Everything posted by island
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
தமிழ் நாட்டில் இதுவரை முதலமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவருமே அந்த மண்ணின் மைந்தர்களே.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
காணொளிகளை விடுத்து 100 வருட வரலாறு படித்த புத்தகங்களை சமர்பிக்கலாமே! அதை விபரித்து சொந்த கருத்துகளை அறிவியல். ரீதியான ஆதாரங்களை இணைத்து எழுதலாமே!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், சமூக நீதி என்ற அடித்தளத்தில் இயங்கிய பெரியாரிஸ்டுகளோ திராவிட கருத்தியலோ என்றுமே தமிழ் தேசியத்துடன் முரண்படவில்லை. இணைந்தே பயணித்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், ஈழத்தமிழர்களுக்கு நீண்ட கால உதவிகளையும் பாரிய ரிஸ்க எடுத்து அவர்கள் செய்துள்ளார்கள். அவ்வாறு இணைந்து பயணிக்காமல் எதிரிகளாக இருந்திருந்தால் 1982 மே மாதத்திலேயே பிரபாகனும் மகேஸ்வரனும் இலங்கை அரசுடம் ஒப்படைக்கப்டிருப்பார்கள். தனது அயோக்கிய இனவாத அரசியலுக்காக இவ்விரண்டையும் எதிரிகளாக காட்ட சீமான் என்ற பொய்யன் கூறும் அயோக்கியத்தனமான உருட்டுக்களை மறுதலித்து உண்மை வரலாற்றை வெளிக்கொண்டு வரவே இங்கு விவாதிக்கப்படுகிறது. தமக்கு பல உதவிகளை செய்த வரலாற்றை மறந்து அவர்களை எல்லாம் துரோகிகளாக காட்ட முற்படும் நன்றி கெட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சிலரது தமது அரசியல் வியாபாரத்திற்காகவும் மீண்டும் மக்களிடம் பணவேட்டையாடவும் சீமான் என்ற ஆசாமி இவர்களுக்கு தேவைப்படுகிறார். கடந்த 15 வருடங்களாக குடித்துவிட்டு மேடையில் காட்டு கத்து கத்தியதை தவிர சீமான் எதையும் ஈழத்தமிழர்களுக்காக செய்யவில்லை.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அடிக்கடி எதிர் கருத்தாளரை வைரவரின் வாகனம் என்று கூறுகின்றீர்கள். வைரவரின் வாகனம் என்ன? BMW? Mercedes? Porche? Jaguar?
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அத்துடன் 1981 ஜனவரி மாதம் மதுரை தமிழாராய்சசி மகாநாட்டு இறுதியில் எம்ஜிஆர் இன்பேச்சை கண்டித்து யாழ்பாணம் முழுவதும் எம்ஜிஆர் அவர்களுன் கொடும்பாவியை எரித்து இளைஞர்கள் போராடியதையும் ஞாபகப்படுத்துகிறேன்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
முதல் கேள்வி உலகளாவிய லீதியில் உள்ள எல்லா மரபு இனங்கள் தேசிய இனங்களுடன. தொடர்புபட்டதால் விளக்கம் தந்தேன். இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் கூற முடியும்? அது தற்போதைய நடைமுறை அரசியல் சார்ந்தது. அவர்களது சமூக நீதி அரசியல் சர்ந்தது. இதற்கு தமிழ் நாட்டு மக்கள் தான் பதில் கூறவேண்டும். உலக அரசியலை புரிந்து கொள்ள முடியாத கத்துக்குட்டிகளாக, மோசமான உலக அரசியலை செய்ததன் மூலம் ஏறகனவே இருந்ததையும் இழந்து படு தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் அதிலிருந்து சற்றும் பாடம் கற்காமல் இன்று பல கட்சிகளாகவும் பல புலம்பெயர் அமைப்புகளாக பிரிந்து நின்று அடிபடும் கிணற்று தவளை அரசியல் செய்யும் ஈழத்தேச இனமக்களாகிய நாம் அயல் தேசத்து தமிழ நாட்டு தேசிய இன மக்களுக்கு வகுப்பெடுக்க முடியாது. எது நல்லது என்று அந்த தேசிய இன மக்கள் தேர்தெடுத்து வருகிறார்ரகள். இப்போது இருப்பதை விட மேம்பட்ட சமூகநீதி அரசியல் உருவானால் அதை தேர்தெடுப்பார்கள். அது அவர்கள் பிரச்சனை.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள், பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த டிஎன்ஏ பரிசோதனைகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களின் மரபு இனங்களை துல்லியமாக இனங்காட்டும். ஆனால் அந்த மரபு இனங்களில் இருந்து பிரிந்த தேசிய இனங்களை அடையாளம் காட்டாது. எடுத்துக்காட்டாக உங்களது அல்லது எனது டிஎன்ஏயும் ஒரு தெலுங்கு, கன்னட அல்லது மலையாள இனத்தில் பிறந்த ஒருவரது டிஎன்ஏ எல்லாமே எம்மை ஒரே இனக்கூட்டாகவே அடையாளம் காட்டும். உங்களையோ என்னையோ தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர் என்று பிரித்தோ தெலுங்கு, கன்னட, மலையாளத்தவரை பிரித்தோ அடையாளம் காட்டாது. அதாவது மரபு இனங்களை அடையாளம் காட்டும் டிஎன்ஏ, தேசிய இனங்களை அடையாளம் காட்டாது. வட இந்தியர் ஒருவரது டிஎன்ஏ, அவரை Indo- Aryan என்ற வகை மரபு இனமாக அடையாளம் காட்டுமே தவிர, இவர் குஜராத்தியர், இவர் பஞ்சாபியர் என்று தனித்து அடையாளம் காட்டாது.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
திராவிட என்பது மரபு இனம். தமிழர் என்பது தேசிய இனம். ஐரோப்பாவில் பல தேசிய இனங்களை கொண்ட லத்தீன் மொழிக்குடும்ப மக்கள் ஜேர்மானிய மொழிக்ககுடும்ப மக்கள், ஸலாவிய மொழிக்குடும்ப மக்கள் உள்ளது போல் தான் இதுவும். இவ்வாறான மரபு இனங்களும அதற்குள் பல தேசிய இனங்களும் உலகம் முழுவதும் உள்ளன. நீங்கள் பரீட்சித்து பார்கக விரும்பினால் உங்கள் டிஎன்ஏ மாதிரியை அனுப்பி பரீட்சிக்கலாம். உங்கள் மரபு இன பிரதேசங்களாக இலங்கையில் தொடங்கி கிட்டதட்ட தென்னிந்தியா முழுவதும் என்று வரைபடத்தில் அடையாளமிடப்பட்டு காட்டப்பட்டிருப்பதை தரவுகள் தெரிவிக்கும்.
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
“யாழ்பாணம் பண்பாட்டு மையம்” என்பதே உண்மையில் சிறந்த பெயர். இதற்கு பெயரில் மாற்றம் கொண்டுவரும் உரிமை சட்டப்படி யாழ் மாநகரசபைக்கே உள்ளது. நிர்வகிக்கும் உரிமையும் மாநகர சபையுடையதே. ஆனால் இவ்வாறாற பாரிய கட்டங்களை உயர் தரத்தில் பராமரிக்கும் திறன் யாழ் மாநகரசபைக்கு இப்போது இல்லையெனினும் இதன் பராமரிப்பு பயிற்சிகளை தனது ஊழியர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து இதனை நடைமுறைப்படுத்தி, இந்த கட்டடத்தை முழுமையாக பொறுப்பெடுப்பதற்கான வேலைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தேர்தலின் பின்னர் யாழ் மாநகரசபையை கைப்பற்றுபவர்களுக்கு இந்த பொறுப்பு உள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
சீமான் நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு என்ன பொருத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்கள் பார்ததீர்களா? அந்த டைரக்ருக்கு சீமானைப்கற்றி முன்பே தெரிந்திருக்கிறது.
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
மிகவும் தெளிவான விளக்கம். நன்றிகள்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
ஒரு தனிப்பட்ட நம்பிக்கையாக அவை பல்கி பெருவதில் எந்த அபாயமும் இல்லை, ஆனால் உங்களைப்போன்ற சைவ மத வெறியர்கள் பல்கி பெருகுவது தமிழ் இனத்துக்கே ஆபத்தானது. அனைத்து மதங்களைச் சேர்ந்த போராளிகளும் தமது உயிரை கொடுத்து நாட்டை உருவாக்கி அது உங்களை போன்றவர்கள் சகிப்புத்தன்மையற்ற மத வெறியர்கள் கையில் சிக்கி இருந்தால் எப்படி இருந்திருக்கும். அதை விட சிங்களவர்கள் ஆட்சியில் வாழலாம். இயற்கை தனது கடமையை சரியாக தான் செய்துள்ளது என்று நிம்மதி கொள்ளலாம்.
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
மனச்சாட்சிக்கு நல்ல விடயங்கள் என்று படுவதை வரவேற்பதும், தவறுகளை சுட்டிக்காட்டுவதும் மனித சமூகவியல் முன்னேற்றத்திற்கு அவசியமானது. . அதே வேளை இந்த உலகில் எவரையும் நூற்றுக்கு நூறு முன்மாதிரியாக கொள்வது செம்மறி மனப்பாங்கு. அறிவார்ந்த இனமாக இருக்க வேண்டிய தமிழர்களில் இந்த செம்மறி மனப்பாங்கை நான் ஊக்குவிக்க மாட்டேன்.- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
அதை உங்கள் நண்பர்களிடம் முதலில் சொல்லி அதை அமுல்படுத்தி விட்டு என்னிடம் வரவும்.- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தமிழர் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை, சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாக மட்டும் சுருகப்பட்டதைச் சரியாக புரிந்து கொண்ட விடுதலைப்புலிகளும், பொங்கல் பண்டிகையை உழவர்களை போற்றும் நாளாகவே கொண்டாடினர்.- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ஆயிரமாயிரம் மக்கள் ஈழத்தில் அவதிப்பட அவர்களை விட்டு விட்டு உங்களுக்கு ஹெல்மட் ஹோல் அழைப்பிதழ் அனுப்பி ஜேர்மனிக்கு அழைத்தைப்போல அன்று Jean Chretien அவர்களை அழைத்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதாவது 1984 ல் எம்ஜியால் ஆட்சி வழங்கிய ஈழதமிழருக்கான கல்வி வசதியை உங்களினதும் உங்கள் தலைவர் சீமானினதும் தலைவி ஈழத்தாய் ஜெயலலிதா பறித்தெடுத்ததைப்பற்றியோ பின்னர் 1996 ல் அவர் தோற்கடிக்கபட்டவுடன் அவ்வசதி மீண்டும் ஈழத்தமிழருக்கு வழங்கப்பட்டதை பற்றியோ உங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் எனது உறவினர் எப்படி படித்தார் எனபது மட்டும் உங்களுக்கு உறுத்துகிறதோ?- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
கொள்ளை பங்கு பிரிப்பில் தான் அந்த கொலை நடந்ததாக கேள்விப்பட்டேன். மாபியாக்கள்.- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
மதங்களைக்கடந்து ஒரு பண்டிகையை தமிழர் பண்டிகையாக அனைத்து தமிழரும் கொண்டாட முன்வருவதை வரவேற்று அதை ஊக்குவித்து மகிழாமல் இதற்குள்ளும் மத பிரிவினைகளை ஊக்கிவித்து சுகம் காணும் இழி மனநிலையுடன் தமிழர் தாயகவிடுதலை என்று தனி நாடு கேட்டிருக்கிறோம். இப்போதும் தன்னாட்சி என்று வெற்று கோஷங்களை மட்டும் செய்கிறோம். ஒன்றிணைந்து அனைவரையும் மதங்களை கடந்து அரவணைக்கும் பக்குவம் இல்லை என்றால் அரசியல் விடுதலை கானல் நீர் தான்.- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இல்லை பார்கக சொல்லவில்லை, ஆனால் புத்தகங்களை படிப்பதால் என்ன பிரயோசனம் என்று கேட்டிருந்தீர்கள். அதனால் தான் கூறினேன், புத்தகங்களை படித்து விரிவான வரலாறுகளை அறிந்தால் தற்குறி அரைகுறைகள் உருவாக்கும் மீம்ஸ்களை வரலாற்றுக்காக நம்பி இருக்க வேண்டிய பரிதாபநிலை வராது என்பதைச் சுட்டிக்காட்டினேன். இந்த திரியிலேயே உங்கள் வழமையான பாணியில் அப்படியான தற்குறிகளின் மீம்ஸை ஆதாரமாக இங்கு இணைத்து காட்டிய உங்களால் முழுப்பத்திரிகையை வாசிக்கமுடியவில்லை.- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
புறநானூறில் இருந்து சங்க கால தமிழர் பொங்கல். புறநானூறு 168 வது பாட்டு அருவி பாயும் மூங்கில்-காடு. அந்த மூங்கிலில் மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கும். காட்டுப் பன்றிக் குடும்பம் அங்குள்ள காந்தள் கிழங்குகளைக் கிண்டி உண்ணும். அவை கிண்டிய புழுதியில் அங்கு வாழும் குறவர்-மக்கள் தினையை உழாமலேயே விதைப்பர். அதில் விளைந்த தினையை மரையான் என்னும் காட்டுப்பசுக்கள் மேயும். அந்த மரையானின் பாலைக் கறந்து ஊற்றி மான்கறியை அதில் ஊற்றிப் புன்கம் (பொங்கல்) சமைப்பர். சந்தன விறகில் தீ மூட்டிச் சமைப்பர். அவர்களின் வீட்டு முற்றத்தில் கூதளம்பூ பூத்துக் கிடக்கும். வரும் விருந்தினர்களுக்கெல்லாம் வாழை இலையில் அந்த முற்றத்தில் பங்கிட்டுத் தருவர்.- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமானின் ஈழத்தாய் ஜெயலலதா தமிழகத்தில் வாழ்ந்த ஈழத்தமிழ் அகதிகளுக்கான கல்வியை மறுத்த போது அவர்களுக்கு கைகொடுத்தது பெரியார்- மணியம்மை ரஸ்ட மூலம் உருவான கல்லூரிகள் தான். அந்த காலத்தில் அங்கு வாழ்ந்து அத்த கல்லூரியில் படித்த எனது உறவினர் ஒருவர் கனடாவில் வாழ்கிறார்.- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
உழவர் திருநாள். தமிழ் உழவர்கள் பாரம்பரியமாக அறுவடை நாள் முடிந்து தமது உழைப்பின் பயனை அனுபவித்து, சொந்த பந்தங்களுடன் மகிழ்சசியையும் அன்பையும் பகிர்ந்து கொள்ள கொண்டாடும் திருநாள். உழவர்களின் உழைப்புக்கு நன்றி கூறும் நாள் என்பதால், தமிழர்கள் அனைவரும் அதைக் கொண்டாடுகிறார்கள். - நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
Important Information
By using this site, you agree to our Terms of Use.