Everything posted by island
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உங்களுக்கு யார் சொன்னது. அது உண்மையை நேர்மையுடன் சிந்திக்க விரும்புபவர்களுகானது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அந்த சிவப்பு தான் எனது கருத்துற்கான அங்கீகாரம். உங்களுக்கு கோபம் வருகிறது என்றால் அது உண்மையான கருத்து என்று அர்ததம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எனது கருத்து ஒன்றுக்கு உங்களிடம் இருந்து சிவப்பு புள்ளி வருகிறது என்றால் அது மிகவும் சரியான கருத்து என்பது உறுதியாகிறது. ஆகவே சிவப்புப் புள்ளி மூலம் எனது கருத்தை. சரியான கருத்து என்று நிறுவும் உங்களுக்கு நன்றி விசுகு.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எனது பதில் பகிடி என்ற உறவின் கேள்விக்கு வழங்கப்பட்ட பதில். மற்றப்படி ஒடுக்கப்பட்ட இனம் எந்தப் படுகொலைகளையும் செய்யவில்லை. எனவே அந்த அப்பாவிகளை இங்கு இழுக்க வேண்டாம். இங்கு பேசப்பட்ட விடயம் அந்த அப்பாவி ஒடுக்கப்பட்ட இனத்தின் போராட்டத்தை பேரழிவுக்குள்ளாக்கி அவர்களை நிர்கதியாக்கிய முன்யோசனை சிறிதும் அற்ற தொடர்ச்சியான செயற்பாடுகள் பற்றியதே.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்ப இன அழிப்பு, போர்குற்றம் எல்லாம் நன்றாவே நடந்தது என்கிறீர்களா?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்ப நமது பக்கத்தில் வெற்றிக்களிப்பில் சிரித்துக்கொண்டிருக்கின்றார்களா?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இரண்டாவது இந்தக் கொலைகளால் தமிழரின் போராட்டம் சர்வதேச ரீதியில் அடைந்த நனமைகள் எவை? ஒட்டு மொத்த போராட்டதையே புரட்டிப் போட்ட தீமைகளே விளைந்தது. சொந்த செலவில் தமக்கே சூனியம் வைத்த இந்த செயல்களுக்கு நியாயம் கற்பிப்பவர்கள் நிச்சயமாக தமிழ் மக்களின் எதிரிகளாகவே இருப்பர்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
கோத்தபாயவின் ஆதரவாளர்களும் சிங்கள இனவாதிகளும் இதையே கூறினால் நீங்கள் அந்த காலத்திற்கு ஏற்றாற்போல காரியங்கள் நடந்தன என்று ஏற்றுக்கொள்ளுவீர்களா?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீலன் திருச்செல்வம் உலக்கில் உள்ள பெரும்பாலான் உயர் ராஜதந்திரிகளால் அறியப்பட்ட அவர்களால் மதிக்கப்பட்ட ஒருவர். அவரை கொன்றதன் மூலம் அந்த கொலையாளிகள் எதையும் சாதிக்கவில்லை. போராட்டத்தின் பின்னடைவுகளுக்கு காரணமான பலவற்றில் நீலனின் கொலையும் ஒன்று. ஐநா பொது செயலாளர் பதவிக்குத் தகுதியான ஒருவர் நீலன்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
@Justin @Kandiah57 எனது பார்வையில், கடந்த 40 ஆண்டுகளாக சுயமாக சிந்திக்கும் திறமையான அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் பரப்பில் விரும்பதகாதவர்களாகவே உள்ளனர். அவ்வாறான அரசியல்வாதிகள், கல்விமான்கள் பலர் அரச ஆயுதப்படையினராலோ, தமிழ் போராளிக்குழுவினர்களாலேயோ படுகொலை செய்யப்பட்ட வரலாறே உள்ளது. 2009 ன் பின்னர் கூட சுயமாக சிந்திக்கும் அரசியல்வாதிகள் வெறுப்புடன் பார்க்கப்படுபவர்களாகவே உள்ளனர். அவ்வாறாக சுயமாக சிந்திக்கும் அரசியல்வாதிகளை வளரவிட்டால் அவர்கள் கடந்த கால வரலாற்றை நேர்மையுடன் அணுகி தவறுகளை கேள்விகுட்படுத்துவார்கள் என்ற அச்சம் பலரை வாட்டுவதால் இந்த நிலை தொடர்கிறது. இந்த நிலை தொடரும் வரை தமிழரின் அரசியல் நிலை மேலும் மேலும் சிங்கள இனவாதிகளின் விருப்பத்தை பூர்ததி செய்யும் வகையிலான பின்னடைவையே நோக்கிய பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கும்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இப்படியான பிரச்சனைகளில் ஆட்களை போட்ட காலம் முடிந்து இப்ப வழக்கு போடும் காலம் வந்தது ஒரு முன்னேற்றம் தானே. 😂
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அதற்காக தான் இயற்கையே அதைக் கொடுக்கவில்லை.
-
மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்
இந்த கட்சியில் மட்டுமல்ல தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஒட்டுமொத்தமாக, அன்றில் இருந்து இன்று வரை சுயநலவாதிகளின் கூட்டமே அதிகம். தமிழ் மக்களின் பிளைகளான ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளின் தியாகங்கள் கூட இந்த சுயநல அரசியலை கொண்டு செல்லவே உதவியது என்பது வேதனை தருவது. இன்றும் கூட தனக்கு பிடிக்காதவர்களை திட்டித்தீர்ப்பதற்கும் ஓழித்துக்கட்டுவதற்குமே தேசியம் என்ற சொல்லாடல் பயன்படுகிறது.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
என் கண்முன்னே நடந்த விடயத்தை நீங்கள் நீங்கள் பொய்யாக்க வேண்டிய அவசியம் ஏனோ? நடந்த அந்த நிகழ்வு தவறானதாக எவரும் சித்தரிக்க வில்லை. அதை மக்கள் கூட ஏற்றுக்கொண்டிருந்தனர்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நான் கூறியது யார் உத்தியோகபூர்வமாக ஸ்போன்சர் செய்தார்கள் என்பதல்ல. யார் நிகழ்சிகளை மக்கள் முன் ஒருங்கிணைத்தார்கள் எனபதையே. ஐரோப்பாவுக்கு தமிழகத்தில் இருந்து எந்த பேச்சாளரும் புலிகளின் உத்தியோக பூர்வ அழைப்பில் வருவதில்லை என்பது தங்களுக்கு தெரியும். அவ்வாறு செய்ய புலிகள் சட்டபூர்வமான அமைப்பு அல்ல. ஐரோப்பாவில் புலிகளின் நிறுவனங்கள் புலிகளின் பெயரில் பதிவு செய்யப்படுவதில்லை. தனியார் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டது. புலிகள் அதை நிர்வாகம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இது போல் பல விடயங்களை கூறலாம்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நீங்கள் மறுக்கும் அளவுக்கு அது ஒன்றும் தவறான செயல் அல்ல. நிதி சேகரிப்புக்கு அது அவசியமாக பட்டதால் அன்று மிகவும் வெளிப்படையாக புலிகள் அதைச் செய்தார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. அது அன்றைய நிலையில் அவசியமானதும் கூட. நிகழ்ச்சிக்கான ரிக்கட் கூட வழமையாக போராட்ட நிதி சேகரிக்கும் இயக்க உறுப்பினராலேயே விற்கப்பட்டது. ( நானும் அவர்களிடம் தான் வாங்கினேன்) அதன் பின்னர் சிறிது காலத்தில் எஸ். பி பாலசுப்ரமணியம் அவர்களின் நிகழ்சியும். 1990 கோடை காலத்தில் கங்கை அமரனின் நிகழ்ச்சியும் வெளிப்படையாக புலிகளால் நடத்தப்பட்டன. அதற்கு வாழும் சாட்சிகள் பல உண்டு. அந்நேரத்தில் ஐரோப்பாவில் இயங்கிய உறுப்பினர்களை கேட்டுப் பாருங்கள். அவர்களில் பலரை எனக்கு தனிப்பட தெரியும் என்றாலும் இங்கு அவர்களின் தனிப்பட்ட விபரங்களை கூறுவது தவறு. ஆனால், நிச்சயம் உங்களுக்கு அந்த நேரத்தில் இயங்கியவர்களில் சிலரையவது தெரிந்திருக்கும். விசாரித்துப் பாருங்கள். 1985 ல் சென்னையில் தமிழ் திரையுலகின் அத்தனை நட்சத்திரங்களும் இணைந்து மிகப்பெரிய Star Night நிகழ்சியை தமிழ் ஈழ போராட்ட நிதி சேகரிப்புகாகவே செய்திருந்தனர். அதில் புலிகளின் பிரதி நிதி ஒருவரும் உரையாற்றி இருந்தார் என்பதையும் கூடுதல் தகவலாக தெரிவித்து கொள்கிறேன். . நீங்கள் கூறிய நிகழ்ச்சி பற்றி நான் கேள்விப்பட வில்லை. நடந்திருக்கலாம். ஆனால், நடிகைகள் ஆடும்போது பண நோட்டுகளை வீசியெறிந்தது என்றால் அது நிச்சயமாக தனியாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்திருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
1988 ல் நடிகை அமலா, மோகன், வெண்ணிற ஆடை மூர்ததி, சார்லி என ஒரு பட்டாளத்தையே அழைத்து விடுதலைப்புலிகள் ஐரோப்பாவில் Star night நிகழ்ச்சி நடத்தினார்கள். இன்று தமன்னா வந்தால் கலாச்சார சீரழிவாம். சிரிப்பாக இருக்கிறது.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
கருத்து களத்தை திரும்ப வாசித்தால் எல்லாம் தெரியும்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நிங்கள் கேட்ட கேள்விக்கான நேரடியான பதிலையே நான் தந்தேன். அது தொடர்பாக தர்கக ரீதியான பதிலை தர முடியாத போது விடுப்பு விண்ணாணம் உங்களுக்கு தேவைப்படுகிறது. தமிழ் மக்களுக்கு முதல் எதிரிகளே உங்களைப் போன்றவர்களே. அதை மறைக்கவே உங்களது விடுப்பு விண்ணாணம். மற்றவர் மீதான வசைபாடல்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழ்பாண தமிழ் மக்கள் ஒன்றும் சினிமா மோகம் இலஙாதவர்கள் கிடையாது. திரைப்படங்கள் ஏக காலத்தில் இலங்கையிலும் திரையிடப்படாத காலத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து படகில் திருட்டுதனமாக தமிழ் நாடு சென்று அங்கு வெளியாகும் புதிய திரைப்படங்களை பார்தது ரசித்துவிட்டு திரும்பி வந்த கதைகளெல்லாம் உண்டு. அதை விட, சினிமா மற்றும் இது போன்ற star night கொண்டாட்டங்கள் மக்களின் கலாச்சாரத்தை/ கல்வியை பெரியளவுக்கு பாதிக்கப் போவதில்லை. சினிமா மோகம் கொண்டவர்கள் என்று எம்மவரால் கேலி பேசப்படும் தமிழ் நாட்டில் கல்வி கற்றவர்கள் பெருந்தொகையானவர்கள் வெளி நாடுகளில் உயர் பதவிகளில் உள்ளார்கள். பெருந்தொகையான கணணிப் பொறியியலாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் பெரிய பெரிய நிறுவனங்களால் வேலைக்கு அழைக்கப்படுகின்றனர். எம்மவரில் விரல் விட்டு எண்ணப்படுபவர்களே அப்படி வரக்கூடியதாக உள்ளது. மற்றயவர்கள் அகதி விசாவிலேயே இங்கு வரும் நிலை. எம்மவரில் இங்கு கலவி கற்ற இரண்டாம் தலைமுறையினர் கல்வியில் உயர்ந்து விளங்குவதைப் போல தமிழ் நாட்டில் கல்வி கற்றவர்கள் உலகெங்கும் அதே கல்வி வல்லமையுடன் இருக்கிறார்கள்.
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
இந்த ஜதார்தத நிலையை உணர்து செயற்படுவதே இன்றையஅவசரத் தேவை. அதை விடுத்து தம்மை தமிழ் தேசியம் பேசுவதாக கூறிக்கொண்டு எதிர்கால தலைமுறைக்கு உலை வைக்கும் கைங்கரங்களில் தான் இந்த புலம் பெயர் தேசிய அரசியல் வீணர்கள் ஈடுபடுகிறார்கள் என்ற கோபம் ஏற்படுவது இயற்கையே.
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
இன்றைய தமிழரின் அரசியல் நிலையில் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையாக செயற்பட்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முறையாக அமுல்ப்படுத்த செய்து காணி, காவல்துறை அதிகாரங்களை வாங்கினாலே பெரிய விடயம். மக்கள் சற்றே மூச்சு விடவும் தமது கல்வி. பொருளாதார நிலையை உயர்த்தி எம்மை இலங்கைத் தீவில் தக்க வைத்துகொள்ளும் அரசியல் நிலையாவது ஏற்படும் என்பதை தேசியர் என்று கம்பு சுற்றி வெட்டி வீரம், வெற்றுக் கோசங்களை மட்டும் எழுதி உசுப்பேத்தி அடுத்த சந்திதிக்கும் உலை வைக்கும் வீணர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வெளி நாடுகளில் இருந்து இப்படி உசுபேற்றும் வீணர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கூட அங்கு இவர்களால் உசுப்பி விடப்பட்டு அவலப்படும் சந்திதியை எட்டி கூட பார்க்காது. அது தான் ஜதார்த்தம்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அவரின் பிரச்சனை யாழ்பாணத்தில் அவருன் கட்டுப்பாட்டை மீறிய புலம் பெயர் தொழிலதிபர்கள் உருவாவது தனது அரசியலுக்கு ஆபத்தானது என்ற அவரது அரசியல் நினைப்பே. பெரியளவிலான அபிவிருத்திகளை தவிர்தது சிறிய சலுகைகளை மக்களுக்கு வழங்கி அரசியல் செல்வாக்கை உருவாக்கும் தனது செயற்பாட்டுக்கு இது ஒவ்வாது என்று நினைத்திருக்கலாம்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இதுவும்ஒ ரு உத்தி தான். விவாதிக்கப்பட்ட விடயத்தை விட்டு வேறு விடயங்களை பேசுவது. நீங்கள் முதலில் கேட்ட கேள்விக்கு நான் நேரடியாக பதில் தந்தேன். நீங்கள் அதை விடுத்து வேறு விடங்களுக்கு தாவுகின்றீர்கள்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
விவாதத்தில் உணமைகளை ஜீரணித்து கொள்ள முடியாத போது வழமையான பயன்படுத்தும் இறுதி ஆயுதம் எதிரில் இருப்பவனை சிங்கள கைக்கூலி என்று வசைபாடுவது. என்ன செய்வது அதற்கடுத்த ஆயுதத்தை பயன்படுத்த முடியாத பரிதாப நிலை 😂😂