Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. மத்திய கிழக்கில் அரபுலக கூட்டணியின் எண்ணெய் வளத்தினை குறிவைத்து அவர்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கியது போல, ஐரோப்பிய ஒன்றியத்தினை உடைத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உள்ள அச்சுறுத்தலை களைய முனைகிறது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் தம்மை விரிவு படுத்தி (கனடா போன்ற மேற்கு நாடுகளை இணைத்து) பொருளாதார மேம்படுத்தலில் கவனம் செலுத்த வேண்டும். தீராத போர் அவர்களை மேலும் பலவீனமாக்கும், நிரந்தர அமைதியினை உருவாக்கி ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொதுவான பிரச்சினைகளை (பொருளாதார, இராணுவ பிரச்சினைகளை) களைய சரியான தலைமை வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாக பிளவு பட்டுள்ளது, இந்த நிலைக்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சரியான் பிரதிநிதிகள் இல்லாமை, சில காலத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் சார்க் அமைப்பு மாதிரி மாறாமல் இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல பிரிக்ஸ் கூட தற்போதய காலத்திற்கு தேவையான ஒன்று, உலக பொருளாதாரம் மாறி வருகின்ற உலக ஒழுங்கிற்கேற்ப தம்மை கட்டமைக்க வேண்டும்,
  2. இதெல்லாம் கேட்டு வாங்க முடியாது, அது வரம், சிலருக்குதான் அந்த பாக்கியம் கிடைக்கும்.
  3. இந்தியாவில் வடக்கில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினையும், இலங்கையில் தெற்கில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினையும் இருக்கின்றது. சிங்களவர்கள் தங்களை ஆரியர்கள் என்று கூறுகிறார்கள், அதனால் வட இந்தியருக்கு உள்ள அதே பிரச்சினை சிங்களவர்களுக்கும் இருக்கிறதோ தெரியவில்லை. இந்தியாவில் ஒரு நண்பர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, எந்த இடம் என கேட்டார் வைத்தியசாலை ஊழியர், அதற்கு இலங்கை என கூற, இலங்கை கிரிக்கட் அணியினர் போல அனைத்து இலங்கையர்களும் அரக்கர்கள் போல் இருப்பார்கள் என நினைத்தேன் என கூறினார் (இது நடந்தது 90 களின் பிற்பகுதி) இந்தியர்களுக்கு இதிகாச புராணங்கள், இலங்கையர்களுக்கு மகாவம்சம், நிறைய ஒற்றுமைகள் இருக்கு.😁 ஆனால் இந்த வெளிநாட்டு பயணங்கள் இந்திய, இலங்கையில் இருந்த அடிமட்ட மக்களின் சமூக வாழ்க்கை தரத்தினை உயர்த்தியுள்ளது, இது சமூக ரீதியான நல்ல மாற்றம்.
  4. சில முயற்சிகள் செய்தவர், ஆனால் அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்றவர்களாக அவர்கள் இருக்கவில்லை என கருதுகிறேன், அவர் மற்றவர்களின் நம்பிக்கை உணர்வுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார் என உணர்ந்தேன், அந்த அடிப்படையிலேயே தனது சமூக உறவுகளை கட்டமைத்திருந்தார் என்பதனை அவருடான அனுபவத்தில் உணர முடிந்தது, அதற்கு மிகையான பணத்தின் மீதான பாதுகாப்பு உணர்வினால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம். ஆனால் ஒரு வித்தியாசமான பார்வை கொண்ட புத்திசாலி பெண்மணி, ஆளுமையான ஆனால் அவரிடம் வெட்டிபந்தா கர்வம் எதுவும் இருக்காது, பொது உலகில் கரட்டை துரத்து கழுதை அல்ல அவர்.
  5. இந்தியணியினை தவிர மற்ற அணிகள் அனைத்தும் பல பிரச்சினைகள் உள்ளது (இந்தியணியே சிறந்த அணி) ஆனாலும் இந்தியணி வெல்லாது என நாங்கள் பிடிவாதமாக இருக்கிறோம். என்னுடன் வேலையில் இருந்த இந்தியரின் அயலவர்கள் இலங்கையர்கள், இந்திய அவுஸ்ரேலிய ஆட்டத்தினை பார்க்க அவர்களை வீட்டிற்கு அழைத்த இலங்கையர்கள் அவர்கள் 2-3 குடும்பங்கள் என பெரும் எண்ணிக்கையில் வீட்டில் கூடி அவுஸ்ரேலியாவினை ஆதரித்து இந்த இந்திய பெண்மணியினையும் அவரது கணவர் மட்டும் இந்தியர்கல் என்பதனால் தம்மை திட்டமிட்டே நோகடித்தார்கள் என்பதாகவும் அதன் பின்னர் அவர்களுடன் கதைப்பதில்லை என கூறினார். ஆனால் நீ அப்படியான ஆள் இல்லை என எனக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.😁 ஒருவரை வீட்டிற்கு கூப்பிட்டு அவரகளது மனதை நோகடிக்கும் நிலையில் தமிழர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நினைத்தேன், ஆனால் அவர்கள் தமிழர்களா என்பது தெரியவில்லை.
  6. முன்னர் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை இந்த நண்பர் கூறிவந்தார், இந்தியாவில் உள்ள ஒரு சிறுபான்மை மதத்தினை சேர்ந்தவர், அங்குள்ள தனது சொத்துக்களை எல்லாம் விற்றுவிட போவதாக கூறினவர், தற்போது போய் தனது வீட்டை விற்று தனது நண்பனின் பேரில் ஒரு விவசாய நிலம் ஒன்றினை வாங்கி விட்டுள்ளார், வெளிநாட்டினர் விவசாய நிலம் வாங்க முடியாதாம், பின்னர் அதனை சாதாரண நிலமாக மாற்றிய பின்னர் தனது பெயரிற்கு மாற்ற உள்ளார். முன்னர் போல இந்திய எதிர்ப்பு காட்டுவதில்லை, பிற்காலத்தில் அவர் இந்தியாவில் சென்று தங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என கருதுகிறேன். . பொதுவாக இந்தியர்களும், இலங்கையர்களும் தமது நாட்டினை பற்றி மிகைப்பட கூறுவது வழமைதான், முன்னர் ஒரு சிங்கள பெண்மணி இதே போல பீத்திக்கொண்டிருந்த போது கடுப்பான அவுஸ்ரேலிய பெண்மணி அவரிடம் கேட்டார், பின்னர் எதற்காக இங்கே வந்தாய் என. இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை.
  7. மீண்டும் மீண்டும் அனைவருக்குமுள்ள பொது பிரச்சினையினை அனைவருடனும் பேசி தீர்க்க வேண்டும் என கூறுகிறார், இதில் தமிழருக்கேன தனியான இனப்பிரச்சினை இல்லை எனும் கருத்தில் பிடிவாதமாக நிற்பது போல தெரிகிறது. பிரச்சினை உள்ளததனை ஏற்காவிடில் அதற்கான தீர்வினை காணமுடியாது.
  8. அமெரிக்க துனை அதிபர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரச்சினை வெளியில் இருந்தல்ல, உள்ளே இருந்து வருகிறது எனவும், ஐரோப்பாவில் உள்ள அதிகார வர்க்கங்கள் மக்களின் ஜனநாயக உரிமையினை பறிப்பதாகவும், ரொமேனியாவில் நிகழ்ந்த நிகழ்வு தொடராலாம் என கூறியதுடன் அவ்வாறு நிகழ்ந்தால் (மக்களுக்கு பயந்து அதிகாரங்களின் பின்னால் ஒளிந்தால்) அமெரிக்கா அதற்கு ஆதரவு கொடுக்காது (அமெரிகாவினால் எதுவும் செய்ய முடியாது என குறிப்பிட்டார்). காணொளி இவரரது உரைக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். காணொளி ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்க துணை அதிபர் கூறிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரச்சினை வெளியில் இல்லை என்பதனை மறுத்து இரஸ்சியாவே பிரச்சினை அதற்கு தீர்வாக உக்கிரேனை பலப்படுத்தவும் நேட்டோவினை பலப்படுத்துவதனை தீர்வாகவும் கூறினர். இதற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று ஐரோப்பாவின் பிரச்சினைக்கு (உக்கிரேனிற்கான பிரச்சினைக்கு) அமெரிக்காவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. காணொளி தற்போது ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பு, அமெரிகா இந்த ஆண்டு இறுதிக்குள் உக்கிரேனில் தேர்தலை நடத்தவேண்டும் எனும் கோரிக்கை எதிராக போர் நிறுத்தம் ஏற்படுத்தாது போரை தொடர்வதன் மூலம் தேர்தலை புறக்கணித்து தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க விரும்புகின்ற நிலை காணப்படுகிறது (இவ்வாறான நிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் விரோத கொளகை என அமெரிக்க துணை அதிபர் கூறியிருந்தார்). கடந்த அமெரிக்க அரசு போலல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் என செயற்படாமல் (ஐரோப்பிய ஒன்றியத்தினை பலவீனப்படுத்தும்) தனிய குறிப்பிட்ட நாடுகளுடன் உறவை பேண புதிய அமெரிக்க அரசு விரும்புகிறது, ஆனால் அதனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விரும்பவில்லை. உலகம் ஒரு பல்துருவ உலக ஒழுங்கிற்குள் மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றது.
  9. அண்மையில் இந்தியாவிற்கு சென்று திரும்பிய எனது இந்திய நண்பர் கூறினார், இந்தியாவில் உள்ளவர்களின் வாழ்க்கை வெளிநாட்டில் உள்ளவர்களை விட சிறப்பாக உள்ளதென, அவரது நண்பர ஓய்வு பெற்றுவிட்டதாகவும் மாதம் $3000 அவுஸ்ரேலிய டொலர் ஓய்வூதியம் பெறுவதாக கூறினார் (நம்புவது கடினமாக இருந்தது).
  10. இவரும் ஒரு பழைய டொயோட்டா கார் வைத்திருந்தார், இவரும் தனியாளாகவே இருந்தார்,
  11. நான் வர முடியாது வீட்டில் அடி விழும். 😁
  12. ஓய்வு பெற்று விட்டார் வேலையிலிருந்து, ஆனால் பல கட்டங்கள் கட்டி விற்றுக்கொண்டிருந்தார் கடைசியாக அவரை சந்தித்த போது சிட்னியில் ஒரு முக்கிய பகுதியில் இரண்டு வீடு கட்டி விற்பனைக்கு தயாராகி இருந்தார், அவரது வருமானத்தினை கேக்கவில்லை ஆனால் அவரிடம் பல திட்டங்கள் இருந்தது குறைந்தது 10 மில்லியன் வைத்திருப்பார் என கருதுகிறேன்.
  13. சீன பெண்கள் சுய பொருளாதாரத்தில் மிக் திறமையானவர்கள், என்னுடன் ஒரு பெண்மணி வேலை செய்தார் அவர் பதின்ம வயதின் இறுதிப்பகுதியில் வேலையினை ஆரம்பித்தார் 20 களின் இறுதிப்பகுதிக்குள்ளே வேலையினை விட்டு விட்டு தனது சொந்த முயற்சியில் இறங்கி விட்டார், அவர் கூறுவார் முதலாவது மில்லியன் டாலர் உழைப்பதுதான் கடினம் அதன் பின்னர் அனைத்தும் இலகுவாகிவிடும் என கூறுவார். Think & grow rich, 7 steps to wealth என இரண்டு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார், இது வரை வாசிக்கவில்லை கிட்டதட்ட 10 ஆண்டுகளாகின்றன. real estate இல் முதலிட்டிருந்தார்.
  14. 3 வகை ஆட்டங்களிலும் இந்தியணிதான் மிக சிறந்த அணி, ஆனாலும் உபகண்டத்திற்கு வெளியே போனால் உப்புக்கண்டம் போட்டு அனுப்பிவிடுகிறார்கள்.
  15. படம் நன்றாக உள்ளது, நன்றி! prime video இலே இதே போல ஒரு ஒரு பிரிந்து வாழும் தந்தைக்கும் மகளுக்குமிடையேயான கதை I want to talk இதற்கு தமிழில் உப தலைப்பும் உள்ளது. அதில் அந்த சிறிய குழந்தை தனக்கு நெருக்கமான பெரியவர்களின் பேச்சை உண்மை என கருதி தந்தை பொய் கூறுகிறார் என உறுதியாக கருதியிருக்கும் போது உண்மை தாக்கும் போது குழந்தை காட்டும் அந்த அதிர்ச்சியான உணர்வினை வெளிப்படுத்தும் அழகு, மிக சிறப்பான நடிப்பு, உங்களை இந்த படமும் கவரும் என கருதுகிறேன். அந்த குழந்தைக்கு தந்தை நெருக்கமானவர் அல்ல.
  16. கிரிக் இன்போ தரவுகளின் அடிப்படையில் சிலந்தி வரைபின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு பாக்கிஸ்தானும் தென்னாபிரிக்காவும் தெரிவாகும் என வந்துள்ளது ( தரவுகளை சாட் ஜிபிடி மூலம் பெற்றுக்கொண்டேன், கணிப்பீடு தவறாக இருக்கலாம்). இதில் மைதானத்தின் பங்கும் கவனத்தில் எடுக்கப்பட்டது.
  17. AUS நன்றி அவுஸ்ரேலிய விளையாட்டு துறை பத்திரிகையாளரான ஜெராட் கிம்பரின் சிலந்தி வரைபின் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் குழுநிலை போட்டியில் (Group A) தெரிவாகும். காணொளி
  18. இரண்டு அணிகளும் நல்ல அணிகள்தான் ஆனால் பெரிய அரங்கங்களில் சோபிப்பதில்லை எனும் கருத்து நிலவுகிறது. காணொளி இந்த காணொளியில் அவுஸ்ரேலிய அணி பற்றி கார்ஸா போகிளே கூறியுள்ள விடயத்தினை பாருங்கள். தற்போதய அவுஸ்ரேலிய அணி ஒரு பலவீனமான அணி ஆனால் அவர்கள் ஒரு வெல்லும் அணியாக எவ்வாறு மிளிர்கிறார்கள் எப்போதும், கடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய சார்பு இந்திய ஆடுகளத்தில் ஒப்பீட்டளவில் அவுஸ்ரேலியாவினை விட மிக பலமான இந்தியணியினை எவ்வாறு அவுஸ்ரேலியா வென்றது? அழுத்தமான சூழ்நிலைகளில் சரியாக முடிவெடுக்கும் அணியே வெற்றி பெறுகிறது, அத்துடன் அவர்களின் ஆட்ட திட்டத்தினை சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைக்க கூடிய துணிச்சலான தலைமை வேண்டும். இதனை கழுதைகளுக்கு தலைமையாக சிங்கத்தினையும், சிங்களுக்கு தலைமயாக கழுதையும் வைத்தால் சிங்க தலைமையே வெல்லும் என கூறுவார்கள். புதிய முடிவுகள் தவறாக இருந்தால் அதற்கான முழு பொறுப்பையும் அணித்தலைவர் ஏற்க வேண்டும் என பயந்து திட்டமிட்ட முறையிலேயே சூழ்நிலைக்கு ஏற்ப திட்டத்தினை மாற்றாமல் செயல்படும் அணிகள் இந்த மாதிரியான பெரிய அரங்குகளில் சொதப்புவார்கள். ஆனால் இந்த இரு அணிகளும் மிக சிறந்த அணி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
  19. உங்களுக்கான ஒரு வாசகத்தினை ஒரு திரைப்பட வாசகமான வந்தா ராஜாவாத்தான் வருவேன் என மாற்றினால் நன்றாக இருக்கும்.😁 தென்னாபிரிக்க அணியினை சொதப்புபவர்கள் என அழைப்பார்கள், அவர்களை போல இந்தியணி ஐ சி சி போட்டிகளில் சொதப்புபவர்கள், இந்த இரண்டு அணிகளையும் விட்டு தள்ளி நிற்க வேண்டும்.😁
  20. ஆம் 2-0. இந்தியணி பவர்பிளேயிலேயே அடித்து விளையாட விரும்பும் என போகிளே கூறுகிறார், அதனால் நீண்ட ஒரு துடுப்பாட்ட நீளம் இருப்பதனை இந்தியா விரும்பும் எனும் தொணிபட கூறுகிறார். அதனால் இந்த 3 சகலதுறை ஆட்டக்காரர்களுள் ஒருவரையும், சிறந்த சுழல் பந்து வீச்சாளர் ஒருவரையும் இந்தியா தெரிவு செய்யும். நீங்கள் கூறுவது போல சுந்தரையும் அக்சரையும் எடுப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே கருதுகிறேன். பந்தினை அடித்து விளையாடுவதன் மூலம் பந்தின் swing & seam இனை கட்டுப்படுத்தி பந்தினை விளையாடுவதற்கு இலகுவாக்க முடியும், அதே நேரம் களத்தடுப்பில் உள்ள கட்டுப்பாட்டினை பயன்படுத்தி நல்ல ஆரம்பத்தினையும் வழங்கலாம், அதனால் ரோகித்தின் அடித்தாடும் முயற்சி பெரும்பாலும் கைகொடுக்கும் ஆனால் ஆடுகளம் சிறிது உயிர்ப்பாக இருந்தால் ரோகித் மற்றும் கில்லால் விளையாடுவது கடினமாக இருக்கும். சுந்தர் விரல் சுழல் பந்து வீச்சாளர், இந்த துபாய் ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் பந்து வீசவே விரும்பும். ஆடுகளம் காய்ந்து மின் ஒளியில் பந்து இலகுவாக வரும், dew (புல் பனியினால்) பந்து ஈரமாகி பந்தினை பிடிக்க முடியாது கடினமாகி விடும், அதே நேரம் பந்து வழுக்கி வரும் என்பதால் மட்டையாளருக்கு சாதகமாகி விடும். சுந்தரினால் பவர் பிளேயில் பந்து வீச முடியும், ஆனால் ஆட்டத்தின் நடுப்பகுதியில் பந்து பெரிதாக சுந்தருக்கு திரும்பாது ஆனால் இந்த ஆடுகளத்தில் flat & quicker (கிடையாகவும் வேகமாகவும்) வீசும் ஜடேயா (விரல் சுழல் பந்து வீச்சாளர்) சிறப்பான தெரிவு, அத்துடன் இரண்டு மணிக்கட்டு பந்து வீச்சாளர்களில் ஒருவரான் குல்தீப் இந்தியாவின் முதல் தெரிவாக இருக்கும் (வருணிடம் பல தெரிவுகள் இருந்தாலும்), அதற்கு அவரது அனுபவமும் முற்று முழுதான மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர் என்பதால் நான் நினைக்கிறேன் ஜடேயா, குல்தீப் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கலை இந்தியணி தெரிவு செய்யலாம். காணொளி அவுஸ்ரேலிய முன்னால் ஆட்டக்காரான கிளார்க்கின் கருத்துப்படி பார்த்தால் பையனின் டெம்ப்பிளேட் தான் சிறந்தது. துபாய் ஆடுகளம் இந்தியணிக்கு சாதகமாக இருப்பதற்கான காரணத்தினையும் கூறுகிறார், இந்தியணி ஒரே ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவது மற்றது வெவ்வேறு ஆடுகளத்திற்காக பயணிக்க தேவையில்லை என கூறுகிறார். இந்தியணியே வெல்லும் எனவும், சிறந்த ஆட்டக்காரராக ரோகித்தையும் சிறந்த பந்து வீச்சாளாராக ஆர்ச்சரையும் கூறுகிறார். அவரது அணி வரிசை (அவர் இந்த வரிசையில் கூறவில்லை பொதுவாக கூறினாலும் அவர் மனதில் உள்ளது) IND AUS Pak NZ SA ENG AFG BAN அவரின் கருத்துப்படி பார்த்தால் உங்கள் கருத்து அப்படியே தலைகீழாக உள்ளது.
  21. இந்தியாவும் இலங்கையில் தொடரை இழந்துதான் சென்றவர்கள் 2-0 அல்லது 3-0 என கருதுகிறேன்), இந்த அவுஸ்ரேலிய அணி புதியணி, அனுபவமற்ற அணி இந்த ஆடுகளத்தில் மெதுவான கையில் விளையாட வேண்டும், ஆனால் அவுஸ்ரேலிய அணி விரைவாக தனது தவறுகளை அடையாளம் கண்டு திருத்திவிடும் அணி அதனால் பதட்டமடைய தேவையில்லை. 2006 மேற்கு இந்திய தீவில் நடைபெற்ற உலக கோப்பையில் இலங்கை அணிக்கெதிராக கில் கிறிஸ்ட் மெதுவான் கையினை பயன்படுத்தி விளையாடுவதற்காக தனது கையுறைக்குள் கோல்ப் பந்தினை வைத்து விளையாடினதாக கூறுவார்கள், கடந்த உலக கிண்ணத்தில் இந்தியணிக்கு இடது புறத்தில் 5 வீரர்களை களத்தடுப்பு வைத்து ஒரு ஆபத்தான (Risky) திட்டத்துடன் வந்து வென்றார்கள். அவர்கள் ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் சரியான திட்டமிடலுடனே வருவார்கள்.
  22. ஆனால் போட்டியின் போது இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை அதிக பட்சமாக பயன்படுத்துவார்கள் என கருதுகிறேன். குளிர் காலமாக இருப்பதால் பந்து ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதனால் வழுக்கி வரும் Skiddy, ஆடுகளத்தில் பந்து திரும்பாது சுழல் பந்து வீச்சாளர்களுக்கு, காரணம் ஆடுகளத்தில் உள்ள ஈரலிப்பு பந்தினை வழுவ (no grip) அனுமதிப்பதால் பந்து திரும்பாது. ஆனால் மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசும் குல்தீப் மற்றும் வருணிற்கு பந்து ஓரளவு திரும்பும். இந்த மாதிரி ஈரலிப்பு உள்ள ஆடுகளம் இரண்டு வேகம் கொண்ட ஆடுகளமாக இருக்கும், பந்து சுழல் பந்து வீச்சாளருக்கு திரும்பாது ஆனால் சில பந்து வேகமாக வழுக்கி வரும் சில பந்து தரையில் நின்று வரும், அத்துடன் பந்து உயர்ந்தும் தாழ்ந்தும் வரும், மட்டையாளர்கள் இதனை எதிர்கொள்ள நேர் கோட்டில் விளையாட முற்படுவார்கள், முக்கியமாக மெதுவான கையினை பயன்படுத்தி விளையாடாவிட்டால் மிக சிரமாக இருக்கும். ஜடேயாவுடன் குல்தீப் இனை இந்தியா இறக்க்க கூடும், சில வேளை ஆடுகளம் மோசமாக இருந்தால் இரண்டு விரல் சுழற்பந்து வீச்ச்சாளர்களான ஜடேயா மற்றும் அக்சர் விளையாட கூடும். இரண்டு வேக பந்து வீச்சாளருடன் பாண்டியாவினை மூன்றாவது வேக பந்து வீச்சாளராக இந்தியா பயன்படுத்தக்கூடும். 3 வேக பந்து வீச்சாளர்கள் + 2 சுழல் பந்து வீச்சாளர்கள், ஆனால் பாண்டியா முழுவதுமாக 10 ஓவர் போடுவாரா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
  23. கவிதையின் ஆரம்பத்தில் மூட நம்பிக்கையினயும் பின்னர், உலக வெப்பமயமாதலையும் குறிப்பிட்டமை கவிதையின் கரு தொடர்பில் குழப்பம் ஏற்பட்டது, நான் நினைத்தேன் நீங்கள் முட்டாள் மனிதர்களை கவிதையின் கருவாக கொண்டீர்களோ அல்லது மழையினை கவிதையின் கருவாக கொண்டீர்களோ என ஒரு குழப்பம் இருந்தமையாலேயே தெளிவிற்காக கேட்டேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.