Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1782
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by vasee

  1. இந்தியா பிரிக்ஸ் நாணயதிற்கு தனது ஆதரவினை காட்டவில்லை என்பதான கருத்து உலவுகிறது, இங்கு ஏற்கனவே கூறப்பட்ட இந்தியாவின் பண கொள்கை(Dirty float) இந்திய நலன் சார்ந்த விடயம் இதனைஇழக்க இந்தியா விரும்பவில்லை என்பது புரிகிறது, Commodity Pegged உடைய பிரிக்ஸில் சேர்வது இந்திய நலனை அடிப்படையாக கொண்ட அதன் பணக்கொள்கைக்கு எதிரானது என்பதலாயே இந்தியா பின்வாங்குவதாக கருத இடமுண்டு, அது தவிர சீனாவின் மேலாதிக்கமும் காரணமாக கூறப்படுகிறது.
  2. தற்போது AUDJPY இல் மட்டும் வர்த்தகம் செய்வதால் கவனிக்கவில்லை(Prop trading). தங்கத்தில் பல பூகோள நிகழ்வுகள் தாக்கத்தினை செலுத்தபோகிறது.. அமெரிக்க பண்முறிகளை இங்கிலாந்து உள்ளடங்கலாக விற்க ஆரம்பித்து விட்டன. அதிகளவில் அமெரிக்க பணமுறிகளை கொண்ட ஜப்பான் நாட்டு நாணயத்தினை முதலீட்டாளர்கள் விற்பதனை நிறுத்தியுள்ளார்கள். பிட்சினால் அமெரிக்காவினது AAA இலிருந்து AA+ குறைத்குள்ளது. இது தொடர்பான வ்ரிவான கருத்தினை எதிர்வரும் வாரம் பதிவிடுகிறேன்.
  3. XRP இல் உங்களுக்கு இலாபம் கிடைத்துள்ளது, நல்ல விடயம் தொடர்ந்து எழுதுங்கள்.
  4. உங்கள் கருத்திற்கு நன்றி மேலும் அந்த காணொளி இணைத்தது இந்த பிரச்சினையின் ஆரம்பத்தில் அப்போதிருந்த நிலையில் அது ஒரு சதித்திட்டத்திற்கான எந்த அம்சமும் இல்லாமல் இருந்தது என்பதனை என்னால் உணரமுடிந்தது, மேலும் சதி புரட்சி பற்றிய எனது பார்வை வேறுபாடாக உளதற்கான காரணம் உள்ளது அதனை பற்றி விவாதிக்கவிரும்பவில்லை.
  5. https://en.wikipedia.org/wiki/Operation_Valkyrie இதனைதான் குறிப்பிட்டேன் நீங்கள் கூறும் விடயம் பற்றி தெரியாது, அத்துடன் இணைப்பு நீக்கப்பட்டது கூறப்பட்டது ஒரு புரிதலுக்காக ஏனெனில் வார இறுதியில் வேலையில் இருப்பதால் வேலையிடத்தில் இருந்து போட்ட பதிவு அது நேரமின்மை காரணமாக சுருக்கமாக போடும்போது பல சிக்கல்கள் காணப்படும் எழுத்துகளை பதியும்போது தவறுகள் ஏற்பட்டதால் வெறும் காட்சியுடன் நிறுத்திவிட்டேன். ஆனால் இந்த காணொளியில் சதிப்புரட்சி என்பதனை கூ கூ என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள் அதனால் நகைசுவைக்காக ஒரு தென்னிந்திய சினிமா பாடலாலான கு கூ என குயில் கூவாதா எனும் பாடலை பதிவிட்டேன். மற்றது இணைப்பு நீக்கப்பட்டது என்பதனை குறையாக கூறியிருந்தாகநினைத்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். மற்றது நடுனிலமை சிந்தனை பற்றியது, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட புரிதல் இருக்கும் விருப்பு தேர்வு இருக்கும் ஆனால் அது முடிவுகளை எடுக்கும் போது தவறான முடிவுகளை ஏற்படுத்திவிடும் (தொழில் ரீதியாக) அதனால் பாதிப்பு ஏற்படுவது எனக்கு மட்டுமே அதனால் மனரீதியாக என்னை தயார்படுத்துவதற்காக முடிந்தளவு பக்கம் சாராமல் இருக்க முயற்சிப்பதுண்டு. இறுதியாக எனது தரப்பு விளக்கமாக இருந்தாலும் எனது தவறை நான் மறுக்கவில்லை அல்லது நியாயப்படுத்தவில்லை அல்லது நிர்வாகத்தின் முடிவிற்கெதிராக கருத்து வைக்கவில்லை ஏனெனில் அவர்கள் பார்வையில் தவறாக இருப்பதாலேயே நடவடிக்கை எடுக்கிறார்கள் அத்துடன் அவர்களுக்கென ஒரு ஒழுங்கு காணப்படும் அதனை மீறியது நான், அதனால் தவறு எனது என்பதனை ஏற்றுகொண்டுவிட்டேன், இருந்தாலும் எதிர்காலத்தில் உங்கள் ஆலோசனைகளை பின்பற்ற முயற்சிப்பேன் உங்கள் கருத்திற்கு நன்றி.
  6. சுயதணிக்கை செய்யமுயன்றேன் முடியவில்லை, நிர்வாகத்தின் முடிவிற்கு எதிராக செயற்படமாட்டேன். உண்மையாக நகைசுவைக்காக அந்த காணொளியினை பதிந்து நகைசுவைக்காக என பதிந்த காணொளி என குறிப்பிட்டேன், ஆனால் அது ஒரு சிரமத்தினை கொடுக்கும் விடயமாகிவிட்டதற்கு மன்னிப்பு கோருகிறேன். எனது பதிவுகள் யார் மந்தையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். எதிர்காலத்தில் முடிந்தளவு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளமுயற்சிப்பேன்.
  7. இது ஒரு சதிப்புரட்சியாகவே உணரமுடியவில்லை அதற்கான காரணமாகவே சதிப்புரட்சி என்பது எவ்வாறு இருக்கும் என்பதற்கு உதாரணமாக வல்கரே என்ற கிட்லருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட நடவடிக்கையினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட வல்கரே என்ற திரைப்பட ரெய்லரை இணைத்திருந்தேன் ( அது நீக்கப்பட்டுவிட்டது) ஆனால் ஊடகங்கள் இதனை ஒரு சதிப்புரட்சியாகவே ஆர்பரித்தன. ***** அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தமக்கு சதிப்புரட்சிக்கான துப்பு கிடைத்தது என இது ஒரு சதிப்புரட்சியாகவே உறுதிப்படுத்திவிட்டார்கள்.
  8. வாக்னர் குழுவின் இந்த தாக்குதலின் நோக்கம் என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்? அந்த நோக்கத்தினை அடைவதற்கான முயற்சி என்ன? தற்போது ஏற்பட்டுள்ள சமாதான உடன்படிக்கை அவர்கள் எதிர்பார்த்த ஒன்றா? மேலும் நான் காணொளி இணைத்தது அந்த சதிப்புரட்சி ஆரம்பித்த போது, அந்த காணொளி நீக்கப்பட்டுவிட்டது அதற்கு பின்னரே நிகழ்வுகள் தீவிரமாகி பின்னர் நீர்த்து போயிருந்தது அதனால் இப்படித்தான் நடக்கும் என தெரியாது ஆனால் எனது மனதில் தோன்றிதை பதிவிட்டேன், நிகழ்வுகள் நாம் எதிர்பார்ப்பது போலவோ அல்லது நாம் விரும்புவது போலவோ முடியும் என எதிர்பார்க்க இயலாது எனும் சாதாரண புரிதல் உண்டு, அதுதானே நடைமுறையும் கூட. பொதுவாக தேவையில்லா எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டால் இறுதியில் ஏமாற்றம் அதனால் விரக்தி என்பன ஏற்படும் என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் அதனால் பதிவுகளை நகைசுவையுடன் பார்த்தாலும் முடிந்தளவில் அதனை பிரதிபலிப்பதில்லை ஏனெனில் எனது கருத்துகளுடன் பலருக்கு முரண்பாடு உண்டு அனால் தனிப்பட்ட முறையில் என்னுடன் அல்ல எனும் புரிதல் உண்டு, அதே போலத்தான் மற்றவர்களின் கருத்துகளுடன் முரண்பாடு இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் அனைவரையும் மதிப்பதுண்டு.
  9. கோசானை மீண்டும் யாழில் காண்பது சந்தோசம், பல விடயங்களை தவறவிட்டேனோ என தோன்றுகிறது.
  10. பெரும்பாலும் அரசுக்கெதிரான சதிகள் ஏனோ வெற்றி பெறுவதில்லை, மிக திறமையாகத்திட்டமிட்டாலும் அது ஒரு சாதாரண ஒரு சின்ன விடயத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் அதற்கு உதாரணமாக கிடலருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சதி நடவடிக்கையினை அடிப்படையாக கொண்டு 2009 இல் வெளியாகியிருந்த டொம் குரூஸ் நடித்த வல்கரே என்ற நடவடிக்கையின் தோல்வியினை குறிப்பிடலாம்(அந்த திரைப்படத்தின் ரெய்லரை இணைத்திருந்தேன் அது நீக்கப்பட்டு விட்டது) ஆனால் வாக்னரின் சதி நடவடிக்கை எந்த வித சரியான திட்டமிடலும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டுள்ளது சந்தேகத்தினை உருவாக்குகிறது.
  11. உலக ஒழுங்கு, உலகை ஆளும் பலமிக்க சக்திகளின் கூட்டணி அல்லது தனி நாடுகள் என கொள்ளலாம், இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இரட்டை ஆளுமை கொண்ட உலக ஒழுங்கு(bipolar world order) நிலவியது இந்த பனிப்போர்காலம் 1991 இரஸ்சியாவின் உடைவின் பின்னர் ஒற்றை ஆளுமை கொண்ட உலக ஒழுங்கு உருவானது. தற்போது ஏற்பட உள்ள உலக ஒழுங்கைனை பல துருவ உலக ஒழுங்கு (Multi polar world order)என வரைய்றுக்கிறார்கள், இதன் மூலம் பல சமனிலைகள் உருவாகும் பல சுதந்திர நாடுகள் உருவாகும், ஆனால் அதேவேளை உலகம் முழுக்க அமைதின்மை நிலவும் முன்பு போல ஒற்றை ஆளுமை உலக ஒழுங்கில் இவ்வாறான விடுதலை போர்கள் அமைதியின்மையினை உருவாக்குவதால் அவற்றினை நசிக்கிவிடவே துடித்தனர் ஆனால் பலதுருவ உலக ஒழுங்கில் அப்படி இருக்காது, ஆனால் எப்போதும் உலகம் போர் முடிவுறாமல் இருக்கலாம் என கருதுகிறேன். அமெரிக்கா நேட்டோ என்பவை இந்த பலதுருவ உலக ஒழுங்கிலும் தொடர்ந்தும் காணப்படும் ஆனால் பல்லுப்போன பாம்பு போல காணப்படும் என கருதுகிறேன்.
  12. கடந்த இரு வாரங்களாக முதலீட்ட்டாளர்களிடியே சீனா அமெரிக்காவின் பணமுறிகளை விற்கலாம் எனும் அச்சம் நிலவியது (ஏறத்தாழ 859 பில்லியன்), அதற்கான காரணம் சீனா தாய்வானின் மீது படையெடுத்தால் இரஸ்சியாவின் சொத்துகளை முடக்கியது போல ஒரு நிலை ஏற்படலாம் என்பதால், தற்போது கடன் உச்சவரம்பு அமெரிக்க காங்கிரசினால் உயர்த்தப்பட்ட பின்னர் 1 ரில்லியன் அளவிலான பணமுறியினை அமெரிக்க கருவூலம் வினியோகிக்க உள்ள நிகழ்வு என்பன ஏற்கனவே முதலீட்டாளர்களிடையே அச்சதத்தினை தோற்றுவித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் மிகவும் மோசமானநிலைக்கு தள்ளப்படும், பணமுறிகளின் விற்பனை அதிகரிக்கும் போது வங்கிகள் முறிவடையும், பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படும். சீனா தற்போது தனது பணமுறிகளை விற்றால் அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமும் பாதிக்கும், ஏனெனில் அமெரிக்காவினை உலகிற்கு பொருளாதார அழிவினை ஏற்படுத்தும் நாடாக கருதுவதால்தான் பொருளியலாளர்கள் அமெரிக்காவினை பொருளாதார பயங்கரவாதி என அழைக்கிறார்கள்.
  13. அமெரிக்க கடன் உச்ச எல்லை நீட்டிக்கப்பட்டதை அடுத்து 1 ரில்லியன் பெறுமதியான பணமுறியினை அமெரிக்க கருவூலம் வெளியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்க கருவூல செயலாளர் ஜெனட் ஜெலன் அமெரிக்கா நாணயம் உலக சேமிப்பு நாணயநிலையில் சரிவு ஏற்படலாம் என கூறியுள்ள நிலையில் (8% சரிவு 2022 இல் ஏற்பட்டுள்ளது), அமெரிக்காவினது பொருளாதார தடை அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட 1 ரில்லியன் பெறுமதியான (859 பில்லியன் ஏறத்தாழ) பணமுறிகளை சீனா சந்தையில் விற்கமுற்படலாம் எனும் அச்சத்தில் முதலீட்டாளர்கள் உள்ளார்கள். வட்டி விகித அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது, முதலீட்டினை பொறுத்தவரை முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளின் ஆபத்தான முதலீடுகளை தவிர்க்க முதலீடுகளை பன்முகப்படுத்த வேண்டும் என கருத்து நிலவுகிறது, சில நிதி நிறுவனங்கள் தமது முதலீட்டினை பொதுமக்கள் வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக கூறுகிறார்கள், இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி அமெரிக்காவில் உள்ள யாழ்கள உறவுகள் கூறவேண்டும். பிரிட்ஜ் வோட்டர் நிதிநிறுவனத்தின் முகாமையாளர் அமெரிக்காவின் சில வறுமையான பகுதிகளில் உயர்நிலை பள்ளிகளில் இருந்து விலகுவோர் எண்ணிக்கை 22% ஆக அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார், அத்துடன் அங்குள்ள குழந்தைகளின் போசாக்குநிலையினையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்? (கெனடிக் அல்லது கனடிக் என கூறியதாக நினைவுள்ளது) இது உண்மையான நிலவரமா? அல்லது மிகைப்படுத்தப்படுகிறதா என அமெரிக்காவில் வாழும் யாழ்கள உறவுகள் உறுதிப்படுத்த வேண்டும். முதலீட்டினை பொறுத்தவரை உகப்பான காலம் அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து தவறாக இருக்கலாம், அத்துடன் இது ஒரு பொருளாதார நிதி அறிவுரை அல்ல.
  14. உங்கள் கருத்திற்கு நன்றி. ஐரோப்பாவிலிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து தமது உற்பத்தியின் அளவினை ஐரோப்பாவில் இருந்து குறைத்து தமது வேறு நாட்டில் உள்ள கிளைகளுக்கு மாற்றுகிறார்கள், எமது நிறுவனத்தில் தற்போது உற்பத்தி அளவு இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து 40% அதிகரித்துள்ளது இந்த வாய்ப்புகள் ஐரோப்பா கிளைகள் மூலம் கிடைத்துள்ளது, எதிர்வரும் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என கூறுகிறார்கள். இதற்கு காரணம் என எதனை கருதுகிறீர்கள்? பணவீக்க அதிகரிப்பினால் இங்கு (அவுஸ்ரேலியாவில்) மக்கள் பலர் விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள், ஐரோப்பிய நிலவரம் என்ன? ஐரோப்பாவில் அடிப்படை வருமானம் அற்றவர்களின் உதவித்தொகையில் பெரும்பகுதி இந்த போரிற்காக செலவு செய்யப்படுகிறதாக கூறப்படுவது உண்மையா? அவ்வாறாயின் அங்குள்ள வருமானம் குறைந்த மக்களின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது? ஐரோப்பாவில் நீண்டகால அடிப்படையில் இந்த தொடரும் போர் எவ்வாறான தாக்கத்தினை செலுத்தும் என கருதுகிறீர்கள்?
  15. சிறந்த கருத்து, அணுவாயுத கழிவினை கொண்டு உருவாக்கபடும் இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் யுத்தம் நடைபெறும் பிரதேசங்கள் பெரும்பாலும் இரஸ்சியர்கள் வாழும் பிரதேசமாக உள்ளமையால் உக்கிரேன் அரசு எவ்வாறு இலங்கையில் வடகிழக்குல் உயிரியல் குண்டு, இரசாயன குண்டுகளை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் வீசியது போல இந்த ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது, அதனை வழங்கும் மேற்கு நாடுகளும் எங்கோ உக்கிரேனில் பயன்படுத்தும் இந்த ஆயுதங்களால் தமக்கு பாதிப்பில்லை என கருதிகிறார்கள் அண்மையில் இரஸ்சிய உக்கிரேனிய ஆயுத கிடங்கு ஒன்றினை தகர்த்த போது ஏற்பட்ட காலாண் புகை மேக மூட்டமாகி ஐரோப்பா நோக்கி நகர்வதாக கூறினார்கள். மழை நீருடன் கலந்து குடி தண்ணீராக மாறினால் எப்படி ஆபிரிக்க நாடுகளில் சுத்தமான குடிநீருக்கு மக்கள் அவலப்படுகிறார்களோ அதே போல் ஒரு நிலை ஏற்படலாம்.
  16. அழித்த காணொளியை மீட்டெடுக்கலாம் என கருதுகிறேன், அதனை ஆதாரமாக வைத்தும் கண்கண்ட சாட்சிகளினூடாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என கருதுகிறேன்.
  17. ஒரு உதாரணத்திற்காகவே அவுஸ்ரேலிய உள்நாட்டு பொருளாதாரத்தினை மேலே குறிப்பிடப்பட்டது, ஆனால் அனைத்து நாடுகளும் தற்போது இதே பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றன அதற்கு காரணம் Spillover effect என பொருளாதாரத்தில் வரையறுத்துள்ளார்கள், உலக மயமாதலின் பக்க விளைவு எனவும் கூறுவர். ஒரு குறிப்பிட்ட நாடு உலகத்தில் உள்ள விடுதலை அமைப்புகள் உள்ளடங்கலாக உள்ள அமைப்புகளை தனது சுய இலாபத்தினடிப்படையில் பயங்கரவாத நாடு, பயங்கரவாத அமைப்பு என வரையறுக்கின்றது. அந்த குறிப்பிட்ட நாட்டினை பொருளியலாளர் பொருளாதார பயங்கரவாதி என செல்லமாக அழைக்கிறார்கள், குறிப்பாக உலகில் பொருளாதார ரீதியில் ஏற்படும் அழிவுகளுக்கு காரணமாக பெரும்பாலும் இருந்து வந்ததனாலேயே அவ்வாறு அழைக்கிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள போரினால் எதிர்பாராவிதமாக எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கத்தினை விட அதிக அளவில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது, அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சியினால் பண திர்வத்தன்மையில் நெருக்கடி உருவாகிறது என பொருளியலாளர்கள் பலர் அபாய குரலெழுப்புகிறார்கள், ஆனால் எவ்வாறு கோவிட் காலத்தில் எடுத்த கடும் முடிவு போலவே (பொருளாதார தூண்டல்) தற்போது அதனை கட்டுப்படுத்துவதில்(பணவீக்கம்) ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் அதனால் ஏற்பட போகும் பக்க விளைவை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. அல்லது அதனை வேண்டும் என அலட்சியபடுத்துகிறார்களா என தெரியவில்லை, 1930 இல் உலகில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் தோற்றம் பெற்ற உலகமயமாதல் அதே போன்றதோர் நெருக்கடியுடன் முடிவுக்கு வருமோ எனும் ஒரு அச்ச நிலை உருவாகியுள்ளது. தற்போது பல நாடுகளின் பொருளாதாரம் சரிவடைந்து செல்கிறது, அவுஸ்ரேலியாவில் இந்த காலாண்டிற்கான எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 0.50% பதிலாக 0.20% எனும் நிலையினை அடைந்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் எதிர்மறை வளர்ச்சி வீதம் ஏற்பட்டால் அதனை பொருளாதார சரிவு என அழைக்கிறார்கள், வருமான வளர்ச்சியினை விட பணவீக்க அதிகரிப்பு அதிகமாக உள்ளது, இதனைதான் களுதை தேந்து கட்டெறும்பாவது என கூறுகிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் வங்கியில் பெற்றுள்ள வீட்டுக்கடனின் பெறுமதியினை விட வீட்டின் விலை குறைவடையும் போது நிலமை மோசமாகிவிடும் வீட்டிற்கான கட்டணம் செலுத்துவதில் சிரமம் காணப்படும் நிலையில் வீட்டினை விற்கவும் முடியாது எனும் நிலை ஏற்படலாம். வீட்டினை விற்றாலும் வங்கிக்கு கடனாக பணம் செலுத்தும் நிலையில் இருப்பார்கள் இதனால் பலர் வங்குரோத்தாகும் நிலை ஏற்படலாம். ஆனால் தற்போது அதற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை https://www.corelogic.com.au/news-research/news/2023/corelogic-home-value-index-further-evidence-australias-housing-downturn-is-over தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் வீட்டின் விலை சரிந்திருந்தது ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விலைகள் சிறிதளவு ஏற்றம் காணப்படுகிறதாக கூறுகிறது இந்த ஆய்வு. ஆனால் பல மாறா வட்டி வீட்டுக்கடன் இந்த ஆண்டு நடுப்பகுதியில் மாற்றம் ஏற்படும் வட்டிக்கு வரவுள்ளது (இந்த மாதத்தில்) அதனால் எதிர்வரும் மாதங்களில்தான் உண்மை நிலவரம் தெரியவரும். போர் தொடரும் நிலையில் நிலமை மேலும் மோசமாகவே வாய்ப்புள்ளது,இது அச்சுறுத்துவதற்கான பதிவல்ல ஆனால் இது தொடர்பான முன் தெளிவு அவசியமாவதாக கருதுகிறேன், உலகின் பல்வேறு பாகக்களில் வாழும் யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துகளை முடிந்தால் கூறவும். இது ஒரு பொருளாதார அறிவுரை அல்ல.
  18. ஆயுதம் கொடுக்கிறார்கள் என்று வாங்கி முன் யோசனையில்லாமல் பாவிக்கும் யுக்கிரேனின் எதிர்காலம் மோசமாக இருக்க போகிறது, மேற்கு நாடுகள் வழங்கும் டிப்ளீடட் யுரேனியம் கொண்ட ஆயுதங்கள் நீண்டகால அடிப்படையில் சுற்று சூழல், விவசாயம் என்பவற்றினை பாதிக்கும் என கூறுகிறார்கள். உலக அரசியலில் சிக்கி அப்பாவி மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகிறார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.