Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. கமின்ஸ் ஐ பி எல் போட்டிக்காக இந்த உலக கிண்ணப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது, ரிம் டேவிட், கேசல்வூட் காயம் காரணமாக பி பி எல் போட்டியில் இடம்பெறாமலே இருந்தார்கள் (ட்ராவிஸ் கெட்டும் பி பி எல் இல் விளையாடவில்லை) அத்துடன் எல்லிஸும் இறுதி நேர போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. அடம் சாம்பா பி பி எல் மற்றும் பாகிஸ்தான் போட்டித்தொடரில் காயத்தினால் வெளியேறி உள்ளார். இந்திய இலங்கை போட்டிகளில் மைதான ஈரலிப்பு ஏற்படும் அவுஸ்ரேலிய அணியில் ஒரே ஒரு மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளரே உள்ளார் (சம்பா) அவரது உடற்தகுதி போட்டித்தொடர் முழுவதும் பங்குபற்றுவதனை தீர்மானிக்கும். அடுத்த முழுநேர சுழல் பந்து வீச்சாளர் கூனமென் இடது கை விரல்களால் சுழல் பந்து விசுபவர், 3 பகுதி நேர 1 இடது கை மற்றும் 2 வலது கை சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். மார்கஸ் ஸ்டோனிஸிற்கு பதிலாக கமரன் கிறீன் (காயம் ஏற்பட்டால்) விளையாடலாம், சேவியர் பாலட் கேசல்வூட்டிற்கு மாற்றீடாக விளையாடக்கூடும், பென் டொசஸ் இடது கை வேகப்பந்து வீச்சு எல்லிஸ் வலது கை வேகப்பந்து வீச்சு ,ஜோஸ் இங்கிலிஸ் விக்கெட் காப்பாளர், மிட்சல் மார்ஸ் அணித்தலைவர்/ ஆரம்பத்துடுப்பு அவருடன் ட்ராவிஸ் கெட் ஆரம்ப துடுப்பு. எதிர்பார்க்கும் அவுஸ்ரேலிய 11 நபர் அணி. மார்ஸ், கெட், இங்கிலிஸ், ஸ்டோனிஸ், ரென்சோ, டேவிட், மக்ஸ்வல், டோசஸ், கேசல்வூட், சம்பா, கூனமென், எலிஸ் / பார்லட். ரிம் டேவிட்டும் சுழல் பந்து வீசக்கூடியவர். முழுநேர வேகபந்து வீச்சு கேசல்வூட், டோசஸ், எல்லிஸ் இதில் எல்லிஸ் ஆட்ட நடுப்பகுதியில் பந்து வீசுவதுடன் ஆட்ட இறுதியிலும் சிறப்பாக பந்து வீசுவார் (சென்னை அணியில் விளையாடியவர்), டோசஸசும் கேசல்வுட்டும் ஆரம்ப மற்றும் இறுதி ஓவர்களில் பந்து வீசக்கூடியவர்கள் பகுதிநேர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டோனில் நடுப்பகுதியில் பந்து வீசுபவர்.
  2. சிறுபான்மையினரின் பாதுகாப்பினை 3 பெரிய அளவுகோலின் அடிப்படையில் கணிப்பதாக கூறப்படுகிறது. சட்ட அங்கீகாரம் அரசியல் அதிகார பகிர்வு சிறுபான்மை மீதான முரண்பாடுகளை கையாளும் முறை (Conflict management outcome) இதனடிப்படையில் தென்னாசியாவில் மிக மோசமாக சிறுபான்மையினரை நடத்தும் இலங்கையினை எவ்வாறு மேற்கு நாட்டுடன் ஒப்பிட முடியும்? தென்னாசியாவில் உள்ள மற்ற நாடுகளும் பெருமளவில் இதே நிலையில் இருந்தாலும் அவை ஒப்பீட்டளவில் மேலான நிலையில் இருகின்ற நிலையில், இலங்கை நிலை மோசமாக இருக்கின்றது. இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைமை என கூறப்பட்டாலும் பல கட்சிகள் வந்தாலும் இந்த நிலமை மாறமுடியாத நிலை காணப்படுகிறது. இது எதனால்? மதங்களில் இருக்கும் பிற்போக்கான மூட நம்பிக்கை போன்ற நாட்டிற்கான கோட்பாட்டில் (State Doctrine) மகாவம்ச போன்ற கற்பனைக்கதைகளின் (சிங்கமே இல்லாத நாட்டில் சிங்கத்தின் வாரிசுகள் போன்ற கறபனை கதைகள்) பாதிப்பு காரணமாக இருக்குமோ என நினைக்கிறேன்.
  3. அவுஸ்ரேலிய அணித்தெரிவு பற்றிய சர்ச்சைகள் உள்ளது, 2 இடது கை சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள், கோனலி அனைத்துறை ஆட்டக்காரராக இருந்தாலும் அவரரது துடுப்பாட்டம் சிறப்பாக இல்லை ஏற்கனவே கூனமன் இடது கை சுழல் வீசுகின்ற நிலையில் இன்னொரு பந்து வீச்சாளர் அதுவும் பகுதி நேர பந்து வீச்சாளர் தேவையா? மக்ஸ்வல் கோனலி போலவே பி பி எல் தொடரில் மோசமான போர்மில் உள்ளார்.
  4. நியுசிலாந்து அணி இந்தியணியினை ஒருநாள் போட்டி தொடரினை வென்றதற்கு பின்னர் ரி 20 போட்டியில் நியுசிலாந்து அணியினை இந்தியணி துவம்சம் செய்திருந்தது, இந்த இந்தியணியினை பார்க்கும் போது நிச்சயமாக இந்தியாவிற்குத்தான் கோப்பை போல இருக்கின்றது, நான் வளமை போல இந்தியணியினை தெரிவு செய்யவில்லை அந்த அதிர்ஸ்டமும் இந்தியணிக்கு சாதகமாக உள்ளது.
  5. பாபர் மிக மெதுவாக இந்த தொடர் முழுவதும் ஆடினார், குறித்த போட்டியில் பவர் சேர்ச் இன் முதலாவது பந்தினை தான் எதிர்கொள்வதற்காக சிமித் ஓட்டத்தினை மறுத்து விட்டார் அதனால் ஏற்பட்ட மனஸ்தாபம். சிமித் சிறப்பாக இந்த போட்டி தொடரில் விளையாடினார் ஏனோ அவுஸ்ரேலிய அணியில் இடம் பிடிக்கமுடியவில்லை. புதிய தலைமுறை ரி20 வீரர்கள் முதலாவது பந்திலேயே அடித்தாடுகிறார்கள் பாகிஸ்தான் அணியினர் சிலர் ஆடியிருந்தார்கள் பெரிதாக ஒருவரும் சோபிக்கவில்லை, ஸாகின் சா அப்ரிடி கூட ஆரம்பத்தில் பந்து வீச்சில் தடுமாறினார் பின்னர் சிறப்பாக செயற்பட்டார், சிறப்பாக செயற்படவேண்டும் என நினைத்து மேலதிக அழுத்தத்தினை தாமாக உருவாக்கினார்களா என தெரியவில்லை. அந்த போட்டியின் பின்னர் சிட்னி சிக்ஸர் அணித்தலைவர் கூறினார் தாம் கலாச்சார இடைவெளியினை புரிந்து கொண்டோம் எனவும், பாபரினை பற்றி நல்ல விதமாகவே கூறினார், அதனை போலவே சிமித்தும் கூறியிருந்தார், பாபரின் ஈகோவினை பாதித்திருக்க கூடும் அதற்கான எதிர் வினையினை இந்திய யுரிப்கள் மிகைப்படுத்தியிருந்தார்கள் என நினைக்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் பாபர் உள்ளடங்கலாக களத்தடுப்பில் மிக உற்சாகமாக இருந்தார்கள்.
  6. பெரும்பான்மை பெளத்த சிங்களவர்கள் கூட இந்த தமிழ்தேசியம் தொடர்பான பீதியினாலேயே தமிழ் மக்களின் மீதான இன அடக்குமுறையாக சுமந்திரன் கூற முற்படுகிறார், இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களும் நேரடியான அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். அதிகார பரவலாக்கமோ அரசியல் சட்டமைப்பு சீர்திருத்தமோ நாட்டை பிரிக்கும் என நினைப்பது ஒரு முட்டாள்தனம் அதற்கான சூழலை இந்த அடக்குமுறைகளாலேயே உருவாக்குகிறார்கள். தமிழ் தேசியம் என்பது தவிர்க்க முடியாதது என்பது போலவே உணருகின்றேன், ரே டாலியோ இன் மாறுகின்ற உலக ஒழுங்கினை கையாள்வது எனும் புத்தகத்தில் கூறியுள்ள பண்புகளினடிப்படையில் தமிழ் தேசியத்தின் பண்புகள் பல இருக்கின்றது அதனால் எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நிலை ஏற்படலாம். அது ஒரு வெறும் நிகழ்தகவு போன்ற விடயம்.
  7. தமிழ் தேசியம் தவிர்க்க முடியாத உண்மை, அந்த யதார்த்த புரிதல் எனக்கும் உள்ளது.
  8. இவரது சகோதரர் கரி கூட இத்தாலிக்காக விளையாடுகிறார். பாபர் பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடியிருந்தார், தொடர் முழுவதும் மோசமான போர்மில் இருந்தார்.
  9. அவுஸ்ரேலிய பிபிஎல் பார்க்கின்றவர் நீங்கள், அவுஸ்ரேலியாவிலுள்ள மெனன்டி சகோதரர்களும் இத்தாலிக்காக ஆடுகிறார்கள் என கூறப்படுகின்றது, பல சர்வதேச வீரர்களை கொண்ட அணி.
  10. அண்மையில் நடந்த போட்டித்தொடரில் பாகிஸ்தான் அவுஸ்ரேலிய அணியினை ஊதித்தள்ளியுள்ளார்கள், இந்திய இலங்கை போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது, ஒப்பீட்டளவில் இலங்கை ஆடுகளம் இந்திய மைதானங்கள் போல பந்து முட்டுக்காலுக்கீழாகவும் திரும்பாத செத்த பிட்சாக இருக்காது, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமிடையே ஒரு சமநிலையான போட்டியாக இருக்க வாய்ப்பாக இருக்கும் (விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய வீரர்களே சுழல் பந்து வீச்சினை சமாளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்).
  11. இது புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் இல்லை என நினைக்கிறேன். எனது நண்பர் ஒருவர் இருந்தார் (இப்போதும் இருக்கிறார் என நம்புகிறேன்), அவர் பேச்சுக்கள் அவரரது தோற்றத்திற்கும் எதிரும் புதிருமாக இருக்கும், அவர் 90 களின் பிற்பகுதிகளில் கூறினார் புலிகள் இல்லாவிட்டால் இலங்கை (அவர் கூறிய வார்த்தையினை அப்படியே கூற முடியாது) பாலியல் தொழில் செய்பவரது வீட்டில் இருக்கும் வெத்திலை பெட்டி போன்றது என்றார். அது தற்போது கண்முன்னால் நடைமுறையாகி நிற்கின்றததனை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. 4 வகையான போர் விளைவுகளை கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்கிறார்கள் என கூறுகிறார்கள். அரசியல் ரீதியான வெற்றி போர் முடக்கம் வெற்றி மோசமான விளைவுகளுடன் அற்புதமான வெற்றி புலிகளை தோற்கடித்ததன் மூலம் இலங்கை பெற்ற வெற்றி 3 ஆவது வகை அதன் பின்விளைவுகள் தற்போது புலிகள் இல்லாத நிலை ஏற்படுத்திய வெற்றிடம் இலங்கையில் பல சக்திகள் தலையீடு உறுதி செய்யப்பட்டுள்ளது (இது ஒரு ஆச்சரியமான பலச்சமனிலையின் பண்பாக இருக்கின்றது). இலங்கை இதிலிருந்து என்றும் வெளியேற முடியாது (இலங்கை அரசியல் பொருளாதார ரீதியாக பிச்சைக்கார நிலையிலிருந்து). இந்த நிலையினை இலங்கை மாற்றமுடியுமா? முடியும்! ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிப்பளிக்கப்பட்டு உரிமைகள் வழங்கி சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு ஒரே சக்தியான நாடாக கட்டியமைத்தால் மட்டுமே சாத்தியம், மகா வம்ச சிங்கள மேலாதிக்க எண்ணத்தில் இருக்கும் இலங்கையால் அது சாத்தியமல்ல. இந்தியாவினை பொறுத்தவரை இலங்கை ஒரு நேர வெடிகுண்டு (உடைந்த அயல் தேசம்) எந்த ஒரு நாடும் தனது அயல் நாடு ஒரு உடைந்த தேசமாக இருக்க விரும்பாது அதனால் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும். அதனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்விற்கு இந்தியா கடும் அழுத்தத்தினை இலங்கை மேல் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையினை தவிர்க்கவே முடியாது. இங்கு மகாவம்ச சிங்கள மேலாதிக்கத்தின் தோல்வி (ஆனால் இலங்கையின் தோல்வி எப்போதோ நடந்து விட்டது அதன் பெறுபேறுகள்தான் தற்போது நிகழ்கிறது) உறுதிப்படுத்தாத முறையில் (சுய நிர்ணயம், கூட்டாட்சி போன்றவற்ற வாசகங்களை தவிர்த்து ஆனால் அதே உரிமைகளை) அதிகாரப்பகிர்வு எனும் பதத்திற்கு தமிழர்கள் வரவேண்டும், அதனால் தமிழ் தேசியம் என கூறுவதனை தவிர்ப்பதன் மூலம் (மகா வம்ச சிங்கள மேலாதிக்கத்தின் முகத்தினை காக்க) பிரச்சினையினை இலகுவாக தீர்க்கலாம் என கருதுகிறேன்.
  12. இரன்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர், ஜேர்மனி மற்றும் ஜப்பான் இரண்டினையும் அதன் சொந்த இராணுவத்தினை பேண கூடாது எனும் கட்டுப்பாட்டிலேயே இவ்வாறான உடன்பாட்டிற்கு வந்ததாக நினைவுள்ளது. இரண்டு நாடுகளும் போர் இழப்பின் பின்னர் போர் வெற்றி, வீரம் என பேசி காலம் கடத்தாமல் அவர்களுக்கிருந்த கட்டுப்பாடுகளுக்குள்ளாகவே பொருளாதார ரீதியாக தம்மை கட்டமைத்தார்கள். எங்கோ இருக்கும் அவுஸ்ரேலியா தனது வழஙகளில் குறிப்பிட்ட பகுதியளவு உரிமை எடுக்க முற்பட்டாலே ஆட்சி கவிழ்ப்பு நிகழுகின்ற நிலை காணப்படுகிறது. அவுஸ்ரேலியாவில் வர்த்தக வரி 28% என நினைக்கிறேன், ஒரு அதிபர் மிக பெரும் இலாபம் பெறும் சுற்றுசூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் சுரங்க அகழ்வு வர்த்தகத்திற்கு 40% வரி விதிக்கப்போவதாக கூறினார் (அதிகரித்து வரும் வயோதிகர்களின் எண்ணிக்கையினை சமாளிப்பதற்கான பணத்தினை பெறும் முயற்சி), அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதற்கு முன்னரும் பிரச்சினை ஏற்படுத்தும் அதிபர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
  13. இந்தியா, இலங்கை எல்லாம் வெறும் லேபிள்தான், உரிமைகள்தான் முக்கியம். பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருபதனை விட ட்ரம்பிடம் காசு வாங்கிக்கொண்டு அமெரிக்காவுடன் சேர்ந்தால் (கிறீன்லாந்து பேரம்) நல்ல தனிமனித உரிமை, பொருளாதார சுதந்திரம் எல்லாம் இருக்கும் (இந்தியா என லோக்கலா சிந்திக்காமல் இன்ரனெசனாலா போகலாமே), பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் இருக்கிறதையும் பிடுங்கி விடுவார்கள்🤣. 20. இந்தியாவின் அரசியல், பொருளாதார பங்களிப்புகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது. இந்தியா என்றைக்குமே உலக வல்லரசாக முடியாது என்பதே தற்போதய யதார்த்தம் .
  14. கற்கால மனிதன் காட்டினில் வாழ்ந்த காலத்தில் இருந்த சுய பாதுகாப்பு பொறிமுறை முழுவதும் பல தலைமுறையாக இக்கால மனிதனுக்கும் கடத்தப்படுகிறது. இருளை கண்டால் இயல்பாக ஏற்படும் பயம், எமது புலன் மட்டுப்படுத்தப்படும் போது அதன் பின்னால் இருக்கும் ஆபத்திலிருந்து காக்க சுய பாதுகாப்பு பொறிமுறை பயத்தினை தூண்டிவிடுகிறது. இவ்வாறான பயமான சூழலில் விரைவாக செயற்படுவதற்காக மூளை குறுக்கு வழிகளை தேடுகின்றது. நவீன காலத்திற்கு இந்த விதமாக வேகமாக சிந்திப்பது பாதகமானது, ஆனால் மிருகங்கள் போல மனிதனும் சுய பாதுகாப்பு பொறிமுறையால் தூண்டப்படுகின்ற நிலை தொடர்ந்து காணப்படுகிறது. இந்த ஒலி ஆயுதம் தொடர்பாக கூறும் ஒரு தமிழ் யுரியூப் காணொளியாளர் மிகையான ஒலி அலைகளை பயன்பாடுபற்றி கூறியவர் பின்னர் இறந்த கியூப பாதுகாப்பாளர்கள் உடலங்கள் சிறிய பெட்டியில் கொண்டு செல்லப்பட்டதாக இரண்டையும் தொடுக்குக்கின்றார். ஆதிகாலத்தில் இடி மின்னல் போன்ற இயற்கை விளைவுகள் ஏற்படும் போது மனிதன் அதன் காரண காரியத்தினை விளங்கிக்கொள்ளமுடியாத நிலையில், அந்த இயற்கை விளைவுகலை தமக்கான ஆபத்தாக பார்த்து அதிலிருந்து தப்ப முதன் முதலில் உருவாக்கப்பட்டதுதான் இயற்கை தெய்வ வழிபாடு (எமது இந்து மதத்தில் அதன் தொடர்ச்சி இன்னமும் காணப்படுகிறது). பனிப்போர் காலத்தில் இரஸ்சியா "மொஸ்கோ சிக்னல்" (அதிக ஒலி அதிர்வுகள்) மூலம் வெளிநாட்டு தூதுவர்களது உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவ்வாறான விடயங்கள் எமது புரிதலுக்கு அப்பாற்பட்டிருக்கும் போது ஏற்படும் மிகைப்படுத்தப்பட்ட பயம் தூண்டப்படும், அதே நேரம் பயத்தில் இருக்கும் போது எமது புரிதல்கள் மட்டுப்படுத்தப்படும் (இரு வழிகளிலும் நிகழும்). இது ஒரு அமெரிக்க உளவியல் யுத்த பிரச்சாரம், இது போல எதிர்த்தரப்பினை பலவீனப்படுத்த பல யுத்திகள் அமெரிக்காவினால் கடந்த காலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்ல சொந்த மக்களுக்கெதிராகவும் உதாரணமாக ஒரு எதிர்த்தரப்பு மிக பயங்கரமான கொடிய ஆயுதம் வைத்துள்ளது என கூறி மக்களை பீதிக்குள்ளாக்கி தனது நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பது போன்ற செயல்கள். இவ்வாறான ஆயுதங்களின் பயன்பாடு மிக மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு கொண்டதாகவே உண்மையில் இருக்கும் ஆனால் அவை மிகைப்படுத்தப்படுவதற்காக அது பற்றிய குறிப்புகளை கூறாமல் விடுவதன் மூலம் மக்களின் இயல்பான சுய பாதுகாப்பு பொறிமுறையினை தூண்டிவிட்டு அதனை மிகைப்படுத்துகிறார்கள் (வெனிசுலா இராணுவத்தினர் தாம் இராணுவ சட்டத்தினை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் பரப்புரையினை பயன்படுத்தியிருக்கலாம்). போரில் இந்த உளவியல் யுத்தம் மிக காத்திரமானது.
  15. யதார்த்ததிற்கும் எதிர்பார்ப்பிற்குமிடையே இடைவெளி இருக்கும் போது, யதார்த்தத்திற்கு புறம்பான மாய மந்திரத்தால் மாங்காய் விழுத்துவோம் என வாக்குகள் வாங்கி அரசியல்வாதிகளாகி அனுகூலம் பெறமக்களை ஏமாற்றி வருடக்கணக்கில் அரசியல்வாதிகளாக வலம் வரலாம், ஆனால் உண்மையினை கூறினால் அதற்கான எதிர்வினை? கடந்தகால போரும், வெற்றியும் பேசப்படும் அளவிற்கு கூட எதிர்காலம் பற்றிய சிந்தனை தேடல் இல்லாமல் இருக்கின்றோம். இந்த இரண்டுக்கும் இடையே உள்ள யதார்த்த இடைவெளியினை கடக்க முடியாமல் இருக்கின்றோம்.
  16. 1950 இல் அமெரிக்க கொள்கையாக இரஸ்சியாவினை வெளியேயும் ஜேர்மனியினை கீழேயும் வைத்திருக்கும் இரட்டை கட்டுப்பாட்டு கொள்கையினனி அமெரிக்கா கொண்டிருந்த்து. ஜேர்மனானால் என்ன அவுஸ்ரேலியாவானால் என்ன தேசிய வளம் நலன் என பேசும்போது பிரச்சினைகள் உருவாகும். கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் தமது ஆட்சியினை தக்கவைக்கவே விரும்புவார்கள்.
  17. செல்லும் செல்லாததெல்லாம் செட்டியாருக்கு சொந்தம், அமெரிக்க கண்டத்தில் ட்ரம்ப் ஒன்றெடுத்தால் ஒன்று இலவசம்.🤣
  18. அமெரிக்க இராணுவத்தினால் அவ்வாறான மரபு வழி சமரினை செய்யமுடியாது, மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் செய்யும் நிலையிலேயே இருக்கின்றது எனக்கருதுகிறேன்.
  19. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் பெருமளவான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்தும் நாடுகளில் ஜேர்மன் முன்னிலையில் உள்ளது ஆனால் புதிதுதாக ஐரோப்பிய ஒன்றியம் வடிவேலு நகைசுவை மாதிரி இவன் (ஜேர்மன்) ரொம்ப நல்லவன்டா எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறான் என உக்கிரேன் சுமையினையும் தலையில் வைத்துவிடுவார்களோ என பயப்பிடுகிறார் ஜேர்மன் அதிபர். அவர்களுக்கு செலன்ஸ்கியின் பதில்.🤣 தற்போது உலக நடப்பு, சிரிப்பு பகுதியாகிவிட்டது.
  20. அமெரிக்க பாதுகாப்புத் தலைவர் பீட் ஹெக்செத் முக்கிய நேட்டோ அமைச்சர்கள் கூட்டத்தைத் தவிர்க்கிறார் பென்டகனின் கொள்கைத் தலைவரும் தனிமைப்படுத்துபவருமான எல்பிரிட்ஜ் கோல்பி அதற்குப் பதிலாகக் கலந்துகொள்வார், அமெரிக்க உயர் அதிகாரிகள் நேட்டோ கூட்டத்திற்கு ஒரு துணை அதிகாரியை அனுப்புவது இது இரண்டாவது முறையாகும். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கூட்டத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக போதுமான அளவு செலவிடவில்லை என்று கடுமையாக விமர்சித்து சீற்றத்தைத் தூண்டிய பீட் ஹெக்செத், பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இரு அதிகாரிகளும் தெரிவித்தனர், இருவரும் சுதந்திரமாகப் பேசுவதற்கு பெயர் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. | ஷான் தியூ/இபிஏ ஜனவரி 29, 2026 மாலை 6:22 CET விக்டர் ஜாக் மற்றும் பால் மெக்லியரி எழுதியது பிரஸ்ஸல்ஸ் - அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் அடுத்த மாதம் நடைபெறும் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தனது துணை அதிகாரியை அனுப்புவார் என்று அமெரிக்க அதிகாரி மற்றும் ஐரோப்பிய தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு அட்லாண்டிக் கடல்கடந்த கூட்டணிக்கான வாஷிங்டனின் அர்ப்பணிப்பு குறித்து மேலும் கேள்விகளை எழுப்பக்கூடும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முடியும் என்று மீண்டும் மீண்டும் கூறி கூட்டணியை வெடிப்பின் விளிம்பிற்கு கொண்டு வந்ததிலிருந்து , நேட்டோவின் 32 பாதுகாப்புத் தலைவர்கள் பிப்ரவரி 12 அன்று முதல் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்திற்காக கூடுவார்கள். ஆனால், கடந்த ஆண்டு இதே கூட்டத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக போதுமான அளவு செலவு செய்யவில்லை என்று கடுமையாகத் தாக்கி சீற்றத்தைத் தூண்டிய ஹெக்ஸெத் , பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுதந்திரமாகப் பேச பெயர் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ள இரு அதிகாரிகளும் தெரிவித்தனர். அதற்கு பதிலாக, பாதுகாப்பு கொள்கைக்கான துணைச் செயலாளரான எல்பிரிட்ஜ் கோல்பி, அவருக்குப் பதிலாக கலந்து கொள்ள உள்ளார் என்று தூதரும் அதிகாரியும் கூறினார், இந்த முடிவு இன்னும் மாற்றத்திற்கு உட்பட்டது. கோல்பி பென்டகனில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியில் உள்ள சிவில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் நெருங்கிய கூட்டாளி ஆவார். POLITICOவின் கருத்துக்கான கோரிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை. "பிரிட்ஜ்" என்று செல்லப்பெயர் பெற்ற கோல்பி, பென்டகனுக்குள் ஐரோப்பாவின் மீது கடுமையான போக்கைக் கொண்டவராகக் கருதப்படுகிறார், மேலும் உலகளவில் குறைவான செயலில் உள்ள அமெரிக்க பங்கை - குறிப்பாக இராணுவ ரீதியாக - ஆதரிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தீவிர ஆதரவாளராக உள்ளார். மீண்டும் மீண்டும் தாமதங்களை எதிர்கொண்டுள்ள ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான திட்டங்களை வரைவதற்கும் அவர் பொறுப்பு. கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய அமெரிக்க பாதுகாப்பு மூலோபாயத்தை வடிவமைப்பதற்கு கோல்பி பொறுப்பேற்றார், இது ஐரோப்பாவை தரமிறக்கி , அதற்கு பதிலாக அமெரிக்க தாயகத்தையும் சீனாவையும் பாதுகாப்பதற்கு வாஷிங்டன் "முன்னுரிமை அளிக்கும்" என்று கூறியது. வெளியிடப்படுவதற்கு முன்பு, இந்த ஆவணம் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் அவர்களால் ஆழமான திருத்தங்களுக்கு உட்பட்டது , அவர் பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் வெளிச்சத்தில் சீனப் பிரிவில் மாற்றங்களை வலியுறுத்தினார். பெசென்ட்டின் உள்ளீடுகள் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு உத்தியில் சீன மொழியைக் குறைத்தன. அமெரிக்காவிற்கு "குறைவான கடுமையான" அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஐரோப்பாவில் "கூட்டாளிகள் முன்னிலை வகிப்பார்கள்" என்பதையும் பாதுகாப்பு உத்தி தெளிவுபடுத்துகிறது - இது ரஷ்யாவிற்கு ஒரு மறைமுகமான சொல். ஹெக்செத் நேட்டோ கூட்டத்தைத் தவிர்ப்பது இது முதல் முறை அல்ல . ஆனால் , கடந்த மாதம் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தனது துணை அதிகாரியை நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு அனுப்பிய பின்னர், அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் உயர்மட்டக் கூட்டத்தைத் தவறவிடுவது இது இரண்டாவது முறையாகும் . முன்னாள் நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஓனா லுங்கெஸ்கு, இந்த நடவடிக்கை "அமெரிக்கா தனது நட்பு நாடுகளின் கவலைகளை கவனமாகக் கேட்கவில்லை என்பதற்கான கூடுதல் சமிக்ஞையை அனுப்பும் அபாயத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக மார்கோ ரூபியோ கடைசி கூட்டத்தைத் தவிர்த்த பிறகு," என்றார். "இதைச் சொன்ன பிறகு, ஒரு நன்மையும் இருக்கிறது," என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவில் மூத்த உறுப்பினராகப் பணிபுரியும் லுங்கெஸ்கு கூறினார், "எல்பிரிட்ஜ் கோல்பி ... [புதிய அமெரிக்க பாதுகாப்பு மூலோபாயத்தின்] நோக்கம் மற்றும் தாக்கங்களை விளக்கவும், நட்பு நாடுகளின் கருத்துக்களைக் கேட்கவும் சிறந்த இடத்தில் உள்ளார்." https://www.politico.eu/article/us-defense-chief-pete-hegseth-to-skip-key-nato-ministerial-meeting/
  21. கியூபா மீது தேசிய அவசரநிலையை டிரம்ப் அறிவித்தார் Olha Kovalchuk, Iryna Balachuk - 30 ஜனவரி, 08:07 டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 36392 வது கியூபா மீது தேசிய அவசரநிலையை அறிவிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார், இது வாஷிங்டன் தீவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க அனுமதிக்கும் ஒரு நடவடிக்கையாகும். மூலம்: வெள்ளை மாளிகை வலைத்தளத்தை மேற்கோள் காட்டி ஐரோப்பிய பிராவ்தா விவரங்கள்: ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் மற்றும் ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா குழுக்களை உள்ளடக்கிய "பல விரோத நாடுகள், நாடுகடந்த பயங்கரவாத குழுக்கள் மற்றும் தீங்கிழைக்கும் நடிகர்களுடன்" கியூபா ஒத்துழைப்பதால், அது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அசாதாரண அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது . அமெரிக்காவின் ஆபத்தான எதிரிகளை கியூபா வைத்திருப்பதாகவும், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இராணுவத் திறன்களை அதன் பிரதேசத்தில் நிலைநிறுத்த கியூபா அனுமதிக்கிறது என்றும் டிரம்ப் கூறினார். "கியூபா ரஷ்யாவின் மிகப்பெரிய வெளிநாட்டு சமிக்ஞை புலனாய்வு வசதியை நடத்துகிறது, இது அமெரிக்காவின் முக்கியமான தேசிய பாதுகாப்பு தகவல்களைத் திருட முயற்சிக்கிறது. கியூபா தொடர்ந்து PRC உடன் ஆழமான உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உருவாக்குகிறது" என்று நிர்வாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா இரண்டாம் நிலை வரிகளை அறிமுகப்படுத்துகிறது, அதாவது கியூபாவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் விற்கும் அல்லது வழங்கும் நாடுகளின் பொருட்களுக்கு வரிகள். அமெரிக்க வர்த்தகச் செயலர் மற்றும் வெளியுறவுச் செயலரின் மதிப்பீடுகளுக்குப் பிறகு, அத்தகைய கட்டணங்களைப் பயன்படுத்துவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும். பின்னணி: கடந்த ஆண்டு, அமெரிக்க செனட்டர்கள் குழு ஒன்று இதேபோன்ற வழிமுறையைப் பயன்படுத்தி ரஷ்யாவிற்கு எதிராக தடைகளை முன்மொழியும் மசோதாவைத் தொடங்கியது. ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட டிரம்ப் தயாராக உள்ளார் , அந்த நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்தால். https://www.pravda.com.ua/eng/news/2026/01/30/8018593/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.