Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ராஜபக்சகளின் கட்சியல்லவா! நாமல் ராஜபக்ச தனது கட்சி உறுப்பினருகு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளாரா?
  2. 1970 களில் ஆப்கானிஸ்தான் பெண்களும், அவர்களின் இன்றைய நிலையும் ஒரு ஒப்பீடு.
  3. யாழ்நகரில் மக்கள் மகிழ்வுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அலங்கார விளக்குகள், வாணவேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் மகிழ்வுடன் கொண்டாடினர். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று அனைவரும் சந்தோசத்துடன் கலந்து கொண்டனர்.
  4. உலகில் வாழும் அனைவருமே தமது வாழ்வில் ஓரிரு முறை முட்டாள்த் தனமான காரியங்களை செய்தே இருப்பார்கள். அது இயல்பானது. ஆனால் அதன் விளைவுகளை அனுபவித்த பின்னர் தமது வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நெகிழ்சசி தன்மையுடன் புத்திசாலித்தனத்தை பாவிப்பர். தனது இளவயதில் இளமைத் துடிப்பில் தெருவில் வேகமாக காரோட்டுவதன் மூலமோ drink and drive மூலமோ தனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்த ஒருவர் பின்னர் கல்யாணமாகி தனது பிள்ளைகளுடன் காரில் செல்கையில் அவ்வாறு ரிஸ்க எடுத்து வேகமாக செல்லாமல் நிதானமாக வாகனமோட்டுவர். அது அவருக்கு அனுபவம் கொடுத்த பொறுப்புணர்சசி ஆகும். ஆனால், பிள்ளைகளுடன் செல்கையிலோ அல்லது ஒரு பொது போக்குவரத்து வாகனத்தை ஓட்டுகையிலோ, தன்னை நம்பி தனது வாகனத்தில் பயணம் செய்யும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து உருவாக்கும் வகையில் அதாவது தனது இளவயதில் நடந்து கொண்டதை போல் செய்பவரே முட்டாள் ஆவார். புதிய ஆண்டில் மகிழ்ச்சியுடன் பிரவேசிக்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் கந்தையா.
  5. உண்மையில் இது அவமானம் தான். ஆனால், இவ்வாறான சில்லறைகளை ஊக்குவிப்பதே விடுதலை போராட்டம் என்ற மாயை சில குறுகிய மனம் கொண்ட புலம் பெயர் வரட்டு தேசியம் பேசும் இனவாதிகளால் பரப்பப்படுகிறது. பாராளுமன்றத்தில் லூசுத்தனங்களை செய்துவிட்டு முகநூல் நேரலையில் “தமிழேன்டா” என்று கொலரை இழுத்து விடுகையில் அதற்கு விசிலடிக்கும் கூட்டம் அதே போல் ஒரு சிங்கள உறுப்பினர் பாராளுமன்றில் இதே போல “சிங்களவன்டா” என்று கொலரை இழுத்து விட்டிருந்தால் “ ஐயோ! ஐயோ! இனவாதம் என்று மூக்கால் அழுதிருக்கும். இவ்வாறான பித்தலாட்ட அரசியலே தமிழர் பிரச்சனை 75 வருடங்களாக இழுபடுவதற்குஉரிய காரணங்களில் முக்கியமானது.
  6. @ஈழப்பிரியன் @Kadancha முட்டாள்கள் என்பது அறிவு குறைவானவர்களை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, திறந்த மனதுடன் உண்மைகளை பார்கக முடியாத, தமது கற்பனைகளையே நிரூபணமாக நினைப்பவர்களைக் குறிக்கிறது. இவர்கள் ஜதார்த்தத்தை அனுசரித்து முடிவுகளை எடுக்காமல், பிடிவாதமாக நான் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பவன் என்று கூறியபடி முடிவுகளை எடுத்து இறுதியில் தாம் விரும்பியதில் பாதியை கூட அல்ல தாம் விரும்பியதை அடைய முடியாமல் அதை முழுமையாக இழந்து தோல்வியை சந்திப்பார்கள். விவாதங்களில் இது போன்ற நபர்கள் முன்கூட்டியே தாம் தீர்மானித்த கருத்துகளில் இருந்து விலக மறுக்கிறார்கள். வாதம் மற்றும் தர்க்கங்களை பொருளாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களது மனநிலை மாறாது ஏனெனில் அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.
  7. பேசாமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போல பரம்பரை தலைவர் என்று அறிவித்து விட்டால் இப்படியான பொது சபை கூட்ட வேண்டிய அவசியமே இல்லை.
  8. 1991 ல் பொருளாதார நெருக்கடி சந்தித்த இந்தியாவில் அன்று நிதி அமைச்சராக பொறுப்பேற்ற திரு மன்மோகன் சிங் மாபெரும் மறுசீரமைப்பை( reform) செய்தவர். இந்திய பொருளாதாரத்தை சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து தாராளமயமாக்கல் பொருளாதாரமாக மாற்றிவர். உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு நாட்டைத் திறந்து விட்டார். பிரதமராக இருந்த காலத்தில், இந்தியா நீடித்த பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தது.
  9. 75 வருடங்களாக அதாவது மூன்று நான்கு தலைமுறைகளாக இன முரண்பாட்டை மட்டுமே வைத்து (அதை கூட தீர்கக வக்கற்று) மக்களை உசுப்பேற்றி அரசியல் செய்து சுகம் கண்ட கூட்டத்திற்கு மக்கள் பிரச்சனை என்றால் என்ன என்பதை உணர வைத்ததற்கு அர்சனாவின் வருகை ஒரு தூண்டுதற்புள்ளியாக அமைந்துள்ளது மகிழ்சசியே. ஆனால் அதை தனது சுயவிளம்பரத்துக்காகவும் ஷோ காட்டுவதற்குப் அர்சனா பாவிக்க முயலாமல் சமூக பொறுப்புடன் செயற்படவேண்டும். இவ்வாறான பொறுப்புணர்வுடன் ஏற்கனவே இருப்பவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தான் கூறுவதை சாதிக்க முடியும் என்பதை அர்ச்சனா உணரவேண்டும். அதை விடுத்து தான் மட்டும் தான் புனிதர் என்றும் மற்றயவர்வர்கள் எல்லாம் திருடர்கள், தகுதியற்றவர்கள் என்பது போல் கற்பிதம் செய்யும் செய்யும் அவரது அரசியல் அவரது போக்கினால் அவர் அரசியலில் ஜொலிக்கலாம், ஆனால் அவர் செய்ய விரும்புவதாக கூறுவதைக் செய்ய முடியாது. மக்கள் பிரச்சனைகளை பேசும், புதிய நம்பிக்கை ஊட்டும் இவ்வாறான அரசியல் கலாச்சாரம் என்பது என்பிபி கட்சியை மக்கள் நேரடியாக ஆதரித்து வெற்றி பெற செய்ததன் விளைவே என்பதையும் மறுக்க முடியாது. மக்கள் பிரச்சனைகளை பேசாமல் வெறும் தேசியம், அரசியல் தீர்வு என்று வெத்துவெட்டு வீர அரசியலை இனி செய்ய முடியாது என்பதை மக்கள் புரியவைத்துள்ளது சிறந்த விடயம்.
  10. கோஷான், சாட்சாத் அதே சிவஞானம் தான் இவர். யாழ் மாநகரசபை ஆணையாளராக நீண்ட காலம் கடமையாற்றியவர். புலிகள் பிரேரித்த மூவரில் சிவஞானமும் ஒருவர்.
  11. தேர்தல் தரவுகளில் தவறு இல்லை. தனியே வரட்டு தேசியத்தை பற்றி பேசிய அரியநேந்திரனை வட கிழக்கு மக்கள் புறக்கணித்தனர் என்பது உண்மை. மக்கள் பிரச்சனைகளை புறக்கணித்து வெற்று கோசங்களை பேசிய தமிழ் கட்சிகள் தோல்வியடைந்தன. அர்சனா மக்களுக்கு அறிமுகமானதே அவர் மக்கள் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசியதன் மூலமே. மக்கள் அவருக்கு வாக்களித்ததும் அதற்காகவே என்பது வெள்ளிடை மலை. அதை பேசாமல் இருந்துருந்தால் அவர் யார் என்றே எவருக்கும் தெரிந்துருக்காது. இன்று அவர் பேசுவதும் அதையே பேசுவது மக்களின் அன்றாட பிரச்சனைகளை பற்றி மட்டுமே. அதனை நம்பியே அவர் அரசியல் செய்கிறார். நீங்கள் கூறுவதை போன்ற லூசுதனமான face book post களுக்காக. மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதை கடந்து மக்களுக்கு அவரது பேச்சுக்களில் மக்களின் அன்றாட பிரச்சனைக்கு தன்னால் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை வளர்கக அவர் முயல்வதால் தற்போதைய நிலையில் அவருக்கான ஆதரவு தளம் வலுவாக உள்ளது. வெறும் பேச்சோடு நின்றால் அவரை மக்கள் எதிர்காலத்தில் நிராகரிக்கவே வாய்பபு உள்ளது. டக்லஸ் போன்றோர் எந்த காலத்திலும் நேர்மையானவர்களாக மக்கள் பிரச்சனையை அணுகவில்லை என்பது தாயக அரசியல் அறிந்தோருக்கு நன்கு தெரிந்த விடயம். அங்கஜனுக்கு கடந்த தேர்தலில் அதி கூடிய விருப்பு வாக்கு விழுந்ததும் அதற்காகவே. அதை சரியாக செய்ய தவறியதால் அவர் வெற்றி பெற முடியவில்லை.
  12. மக்களின் சிந்தனை முன்பு அப்படித் தான் இருந்தது. தமிழ் மக்கள் என்ற ரீதியில் தமது அரசியல் உரிமையை நடைமுறை சாத்தியமான உலக நடைமுறைகளை அனுசரித்து தம்மை தலைமை தாங்கியவர்கள் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை செய்வார்கள் என்ற நம்பிகையிலேயே மக்கள் சொல்லொணா துன்பங்களின் மத்தியிலும் தமது வளங்களை முழுமையாக அவர்களிடம் கொடுத்து நம்பி ஏமாந்தார்கள். மக்கள் என்றுமே கடும்போக்குவதிகளாக இருக்கவில்லை. தலைமை தான் அவ்வாறு நடந்து, உலக நடைமுறைகளை புறக்கணித்த அந்த கனவுலக கடும் போக்கு அரசியலே, “ஐயோ சாமி ஆளை விடப்பா முன்பிருந்த நிலையே போதும்” என்று மக்களை நினைக்கவைத்தது. நாங்களும் சாகுறோம், நீங்களும் சாகுங்கள் என்ற கடும் போக்கு அரசியலை விடுத்து, நாங்களும் வாழ்கிறோம் நீங்களும் வாழுங்கள் என்ற மக்கள் அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமையையே மக்கள் எப்போதும், குறிப்பாக 2002 ம் ஆண்டின் பின்னர் எதிர்பார்தது ஏமாந்தனர். 2009 ன் பின்னர் தமிழ் கட்சிகளை மக்கள் தெரிவு செய்ததன் காரணம், போராட்டத்தால் சின்னாபின்னப்பட்ட தமது வாழ்வாதாரங்களையும் நடைமுறைப் பிரச்சனைகள் இவர்கள் தீர்தது தமது பிரதேச அபிவிருத்திகளை இவர்கள் மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே. காலப்போக்கில் அந்த நம்பிக்கையும் அவர்கள் இழந்தனர். அதனால் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு இணைந்த தாயகம், தன்னாட்சி என்ற கோஷத்தை மட்டும் நம்பி போட்டியிட்டவர் வெறும் 20 வீதத்துக்கு குறைவான வாக்குகளை மட்டுமே பெற மக்கள் சிங்கள கட்சி வேட்பாளர்களுக்கு 80 வீதமான ஆதரவைக் கொடுத்தனர். தமிழ் கட்சிகளில் நம்பிக்கையிழந்த மக்கள் NPP ஐ தெரிவு செய்ததும் மூன்றே மாதங்கள் அரசியல் செய்த அர்சனாவை தெரிவு செய்ததும் தமது நடைமுறைப்பிரச்சனைகளை பற்றி இவர்கள் பேசியதாலே. இனியாவது தமிழ் கட்சிகள் வெறும் வரட்டு தேசியவாதம் பேசாமல் மக்கள் பிரச்சனைகளை முக்கிய பிரச்சனைகளாக பேசி அதை தீர்கக முயலவேண்டும். உரிமை அரசியலை பேச பழைய தோல்வி கண்ட எமக்கு பேரவலத்தை தந்த வழிமுறைகளை முன்னுதாரணமாக கொள்ள முடியாது. புதிய வழியில் மக்களின் பிரச்சனைகளை புறந்தள்ளாமல் அவற்றை தீர்பபதுடன் வினைதிறமையுடன் கொண்டு செல்ல வேண்டும்.
  13. அது தான் உண்மை. சும்மா 1976 ம் ஆண்டு கனவுலகில் சஞ்சரிக்காமல் நடைமுறை உலகத்தை படித்து அதன்படி படி சென்றிருக்க வேண்டும். அந்த கனவால் இப்ப totally damaged. இப்ப உள்ள எவராலும் திருத்த முடியாத அளவுக்கு damaged. எனவே, அடுத்த தலைமுறையாவது அறிவான தலைமுறையாக வளர்ந்தால் மட்டுமே சாத்தியம்.
  14. விடுதலை புலிகளை ஒன றுக்கும் ஆகாதவர்கள் என்று எவராலும் கூற முடியாது . அவர்கள் இராணுவ வல்லமையில் ஜாம்பவான்கள். ஆனால் நாம் இங்கு உரையாடுவது அரசியல் வல்லமையைப் பற்றி. ஏனெனில் அதுவே தமிழ் மக்களை தலை நிமிர வைக்கும்.
  15. ஒன்றுக்குமே ஆகாத நீங்களே இங்கு வகுப்பெடுக்கும் போது நாங்கள் எடுத்தால் என்ன என்ற சிந்தனையே எம்மை இங்கு கருத்தெழுதுதத் தூண்டியது.
  16. புத்தி கூர்மையுடன் செயற்பட்டிருக்க வேண்டியவர்கள் தலைமை தாங்கியவர்களேயொழிய சாமான்யர்கள் அல்லர். இதுவரை தலைமை தாங்கிய எவருக்கும் அந்த பொறுப்பு இல்லாத போது சாமான்யர்களால் என்ன செய்ய முடியும்.
  17. கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் மேடைகளில் பீத்திக் கொள்ளவும் கவிஞரகள் கவிதை எழுதவும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் மட்டுமே உதவியது. உரிய நேரத்தில் புத்திக்கூர்மையான அரசியல் முடிவுகளும் அதையொட்டிய ராஜதந்திரமுமே தமிழ் மக்களை மற்றய இனங்களுக்கு ஈடாக வாழ வைக்கும் துரதிஷரவசமாகஅதை இதுவரை எவருமே செய்யவில்லை.
  18. நோர்வே பாலஸ்தீன மக்களுக்கு எந்த தீமையும் விளைவிக்க வில்லை. அதை விளைவித்தவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளும், இஸ்ரேல் கடும்போக்குவாதிகளுமே. நோர்வே வெறும் அனுசரணையாளர் மட்டுமே. இருபகுதியும் யுத்தத்தை விரும்பினால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அதுவே இலங்கையிலும் நடந்தது. அங்கும் இரு பகுதியும் யுத்தத்தே விரும்பியது உண்மை. தலைவர் எப்ப அடிக்கபோறார் என்று 2005 ல் இருந்து எதிர்பார்த்து காந்திருந்து யுத்தத்திற்கு தூபமிட்ட புலம் பெயர் தேசிக்காய் குஞ்சுளுக்கு நன்கு தெரியும் நோர்வே தமிழ் மக்களுக்கு எந்த தீமையும் விளைவிக்க வில்லை என. இருப்பினும் தமது குற்றத்தை மறைக்க இந்த பொய்யை தமிழர்களிடையே மட்டும் பரப்ப வேண்டிய துர்பாக்கிய நிலை.
  19. சிறியரிடம் நோர்வே தூதுவரே தூது போவார் என்ற ஜோக்கை ரசித்து விட்டு மெளனமாக கடந்து வந்தால், அந்த ஜோக்கிற்கு பதிலான எனது ஜோக்கையும் ரசித்து விட்டு செல்ல வேண்டியது தான்.
  20. உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிக்காமல் தலைக்கு மேல் வெள்ளம் போனபின் நள்ளிரவில் அறிவித்தால் உலகில் எவராலும் இந்த Guarntee, warranty எல்லாம் கொடுக்க முடியாது. அதற்கு நேரமும் கிடைத்திருக்காது. ( கடைசி ஆறு மாதங்களில் இணைத்தலைமை நாடுகள் அதை பல முறை வலியுறுத்தின. அப்போது அதை செய்திருந்தால் கோட்டாவால் அதை செய்திருக்க முடியாது. சரணடைந்தது நோர்வேயிடம் அல்ல. மிக மோசமான கோட்டாவின் படையிடம். சரண்டைந்தவர்களை கொல்லும் மகா பாதகத்தை செய்தவர் அவரே. ஆனால் அதற்கும் தமிழரின் உரிமை போர் தோல்வியடைந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே நோர்வே தமிழருக்கு துன்பம் விளைவித்தனர் என்ற உங்கள் கூற்று தவறானது. யாரையோ காப்பாற்ற மீண்டும் மீண்டும் தமிழருக்குள் மட்டும் பேசப்படும் பொய் அது.
  21. நோர்வே தமிழ் மக்களுக்கு ஒரு துன்பமும் விளைவிக்க வில்லை. யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டது தான் நடந்தது. 14 வருட அரசியல்வாதிகளின் காலத்தை விட தமிழ் மக்களுக்கு மிக மிக அதிக துன்பங்களை அதற்கு முன்னரே அனுபவித்துவிட்டார்கள். அதை மறைக்கவே 14 வருட அரசியல்வாதிகள் மீது முழுப்பழியும் போடப்படுகிறது. தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கியவர்கள் ஏற்படுத்திய அவல நிலையை போக்க பெருமாள் போன்ற ஜாம்பவான்களாலே முடியாத போது இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம்.
  22. சிறியரிடம் நோர்வே தூதுவர் தூது போய், அவர் சொல்வதை சிறியர், “என்னவாம்” என்று முழுச அதை மொழிபெயர்கக சாணக்கியன் கூட போகவேண்டிவரும். 😂
  23. தமிழீழ கோழி இட்ட முட்டைகளை எதிர்காலத்தில் முட்டையடிக்க கனடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான உடன்படிக்கையில் இருதரப்பும் கைச்சாத்திட்டனர்.
  24. @அக்னியஷ்த்ரா @valavan இதற்கு இவ்வளவு பெரிய விவாதம் எதற்கு? புலம் பெயர் நாடுகளில் புலிகளின் நேரடி உறுப்பினர்களாக நீண்ட காலம் இருந்தவர்களே இப்படியான எமகாதகர்களாக இருந்திருக்கும் போது ஊரில் ஒரு உதவியாளர் அப்படி இருந்தது புரிந்து கொள்ளக்கூடிய விடயமே. அதாவது யுத்த காலத்தில் ஊரில் குடும்ப உறுப்பினரை பிடித்தை வைத்து வெளி நாட்டில் காசு அறவிட்ட பின்னர் அந்த குடும்ப உறுப்பினர் விடுதலை செய்யப்பட்ட சம்பவங்களின் போது அப்படி காசு அறவிட்டு அதை ஊருக்கு உறுதிப்படுத்திய நீண்ட கால உறுப்பினரே எப்படிப்பட்ட எம காதகர்கள் என்பது யுத்த முடிவில் தெரியவந்தது. அப்படியிருக்க அக்னியேஷரா கூறிய இந்த தமிழர்கள் அனைவராலும் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய சிம்பிள் மற்றர். உண்மை, புலிகள் உட்பட அனைத்து ஆயுத இயக்கங்களும் போராட்டம், புனிதம் என்ற பெயரில் செய்த இவ்வாறான வேலைகள் பல. இதை மறுக்க நாம் ஒன்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து நேற்று தான் வந்து பூமியில் குதித்தவர்கள் அல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.