Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து முடிஞ்சுது. தமிழ் தேசியத்தை காப்பாற்ற புலம் பெயர் தேசிக்காய்கள் புதிய வில்லனை தேட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  2. பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் விபரம். தமிழ் பிரதேசங்களில் எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் போட்டியிட்ட போதிலும் அக்கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்த மக்கள் பெண்களை தெரிவு செய்ய வில்லை. வன்னி மாவட்டதில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட யுத்ததில் அங்கவீனமுற்ற பெண் போராளியை கூட மக்கள் தெரிவு செய்ய வில்லை. யுத்தத்தில் களப்பலியாகவும் கரும்புலியாகவும் போக பெண்கள் தேவைப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க பெண்கள் தேவையில்லை போல் உள்ளது.
  3. தமிழ் பிரதிநிகள் குறையவில்லை. புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் 4 தமிழ் பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படுள்ளார்கள். முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் மாத்தறை மாவட்டதில் தமிழ் பெண்ணான சரோஜா பால்ராஜ் 148 000 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
  4. பாராளுமன்றம் போகாமலே புதிய அரசியலமைப்புக்கு நிபுணத்துவ பங்களிப்பு வழங்கலாம் என்று நினைக்கிறேன். அகவே அவர் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்றம் சென்றவர் என்பதற்காக ஶ்ரீதரனிடம் அரசியலமைப்பை பற்றியோ, ஆலோசனையோ எவரும் கேட்கப்போவதில்லை தானே.
  5. புலம் பெயர் தேசிய செயற்பாட்டாளர்கள் என்ற லேபலை ஒட்டிக் கொண்டு இந்த தேசிக்காய்கள் மக்களிடம் திருடிய பணத்தை வைத்து தாயக அரசியலில் தலையிட்டு குழப்பங்களை விளைவித்தால் அவர்களில் வாலை ஒட்ட நறுக்குமாறு ஜனாதிபதி அநுராவிடம் அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
  6. படித்தவுடன் கிழித்துவிடவும் எண்ட கணக்கா படிச்சாச்சு கிழிச்சசாச்சு என்று போகாம படிச்சத தமிழ்ள எமக்கெல்லாம் புரியும் படி சொல்லிற்று போறது. 😂😂😂
  7. நான் வரட்டு தேசியம் என்று கூறியதில் பல கூறுகள் இருந்தாலும் உதாரணத்துக்கு ஒன்று, எமக்கு சாதகம் இல்லாத ஒரு அரசியல் சூழ்நிலையில் எமக்கு நன்மை பயக்கும் அரசியல் விடயங்களை எதிர்த்தரப்பிடம் பேசிப் பெறுவதற்கு சாதுரியமான மென் அணுகுமுறையை பயன் படுத்தாமல், வாசலில் நின்று, தா என்று கேட்டுவிட்டு, தாற எண்ட இப்ப தா இல்லை எண்டா போயிருவன் என்று உணர்சசிவசப்பட்டு கோபத்துடன் உடனடியாக திரும்பிவந்து கிடைக்காத அந்த விடயத்துக்காக காலமெல்லாம் புலம்பும் நடைமுறை என்பதும் இதற்குள் அடங்கும். இதை மேலும் ஒரு இலங்கை வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறிப் புரிய வைக்க முயற்சிக்கிறேன். முன்பு இலங்கை தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்கான வெட்டுப்புள்ளி 12.5 வீதமாக இருந்தது. அதாவது தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு கட்சி அல்லது சுயேட்சைக்குழு ஒரு உறுப்பினரை பெறுவதற்கு குறைந்தது 12.5 வீத வாக்குகளை பெற வேண்டும். அதை பெறாத குழுக்கள்/ கட்சிகள் போட்டியில் இருந்து நீக்கப்படும். இதனால் சிறுபான்மைக்கட்சிகள் குறிப்பாக முஸ்லீம் கட்சி பாதிக்கப்படுவதைக் கண்ட மறைந்த அஸ்ரப் 1988 ல் பிரேமதாசவுடன் இணக்கமாக பேசி குழையடித்து அதை 5 வீதமாக குறைப்பதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை பிரேமதாசவை கொண்டு செய்வித்தார். அதனால் அவரது கட்சி உட்பட சிறிய கட்சிகள் பலனடைந்தன. இப்போது கூட பல சிறிய கட்சிகள் பலனடைவது அந்த சட்ட மாற்றத்தால் தான். கஜே கட்சியும் அர்சசனாவும் இத்தேர்தலில் பலனடைந்ததும் இதனால் தான். தமிழ் தரப்புகளுக்கு இவ்வாறாக சிறுக சிறுகப் பேசி எமக்கு சாதகமான விடயங்களை பெற்றுக்கொள்ளும் திறமை உள்ளதா? இதையே தமிழ் தரப்பு என்றால் அதை வைத்து மக்களிடையே உசுப்பேற்றி பிரச்சாரம் செய்து அதற்கெதிராக போராட்டம் என்று வாய் கிழிய கத்தி நாடகம் போட்டு சும்மா இருந்த இனவாதிகளை தூண்டி அதை எதிர்க்கப்பண்ணி, அதை செய்ய விரும்பும் சிங்கள தலைவர்களுக்கும் நெருக்கடிகளைக் கொடுத்து செய்ய விடாமல் பண்ணி விட்டு பின்பு அன்றாடம் அதைக் கூறிக் கூறி புலம்பிக்கொண்டிருப்பர்.
  8. நீங்கள் கூறியது போல் நடை பெறாது என்று உங்களுடன் நான் பந்தயம் கட்ட போவதில்லை. நான் ஏற்கனவே ஒரு பதிவில் கூறினேன். காற்றுள்ள போதே தூற்றி கொள் என்று. Recruit பண்ணிய ஒரு தலைமுறையினரின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு பயன்பெற செய்ய வேண்டிய அரசியல் தீர்மானங்களை உரிய வேளையில் எடுத்து செயற்படாமல் விட்டுவிட்டு இப்போது மீண்டும், உயிர் தமிழுக்கு, உடல் மண்ணிற்கு என்று அடுத்த தலைமுறையையும் நாசம் செய்ய முனையும் வரட்டு தேசியம் எமக்கு உதவப் போவதில்லை.
  9. இன்றைய ஊடக சந்திப்பில் தான் தேசியப்பட்டியல் மூலம் வரமாட்டேன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். அவ்வாறு செய்வது தான் நல்லது. தமிழரசுக்கட்சி இனி கிழக்கு dominant உடன் பயணிக்கட்டும். புலிகளாலே அசைக்கமுடியாதவராக நீண்டகாலம் வலம் வந்த டக்லஸை அநுர வீழ்ததியுள்ளார்
  10. கஜேந்திர குமார் பொன்னம்பலம் யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகி உள்ளார். சட்ட அறிஞரான அவர் தெரிவு செய்யப்பட்டது நல்லது. வாழ்ததுக்கள். அநுர அரசு அரசியல் அமைப்பு மாற்றங்களை செய்யும் போது அதில் தனது சட்ட புலமைசார் உதவிகளை வழங்கி உருவாகப்போகும் அந்த அரசியலமைப்பு இன மத பேதங்களற்ற முறையில் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் அமைய தனது சட்ட உதவிகளை, பங்களிப்புக்களை வழங்க வேண்டும். அதை விடுத்து குதிரை கஜே, சுகாஸ் போன்ற களிமண் மண்டைகள், புலம் பெயர் தேசிக்காய் மாபியக்களின் பேச்சை கேட்டு ஒரு சயிக்கிள் இரு சில்லு என்ற வரட்டு நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகளை வைத்து குழப்பியடித்து அரசியலமைப்பு உருவாக்கதில் இருந்து பகிஷகரித்து அரசியல் சுத்துமாத்து விடக்கூடாது. ஏனென்றால் நாம் விரும்புகிறோமோ இல்லையோ உருவாகப்போகும் அரசியலமைப்பு தமிழ் மக்களின் வாழ்விலும் தாக்கம் செலுத்தும். புலம் பெயர் மாபியாகளும் தேசியம் பேசி இதுவரை உழைத்தது போதும். உழைத்த பணத்தை ஜாலியாக உங்கள் குடும்பத்துடன் அனுபவியுங்கள், பரவாயில்லை. ஆனால், இனியும் தாயகத்தில் குழப்பத்தை உருவாக்கி மேலும் உழைக்க முயற்சிக்காதீர்கள்.
  11. அதில் நான்கு பெண்கள் தமிழ் பெண்கள். வரட்டு தீவிர தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து இவ்வாறான நல்ல செயல்களை எதிர்பார்கக முடியாது.
  12. 75 வருடங்களாக அறிவு பூர்வமாக அரசியல் செய்யாமல் மக்களை உசுப்பேற்றி வெறும் கோஷங்களை மட்டும் கூறி உணர்சசி வசப்படுத்தி அரசியல் செய்ததும் இன்றைய விளைவை கொடுத்துள்ளது. இனி புலம்பி எந்த பிரயோசனமும் இல்லை.
  13. கோப்பாய் தேசிய மக்கள் சக்திக்கு.
  14. தமிழர்களும் இதை தான் செய்தார்கள். ஆனால் கடைசிவரை அதை ஒப்பு கொள்ள மாட்டார்கள். 😂
  15. தேசியம் தீவிர தேசியம் என்று என்றும் தீர்வுக்காக கிடைத்த சந்தர்பங்களை புறக்கணித்து, தொடர்ந்து போராடுவோம் என்று தசாப்தக்கணக்காக இழுத்து வந்ததன் விளைவே இது.
  16. சாவகச்சேரில் அர்ச்சனா வெற்றி.
  17. திரிகோணமலை தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி.
  18. போகிற போக்கில் பார்ததால் 2/3 மெஜோரிடி எடுப்பார்கள் போல உள்ளது.
  19. மானிப்பாயில் தேசிய மக்கள் சக்தி வெற்றி
  20. அதுக்கு இன்னொரு ரைமிங் இருக்கு. பொன்னம்பலம் உன் பொய் அம்பலம்
  21. ஊர்காவற்துறை தொகுதியில் ஈபிடிபி வெற்றி.
  22. இல்லை. நான் நம்பவும் இல்லை, விரும்பவும் இல்லை. ஆனால், சமூக ஊடகங்களில் அலப்பறைகள் அப்படி இருக்குமோ என்று எண்ண தோன்றியது. கோஷானின் மானசீக வாக்களிப்பும் அதையே சொன்னது. இன்று மதியம் தாயக நண்பர்கள் உறவினர்களுடன் பேசியபோது அவர்கள் கடைசிவரை அரச்சுனாவுக்கு ஒரு சீட் கூடக் கிடைக்காது என்றார்கள். பார்பபோம் என்ன நடக்கிறது என்று. சற்று முன் அர்சுனா பேட்டி வென்றவுடன் புலிக் கொடியுடன் பாராளுமன்றம. செல்வாராம்.
  23. நாம் நினைக்கும் அளவுக்கு அநுர அலையும் யாழில் இல்லையாம். பொறுத்திருந்து பார்பபோம்.
  24. அர்சசுனா கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்காது என்றே தாயகத்தின் இன்றைய நிலவரம் தெரிவிக்கிறது. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.