Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. 2009 ம் ஆண்டின் பின்னர் இந்த கும்பல் எல்லாம் பல பிரிவுகளாக, கிட்ட தட்ட ஒரு பாதாள உலக கோஷ்டிகள் போலவே செயற்பட்டு வருகின்றன. யார் யார் எந்த குறூப் என்று கூட கண்டு பிடிக்க முடியாத நிலை. மக்களிடம் இருந்து திட்டமிட்டு கொள்ளையடித்த பணம், அதன் முதலீடுகள் எல்லாம் இவர்களை பல பிரிவுகளாக ஆக்கியுள்ளன போலும். நேர்மை சிறிதளவு இருந்திருந்தால் ஒரு நியாயமான கூட்டிணைவுடன் வெளிப்படை தன்மையுடன் இயங்கி மககளுக்கு பதில் கூறி ஒரு அறக்கட்டளையை உருவாக்கி மக்களின் நன்மைக்காக செயற்பட்டிருப்பர். இப்படி பாதாள உலக கோஷ்டி போல் ஒருவரை ஒருவர் போட்டு கொடுக்கும் வேலைகளை செய்திருக்க மாட்டார்கள்.
  2. இவ்வாறாக முன்முடிவுகளை எடுத்து விட்டு, அந்த முன்முடிவுகளை செயற்படுத்தும் வகையில் அரசியல் செய்வதும், பின்னர் பாத்தீர்களா நாம் அப்போதே சொன்னேனே என்று அழுவதும் தான் தமிழ் தேசியம் பேசிய தமிழ் தரப்பின் நிரந்தர கொள்கை அரசியல்.
  3. கட்டுநாயக்கா - யாழ்பாணம் விமான சேவை நடைமுறைப்படுத்தப்பட்டால் உண்மையில் சிறப்பானது. யாழ்பாணம் சர்வதேச விமான நிலையபாக இருப்பதால் ஐரோப்பாவில் இருந்து நேரடியாக யாழ்பாணத்திற்கு பயணம் முன்பதிவு செய்து கொள்ளும்்வசமி ஏற்படும். பயண பொதிகளை நேரடியாக யாழ்ப்பாணத்திற்கே அனுப்பலாம். ஐரோப்பாவில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு மிகவும் இலகுவாக இருக்கும்.
  4. தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா எங்குமே, ஏன் அதை தாண்டி இலங்கையிலும் சாதி வெறி பரப்பப்பட்டதானது ஆயிரக்கணகான வருட வரலாற்றைக் கொண்டது. இந்து மதத்தை அடிப்படையாக கொண்டு தமது மேலாண்மையை பேண மற்றய மக்களை ஒடுக்க அவர்களுக்கு கல்வியை மறுத்து அது கட்டமைக்கப்பட்டது. அது பற்றி விவாதிப்பதே நீண்ட ஒரு தனி சப்ஜெக்ட். தற்காலத்தில் தேர்தல் அரசியல் கட்சிகள் சாதி வாரி வேட்பாளரை தேர்தல் வெற்றி என்ற யுக்திக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனவே தவிர மற்றப்படி சாதி வெறியை கட்சிகளாகவோ கட்டமைக்கப்பட்ட மக்கள் அமைப்புகளாகவோ யாரும் பரப்பவுல்லை. ஒடுக்கப்பட்ட மக்களை தூக்கி விடுவதற்கான இட ஒதுக்கீடு அரசியலே கடந்த 100 வருட அரசியலாக அம்பேத்கார் பெரியார் போன்ற தலைவர்களின் போராட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதுவும் தமிழ் நாடு மற்றைய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக 69 விடழுக்காடுவரை இட ஒதுக்கீட்டை வழங்கு சாதி ஒடுக்குமுறையில் இருந்து மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனல் இனவெறி என்பது ஆபத்தானது மக்களை பிரித்து வெறுப்புகளை வளர்தது பேரழிவை உண்டாக்கக்கூடியது என்பதை அனுபவர்ரீதியாக உணர்ந்துள்ள நாங்கள் தமிழ் நாட்டில் இனவெறியை தூண்ட ஆதரவளிக்க கூடாது. ஈழ அரசியலில் உசுப்பேற்றுபவர்களை சாடி பல பதிவுகளை நீங்களே இட்டுள்ளீர்கள். நடைமுறை சாத்தியமான அரசியலை இலங்கையில் வலியுறுத்தும் நீங்கள் அங்கு இனவெறியளர்கள ஆதரிப்பது முரண்பாடாக உள்ளது. நாம் பட்ட துன்பம் அவர்களும் படடும் என்ற நல்லெண்ணமோ😂😂😂😂
  5. இந்த மனிமனின் பேச்சின் கவர்சசியை விரும்பிய கூட்டமே இனவாத தீயில் ஜேர்மமனி மூழ்க காரணமாயிற்று. இவரை போல் இராணுவ வல்லமையோ வீரமோ இல்லாத கோழையாக சீமான் இருந்தலும், தனது சொந்த நல்வாழ்வுக்காக நச்சு கருத்துக்களை மக்களிடம் விதைப்பதிலும், கோயபல்ஸ் பாணி பொய்கள் மூலம் பொய் வரலாறுகளை கட்டமைப்பதிலும் மனித வெறுப்பு அரசியல் மூலம் கல்வியறிவற்ற இளவயத்தினரிடையே நஞ்சை விதைப்பதிலும் சீமான் வல்லவர் தான். அதுவே மிக மிக ஆபத்தானது. தமிழ் நாட்டு மக்கள் அன்றைய ஜேர்மனியரை போல் ஏமாளிகளாக இல்லை என்பதை இந்த சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி உயிருடன் உள்ளவரை உணர்ததிக்கொண்டே இருப்பது ஆறுதலளிக்கும் செய்தி. தனது வாழ் நாளின் இறுதி நாள்வரை (சேடம் இழுக்கும் வரை) இனவெறியை தனது கூட்டத்திற்கு விதைத்து விட்டு இந்த மனிதர் போய் சேரட்டும். ஆனால் இவரது கருத்துக்கள் என்ற நஞ்சு தமிழ் நாட்டில் பரவாமல் இருக்க வேண்டும் என்பதே மக்களின் அக்கறை. அந்த அக்கறையை சிம்ம சொப்பனம் என்று அர்ததப்படுத்தி கொள்ளக் கூடாது. இவரை ஆராதிப்பவர்களுக்கு சிங்கள இளவாதத்தை எதிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை.
  6. சீமானின் கொள்கை தமிழ் தேசிய கொள்கை அல்ல. இனவெறியை பரப்பி அரசியல் இலாபமடையும் அயோக்கிய அரசியல். இவரது வழி காட்டிகள் சிங்கள இனவாதிகளே. இவரது “ நாம் தற்குறிகள்” கட்சி தம்பிகளிடையே இனவெறி என்ற நஞ்சை பரப்புரை செய்து மேற்கு நாடுகளில் வதியும் ஈழத்தமிழ் மூடக்கூட்டத்திடம் பண வேட்டையாடுவதும், இனவெறி ஆர் எஸ் எஸ் மதவேறி கூட்டத்திடம் பேரம் பேசி பணவேட்டையாடி சொகுசாக வாழ்வதே சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதியின் திட்டம். ஏற்கனவே “தமிழீழ தேசமீட்பு நிதி” என்று தமிழ் மக்களின் வசூலித்த பணத்தை திருடிய மாபியாக் கூட்டமும் தனது முட்டாள் கூட்டத்தை entertain செய்ய சீமானின் இனவெறிக் காட்டு கத்தல்களை பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் நாட்டு மக்களால் தான் முற்றாக நிராகரிக்கப்படுவோம் என்பது சீமானுக்கு நன்கே தெரியும். இருப்பினும், தனக்கு கிடைத்த கிடைத்த மூட தம்பிகளை பயன்படுத்தி பணவேட்டையை நடத்துவதே அவரது இலக்கு.
  7. உங்களுக்கு எந்த தொடர்பும் அற்ற தமிழ்நாட்டில் அந்த மண்ணில் வாழும் அந்த மண்ணின் மைந்தர களிடையே இனவாதத்தை வளர்ககும் வகையில் படு மோசமான இனவெறியை கக்கும் உங்களை போன்ற மோசமான இனவாதிகள் சிங்கள இனவாதத்தை பற்றி கதைத்து மூக்கு சிந்தி அழுவது ஏன்? வருடாவருடம் சிங்கள இனவாதத்தை பற்றி ஐநாவிடம் முறையிடுவது ஏன்? இங்கிலாந்தில் வாழும் ரூமேனியர் கிழக்கு ஐரோப்பியருக்கு எதிராக கூட இனவெறியை கக்கி கொண்டு சிங்கள இனவாதத்தை பறி பேசுவது எந்த வகையில் நியாயம். ஶ்ரீலங்கா சென்றால் அங்கு பவ்வியமாக சிங்கள அரசுக்கு விசுவாசமாக கோழைகளாக வாலைச் சுருட்டிக் கொண்டு அங்கு இருந்து விட்டு திரும்பி ஐரோப்பா வந்ததும் வீரமும் இனவெறியும் திரும்ப வந்து விடும்.😂😂 சிங்களவரை விட பல மடங்கு மோசமான இளவேறியர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாமலேயே, அடுத்தவன் நாட்டில் வந்தேறிகளாக இருந்து கொண்டு இவ்வளவு இனவெறி என்றால் உங்களுக்கு அதிகாரமும் நாடும் கிடைத்திருந்தால் என்ன பேயாட்டம் ஆடியிருப்பீர்கள்?
  8. இவர்கள் பாரவையில், தேசிய செயற்பாட்டாளர்கள், சீமானின் தறுதலைகள் எந்த கேவலமான சொல்லை பாவித்தாலும் அது வணக்கத்துக்குரிய சொல்லாகவே கருதுவர். அதனால் தான் அந்த அந்த கூட்டதில் கத்திய அந்த ரவுடி காட்டுமிராண்டிக் கூட்டதை கண்டிக்காமல், நாகரீகமாக கருத்து வைத்த உங்களை மீது கண்டிப்பு.
  9. பேரறிவாளன் ஒன்றும் தனது வீட்டு பிரச்சனைக்காக தண்டனை பெறவில்லை. ஈழத்தமிழருக்கு உதவி செய்ய விரும்பியதாலேயே தண்டனை பெற்றார். அவரது தமிழ் உணர்வை ஈழத்தமிழர்கள் பயன்படுத்தினர். உண்மையில், தனது இளமைக்காலம் முழுவதையும் ஈழத்தமிழருக்காக தொலைத்த பேரறிவாளனுக்கு தான் ஈழத்தமிழினம் நன்றிக்கடன் பட்டுள்ளது. உண்மையாக உணர்வுடன் எமக்கு உதவி செய்த உணர்வாளர்களை மறந்து எமது அவலத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் போன்ற கேடு கெட்ட அயோக்கிய அரசியல்வாதிகளை ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் தான் இந்த உலகிலேயே நன்றி கெட்டவர்கள்.
  10. கொஞ்சம் ஓவரா பேசிவிட்டார் என்றால் என்ன அர்ததம். கொடுத்த காசை விட ஓவரா கூவிற்றாண்டா கொய்யாலா என்று கூற வருகிறாரா அண்ணா மலை. சீமானை பொறுத்தவரை ஓவர கூவினா கூட காசு கிடைக்கும் என்று கணக்கு போட்டிருப்பார். தனது தற்குறி தம்பிகளுக்கு அறிவு வளர்சசி அடைந்து அவர்கள் தம்மை விட்டு போக முதலே காற்றுள்ள போதே தூற்றி கொள்ள நினைக்கிறார். அடுத்த பஜ்ச் தம்பிகள் கொஞ்சம் அறிவு உடையவர்களாக இருந்தால் என்னை தூக்கி வெளியில் போட்டாலும் போட்டுடுவாங்க, அதற்குள் உழைப்பதை உழைத்து விடுவோம் என்ற நப்பாசையில் ஒவரா கூவிற்றார் போல.
  11. ஈரோட்டில் பாஜக வின் வாக்குகளை சேர்த்தும் கட்டுப்பணம் கிடைக்கவில்லை என்பதை அறிந்த “நாம் தற்குறிகள்” தம்பிகளால் அதை பொறுக்க முடியாமல் ஒரு சிறிய கலந்துரையாடலுக்கு சென்று காட்டுமிராண்டிகள் போல் கத்தி அந்த கலந்துரையாடலை நடத்த விடாமல் சீமானை போலவே காட்டு கத்து கத்தி குழப்ப முயன்று, காவற்துறையால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளார்கள். அது ஒரு சிறிய கலந்துரையாடல். அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமக்கு மன வளர்சசியோ அறிவு வளர்ச்சியோ இல்லை என்பதை கூட உணரும் அறிவு இவர்களுக்கு இல்லை போலிருக்கிறது. தாம் வாழும் நாட்டில் இனவாதத்தால் பாதிக்கப்பட்டு இங்கு வந்துள்ளோம் என்ற அறிவு கூட இல்லாமல் படு மோசமான இனவெறியை கக்கியுள்ளது இந்த சீமானின் காட்டுமிராண்டி கூட்டம். சிங்கள இனவாதத்தை பற்றி பேசும் அருகதை இந்த சீமானின் இனவாதிகளுக்கு கிடையாது. சிங்கள இனவாதிகளை விட ஆயிரம் மடங்கு மோசமானவர்கள் இவர்கள். அதனால் தன் இந்த காட்டு மிராண்டிகளை மானசீகமாக ஆதரிக்கின்றனர்.
  12. சீமானின் தம்பிகள் என்றால் அறிவு அற்ற, நாகரீகம் தெரியாத காட்டு மிராண்டிகள் என்பது தெரிந்த விடயமே. அவர்களாக வந்து நாம் எந்த அறிவு வளர்சசியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் சீமானின் காட்டு மிராண்டி கூட்டமே என்பதை உறுதிப்படுத்தி சென்றார்கள்.
  13. பெரியாரை எதிர்ததபடி இத்தனை ஆயிரம் வாக்குகளாம்…… இதை கூற வெட்கமாய் இல்லை. இதன்படி பார்ததால் பெரியாரின் கைத்தடியா, பிரபாகரனின் வெடிகுண்டா என்று அயோக்கியதனமாக பேசி அரசியல் செய்த சீமான் கும்பலின் கணிப்பின்படி 114000 வாக்குகள் பெரியாருக்கும், 24000 வாக்குள் மட்டுமே பிரபாகரனுக்கு என்று எடுக்கலாமா? இதை தானே ஈழ அரசியல் உதாரணத்துடன் கோசான் @goshan_che தெளிவாக விளக்கி இருந்தார். இங்கு தெளிவான செய்தி பெரியாரோ பிரபாவோ இல்லை. சீமான் கும்பலின் நச்சு விதைகளை தூவும் அயோக்கிய அரசியலை தமிழ் நாட்டு மக்கள் என்றுமே ஏற்று கொள்ள போவதில்லை என்பதே செய்தி. சீமான் கும்பல் (விசிலடிச்சான் குஞ்சுகள்) திருந்தாவிட்டால் இப்படியே சீமான் தான் சாகும்வரை தனது தற்குறி தம்பிகளை ஏமாற்றி பணவேட்டை நடத்தி பலன் பெறுவது தான் சீமான் என்ற அரசியல்வாதியின் வாழ்ககை. அந்த கும்பலின் அரசியல் ஒரு சிறு கூட்டத்தோடு அடங்கி விடும். தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையில் இனவாத நச்சு விதைகளை தமிழர்களிடையே விதைக்கும் சீமான் கும்பலுக்கு நடு மண்டையில் போட்ட ஈரோடு வாக்காளர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்.
  14. சற்று அறிவு உடைய தம்பிகள் கட்டுபணம் கூட கிடைக்காத இந்த தாழ்ந்த வாக்கு வீதம் கூட எமக்கானதல்ல என்பதை புரிந்து கொண்டாலும், சொந்தமாக சிந்திக்க தெரியாத, சீமான் சொன்னதை கிளிப்பிள்ளை போல் உளரும் தம்பிகளுக்கு கண்கள் சிவக்க சிவக்க கோபக்கனலில் சிவப்பாக சிவப்பு சித்திரம் வரைவதும் இயல்பானது தான். 😂😂
  15. சீமான் கும்பலை கட்டுப்பணம் இழக்குமளவுக்ககு நடு மண்டையில் போட்ட ஈரோடு மக்ககளுக்கு வாழ்ததுக்கள். மிக தெளிவான செய்தி. பிரதான எதிர்க்கட்சி தேர்தலில் பங்கெடுக்காத நிலையில் திமுக ஆட்சியின் எதிர்ப்பு வாக்குகளை தற்காலிகமேனும் பெற்று அதை தமது வாக்குகளாக் காட்டும் சீமான் கும்பலின் வழமையான புருடா வேலையை கூடச் செய்ய முடியவில்லை. 15 வீதம் என்பது சீமான் கட்சி வாக்குகள் அல்ல. பாஜக போன்ற திமுக எதிர்ப்பு உதிரி வாக்குகள் வேறு வழியில்லாமல் சீமான் கட்சிக்கு போடப்பட்டுள்ளதை சாதாரண அரசியல் அறிவு உடைய மக்களால் கூட விளங்கி கொள்ள முடியும். சற்று அறிவு உள்ள தம்பிகளுக்கும் அது புரியும்.
  16. ஈரோடு தேர்தலில் நாதக டெபாஸிடை இழந்த போதும் தனக்குரிய தனிப்பட்ட payment போதியளவு கிடைத்த மகிழ்சசியில் சீமான்.
  17. இருக்கப் போவது நான்கு வருடம். அதற்குள் ஒரு பேயாட்டத்தை ஆடி விட்டு போவோம் என்று முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது.
  18. தங்களை மாசற்றவர்களக காட்ட முற்பட்ட “புலம் பெயர் தேசிய செயற்பாட்டாளர்கள்” எனப்படுவோரால் செய்யப்பட்ட, மில்லியன் கணக்கான மக்கள் பணத் திருட்டு ஊழலை மறைப்பதுவும் ஒருவகை ஊழல்தான். தமிழீழ தேச மீட்பு நிதி என்று மக்களை ஏமாற்றி தமது குடும்பங்களுக்கு பணத்தை தேடிய இவர்களை போல மோசடி ஊழல் பேர்வழிகளை மறைத்து அடுத்த நாட்டில் ஊழலை தேடுவது அபத்தம்.
  19. சிந்தித்து பார்ததால், அவ்வாறு இந்தியாவின் தென் பிரதேசத்தை பிரிட்டிஷ் தொடர்ந்து தனது ஆளுமைக்குள் வைத்திருக்கவேண்டும் என்ற பெரியாரின் கோரிக்கை, தமிழருக்கு மிக பெரிய நல்விளைவுகள் ஏற்படுத்தியிருக்கக் கூடிய சாத்தியப்பாட்டை இயல்பாகவே உருவாக்கியிருக்கும். நாடுகளை கொலனிப்படுத்தும் வரலாற்றுக்காலம் 20 ம் நூற்றாட்டில் முடிவுக்கு வந்ததால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நீண்ட காலம் இப்பிரதேசத்தை தன் ஆளுமைக்கு கீழ் வைத்திருக்க முடிந்திருக்காது. எப்படியும் சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஏற்கனவே வட இந்திய பார்ப்பன வர்ககதிற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைகள் நீதி கட்சியாலும் அதை தொடர்ந்த திராவிடர் கழகத்தாலும் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அந்த நிலையும், பரப்புரையும் தென் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் தொடர்ந்திருந்தாலும் நடந்திருக்கும். எனவே, அந்த விழிப்புணர்வானது, அம்மக்களிடையே சுதந்திர நாடுகளாக பரிணமிக்கும் சுதந்திர வேட்கையை தானாகவே உருவாக்கியிருக்கும். அவ்வாறான நிலையானது, இந்திய துணைக்கண்டம் ஐரோப்பிய நாடுகள் போல் தன்னிச்சையாக பல சுதந்திர நாடுகளாக பரிணமிக்கும் சாத்தியப்பாட்டை அதிகரித்திருக்கும். மக்களிடையே சுதந்திர வேட்கையும் போராட்ட குணமும் இருக்கும் நிலையில் இந்திய இராணுவம் இப்பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நிலைக்கு எதிரான சர்வதேச சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆகவே, கோவா போன் ற பிரதேசங்களை ஆக்கிரமித்ததை போல் தென் இந்தியாவை ஆக்கிரமிப்பது இந்திய இராணுவத்துக்கு இலகுவாக இருந்திருக்காது. உண்மையில், எமது சுதந்திரத்தை வட இந்திய பார்ப்பன வர்க்கத்திடம் கையளிப்பதால் தமிழருக்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் ஏற்படப்போகும் பேரழிவை அப்போதே பெரியார் சுட்டிக்காட்டி இருந்தார். இது பெரியாரின் தீர்கக தரிசனப்பார்வை என்று கூறலாம். ஏனெனில் ஈழப்போராட்டம் தோல்வியடைந்ததற்கான முக்கிய பங்களிப்பை அனைத்துலக அளவில் செய்தது இந்திய ஆளும் பார்ப்பன கும்பலின் அரசியல் ராஜதந்திர நகர்வுகளே. எமது எதிரிகளை அன்றே அடையாளம் காட்டியவர் பெரியார். அன்றைய இந்திய சுதந்திரத்தின் பின்னர் அதிகாரவர்ககத்தால் உருவாக்கிய “இந்திய தேசபக்தி” என்ற மாயையின் முன்னால் இந்திய தேசத்திற்கெதிரான எந்த போராட்டமும் வெற்றி பெற்றிருக்காது. அந்தளவுக்கு “பாரத மாதா” என்ற போலி பிம்பம் கிட்டத்தட்ட பக்தி உணர்வு போலவே கட்டி வளர்க்கப்பட்டது. அதுவே தமிழக தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும் ஆப்பாக அமைந்தது.
  20. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் விடியோ பதிவு.
  21. அவர்கள் ஒன்றும் தாமாக செய்யவில்லை. அவர்களின் தலைவரை எல்லை மீறி திட்டியதற்கு எதிர்வினையையே அவர்கள் ஆற்றினார்கள். அது இயல்பானது. முதலில் அவ்வாறு செய்து தூண்டி விட்ட புலம் பெயர் மாபியா கூட்டமே அதில் முதல் குற்றவாளிகள்.
  22. சீமான் பேசுவது தமிழ் தேசியம் அல்ல. முழுக்க முழுக்க சாதிய பெரும்பான்மை வாதம் மட்டுமே தனது பிழைப்புவாதத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்படுகிறார். எந்த பிரதேசத்திற்கு போகிறாரோ அந்த பிரதேசத்தில் யார் பெரும் சமூகமோ அந்த சமூக தலைவரை பாராட்டி அவர் தமிழ்ப் பாட்டன் என்று பேசுவார். அந்த தலைவர் முழுமையான இந்திய தேசியவாதியாக இருப்பார். அந்த வரலாறு கூட சீமானுக்கு தெரியாமல் இருக்கும். இவ்வாறான பித்தலாட்டம் தனக்கு உதவும் என்று நினைக்கிறார். ஈரோடு பிரதேசத்தில் அறிஞர் அண்ணாவின் சமூகத்தினர் அதிகம் இருப்பதால் நேற்று அண்ணாவை பாராட்டி பேசினார். முன்பு ஒருமுறை வேறு பிரதேசத்தில் அண்ணாவை “பிச்சைகாரபயல்” என்று பேசியவர் இதே சீமான். இந்தியாவிலேயே அதிக பொய்களை மேடைகளில் பேசிய பாபெரும் பொய்யன் சீமான் ஆகும்.
  23. சீமான் மேடைக்கு வந்தாலே குறைந்தது இத்தனை பொய் கூறி தான் மேடையை விட்டை இறங்குவது என்ற முடிவுடன் தான வருபவர் போல் உள்ளது. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.