Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. புலிகளினுடன போர் காலகட்டத்தில் சிங்களவர்கள் இங்குள்ள பத்திரிகைகளில் புலிகளுக்கெதிரான பிரச்சார கருத்துக்களை எழுதி வந்தனர், அது வெறும் பிரச்சார கட்டுரைகள் ஆனால் அவை மிக தாக்கம் செலுத்தும் வகையில் எழுதியிருப்பார்கள்.
  2. சங்க காலத்தில் தமிழ் மக்கள் உயர்நிலியில் இருந்த்மையால் அந்த கால பிரதிபலிப்பாக வந்த இலக்கியங்கள் அக புற இலக்கியங்களாக வந்தன ஆனால் சங்கமருவிய காலத்தில் அன்னிய படை எடுப்பினால் மக்கள் வாழ்க்கை சிதைந்து மக்கள் வாழ்க்கை தடம் உரண்டு போன நிலையில் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக வந்த இலக்கியங்கள் அற இலக்கியங்களாக இருந்த்தன. மக்களின் தேவை கருதிய இலக்கியங்கள் இயல்பாக அந்த மக்களின் தேவைகளை பிரதிபலிக்கின்றன, இயல்பாகவே இலக்கியவாதிகளுக்கு என கடமைகள் உள்ளது அதனை அவர்களது இலக்கியங்கள் பிரகிபலிக்கின்றன் அந்த இலக்கியங்கள் உள்ளதை அப்படியே கூறுகிறது அதாவது தான் சார்ந்த சமூகத்தினை பிரதிபலிக்கின்றன். யாழ் களம் அதற்கான ஒரு தளமாக இருந்து வருகிறது ஆனால் யாழ்கள எழுத்தாளர்கள் எவரும் ஒரு இலக்கியவாதிகளாக இதுவரை பரிணமிக்கவில்லை. எமது சமூகம் இலங்கையிலும் உலகெங்கிலும் பல்வேறுபட்ட சமூக நெருக்கடிகளை சந்திக்கின்றன இது இக்காலத்திற்குரிய இலக்கியத்திற்கான தளமாக உள்ளது. ஒரு எழுத்தாளருக்கு பிற சமூகத்தில் உள்ளவர்களை உருவக்கேலி செய்வதில் என்ன பிழை இருக்கிறது எனும் சந்தேகம் ஏற்படுகிறது,இன்னொரு எழுத்தாளருக்கு போரினாலும் பொருளாதாரத்தினாலும் நசிந்து போன இலஙகியில் உள்ள குழந்தகளின் கலை முயற்சிகளை வெளிநாட்டில் உள்ள தனது குழந்தைகளின் அரங்கேற்றத்திற்கான செலவு குறைந்த தெரிவாக தட்டிப்பறிப்பது தவறாக தெரியாத நிலையில் உள்ளார். எழுத்தாளர்கள் சமூக சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இடது சாரி சிந்தனையாளரளாக இருக்க வேஎண்டும் எனும் அவசியம் இல்லை, மக்களின் துயரம் புரியாதவர்களால் அவர்களுக்காக இலக்கியங்கள் உருவாக்க முடியாது, என்பதற்கான உதாரணமாக நான் முதலில் கூற மறுத்த உதாரணத்தினை குறிப்பிட்டுள்ளேன், அது அவர்களின் தவறல்ல அவர்களை பொறுத்தவரை அதனை அவர்கள் தவறாக உணராத நிலை காணப்படுகிற்து, அப்படியான நிலையில் எவ்வாறு ஒரு மக்கள் இலக்கியத்தினை படைக்க முடியும்?
  3. நான் கூறவந்த இலக்கிய பரிணாம வளர்ச்சி என்பது ஒரு சிறுபான்மை கொண்ட உயர் இலக்கிய அறிவு கொண்ட சமூகத்திற்காக இலக்கணத்திற்கான இலக்கியமாக பார்க்கின்ற ஒரு நிலை, கலையும் இலக்கியமும் மக்களுக்கானது, அது சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த உதவ வேண்டும், அதனை சாமானிய மக்களாலும் விளங்கி கொள்ளமுடியுமாக இருத்தல். யாழ்களம் பல இலக்கிய முயற்சிகளை உருவாக்கி உள்ளது ஆனால் அதிலிருந்து ஒரு சிறந்த இலக்கிய படப்பாளிகளாக பலர் மாற முடியாமல் போய்விட்டது. இலக்கியவாதிகள் சுயமாக சிந்திக்ககூடிய, சமூக சிந்தனை கொண்டவர்களாக இருக்கவேண்டும், வார்த்தைகளை இரசிக்கும் வண்ணம் கோர்த்து எழுதுவது ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளர்களை உருவாக்கலாம் ஆனால் சிறந்த இலக்கியவாதிகளை உருவாக்க முடியாது. யாழ்களத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஆரம்ப முயற்சி உற்சாகம் தருவதாக இருக்கும் ஆனால் அவர்கள் அடிப்படை சமூக சார்பான புரிதல் இல்லாமல் இருப்பார்கள், அதனை அறியாத நிலையிலேயே இருப்பார்கள் அதனை சுட்டிக்காட்டும் போது அதனை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள், முரண்படுவார்கள். உதாரணங்களை குறிப்பிட விரும்பவில்லை அது தனிப்பட அவர்கள் மனதினை பாதிக்கலாம். பொதுவாக சிறந்த இலக்கியவாதிகள் மார்க்சிய சிந்தனாவாதிகளாக இருப்பது அவர்கள் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் அது ஒரு தற்செயல் நிகழ்வாக நிகழ்ந்துவிடுகிறது. பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும், சிறந்த சமூக சிந்தனை இல்லாதவர்களால் சிறந்த இலக்கியங்களை படைக்கமுடியாது.
  4. வரி விதிப்பு போரினால் ஏட்டிக்கு போட்டியாக வரி விதிக்கப்படின் அமெரிகாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் தமக்கு தேவையான அதிக சனத்தொகை கொண்ட வரி பிரச்சினைகளற்ற நாடுகளினை நோக்கி தமது இடப்பெயர்வினை ஆரம்பித்தால் அதனால் ஏற்படும் ஆபத்தினை பற்றி குறிப்பிட்டிருந்தேன். கிழக்காசிய நாடுகளான வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் பொருளாதாரத்திற்கு அடிப்படை கட்டுமானம் இல்லாதிருக்கின்றநிலையில் கூட அங்கு குறைந்த உற்பத்தி செலவினை கருத்தில் கொண்டு பெரிய நிறுவனங்கள் தமது பார்வையினை திருப்பியுள்ளன. இந்த நாடுகளில் சனத்தொகை நுகர்வோராக இல்லாத போதும் ஆசிய பிராந்தியத்திற்கும் ஏனைய பிராந்தியத்திற்குமிடையே எந்த வித அரசியல் பொருளாதார நெருக்கடி இல்லாமல் இருக்கின்றமையால் ஆசியாவினை மையப்படுத்திய சந்தையினை கருத்தில் கொண்டு பெரிய நிறுவனங்கள் நகரக்கூடும். கந்து வட்டிக்காரன் உள்ளே வருகிறான் என்றால் அது நல்ல சகுனம் அல்ல.😁
  5. சரியான போட்டி, பைடன் அமெரிக்காவினை இராணுவ ரீதியாக பலவீனமாக்கினார், தற்போது ட்ரம்ப் அமெரிக்காவினை பொருளாதார ரீதியாக பலவீனபடுத்துகிறார்.
  6. ஒரு கதாசிரியர் சில விடயங்களை சொல்லாமல் சொல்வதுண்டு, இந்த வரியில் அவர் ஒரு பெண் மூத்த சகோதரம் கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளையாக் உள்ளதாக கதாசிரியர் சொல்லாமல் சொல்வது போல இந்த வரியில் எனக்கு பட்டது, ஆனால் சாத்திரம் பற்றிய குறிப்பில் அவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட சகோதரிகள் உள்ளார் என்பதனை ஒரு கதையினூடே நேரடியாக இல்லாமல் குறிப்ப்பாக சொல்லியிருக்கும் விதம் பலருக்கு புரிந்திருக்காது என்றே நினைத்தேன் ஆனால் உங்களுக்கும் சில கள உறவுகளுக்கும் புரிந்துள்ளது (வில்லவன்) தெரிகிறது. அது ஒரு பரிணாம வளர்ச்சி, தவிர்க்க முடியாது.😁
  7. நீங்கள் சீமானை எதிர்ப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை, ஆனால் திராவிட புலிகள் எனும் இந்த புரட்டிற்கு நான் எழுதிய பதிலை எதற்கு தேவையில்லாமல் சீமானின் புரட்டினை பதிலாக போடுகிறீர்கள் எனக்கு என ஆரம்பத்திலிருந்து விளங்கவில்லை. முதல் கருத்திலேயே அவர்களுக்குள் உள்ள பிரச்சினை அவர்கள் கூறுவதனடிப்படையில் ஒரு தரப்பிற்கு பிராமணர் பிரச்சினை மறு தரப்பிற்கு வெளி மானிலத்தவர் பிரச்சினை அதனை கூட தெளிவாக எழுதியுள்ளேன். நான் பெரிதாக சீமானை எதிர்த்ததும் இல்லை, திராவிட கட்சியினை ஆதரித்ததும் இல்லை ஆனால் இரு தரப்பும் செய்த நன்மைகளை மட்டுமே குறிப்பிட்டிருக்கலாம். இந்த விடயத்தில் எப்படி என்னை ஒரு தரப்பின் சார்பாக கருத்து தெரிவித்ததாக கருதி சீமானின் புரட்டுக்களை எனக்கு பதிலாக்குகிறீர்கள் என எனக்கு தற்போதும் விளங்கவில்லை. திராவிட புலிகள் என்பது புரட்டு என கூறினால் அதற்கு அர்த்தம் சீமானின் ஆதரவாளன் என்பதாக நீங்கள் அர்த்தம் கொள்வீர்கள் என கருதவில்லை.
  8. ஏதோ இந்த வரி நன்றாக இருப்பது போல உணர்கின்றேன், உங்கல் எழுத்துக்கள் நாளுக்கு நாள் முன்னேற்றம் காட்டுகிறது, கலை கலைக்காகவே என படித்தவர்களுக்குள் கும்மியடிக்கும் இலக்கிய வட்டத்திற்குள் புகாமல் எங்களை போன்றவர்களை மனதில் வைத்து இதே போலவே தொடர்ந்து எழுதுங்கள்😁.
  9. பன்னாடை என்பது தவறாக பயனில் உள்ளது என்பதனால் வழமையாக பயன்படுத்தும் அந்த பதத்தினை பயன்படுத்தவில்லை என்றே குறிப்பிட்டேன். இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகளை தமது சுயநலத்திற்கு பயன்படுத்தும் ஒரு தரப்பின் மீது குற்றம் சாட்டும் நீங்களும் மற்றவர்களும் ஏன் மறுதரப்பு புலிகளை தமது நலனுக்கு பயன்படுத்தும் போது அது தொடர்பாக ஒரு சிறு கருத்து கூட தெரிவிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விடயம். எனது முதல் கருத்தில் அனைவரும் புலிகளை தமது சுய இலாபத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என பொதுவாக கூறியது (அது ஒரு சாதாரணமாக கூறிய விடயம் மட்டுமே) உங்களுக்கு எனோ ஏற்கமுடியாமல் இருந்துள்ளது, இந்த விடயங்களை சாதாரணமாக காடந்து போகவேண்டும் என நான் கருதுவது உங்களுக்கு ஏற்கமுடியாமல் இருக்கலாம், அதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் எனக்கு உடன்பாடாக இருக்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள எந்தகட்சியினாலும் இலங்கையில் உள்ள தமிழர்க்கு தீர்வு ஏற்படாது, அவர்களுக்குள்ளிருக்கும் பிரச்சினையில் நாங்கள் புகுந்து ஒரு தரப்பினை ஆதரிப்பது அல்லது ஒரு தரப்பினை எதிர்ப்பது தேவையில்லாத விடயம். ஆனால் எந்த தரப்பின் பொய்ப்பரப்புரையினையும் எதிர்ப்பதில் தப்பில்லை, அதில் ஒரு தரப்பிற்கு மட்டும் பாரபட்சம் காட்டக்கூடாது.
  10. Perception என்பது ஒரு வடி தட்டு மாதிரி (பொதுவாக பன்னாடை என்பார்கள் - பன்னாடை நல்லவற்றை விட்டு விட்டு தேவையற்றதனை தக்க வைப்பதால் அது பின்னாளில் ஒரு வசவு சொல்லாக அர்த்தம் கொள்ளப்பட்டு விடுகிறது என்பதால் வடி தட்டு என கூறியுள்ளேன்) தமக்கு தேவையானவற்றை எடுத்துவிட்டு மற்றவற்றை விட்டு விடும், விடயங்களை எமது பார்வையில் பார்க்காமல் அதன் போக்கில் பார்ப்பதே சிறப்பு.
  11. மண்ணின் மைந்தர்கள்தான் தமிழ்நாட்டினை ஆட்சி செய்ய வேண்டும் என வலியுறுத்துபவர்கள் மற்ற மொழி பேசும் மக்களுகெதிராக அரசியல் செய்வதற்காக தமிழ்தேசியத்தினை முன்னிருத்த வேறு மொழி பின்புலம் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு அனைத்தும் திராவிடம் எனும் போர்வையில் திராவிட அரசியல் செய்யவதற்கு வசதியாக பிராமணர்கள்தான் அனைவருக்கும் எதிரிகள் எனும் நிலையினை உருவாக்கி அதன் அடிப்படையில் அனைவரையும் தமக்கு சார்ப்பார்க்க முயன்றவர்களுக்கு போட்டியாக திராவிட கொள்கைக்கு எதிராக தற்போது தமிழ்தேசியம் அவர்கள் இருப்பிற்கு அச்சுருத்தலாகி உள்ளதால் கடைசியாக புலிகளையும் திராவிட புலிகளாக்கி உள்ளார்கள். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். இவர்களுக்குள் உள்ள புடுங்குபாட்டிற்கு இங்கு நாம் ஏன் முரண்பட வேண்டும்.
  12. கிட்டத்தட்ட இரண்டு வார காலம் ஆகிய நிலையில்........ மிளகாய் ஒட்டு ஓரளவிற்கு பார்ப்பதற்கு சரியாக உள்ளது போல தெரிகிறது. + ஆனால் தக்காளி ஒட்டு இலைகள் வளர்ந்தாலும் அதன் தண்டு வாடிகின்றமை அது சரியான நிலயில் இல்லை என்பதால் அதனை அகற்றிவிட்டு மீண்டும் இரண்டு தக்காளி ஒட்டு வைத்துள்ளேன். முந்தய கத்தரி ஒட்டின் கட்டினை பிர்த்து விட்டேன்.
  13. இனி இந்தியணியில் நீடிப்பது கடினமாக இருக்கும். இந்தியணி அவுஸில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் உள்ளூர் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கட் நிர்வாகம் முடிவெடுத்திருந்த நிலையில் தற்போது இடம்பெறும் ரஞ்சி போட்டியில் ரோகித்(3), கில்(4), ஜெஸ்வால்(4) மற்றும் பந்த்(1) நால்வரும் ஒட்டு மொத்தமாக சேர்த்து 12 ஒட்டங்களுக்குள் ஆட்டம் இழந்துள்ளார்கள்.
  14. ட்ரம்பினை மட்டும் குறிப்பிடவில்லை அவரது போட்டியாக உள்ளவர்கள் கூட சரியான முடிவுகளை எடுப்பதற்கான சரியான உளநிலையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள், மற்றய நாடுகளில் ஒரு தரப்பு மட்டும் அவ்வாறிருக்கும் ஆனால் இங்கு எந்த பக்கம் போனாலும் பிரச்சினையாக இருக்கிறது, இது எதனால் உருவாகிறது? இரண்டு கட்சிகளிலும் வேறு மாற்று தலைமைகள் இல்லையா?
  15. பைடன், ட்ரம்ப், கமலா........, ஏன் அமெரிக்காவில் தலைவர்களுக்கு பஞ்சமா?
  16. இந்திய இரசிகர்களால் கிரிக்கெட்டின் தெய்வம் என கொண்டாடும் சச்சினின் எதிர்கால மருமகன் எனும் ஒரு கருத்தும் நிலவுகிறது, கவலையே வேண்டாம் கண்டிப்பாக அணியில் இடம் பிடிப்பார்.
  17. https://fotoforensics.com/tutorial-ela.php இந்த ELA படத்தில் படம் உண்மையான படத்தினை விட சிறிதாக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது, புலிகளின் தலைவரின் இடுப்பு பட்டி வரையும் படத்தின் இரு பக்கமும் குறுகலாக்கப்பட்டுள்ளது மேலே உள்ள இணைப்பில் கீழ் வருமாறு உள்ளது. Scaling a picture smaller can boost high-contrast edges, making them brighter under ELA. Similarly, saving a JPEG with an Adobe product will automatically sharpen high-contrast edges and textures, making them appear much brighter than low-texture surfaces. குறித்த இணையத்தில் குறிப்பிட்ட படத்தினை தரவேற்றிய போது ஏற்பட்ட வித்தியாசம் சீமானின் இடது கை (தோளுக்கு கீழான பகுதியில்) நீண்ட நீள்சதுர வடிவ வெள்ளை பகுதி தெரிகிறது (முதலாவது இற்கும் இரண்டாவது இற்குமிடையே உள்ள வித்தியாசம்) இரண்டாவது ELA இது படத்தினை வெட்டும்போது இழக்கப்பட்டதாக கருதுகிறேன், இந்த விடயத்தினைத்தான் முன்னர் உணர முடியாமல் இருந்தது இப்போது இந்த படத்தில் இது தெரிகிறது. இரண்டாவது ELA இல் ஒளி வித்தியாசம் அதிகமாக உள்ளதாக கருதுகிறேன்.
  18. உங்களின் நல்ல காலம் இந்திய இரசிகர்களின் கெட்ட காலம் இவர்களி இருவரும் விளையாடுகிறார்கள், போனசாக கில்லும் உள்ளார் என கருதுகிறேன், கில்லும் உள்ளார் என்றால் என்டர்டெய்மென்ட் உறுதிதான். 25 பேர் கொண்ட அணியினை எடுத்துள்ளார்கள் அதில் இருவரும் உள்ளனர், சில வேளை கடைசி நேரத்தில் உக்கார வைத்து விடக்கூடும்.
  19. மன்னிக்கவும் கோசான் ELA இல் இரு வேறு ஒளி அமைப்பும் சரியாக தெரிகிறது, எனது கவனம் இரண்டு படங்களும் இணைக்கப்படும் பகுதி சிறப்பாக ஒரே படம் போல் காணப்பட்டதால் மற்ற விடயத்தினை கவனிக்காமலே கூறிவிட்டேன், மற்றது இத்தான் முதல் தடவை ELA ஆய்வு செவதால் எனது கருத்து தவறாக இருக்க வாய்ப்புள்ளது ஆனால் சீமானி இடது கை புலிகளின் தலைவரின் படத்துடன் இணையும் பகுதியில் ELA ஒரே படம் என தெளிவாக காட்டுகிறது, உண்மையாக இந்த ELA குளப்பமாக உள்ளது ஆனால் சாதாரணமாக பார்க்கும் போதே மேலே குறிப்பிட்ட காரணிகளின் மூலம் இரு வேறு படங்கள் என தெளிவாக தெரிகிறது. இது ஒரு எடிட் செய்யப்பட்ட ELA இருக்க வாய்ப்புள்ளது இணைக்கும் பகுதியில் செலுத்திய கவனத்தினை மற்ற பகுதிகளில் செய்யாமல் விட்டிருக்கலாம் (நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வேறு ஒளி அமைப்பு) . இந்த குறிப்பிட்ட பகுப்பாய்வு செய்யும் அனுபமிக்கவர்கள்தான் கூற வேண்டும் இந்த ELA போலியானதா இல்லையா என.
  20. ELA படத்தினை எடிட் செய்து தவறுகளை மறைக்க வாய்ப்புள்ளதுதான்.
  21. ஓணாண்டி இணைத்த ELA இல் அது காணப்படவில்லை அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் சும்மா பார்க்கும் போது இரு வேறுபட்ட ஒளி அமைப்பு ப்யன்படுத்தப்பட்டதால்தான் நீங்கள் கூறுவது போல புலிகளின் தலைவர் படத்தில் பளீர் ஒளியும் சீமான் படத்தில் மென் ஒளியும் காணப்படுகிறது. பொதுவாக ELA இல் அது தெளிவாக தெரியும் ஆனால் இந்த ELA இல் இது தெரியவில்லை அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
  22. ரசோதரன் நீங்கள் இணைத்த புட்டின் படத்தில் சீமான் படத்தினை பொருத்தியது மிக தெளிவாக தெரிகிறது, சீமானின் இடது கை புட்டின் படத்துடன் இணையும் பகுதிகளில் ஆனால் ஓணாண்டியின் ELA இல் இரண்டு சீமானும் புலிகளின் தலைவர் உள்ள படமும் மிக ஒத்த பொருத்தத்துடன் உள்ளதுதான் ஆச்சரியமாக இருக்கிறது அனால் சில மேலே நான் குறிப்பிட்ட வித்தியாசங்களை மற்றும் கவிஅருணாசலம் கூறிய வலது கை போன்றவற்றை தவிர்த்து பார்த்தால் இது உண்மையான படம் என்பதாக ELA கூறுகிறது.
  23. இந்த சீமான் படமும் புலிகளின் தலைவரின் படமும் இரு வேறு வேறு வகையான ஒளியமைப்பினை பயன்படுத்தி உள்ளமை தெரிகிறது சீமானின் படத்தில் கூரை ஒளி அமைப்பு அல்லது கூரை தெறிப்பு ஒளி அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது(Softener) மறு வளமாக புலிகளின் தலைவரின் புகைப்படத்தில் நேரடி ஒளி அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு உருவத்திற்கும் வேறு வேறுபட்ட குவியத்தூரம் காணப்படுகிறது Focal length. இவற்றினை பார்க்கும் போது இரு வேறு படங்களாக இருப்பதாக கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).
  24. இது எமது சமூகத்தில் படித்தவர்கள் என்றவுடன் அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை நிமித்தம் எமது சமூகத்தில் மட்டும் நிலவுகிற நிலை காணப்படுகிறது. எமது கல்வி காலனித்துவ நிர்வாக அடிப்படை நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன், பெரும்பாலும் இந்த கல்வியின் பிரச்சினை பெட்டிக்கு வெளியே நின்று சிந்திப்பதனை தவிர்த்து சிறிய மாற்றம் வழமையான வேலையில் ஏற்பட்டால் கூட என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை உள்ளவர்களாகவும், உறுதியான முடிவெடுக்க தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இது ஓர் ஆட்ட்டு மந்தை போல சிந்திக்க மட்டும் வைப்பதற்கான கல்வி முறையாக இருக்கின்றது, குறிப்பிட்ட வேலையினை மிக சரியாக செய்தால் போதுமானது. ஒரு தவறு நிகழ்ந்தால் அது தவறு என்பதனை உணர்ந்து திருத்துவதற்கு பதிலாக பெரிய அளவிற்கு நிலமையினை மாற்றிவிடுகின்ற நிலை காணப்படுகிறது, இதற்கு காரணம் பரீட்சையில் கேள்விக்கு சரியான விடையினை வழங்கி வந்த ஒருவர் பரீட்சையில் ஏற்படும் பெறுபேறு குறைகள் அவர்களை பாதிக்கிறது, அது போல நடைமுறை வாழ்க்கையிலும் தாம் மிக சரியாக இருக்க எதிர்பார்க்கிறார்கள் அதனால் தவறுகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் அவர்களிடம் இருப்பதில்லை. எனக்கு எதியோப்பிய, எத்ரித்திய நண்பர்கள் கிடைக்கவில்லை ஆனால் சூடான், சோமாலிய நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சிந்தனை மிக சிறப்பாகவும் இருக்கும் ஆனால் சில விடயங்களில் விடாப்பிடியாக பிற்போக்குவாதிகளாக இருப்பார்கள் (பெண்கள் விடய்ததில்) அதற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அதனை தவிர்த்து பார்த்தால் எம்மவர்களை விட அவர்கள் சிலபடி கூட என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). வேலையிடத்தில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பயிற்சி நிகழ்வில் ஒரு எழுத்து மூலமான செய்தி குறிப்பினை முதலாவதாக உள்ளவரிடம் கொடுத்து அதில் உள்ள விடயத்தினை அப்படியே அடுத்தவருக்கு வாய் மூலமாக சொல்லுமாறும், அதன் பின்னர் அந்த செய்தியினை கேட்டவர் அதே செய்தியினை அடுத்தவருக்கு வாய் மூலமாக சொல்லுமாறு கூறப்பட்டது, இது ஒரு பல் சமூகம் கொண்ட ஒரு அணியில் நிகழ்ந்தது இறுதியாக அந்த செய்தியினை கேட்டவர் அதனை பகிரங்கமாக செய்தியினை தெரிவிக்க வேண்டும். அந்த செய்தியினை கூறியவர் மிக குறைந்த வரியில் சுருக்கமாக ஒரு செய்தியினை கூறினார் அதனை கேட்ட பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியாக இருந்தது ஒரு சாதாரண செய்தி ஒரு மோசமான செய்தியாக மாறியிருந்தது, எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட செய்தியிலிருந்து முற்றிலும் வேறுபாடாக அந்த செய்தியிருந்தது. இந்த விடயத்தில் பெரிய பங்கை வகித்தது அந்த அணியில் இருந்த ஒவ்வொருவரின் Perception தான் காரணம். அவர்களே அறியாமல் தமது புரிதல்களை செய்தியாக்கியுள்ளார்கள், எமது சமூகத்தில் உள்ள அடிப்படையான விடயங்களையே படித்தவர்களும் என கூறிகொள்ளப்படும் தர்ப்புகளும் தொடர்கின்றனர். அதிக கல்வி அறிவுகொண்ட சமூகம் என எம்மை நாமே கூறிக்கொண்டாலும் அந்த கல்வி அவர்களது சமூக பண்பாட்டு வளர்ச்சிக்கு எனத வகையிலும் உதவவில்லை. தமது சரி பிழைகளை கூட உணரமுடியாத சிந்தனையற்றவர்களாகவே படித்தவர்களும் இருக்கிறார்கள், ரசோதரன் கூறுவது போல வெறும் தொழில்கல்வியாகவே எமது கல்வி உள்ளது, மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதனை அமைதியாக உள்வாங்க முடியாமல், தாங்களாகவே ஒரு அனுமானத்துடன் முடிவிற்கு வந்து தவறான புரிதல்களுடன் இருக்க்கிறார்கள், இதற்கு எல்லாம் தெரியும் எனும் மாயையினை தாமாகவே உருவாக்கி அதனை நம்புகின்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். எமது சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தும் அதனை பற்றி கவலை கொள்ளாமல் மற்ற சமூகத்தில் உள்ள குறைபாடுகளை எள்ளி நகையாடுவதில் இன்பம் காணுபவர்களாக இருக்கிறோம், ஆனால் எமது சமூக மாற்றத்திற்கு இந்த கற்றவர்களின் பங்களிப்பு முற்று முழுதாக இல்லாத நிலையே காணப்படுகிறது, "மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே,. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எமது சமூகத்தின் இந்த இழி நிலை சங்க காலத்திலிருந்து இருக்கின்றது என தெளிவாக தெரிகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.