Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  888
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by vasee

 1. பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகளை வருமான வரியில் விலக்கு பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு பொதுவாக வருமான வரித்துறையினர் இரு வகையாகப்பார்க்கிறார்கள் 1. முதலீட்டு வர்த்தகம் 2. தின வர்த்தகம் தின வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகளை முழுமையாக உங்கள் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம், ஆனால் முதலீட்டு வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகள் உங்கள் எதிர்கால முதலீட்டு வர்த்தக வருமானத்திலிருந்து விலக்கு வழங்கப்படும், அத்துடன் முதலீட்டு வர்த்தகத்திற்கு வருமான வரியும் குறைவு,நாடுகளுக்கிடையே இதற்கு வேறுபாடு காணப்படலாம், மேலும் இந்த விபரம் ஒரு குத்து மதிப்பான விபரம் அத்துடன் நான் கணக்காய்வாளருமல்ல.
 2. பத்திரிகை அல்லது காணொளி பார்த்துவிட்டு எவ்வாறு மூளை அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அதே போல் வெற்றிகரமான முதலீட்டாளரக பலவிடயங்கள் உள்ளது அவற்றைக்கருத்திற்கொள்ளாமல் முதலீட்டில் குதித்தால் நீண்டகாலத்தில் பண இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது, இது ஓர் ஆலோசனை அல்ல எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.
 3. https://www.youtube.com/watch?v=XYZ6_n7Mpb0 இந்த காட்சியில் முகவரி தேடுபவர் பதில் சொல்லும் பெண்ணின் மொழி நடையினை அவதானித்து அவரது பூர்வீகம் பற்றி அறிந்து கொள்ள முயல்வார், அதற்கு அந்தப்பெண் தான் ஒஸ்ரியா நாட்டினை சார்ந்தவள் என்று கூறுவார் பதிலுக்கு ஒஸ்ரியாவா? எனக்கேட்டுவிட்டு அவுஸ்திரேலியரின் மொழிநடையில் நகைச்சுவையாகப்பேசுவார், அவுஸ்திரேலியா வருகைதராவிட்டால் இந்த நகைசுவை முழுமையாகப்புரிந்திருக்காது,நாம் அறிந்த தரவுகளின் அடிப்படையில் முடிவு எடுக்கிறோம். நம்பிக்கைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, பல தடவைகளில் அதற்காக உயிர்கள் கூட இழக்கப்படுகின்றன, எந்த கருத்தும் தவறான கருத்தல்ல சில வேளைகளில் அவை முழுமையடையாமல் இருக்கும் அதற்கு காரணம் குறித்த கருத்து தொடர்பான தரவுகள் முழுமையற்றதாக உள்ளதே அதற்குக்காரணம், உலகில் யாரும் முட்டாள்கள் இல்லை எமக்கு ஒருவர் முட்டாளாகத்தெரிந்தால் அது அவரது தவறல்ல,
 4. முன்னர் சிறுபான்மை வெள்ளையினத்தவர் பெரும்பான்மை கறுப்பினத்தவர்களை தென்னாபிரிக்காவில் அடக்கியாண்டார்கள், அதே போல ஒட்டு மொத்த உலக சனத்தொகையில் சிறுபான்மையினத்தவர்களான வெள்ளையினத்தவர்கள் உலகை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்கள். ருபேர்ட் மேர்டொக் யூத இனத்தவர், செல்வந்தர், மேற்குலகில் தனது தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலிகள் என தனது தகவல் தொடர்பு சாதனங்களினூடாக வலது சாரி கட்சிகளுக்காக செயற்படுகிறார், வலது சாரிக்கட்சி முதலாளித்துவம் மற்றும் அடிப்படைவாதத்தினூடாக தமதிருப்பை உறுதிப்படுத்துகிறது, விடுதலைப்புலிகள் அமைப்பு பொதுவுடமைக்கொள்கையான இடது சாரி அமைப்பு, இந்தியாவில் இந்திராகாந்தி ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அமெரிக்க இந்திய உறவு கடுமையாக பாதிப்பிற்குள்ளாகியிருந்தது ஆனால் இப்போது மோடி ஒரு வலது சாரி, இந்த உலகையாளும் சிறுபான்மை வெள்ளையினத்தவர்களுக்கு உலகெங்கும் இவ்வாறான வலது சாரி முகவர்கள் தேவை (அடியாட் கள்) உலகையாள. எவ்வாறு ரூபேர்ட் மேர்டொக் மேற்குலகில் அரசை தீர்மானிக்கின்றார், பணம், அதிகாரம்,நாமும் பொருளாதார மற்றும் கல்வி மூலம் அதிகாரங்களை பெறுவதுடன் காலத்திற்கேற்ப கொள்கை வகுப்புக்களையும் செய்யவேண்டும்.
 5. அமேசன் பிரைமில் "அந்த அறிக்கை" ஆங்கிலப்படத்தை தயவு செய்து பாருங்கள், மேற்கு நாட்டினர் தாம் செய்யும் தவறுகளை எவ்வாறேனும் நியாயப்படுத்த முனைவர், சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு சளைத்தவர்கள் அல்ல மேற்கு நாட்டினர், அண்மையில் அவுஸ்திரேலியப்படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட படுகொலைகள் வெளிவந்தவுடன் அதனை உலகம் எவ்வாறு கையாண்டது? (அந்த விவரம் வெளியே வராமல் இருப்பதற்காக அதனை வெளியிட முனைந்த சட்டத்தரணியின் மீதும் செய்தி நிறுவனத்தின் மீதும் சட்டத்துறையும் சட்ட அமலாக்கப்பிரிவான காவல்துறையின் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் உலகு எவ்வாறு அணுகியது) இந்த உலகு நியாயத்திற்கு மதிப்பளிப்பதில்லை மாறாக பணத்திற்கும் அதிகாரத்திற்கும் மதிப்பளிக்கும், ஏழைகளுக்கு நீதி கிடைக்காது, அதிகாரம் செலுத்தும் நிலைக்கு நாம் உயர்ந்தால் மாத்திரமே மாற்றம் ஏற்படும்
 6. காணாமல் போனோர் மற்றும் சிறையில் வாடுபவர்களின் பிரச்சனை தொடர்பாக மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் வெளிப்படையாக மக்கள் உணர்வுகளைத்தூண்டி விடுவதற்காக ஒரு புறம் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இவர்களின் விடுதலைக்காக அணுகும் தரப்பிடம் பணம் கேட்பது, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக வரும் பணத்தை கொள்ளையிடுவதில் மட்டுமே குறியாகவுள்ளனர் (அனைவருக்கும் புரியும் யாரிவர்கள் என்பது)
 7. இந்திய அணி இந்த தொடரைக்கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம், குறிப்பாக தமிழக வீரர் நடராயன் அடுத்த போட்டிகளில் பஙகு பற்றினால் இன்னும் சாதகமாக அமையும் என்றே தோன்றுகிறது ஏனெனில் அவுஸ்திரேலிய ஆரம்ப ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் கால் நகர்வுகளை செய்யும் போது இயல்பாகவே பந்தின் திசைக்கு முதலில் கால்களை பந்து வீசுவதற்கு முன்பாகவே நகர்த்தி பின்னர் பந்தின் அளவுகளுக்கேற்ப கால்களை அனுசரித்துக்கொள்கிறார்கள் ( அடிப்படையில் பந்து வீசுபவரின் கையில் இருந்து பந்து விடுபடும் போது பந்து வீச்சாளரின் மணிக்கட்டை கவனித்து பந்து அளவினைக்கணித்து பின்னர் பந்தின் திசையைக்கேற்ப கால்களை நகர்த்துவதுதான் மரபு) நடராயன் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இலக்கு மேலாக வந்து ஆட்டக்காரரின் இலக்கிற்கு வெளியே புதிய பந்தினை வீசி இலக்கு நோக்கி பந்தினை திருப்பும் போது அவுஸ்திரேலிய ஆட்டக்காரர்களின் கால்களில் பட்டு ஆட்டமிழக்க அதிகளவான சந்தர்ப்பங்கள் உண்டு
 8. முன்பு யாழ்களத்தில் ஓர் உறவு தனியராக தமிழ் அரசியல்க்கைதிகளின்நலஙளுக்காக உழைத்திருந்தார், ஆனால் இப்பொது மக்கள் பிரதினிதிகளே இவர்களைக்கண்டு கொள்வதில்லை
 9. இவர்களது இந்த நிலைக்கு காரணம் எமது அர்சியல்வாதிகளும் கள்ள மவுனம் சாதித்த எமது மக்களும் தான். அந்நேரம் தமிழ் மக்கள் தமது கடும் எதிர்ப்பினைத்தெரிவித்திருக்கவில்லை எனறே தோன்றுகிறது.
 10. கால்நடை உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கால்நடைகளை பொதுக்காணிகளில் மேச்சலுக்கு விட்டு ஆனால் கால்நடைகளிடமிருந்து எந்தவித உழைப்புமின்றி வருவாயீட்டி வந்த கால்நடை உரிமையாளர்கள் மற்றவர்கள்நிலையையும் சிந்திக்கவேண்டும் இதுவே உங்கள் விளைநிலத்தில் கால்நடைகள் வந்து நாசம் செய்தால் அனுமதிப்பீர்களா? அவர்கள் செய்த ஒரு பிழை கால்நடைகளை அடித்து விர்ட்டினால் மீண்டும் திரும்ப வரா என்பதால், ஆனால் அவைகள் பாவம் வாயில்லாப்பிராணிகள் அவற்றிற்கு அடிப்பதற்குப்பதிலாக அவர்களது உரிமையாளர்களுக்கு அடித்திருக்கவேண்டும் என்று கூறவில்லை அவர்களுடன் பேசி சுமுகமாகப்பிரச்சனையைத்தீர்த்திருக்கலாம்.
 11. 2009 போர் முடிவுற்ற காலப்பகுதியில் பேசப்பட்ட 2 விட்யங்கள் 1. தமிழர்களை கொண்ட இராணுவ பிரிவு 2. சீனாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் இவ்விரண்டு விடயங்களில் உள்ள ஒரு ஒற்றுமைத்தன்மை பற்றி பலர் அப்போது பேசியிருந்தனர், இன்றைய காலகட்டத்தில் இரண்டாவது தெரிவிற்கு இலங்கை செல்லாது, ஆனால் இந்த தமிழ் இராணுவப்பிரிவில் தமிழர்கள் இணைவது தமக்கு தாமே குழி பறிப்பதற்கு ஒப்பாகும், அத்துடன் வரலாற்று ரீதியாக இலங்கை தனது இந்திய எதிர்ப்பை பல வடிவங்களில் காட்டி வந்துள்ளது ஆரம்பத்தில் அமெரிக்காவினது மன்னாரில் இயங்கிய வானொலி இந்திய தொலை தொடர்புகளை கண்காணிப்பதற்கு உதவி செய்த இலங்கை அரசு, கிழக்கு பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானிற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதித்தது, ஆனால் இந்த தமிழ் இராணுவப்பிரிவு என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், இதனால் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீழ முடியாத புதை குழிக்குள் தள்ளப்படுவதற்கு இந்த தமிழ் ஆளுனர் ஒரு கோடாரி காம்பு போல் பயன்படுத்தப்படுகிறார், தமிழ் மக்களின் அழிவு ஒரு நீண்ட தொடர்கதையாகிவிடும்,நாம் யாருடைய வம்புக்கும் போகமல் இருப்பதே நலம்
 12. தமது பிள்ளைகளை, குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் கண்ணீரை கேலிப்பொருளாக்க சாதாராண மக்களால் முடியாது, அவர்களது கண்ணீரை பொய் என்று கூற ஒரு பைத்தியக்காரனால்தான் முடியும் " அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே செல்வத்தைத்தேய்க்கும் படை" ஏழைகளின் அமைதியான கண்ணீர் சந்ததியை அழிக்கும் கூர் வாளாகும்
 13. தமிழீழ விடுதலைப்போரில் தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமான ஒரு நிலையில் இருந்த காலம் தியாகி திலீபனின் உண்ணாவிரதமிருந்த காலகட்டம்தான், மக்கள் தம் கண் முன்னே ஒருவரின் மரணத்தின் சாட்சியாக இருந்து, தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில் அவர்களிடமிருந்து ஏற்பட்ட இயலாமையினால் உருவான கோபம் ஒரு மக்கள் புரட்சியாக வெடித்து விடும் நிலையில் இருந்தது, தியாகப்பயணத்தில் திலீபனுடன் 12 நாட் கள் என்னும் நூலை (நூலின் தலைப்பு தவறாக இருக்கலாம்) மு வே யோ வாஞஞிநாதன் எழுதியநூலை கட்டாயம் ஒருதடவையாவது வாசித்தால் அந்த நேரம் மக்களின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதை உணரலாம்,தியாகி திலீபனை அன்று பெரியவர்கள் தமது மகனாகப்பார்த்தார்கள், இளையவர்கள் தமது சகோதரனாகப்பார்த்தார்கள், புலியாகவோ அல்லது போராளியாகவோ அல்ல. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதான கொலை முயற்சி தியாகி திலீபனின் உண்ணாவிரதத்திற்கு முன்பாக ஒரு முறையும் (மற்றவர்கள் கூறகேட்டது) புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகளின் மரணத்தை தொடர்ந்து வடமராட்சிக்கு சென்ற புலிகளின் தலைவரை கொலை செய்ய இரண்ட்டாவது முறையாக முயற்சி செய்யப்பட்டது. தியாகி திலீபன் மரணம், பன்னிரு போராளிகள் மரணம் தமிழ் மக்களின் போராட்ட தலமைய அழிக்க முற்பட்ட நிலை அனைத்தும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போரிட வேண்டும் என்றும் அதற்கு உடன்பாடில்லாதவர்கள் தாரளமாக விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி செல்லலாம் என்று கூறப்பட்டதாம் அதில் பல போராளிகள் அமைப்பிலிருந்து விலகி சென்றார்களாம் அதில் பசீர் காகாவும் ஒருவர் (மற்றவர்கள் கூறகேட்டது). இங்கு பல கருத்தாளர்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது அஞ்சலி செலுத்துவர்களின் மேல் சேறு பூசுவதினூடாக மறைமுகமாக தியாகி திலீபனை கொச்சைப்படுத்துவதாகவுள்ளது. 90 களில் (கால கட்டம் சரியாகநினைவில்லை)பிரித்தானியாவினால் மாகாத்மா காந்தி இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசிற்கு எழுதிய கடிதங்களை வெளியிடுவதற்கெதிராக அங்கு வாழ்ந்த இந்திய மக்களினால் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது ( பல சர்ச்சைக்குரிய கடிதங்கள்) நேரடியாக தியாகி திலீபனின் மேல் சேறு பூசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால் என்ன அவருக்கு அஞ்சலி செலுத்துபவர்கள் அயோக்கியர்கள் என்பதினூடாக கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது, ஆனால் அதற்காக இவ்வளவு மோசமாக கீழ்த்தரமாக தரம்தாள வேண்டுமா?
 14. சார்லி சப்ளின், மிஸ்டர் பீன் மற்றும் வடிவேல் நடிப்பு முறை மொனோ அக்டிங்க் என்ற அடிப்படையை சார்ந்ததாகவுள்ளதாக எனது அபிப்பிராயம், எனது கருத்து தவறாகவும் இருக்கலாம்.
 15. போரில் புலிகள் தோற்றாலும் அவர்களது அர்ப்பணிப்பும் தியாகமும் எவராலும் நெருங்க்ககூட முடியாதளவில் உயரத்தில் உள்ளது, சாதாரண விளையாட்டில் கூட எதிரணியின் திறமைக்கு மதிப்பளிக்கத்தெரியாத இனம் சிங்கள இனம், முடித்த வரை அவர்களது தியாகங்களை அர்ப்பணிப்புகளை கொச்சைப்படுத்தல் அல்லது அதனை வரலாற்றிலிருந்து அழித்து விடுவ்வதுதான் அவர்களது நிலைப்பாடு.
 16. நிச்சயமாக தேசங்களிடையேயான தடை பொருளாதாரத்தைப்பாதிக்கும் ஆனால் கடுங்கட்டுப்பாடு சமூகப்பரவலைக்கட்டுப்படுத்தும் ( பரவல் தடயமற்ற பரவலை), நியூசிலாந்து பரவல் ஆரம்பமான முதல் மாதம் 4 வாரங்களிற்கு இவ்வாறான தடையை அறிமுகப்படுத்தியது, ஆனால் அரசுகள் கடும் கட்டுப்பாடுகள் தேசத்தின் பொருளாதாரத்தினைப்பாதிக்கும் என்பதால் கடுமையற்ற கொள்கைகளை அமுல் படுத்தின ஆனால் அது பலனளிக்கவில்லை இந்த காலாண்டிற்கான மொத்த தேசிய உற்பத்தி அமெரிக்கா -9% , பிரித்தானியா -20% மற்றும் அவுஸ்திரேலியா -7% என்று செல்கிறது, சீனா இம்மாத முதலாம் திகதி முதல் முற்று முழுதாக தடைகளை நீக்கி சாதாரண வாழ்க்கைக்குத்திரும்புகிறது அங்கு அவர்கள் வலயங்கள் முதலாக வேறுபடுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருந்த்தனர். அவுஸ்திரேலியா பொருளாதார நலனையே முதன்மைப்படுத்தி மென்போக்கான கொள்கையைக்கடைப்பிடித்தது அது நீண்டகால பொருளாதார நெருக்கடிக்குள்ளேயே தள்ளும் ஏனெனில் நோயிற்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட முடிவு. சீன மாணவர்களின் வருகை இன்மையால் 11 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது அதற்குக்காரணம் அவுஸ்திரேலியரின் இனத்துவேசம் என்ற வகையான செய்திகள் சீனாவில் வெளியிடப்பட்டது, அதில் ஓரளவு உண்மையும் உண்டு. எந்த கடுமையான முடிவுகளையும் எடுக்கும் போது மக்கள் நலன் சார்ந்தே எடுக்கவேண்டும் பொருளாதாரமா மக்கள் உயிரா என்றால் மக்கள் உயிர் தான் முக்கியம், நியுசிலாந்து எப்படி நோயிற்க்கெதிராகக்கடும் கட்டுப்பாடை பிறப்பித்து துணிகரமான முடிவெடுத்ததோ அதே போல் தற்சமயம் பணத்திற்கான வட்டி விகிதத்தினை (0.25%) 75 புள்ளிகளால் குறைத்து -0.5 ஆக்க முடிவெடுத்துள்ளதாக வதந்தி உலவுகிறது சுவீடன் மற்றும் ஜப்பானுடன் நியுசிலாந்தும் இணைகிறது, பொருளாதார வளர்ச்சியிலும் அவர்கள் துணிகரமான முடிவெடுக்கிறார்கள். வீடுகளின் விலை வீழ்ச்சியில் அதிக பங்கு வகிப்பது சீனர்களின் பங்கு கடந்த ஆண்டுகளில் 14% இலிருந்து இவ்வாண்டில் 2% மாகக்குறைந்துள்ளது ஒரு முக்கிய காரணம்
 17. இந்த மருத்துவ நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் ஆனால் அதன் நம்பகத்தன்மையினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது அதன் தொடர்பாடல்,நிறுவனத்தின் பங்கு 8% சரிவினை செய்தி வெளியீட்டிற்கு முன்பாகவே நிகழ்ந்துள்ளது, அவ்வாறாயின் நிர்வாக உயர்பீடம் தமது பங்குகளை வர்த்தக நேரத்தின் பின்னர் விற்பனை செய்துள்ளது என்றே தோன்றுகிறது, பொதுவாக இவ்வாறான நிகழ்வு ஏற்படும் போது பங்கு ச்ந்தை ஒழுங்கமைப்பு உடனடியாக அதன் பங்கு சந்தை நடவடிக்கையை முடக்கி சட்ட விளக்கம் கோரும் ஆனால் ஏன் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை ? அவுஸில் ஏ ஸ் க் என்ற அமைப்பு உடனடியாக நிறுவனத்திற்கு தடை விதித்து விளக்கம் கோரும், ஆனால் அவர்கள் அதனைப்பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று தப்பித்து விடுவார்கள் இது வழமை. ஆனால் இது வரை எஸ் இ சி எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை அல்லது யாராவது புகார் கொடுத்தால் மாத்திரம் நடவடிக்கை எடுப்பார்களா? தெரிந்தவர்கள் கூறவும். ( பங்கின் விலையும் பங்குகளின் எண்ணிக்கையும் ஒரு குறிப்பிட்ட சத விகிதத்தில் மாறுபடும் பட்சத்தில் உடனடி தன்னிச்சையான தொழில் பாட்டுத்தடை விதிக்கப்படும் அதற்காகவா வர்த்தக நேரத்தின் பின்னர் பங்குகளை விற்றார்கள்?)
 18. நன்றி, நாயகன் படம் பார்க்கும் திட்டம் ஏற்கனவே போட்ட திட்டம்தான் ஆனால் நீங்கள் நாயகனைப்பற்றி இத்திரியில் குறிப்பிட்டமையால் உங்கள் அபிப்பிராயம் கேட்டேன்.
 19. நாயகன் படம் கடவுள் தந்தை (கோட் பாதர்) படத்தின் மறுபிரதியென்று இணையத்தில் அறிந்தேன், இந்த வாரம்தான் அந்த ஆங்கிலப்படம் பார்த்தேன் இன்னமும் தமிழ் நாயகன் படம் பார்க்கவில்லை,நேரம் செலவு செய்து நாயகன் படம் பார்க்கலாமா? உங்கள் அபிப்ப்ராயம் என்ன?
 20. தேசங்களின் எல்லைகளை மூடுவதால் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது என்பது அரசியல் பிரச்சாரம் என்பதாக நான் கருதுகிறேன் ( எனது சொந்த கருத்து மட்டுமே) சுற்றுலா துறை சார் வருமான இழப்பு 51% விகிதம், ஆண்டு ஒன்றிற்கு ஏறத்தாழ 50 பில்லியன் மொத்த தேசிய உற்பத்தியில் பங்கு வகிக்கிறது, ஆனால் உற்பத்தி துறை அதனை விட இரண்டு மடங்கு மொத்த தேசிய உற்பத்தியில் பங்கு வகிக்கிறது, உற்பத்தித்துறை 31% விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தேசங்களிடையான உல்லாச பயணிகளின் வருகை இன்மையால் மட்டும் அத்துறை பாதிப்படையவில்லை அதனுடன் மறைமுக தொடர்புடைய மற்றதுறைகளின் வீழ்ச்சி பாவனையாளர் நுகர்வோர் உறுதியின்மையை அதிகரித்து விட்டுள்ளது, போக்குவரத்து துறை 85% சரிவு கண்டுள்ளது இதற்கு மூல காரணம் தேசங்களிடையான நுழைவு கட்டுப்பாடல்ல நாடுகளிடியேயான போக்குவரத்து கட்டுப்பாடே காரணம். அண்மையில் அவுஸ்திரேலிய அரசு இரண்டு நிறுவனங்களுடன் கொரோனா தடுப்பூசிக்காக ஒப்பத்தம் செய்துள்ளது அதில் ஒன்று பன்னாட்டு நிறுவனம் அதன் அவுஸ்திரேலிய கிளை ஆண்டு ஒன்றிற்கு 100 மில்லியன் டொலருக்கு அதிகமான வருவாயை சீனாவிற்கு மருந்து பொருளை ஏற்றுமதி செய்வதனால் ஈட்டி வந்தது, தறபோது 65% சீன வருவாயை இழந்துள்ளது அந்த நிறுவனம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய காட்டுத்தீயுனைத்தொடர்ந்து உலக மாசடைதலுக்கெதிராக 105 மில்லியன் செலவில் 25 மில்லியன் மரம் நடும் திட்டத்தை அவுஸ்திரேலியாவில் செலவிட்டுள்ளது, ஆனால் அவுஸ்திரேலிய அரசின் பூகோள அரசியலினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசங்களிடியேனான கட்டுப்பாடு அவுஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு நன்மையே அதிகம் எனநினைக்கிறேன் , அவுஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்தின் கொரோனா தடுப்பு கொள்கையை கடும்போக்கு என்று குற்றம் சாட்டிய அவுஸ்திரேலிய அரசியல் வாதிகள், அவுஸ்திரேலியாவின் பொருளாதார சரிவு பற்றி பேசும் இக்காலத்தில் நியுசிலாந்து பொருளாதர வளர்ச்சி பற்றிப்பேசுகிறது, இத்தனைக்கும் இரண்டு நாட்டிலும் ஆரம்பத்தில் ஒரே விகிதத்திலேயே கொரோனா பரவியிருந்தது, பரவல் விகிதம் கூட 3.3% (உத்தேச கணிப்பு) ஒன்றாகவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய பொருளாதார மீட்சியென்பது நுகர்வோர் உறுதித்தன்மை ஏற்படுத்துதலில் தங்கியுள்ளது, வருமான வரி தளர்வு ,நாணய வட்டி விகித இறக்கம, பொருளாதார தூண்டல், தேசிய கட்டுமான அதிகரிப்பு, தேசிய பிணைப்பணம் (அரச பொண்ட்) மீள வாங்குதல் மூலம் ஏற்படுத்தலாம். முக்கியமாக அவுஸ்திரேலிய வெளிவிவகாரக்கொள்கையில் நாட்டின் பொருளாதாரத்தினடிப்படையில் ஏற்படுத்த வேண்டும்.
 21. ஒரு ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தி -10% குறைவாக இருந்தால் அந்த நாடு இலகுவாக பொருளாதர மீட்சியினை அடையலாம் அதனை சந்தை சரிபடுத்தல் என்றழைப்பர் அதுவே -20% அடைந்தால் பொருளாதார சரிவு, மேலும் இரண்டு காலாண்டிற்குள் மொத்த தேசிய வருமானம் மற்றும் மொத்த தேசிய உற்பத்தி -20% விகிதத்திற்கு குறைவாக வரும் பட்சத்தில் இங்கிலாந்து பொருளாதார சரிவிலிருந்து மீளலாம், ஆனால் அதுநடை முறை சாத்தியமற்றது, அவுஸ்திரேலியா தனது பொருளாதார சரிவினை அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது, கடந்த காலாண்டில் -0.3% மொத்த தேசிய உற்பத்தி மற்றும் மொத்த தேசிய வருமானம் -0.4%, இந்த காலாண்டில் -7.0% மொத்த தேசிய உற்பத்தி மற்றும் மொத்த தேசிய வருமானம்( மொத்த தேசிய உற்பத்தியும் மொத்த தேசிய வருமானமும் கிட்ட தட்ட ஒன்றுதான் வெளினாட்டில் இயங்கும் உள்னாட்டுநிறுவனங்களின் வாருமான வரவு மட்டுமே மாற்றம்) மேலும் இரு காலாண்டுகள் இருக்கின்ற நிலையில் அவுஸ்திரேலியா இவ்வறிப்பைச்செய்துள்ளது.
 22. அவரது நோக்கம் தமிழை கேலி செய்யவேண்டும் என்பதாகவே நான் உணர்ந்தேன், அவர் அயாட்ஸ் இந்திய உணவக உரிமையாளர், அவருக்கு நியுசிலாந்தில் பல உணவகங்கள் உண்டு.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.