Everything posted by island
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
முடிந்தால் நான் இந்த திரியில் கூறிய விடயங்களை வாசித்து அந்த தகவல்களில்ல தவறு இருந்தால் அதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். அது உங்களால் முடியாது என்பதால் வேறு வீண் கேள்விகளை கேட்டு திசை திருப்ப பார்கின்றீர்கள். விவாதம் என்பது ஒருவர் கூறும் விடயங்களை ஆதாரத்துடன் மறுப்பது. முதலில் அதை செய்துவிட்டு மற்ற வியங்களை பேசலாம்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எனக்கு அங்கு வாக்கு இல்லை. அப்படியே நான் இந்திய குடிமகனாக இருந்து திமுகவுக்கோ, அதிமுக வுக்கோ, காங்கிரஸுக்கோ போடுவது எனது பிரச்சனை. உங்க பிரச்சனை என்ன? நீங்க உங்கள் நாட்டில் என்னதை புடுங்கினீங்க தமிழ் நாட்டுக்கு பாடம் எடுக்க?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கத்தப்பு, இந்த நான்கு பேரும் ஈழப்போராட்டத்துக்கு செய்ததை விட அதிகமாகவே போராளிகளுக்கு உளப்பூர்வமாக பல மறைமுக உதவிகளை புரிந்த கோவை ராமகிருஷன்ன், குளத்தூர் மணி உட்பட பலர் உள்ளார்கள். அவர்களை துரோகிகள் என று சீமான் வசைபாடினார். யாரெல்லாம் ஈழப்போராட்டத்திற்கு உளப்பூர்வமாக உதவி செய்தார்கள் என்பதெல்லாம் நாம் தமிழருக்கு முக்கியமில்லை. தமது அரசியலுக்கு எது முக்கியமோ அது மட்டும் தான் மற்றய அரசியல்க்கட்சிகளைப் போல நாம் தமிழர் என்ற கட்சிக்கும் முக்கியம். இவர்கள் கூறும், நாம் மாற்றத்திற்கானவர்கள் புரட்சியளர்கள் என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற இவர்கள் செய்யும் இவர்களின் பாசாங்குத்தனம் புருடா.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்த காணொளியில் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஊழல் ராணி சின்னம்மா முதல்வராக வரவில்லை, என்று சீமான் கவலைப்படுகிறார். அந்த கவலையால் தான் தண்டனை பெற்று திரும்பி வந்த பின்னர், அவரின் அரசியலை தொடர உதவி செய்ய முன்வந்தார். சின்னம்மா ஆட்சிக்கு வந்திருந்தால் ஊழல் பணத்தில் சற்று பங்கு பெற்றிருக்கலாம் என்று சீமான் ஆசைப்பட்டிருப்பார். அது நடக்கவில்லை என்ற கவலை அவருக்கு.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மீண்டும் முதல் நீங்களே படத்துடன் கூறிய விடயத்துக்கான எனது கேள்விக்கு பதில் கூறாமலே முன்னரைப் போல் Skip பண்ணி அடுத்த விடயத்திற்குத் தாவியுள்ளீர்கள்.😂 இருந்தாலும் பதில் கூறுகிறேன் தேர்தல் அரசியல்வாதிகள் கொள்கைகளில் சறுக்குவது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நடப்பது தான். அந்த வகையில் கருணாநிதியும் தேர்தல் அரசியல்வாதி என்ற ரீதியில் பல வண்ட வாளங்களை கொண்டிருப்பார் என்றே நினைக்கிறேன். கருணாநிதி என்ற தேர்தல் அரசியல்வாதியின் அடுத்த Updated version ஆன சீமானும் மிகக்குறுகிய காலத்திலேயே பல வண்டவாளங்கள் கொண்ட சுயநல அரசியல்வாதிதான். (Updated Version எப்போதும் முன்னதை விட வீரியமாக இருக்கும் என்பதைக் கவனதில் கொள்க)
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அதை தான் கோசானும் கூறினார் சீமானும் மற்றைய தமிழக கட்சிகள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அந்த ஊறிய மட்டைகளில் சீமான் புனிதமானவர் என்று உங்களைப் போன்றவர்கள கூறுவது தவறு என்று கூறுகிறோம். தமிழ் நாட்டில் உள்ள மற்றய அரசியல்க் கட்சிகளில் உள்ளவர்கள் போலவே சீமானும் கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதி தான்.
-
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?
@goshan_che 1921 ம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வயதுக்கு உட்பட்ட விதவைப் பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தார்கள் என்ற செய்தி வாசித்தேன். 25 வயதுக்கு குறைந்த விதவைகள் தொகை பல லட்சமாம். இது தொடர்பாக அறிந்தீர்களா?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஊழலை எதிர்ப்பதாக முழங்கி தம்பிகளின் கைதட்டுக்களைப் பெற்றுவிட்டு பின்னர் ஊழல் ராணி ஊழலுக்காக சிறை சென்று வந்த சசிகலாவை சந்தித்து சித்தப்பா எடப்பாடியுடன் தூது போய் அந்த ஊழல் ராணி சசிகலாவின் அரசியல் வாழ்ககைக்கு உதவ முன்வந்ததுடன் அந்த ஊழல் ராணியுடன் குழைந்து குழைந்து பேசினார் இந்த சீமான். ஆங்கிலம் கலந்து பேசினால் பச்சை மட்டையால் அடித்து முதுகுத் தோலை உரிப்பேன் என்றவர் இந்த தேர்தலில் தமிழே வாசிக்க தெரியாதவருக்கு சீட்டு கொடுத்தார். பல வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றுகிறார்கள். தடுப்பூசிகள் காப்பிரேட் வியாபாரம் என்று கூறி தடுப்பூசிகளுக்கு எதிராக பேசிவிட்டு தனது மகன் மாவீரனுக்கு அத்தனை தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு அது தொடர்பாக சேய்தியாளர் கேள்விக்கு, எனது தம்பிகள் இதில் நீங்கள் தலையிடவேண்டாம் என்று கூறுவதாக உருட்டுனார். இப்படி அண்ணனின் உருட்டுகளை தொடர்ந்து பேசிக்கொண்டே போகலாம்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கருணாநிதி தனிப்பட முறையில் யாராவது சாமி கும்பிடுவதை தடுத்தாரா, திமுக வின் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கையா என்ற எமது விவாதத்தை முடித்து விட்டு அடுத்த விடயத்துக்கு தாவுவது நல்லது என்று நினைக்கிறேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
குமாரசாமி, கருணாநிதி சாமி கும்பிடவேண்டாம் என்று எவரையும் தனிப்பட்ட முறையில் தடுத்ததாக எந்த தகவலும் இல்லை. அப்படி தனிப்பட முறையில் யாரையும் தடுத்த ஆதாரம் இருந்தால் இணைக்கவும். தனிப்பட்ட முறையில் யாரையும் தடுக்காத போது குடும்ப உறுப்பினரைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் தொடர்பான திமுக வின் கொள்கை அது உருவானபோது அண்ணாவினால் முன் மொழியப்பட்ட “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதாகும். திமுகவில் கடவுள் மறுப்பாளர களும. உள்ளார கள், தினமும. கடவுளை வழிபடும் கடவுள் நம்பிக்கையாளரும் உள்ளார்கள். இது வெளிப்படையான உண்மை. இதை அறியவும் சாதாரண பத்திரிகை வாசிக்கும் சாதாரண மனிதனாக இருந்தால் போதும்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் கூறியது அன்றாடம் நடை பெற்ற உண்மைத்தகவல்கள் பற்றியது. அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை தெரிந்து கொள்ள அன்றாட பத்திரிகை செய்திகளை வாசிப்பது போதும். அரசியலைக் கரைத்து குடிக்க தேவையில்லை.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணன் பேசும் போது, ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறினார். வேண்டுமென்றால் அந்தக் காணொளியைக்கூட இங்கு இணைக்கலாம். தற்போதைய 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றிய காணொளியும் பார்த்தேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நான் கூறிய விடயங்களை கூற தமிழக அரசியலை கரைச்சுக் குடிக்கவோ அநாதேய உதவாக்கரைகளின் யூருயுப் உளரல்களை கேட்க வேண்டிய அவசியமோ இல்லை. அன்றாடம் பத்திரிகைச் செய்திகளை வாசித்தறியும் சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். நான் எஊறிய எந்த தகவலும் பொய்யானவை அல்ல.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கருணாநிதியை விடுங்கள் சீமான் என்ற சுயநல அரசியல்வாதிக்காக நீங்கள் வன்மத்துடன் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் அன்று 1982 ல் மிகத் தீவிரமாக பிரபாகரனை ஶ்ரீலங்கா அரசிடம் ஒப்படைக்க விடாமல் காப்பாற்ற தீவிரமாக போராடியதை உண்மையான நேர்மையான ஈழத்தமிழர்கள் மறக்க முடியாது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
பையனுக்கு சொல்லவில்லை. சீமானும் நாம் தமிழர் கும்பலும் பரப்பும் பொய்த்தகவல்களை நம்புபவர்களும் அவை பொய்கள் என்பதை தெரிந்தும் பொய்களை பரப்புபவர்களும் உள்ளார்கள் என்பதால், ஆதாரபூர்வமான வரலாற்று சம்பவங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என று நினைக்கிறேன். நான் கூறிய தகவல்களை இங்குள்ளவர்கள. கள்ள மௌனத்துடன் கடந்து செல்லலாமேயொழிய அதை எவராலும் மறுக்க முடியாது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1982 ல் அந்த புழுவும் சேர்ந்து தான் பிரபாகரனை ஶ்ரீலங்கா அரசிடம் கையளிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது. 😂
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கருணாநிதி வரமுடியாமல் போனது 2011 ல் மட்டுமல்ல 1989/1990 ல் ஆட்சியில் இருந்த போது அந்த செல்வாக்கில் புலிகளைத் தமிழகத்தில் தாராளமாக நடமாட விட்ட குற்றத்திற்காக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் (ராஜீவ் கொலையின் பின்னர்) 1991 ல்நடந்த தேர்தலில் கருணாநிதியுடன் இன்னொருவரைத் தவிர அனைவரையும் படுதோல்வியுறச்செய்து ராஜீவ் கொலையாளிகளுக்கு உதவியதாக கருதிக் கொண்டு கருணாநிதிக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் தண்டனை வழங்கினர். கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் படு மோசமான தோல்வி அது தான். அதற்கு காரணம் ராஜீவ் கொலை. அதனுடன் ஒப்பிட்டால் 2011 ல் பெற்ற தோல்வி சாதாரணமானது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா? நீங்கள் உங்கள் நாட்டுப் பிரச்சனைக்கு போராடியது உங்கள் பிரச்சனை. அடுத்த நாட்டவரான அவர்கள் உதவினார்கள். தடா பொடா போன்ற கொடிய சட்டங்களுக்கு மத்தியிலும் போராடினார்கள். உங்களுக்கு உதவ வந்ததால் அவர்களில் சிலரும் ராஜீவ் கொலை வழக்கில் தேவையற்று சிக்கினார்கள். அந்த நன்றியை இவ்வளவு எளிதாக உங்கள் சீமான் நாம் தமிழர் என்ற சுய நல கள்ளக் கும்பலுக்காக மறப்பது அழகல்ல. நீங்கள் கூறிய இந்த திராவிட கும்பல் அன்று தடுத்திரா விட்டால் 1982 இலேயே இந்திய அரசு பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைத்தருக்கும். உங்கள் சீமானுக்கு அரசியலுக்கு கண்டென்டே கிடைத்திருக்காது.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அதெப்படி தள்ளி விட முடியும். நீங்கள் ஆயிரம் தரவுகளை ஆதாரபூர்வமாக திரட்டினாலும் ஒரு எளிய தமிழ்பிள்ளையில் Fake முகநூல் பதிவுக்கு அது ஈடாகுமா? 😂
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இது தவறான தகவல். நீங்கள் கூறிய முவரில் வைகோ தான் முதலிடத்தில் இருக்கிறார். விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று தன்மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்ட நிலையிலும் துணிச்சலாக தெரிவித்தவர் வைகோ. (அதற்காக அவரது அரசியலை நான் ஆதரிக்கவில்லை) புலிகளை ஆதரித்து ஐரோப்பிய நாடுகளில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்வேன் என்று ஜெயலலிதா கூறிய பின்னரும் துணிச்சலாக குறித்த திகதியில் நாடு திரும்பி கைதானவர் வைகோ. அதற்கு அடுத்து திருமாவளவன். அதற்கடுத்ததாகவே ராம்தாஸ் வருவார். ராம் தாஸை விட சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷன்ன் என்று பல திராவிட இயக்கத்தினர் புலிகளுக்காக சிறை சென்றவர்கள். எல்லோரையும் தவிர்ததுவிட்டு ராம் தாஸை மட்டும் தூக்கிப் பிடிப்பது ஏன்?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மருத்துவத்தில் புலமை பெற்ற நீங்கள் வரலாறு, சமூகவியல், பொருளாதாரம் என்று பல விடயங்களில் ஆழ்ந்து சிந் திக்கும் படியான கருத்துக்களை வாசகர்களுக்கு புரியும்படி உங்கள் அறிவுத்தேடலைக் காட்டுவதுடன் அதுவே யாழ் இணையத்தின் பலமும. கூட. யாழ் இணையம் வெறும் சமூக ஊடக குப்பைகளை இணைக்கும் குப்பைத் தொட்டியாக மாறுவதை தடுக்கும் உங்களைப் போன்ற கருத்தாளர்களின் பங்களிப்புக்கு நன்றிகள்.
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன, உண்மைகளும் இருந்தன. ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த பல நூல்களையும் அந்த கால பத்திரிகை செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உறவே, இப்படியே போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல் அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து சில அறிவுறுத்தல்களை உரிமையான கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து. கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சும்மா இருந்து இழுபட்ட திரி @goshan_che வந்ததும் அதிருது. விவசாயி சின்னத்தை விட கோஷானுக்கு அதிக வலு உள்ளது. 💪 பேசாமல் சீமான் கோஷானை தனது கட்சியில் சேர்ததால் கொஞ்சமாவது தேறலாம் போல இருக்கு.