Everything posted by island
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாசை அழிப்பதோடு நிறுத்தி விடாது பலஸதீன மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் பாரிய அழுத்தத்தை பலஸ்தனம் மற்றும் இஸ்ரேல் மீது செலுத்த வேண்டும். அதுதான் நீதியானது. இன்றையநிலை அதற்கு சந்தர்பபத்தை வழங்கி உள்ளதாக உணர்கிறேன். 2009 ல் இலங்கையில் யுத்த முடிவிலாவது ஓரு அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை வல்லரசு நாடுகள் இலங்கை மீது செலுத்தி இருந்தால் இன்றய நிலையே வேறு. ஆகவே ஹமாஸை அழிப்பதென்பது பலஸ்தீன மக்களின் அரசியல் தீர்வை புறக்கணிப்பதாக இருந்தால் அது புலிகளை அழித்ததுவிட்டு தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை நிராகரித்ததை ஒத்த நிலையாகும். 2002 ல் பேச்சுவார்ததை தொடங்கிய போது இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் சமமான பாரிய அழுத்தத்தை பிரயோகித்து சிங்கள தரப்பில் இருந்த, சிங்கள பெளத்த மேலாண்மையை வலியுறுத்திய தீவிரவாதிகளையும் தமிழர் தரப்பில் இருந்த, தமிழீழம் மட்டுமே தீர்வு அதற்காக இறுதிவரை போராடுவோம் என்ற தீவிரத்தன்மையுடன் செயற்பட்ட பிரிவினரையும் கட்டுக்குள் கொண்டுவந்து ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைக்கான சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி முன்னேறி இருக்கலாம். அப்படி நடந்திருந்தால் தமிழ் மக்கள் இன்றிருப்பதை விட அரசியல் ரீதியில் ஒரு பலமான நிலையில் இருந்திருப்பர். அதே வேளை ஹமாஸ் போன்ற அதி தீவிர ஆயுத போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை வைத்து சரவதேச அரசியலை புறக்கணிக்கும் இயக்கங்களை ஆதரிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பனது என்பதை பாலஸ்தீனிய மக்களும் உணரவேண்டும். இதற்காக உலக நாடுகளில் ஏற்கனவே உள்ள உதாரணங்களை பாரஸ்தீனத்தின் விடுதலைக்காக போராடும், மதச்சார்பற்று சிந்திக்கும் பிரிவினர் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். ஆனால் வெறுமனே வெறுப்பும் யுத்த வெறியுமே இரு பகுதியினரிடையேயும் உள்ளது என்பது கவலைக்கிடமான நிலமையாக உள்ளது. யுத்தத்தையும் இராணுவ வெற்றியையும் இன்றும் கொண்டாடும், அதுவே வீர வரலாறு என்று சிந்திக்கும், அதை ரசிக்கும் தரப்புக்கள் இன்றும் கோலோச்சும் நிலையானது பாரிய மனித அழிவை ஏற்படுத்தும் என்பதற்கு கண்முன்னே பல உதாரணங்கள் உண்டு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சரியான கணிப்பீடு. இவ்வாறான காரணங்கள் அடிப்படைவாதம், தீவிர தேசியவாதங்கள் வளர்ந்து வருவதற்கான காரணிகள். ஒரு இனம் அல்லது மதக்குழுவினர் இப்படி தான் இருக்க வேண்டும. என்பதை அடிப்படைவாதிகள் தீர்மானித்து அதை ஒட்டு மொத்த மக்கள் மீதும் திணிக்கும் நடைமுறை. பெரும்பாலான மக்களை அதை மனசார விரும்பாமல் விட்டாலும் காலப்போக்கில் இந்த கும்பல் மனநிலையின் பாதிப்புக்குள்ளாகி அதன் பார் ஈர்க்கப்படுவர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
விரிவான தகவல்களுக்கு நன்றி. எனது கருத்து தற்போதைய வரும் செய்திகளை வைத்த ஒரு பார்வை மட்டுமே.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இணைப்புக்கு நன்றி கோஷான். இதிலிருந்து தெரிவது காஸாவில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறி முதற்கட்டமாக சுயாட்சி கொண்ட பாலஸ்தீனம் உருவாக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட சமாதான இடைவெளியை ஹமாஸ் துஷபியோகம் செய்து யுத்த தயாரிப்புகளில் மாத்திரம் கவனம் செலுத்தி இருக்கிறது என்று விளங்கிக்கொள்ளலாம். தனது சொந்த மக்களையே பலியாடுகளாக்கி தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஹமாஸ் இயக்கம் முற்பட்டுள்ளது. சமாதான இடைவெளியை பயன் படுத்தி தனது பிரதேசங்களை அபிவிருத்திக்கும் மேலும் சமாதான பேச்சுக்களை நடத்தி பாலஸதீனத்தில் அரசியல் ஸதிரத்தன்மையை ஏற்படுத்த பயன் படுத்தாமல் தொடர்ந்து யுத்த தயாரிப்புகளிலும் இஸ்ரேலை சீண்டி யுத்தத்தை தொடர்வதுமே ஹமாஸின் நோக்கமாக இருந்துள்ளது. மக்கள் அழிவுகளை காரணம் காட்டி உலக அனுதாபத்தை திரட்டி தமது நோக்கத்தை அடையலாம் என்பதே ஹமாசின் திட்டமாக இருந்துள்ளது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த காணொலியில் நிராஜ் டேவிட கூறுவது போல் பல நூற்று கணக்கான கிலோ மீற்றர் தூரத்துக்கு அதி நவீன நில கீழ் சுரங்க பாதைகளை ஹமாஸ் அமைத்துள்ளதாக கூறப்படுவது நம்பகமானதா? இவற்றை அமைப்பதற்கு பெருந்தொகை பணம் மாத்திரமல்ல பாரிய தொழில் நுட்பமும் அவசியம். இவைகளில் சில எகிப்துவரை செல்வதகவும் கூறப்படுகிறது. இது ஊதிப பெருப்பிக்கப்பட்ட உருட்டு செய்தியா? என்னால் இதை நம்ப முடியவில்லை. @goshan_che நீங்கள் அதிகளவான செய்திகளை வாசிப்பவர் என்ற ரீதியில் இது சாத்தியம் என்று உணர்கின்றீர்களா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதில என்ன ஐயா நையாண்டி. பாடலின் மெட்டை சொன்னேன். உண்மைதானே.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சரியுங்க அப்ப inspiration என்றே சொல்லுவோம். 😀
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கோஷான் இணைப்புக்கு நன்றி. இந்த படத்தில் வந்த ஒரு பாடலின் மெட்டை அப்படியே ஈயடிச்சான் கொப்பியடித்து “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு” என்ற பாடலை இயற்றி உள்ளார்கள் எம்மவர்கள். 😂 படத்தின் நடுவிலும் இறுதியிலுமாக இரு முறை அந்த பாடல் வருகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
என்ன இருந்தாலும் இப்படி நேரடியாக உண்மையை எழுதி இப்படி எம்மை தோலுரிப்பது எங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. நீங்க ரொம்ப மோசம் சார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலியர்களின் சரித்திரத்தில் பயணக்கைதிகளை மீட்பது முதல் முறையல்ல. உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய “ஒப்பரேஷன் தண்டபோல்ட்” 1976 ல் செய்து காட்டினார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தமிழர்கள் எப்படி ஆதரவளிப்பார்கள். அவர்களின் ஆதரவால் பாலஸ்தீனத்துக்கோ இஸ்ரேலுக்கோ என்ன பயன்? வெறும் கையால் முழம் போட முடியுமா? இங்கு நாம் யாழ் இணையத்தில் எழுதுவதையா குறிப்பிடுகின்றீர்கள்?
- IMG_1034.jpeg
- IMG_1035.jpeg
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வெள்ளிடை மலையாக தெளிவாக விளங்கும் இந்த உண்மையை மட்டும் எத்தனை தரம் எடுத்து சொன்னாலும் ஏனோ இங்குள்ள புட்டினின் காதலர்கள் காதில் வாங்க பிடிவாதமாக மறுப்பதேன்?
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
கப்பல் (Ferry) சேவையா? படகு சேவையா? வாகனங்கள் கொண்டு செல்லலாமா?
-
திரும்பும் வரலாறு!
மிக்க நன்றி @Justin தங்கள் வேலைப்பளுவின் மத்தியிலும் சிரமமெடுத்து இவ்வாறான பெறுமதியான வரலாற்று தொடரை தந்தமைக்கு. தங்கள் துறையான மருத்துவ துறையை தாண்டி தங்களின் சமுக, பொருளாதார, வரலாற்று அறிவும் அக்கறையும் வியக்க வைக்கிறது. யாழ் இணையத்தை அறிவியல் சஞ்சிகையாக உருவாக்க இக்கட்டுரை சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது.
-
50 வருடங்களின் பின்னர் நிலவுக்கு பயணிக்கவுள்ள விண்வௌி வீரர்கள்
1969, ஜூலை 20 ம் திகதி ஏற்கனவே கால் பதித்து விட்டது அமெரிக்க விண்கலம் அப்பலோ11.
-
இந்த இசையை கேட்டுள்ளீர்களா?
இணைப்புக்கு நன்றி. அமைதியான இசை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தமது கருத்துக்களை நேர்மையுடன் ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கு இதனை உதவியாக கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
- திரும்பும் வரலாறு!
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
ஏமாறி உள்ளதை பறிகொடுத்த பின்பு ஏமாந்த சோணகிரிகளாக வடை போச்சே என்ற கடுப்பில் புலம்புவதில் எந்த பயனும் இல்லை. உரிய வேளையில் தந்திரத்துடன் அதை எதிர் கொண்டிருக்க வேண்டும். இக்கதையில் நரி ஏமாற்ற முற்படுகிறது என்பதை தெரிந்த காகத்திற்கு அதை எப்படி எதிர் கொண்டு நரியை தந்திரத்துடன் எதிர்கொண்டு தன்னிடம் உள்ளதை தக்க வைப்பது என்று தெரியாமல், கோபத்தில் உணர்சிவசபபட்டு இருந்ததையும் எறிகிறேன் என்று நினைத்து இழந்து விட்டு சென்ற காகத்தின் நிலை சோகம். இந்த காகத்தின் மீது பரிதாபப்பட மட்டுமே முடியும் இக்கதையை இப்படியும் விளங்கி கொள்ளலாம். @goshan_che கோபிக்கக்கூடாது உங்கள் symbolic meaning கதைக்கு தமாஷாக வேறு அர்ததம் கொடுத்து பொழிப்புரை எழுதியதற்கு.
- திரும்பும் வரலாறு!
-
நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023
நானும் பலவற்றை சிந்தித்து பார்ததேன். என்ன மாற்றம் நடைபெறும் என்று. கடைசியில் நடக்கப்போவது இது தானே..😂
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
அனைவருக்கும் வணக்கம்