Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. ஈழத்தில் பிரபாகரன் சாதியை ஒழித்து விட்டார் என்று இதே திரியில் கூறினீர்கள். இப்போது அவரது , புலிகளின் உறுப்பினர்கள் சாதிபார்பபதை மாற்ற இன்னும் கொஞ்ச காலம் எடுக்கும் என்று அதே திரியில் கூறுகின்றீர்கள்.😂 ஐரோப்பிய நாடுகளில் புதிய தலைமுறை சாதி பார்பதில்லை என்றால் அதற்கு முழுக்காரணமும் ஐரோப்பிய கல்வி முறையும் அங்குள்ள சமூக சமத்துவமுகே காரணம். ஈழத்தில் சாதியை அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டே அனைவரும் நிம்மதியுடன் கண்ணை மூடுவார்கள். தீவிர தேசியவாதிகள் உள்ளடங்கலாக.
  2. அதாவது தொடர்சசியாக துப்பாக்கிகளுடன் நின்று தான் தமிழரிடம் அரசியல் செய்ய முடியும் என்று நீங்கள் கூறும் அளவுக்கு ந்தமிழ் சமூதாயம் நாகரீகமற்ற சமுதாயம் என்று நான் நம்பவில்லை. துப்பாக்கியுடன் நின்றே ஒரு இனத்தை ஆட்சி செய்ய முடியும் என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால் அந்த இனத்துக்கு தன்னாட்சிக்கான எந்த தகுதியும் இல்லை.
  3. தமிழ் நாட்டில் இருந்து எவரும் அப்போது உறுமவில்லை. புலிகளுடன் இரகசியமாக தொடர்புகளை பேணி அவர்கள் கேட்ட உதவிகளை செய்து அதற்காக பலர் தண்டனையும் பெற்றார்கள். இப்போது புலிகள் இல்லை. எனவே, அவர்கள் தமது சொந்த நாட்டு அரசியலை பார்ககிறார்கள். அதில் தவறில்லை. ஆனால், எல்லாம் முடியுமட்டும் இந்திய தடா, பொடா சட்டங்களுக்கு பயந்து பம்மிக்கொண்டுருந்ந கோழை சீமான் இப்போது எல்லாம் முடிந்தபின் உறுமுகிறார். இந்த கேள்வி என்னை பார்தது தனிப்டட நீங்கள் கேட்டிருப்பதால் நான் உங்களிடம் அதே கேள்வியை கேட்கிறேன். நீங்கள் என்ன புடுங்கினீர்கள்?
  4. இரஉவரது போராட்டங்கள் குறித்து நான் பல புலிகளின் வெளியீடுகளிலும் வேறு பல புத்தகங்களிலும் படித்துள்ளேன். அவ்வாறு வாசித்து அறிந்ததை எனது சொந்த அறிவுடன் சிந்திக்கவும் அவற்றை சீர்தூக்கிப் பார்ககவும் கற்றுக்கொண்டுள்ளேன். அதனால் சீமானின் தற்குறி தம்பிகளின் மீம்ஸ்கள், ரியூட்டர் போஸ்ட் மூலம் வரலாற்றை அறிய வேண்டிய இழிநிலை எனக்கில்லை.
  5. அப்படியானால் பெரியாரிஸ்ருகளுக்கு அன்று இருந்த தமிழ் உணர்வு சீமான் போற்றும் மபொசி க்கு இல்லாமல் இருந்தது ஏன்? உங்கள் கருத்துப்படி அவர் இன்னும் தீவிரமாக புலிகளை ஆதரித்து இருக்க வேண்டுமல்லவா? மிக தீவிமாக புலிகளை எதிர்தத்துடன் இந்திய அமைதிகாக்கும் படையை வென்று வரவேற்று அவர்களை கொண்டாடினாரே! சீமானுக்கு அது துரோகமாக தெரியாதது ஏன்? சீமான் போற்றி புகழும் பச்சை தமிழர் காமராஜர் தமிழ் தேசியத்தை முற்றாக வெறுத்து இந்திய தேசியத்தை மிக தீவிரமாக ஆதரித்தாரே! அது ஏன்? அவரை தமிழ் தேசியம் என்று வாய் கிழிய கத்தும் சீமான் போற்றுவது ஏன்? தமிழ் நாடு என்ற பெயரை சூட்ட உண்டாவிரதமிருந்த சங்கரலிங்கம் என்பவரை தனது ஆட்சியில் சாக விட்டதுடன் அவரது கோரிக்கையை கூட நிறைவேற்ற வில்லையே காமராஜர். அது ஏன்? திராவிட இயக்க தொழர்கள் ஈழப்போரளிகளை ஆதரித்து பல உதவிகள் செய்து அதற்காக பல ஆண்டுகள் சிறையில் இருந்த தடா பொடா சட்டம் பாய்நத காலத்தில் சீமான் எங்கு இருந்தார்? கோமாவில் இருந்தாரா? அல்லது தடா பொடா சட்டங்களுக்கு பயந்து பம்மிக்கொண்டு இருந்தாரா? எல்லாம் முடிந்த பின் இனி புலிகள் இங்கு வர மாட்டார்கள், அவர்கள் இனி எனக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள், எனவே அவர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யலாம் என்று புறப்பட்டவரே இந்த சீமான் என்ற நபர். உங்கள் கூற்றுப்படி தனது அரசியலுக்காக புலிகளை எதிர்தத ஜெயலலிதாவை சீமானின் சொல்லுக்காக கண்டும் காணாமல் விடலாம் என்று கூற வருகின்றீர்களா? அப்படியானால் உங்கள் புலிகள் ஆதரவு என்பது சீமானுக்காகவா? புலிகளின் அரசியல் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டும் என் போன்றவர்களை துரோகிகளாக முத்திரை குத்தும் நீங்கள் தனது அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் புலிகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்த, இந்தியாவில் புலிகளுக்கான தடையை வலியுறுத்தி அதை நடைமுறைப்படுத்த தனது அரசியல் ஆளுமையை முழுமையாக பயன்படுத்திய தடா பொடா சட்டங்களை தீவிரமாக அமுல்படுத்தி பல ஈழ ஆதாரவாளர்களை சிறையில் அடைத்த, புலிகளின் போராட்டத்திற்கு பல தடைகளை செய்த, தமிழகத்தில் வாழுத் ஈழ அகதிகளின் கல்வி வாய்பபுகளை மறுத்த ஜெயலலிதாவுடன் soft அணுகுமுறை எடுப்பது ஏன்?
  6. உண்மை. 2008 ல் போர் உச்சதில் இருந்த போது ஜெயலலிதா பேசினார். இந்த கருணாநிதி எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் புலிகளினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் அட்டகாசம் தமிழ் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. நான் ஆட்சியில் இருந்திருந்தால் இவர்களின் கொட்டத்தை அடக்கி இருப்பேன் என்று. அவரை தான் ஒரு சில ஆண்டுகளில் சீமான் ஈழத்தாய் என வர்ணித்து அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்தார். சீமான் கூறினால் பிரபாகரனையும் எதிர்ககும் மன நிலையிலேயே புலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள் இப்போது உள்ளார்கள்.
  7. பெரியாரையும் பிரபாகரனையும் எதிர் கோணங்களில் வைப்பதே தவறு.. இருவரும் தத்தம் வழியில் தமது மக்களின் உரிமைகளுக்காக போராடினர். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், அவரே நீங்கள் கூறுவதை எதிர்ததிருப்பார். இப்படி நீங்கள் கூறுவதில் இருந்து சீமானைப் போலவே நீங்களும் விடுதலைப் புலிகளின் சாதாரண வெளியீடுகளைக் கூட வாசித்திருக்கவில்லை என்பது தெளிவாகப் புலனாகிறது. அதாவது, பிரபாகரனைக் கூட நீங்கள் படிக்கவில்லை. உங்கள் வாசிப்பு என்பது, தம்பிகளின் வட்சப், ரியூட்டர் போஸ்ட்களும் மீம்ஸ்களும் மட்டுமே. பிரபாகரன் ஆயுத இராணுவ வழியில் சாதனைகளை செய்தவர். பெரியார் பத்திரிகை, புத்தகங்கள் மூலமாக சமூக புரட்சியை, போராட்டங்களை செய்தவர். இருவரும் போரடியது வெவ்வேறு காலப்பகுதி. அந்த வரலாறுகளை புத்தகங்களில் படித்திருந்தால் மட்டுமே அதைப் பற்றி அறிய முடியும். பெரியார் அரசியல்வாதி அல்ல. சமூக போராளி. எந்த காலத்திலும் அதிகாரத்தை நோக்கிய நகர்வை அவர் செய்ததில்லை. ஏற்கனவே பல பதவிகளை உதறி தள்ளிவிட்டே போராட்டக் களத்துக்கு வந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அதிகார பீடங்களுக்கு எதிராகவே போராட்டங்களைச் செய்தார். ஆயுதங்கள் இன்றி வேட்டியுடன் பிரபாகரனால் நீங்கள் கூறிய எந்த சாதனைகளையுமே செய்திருக்க முடியாது. ஆயுதங்களுடன் அவரது இராணுவ மதி நுட்பம், ஒரு நேர்மையான விடுதலைப் போராளியாக அவருக்கு பெரிதும் உதவியது. இராணுவ வழி மூலமான அவரது ஈழத்தமிழ் மக்களுக்கான போராட்டம் பிரமிக்கத்தக்கது. ஒரு ஆயுத போராளியாக அவரது நேர்மையை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டவுடன் அத்தனையும் பொல பொல என்று உதிர்ந்துவிட்டது. பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்து சற்று அடங்கி இருந்த சாதி ஈழத்திலும் அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இன்றும் அதே வீரியத்துடன் உள்ளது. ஏன் புலிகளின் உறுப்பினர்களாக ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டவர்களே தமது குடும்ப விடயத்தில் சாதி பார்ப்பதை இன்று மட்டும் அல்ல, போராட்ட காலத்திலேயே நேரில் கண்டுளேன். பல நூற்றாண்டு சமூக போராட்டங்களின் மூலம் பெரியாராலேயே சாதியை ஒழிக்க முடியாத போது புலிகளின் துப்பாக்கிகள் அதை ஒழிக்கும் என்று நம்புவதே முட்டாள்த்தனம்.
  8. நான. கூறியது ஒட்டு மொத்தமான ஒரு இனத்தை பிரதிநிதித்துவம் செய்த அரசியல் தலைமைகள் எல்லாம் அரசியல் ரீதியில் மக்களை பலம் பெற செய்யும் அரசியல் நடவடிக்கைகளை செய்யாமல் தொடர்சசியாக பின்னடைவை கண்டு அரசியல் பலவீனமான இனமாக தமிழரை மாற்றிய கண்ணெதிரே நடந்த நிகழ்வுகளை பற்றியதே. நீங்கள் கூறுவது இராணுவ பலத்துடன் மட்டும் செய்யப்பட்ட தற்காலிக சாதனைகளை மட்டுமே . சர்வதேச அரசியலில் பலம் பெறாமல் எதை செய்தாலும் அது இறுதியில் பொல பொல என்று உதிர்ந்துவிடும் என்பதே இன்றைய உலக ஜதார்ததம். மக்களுக்கு நிரந்தரமாக எந்த பலனும் இல்லை. அதை புரிந்து கொள்ளாமல் விட்டால் அழிவுகளும் அவலங்களும் மட்டுமே எமக்கு மிஞ்சி நிற்கும். அது தான் எமக்கு நடந்தது.
  9. அப்படியானால் உங்கள் தலைவர் சீமான் போற்றி புகழும் மபொசி போன்ற பல பச்சை தமிழர்கள் புலிகளை முற்றாக எதிர்கக, பெரியார் வழி வந்த இயக்கத்தினர் பலர் தன்னிச்சையாக புலிகளுக்கு சட்ட விரோதமாக கூட பல உதவிகள் செய்து பல வருட சிறை வாசம் அனுபவித்தது ஏன்? 1982 ல் பிரபா- உமா சென்னையில் கைது செய்யப்பட்டபோது அவர்களை தம்மிடம் ஒப்படைக்க ஜே. ஆர் கேட்ட போது அதை கடுமையாக பெரியாரிஸ்டுகள் எதிர்தது போராடியது ஏன்? சீமான் போற்றும் பச்சை தமிழர் மபொசி சென்னை வந்த இந்திய இராணுவத்தை வரவேற்றது ஏன்? ராஜீவ் கொலையின் பின்னர் பெரியார் திடல் சோதனையிடப்பட்டது ஏன்? பெரியாரிஸ்டான பேரறிவாளன் தனது வாழ்ககை முழுவதையும் சிறையில் கழித்தது ஏன்? பிரபாகரனை கொண்டு வந்து இந்தியாவில் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று சீமான் கொண்டியது ஏன்? அதை அன்று சபாநயகராக இருந்து நிறைவேற்றி தீர்மானத்தில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய சீமானின் மாமனார் காளிமுத்துவை சீமான் கண்டிக்காதது ஏன்? கண்டித்தால் வீட்டில் சோறு கிடைக்காது என்பதாலா? தான் ஈழம் சென்ற போது தன்னிடம் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை பார்தது தான் தனக்கும் போராடும் உத்வேகம் ஏற்பட்டதாக பிரபகரன் கூறியதாக சீமான் கூறியது ஏன்?
  10. நான. கூறியது ஜதார்ததமான பதில் தானே! ஈழத்தமிழர் போராட்டத்தை மூன்று காலப்குதியாக பிரித்தால், ஒவ்வொரு காலப்பகுதி இறுதியிலும் நாம் முன்பிருந்ததை விட அரசியல் ரீதியில் பின்னடைவில் இருந்தது வெளிப்படையான உண்மை. முதலாவது, ஆயுத போராடத்திற்கு முன்பிருந்த காலப்பகுதி. அதன் இறுதிக்காலம் ஆரம்பகாலதில் இருந்த நிலையை விட பின்தங்கியது. சிங்கள இனவாத அரசியல்வாதிகளை முறியடித்து அரசியல் ரீதியில் எமது போராட்டதை பலம் பெற தக்க நிலை இருந்தும் அதை செய்யாமல் பதவி சுகத்தை அனுபவிக்க மக்களை உசுப்பேற்றும் வாக்கு அரசியலையே அன்று செய்து அதன் பலனாக இறுதியில் பின்னடைவை கண்டனர். அதன் பின்னர் ஆயுதப்போரளிகள் மற்றயவர்களை முற்றாக தமது இராணுவ பலத்தை உபயோகித்து தடை செய்து போராட்டத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்ததார்கள். அதன் இறுதியில் முன்னயதை விட மிக மோசமான பலவீனமான அரசியல் நிலையை அடைந்தோம். இராணுவதோல்வியை விடுங்கள். அரசியல் ரீதியில் அக்காலப்பகுதியில் ஶ்ரீலங்கா அரசிடம் படு தோல்வியடைந்தோம். ஶ்ரீலங்கா அரசின் பிரச்சாரங்களை முறியடிக்கும் வல்லமை இருந்தும் அதை செய்யாமல் அவர்களின் பிரச்சாரங்களுக்கு வலு சேர்ககும் வேலைகளையே தொடர்சசியாக செய்து வந்தார்கள். இறுதியில் அரசியல் ரீதியில் zero அல்ல மைனஸ் நிலையை தமிழர் அரசியல் அடைந்தது. அடுத்தது ஆயுத போராட்டத்திற்கு பின்னரான காலப்பகுதி இப்போதும் தாயகத்தில் சரி புலம்பெயர் நாடுகளில் சரி தொடர்சியாக கோமாளிகளாகவே அரசியல் கட்சிகளும், புலம் பெயர் அமைப்புகளும் அரசியல் செய்கிறார்கள். அதாவது ஒட்டு மொத்தமாக கடந்த 75 வருடங்களாக தமிழர் அரசியல் பின்னடைவை கண்டு வருவது ஆரம்ப பாடசாலை மாணவனுக்கே தெரிந்த வெள்ளிடை மலையாக இருக்கும் போது இப்படியான அபத்தமான கேள்விகளால் எந்த பலனும் இல்லை. இந்த பின்னடைவுகளை உங்களாலோ என்னாலோ இந்த கள உறுப்பினர்களாலோ மீட்க முடியாது. அந்தளவுக்கு பழைய அரசியல் குட்டைக்குள் ஊறிய மட்டைகளாக நாம் உள்ளோம். இனி எதிர்காலத்திலாவது அறிவு பூர்வமான அரசியலாளர்கள் பலர் உருவானால் அது நடக்கலாம். ஆனால், நிச்சயமாக எனக்கோ உங்களுக்கோ அது பார்ககும் பாக்கியம் கிடைக்காது என்பது கவலை தான். எனவே நாம் இருவரும் செய்ய வேண்டியது enjoy the life you have till the end. 😁
  11. பெரியாரின் பல தசாப்த சமூக போராட்டங்களை ஒரு வரியில் கூறிவிட முடியாது. நீங்கள் இன்று தொலை பேசியில் எழுதும் யூனிகோட் முறை தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை 1934 ல் ஆண்டிலேயே தனது பத்திரிகையில் பாவித்து அதை தொடர்ந்து வலியுறுத்தி அதன்தாக்கமே 1978 ல் எம்ஜியார் அரசு அதனை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வைத்தது. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முதன் முதலாக திருத்தி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தியது பெரியாரின் தொடர் போராட்டங்கள் தான். இதே திரியில் இணைக்கப்பட்ட காணொளியில் நாம் தமிழர் கட்சி ஸதாபிக்கப்பட்ட போது அதில் உறுப்பினராக இணைந்த தமிழ் தேசியவாதியான இன்றும் தமிழ் தேசியத்தை வலியுற்றும் திரு. அய்யநாதன் கூறுவதை கேளுங்கள்.
  12. நீங்கள் இதே கேள்வியை இங்கு பல முறை உங்கள் சக கருத்தாளர்களிடம் கேட்டுவிட்டீர்கள். பலமுறை பதிலும் வழங்கியாற்று. இருப்பினும் மீண்டும் பதில்; ஈழத்தமிழர்களாகிய தாம் 2009 க்கு பின்பு மட்டுமல்ல அதற்கு முற்பட்ட காலத்திலும் அரசியல் ரீதியாக எதையும் சாதிக்க வில்லை. தொடர்சசியாக பின்னடைவுகளை மட்டுமே சந்தித்து வந்துள்ளோம். ஆயுத போராட்ட காலத்திலும் சரி அதற்கு முற்பட்ட பிற்பட்ட காலங்களிலும் சரி அரசியல் ரீதியாக எமது நடவடிக்கைகள் பின்னோக்கி சென்றதாகவே இருந்தது. இப்போதும் அரசியல் முன்னேற்றத்திற்கான எந்த சிறிய அறிகுறி கூட இல்லை. அந்தளவுக்கு நாம் எமது அரசியலை கடந்த 75 ஆண்டுகளில் சிதைத்துள்ளோம்.
  13. அரசியல் துறை என்று கூறுகிறார்கள் அடுத்த கட்சியின் உள்விவகாரவ்களில் தலையிடுவது தவறு என்ற அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லைப்போலும். அரசியல் என்றால் அடாவடியில் ஈடுபடுவது தான் என்று கற்றுக்கொண்ட கூட்டம் தானே. வச்சுக்கோண்டா வஞ்சகம் செய்கிறார்கள். அரசியல் துறை என்று இணையத்தில் அனேமதயங்களாக குரைத்து கொண்டு நிற்பவர்கள் நிச்சயமாக போராட்டத்திற்காக மக்களின் பணத்தை ஆட்டையைப் போட்ட மாபியா கும்பலாக தான் இருக்கும்.
  14. இணைப்புக்கு நன்றி ஏராளன். சீமான் கூறியது பொய் என்பது ஏற்கனவே பொதுவாக அறிவுடன் சிந்திக்கக்கூட மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயமே. வழமையாக தனது ஒவ்வொரு கூட்டங்களிலும் பொய்களை கூறிவரும. சீமானோ ஆர்எஸ்எஸ் உருவாக்கிய போலியான விடுதலை ஏட்டை நகலெடுத்து அதனை இணையத்தளங்களில் ஒட்டிய தற்குறிகளோ இதற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை. பெரியாரில் சீமானுக்கு உள்ள கோபம் என்ன வென்றால், “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று பெரியார் கூறியது தான். அது எப்படி எனக்கு இல்லாததை பெரியார் கூறலாம் என்ற ஆதங்கத்தில் தான் சீமான் இவ்வாறு தொடர்ந்து அவதூறுகளை கொட்டி வருகிறார்.
  15. இந்த விடயம் பற்றி பத்திரிகையாளர் லட்மணன் அவர்களுடனான உரையாடல். கட்சி பேதமின்றி தமிழ் நாட்டில் எல்லா கட்சிகளையும் விமர்சிப்பதை வழமையாக கொண்டவர் பத்திரிகையாளர் லட்சுமணன்.
  16. பெரியார் தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்வதுல. தொலை நோக்கு சிந்தனையுடன் செயற்பட்டார். தமிழ் எழுத்து சீர்திருத்தம் தமிழ் மொழியின் வளர்சிக்கு மிக முக்ககியம் என்பதை வலியுறுத்தியதுடன் அதனை 1934 ம் ஆண்டிலேயேதனது பத்திரிகைகளான “விடுதலை” , “குடியரசு” பத்திரிகைகளில் பயன்படுத்த தொடங்கிவிட்டார். புதுமையான எழுத்து முறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்திதன மூலம் எழுத்து சீர்திருத்தத்தின் அவசியத்தை பொது மக்களுக்கு விளக்க முயன்றார். இது தமிழ் எழுத்து சீர்திருத்த புரட்சிக்கு வழிவகுத்த முக்கியமுயற்சிகளில் ஒன்றாகும். பெரியாரின் சீர்திருத்த யோசனைகள் தமிழ் எழுத்துக்களை சர்வதேச அளவில் பயன்படுத்த முன்னோடியாக அமைந்தது. எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டது தமிழின் பாவனையை உலக அளவில மேற்கொள்ள முக்கியமான படியாக கருதப்படுகிறது.
  17. கடந்த பல தசாப்தங்களாக தமிழரின் ஏக பிரதிநிதியாக இருந்த சுமந்திரன் அப்போது எல்லாம் தமிழரின் அபிலாசைகளை சிங்கள அரசுடன் பேசி தீர்க்கக் கூடிய சந்தர்பங்கள் பல இருந்தும் அப்போதெல்லாம் பேச்சுவார்ததைகளில் இருந்து வெளியேறி பொறுப்பற்ற தனமாக நடந்து மக்களின் பாரிய இழப்புகளுக்கு காரணமாக இருந்து விட்டு இப்போது தோல்வியடைந்த பின்னர் இவ்வாறு அறிக்கை இடுவது வடி கட்டிய முட்டாள்த்தனம். காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத சுமந்திரன்.
  18. தமிழரசு கட்சி இருந்தால் தானே அதை திட்டி திட்டி எனது அரசியல் பிழைப்பை கொண்டு செல்லலாம் அது இல்லை என்றால் எனது பிழைப்பு என்னவாகிறது என்ற கவலை அவருக்கு. இவரை போல வரட்டு தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்போதாவது தமிழ் மக்களுக்களின் நன்மைக்காக அரசியல் செய்ததை கண்டீர்களா? யாராவது ஒருவனை வில்லனாக சித்தரித்து அவனை காட்டி மக்களைப் பயமுறுத்தி, அதை வைத்து அரசியல் இலாபமும், புலம் பெயர் நாடுகளில் உண்டியல் கொத்துரொட்டி இலாபமும் பார்த்து தமது வாழ்வை தமது முதுமை வரை வளப்படுத்தி வாழ்வதற்கு பெயர் தான் தமிழர் தேசிய செயற்பாடு. அதை யாராவது அம்பலப்படுத்தினால் கோபத்தில் கண்கள் சிவக்க சிவக்க reaction வரும்.
  19. வடிவேலு திரைப்பட காமடியெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது போல…
  20. இவரது நியாயம் என்ன நியாயம் என்று புரியவில்லை. இவரது பாட்டன் தேர்தல்களில் பல முறை தோற்றார். ஆனால், அவர்தான் கட்சி தலைவர். இவரது தகப்பன் குமார் பொன்னம்பலம் மக்களால் நிராகரிக்கப்பட்டார். ஒரு முறை கூட பாராளுமன்றம் போகவில்லை. ஆனால் அவர் தான் கட்சி தலைவர். இப்போது தமிழரசுக் கட்சிக்கு வகுப்பு எடுக்கிறார். தனது கட்சி கடந்த தேர்தலில் படு தோல்வியடைந்தது ஏன் என்று இதுவரை வாய் திறக்கவில்லை.
  21. இதன் உண்மையான அர்த்தம் நிர்வாக சீர்கேடுகளை அகற்றுவதும் நிர்வாகத்தில் உள்ள ஊழல்களை ஒழிப்பது தான். துடைப்ப கட்டைய தூக்குவதல்ல.
  22. தமிழ் திரைத்துறை வீழ்சசி என்பது ஒரு இயல்பான சுற்று என்றே கருதலாம். உலக பொருளாதாரங்கள் எப்படி ஏற்ற இறக்கங்களை கொண்டதோ அதை போல் தான் இதுவும் தற்போதைய OTT தளங்களின் வளர்ச்சி திரையரங்குகளை பாதிப்பதும் ஒரு காரணம். அதை விட தரமற்ற கதைக்களங்கள். தமிழ் திரை உலக வரலாற்றில் வீழ்சசியை சந்திப்பது இது முதல் முறை அல்ல. பல முறை அது சவால்களை சந்தித்த போதும் ஒவ்வொரு முறையும் அதை அடக்கி அது எழுந்தேயுள்ளது. 1980 களில் விசிஆர் களின் வருகை தமிழ் சினிமாவை பாதித்தது. பின்னர் திருட்டு விசிடி ஆகியன முன்னைய காலங்களில் தமிழ் சினிமாவை பாதித்தது.
  23. தலிபான்கள் என்பது இவ்வாறாக சுதந்திரமான மனித வாழ்வுக்கு எதிராக சிந்திக்கும் மனநிலையின் உக்கிரமான வடிவம்( intensiv form) ஆகும். ஆனால் தலிபானை எதிர்ககும் பலரிடம் கூட அவர்களின் soft version இருப்பதை காணமுடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.