Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. வெகு இலகுவான கேள்வி. பதிலும் இலகுவானது. நாளாந்தம் பத்திரிகை வாசிக்கும் சாமான்யனாக ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை அறிவு இருந்தாலே இந்த கேள்விக்கு பதில் கூற முடியும். தோற்றது ஒரு கட்சியல்ல. ஒட்டுமொத்த தேசியம் பேசிய அனைவருமே. கடந்த 75 வருடங்களாக தமிழ் தலைமைகள் அனைத்தும் மேற்கொண்ட முட்டள்தனமான அரசியலே இந்த வரட்டு தமிழ் தேசியவாதிகளின் ஒட்டு மொத்தமான தோல்விக்கு காரணம். புலம் பெயர் தேசிய பினாமி மாபியாக்கள் தமது பணப்பெட்டியை நிரப்பும் அரசியலை 2009 இன் பின்னர் கூட செய்து தமிழ் தேசியத்தை மேலும் நாசப்படுத்தினர். இனி என்பிபி மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளை செய்தாலே போதும் என்ற நிலை. அவர்கள் இதை எவ்வளவு தூரம் செய்வார்கள் என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான். எனினும் மக்களின் நம்பிக்கை போல் நாமும் நம்பிக்கை வைக்க வேண்டியது தான். அவர்களுக்கு வாக்களித்ததால் தமிழ் மக்கள் எதையும் இழக்கவில்லை. ஆகவே தமிழ் மக்கள் தோற்கவில்லை. தமிழ் தேசியவாதிகள் நாசப்படுத்தியதைப் போல் என்பிபி மக்களின் வாழ்வை நாசப்படுத்த மாட்டார்கள். புலன் பெயர் தேசியம் பேசும் பினாமி மாபியாக்கள் இதனைக் குழப்ப முற்பட்டால் அநுர இவர்களின் வாலை ஒட்ட நறுக்க வேண்டும். (புலம் பெயர் மக்களைப்பற்றி நான் கூறவில்லை)
  2. வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. தொடர்ச்சியாக செயற்பட்டு இவ்வாறான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சும்மா சம்பிரதாயத்துக்காக பார்வையுடன் நின்றுவிடக் கூடாது. இதன் செய்யும் அமைச்சருக்கு பாராட்டுக்கள்.
  3. உங்கள் கட்சிக்கும் முன்னைய தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட அரைவாசியாக குறைந்துள்ளதே. அதை பற்றி பேசாமல் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியை மட்டுமே பேசிவருகின்றீர்கள். உங்கள் கட்சி படு தோல்வி அடைந்ததற்கும் தமிழரசு கட்சியா காரணம்?
  4. மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே…
  5. அடுத்த 5 வருடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்களையும் மகிழ்வூட்ட ஒரு clown 🤡 ஆக இருக்கப் போகிறார் அர்சசனா. ஒரு சர்க்கஸிற்கே மகிழ்வூட்ட ஒரு clown தேவைப்படும் போது தொடர்சசியாக சீரியஸாக பேசி டென்சன் ஆகும் உறுப்பினர்களுக்கும் தேவை தான். NPP க்கு ஆதரவு நல்கிய யாழ்ப்பாண மக்கள் அவர்களை மகிழ்விக்க ஒரு clown ஐயும் அனுப்பியுள்ளனர். 😂
  6. இன்றைய பாராளுமன்ற அமர்வில் சத்தப்பிரமாணம் எடுத்தார் அர்ச்சனா இராமநாதன். தமிழ் தேச வீரர்கள் பலர் இவ்வாறு சத்தியப் பிரமாணம் எடுத்துவிட்டு தான் வெளியில் துள்ளித்திரிந்து வேஷம் போடுகிறார்கள் 😂 அரச்சனாவுக்கு நன்றி
  7. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பு குறித்து புலம் பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் உள்ள ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் தொடர்சியாக ஆய்வுகள் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. சுமந்திரனுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுமா? தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் யாருக்கு? என்பிபிக்கு ஏன் தமிழ் மக்கள் வாக்களித்தனர்? தமிழ் தேசியம் தோற்றுவிட்டது என்றும், இல்லை தோற்கவில்லை என்றும் பலர் விலாவாரியான புள்ளிவிபரங்களுடன் விவாதங்களும் தொடர்கின்றன. ஆனால், வன்னி மண்ணில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பெண் போராளி பற்றி எவரும் கணக்கெடுக்கவேயில்லை. தூக்கி வீசிய கருவேப்பிலையாக, கண்ணி வெடியில் காலை இழந்த பெண் போராளி கருணாநிதி யசோதினி உள்ளார். இத்தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய முண்ணனி சார்பில் போட்டியிட்டார். யுத்ததத்தில் அங்கவீனரான போராளிகளுக்கு உதவும் செயற்பாடுகளில் நீண்ட காலமாக பணிபுரிந்துவரும் இவர் இந்த பணிகளை முன்னெடுப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாக பிபிசி செவ்வியில் தெரிவித்தார். மிகுந்த கஷ்ரத்தின் மத்தியிலும், மிகவும் துடிப்புடனும் வேகத்துடனும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டார். இருப்பினும் இவரது கட்சியை சேர்ந்த செல்வம் அடைக்கலநாதனை தெரிவு செய்த மக்கள் இவரை தெரிவு செய்யவில்லை. இவரை மக்கள் ஏன் புறக்கணித்தனர் என்பது குறித்து தமிழ் ஊடகங்களுக்கு கவலையில்லை. தினசரி பேட்டி என்ற பெயரில் அரசியல்வாதிகளுக்குள் சண்டையை மூட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுவரும் ஐபிசி, லங்காஶ்ரீ போன்ற தமிழ் ஊடகங்களோ சமூக வலைத்தளங்களோ, யூருபர்களோ இது குறித்து எந்த விவதங்களையும் நடத்தவில்லை. அர்சனாவுக்கு பாட்டெழுதிய வன்னி மைந்தன் போன்றோர் வன்னி மண்ணில் போராட்டத்திற்கென தம்மை அர்பணித்த இவர் போன்ற போராளிகள் குறித்து பாராமுகமாக இருப்பது ஏன்? வீரம் விளைந்த வன்னி மண் என்று நரம்பு முறுக்கேற சிலாகிப்போர் எவருமே இது குறித்து திரும்பிக் கூடப் பார்கவில்லை. இவர் தோற்கடிக்கப்பட்டது ஏன்? இவை குறித்து யாழ்கள உறவுகளின் கருத்து என்ன?
  8. தமிழர் சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவது இந்த புளுகு வேட்டையர் என்ற ஜடி தான்.
  9. அப்போது கோபம் வரவில்லை என்று எதை வைத்து கூறுகின்றீர்கள். அது நடந்த போது சீமானின் ஆதரவுடன் ஈழத்தாய் அல்லவா தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருந்தார். அது நடந்த போது ஈழத்தாயைடன் சேர்ந்து செல்ல மகன் சீமான் அதற்கெதிராக என்ன செய்தார்? சீமானின் சித்தப்பா பச்சை தமிழன் எடப்பாடி ஆட்சியில் தமிழ் நாட்டிலேயே போராட்டம் செய்த தமிழர்கள் பொலிஸாரால் குருவிகள் போல் சுட்டுக்கொல்லப்பட்டார்களே! அது நடந்த பின்னரும் எந்த கோபமும் வராமல் சித்தப்பா சித்தப்பா என்று சீமான் பாசமழையை பொழிந்தாரே!
  10. அந்த மனப்பான்மை தூய தமிழர்களிடம் உண்டா? அல்லது எத்தனை நூற்றாண்டு சென்றாலும் வடுக வந்தேறி என்று அழைப்பார்களா? 😂
  11. என்னையும் அநுரா பிரிகேட் உள்ளே அடைச்சிடீங்க போல. 😂 நான் ஒன்றுமே அதிகமாக எதிர்பார்கக வில்லை. அநுரா சொன்னதை எல்லாமே நிறைவேற்ற அவரால் முடியும் என்று நான் நினைக்கவில்லை. (அப்படியான கற்பனையில் நடக்காத விடயங்களுக்கு முட்டாள்தனமாக ஆசைப்பட நான் ஒன்றும் தமிழ் தேசியவாதி அல்ல) இதுவரை மற்றய கட்சிகளின் ஆட்சியிலும் வரட்டு தமிழ் தேசியர்களின் செயல்களாலும் தொடர்சசியாக பாழாய்ப்போய்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாழ்க்கை சற்றே மேம்பட்டாலே இப்போதைக்கு போதும் என்றே நினைக்கிறேன். ஆனால், அநுரா சொன்னதை எல்லாம் முழுமையாக நிறைவேற்றிவிடுவாரோ பலரும் இங்கு ஓவராகவே பதட்டப்படுவது தெரிகிறது. அவர்களுக்கு பயப்படீதீர்கள், அப்படி அநுரவால் செய்ய முடியாது என்று ஆறுதல் கூறிவிடுங்கள். 😂
  12. மன்னிக்கவும் கோஷான். அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் என்ற பாடலைப்பாடிய பாரதியார் என்று வந்திருக்க வேண்டும். அது பாரதிதாசன் இல்லையா?
  13. பாரதியார். https://www.bbc.com/tamil/articles/c0dr20r0rd2o.amp மாட்சிமைதாங்கிய உங்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்: அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகிவிட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன். மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும். மாட்சிமை தாங்கிய தங்களின் மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்கவேண்டுமென யாசிக்கிறேன். -சி.சுப்ரமணிய பாரதி
  14. “அச்சம் என்பது மடமையடா” என்ற பாடலைப் பாடிய பாரதியாரே பாண்டிச்சேரியில் இருந்து மட்றாஸ் பிரெசிடென்ஸிக்குள் பிரவேசிக்கும் போது, மாட்சிமை தங்கிய ராணிக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் இனிமேல் விசுவாசமாக அடிபணிந்து இருப்பேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதி இருக்கும் போது அம்மணி எம்மாத்திரம்.
  15. எனக்கும் உங்கள் கருத்தில் உடன் பாடு உண்டு. தனிநபர் துதி பாடலும் தனிநபர் அவதூறும் தான் 75 வருடங்களாக தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் மிக முக்கிய அம்சமாக இருந்து, இன்றும் அது தொடர்கிறது. அரச்சுனாவுக்கு செல்லப்பா இரண்டாவது துதிப் பாடலையும் பாடியுள்ளார்.
  16. @goshan_che ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியான தமிழ தேசியத்தை விட அநுரவுக்கு வாக்களிப்பது தவறா?
  17. எப்படி அரசியலில் பொறுப்பாக நடப்பது என்று இன்று தினசரி எழுதும் பத்தி எழுத்தாளர்கள் இவ்வாறான அறிவுரைகளை 2009 முதல் செய்திருக்கலாம். தொடர்சசியாக பல பொறுப்பற்ற அரசியலை செய்தவர்களுக்கு இன்றைய இவர்களது அறிவுரைகளை வழங்கியிருந்தால் மக்கள் என்றோ நிம்மதியாக வாழ்திருப்பார்கள். இன்று சுமந்திரனோ, ஶ்ரீதரனோ யாரென்றும் எவருக்கும் தெரிந்திருக்காது. இன்று புலம்பும் நிலையும் வந்திருக்காது. 😂 அன்று உயிர்ப்பயத்தில் கம்மென்று இருந்துவிட்டு இன்று காலம் கடந்த பின் அழுவதில் பயனில்லை.
  18. 👍👍👍👍👍 சிரிப்பை அடக்க முடியவில்லை. Fitting room போகாமலே இங்கு பலருக்கு கச்சிதமாக பொருந்தும் ஆடையை தயாரித்த Designer போல இந்த வசனத்தை உருவாக்கிய உங்களுக்கு வாழ்ததுக்கள்.
  19. ஆனால் அதை செய்ததில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இணையாக நம்மவர்களும் செய்தார்கள் என்பதே உண்மை. உங்களை போல் நியாயமாக ஆதங்கப்படுவோர் ஒரு சிலரே. தமது தேசிய வியாபாரம் படுத்துவிடும் என்றே பல தேசிய வீரர்கள் பதட்டப்படுவதை ஆத்திரப்படுவதையும் முக நூல்களிலும் யூருயூப் காணொளிகளிலும் சமீப காலமாக காண முடிகிறது. இந்த ஆத்திரத்தை தீர்கக கிடைத்த வடிகால் தான் சுமந்திரன். சுமந்திரன் என்பவர் தமிழ் தேசிய போராட்ட நீண்ட வரலாற்றில் அனைத்தும் கிட்டைத்தட்ட (😂) இல்லை இல்லை கிட்டத்தட்ட பாழாகிய பின்னர் வந்த ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே.
  20. தேசியம் தேசியம் என்று கூறி மக்களின் வாழ்வை சிதைப்பவர்களை விட இது பரவாயில்லை. மனிதர்களின் வாழ்க்கை காலம் குறுகியது. தேசியம் பேசும் சுயநலமிகள் வாழ்வதற்காக இளையோர் தலைமுறை தலைமுறையாக தமது மகிழ்சசியான வாழ்வை இழக்க முடியாது. ஏற்கனவே அப்படி இழந்த பல ஆயிரக்கணக்கானவர்களின் தியாகங்களை விலை பேசி விற்கப்டும் நிலையில் மக்கள் சற்றேனும் விழிப்புணர்வு அடைந்தது நியாயமானதே.
  21. ஏன்? லண்டனில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதா? ஆனால் இந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பாக அநுர ஆட்சியில் விடுமுறையில் நாடு சென்று விடுமுறையை அனுபவித்து திரும்ப முடியும். அங்கு வாலாட்டினால் மட்டுமே அவர்களது வாலை அநுர ஒட்ட நறுக்குவார். 😂 அந்த வாலுகளுக்கும் அது தெரியும். அங்கு சென்றால் கம்மென்று இருந்துவிட்டு இங்கு திரும்பியதும் வடிவேல் பாணியில் துள்ளுவர்.
  22. நன்றி கோஷான். மக்களின் மகிழ்சசியாக வாழ்வதற்கு உதவ தான் இந்த தேசியம் எல்லாம். மக்களின் வாழ்வையே தலைமுறை தலைமுறையாக அழித்து ஒரு சிலர் மட்டும் வாழ தான் தேசியம் என்றால், மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பது தான் தேசியம் என றால் அந்த தேசியத்தை கடாசி விட்டு நடையை கட்ட வேண்டியது தான். இதுவே எனது கொள்கை. அநுர ஒன்றும் பெரிசாக வெட்டி புடுங்கமல் விட்டாலும் மக்களின் வாழ்வை முன்னைய விட முன்னேற்றி ஒப்பீட்டளவில் இன, மத பேதங்களை களையும் அரசியலை மேற்கொண்டால் அதுவே இப்போதைக்கு போதும்.
  23. கஜேந்திரகுமரின் மைன்ட வொய்ஸ். சாத்தியமான விடயங்களை பேசினால் இணைந்து செயற்பட வேண்டும். அரசியலமைப்பு வரைவு என்று அழைப்பார்கள். மிகுந்த வேலைப்பழு இருக்கும். அதை விட சாத்தியமற்ற வரட்டு தேசியம் பேசினால் ஒரு வேலையும் இருக்காது. பாராளுமன்றம் சென்று வந்து ஜாலியாக உறங்கலாம். நான் என்று யார் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்த பொன்னற்ற பேரன் எல்லோ.
  24. தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமா? இரண்டு தலைமுறையை பலியாடுகள் ஆக்கி தின்று கொழுத்த தமிழ் தேசியத்தை முழுமையாக குத்தகைக்கு எடுத்தவர்களே அதனை அம்போ என்று போட்டு உடைத்துவிட்டு போன பின் எந்த தமிழ் கட்சியாலும் தலைவர்களாலும் அதை காப்பாற்ற முடியாது. அதை அப்படியே போகிற போக்கில் காலாவதியாக விட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழட்டும். புலம் பெயர் தேசிக்காய்கள் தேசியம் என்று மக்களை முறுக்கேற்றி வைத்து உழைத்தது போதும். உழைத்த பணத்தை வைத்து அவர்களும் நிம்மதியாக வாழட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.