Everything posted by island
-
இலங்கையில் ஏழுமலையான் கோவில் !
தமது பிரதேசத்தின் உற்பத்தி வளர்சசி, வர்ததக வளர்சசி அதன்மூலமான வேலைவாய்ப்பு மக்களின் வாழ்ககைத்தர உயர்வு ஆகியவற்றை விட இவ்வாறான கோவில்களுக்கு வாரியிறைப்பதில் ஈழத்தமிழர்கள் (புலம்பெயர் தமிழர்கள் உட்பட) அதிக அக்கறையுடன் இருப்பதை அவதானித்த ஏழுமலையான் இந்த ஏமாளித்தனம் உடைய மக்களே தனது வாடிக்கையாளர்கள் என்பதை துல்லியமாக சந்தைஆய்வு (marketings analysis) செய்து இலங்கைக்கு எழுந்தருளி வருகிறார் போலும்.
-
கோட்டாவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாவின் வீட்டில் இருந்தார்! - முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார
மகிந்தவும் கோட்டபாயவும் அவரின் கும்பலும் முழுக்க முழுக்க கடும் போக்கு இனவாதிகளாகவே பதவிக்கு வரமுதல் இருந்தே இருந்துள்ளார்கள் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனது நேரடியான பதிலுக்கு நேர்மையான பதிலை வழங்க முடியாமல் நீங்கள் தடுமாறுவதை ரசித்தேன். 😂 உலகம் முழுவதும் உள்ள எல்லா இனங்களிலும் உள்ள இனவாதிகள் தனிப்பட்ட விடயங்களை அரசியலாக்குவதும் விவாதங்களில் பொய்யுரைப்பதும் வழமையானது தான். உங்களைக் கஷடப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனக்கு முதலில் நீங்கள் கொடுத்த பதில் தொடர்பாக கேள்வி கேட்டதற்கு (அதாவது இது தனிப்பட்ட குடும்ப விவகாரம் இதற்குள் அரசியலை ஏன் இழுக்கின்றீர்கள் என்று நான் கேட்டதற்கு) நாமேதோ நாகரீகமற்றவர்கள் மனித நேயமற்றவர்கள் என்ற பொருள்பட எழுதிய கருத்துக்கு வழங்கப்பட்ட பதில் இப்படி நீண்டுவிட்டது என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி நான் எழுதியதாக நீங்கள் கூறியது உண்மைக்கு புறம்பானது. அந்த கருத்து எங்கே உள்ளது என்று இந்தத் திரியில் காட்டுமாறு மட்டுமே நான் கேட்கிறேன். முடிந்தால் அதை மட்டும் காட்டுங்கள். இல்லை என்றால் நான் அப்படி எழுதியதாக நீங்கள் கூறியது பொய் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நீங்கள் எழுதியதாக நானும் குறிப்பிடவில்லையே! அவ்வாறான கருத்துக்கள் இந்த திரியில் வைக்கப்பட்டிருந்த போதிலும் அதைவிடுத்து தமிழருக்கு எதிராக என்னால் அவதூறு கூறப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக நீங்கள் தெரிவித்த கருத்தைப்பற்றியே கேள்வி கேட்டேன். அந்த கருத்து என்ன என்று கேள்வி கேட்டேன். அதற்கு பதிலளிக்க உங்களால் முடியாததால் வழமையான பாணியில் வேறு ஒன்றைப் பிடித்து தொங்க முயற்சித்துள்ளீர்கள். பரவாயில்லை உங்களால் அப்படியாக என்னால் எழுதப்பட்ட கருத்தைக் காட்ட முடியாது என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் திரியில் நீங்கள் பதிலளித்த எந்த கருத்திலாவது தமிழரை பற்றி அவதூறு கூறிய கருத்து இருந்ததா? அது எது என்று கூறமுடியுமா? அப்படியிருக்க அவ்வாறு இருந்ததாக பச்சைப்பொய்கூறியதும் தேவையற்று அரசியலை இழுத்ததும் ஏன்? மாறாக இதை வைத்து அந்த குடும்பத்தை நோக்கிய இனவாத கருத்துக்களே இங்கு வைக்கப்பட்டிருந்தன.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான் இங்கு நடை பெற்றது ஒரு குடும்பத்துக்குள் நடந்த தனிப்பட்ட கொலைச்சம்பவம். இதே போன்ற பல கொலைச்சம்பவங்கள் புலம் பெயர் நாடுகளில் தமிழர் குடும்பங்களுக்குள்ளும் நடைபெற்றுள்ளன. இதற்குள் அரசியலை இழுத்து பந்தி பந்தியாக புராணம் பாடும் அளவுக்கு நட்டு கழன்றவர்களாக நாம் இருக்கவேண்டியதில்லை.
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
தமிழ் திரைப்படங்களை விட கேரளப்படங்கள் மக்களின் ஜதார்த்ததமை பிரதிபலிப்பனவாகவும் சிறப்பாகவும் உள்ளன. கேரள திரைப்டங்களில் வரும் கதாப்பாத்திரங்கள், வீடுகள், மக்களின் பழக்க வழக்கங்கள் யாழ்பாண மக்களின் வாழ்ககை முறையை பிரதிபலிப்பனவாக இருக்கும். ஈழத்தமிழ் மக்களுக்கும் கேரள மக்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதை மலையாளத் திரைப்படங்களில் காணலாம். பல மலையாள திரைப்படங்களை போல இந்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படமும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. 👍👍👍👍
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
எனக்கும் தெரியும் அப்படியான அறிக்கையை உங்களால் இணைக்க முடியாது என்று. இருந்தால் தானே இணைக்க. 😂😂😂
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
அவர் மக்கள் பிரதிநிதி தான். மக்கள் பிரதிநிதியாக ICC முன்னெடுத்த யுத்தக்குற்ற விசாரணையை தவணை வாங்கியதன் மூலம் தடுத்தார் என்றால் அது ICC யின் இணையத்தளத்தில் அறிக்கையிடப்பட்டிருக்கும். அல்லது வழக்கை தாக்கல் செய்த நாட்டின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கையின் இணைப்பை மட்டும்தான் கேட்டேன். அப்படி ஒன்று இருந்தால் அதை இணையுங்கள்.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
பெருமாள் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அந்தக் கேள்வி புரியாமல் இருந்தால் கேள்வியை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும். தப்பு தபகாக பதிலளிக்க கூடாது. எனது கேள்வி International criminal court ஶ்ரீலங்கா இல் நடந்த யுத்தக்குற்றங்களை விசாரிக்க இணங்கியதா? இணங்கி இருந்தால் ICC இன் இணையத்தளத்தில் அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா? வழக்கைத் தொடுக்க இணங்கிய அதை முன்னெடுத்த நாடு எது? அந்த நாட்டின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் அது பற்றிக் அறிக்கையிடப்பட்ட அறிக்கை இணைப்பை தர முடியுமா? தமிழ் மக்களின் பிரதி நிதி என்ற ரீதியில் சுமந்திரன் வழக்கை தொடுக்க முன்வந்த நாட்டுக்கோ அல்லது அனைத்துலக நீதி மன்றுக்கோ யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டாம் என்றோ அல்லது தவணை வாங்கியதாகவோ வலியுறுத்தியதாக வழக்கை தொடுக்க வந்த நாட்டினாலோ அல்லது ICC யாலோ அறிக்கையிடப்பட்ட அறிக்கையை இங்கு இணைக்க முடியுமா? குமாரசாமி குறிப்பிட்டபடி அவ்வாறு சுமந்திரன் தவணை வாங்கியிருந்தால் மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த திகதி என்ன? இவற்றை இணைப்பதன் மூலம் சுமந்திரனை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த முடியுமல்லவா? சுமந்திரன் மக்கள் பிரதிநிதி தான். அதனை சேர்தது நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முயலலாமே! நான் ICC இணையத்தளங்களில் தேடிப்பார்தேன். அவ்வாறு எதுவும் இல்லை. அதனால் தான் உங்களை கேட்டேன்.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
சரி மறதி நோய் எனக்கு இருக்கு என்று நினைத்துக்கொண்டு நான்கேட்ட இணைப்பை இணைத்து விடுங்கோ.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
சரி உங்கள் கூற்றுப்படி தவணை வழங்கப்பட்டதாயின் 1. அனைத்துலக நீதி மன்றில் ஶ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தக்குற்றங்களை விசாரிக்க முற்படுகையில் சுமந்திரன் தவணை கேட்டிருந்தால் அடுத்த தவணை எப்போது வழக்கப்பட்டு அது முன்னெடுக்கப்பட்டது? 2. அதில் ஆஜராகிய சட்டத்தரணி யார்? 3. இது தொடர்பாக ICC இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிக்கையிடப்பட்டதா? அந்த ICC இணையத்தள அறிக்கை இணைப்பை இங்கு இணைக்க முடியுமா?
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
நான் கேட்டது அனைத்துலக நீதி மன்றத்தினால்( International criminal court, Haag) இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் விசாரிக்கப்பட எடுத்துக் கொள்ள உடன்பட்டதற்கான ஆதாரம். அல்லது யுத்தக குற்றங்களை ICC க்கு எடுத்து செல்ல ஶ்ரீலங்கா அரசுக்கெதிராக வழக்கு தொடர உடன்பட்ட நாட்டின் உத்தியோகபூர்வ அறிக்கை அதனை சுமந்திரன் தடுத்ததற்கான ஆதாரம். இதை உறுதிப்படுத்தும் சர்வதேச ஊடகங்களின் செய்தி. (தமிழ் ஊடகங்கள் அல்ல)
-
முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை
இலங்கை தனது நாட்டுப் பிரஜைக்கு All countries passport வழங்குவதை இந்தியா தடுக்கும் சட்ட உரிமை உள்ளதா?
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
சுமந்திரன் உட்பட தற்போதைய அரசியல்திவாதிகள் எல்லோருமே பயன்றற வெறும் வெற்றுக்கோஷங்களை முன்னிறுத்திய அரசியலை மட்டுமே செய்கிறார்கள் என்பதே எனது பார்வை. மக்களின் அன்றாட பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்க முடியாத வெத்து வேட்டுகள் இவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மக்களின் நடைமுறைப் பிரச்சனைகளை தீர்க்கும் விடயத்தில் டக்லஸ் செய்வதைக் கூட செய்ய வலுவற்ற வெத்து வேட்டுகளாகவே சுமந்திரன் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் உள்ளார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம். ஆனால், யுத்தக்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நீதிமன்றத்தை நோக்கி வழக்கு தொடுக்க மேற்குநாடுகள் முன்வந்த போது சுமந்திரன் என்ற தனி நபர் அதை தடுத்துவிட்டார் என்பதற்கான நம்பகமான எந்த செய்தியையும் சர்வதேச ஊடகங்களில் நான் காணவில்லை. அப்படியான நம்பகரமான அனைத்துலக ஊடகச் செய்தி இருந்தால் இணைத்தால் நானும் அதை வாசிக்கலாம்.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
இவர்கள் பேசும் வெத்து வெட்டு தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க ஒரு வில்லன் தேவை. அந்த வில்லனாக கட்டமைக்கப்பட்டவரே இந்த சுமந்திரன். இவர் இல்லை என்றால் தமிழருக்கு விடுதலை கிடைத்துவிடும் என்பது போன்ற மாயையைக் கட்டமைக்க இவர்களுக்கு சுமந்திரன் தேவை. முன்பென்றால் ஒரு வில்லன் போரடித்தவுடன் அவரைப் போட்டு தள்ளிவிட்டு அடுத்த வில்லனைக் கட்டமைக்கலாம். இப்போது அதை செய்யமுடியாது என்ற விரக்தி சுமந்திரன்போகுமிடமெல்லாம் பின்னால் திரிந்து திரிந்து குலைக்க வேண்டிய பரிதாப நிலை. 😂
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து என பல நாடுகளில் தமிழர்களிடையே இது போன்ற பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. அப்போதெல்லாம் இலங்கைப் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் செய்தி வரவில்லையே. இவ்வாறான சம்பவங்கள் இனம், பால், வயது வேறுபாறுகளை கடந்தவை பெரும்பாலான சாதாரண மன நிலை உள்ள மக்கள் இதனைப் புரிந்து கொள்வர். இனவாதிகள் அவர்கள் எந்த இனத்தில் இருந்தாலும் தமக்குள் உள்ள இனவாத வக்கிரத்துடன் எல்லாவற்றையும் இனவாதக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பர்.
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
கல்வி என்பது உனக்கானதல்ல உனக்கு அது வராது என்று பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பெரும்பான்மையான மக்களை ஒதுக்கி அவர்களை தாழ்ததிய நிலையில் இருந்து இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களின் னுகூலங்களால் இன்று சற்றே முன்னேறிவருகின்றனர். அது போல் முயற்சியுடன் கல்வி கற்கும் போது எவராலும் முன்னேறிய நிலையை அடைய முடியும். இலங்கையை பொறுத்தவரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களிடன் நல்லுறவை பேணி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வேண்டிய கல்வியை பெற்றுக் கொண்டதன் மூலம் தமது கல்வித்தரத்தை சற்று உயர்ததிக்கொண்டனர். அதை வைத்த தாம் மற்றய இனத்தை விட கல்வியில் சிறந்தவர்களாக தமக்குள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அது உண்மை அல்ல என்பதை கடந்த 70 ஆண்டுகளில் கண்டோம்.
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
சென்ற மாதம் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதே அளவான மக்கள் திரள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக யாழ்பாணத்தில் இருக்கும் யூருபர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த நிகழ்சசியில் தூஷன வார்ததைகளுடன் அநாகரிகமாக நடந்து நிகழ்வைக் குழப்பிய காவாலிகள் இந்த நிகழ்சசியில் வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்திருப்பார்கள். 😂
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது போன்ற பல சம்பவங்கள் நமது தமிழர் சமூகத்திலும் புலம்பெயர் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன. கணவனும் மனைவியும் வேலை செய்யும் உணவகத்தில் வைத்தே கணவன் தனது மனைவியை குத்து கொலை செய்த சம்பவமும் அண்மையில் நடைபெற்றது.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
அரசியலைக் கடந்து அரசியலில் வெவ்வேறுகட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு விளையாட்டுப்போட்டியை இணைந்து பார்ப்பதும் ஒரு பொது நிகழ்சசியில் கைகுலுக்கிக் கொள்வதும் Zivilisation அடைந்த மக்கள் வாழும் மேற்கு நாட்டு அரசியல்வாதிகளின் பழக்கவழக்கம். அதை இலங்கை போன்ற நாடுகளில் ஐயோ அதுவும் தமிழ் அரசியல்வாதி செய்வது மன்னிக்கமுடியாத குற்றம்.
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
தேசியத்துக்காக மக்கள் இல்லை. மக்களுக்காக தான் தேசியம். ஆகவே மக்களில் இருப்பு இருந்தால் தான் ஆரோக்கியமான தேசியத்தை கட்டி எழுப்ப முடியும். இல்லையெனில் நோய்வாய்ப்பட்ட வெறும் அடிப்படைவாதத்தை மட்டுமே தேசியம் என்ற பெயரில் வளர்ததுவிட்டு புலம பிக்கொண்டிருக்க மட்டுமே முடியும். எந்த பயனுமற்ற அழிவை நோக்கியதாக இருப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் என்று யோசித்துப்பார்த்தீர்களா? பாலஸ்தீன பிரச்சனை இப்போதும் இழுபடுவதற்கு ஹமாஸ் பயங்கரவாதம் முக்கிய காரணங்களில் ஒன்று. அரபாத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை குழப்பியது ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு தான்.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
இந்த உசுபேற்றும் வெற்றுக் கோசங்களைக் கேட்டு ஒரு தலைமுறையே அழிந்து விட்டது. அடுத்த தலைமுறையாவது அறிவுத்திறன் என்ற ஆயுதத்தை உபயோகித்து தம்மை ஏய்த்து பிழைக்கும் சுயநலமிகளை இனங்கண்டு தம்மை காத்துக் கொள்ளட்டும். சாந்தன்களை உருவாக்கி பலி கொடுத்து வீரவணக்கம் செலுத்துவது தேசியம் அல்ல.