Everything posted by island
-
பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
15 வருடத்தில் மட்டுமல்ல தமிழ் தரப்பில் இதுவரை எவருமே எதையும் புடுங்கவில்லை. பறி கொடுத்ததை மட்டுமே செய்தார்கள். இனிமேலும் புடுங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. இப்படியே இணையத்தில் வந்து ஆளையாள் திட்டிவிட்டு போய் சேரவேண்டியதே தமிழ் தேசியம், என்ற நிலைக்கு கீழ் இறங்கி வந்து விட்டதே சாதனை. இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்பவே அசத்துறீங்க. 😂
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
- IMG_5647.jpeg
- IMG_5646.jpeg
- IMG_5648.webp
- IMG_5650.jpeg
- IMG_5649.webp
- IMG_5651.jpeg
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
- IMG_5652.jpeg
-
வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்
யுத்தம் நடந்த காலத்தில் நடந்த உண்மைகளை யாரும் நேர்மையாக எழுதினால் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பின் ஆதரவாளர்களும் அதை ரசிக்கப்போவதில்லை என்பதுடன் அவர்களை அது கோபப்படுத்தும். இருதரப்பும் தமது வீரப்பிரதாபங்களை மட்டுமே பீற்றிக்கொள்ளும். இவர்களை எல்லாம் கடந்த, ஓரளவுக்காவது மக்களை நேசிக்கும் அரசியலாளர்கள் உருவாகும் போதே இனவாதம் ஒழிந்து காத்திரமான அதிகாரப்பகிர்வு ஏற்படலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படியான நிலைக்கான சாத்தியக்கூறுகள் கூட தெரியவில்லை.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
முள்ளிவாய்ககாலில் தமது குடும்ப உறவுகளை நினைத்து அழுத தமிழர்களையும் வெசாக் கூடுகளை ரசித்த தமிழர் களையும் இரு வேறுபட்ட தமிழராக நினைத்து ஒப்பிட்டு பார்ப்பதே சுத்த அபத்தம். இவர்களில் இருவரும் ஒருவராக இருக்கும் சாத்தியமும் உண்டு.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
பொது வேட்பாளர் என்பது ஒரு யுக்தி. இன பிரச்சனை தீர்வுக்கு இந்த யுத்தி எந்த பலனையும் கொடுக்காது என்பதையே பொதுவான கருத்தாக பலரால் தெரிவிக்கப்பட்டது. அது ஏற்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம். ஆனால், யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டியது ஆட்சி மாற்றத்தின் விளைவுகளை அனுபவிக்கப்போகும், வாக்களிக்கவிருக்கும் மக்களே. பல ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் எம்மால் அதை எப்படிக் கூற முடியும். ஆட்சி மாற்றத்தினால் வரும் விளைவுகளை எதிர் கொள்ள தயார் அற்ற வேடிக்கை மட்டும் பார்கக இருக்கும் நானோ நீங்களோ யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்யலாம்?
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
பொது வேட்பாளர் என்பது இலங்கையின் இன பிரச்சனைக்கு எந்த விதமான முன்னேற்றங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை. இனவாதம் இன ஒடுக்குமுறை என்று வரும் போது இன சமத்துவ ஜனநாயகத்தைக்காக அனைத்து இனங்களையும் உள்வாங்கிய தூரநோக்கு போராட்டங்களே வெற்றி பெறும். தனியே ஒரு இனத்தை முன்னிறுத்திய வேட்பாளரும் அவரை ஆதரித்து இடம் பெறும் பரப்புரைகளும் மேலும் இனவாத சக்திகளுக்கும் இனவாதத்தை தூண்டும் சக்திகளுக்குமே உதவி செய்யும். இன விரிசலையும் இனங்களுக்கு இடையிலான சந்தேகத்தையும் பகைமையை அதிகரிக்கவே உதவும். இலங்கையின் வரலற்றிலேயே இதற்கு உதாரணங்கள் உண்டு.
-
தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
1977 பொது தேர்தலில் ஒற்றுமையை காட்டினால் விடிவு வரும் என்றார்கள். பின்னர் வந்த ஆயுத இயக்கங்கள் தேர்தலை புறக்கணித்தால் விடிவு வரும் என்றார்கள். பின்னர் 2004 ல் திரண்டு வாக்களித்தால் விடிவு வரும் என்றார்கள். மக்கள் திரண்டு வாக்களித்து 22 பாராளுமன்ற உறுப்பினரைக் கொடுத்தார்கள். 2005 ல் தேல்தலை புறக்கணித்தால் விடிவு வரும் என்றார்கள். விடிவை எதிர்பார்தத மக்கள் அதிர்ந்தே போனார்கள். பின்னர் 2013 ல் வடக்கு மாகாண சபை தேர்தலில் திரண்டு வாக்களித்தால் விடிவு வரும் என்றார்கள். இப்போது பொது வாக்காளருக்கு வாக்களித்தால் விடிவு வருமாம். இன்று ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி தமது வாழ்வை கழிக்கும் நிலாந்தன் அன்று உரியவர்களுக்கு இதே போல இடித்துரைத்திருந்தால், இந்த அரசியல் ஆய்வுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம்.
-
யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி
யாழ் வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் இருபத்தைந்து பேர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையின் பொருட்களுக்கு பலத்த சேதத்தை செய்துவிட்டு நேற்று (7) தப்பிச் சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்களின் தவறினால் தமது நண்பர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தரது நண்பர்கள் ஆவேசமாக அலறியடித்துக்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இளைஞர்களின் தாக்குதலால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மூன்று இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு தாக்குதலுக்கு உள்ளான இரண்டு வைத்தியசாலை ஊழியர்களும் காயமடைந்துள்ளனர். https://www.ceylonmirror.net/139121.html?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1vayQjeQJdkEqbb6RnY9tyMus2r1Sa0Y1rnkkbKKhLzQP_mWUv_4GumCQ_aem_AYZ3aB0oksFiPYuO7AnERKF4Y4lVydEfdZ9oF50mTOFkYW1xDi_MyWeipBv9i_VuIRiZxAUYI_NZJjgMmjW0oaIE
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
மிக நீண்ட காலமாகவே ஶ்ரீலங்கா ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலா நாடு. இலங்கைக்கு படையெடுக்கும் மேற்குலக சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை ஒரு 3 ம் உலக நாடு, என்ற புரிதல் உண்டு. அந்த புரிதலுடன் அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே ஶ்ரீலங்காவிற்கு இட்ட பெயர்தான் taste of paradise என்பதாகும். இனவாதம் அதனால் ஏற்பட்ட யுத்தம் இலங்கைக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தினாலும் ஒரு சுற்றுலா நாடு என்ற ரீதியில் இலங்கை மீண்டும் சுற்றுலாப்பயணிகளின. சொர்க்கமாகவே வளர்ச்சியடைந்து வருகிறது.
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
திரு எரிக் சோல்ஹைம் நோர்வே அரசினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்ததைக்கான அனுசரணையாளர் மட்டுமே. சம்பந்தப்பட்ட இரு தரப்புமே பேச்சுவார்த்தையை மூலமான அரசியல் தீர்வு காண்பதில் முழுமையான பற்றுறுதியுடன் இல்லாமல் தத்தமது வித்தியாசமான அஜண்டாவுடனேயே பேச்சுவார்ததை காலத்தில் செயற்பட்டு மீண்டும் யுத்தம் ஏற்படவும் பேரழிவு ஏற்படவும் காரணமாக இருந்தன. இந்நிலையில் எரிக் சோல்ஹைம் அவர்களை குற்றம் சாட்டுவதில் எந்த பிரயோசனமும் இல்லை.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
அன்று தமிழ்மக்கள் பொது வேட்பாளரை நிறுத்தி மகிந்த தேர்தலில்வென்றிருந்தால் அதன் பாதிப்பை தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனுபவித்திருப்பார்கள். @விளங்க நினைப்பவன் கூறியது போல் அன்று தமிழ் மக்களின் வாக்குகள் செல்லா காசாக்கப்படவில்லை என்பதை 2015 க் கு முன்பும் 2015 க் கு பின்பும் தாயகம் சென்ற புலம் பெயர் மக்களாலேயே வெளிப்படையாக உணரக்கூடியமாக இருந்தது.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
தமது சொந்த மக்களுக்கே எந்த பிரயோசனமும் அற்ற தேர்தல் பகிஷகரிப்பு போன்ற உதவாக்கரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் செய்யும் தரப்பின் கடந்த கால வாடிக்கை. அதன் தொடர்சசியே இந்த பொது வேட்பாளர் என்ற பிரயோசனமற்ற தமிழரின் வாக்குகளை செல்லாக்காசாக்கும் வழமையான விளையாட்டும்.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
@ரஞ்சித் நான் எழுதும் விடயங்களை முழுமையாக புரிந்து கொள்ள முயலாமல் என்னை ஒரு பரம வைரி போலும் தமிழ் தேசியத்துக்கு எதிரானவன் போலவும், ஒற்றையாட்சியை வலியுறுத்துபவன் போலவும் சித்தரித்து நீங்கள் எழுத, பின்னர் நான் உங்களுக்கு இன்றைய அரசியல் நிலையின் உண்மை நிலையையும் இந்த நிலைக்கு எம்மைக் கொண்டு வந்து விட்டதன் கடந்த கால அரசியலைப் பற்றிக் கூறி பதிலெழுத, நீங்கள் முன்னதை விட ஆக்கோஷத்துடன் என்மீது வசைமாரி பொழிய இப்படியே இவ் விவாதம் நீண்டு செல்கிறது. எனவே, இந்த விவாதத்தை நிறுத்தி நீங்கள் முன் வைக்கும் அரசியல் முன் மொழிவு விரைவில் நடைமுறைச் சாத்தியமாக மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு அந்த அரசியல் வெற்றியளித்து, உங்களது அரசியல் முன்மொழிவின் வினைதிறனால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தாலே போதும் நான் எனது இன்றைய நிலை தொடர்பாக எனது கருத்துகளை வாபஸ் வாங்கி உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே பொருந்தும். அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம் சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை. தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள் கூறாவிட்டாலும் அது தானே உண்மை. மேற்கண்ட இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன். ஆனால், தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர். நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி, எச்சரிக்கும் தொனியில், “ஈழநாடே வாயை மூடு” என்று, அன்று சுதந்திரன் பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத அவலநிலைக்கு தமிழ் மக்களை இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே. நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி பேசும் போது அவற்றின் உண்மைகளை மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை நீங்கள் பெற்றதும் அந்த தமிழ் அரசியல் தொடர்ச்சி தான். உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான வெற்று அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ கவலை இல்லை என்பதும் தெரிந்ததே. நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே. தமிழ் தேசிய அரசியல் உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள். இலங்கை ஒற்றையாட்சியை நான் ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள். ஆனால், இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே ஆர்வமற்றவர்களாக மாற்றி, பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும் நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே. உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம். மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை. இந்த எனது பதிவுக்கு பதிலாகவும் என்மீது வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
இணையத்தேடுதலில் பின்வரும் இணைப்புகள் கிடைத்தன. காழ்புணர்வின் காரணமாக இராமநாதன் கல்லூரியின் சொத்துகளை பறிமுதல் செய்து விட்டார்கள் என்று அதையும் ஒரு காரணமாக தமிழரசு கட்சி பிரச்சாரம் செய்தது நடைபெற்ற விடயம் தான். கிடைத்த இணைப்புகளில் ஒன்று யாழிணையத்தில் கிருபன் என்ற உறவால் முன்னர் இணைக்கப்பட்ட திரி. https://eelanadu.lk/யாழ்ப்பாணப்-பல்கலைக்கழக/ https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்-பல்கலைக்கழக-உருவாக்கமும்-எதிர்ப்பும்/91-293330
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
உண்மை. இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க வந்த பிரதமரை யாழ் பலாலியில் யாழ்மக்கள் பெரும் திரளாக வந்து வரவேற்றதை இன்றும் காணொளிகளில் பார்கலாம். தமிழரசுகட்சி தனது குறுகிய அரசியலுக்காக எதிர்த்ததை மக்கள எதிர்த்தார்கள் என்று புரட்டுகளை கூற இன்று கூற வரலாற்றை திரித்து எழுதுவோர் முன்வந் துள்ளார்கள். இப்போது வவுனியா பல்கலைக்கழகம் யாழ் வளாகமாக இருந்ததை மாற்றி தனி பலகலைக்கழகமாக மாற்றியதையும் தமிழ் தேசியவாதிகள் எதிர்பபு தெரிவித்தனர்.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின் கடந்த கால நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின் தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது. அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ அல்லது அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது.