Everything posted by vasee
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
எந்த மதத்திலும் உயிர்களை கொல்லுமாறு கூறுவதில்லை, இந்த முட்டாள்கள் செய்யும் செயலுக்கு மதத்தினை காரணம் காட்டி மதத்தினை ஒரு பயங்கரவாத மதமாகவே மாற்ற முயற்சிக்கிறார்கள் இந்த முட்டாள்கள். எதிர்காலத்தில் நாடுகள் இந்த மதத்தினை தடை செய்யும் நிலை கூட வரலாம் இந்த முட்டாள்களால், அமெரிக்க அரசின் படுகொலைகளுக்கு எவ்வாறு அப்பாவி மக்கள் உடந்தையாவார்கள், அமெரிக்க அரசின் அப்பாவி மக்கள் படுகொலைகளை நியாயப்படுத்துபவர்கள் போலவே அப்பாவி மக்கள் இறப்பதனை விரும்பும் இவர்களும் மனநோயாளிகள்தான். பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் இலங்கையில் நடக்க இருந்த தீவிர தாக்குதலை அறிந்தவர்களால் தம் நாட்டிற்குள்ளே நிகழும் தீவிர வாத தாக்குதல் பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது நம்புவதாக இல்லை! இதில் அனைத்து தரப்பினது குறியும் அப்பாவி பொதுமக்கள்தான்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
India 185, Australia 1/9 சிட்னி ஆடுகளம் பச்சை பசேலன காணப்படுகிறது, இந்தியர்கள் அவுஸ்ரேலியா தட்டையான சீமெந்து தரையினை அவுஸ்ரேலியா வழங்கும் என குறை கூறிய நிலையில் இவ்வாறான ஒரு ஆடுகளத்தினை யாரும் எதிர்பார்க்கவில்லை. நாணய சுழற்சியில் வென்ற இந்தியணி முதலில் துடுப்பெடுத்தாடும் முடிவினை எடுத்தது, இன்று மேக மூட்டத்துடன் மிதமான வெப்பத்துடன் புற்கள் நிறைந்த ஆடுகளம் வேக பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தது, எதிர் வரும் 3 நாதள் வெப்பம் அதிகரிக்கும் ஆடுகளத்தில் ஈரப்பதன் காணப்படுவது போல இருப்பதாக எனக்கு தோன்றுகிறது (தவறாக இருக்கலாம்) எதிர் வரும் நாள்களில் பந்து எதிர் பாராத வண்ணம் ஏற்ற இறக்கத்துடன் பந்து மேலெழும் நிலை உருவாகலாம். இது வழமையான சிட்னி ஆடுகளம் போல தட்டையாக இல்லை, வழமையாக 2, 3 ஆம் நாள்களில் துடுப்பாட்டத்திற்கு வசததியாக இருக்கும் ஆனால் இந்த ஆடுகளம் நாள்கள் செல்ல செல்ல மோசமாகலம் என கருதுகிறேன் (எனது தனிப்பட்ட கருத்து) ஆனாலும் பிட்ச் காயும் போது துடுப்பாட்டத்திற்கு வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. சிட்னி ஆடுகலம் மெல்பேர்ன் ஆடுகளம் போல Drop pitch இல்லை, அதனால் பிட்ச் உடையும் போது சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்படும், இவற்றினை பார்க்கும் போது அதிகளவில் இந்தியணிக்கு சாதகமாக நிலை உள்ளது, அதனால் அவுஸ்ரேலியா தனது முதல் இனிங்க்ஸில் அதிக ஒட்டங்களை பெற்றாக வேண்டும் 300 ஒட்டங்களையாவது அவுஸ்ரேலியா எடுக்க வேண்டும்.
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
ஆரம்ப பள்ளியில் தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு கதை உள்ளது அது உங்களுக்கு நினைவிருக்கலாம் மார்ட்டின் விக்கிரமசிங்க என்பவரின் கதை, அதில் ஒரு மாட்டுகாரரின் வாழ்க்கை கதையாக கூற்ப்பட்டிருக்கும், அந்த கதையின் தலையங்கம் அடிமைகள். கதியில் அவருக்கு ஏற்பட்ட விபத்தினால் அவர் படுத்த படுக்கையாகிவிடுவார், அந்த விபத்து நிகழ்வை கால ஓட்டத்தில் பின் சென்று பார்ப்பது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் அந்த கதையின் ஒரு நூல் இழை போல சமூக ஒடுக்குமுறை அந்த சம்பவங்களை பிடித்து இனைக்கும் வாசகர்களின் கண்ணுக்கு புலப்படா இழையாக காணப்படும், தலைப்பை உள்வாங்காவிட்டால் அந்த கதை சொல்ல வருகின்ற உண்மையான கருத்தினை உள்வாங்காது அது ஒரு ஏழை மாட்டுக்காரரின் கதையாக மட்டும் பார்க்கும் நிலை ஏற்படும் (அதில் பல அடிமைகள் உள்ளார்கள்) இலங்கையர்கள் என கூறுபவர்கள் இன்று செய்யும் செயல்கள் இலங்கை எனும் நாட்டினை மேலும் மேலும் மோசமாக்கும் செயல்கள்தான், அவர்கள் நினைப்பது பாதிக்கப்படுவது மற்றவர்கள் என ஆனால் உண்மையில் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் எனும் உண்மை நிலை புரியாமல்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
போடர் கவாஸ்கர் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது, ஆடுகள தயாரிப்பு பற்றி அதற்கு பொறுப்பாக உள்ள அடம் கூறிய கருத்திற்கு இந்திய இரசிகர்கள் எதிர்வினையாற்றியுள்ளார்கள். இந்த ஆடுகளத்தினை அவுஸ்ரேலியா வேண்டுமென்றே வெற்றி தோல்வியின்றி முடிக்க விரும்புவதாக இந்திய இரசிகர்கள் கூறுகிறார்கள். பொதுவாக சிட்னி ஆடுகளம் இந்திய உபகண்ட ஆடுகளம் போன்றிருக்கும் என கூறப்படுகிறது, இங்கு முதலில் துடுப்பெடுதாட விரும்புவார்கள் போட்டியின் இறுதி நாளகளில் ஆடுகளம் உடைய தொடங்கும் போது சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக காணப்படும், அதிக ஓட்டங்களை குவிக்க கூடிய ஆடுகளமாக இந்த ஆடுகளம் உள்ளது, இந்த போட்டி பெரும்பாலும் வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என முன்னால் அவுஸ்ரேலிய ஆட்டக்காரான மைகல் கிளார்க் எதிர்பார்க்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்தியா இந்த போட்டியில் வென்றாக வேண்டும், அத்துடன் அவுஸ்ரேலியா இலங்கையுடன் விளையாடும் டெஸ்ட் தொடரில் இலங்கையுடன் தோற்க வேண்டும் இந்த இரண்டும் நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுவதாக இந்திய முன்னால் வீரர்களும் இந்திய இரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். மெல்பேரினில் நடந்த போட்டி மிகவும் விறு விறுப்பாக இரு அணிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் கை மாறி ஒரு சமச்சீரான போட்டியாக நடந்து அதில் இரு அணிகளிலிலும் சிறந்த அணியான அவுஸ்ரேலியா வென்றது (370000 மேற்பட்ட இரசிகர்களால் இரசிக்கப்பட்ட இந்த போட்டி ஒரு வரலாற்று சாதனை கொண்ட போட்டியாக உள்ளது). தற்போது சிட்னி வெப்பம் கடந்த சில தினங்களாக மத்திய 30 களில் இருந்தது தற்போது இன்றும் நாளையும் (போட்டியின் முக்டல் நாளான) மத்திய 20 களுக்கு வருகிறது, பின்னர் 2, 3, 4 நாள்களில் 30 களின் ஆரம்பத்திற்கு வெப்பம் செல்லுகிறது இறுதி நாளில் மழை குறுக்கிடலாம். இவற்றினை வைத்து பார்க்கும் போது பிட்சில் 7 MM புல்லும், அதிக வெப்பமற்ற மிதமான வெப்பம், மற்றும் பாரமான ரோலர்களை அதிகமாக பயன்படுத்த உள்ளார்கள் போல இருப்பதலால் வழமைக்கு மாறாக வேக பந்து வீச்சிற்கு ஓரளவு உதவி செய்யும் நிலையில் பிட்ச் காணப்படலாம் ஆனால் அதே வேளை துடுப்பாட்டக்காரர்களின் சொர்க்கமாகவும் காணப்படும். மெல்பேர்ன் ஆடுகளம் போல ஒரு சூழலலை எதிர்பார்க்கலாம் ஆனால் இறுதி நாளில் மழை குறுக்கீடு ஏற்படலாம் அதனால் போட்டியின் முடிவு அற்றதாக வாய்ப்புண்டு. இந்த போட்டியிலும் அவுஸ்ரேலிய அணி இந்திய அணியினை விட சிறந்த அணியாக இருப்பதால் அவுஸ்ரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அவுஸ்ரேலிய அணியில் கவாயாவின் இறுதிப்போட்டி என கூறுகிறார்கள், அதே போல் சில இந்திய வீரர்களின் இறுதிப்போட்டியாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள், இந்த போட்டியினை வென்றாக வேண்டிய நிலையில் இந்தியணியில் மாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் இந்திய முன்னால் ஆட்டக்காரர்களின் கருத்தின்படி இந்தியா தனது அணியில் எந்த மாற்றங்களையும் செய்யாது என கூறப்படுகிறது.
-
பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
இங்கு பிரச்சினை தலிபான் அல்ல, சித்தாந்தம் (மதம்) அனைத்து பிரச்சினைக்கும் காரணமாக அமைகிறது, அது தன்னை தக்கவைக்க பெண்கல்வி, சுதந்திரம் என்பவற்றை அழிக்க நினைக்கிறது அதன் மூலம் காலதால் உக்கி போன கோட்பாடுகளுக்கு ஏற்படும் சவால்களை தவிர்க்க விரும்புகின்றது, மக்கள் சிந்திக்க கூடாது என்பதே அதன் நோக்கம்.
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
இல்லாத ஒன்றிற்காக ஒரு சம்பிரதாய நிகழ்வு தேவைதானா? உயிருடன் இருக்கும் போது கவனிப்பாரற்று விட்டு விடு பின்னர் அவர் இறந்த பின் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறுவது போல. இலங்கை காலம் செல்ல செல்ல நிலமை மோசமாகும் ஒரு தீராத நோயாகிறது.
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டம் என்பதே கேலிக்கூத்தான விடயம், இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையின் தற்போதய நிலை, பல இன வன்முறைகள், இன அழிப்பு போர்கள் மற்றும் பட்டினி, பொருளாதார பிரச்சினை என இலங்கை நாடு உள்ள நிலையில் இலங்கை மக்களின் மனங்களில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் மனநிலையே காணப்படுகிறது. மக்கள் பட்டினியிலும் அடக்குமுறைகளுக்குள்ளும் அவலப்படும் போது சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு? சுதந்திரம் கிடைத்து எதனை சாதித்துவிட்டார்கள்? தமிழ்த்தலைவர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதே தவறு.
-
பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
நாங்கள் வாழும் சமூகத்தில் எது சரி தவறு என்பதனை ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகிறோம், இவை கேள்விக்கிடமின்றிய கோட்பாடாக பின்பற்றுகிறோம், எமது Perception இல் இவை ஆதிக்கம் செலுத்துகிறது, இதே மாதிரியான சமூக சூழலில் வாழ்ந்தமையால் சில விடயங்களை எங்கு வெளிநாடு சென்றாலும் எம்மால் மாற முடிவதில்லை. நெருப்பு சுடும் என கூறினால் அதனை அனுபவத்தின் பின்னரே உணர்வோம் அல்லது அனுபவஸ்தர்களை பின்பற்றி அதனை தவிர்ப்போம் என இரண்டு தெரிவுகள் உண்டு, முடிவு எமது கையில். மற்ற சமூகங்களில் இருக்கும் குறைபாடுகளை சுட்டி காட்டும் எம்மால் எம்மிடையே உள்ள குறைபாடுகளை கூட இனங்காண முடியாமல் இருக்கின்றது, இது அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான ஒற்றுமை. மதங்கள் மக்களை நல்வழிப்படுத்துபவை, ஆனால் அவை மிகவும் பழமையானவை, அதில் குறைபாடுகள் உள்ளன அதனை நிவர்த்தி செய்ய உள்ள ஒரு வழி! அனைவருக்கும் கல்வி. எனது அம்மாவின் அம்மா தீவிர சாதி வெறியராக இருந்தார், அதற்கு நேரெதிராக எனது தாயார் இருந்தார், இருவருக்குமிடையே ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது! கல்வி (ஆனால் படித்த பலரே எமது சமூகத்தில் சாதியத்தினை தூக்கி பிடிப்பவர்களாகவும், அவ்வாறானவர்களை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர், ). பெண்களின் கல்வி மிக முக்கியமானது, ஒரு பெண்ணிற்கு கல்வியூட்டினால் அதனால் ஒரு முழுகுடும்பமும் பயனடையும், ஒரு சமூகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கல்வி அறிவுடன் இருந்தால் அந்த சமூகம் மிக சிறந்த சமூகமாகும். முன்னர் எமது சமூகத்தில் கூட பெண்கள் கல்வியினை மறுக்கின்ற நிலை காணப்பட்டது (மக்களின் அறியாமையினை பயன்படுத்தி அனுக்கூலம் பெறும் தரப்பு பெண்கள் கல்வியினை விரும்புவதில்லை) ஆனால் பெண்களின் கல்வியினை மறுக்கின்ற சமூகமாக இருக்கும் நிலை மோசமானது, இதனை அவர்கள் சமூக எதிர்காலம் கருதியாவது மாற்ற முன்வரவேண்டும். அனைத்திலும் நல்லது கெட்டது உண்டு, அதனை உய்த்தறிந்து தெரிவு செய்ய சிந்திக்க கூடிய கல்வி வேண்டும். இந்த வேகமான உலகில் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து சமூக பொருளாத முன்னேற்றத்தினை பெற்ற சமூகமாக மாற முக்கியமாக கல்வியில் முதலீடு செய்யவேண்டும் என கருதுகிறேன், அந்த கல்வி அனைவருக்கும் கிடைப்பதனை சட்டம் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
I put the bait he had taken என்பதனையே ட்ரவிஸ் கெட் கூறியதாக கூறுகிறார்கள், https://www.theroar.com.au/cricket/video/watch-travis-heads-interesting-celebration-after-pant-brain-explosion-off-half-tracker-1401484/ இந்தியா இந்த போட்டியினை வெல்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கவில்லை, ஆனால் தோல்வியினை தவிர்ப்பதற்கு சாத்திய கூறு இருந்தது, அது ஒரு கடுமையான பணி அதனை இந்தியாவின் தற்போதய அணியினால் செய்ய முடியாது, இந்தியணி முதலாவது இனிங்ஸில் சிறப்பாக விளையாடியது போல தோன்றுவதற்கு காரணம் ஆடுகளம் இரண்டாம் மூன்றாம் நாள்களில் காய்ந்து துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமானது. பின்னர் 4,5 நாள்களில் பிட்ச் காய்வதால் ஏற்படும் வெடிப்பு பந்து தரையில் பட்டு எதிர்பாரா மாற்றங்களை ஏற்படுத்தும், அந்த பிட்சில் விளையாடும் போது இந்த ஓட்டம் ஒரு எடுக்க முடியாத இலக்கு, இந்தியணி தற்போது கூறுவது போல வெற்றிக்காக ஆடினோம் என்பது இரசிகர்களை சமாதானபடுத்துவதற்காக அவர்களின் நோக்கமும் போட்டியினை தோல்வியின்றி தவிர்ப்பதாகவே இருந்த்து. முதல் 26 ஓவர்களில் வெறும் 33 ஓட்டங்களை இந்தியணி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.news.com.au/sport/cricket/i-can-explain-truth-behind-travis-heads-bizarre-celebration/news-story/b47dae4c340ed73dd6173ac265182bfb ட்ரவிஸ் கெட் செயலுக்கு இன்னொரு விளக்கம், ஆனால் பார்ப்பதற்கு முகம் சுழிப்பதாகவே இருந்தது.
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
பெரிய தென்னை தோட்டங்களில் மரத்தில் ஏறி தேங்காய் புடுங்குவதில்லை அதற்கென வேலையாள்களும் இருப்பதில்லை, விழுகின்ற தேங்காய்களையே விற்பதாக கேள்விப்பட்டுள்ளேன். யாழ்பாணிய சாதியம் என்பது (தற்போதுள்ள சாதிய கட்டமைப்பு) கிட்டதட்ட 200 வருட பழமை கொண்டதாக இருக்கலாம், அதனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த வாலறுந்த நரியினை மத, மொழி தொண்டராக பேணுவதன் உள்நோக்கமே இந்த சாதியத்தினை பேணுவதற்குதான். சாதியம் அழிந்தால் இனம் முன்னேறும், நாடு முன்னேறும் ஆனால் அந்த சாதியம் இல்லாவிட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள், அதனால் சாதியம் அழியாமல் காப்பார்கள்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
அவுஸ்ரேலியா வெற்றி, 2:1 என தொடரில் முன்னணியில் உள்ளது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இந்தியா தேனீர் இடைவேலையின் போது 3/112 (54 ஓவர்களில்), ஜெஸ்வால் 63, பந்த் 28, அவுஸின் வெற்றி வாய்ப்பு நழுவுகின்றது. 38 ஓவர்கல் மீதமுள்ளது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இந்தியா நிதிஸ் குமாரை அடுத்ததாக களமிறக்க வேண்டும், வழமை போல ரிசாப் பண்டினை களமிற்க்குவது சாதகமாக இருக்காது என கருதுகிறேன், பந்து சிறப்பாக செயல்படுகிறது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
340 ஓட்ட இலக்கை துரத்தும் இந்தியணி 3/33 மதிய உனவு இடைவேளையில் பெற்றுள்ளது, இந்தியா தோல்வியினை தவிர்க்க போராடி வருகிறது, பந்து 26 ஒவர்கலை நிறைவு செய்துள்ளது இருந்தும் பந்து தனது அனுகூலத்தினை இழக்கவில்லை, ரோகித், ராகுல், கோலி அவுடாகி உள்ளார்கள் கோல்யும் ராகுலும் அவுட்டாகியமை இந்தியணியினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
நேற்று கொன்ஸ்டாஸிற்கு விக்கெட் காப்பாளருக்கு பின்னால் எல்லை கோட்டில் இரு வீரர்கள் நிறுத்தப்பட்டு பந்து வீசப்பட்டது, அதன் மூலம் முதலாவது இனிங்ஸில் சாம் கொன்ஸ்டாஸ் செய்தது போல செய்ய விடாமல் தடுத்ததன் மூலம் பந்து வீச்சாளார்களின் லைன், லெந்தினை குறுக்கீடு செய்வது தடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் இறங்கி வந்து ஆட முயன்றார் அதன் மூலம் பந்து வீச்சாளரைகளை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சித்தார், அதனையும் இந்திய பந்து வீச்சாளர்கள் ஓவரின் ஆரம்பத்திலேயே அளவு குறைவான பந்துகளை வீசி கட்டுப்படுத்தினர். இறுதியாக சாம் அவுட்டாகி வெளியேறும் போது இந்தியணி அவருக்கு பதிலடி வழியனுப்பி வைப்பு செய்தார்கள், சாம், கோலி அவுட்டாகி வெளியேறும் போது பார்வையாளர்களை எழுந்து நின்று வழி அனுப்பி வைக்க சைகை செய்த்தது போல, ஆனால் சாமிற்கு பிடித்த துடுப்பாட்டகாராக விராட் கோலி இருந்துள்ளார், அதற்காக அப்படி செய்தாரா அல்லது கோலியினை கேலி செய்வதற்காக அப்படி செய்தாரா என தெரியவில்லை, இருப்பினும் இந்திய வீரர்கள் சாமிற்கு கேலியாக அந்த வழி அனுப்பலை செய்தார்கள். வழமையாக மோசமாக நடக்கும் அணியாக இருக்கும் அவுஸ்ரேலிய அணியினை விட மோசமாக இந்திய அணி நடப்பதால், அவுஸ்ரேலிய அணி பார்ப்பதற்கு கண்ணியமான அணியாக தோன்றும் அளவிற்கு மோசமான அணியாக உருவெடுத்திருக்கும் இந்தியணி, என்னதான் திறமை இருந்தாலும் அவர்களது நடத்தை அவர்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
அது ஒரு நல்ல முடிவாக இருந்திருக்கும், அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஒரு பந்து வீச்சாளர், 4 ஆம் நாள் காலையில் கூட பந்து வீசினார் மீண்டும் மாலையில் பந்து வீச வென்டும், பின்னர் சிட்னியில் இடம்பெறும் போட்டியில் பந்து வீச வேண்டும், பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவையானதுதான், கமின்ஸ் ஒரு பந்து வீச்சாளராக அந்த முடிவினை எடுக்காமல் விட்டிருக்கக்கூடும். 4 ஆம் நாள் இந்திய பந்து வீச்சாளர்களின் 50 ஓவர்களில் கூட பந்து ஆடுகளத்தின் தாக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டிருந்தது, இன்றும் அதே போல் செயற்பட்டால் அவுஸ்ரேலியர்கள் திறமையாக செயற்பட்டால் தேனீர் இடைவேளையின் போது இந்தியாவினை வென்றுவிடுவார்கள், இந்தியா ஆட்டத்தினை வெற்றி தோல்வியின்றி முடிக்க போராடும்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
அவுஸ்ரேலியா 9/228 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு மிக அருகில் உள்ளது, தற்போது 333 அவுஸ்ரேலியா முன்னிலையில் உள்ளது, இது வரை எந்த ஒரு அணியும் இந்த ஓட்டத்தினை 4 ஆவது இனிங்ஸில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
தற்போது அவுஸ்ரேலியா தனது இரண்டாவது இனிங்ஸினை விளையாடுகிறது, 47/2 . இந்தியாவின் அற்புதமான பந்து வீச்சு, அதனை எதிர்கொள்ள திணறுகின்ற அவுஸ்ரேலிய மட்டையாளர்கள், முதல் இனிங்ஸில் பரபரப்பு ஏற்படுத்திய சாம் அவுட்டாகி விட்டார், அவுஸ்ரேலிய துடுப்பாட்டக்காரர்களின் கால்களை நகர்த்தி விளையாடத குறைபாடுகளை வர்ணனையாளர்கள் குறிப்பிட்டார்கள். ஆனாலும் இந்தியாவின் பந்து வீச்சு குறிப்பாக புல் லெந்த் பந்து nip ஆகும் அற்புதமான பந்து வீச்சிற்கு இன்றைய ஆட்டம் ஒரு சிறந்த டெஸ்ட் மட்ச் உணர்வை ஏற்படுத்துகிறது. 152 ஓட்டங்கள் முன்னிலையில் அவுஸ்ரேலியா உள்ளது பந்து தனது உறுதியினை இழந்தால் இந்த சிறப்பான பந்து வீச்சு தொடராது.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இலங்கைக்கான இந்திய தூதுவர்கள் அடிக்கடி இவ்வாறு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதனை தவறாக கருணாநிதி என குறிப்பிட்டிருக்கலாம் என நினைத்தேன்.
-
கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
ஆம் திடமான ஆதாரமில்லை, இன்றும் பல நாடுகளிடம் தம்மிடம் அணுகுண்டு உள்ளதென அவர்களே கூறுகிறார்கள், ஆனால் அமெரிகா போல் அதனை பயன்படுத்தி அணுகுண்டு உள்ளதென இதில் எந்த நாடும் உறுதிப்படுத்தவில்லை (அதற்காக அந்த மிலேச்சதனமான அணுகுண்டு வீச்சை நியாயப்படுத்தவில்லை), நீங்கள் கூறுவது போல இது சீன பட்டாசாக இருக்கலாம். சிறு வயதில் எனது ஆராய்ச்சி ஒன்று தவறுதலாக போய் பக்கத்து வீட்டு கூரை தீ பற்றி எரிந்தது (தீ பெரிதாக சேதம் ஏற்படுத்தவில்லை மிக சிறியளவில் நெருப்பு ஏற்பட்ட போதே அதனை எனது தந்தை அணைத்து விட்டார் பக்கத்து வீட்டு ஓலை கூரை சிறிதாக சேதம் ஏற்பட்டதாக் நினைவுள்ளது) அதனால் எனது தந்தையிடம் முறையாக வாங்கியுள்ளேன். அணுகுண்டை வீசி நாட்டை அழித்துவிட்டு, ஜப்பான் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார்களாம், ஆனால் ஆராய்ச்சி செய்த எனக்கு அடி கிடைத்தது , எனக்கு எந்த நட்ட ஈடும் எனது அயல்வீட்டிலிருந்து கிடைக்கவில்லை.😁
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இதில் 1989 இலிலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த காலம், இந்த காலத்தில் இலங்கையில் நிலை கொண்டிருந்தத இந்திய அழிவு படை விலகிய காலம், அவர்களை கருநாநிதி வரவேற்க செல்லவில்லை காரணம் இலங்கையில் தமிழ் மக்களை அழித்த படையினரை வரவேற்கமாட்டேன் என. இரண்டாம் கட்ட போர் காலத்திற்கும் 1991 அவர் ஆட்சி நீக்கப்பட்டதற்குமிடையே சில மாதங்கள் இருந்ததனனால் அக்கால கட்டமாகவும் இருக்க முடியாது ஆகவே 1996 இற்கு பின்னரான கால கட்டமாக இருக்க வாய்ப்பிருக்கு என கணித்து உங்கள் வயதினை கணித்துள்ளேன், அப்படி பார்த்தால் நான் உங்களை விட வயதானவன்😁.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
1987 வரை எம் ஜி ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தவர் அதன் பின்னர் இந்திய இராணுவ பிரச்சினை அதற்கு பின் 1990 நடுப்பகுதியில் மீண்டும் இலஙகை இராணுவத்துடன் பிரச்சினை அந்த கால கட்டத்தில் கருணாநிதியின் ஆட்சி கவிழ்ப்பு பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சி, 90 களின் பிற்பகுதியில் கருணாநிதியின் ஆட்சி இருந்திருக்கலாம் அப்படி பார்த்தால் நீங்கள் 90 களில் பிறந்த ஒருவராக இருக்கிறீர்கள், நான் உங்களை வயதானவராக பார்த்துள்ளேன்.😁
-
கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
அமெரிக்கா, இரஸ்சியாவிடம் கூட இல்லாத ஆறாம் தலைமுறை சண்டை விமானத்தினை சீனா தயாரித்துள்ளதாக கூறுகிறார்கள்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இந்த மெல்பேர்ன் ஆடுகளம் கோடைகாலத்தில் கிரிகெட் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது, அது தவிரிந்த கால கட்டத்தில் இங்கு வேறு போட்டிகள் நடைபெறுவதால் இங்கு Drop pitch பயன்படுத்தப்படுகிறது. அஃவுஸ்ரேலியா நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சினை தெரிவு செய்தது, பொதுவாக இந்த ஆடுகளத்தில் முதல் 1 மணிநேரத்திற்கு ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதன் பந்து வீச்சாளருக்கு சாதகமாக காணப்படும், ஆனால் இந்த ஆடுகளம் போட்டிக்கு முந்தய நாள்களில் ஏற்பட்ட மழைகாரணமாக ஈரப்பதன் மற்றும் பிட்ச் மூடப்பட்டு இருப்பதனால் அதற்குள் ஏற்படும் ஈரப்பதன் என பிட்சில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த பிட்சின் ஈரப்பதன் போட்டியின் ஆரம்ப நாளான 40 பாகை வெப்பம் மற்றும் புற்கள் 6MM அளவில் வெட்டப்பட்டமை காரணமாக பிட்ச் வேகமாக உலரத்தொடங்கியதாக கருதுகிறேன், இரண்டாம் நாள் மூன்றாம் நாள் முதல் இரண்டு செசசன்ஸ் வரை ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு மிக சாதகமாக காணப்படும். தனிப்பட்ட ரீதியில் அவுஸ்ரேலியா பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என நான் கருதுகிறேன், ஆனால் பந்து வீச்சாளரான அவுஸ் அணித்தலைவர் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தமைக்கு முதல் நாள் வெப்பம் 40 பாகையிலும் தொடர்ந்து வரும் நாளகளில் வெப்பம் 20 களின் நடுப்பகுதி கொண்டதாக இருக்கும் என்பதால் அவ்வாறன முடிவினை எடுத்தரோ என நான் கருதுகிறேன். இந்தியாவிற்கு இது ஒரு நல்ல சாதகமான சூழல் ஆனால் அவர்கள் வழமை போல அனைத்து சாதகங்களையும் முழுமையாக பயன்படுத்தாமல் மோசமான விளையாட்டினை காட்டியுள்லனர், ஆனால் இன்று அவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது குறைந்து 375 ஒட்டங்களையாவது பெறுவதற்கு ஏற்ப நிலையில் ஆடுகளம் உள்ளது, ஆனால் அவுஸ் பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சு காணப்படுமானால் இந்தியா பரிதாபகரமான ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்கலாம். தற்போது இந்தியா 164/5 எனும் நிலையில் உள்ளது.
-
இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை ; அமைச்சர் சந்திரசேகரன்!
இலங்கை அரசிற்கு சிறுபான்மை மக்களை தொடர்ச்சியாக பொருளாதார அழுத்தத்திற்குள் வைத்திருக்கும் தேவை உள்ளது (எமது சமூகத்தில் காணப்படும் ஆதிக்க சாதியினர் கைக்கொள்ளும் உத்தி), அதே நேரம் இந்திய அரசினை மகிழ்விக்க வேண்டும் இதில் எமது மீனவர்களை பலிகடாவாக்காமல் இருந்தால் நல்லது.