Everything posted by vasee
-
மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
இல்லை அது பக்கத்து இலைக்கு பாயசம் என்பது போல, தமிழரசு கட்சி சார்பில் சட்ட நிபுணர்கள் இல்லை என்பதால் தனனை தேசிய பட்டியலில் செல்வதற்கு பரிந்துரை செய்வதாகும். இந்த கருத்துக்கணிப்பு ஒரு சுவாரசியமாக இருக்கலாம், ஒரு சின்ன முயற்சி, அத்துடன் களத்தில் உறுப்பினர்களை ஆர்வமாக பங்கேற்க வைக்கும் நிகழ்வுகளுக்கு நீங்கள் முன் மாதிரியாக இருப்பதால் அவ்வாறு கூறினேன்.
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இந்த ஜொகனஸ்பேர்க் மைதானத்திலா அதிக ஒரு நாள் ஓட்டங்கள் குவிக்கப்பட்டது? இது ஒரு கட்டாந்தரை என நினக்கிறேன் அந்த போட்டியில் ஆப்போது முதலாம் நிலையில் இருந்த அவுஸின் 400 இற்கும் அதிகமான இலக்கை கிப்ஸின் உத்வியினால் தென் ஆபிரிக்கா வென்றெடுத்தது, தற்போது ரி20 சாம்பியனான இந்தியாவினை தென்னாபிரிக்கா வென்று சாதனை படைக்கட்டும். India 283/1
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது தேசிய பட்டியலுக்கு கட்சி பாராளுமன்ற அமர்வுகளில் புதிய சட்டவமைப்பு தொடர்பான விவாதங்களில் கட்சியினை பிரதிநிதிப்படுத்துவதற்கு தனனை பிரேரிப்பதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம், தமிழரசுக்கட்சிக்கு வேறு நல்ல தெரிவு இருப்பதாக தெரியவில்லை.
-
மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்னர் பாராளுமன்றத்திற்கு கட்சியினால் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் புதிய சட்டவமைப்பு தொடர்பில் சுமந்திரன் தன்னாலான உதவிகள் செய்ய முடியும் என தொனிபட கூறியதாக வாசித்த நினவுள்ளது, அந்த இடத்திற்கு தற்போது தமிழரசுக்கட்சியில் சட்டத்தரணியாக வேறு எவரும் இல்லாத பட்சத்தில் கட்சி அவரையே தெரிவு செய்ய 99.999% வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன். ஆனால் புதிய சட்டவமைப்பில் தமிழரசுக்கட்சி உண்மையில் ஒன்றும் செய்யப்போவதில்லை ஆனால் சட்டத்திருத்தத்தம் தொடர்பான பாராளுமன்ற நிகழ்வில் தமிழரசுகட்சியினை தன்னால் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யமுடியும் என அழுத்தத்தினை உருவாக்கி இலகுவாக சுமந்திரன் தேசிய பட்டியலிலூடாக பாராளுமன்றம் சென்றுவிடுவார் அதனை உங்களால் தடுக்க முடியாது.😁 யாழ்களத்தில் யாராவது புதிய கருத்துக்கணிப்பு ஒன்றினை இது தொடர்பாக ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். தமிழ் சிறி அதனை நீங்கள் ஆரம்பிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அவர் ஒரு உண்மையான அரசியல்வாதி😁.
-
எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய
உண்மையில் இதுவரை இருந்த அரசியல்கட்சிகள், அரசியல்தலைவர்கள் போல செயற்படாமல் மக்கள் நன்மையின கருதிற்கொண்டு செயற்பட்டால் நன்று, அதே போல் சிறுபான்மை மக்களின் பிரச்சினையிலும் பழைய அரசியல்வாதிகள் போல பேரினவாத கொள்கையினை கடைப்பிடிக்காமல் மக்களுக்கான அனைத்து சம உரிமைகளும் சிறுபான்மை மக்களுக்கும் கிடைப்பதனை உறுதி செய்தால் நல்லது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அப்படி உள்ளே போனால் அந்த இடத்தில் கட்சி வேறு யாரையும் நியமிக்கலாம் என நினைக்கிறேன், அதனால் சும்மிற்கு இன்னும் வாய்புகள் இருக்கு ஆனால் அவரும் அதற்கு உள்ளே போகாமலிருக்கவேண்டும் (அதுவும் கொஞ்சம் கஸ்டம்தான்😁) அனைத்தும் ரசோதரன் கையில் உள்ளது😁.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சில வேள சிறிக்கு அதிர்ஸ்டம் இருந்தால் பதவியில் இருக்கும்போதே ஊழலுக்காக சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆனால் ஊழல் செய்யமாட்டார்கள் என நம்புவோம், நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஊழலுக்கு எதிராக கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும் அதில் எமது தமிழ் அரசியல்வாதிகளின் மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஒரு புறம் இந்திய மீனவர்களும் மறுபுறம் எமது தமிழ் அரசியல்வாதிகளின் ஊழலாலும் பாதிக்கப்பட்ட நிலை மாறவேண்டும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எனது அபிப்பிராயத்தில் சுமந்திரன் கூட இதன் தாற்பரியத்தினை புரிந்திருக்கவில்லை என நினைக்கிறேன், ஆரம்பத்தில் அனுரவிற்கு ஆதரவான கருத்தினை தெரிவித்திருந்ததாக நினைவுள்ளது, அது தனிப்பட்ட ரீதியில் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளையும் பாதிக்கும் என்பதனை அறியாத நிலையில் அல்லது குறைவாக மதிப்பிட்டிருக்கலாம், பின்னர் அனுரவை தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்ததன் நோக்கம் அது தற்போதய அனைத்து தமிழ் அரசியல்வாதிகளின் (சுமந்திரன் உட்பட) அரசியல் வாழ்க்கை முற்றுப்புள்ளியாகிவிடும் எனும் பயத்தில். இந்த அரசியல்வாதிகள் அனைவரும் வீட்டுக்கு போகவேண்டியவர்களே, ஆனால் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை பேசக்கூட முடியாத நிலையினை புதிய சட்டமைப்பு மூலம் தமிழ் மக்களிற்கான நிரந்தர நீதி மறுப்பாக இந்த கட்சி உருவெடுக்குமோ எனும் பயமே தற்போது உள்ளதால், சுமந்திரன், சிறி போன்றவர்களை பற்றி கவலைப்படுவதனைவிட மக்களை பற்றி கவலைப்படவேண்டியதுதான். இவர்கள் தேர்தலில் வெல்வதாலும் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை ஆனால் மக்களின் பணம் பாதுகாக்கப்படும் நிலையே காணப்படுவதால் அனைத்து வழிகளிலும் நன்மைதான் இவர்கள் தோற்பது. ஆளும் கட்சியுடன் இனைந்து பயணிக்கும் தமிழ் அரசியல்வாதிகளாவது ஊழல் பாரம்பரியத்திலிருந்து விலகி மக்களுக்கு உதவி செய்யட்டும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நன்றி தெளிவான விளக்கம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதுதான் தற்போதய ட்ரென்ட் ஆக இருக்குமோ? கமலா காரிஸின் cloud storage விளக்கம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பொதுவாக சில மாற்றங்கல் உலகெங்கும் ஏற்பட்டுள்ளது அது இந்த இரண்டு பிரதான கட்சி ஆதிக்கங்கள் இருந்து மூன்றாவதாக புதிய சக்தி உருவாகுதல். இந்த நிலை மாற்றம் இலங்கையில் மட்டுமல்ல மேற்கு நாடுகளிலும் நிகழுகிறது, இந்த புதிய மாற்றம் உலக போக்கில் இப்போதய அம்சமாக இருக்கலாம். எமது அரசியல்வாதிகள் நான் கேள்விப்பட்ட வரை ஊழல்கள்தான் செய்தார்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டியவர்கள் தங்களுக்கு சேவை செய்தார்கள், அவர்களை அடித்து துரத்தாமல் விட்டளவில் அவர்கள் சந்தோசப்பட வேண்டியதுதான்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சும்மா விளையாட்டாக கூறினேன் ஆனாலும் ஒரு பயம்தான், ஏற்கனவே எமது மக்கள் சர்வாதிகார அடக்குமுறைக்குள்தான் இருக்கிறார்கள் இன்னும் நிலமை மோசமாகிவிடுமோ எனும் பயம்தான். எனக்கு புரிகிறது😁, நான் ரஸ்சியா சீனாவிற்கு ஆதரவு தெரிவிப்பவன் எனும் நிலைப்பாட்டை குறிப்பிட்டுக்காட்டுகிறீர்கள் என, ஆனால் சில வேளை எமது மக்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படுவார்களோ எனும் பயம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் நினைக்கிறேன் இது அனுர அலை அல்ல, உலக மாற்றத்தின் நிழல் இலங்கையிலும் தொடர்கிறதோ😁 ரஸ்சியா, சீனா, இந்தியா போன்ற முன்னால் இடது சாரிகளின் புதிய வேடம் சர்வாதிகார முதலாளித்துவம் (Authoritarian Capitalism) 2/3 அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் இலங்கையில் அரசியல் சட்டம், சட்டம் என்பவை இந்த சர்வாதிகார முதலாளித்துவத்தினை நோக்கி இரஸ்சியா, சீனா போல பயணிக்கலாம். உலகம் பலதுருவ மாற்றத்திற்கு தாயாராகி வருவதன் முதல் அறிகுறி? இந்த பல துருவ உலக அரசியலின் செல்வாக்காக இலங்கை உள்ளதோ😁.
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
நீங்கள் சிரிப்பு குறி இட்டிருந்தாலும் நான் உங்கள் மனதை நோகடித்துவிட்டேனோ என கருதுகிறேன், எனது கருத்துக்கள் வெறும் வெட்டியான கருத்துக்கள் அதன் மூலம் சில வேளைகளில் என்னையறியாமலே மற்றவர்களை காயப்படுத்திவிடுகிறேன் என கருதுகிறேன், அதற்காக வருந்துகிறேன் அனைவருடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
அட நீங்களுமா? கொஞ்சம் விபரமான ஆளாக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன்😁. இது ஒரு எதிர்மறை உளவியல், அனுரவின் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டால் நியாயம் கிடைத்தது என கருதுபவர்களிற்கான பதில், கடந்த காலத்தில் கூட அதிகார வர்க்கத்திற்கும், பாதுகாப்பு தரப்பிற்குமிடையேயான உறவு நிலவி வந்துள்ளது, மக்களுக்கு இலகுவாக நியாயம் கிடைக்கு நிலையில் தற்போதய அரசு இயந்திரம் இல்லை, இதற்காகவே பயங்கறவாத தடை சட்டத்தினை நீக்குவதற்கு இந்த அரசு விரும்பவில்லை, இந்த பயங்கரவாத தடை சட்டமே பாதுகாப்பு தரப்பிற்கு அதிக அதிகாரங்களை வழங்கி பல மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது அதே சட்டம் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்கள் தாம் விரும்பியதை நிறைவேற்றும் அதிகாரத்தினை வழங்குகிறது. சம சமூக நீதி என கூறும் இந்த அரசுக்கும் கடந்த காலத்தில் இருந்த அரசுக்களுக்கும் எந்த வித்தியாசமில்லை.
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
மோட்டார் சைகிளில் வந்தவர்களின் மேல் மட்டும் தவறு இல்லை, வானினை ஒட்டின இவர்களிலும் தவறுள்ளது, முந்தும் மோட்டார் சைகிளை வான் இடித்துள்ளது எனும் பட்சத்தில் இரு தரப்பிலும் தவறு இருக்கலாம், அதனால் காவல்துறையினர் வாகன சாரதியின் வாகன சாரதி பத்திரத்தினை கோரி உள்ளார்கள் ஆனால் அதனை கொடுக்காமல் காவல் துறையினரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்துள்ளார்கள் இது கூட சட்டப்படி குற்றம், இந்த நிகழ்வில் மோட்டார் வாகன சாரதி (குடித்துவிட்டு ஓடியதாக அது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால்), மற்றும் வான் சாரதி விபத்தினை உருவாக்கியது, விசாரணைக்கு ஒத்துழையாமை என இரண்டு குற்றங்கள் செய்துள்ளனர், காவல்துறை வன்முறையில் ஈடுபட்டு அதன் பங்கிற்கு தவறிழைத்துள்ளது ஆனால் வான் சாரதியே அதிகமாக தவறிழைத்துள்ளார் (அவர்களிடம் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இருந்த்திருக்காதோ என சந்தேகமாக உள்ளது அவ்வாறாயின் அது மேலும் ஒரு தவறாகும்). இவ்வளவு தவறுகளையும் செய்துவிட்டு காவல்துறை மேல் குற்றம் கூறுவதன் மூலம் தம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டுவது கண்டிக்கத்தக்கது அதே நேரம் சட்ட அமலாக்க பிரிவான காவல்துறையே சட்ட மீறலில் ஈடுபடுவதனை தடுக்க எதிர்காலத்தில் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டங்களினை உடனடியாக சீர்திருத்தம் செய்ய மேன்மை தாங்கிய அதி உத்தம ஜனாதிபதி அனுர அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
ரி 20 போட்டிகள் உயிர் இல்லாத ஆடுகளங்களில் வைக்காதது யார் தவறு? பராசக்தி சிவாஜிகணேசன் பாணியில் வாசிக்கவும்😁. தற்போது முந்தய ☝️ கருத்தினை வாசித்துப்பாருங்கள் புரியும் (நான் அந்த கருத்தில் கூட சிரிப்புக்குறி இட்டிருந்தேன் கவனிக்கவில்லையா?😁) இந்திய அணி செத்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடுவார்கள் என்பதனைத்தான் கூறியிருந்தேன், ஆனால் அந்த ஆடுகளமும் கடினமான பந்து தரையில் பட்டு வேகம் குறைந்து வரும் (பசை போல் ஒட்டும்) ஆடுகளம் என இந்தியணி வீரர் அஸ்வின் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் (நான் அந்த போட்டியினை பார்க்கவில்லை, நான் தவறாக கூறிவிட்டேன்). இந்தியணி அவுஸில் சிறபாக செயற்படும் என நம்புகிறேன் (விரும்புகிறேன்), முதல் 3 போட்டிகள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற உள்ளது, அண்மையில் அவுஸ்ரேலியா ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள், அவர்களுக்கு டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கலை தெரிவு செய்வதில் பிரச்சினை உள்ளது, இது வரை காலமும் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய வோனரின் ஓய்வினை நிரப்ப சரியான ஆள் கிடைக்கவில்லை. ஆனால் இந்தியணி தற்போது எந்த அணியினை பார்த்தாலும் கல்லைக்கண்ட நாய் மாதிரி பயப்படுகிறார்கள் (நியுசிலாந்தின் அடி அப்படி) இவர்கள் 4-1 என தோற்றுவிடுவார்களோ எனும் பயமாக இருக்கிறது.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
எமது அரசியல்வாதிகள் யாருமே அரசியலுக்கு தகுதியற்றவர்கள். இதனாலேயே நான் யாழுக்கு முடிந்தளவு ஒழுங்காக வருகிறேன், போன பஸ்ஸிற்கு இனி கை காட்டி பிரயோசனம் இல்லை.😁
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
நீங்க எப்படி கேட்டாலும் சொல்லமாட்டம் (தெரிந்தால்தானே சொல்வதற்கு ) ஆனால் ரசோதரன் தனக்கு தெரியும் என கூறினாலும் ஏனோ சொல்கிறாரில்லை, நீங்கள் எதற்கும் பரீட்சையில் விடைதெரியாத மாணவர்கள் விடைத்தாள்களுடன் காசு கட்டி விடுவது போல ரசோதரனை அணுகவும், அவர் மனம் வைத்தால் உங்கள் கேள்விக்கு ரசோதரந்தான் விகிரமாதித்தன்.😁
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இப்ப தெரியுதா இந்தியா யார் என்று😁.
-
ஆண் கொசுவை செவிடாக்கினால் டெங்கு காய்ச்சல் பரவாது - புதிய கண்டுபிடிப்பு
பல கோமாளித்தனமான விடயங்கள் அதற்கு பிறகும் செய்திருக்கிறேன், அண்மையில் எனது மகனிற்கு அவரது ஆசிரியை உப்புத்தண்ணீரில் ஓடும் விளையாட்டுக்காரினை பரிசளித்திருந்தார், அதனை பார்த்த போது உப்புத்தண்ணீரில் பழைய அலுமிய சட்டி மற்றும் பழைய உலர்கலத்தில் உள்ள காபன் கோலை பயன்படுத்தி திரவ மின் கலம் செய்தமை நினைவில் வந்தது ஆனால் ஏதோ காரணத்தால் அது வேலை செய்யவில்லை, தரவடிப்படையில் அது வேலை செய்யவேண்டும் ஆனால் வேலை செய்யவில்லை சில வேளை எலக்ரோரொட்டாக பயன்படுத்திய அலுமினியமும் காபன் கோலும் சுத்தமற்று இருக்கலாம் என அதனை ஈடுகட்டு முயற்சியின் பின்னரும் அது வேலை செய்யவில்லை. எனது பெற்றோர் என்னை ஜோசப் த ட்ரீமர் என நக்கலாக அழைப்பார்கள் (எனது பெயர் ஜோசப் இல்லை😁 அது சிறுவர் ஆங்கில கதையில் வரும் ஒரு கதாபாத்திரம்)😁.
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
கேல்விப்படவில்லை! ஆனால் பெயரே ஒரு மாதிரியாக இருப்பதலால் தெரிந்து கொள்ளவிரும்வில்லை😁.
-
ஆண் கொசுவை செவிடாக்கினால் டெங்கு காய்ச்சல் பரவாது - புதிய கண்டுபிடிப்பு
சின்ன வயதில் கழி ஒலியினை உருவாக்கி (மனித காதுகளால் உணர முடியாத அளவுக்கதிமான அதிர்வலைகளை) நுளம்பினை விரட்டுவதற்கு இலத்திரனியலில் உபகரணம் ஒன்றை செய்திருந்தேன் (3வோல்ட் இரண்டு பற்றரிகள்) ஆனால் நுளம்பு வழமைபோல் வந்து தொல்லைகொடுத்திருந்தது. 😁