Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. ஓணாண்டியின் கவிதையினை இப்போதுதான் வாசித்தேன், இப்போது புரிகிறது உங்கள் கவிதை அந்த கவிதைக்கு பதிலென ஆனால் புலம்பெயர்வு குறியீடு கவிதையின் கருப்பொருளாக அடிமைத்தனம், சமூககட்டுப்பாடு என்பவற்றை குறிப்பால் உணர்தியமையால் இது எமது சமூகத்திற்கான கவிதையாக நான் தவறாக பொருள்விளங்கிவிட்டேன். ஓணாண்டியின் கவிதை ஒரு படி மேல்,
  2. நான் வாசித்தவரையில் எம்மவர்களின் கவிதைகளில் இதுவே மிக சிறந்த கவிதை(நான் கவிதை வாசிப்பது குறைவு)😁, எனக்கு ஒரு சந்தேகம்! கோசான் இது உங்களின் சொந்த கவிதையா?😁 இந்த கொள்கை விளக்க பகுதி உண்மையில் தேவையற்ற ஒன்று என கருதுகிறேன் (வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்). எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக உங்களின் இந்த கவிதை உள்ளது, இவ்வாறு எழுதுவதனை தொடருங்கள்.
  3. குல்டீப் மணிக்கட்டினை மட்டும் பயன்படுத்தி பந்து வீசுபவர், வருண் விரல் மற்றும் மணிக்கட்டினை பயன்படுத்தி பந்து வீசுபவர், அதனால் அவரது பந்தினை கணிப்பது கடினம் என்பதால் வருணை மிஸ்ரி ஸ்பின்னர் என அழைக்கிறார்கள். குல்டீப் பந்து திரும்பாத (no grip) ஆடுகளத்திலும் பந்தினை திருப்ப கூடியவர், அத்துடன் Drip & bounce அவரது பந்துவீச்சில் காணப்படும், இந்த துபாய் ஆடுகலளத்திற்கு ஏற்ப அவரது பந்து வீச்சு காணப்படுகிறது ஆனாலும் நீங்கள் கூறுவது போல வருணை அனியில் சேர்ப்பது ஓட்டங்களை மட்டுப்படுத்தும். குல்டீபா அல்லது வருணா என வரும்போது மேலோட்டமாக பார்ர்கும் போது குல்டீப் ஒரு தெரிவாக இருந்தாலும் ஆடுகளத்தினை மட்டும் கணக்கில் கொள்ளாமல் எதிரணியினை கணக்கில் எடுப்பார்கள் என்பதால் இந்த தொடரில் சிலவேளை வருணிற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
  4. சுந்தரை தெரிவு செய்ய வாய்ப்பில்லை, ஆனால் எதிரணியில் அதிக இடட்கு கை ஆட்டக்காரர்கள் இருந்தால் ஓரளவு வாய்ப்புள்ளது. பட்டேல் , ஜடேயா, சுந்தர் இந்த மூவரும் விரலால் பந்தை சுழற்றுபவர்கள், ஜடேயாவும், பட்டேலும் பந்தை கிடையாகவும் வேகமாகவும் போடுபவர்கள் அதனால் துபாய் ஆடுகளத்திற்கு இந்த இருவரும் பொருத்தமானவர்கள், சுந்தருக்கு வாய்ப்பு மிக குறைவு.
  5. வாய்ப்பில்லை ராஜா.😁 பங்களாதேசம் போற வழியில இந்தியாவையும் இறக்கிவிட்டிட்டு போகலாம் தானே?😁
  6. ஆப்கானிஸ்தானுக்கான வெற்றி வாய்பு உள்ளது, புதிய பந்தில் (முதல் 10 ஓவர்) அடித்தாடினால் அப்கானிஸ்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என கருதுகிறேன், பாகிஸ்தான் போட்டி போலவே மைதான ஈரலிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
  7. கந்தப்பு அமேசன் பிரைமில் ஒளிபரப்புகிறார்கள் என கூறியபோதே எனது பனத்தினை திரும்ப (Withdraw) பெற்றுவிட்டேன். ரிகில்டன் 103 ஓட்டங்களுக்கு துரதிஸ்டமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
  8. தென்னாபிரிக்கா 350 ஓட்டங்களை பெறும், தற்போது 177/2
  9. கிரிக்கட் மட்டுமன்றி அனைத்து வகை போட்டிகளையும் பார்க்கலாம் என நண்பர் கூறினார், தற்போது ஆப்கன் தென்னாபிரிக்க போட்டிகளை பார்த்துக்கொண்டுள்ளேன். நேர்முக வர்ணனை இல்லை (commentators) தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக உள்ள ரிக்கில்டன் சிறப்பாக ஆடுவார் என கூறப்படுகிறது 9 பந்துக்கு 4 ஓட்டங்களை மட்டும் பெற்றுள்ளார்.
  10. கிரிக்கெட் பார்ப்தோடு சரி, சாம்பியன் ரொபி முடிந்தவுடன் வைப்பு செய்த $50 மீள பெற்றுக்கொண்டு கணக்கை மூடி விடவேண்டியதுதான். இங்கு கயோ ஸ்போர்ட்ஸ் எனும் இணையவழி விளையாட்டு சனல் உள்ளது மாதம் தோறும் $25 செலுத்த வேண்டும். இது இலவசம்.
  11. எனது இந்திய நண்பர்கள் கூறினார்கள் bet 365 $5 வைப்பீட்டு செய்துவிட்டு நேர்முக வர்ணனை இன்றி அனைத்து போட்டிகளையும் (கிரிக்கட் மட்டுமன்றி) பார்க்கலாம் என்றார்கள், பதிவு செய்துவிட்டுப்பார்த்தால் குறைந்த பட்ச கட்டணமாக $50 வைப்பீடு செய்யவேண்டும் என வந்தது, $50 வைப்பீடு செய்தாயிற்று போட்டிகள் முடிந்தவுடன் $50 திருப்பி எடுக்கவேண்டும்.
  12. இந்தியணி முன்னால் தமிழ்நாட்டு வீரர் பத்ரிநாத் கில்லிற்கு வழங்கப்படும் வாய்ப்பு பற்றி BGT தொடரில் கேள்வி எழுப்பியிருந்தார், இதுவே ஒரு தமிழ்நாட்டு வீரராக இருந்தால் இவ்வாறான வாய்ப்பு வழங்கப்படுமா என. இந்தியா பங்களாதேச விளையாட்டு பார்க்கவில்லை, ஆனால் மோசமான பங்களாதேச அணியுடனே இவ்வளவு கஸ்ரப்படும் இந்தியணி, பாகிஸ்தான் அணியுடன் நிச்சயமாக தோற்றுவிடும் (நான் இந்தியா தோற்கும் என தெரிவு செய்துள்ளேன்)😁. இந்த ஆடுகளத்தில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவதுதான் சாதகம் என கூறப்படுகிறது, ஆனாலும் இந்தியா இலக்கை துரத்த பிரயத்தனப்பட்டுள்ளது போல தோன்றுகிறது. அண்மையில் 2 கிழமைக்கு முன்னர் இந்த ஆடுகளத்தில் ரி20 போட்டிகள் நடந்தமையால் ஆடுகளம் மெதுவாகி விடும் என அது இந்தியாவிற்கு சாதகம் என இந்தியர்கள் கூறுகிறார்கள், ஆனால் மைதான பராமரிப்பாளர் அவ்வாறு ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சிகளை எடுப்பதாக கூறியிருந்தார்.
  13. ஒரு 4 நாளா உடல்நிலை சரியில்லை, வேலைக்கு போவது குழந்தைகளை பாடசாலைக்கு ஏற்றி இறக்குவது மிகுதி நேரம் நித்திரை கொள்வது என போய்விட்டது, உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு நேரம் முழுவதனையும் நித்திரை கொள்வதில் கழித்ததால், யாழ் இழக்கவேண்டியதாயிற்று.
  14. நானும் நம்பவில்லை அதனால், உறுதிப்படுத்துவதற்காக வருடத்திற்கா? மாதத்திற்கா? என கேட்டேன் அவர் மாதம் என்றார். இந்தியர்கள் என்று இல்லை, இலஙையர்களும் (பெரும்பான்மை இனத்தவர்களும்) அப்ப்டித்தான். நான் குறிப்பிட்ட கண்டி பெண்மணி வீட்டில் வேலைக்கு பலர் இருந்ததாகவும், காரிற்கு சாரதி இருந்ததாகவும், இலங்கை துப்பரவான நாடு, இலவச மருத்துவம் (இங்கு மருத்துக்கு பணம் கொடுக்கவேண்டும்), இலவச கல்வி என பல விடயங்களை கூறினார் (எனக்கே அப்படிப்பட்ட இலங்கை புதிதாக இருந்தது😁) , அவர் டொயோட்டா காரினை curry people car என அழைப்பார். இங்கே வந்து அனைத்து வேலைகளையும் தானே செய்யவேண்டியுள்ளது என கூறி, நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார். பின்னாளில் நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டது, வேலை செய்ய மாட்டார், சில வேளை இலங்கையில் அவ்வாறு வசதியாக இருந்திருப்பாரோ என எண்ணம் வருவதுண்டு (வேலை செய்யாமல் கதைத்துக்கொண்டு (பெருமைகள்) இருப்பார். இவற்றை சீரியசாக நினைத்து விசாரித்தால் நான் தான் முட்டாளாகவேண்டும்.😁
  15. https://breakingdefense.com/2024/11/pentagon-fails-7th-audit-in-a-row-eyes-passing-grade-by-2028/ 824 பில்லியனை(2024) எவ்வாறு செலவழித்தார்கள் என்பதற்கு கணக்கு இல்லை, மேலே உள்ள இணைப்பில் பென்டகனது சொத்து மதிப்பு 4.1 ரில்லியன் அதன் கடன் 4.3 ரில்லியன்(6 ஆம் வகுப்பில் படிப்பிக்கும் ஐந்தொகை - இது வரவும் செலவும் சமனாக இருக்கும்) என குறிப்பிட்டுள்ளது. இது ஒரு தொடர்கதை போல செல்லுகிறது கடந்த 7 ஆண்டுகளாக கணக்காய்வின் சமபடுத்த முடியாமையையின் தொடர்ச்சி இது என நினைக்கிறேன்,
  16. ஒரு காலத்தில் அவுஸ் அணியினரை பார்த்தால் வரும் வெறுப்பு, தற்போது இந்தியணியின் நடவடிக்கையினை பார்த்த பின் அவுஸ்ரேலியா நல்ல அணியாக தெரிகிறது.😁
  17. https://econofact.org/factbrief/has-the-pentagon-failed-its-7th-audit-in-a-row லிங் விடுபட்டு போய் விட்டது மீண்டும் மீண்டும் பென்டகன் கணக்கு கண்ணை கட்டுதாம்.😁 அதனால் ஜெலன்ஸ்கி சொன்னது உண்மையாக இருக்குமோ என ஒரு ஐயம்.
  18. 824 பில்லியனை பென்டகன் கனக்கில் இருந்து எடுக்கலாம், மிகுதி 136 பில்லியன். அமெரிக்காவில் இது எப்படி சாத்தியம்? அண்மையில் ஜெலன்ஸ்கி கூட குற்றம் சாட்டியிருந்தார் தமக்கு வரவேன்டிய பணம் வரவில்லை என.
  19. அவுஸ்ரேலியாவின் இடத்தை இந்திய அணி தட்டிப்பறித்த பின் (மைதானத்தில் கேவலமாக நடப்பது, இந்தியணி மைதானத்திற்கு வெளியிலும் கேவலமாக நடக்கிறது) இந்தியாவினை பிடிப்பதில்லை.
  20. பையன் உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், உணர்ச்சி வசப்படாமல் கருத்தாடுங்கள், அனைவருக்கும் அவர்களது கருத்துரிமை உள்ளது.
  21. இந்தியணி தோற்றால் அவர்களால் தாங்க முடியாது அதே இந்தியணி வென்றால் எங்களால் தாங்கமுடியாது (காதை கடித்து விடுவார்கள்).
  22. எனக்கு இந்தியா நிலமை தெரியவில்லை, சில வேளி மிகைப்படுத்தி கூறியிருப்பார், ஆனால் 3ஆம் உலக நாடுகளில் ஏழைகள் மிக ஏழைகளாகவும் பணக்காரர்கள் அதிக பணம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள், இவ்வாறான ஏற்ற தாழ்வு இந்தியாவில் மிக அதிகம், அவரது நண்பரின் வருமானத்தில் சிறந்த வாழ்க்கை தரத்தினை கொண்டிருக்கலாம்.
  23. பொதுவாக இரஸ்சியா பற்றி கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தினை இறுதியாக ஐரோபிய ஒன்றிய தலைவர்களே தாமே உண்மை என நம்புகின்ற நிலை காணப்படுகிறது, இரஸ்சியாவினால் உக்கிரேனை கூட கைப்பற்ற முடியாது (இரஸ்சியர்கள் வாழாத), அதற்கு காரணம் அவர்களது இராணுவ போரிடும் ஆற்றல் மிக மட்டுப்படுத்தப்பட்டது. தேவையற்ற இராணுவ செலவுகளை அதிகரிப்பதனை விட்டு, ஐரோப்பிய பிராந்தியத்தில் நிலையான அமைதி முயற்சி ஏற்படுத்தி பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இனிமேல் ஒற்றை அல்லது இரட்டை உலக ஒழுங்கு என்பதற்கு வாய்ப்பே இல்லை, நாடுகளின் குழுமங்கள் கொண்ட(Bloc countries) ஒரு பல்துருவ உலக ஒழுங்குதான் நடைமுறை யதார்த்தம் ஆகிவிட்டது, இதற்கு காரணம் உலக சனத்தொகை பரம்பல் மூலம் ஏற்பட்ட வர்த்தக வகிபாகம். ஆனால் தற்போதய நெருக்கடி உலக பொருளாதாரத்தினை கடுமையாக பாதிக்கின்றது, இனிமேல் புதிய சண்டைகளை எதிர்கொள்ள கூடிய பொருளாதார பலம் தற்போது ஒரு நாட்டிற்கும் இல்லை, அதனையும் மீறி யுத்தத்தினை தொடர்ந்தால் இயலாமையின் விளிம்பில் நிற்கும் நாடு அணுகுண்டு என உலக அழிவிற்கு ஆரம்பமாகிவிடும். இந்த போர்களிற்கான தேவை பலவீனமான அரசியல்வாதிகளின் சுயநாலம். சமுக மற்றும் சுகாதார செலவுகள் 36% அளவில் முதல் இடத்தில் இருக்கின்றது, இதனை குறைக்க முடியும், ஆனால் பல உண்மையான இயலாதவர்கள் பாதிப்புள்ளாகுவார்கள். இதனை விட முன்னாள் இராணுவ வீரர்களின் சலுகைகளில் கைவைக்கலாம் 6%, அவர்கள் அதனை உணர்ந்து கொள்வார்கள், நாட்டிற்கு தேவையான முக்கியமான விடயம் என்பதால். ஆனால் அது நீண்டகால அடிப்படையில் பின் விளைவை ஏற்படுத்தலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.