Everything posted by island
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
தமிழர் பிரச்சனையைத் தீர்கக என்று மொட்டையாக சொல்லாமல் “ஒரு நாடு இரு தேசம்” என்ற தமது கோஷத்தை அமெரிக்க தூதுவரிடம் எடுத்து சொல்லியிருக்கலாம். அது மக்களை ஏமாற்ற போடும் அந்த வெற்றுக் கோஷத்தை இங்கு சொல்ல எனக்கு என்ன விசரா என்று நினைத்திருப்பார்.
-
யாழ்ப்பாணத்தில் தமன்னா, யோகி பாபு பங்கேற்ற நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் - ரசிகர்கள் ரகளை ஏன்?
நடந்த விடயத்தை ஒரு பாடமாக எடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது கவனம் தேவை. சிறந்த முன்னேற்பாடுகள் அதிகளவில் கூட்டம் கூடும் போது கூட்டத்தை கட்டுப்படுத்தும் தந்திரோயாபாயத்தில் தேர்ச்சி பெற்ற ஒருங்கிணைப்பாளரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை கொடுக்க வேண்டும் நிகழ்சிக்கான பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு மிக அவசியம். ஐரோப்பிய நாடுகளில் Event management துறைக்கு ஆட்களை அனுப்பி பயிற்றுவிக்கலாம். இல்லையெனில் கொழும்பு, மட்டக்களப்பு போன இடங்களில் இவ்வாறான பிரமாண்டமான மகிழ்ச்யாசியான நிகழ்ச்சிகளை நடத்தினால் மக்கள் அங்கு மகிழ்சசியாக நிகழ்ச்சியை ரசித்து செல்வர். யாழ்ப்பாணம் இதற்கு சரிப்பட்டு வரமாட்டாது.😂
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
தமிழர் அரசியலை முள்ளி வாய்காலுக்கு கொண்டு சென்று அடித்து துவைத்து உயிருக்கு ஆபத்தான ICU நோயாளர் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்படி தினாவெட்டாக கேள்வி கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அந்த நோயாளியை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டுவரவே இன்னும் இரண்டு தலைமுறை ஆகும். அதுவரை ( நீங்களும் நானும் வாழும்வரை) இப்படி புலம்பி ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அது சரி காவாலிகளுக்கு வக்காலத்து வாங்க புறப்பட்ட நீங்கள் அதை மடை மாற்ற அரசியல்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அப்படியானால் 1980 ல் ஜேசுதாசின் நிகழ்வில் கவர்சசி இல்லையே. அங்கும் இதை போல காவாலித்தனம் நடைபெற்றது ஏன்?
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
சரி. அப்படியே கம்பு சுத்திக்கொண்டு நின்ற இடத்திலேயே நிற்கும் உரிமை உங்களுக்கு உண்டு.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஆனால் இங்கு பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுத்து கலவரத்ததில் ஈடுபட்டவர்களைத் தாக்கி இருந்தால் சிங்களப் பொலிசாரின் அக்கிரமம் என்று கம்பு சுத்தியிருப்பீர்கள்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஒரு சமூகமக வாழ வேண்டும. என்றால் சட்டத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஆயுத்த்தாங்கிய இராணுவத்தால் அல்லது அமைப்புகளால் மட்டுமே கட்டுப்படுத்த வேண்டிய கூட்டம் என்று ஆகிவிடும். 1979 காலப்பகுதியில் என்று நினைக்கிறேன் திரு ஜேசுதாசின் கச்சேரி இதே முற்ற வெளியில. நடை பெற்ற போதும. தடுப்பு சுவர்களை உடைத்துக. கொண்டு உள்ள நுளைய முற்பட்ட கூட்டத்துக்கும் பொலிஸாருக்கும் இடையில் பாரிய ரகளை ஏற்பட்டது. ஜேசுதாஸ் யாழ்பாண மக்கள் மீது கோபம் கொண்டிருந்தார். இன்று பல தசாப்தங்களுக்கு பின்பும் திருந்த வில்லை. ஒரு தேசமாக வாழத் தகுதி அற்றவர்கள்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழில் நடந்த கலவரங்களால் நிகழ்சசி இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. கலவரத்தை அடக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனராம்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஆமாம், ஆறு திருமுகன் வேலிகளை உயர்த்திக்கட்டி பெண் பிள்ளைகளை பாதுகாக்கும் யாழ்பாணக் கலாச்சாரம் இப்போது இல்லை என்றும. மீண்டும் அது வேண்டும் என்றும் கவலைப்பட்டு பதிவிட்டிருக்கிறாராம்.
-
சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
இப்போது ரணிலை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார்.
-
சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
ரணிலையும் தன்னைப்போல் சங்கியாக்கிய மகிழ்ச்சி போல.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
கிழித்து தொங்க விட்டதை அந்த பெண்மணி போகும் போது எடுத்து சென்றாரா? ஏனென்றால் நடு ரோட்டில் கிழித்து தொங்க விட்டால் வாகனங்கள் போகமுடியாதே!
-
ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்
நீங்கள் சொன்னதைத் தான் கூறினேன். இதை எனக்கு கற்பித்த ஆசிரியரான உங்களுக்கு நன்றி.
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது நல்ல திரைப்படங்களை மகிழ்சசியாக பார்தது ரசிக்க விரும்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி. திரைப்படங்களில் ஹீரோ என்றால் நல்லவனாக இருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி Ganster Rowdy யாகவும் விளையாட்டாக சற்று பொறுக்கித்தனம் பண்ணுவதாகவும் இருப்பதே உண்மையான ஹீரோ என்று இளம் சமுதாயத்தை நினைக்க வைத்த புரட்சியை செய்த விஜய் ஒரு புரட்சி ஹீரோ தான். அரசியலில் ஆரம்ப கால விஜய்யாக மாற்றம் பெற்று வந்தால் வந்தால் நல்லது.
-
கோயிலை கட்டுவது எதனாலே?
அது மதங்களின் Advertising department இன் திறமை.
-
ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்
கருணாநிதியை மட்டுமல்ல உலகில் யாரை எல்லாம் இதற்காக குற்றம் சாட்ட முடியுமோ அவர்களை எல்லாம் இழுத்து குற்றம் சாட்டுவார்கள். அப்படிக்குற்றம் சாட்டும் போது மற்றய விரல்கள் தம்மை குற்றம் சாட்டுவதை மறந்துவிடுவார்கள்.
-
சாந்தனை நாட்டுக்குக் கொண்டு வரப்போவது யார்? நிலாந்தன்.
ஓரிரு முறை இப்படி எழுத்து பிழை விட்டு எழுதினால் அதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தையே உண்மை என்று நம்பி அதைத் தொடருவதுடன் அடுத்த தலைமுறைக்கும் அதையே கிளிப்பிள்ளை மாதிரி கூறப்பழக்கும் வகையிலேயே தமிழ் மக்களின் அரசியல் பொது அறிவு தமிழர் அரசியலில் தமிழ் அரசியலைப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் எல்லாத் தலைமைகளாலும் கட்டி வளர்க்கப்படுகிறது.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
நீங்கள் அப்படி உணர்வது உங்கள் பார்வை. ஆனால் அப்படி தமிழர்கள் தமக்குள் மோத யாரோ அடுத்தவர் செயல்படத் தேவையில்லை. அரசியலில் சகிப்பு தன்மை அறவே இல்லாமல் போராடப் போன நோக்கத்தையே மறந்து தமக்குள்ளேயே ஆளையாள் போட்டுத்தள்ளிய, கும்பல்கும்பலாக கொலை செய்த அரசியல் பாரம்பரியத்தை எமக்குள்ளேயே உருவாக்கிய வரலாற்றை கொண்ட தமிழர்களை மோத விட வெளியார் செயற்படத் தேவையில்லை என்பது எனது கருத்து.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
உண்மைதான் கந்தையா அது 30 அண்டுகளுக்கு முதல் தமிழர்களால் தமிழர்களின் நூலகத்தின் மீது புரியப்பட்ட கடைந்தெடுத்த காடைத்தனம். உங்கள் கூற்று சரியானதே.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
ஈழத் தமிழ் அமைப்புகளுக்குள் தமிழர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி தெரியாமல் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து இப்போது தான் வந்துள்ளீர்கள் போல் இருக்கிறது. 😂 https://noolaham.net/project/55/5493/5493.pdf
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
இந்த தாக்குதல் என்பதை தமிழ் சமூகத்தில் ஒரு விதி விலக்கு என்று கூறுகிறார். இதற்கு முன் தமிழ் சமூகத்தில் இப்படி தாக்குவது இல்லையாம். கடந்த 25 வருடங்ககளில் தமிழ் சமூகத்தில் ஒரு தமிழ் அமைப்பு மீது தாக்குதல் நடந்தது இதுவே முதல் தடவை என்று சிரிக்காமல் கூறியிருப்பதில் இருந்து இவர் தமிழ் தேசியவாதியாக இருப்பதற்கான முழுத் தகுதியை பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். 😂
-
32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
இவர் இறக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. https://m.dinamalar.com/detail-amp.php?id=3541931
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
அந்த முக்கிய விடயங்கள் என்பவை காடைத்தனம் வன்முறை, அடாத்து இன்னும் பல.
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
இதுவே இந்த தமிழ் அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இவ்வாறு ஒரு சிக்கலில் மாட்டியிருந்தால் நிதானமாக யாரைத் தொடர்பு கொண்டால் விஷயம் விரைவில் நடக்கும் என்பதை முறைப்படி விசாரித்து இலங்கை வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு தமது அரசியல் செல்வாக்கு, தனிப்பட்ட நட்புகள் ஆகியவற்றை பிரயோகித்து காதும் காதும் வைத்தமாதிரி விஷயத்தை கெட்டித்தனமாக முடித்திருப்பார்கள். பொது விஷயம் என்றால் பொங்குவதும் தங்கள் தனிப்பட்ட விடயம் என்றால் பம்முவதும் குழைந்து குழைந்து பேசி தமது அலுவலை முடிப்பதும் தமிழ் தேசிய அரசியலாளர்களுக்கு கைவந்த கலை.
-
‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
அப்படியே முஸ்லீம் நாடுகளில் இருந்து வரும் பெற்றோலியத்தை இந்துக்கள் உபயோகிக்க்கூடாது என்றும் கிறிஸ்தவர் கண்டுபிடித்த மின்சாரம் இந்து கோவில்களுக்குள் வரக்கூடாது என்றும் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய பாராளுமன்ற ஆட்சிமுறை இந்தியாவில் செல்லாது என்றும் ஒரு கோர்ட் உத்தரவைப் போட்டுவிடவேண்டியது தானே.