ந்தால் மட்டுமே சாத்தியம்.- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
விடுதலை புலிகளை ஒன றுக்கும் ஆகாதவர்கள் என்று எவராலும் கூற முடியாது . அவர்கள் இராணுவ வல்லமையில் ஜாம்பவான்கள். ஆனால் நாம் இங்கு உரையாடுவது அரசியல் வல்லமையைப் பற்றி. ஏனெனில் அதுவே தமிழ் மக்களை தலை நிமிர வைக்கும்.- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஒன்றுக்குமே ஆகாத நீங்களே இங்கு வகுப்பெடுக்கும் போது நாங்கள் எடுத்தால் என்ன என்ற சிந்தனையே எம்மை இங்கு கருத்தெழுதுதத் தூண்டியது. - தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.