Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. கருணாநிதியில் சுயநல அரசியலில் சீமான் அவரின் வாரிசு தான். ஆனால் கருணாநிதி சாயிபாபாவை சென்று சந்திக்கவில்லை. சாயிபாபா தான் கருணாநிதியிடம் நேரம் கேட்டு, வீடு தேடிசென்று சந்தித்தார்.
  2. அது மட்டுமல்ல 1982 ல் பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பின் பிரபா, உமா இருவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஜே. ஆர் கேட்ட போது தமிழ் நாட்டில் இருந்த திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் வேறு பல கட்சிகளும் இணைந்து அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக போராடியதோடு மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தனர். அதனாலேயே அந்த நாடுகடத்தில் தவிர்க்கப்பட்டது. அன்று பிரபாவோ உமாவோ தமிழ் நாட்டில் எந்த அரசியல் முக்கியத்துவமும் அற்ற வெறும் தமிழ் போராளிகள் மட்டுமே. அதை விட போராட்டம் நடைபெற்ற காலத்தில் பல திராவிட இயக்க தொண்டர்கள் நினைத்து பார்கக பாரிய உதவிகளை போராளிகளுக்கு செய்திருந்தனர். குளத்தூர் மணி புலிகள் மறைவாக பயிற்சி பெற பெரும் நிலப்பரப்பை தனது ஊரில் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு போராட்டத்திற்கு பல விடயங்களில் உறுதுணையாக இருந்தார். அவரின் சிபார்சுலேயே சீமான் ஈழத்திற்கு சென்றார். ராஜீவ் கொலைக்கு பின் இந்திய கியூ பிராஞ் பொலிசாரால் அதிகம் துன்புறுத்தப்பட்டவர்கள் திராவிட இயக்க தோழர்களே. அந்த அடக்கு முறையையும் மீறி பலர் உதவி செய்ததி ருந்தனர். அதனால் பலர் வருடக்கணக்கில் சிறை சென்றனர். ஆனால் நன்றி கெட்ட புலம் பெயர் ஈழ தமிழர்கள் சீமானின் சொல்லை கேட்டு அவர்களில் பலரை துரோகிகளாக முத்திரை குத்தினர்.
  3. அரச்சனாவுக்கு பாராளுமன்ற நடை முறைகளோ நிலையியற் கட்டளைகள் பற்றியோ, பன்மைத்துவ அரங்கில் எப்படி உரையாற்ற வேண்டும் என்பதோ தெரியாது என்றில்லை. ஆனால் இவரது Fan group இற்கும் இவரை தேர்தெடுத்தவர்களுக்கும் இது பற்றிய அறிவு கிஞ்சித்தும் கிடையாது என்பதை நன்றாக அறிந்து அவர்களை திருப்திப்படுத்த மட்டுமே உரையாற்றுகிறார்.
  4. ஆமாம், உங்கள் ஊகம் சரி. அத்துடன் ஶ்ரீதரனின் உரையில், அரச அதிகாரிகள் எங்களை விட படித்தவர்கள் அவர்களுடன் அணுகுவதற்கு ஒரு முறையுள்ளது என்று ஶ்ரீதரன் கூறிய கருத்துக்கு அர்சுனா தனது முக நூலில், அவருக்கு அது பொருந்தலாம் அதனால் தனக்கு பொருத்தமானது ஶ்ரீதரன் ஐயா எனக்கு பிரயோகிக்க கூடாது என நக்கலாக பதிலளித்துள்ளார். 😂 ( ஆனால், அர்சனாவின் அணுகுமுறை ஊழலை நிரந்தரமாக ஒழிக்க உதவுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு, ஏனெனில் ஊழல் என்பது அதிகாரிகளில் மட்டும் தங்கி இல்லை ஒட்டு மொத்த மக்களிலுமே அந்த ஊழல் கலாச்சாரம் ஊடுருவி உள்ளது. காசை எறிந்து தமது வேலைகளை விரைவாக முடிப்பதில் புலம் பெயர் தமிழர்கள் விண்ணர்கள். அவர்களில் பலரே அர்சசுனாவின் ஆதரவாளர்கள் கூட. அதிகாரிகள் ஊழல் செய்ய வேண்டும். அதை பொது வெளியில் அம்பலப்படுத்தி நான் ஹீரோ ஆகவேண்டும் என்பதே அர்சசுனாவின் மனவோட்டம் போல தெரிகிறது. காலப்போக்கில் அவர் தனது போக்கை மாற்றி சரியாக செயற்படலாம். அவருக்கு திறமை , தகைமை உண்டு என்பது மறுப்பதற்கில்லை.)
  5. அந்த ஐந்த ஆண்டுகளுக்காக நீங்க சின்னவயசில் இருந்து வெயிற்றிங் போல. 😂
  6. சிவசிதம்பரம் மட்டுமல்ல மாமனிதர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட ரவிராஜ் அவர்களும் அதேபோன்றவரே. யாழ் மேயர் பொன் சிவபாலன் புலிகளால் குண்டுவைத்து படுகொலை செய்யப்பட்ட போது உதவி மேயராக இருந்தவர். கொல்லப்பட்ட சிவபாலனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். அன்றைய குண்டு வெடிப்பு நாளன்று வேறு வேலைகளால் அங்கு செல்லாததால் அதிஷர்வசமாக தப்பியவர். அன்று அந்த கூட்டதில் பங்கு பற்றியிருந்தால் அவர் துரோகி. பங்கு பற்றாததால் மாமனிதர். அதன் பின்னர் அடுத்த யாழ் மேயர் சறோஜனி யோகேஸ்வரன் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போது அவரின் பூதவுடலை தூக்கி சென்றவரும் இதே மாமனிதர் ரவிராஜ் தான். கணவனும் மனைவியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே அமைப்பினால் அரசியல் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் தமிழீழ விடுதலைப்போராட்டதில் தான் நடந்தது. இதை இங்கு கூறுவதற்கு காரணம் துரோகிகும் மாமனிதருக்கும் நூலிழை வேறுபாடுதான் உள்ளது என்ற செய்தியை கூறிய ஒரு சிறு உதாரணம் தான் திரு ரவிராஜ் அவர்கள். இப்படி எத்தனை ரவிராஜ்கள் அதிர்ஷரமின்மையால் துரோகிகளாகி இவ்வுலகை விட்டு சென்றனர். இவை இத் திரியோடு சம்பந்தம் அற்ற பழைய விடயங்கள் என்றாலும் இன்றும் பொய் வரலாறுகளை இன்றும் எழுதி உண்மைகளை மறைப்பவர்களுக்ககவே இந்த உண்மைகளை பதிவு செய்தேன்.
  7. நீண்ட காலம் போராடி ஒரு இரண்டு தலைமுறையை இழந்து ஈழத்தமிழர்களின் political goal இறுதியில் அடைந்தது, இப்படியாக முகநூல்களிலும் இணையத்திலும் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் மட்டுமே. இதை வைத்து திருப்தி கொள்ள வேண்டியது தான். எஞ்சியது இது தான்.
  8. படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும் கூட வக்காலத்து வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி.
  9. இந்திய உயர் மட்ட குழு அவசரம் அவசரமாக இந்த கடிதத்தைப் பற்றி தற்போது விவாதித்து கொண்டிருப்பதாகவும் அதனால் அநுராவுடனான சந்திப்பை இன்று மாலை வரை இந்திய பிரதமர் பின்போட்டிருப்பதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய நேரத்தில் இந்த கடிதத்தை எழுதியதற்காக கஜேந்திரகுமார் அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் நன்றி தெரிவித்து அவசர செய்தி அனுப்பப்படுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி பி. ரி.ஐ செய்தி ஸதாபனம் தெரிவித்துள்ளது.
  10. இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே.
  11. ஓகோ, ஒரு ஆசாமிக்கு சுட்டு போட்டுதோ. பரவாயில்லை, ஒரு cool shower எடுத்தா சரியாகிடும். 😂😂😂😂😂
  12. சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா? ஏன் கேட்கிறேன் என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள். இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து அடுத்தவன் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂 இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.
  13. அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின் மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா? பிரச்சனைகளை தீர்ப்பதை விட பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால் கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார். இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே. தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை. அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும். இதனை சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம் ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன் நேரடியாக பேசக்கூடிய இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு. இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின் அலுவலக்கதுக்குள் அத்து மீறி நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும் தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே. மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம். ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத, அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் ஒரு மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார். பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.
  14. அடுத்த வாரமே தன்னைப் பிரபாகரனின் பேரன் என்பார். இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு அடிக்கிற (B)பிராண்டை பொறுத்து மாறுபடலாம். 😂
  15. சங்கி என்றால் சக தோழன் என்று அர்ததம் என்று சமீபத்தில் சீமான் கூறினார். இப்போது உண்மையான சங்கி என்றால் திமுக தான் என்கிறார். அப்படியாயின் திமுக என் உண்மையான சக தோழன் என்று கூற வருகிறாரா?
  16. தனக்கு தானே சூனியம் வைக்க அநுரா ஒன்றும் தமிழ் தேசிய தலைமைகள் அல்ல. முந்தய சிங்கள தலைமைகள் போல் இவ்வாறான விடயங்களில் மிகுந்த பொறுப்புணர்சியுடன் யோசித்து சாதுரியமாகவே செயற்படுவார். ஆகவே இவ்வாறான உசுப்பேற்றல்கள் தமிழ் தலைமைகளுக்கு பலித்ததை போல இங்கு பலிக்கப்போவதில்லை. இருப்பினும் பழக்க தோசத்தில் முயன்று பார்த்துள்ளீர்கள். 😂
  17. மக்களை உணர்சசி அரசியலை செய்து பிரச்சனைகளை தீர்க்காமலேயே நீண்ட காலம் தமிழ் தேசியக்கட்சிகள் பலன் பெறுவதைக் கண்டு கொதித்து போன அர்ச்சனா அதற்கெதிராக கிளர்ந தெழுந்து, இவர்களால் நீண்ட காலமாக பிரச்சனைகளைத் தீர்காமல் அதை பேசிப் பேசியே எவ்வாறு மக்களை ஏமாற்ற முடிகிறதென்று சிந்தித்து தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை ஏன் நான் பயன்படுத்த கூடாது என்று நினைத்தார். அவர் இதை realize செய்ததும் ஒரு தற்செயல் நகழ்வாகவே அமைந்தது. லூசுத்தனங்களை செய்ய செய்ய மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை கண்ட அவர், அட இது தான்டா நமக்கான தளம் என்று புல்லரித்து “ தமிழேண்டா” என்று புளகாங்கிதம் அடைந்தார். இந்த வார்ததை புலம் பெயர் தேசங்களில் மேலும் பல லூசுகளை உற்பத்தி செய்யும் என அவருக்கு நன்கு தெரியும். அது தனக்கு எதிர்காலத்தில் பலனளிப்பதற்கான முதலீடு தான் அவரது பாராளுமன்ற முதல் நாள் அமர்வில் அவரால் காட்டப்பட்ட குறளிவித்தை. இதை பார்தது மேலும பல அர்சனாக்கள் சிலவேளை வரலாம். யாழ்பாணத்தில் மக்கள் தொகை அதகரிப்பு வீதத்தை விட லூசுத்தனங்களை உற்பத்தி செய்வதில் தமிழ் ஊடகங்களுக்கும் யூருப்பர்களுக்கும் உள்ள போட்டி பிரமிப்பை ஊட்டுகிறது. ஊழல் ஒழிப்பு என்பது ஊழல் செய்பவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி முறையான சட்டவாளர்களை கொண்டு அதை முறைப்படி வாதாடினாலே சாத்தியம். (இது அவரது தங்கத்திற்கும் சட்ட புலமை பெற உதவியாக இருக்கலாம்) இப்படியான குரங்கு சேட்டைகள் அதற்கு உதவப் போவதில்லை. அர்ச்சனா ஆதாரங்களுடன் இதை முறைப்படி அணுகி டு வாதாடி ஊழல்வாதிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுத்தால் எனது கருத்தை வாபஸ் வாங்கி கொள்ளுகிறேன்.
  18. ஊசி அருச்சுனா தன்னிடம் சத்திய மூர்ததிக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அதை அரசாங்கத்திடம் சமர்பிக்க வேண்டும். அல்லது முறைப்படி பொது நல வழக்கு தாக்கல் செய்து இவ்விடயத்தை அணுக வேண்டும். அதை விடுத்து இப்படி அதாகரிகமாக ஒரு வைத்தியசாலை பணிப்பாளரின் அலுவலகத்துக்குள் நுழைவது. பேசுவதை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது எல்லாம் அவரது பண்பாடற்ற செயல்கள். ஒருவருடன் உரையாடுவதை அவரின் அனுமதி இன்றி பதிவு செய்வதே குற்றம். அதை பொது வெளியில் வெளியிடுவதும் குற்றம். மேற்கு நாடுகளில் வாழ்ந்திருந்தால் இந்த அர்சுனாவுக்கு எப்போதோ கடும தண்டனை வழங்கப்பட்டிருக்கும். தான் ஒரு ஹீரோ என்ற நினைப்பில் அதிகமாக ஆட்டம் போடுகிறார். விரைவில் விளைவுகளை சந்திப்பார் என நினைக்கிறேன். மக்களுக்கு ஹீரோயிசம் காட்டுவதே இவரது நோக்கமே தவிர மருத்துவ ஊழல்களை கண்டுபிடிப்பதல்ல.
  19. @valavan எனது கருத்து என்பது அரசியல் தீர்மானம் குறித்த விமர்சனமே. அவ்வாறான விமர்சனங்கள் உலகில் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அரசியல் விடுதலை அமைப்புகளின் தலைமைகளுக்கும் பொருந்தும். ஒரு அரசியல் அமைப்பு அல்லது கட்சியின் அரசியல் தீர்மானங்கள் ஒட்டு மொத்தமான ஒரு தேசிய இனத்தின் மீது பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் போதும், அந்த தாக்கம் தலைமுறைகளை கடந்தும் தொடரும் போதும், அதை நோக்கிய விமர்சனங்கள், விவாதங்கள் நடப்பது உலக வழமை. சாதாரணமாக கண்கூடாக தெரியும் இந்த உண்மைகளை திரை போட்டு மறைக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு என்பது கடந்த கால அரசியலை எதிர்கொண்டதில் ஏற்பட்ட தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளும. காரணமாக இருக்கும் போது அவற்றை பற்றி உரையாடுவது தவறானதல்ல. இங்கு அரசியலில் புனிதப்படுத்தலுக்கு இடமில்லை. அரசியல் தீர்மானங்கள் முடிவுகள் புனிதமானவை அல்ல. அரசியல் தலைமைகளை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டாதாக புனிதப்படுத்துதல்(sanctification )என்பது மிக தவறான முன்னுதாரணம். அவ்வாறு செய்வது அது சார்ந்த சமூகத்திற்கே தீமை விளைவிக்கும். ஒரு பழைய அரசியல் தலைமைகளை புனிதப்படுத்துவதானது, அவர்களது தவறான தீர்மானங்களையும் முடிவுகளையும் சிக்கலின்றி மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது ஒரு தலைமுறையின் அரசியல் தவறுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. ஒரு அரசியல் தலைமையின் தீர்மானங்கள் இவ்வாறு புனிதப்படுத்தப்பட்டால் அந்த அரசியலை உள்வாங்கி, அதை முன்னுதாரணமாக தொடரும் புதிய தலைமுறையும் அதே பாணியை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும். அதே எதிர்பார்பபில் எந்த பொறுப்புத்தன்மை ( Accountability) இல்லாத முடிவுகளை மீண்டும் எடுக்கும். மூன்று தசாப்சங்களுக்கு முன்பான ஒரு அரசியல் தீர்மானத்தை பற்றி பேசக்கூடாது என்று இப்போது அச்சுறுத்தல் வருகிறது என்றால் அந்த சுதந்திர போராட்டம் மக்களுக்கானதில்லையா? ஆகவே திரும்பவும் கூறுகிறேன் ஒரு அரசியல் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது ஒரு போதும் மாவீரர்களை இழிவு படுத்துவதாகாது. அவ்வாறு நீங்கள் கருதுவது உங்கள் உரிமை உங்களுக்கு அந்த கருத்து இருக்கலாம். ஆனால் , அதை நீங்கள் என்மீது திணிக்க முற்படுவது தவறானது. அதை நான் ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை.
  20. அவர்கள் நெய்தல் படையுடன் 💪வந்தால் ஶ்ரீலங்கா நேவி ஒண்டுமே புடுங்கேலாது. விட்டுட்டு ஒட வேண்டுயது தான்.
  21. சரி தான் கோஷான் இருந்தாலும்…. நையாண்டி சர்வாதிகாரிகளின் சிம்ம சொப்பனம் மட்டுமல்ல வரட்டு தேசியர்களுக்கான மாமருந்தாகவும் அமையலாம். உறைக்க சொன்னால் அதனால் என் மீது கொண்ட பெருஞ்சினத்தில் ரோஷம் வந்து திடீரெண்டு திருந்தி விட்டால்..👌 நான் இவர்களுடன் vacation போகப் போவதும் இல்லை. எலெக்சன் கேட்கப்போவதும் இல்லை. 😂
  22. மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துவது நல்லதே. 1987 ல் மாகாணசபையை உதைத்து தள்ளிவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீசை முறுக்கிய நாம் இப்போது அதற்கு கூட கெஞ்ச வேண்டிய நிலை. ஆகவே இதுவும் இல்லாமல் போக முதல் அன்று உதைத்து தள்ளியதை பொறுக்கி எடுத்துக்கொண்டு நடையை கட்டுவதே செயற்படு பொருள் 😂 முகத்தில் அசடு வழிவதை மறைக்கவும் 1987 ல் முறுக்கிய மீசையில் மண் ஒட்டியதை மறைக்கவும் வேண்டுமானால் சுமனை வைச்சு செய்யலாம். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.