Everything posted by vasee
-
அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
உங்களை போலவே எனக்கொரு சந்தேகம் இந்தாளுக்கு தெரியாத நபர்களே இருக்கமாட்டார்களோ என, ஒரு முன்னாள் இராணுவ வீரர் ஒரு வேலைக்கு சேர்ந்திருந்தார், அவர் இராணுவத்தில் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்பவர். அவரிடம் மற்றவர் கேட்டாராம் எவ்வாறு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்கிறீர்கள் என, அதற்கு அவர் சொன்னார், அது வெகு இலகு, ஒவ்வொரு நாட்டிலும் எவ்வகையான வெடிகுண்டுகள் பயன்படுத்துவார்கள் அதனை எவ்வாறு செயலிழக்க செய்வது என்பதனை கற்பித்திருப்பார்கள் என்றார். அதற்கு நம்மவர் கேட்டார் நிங்கள் அறிந்தேயிராத வெடிகுண்டினை செயலிழக்க செய்யும் நிலமை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என அதற்கு அவர் கூறினாராம் இது நான் சந்திக்கும் கடைசி வெடிகுண்டு இல்லை என நினைத்து கொள்வேன் என்றாராம்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இந்தியாவின் மானத்தை வாங்கும் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி, அவுஸ்ரேலிய ஊடகத்துறையினை புறக்கணிக்கும் இன்னொரு கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியணியின் இந்த தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் உடந்தையாக இருகிறதா என தோன்றுகிறது. மெல்பேர்ண் ஆடுகளம் சிட்னி ஆடுகளத்திற்கு நெருக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது, தற்போது நிலவும் அதிக வெப்பத்தினால் கடுமையாக இருக்க வாய்ப்பு அதிகம என்பதால் பந்து விரைவாக அதன் சுவிங், சீம் அனுகூலம் இலகுவாக இழக்கப்பட்டுவிடலாம் என கருதப்படுகிறது, அதனால் சுழல் பந்து வீச்சாலர்களின் பங்களிப்பும் இந்த போட்டியில் காணப்படும், முதல் நாள் ஆட்ட நாளில் வெப்பம் 40 பாகை வெப்பத்தினையும் அடுத்துவரும் நாள்களில் 20 களின் மத்தியில் வெப்பம் காணப்படும் என கூறப்படுகிறது, நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுபெடுதாடும் என கருதப்படுகிறது. அவுஸ்ரேலிய அணியில் மக்சுவேனி (புதிய தொடக்க ஆட்டக்காரர்) இற்கு பதிலாக சாம் கொன்ஸ்டாஸும் கேசல்வூட்டிற்கு பதிலாக பந்து வீச்சாளராக போலன்ட் களமிற்ங்கிகின்றனர், போலன்ட் இனது ஊர் மைதானம் இதுவாகும் இதில் அவர் முன்னர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு போட்டித்தொடர்களிலும் இந்தியாவே வென்றுள்ளதால் இந்தியர்கள் இந்தியணியே வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணி மேலாதிக்கத்துடன் இருப்பதால் அவுஸ்ரேலிய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம், இந்த போட்டியில் மழை குறுக்கிடாது என கருதப்படுகிறது.
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
-
கடல்வள கொள்ளையர்
அது வேற ஒன்றுமில்லை இந்த இரண்டு தரப்பும் குளிர்காய நாங்கள் சாக வேண்டியிருந்தது, அதனால இந்த இரண்டு தரப்பினையும் கோர்த்டுவிடுவம் என்று ஒரு முயற்சிதான்.😁
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
-
கடல்வள கொள்ளையர்
இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
உங்களுக்கு குசும்பு அதிகரித்துவிட்டது, அவர் இனப்பிரச்சினைக்கு (பொருளாதார பிரச்சினை) தீர்வு கூறுகிறார்.
- யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?
-
பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?
இந்த அதானி குழுமம் ஒரு இந்தியாவின் பினாமி போல திகழ்வதற்கு உதாரணமாக இந்திய அண்டை அதானி குழுமம் நாடுகளில் ஏற்படுத்திய வர்த்தக ஒப்பந்தங்களை பின்னர் அந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஏற்படும் இராய தந்திர போர்களில் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்படுகின்றமை பொதுவான இயல்பாக காணப்படுகின்றது. அதானி குழுமம் ஒரு Public listed ஆக இருந்தும் பங்குதாரர்களின் நலனை கருத்திற்கொள்ளாமல் இவ்வாறு இந்திய அரசுக்கு ஆதரவாக செயற்படுவதனை கேள்விக்குள்ளாக்கமல் இருக்கிறார்கள். இந்த அதானி குழுமத்துடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதனை அந்தந்த நாட்டு மக்கள் ஊழல் நடவடிக்கையாகவே பார்க்கவேண்டும்.
-
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
முன்னர் ஐரோப்பியர்களிடையே கூட சாம்ராஜித்திற்கு மேலாக (சிற்றரசு, அரசு, பேரரசு என்பவற்றிற்கு மேலாக) போப் இருந்தது போல இலங்கையில் பெளத்த மதம் தற்காலத்திலும் உள்ளது, பொதுவாக மதங்களின் பிற்போக்குவாதம் ஒரு நாட்டை சீரழித்த நல்ல உதாரணமாக இலங்கை இருந்துள்ளது, அது இந்த இடது சாரி என கூறிக்கொள்ளும் இந்த அரசிலும் நிகழ்வதுதான் வேடிக்கையாக உள்ளது. ஆனால் இந்த நிலை எப்போதும் மாறும்? எப்போது இலங்கை உருப்படும்?
-
தமிழ் தேசிய இனத்தை நிராகரிக்கும் அநுரவின் நுட்பமான முடிவு
ஆரிய கூத்தாடினாலும் காரிய கூத்தாக இருக்க வேண்டும் என கூறுவார்கள், சிறுபான்மையினர் இந்த இலங்கையர்கள் எனும் மாயையில் சிக்கி சீரழியாமல், இலங்கையிலுள்ள அவர்களது உள்வீட்டு பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடாமல் (அவர்கள் சிறுபான்மையினரின் நாடாக இலங்கையினை கருதுவதே இல்லை என்பதே யதார்த்தம்) எமது பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதனை மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என கருதுகிறேன்.
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
தற்போது இலங்கையிலுள்ள சிறுபான்மையினருக்கு ஏற்பதான உலக புறச்சூழல் ஏற்பட்டு வருகிறது, இதனை தமிழ் தரப்பு சரியாக பயன்படுத்துவது போலவே தெரிகிறது (Campaign positioning), ஒரு புறம் இந்தியாவிற்கு கஜேந்திரன் கடிதம், மறுபுறம் சாணக்கியன் நோர்வே, என பலதரப்புடனும் எமது பிரச்சினையினை பேசுவதற்கான புறச்சூழல் உருவாகி உள்ளது, இதில் சீன தரப்புடனும் நாம் பேச வேண்டும் சீனத்தரப்பும் தற்காலத்தில் தமிழ் மக்களுடன் பேசுவதற்கு ஆரவம் காட்டி வருகின்றனர் ( இதனை முன்பு கோசான் குறிப்பிட்டதாக நினைவுள்ளது). இந்த Campaign position ஒரு ஒழுங்குபடுத்த பட்டதாக இருக்க வேண்டும் என கருதுகிறேன் ஒரு ஜெனரல் போரை திட்டமிட்டு அதனை நெறிப்படுத்தி அதனை நிறைவேற்றுவது போல. இந்த நிலையினை ஏற்படுத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒரு பொது திட்டத்துடன் செயற்பட வேண்டும், இது தமிழர்களின் பேரம் பேசும் நிலையினை ஏற்படுத்தும் என கருதுகிறேன்.
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
இதனை வாசிக்கும் போதே பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது, ஒரு இளம் பெண்ணொருவரது ஒரு யூரியூப் காணொளியில் அவரது அம்மா ஐரிஸ் பின்புலம் அவரது தந்தை இலங்கையர் அந்த பெண் முற்றூ முழுதாக அவரது தந்தையின் எந்த அம்சமும் கொண்டிருக்கவில்லை, அவர் சிறு வயதில் அவரது தந்தையுடன் கடைக்கு சென்றிருந்த போது கடையிலிருந்து வரும்போது அவரது தந்தை அவரை தோளில் போட்டு தூக்கி வரும் போது வாசலில் நின்ற காவலாளி அந்த குழந்தையினை இலங்கையினை சேர்ந்த தந்தையினை குழந்தையினை கடத்துபவராக கருதிவிட்டதாக கூறினார். அந்த காணொளியில் இடப்பட்ட பின்னூட்டத்தில் ஒரு சிங்களவர் என நினைக்கிறேன் குறிப்பிட்டிருந்தார் அந்த பெண்ணின் தந்தை சிங்களவராக இருக்க முடியாது ஏனெனில் சிங்களவர்கள் வலுவான உயிரணுக்கள் கொண்டவர்கள் என குறிப்பிட்டிருந்தார். சிங்களவர்கள் இந்த கதைகளை நம்புவர்களாக இருக்கிறார்கள் என கருதுகிறேன். காணொளியினை தேடிப்பிடித்து இணைத்துள்ளேன்.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
தமிழ் யூரியூப்பருக்கு கொடுத்த பேட்டியில் அதனை குறிப்பிட்டுள்ளார், புதுத்தும்புத்தடி நன்றாக கூட்டும் என அது அனுரவை என நினைத்தேன், இப்போது அவர் அனுரவை கூறினாரா அல்லது அனுரவின் கட்சியினை கூறினாரா என சந்தேகம் வருகிறது.
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
ஆளைப்பார்த்தால் டேர்மினேட்டர் மாதிரி தெரியவில்லை. நோஞ்சான் மாதிரி இருக்கிறார்.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
அதற்கு பதில் குட்டாக ஒரு நாட்டின் ஜனாதிபதியினை தும்புத்தடி என கூறியிருக்கிறாரே?
-
இந்திய எண்ணெய் குழாய்கள் இலங்கைக்கு வருகிறதா?
இந்தியாவில் இருந்துதான் வரும், மற்ற நாடுகளில் இருந்து வாங்கி அதனை சுத்திகரித்து வழங்கும், இந்தியா தனது அயல் நாடுகளுக்கு இவ்வாறு குழாய் மூலம் எண்ணெய் வழங்குகிறது, ஆனால் என்ன இந்தியாவுடன் முரண்பட்டால் இப்போது பங்களாதேசத்திற்கு நிகழ்வது போல நிகழும் அவ்வலவுதான். இலங்கையிலுள்ள திரிகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளின் பயன்பாடு இதன் மூலம் அதிகரிப்பதுடன் இந்து சமுத்திரத்தினூடாக ஒரு புதிய எரிபொருள் பாதையினை இதன் மூலம் உருவாக்கலாம், அது இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
எனக்கு அவர்களின் வரலாறு விளங்கவில்லை, சிங்களவர்கள் விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்தவர்கள் என கூறுகிறார்கள், அதே வேளை சிங்க தந்தை மூலம் வந்த வம்சாவளியே சிங்களவர்கள் எனவும் கூறுகிறார்கள், சிங்கமா? விஜயனா?
-
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு - அமைச்சர் லால்காந்த
இங்கு வெளிநாட்டுக்கு வந்த ஆரம்பத்தில் நட்பு அடிப்படையில் ஒருவர் கை குலுக்கினார், கை குலுக்கும் போது உள்ளங்கையினை சுரண்டினார், அப்போது எனக்கு அதன் சூட்சுமம் தெரியவில்லை, அவர் விளையாட்டாகத்தான் செய்கிறார் என நினைத்து பதிலுக்கு நானும் உள்ளங்கையினை சுரண்டி விட்டேன்😁. அதன் பின்னர் வேறு ஒருவருக்கு அதே போல் உள்ளங்கையினை சுரண்டின போது, அவர் நான் புரியாமல்தான் இதனை செய்வதனை உணர்ந்தவறாக காரணத்தினை விளக்கினார், இந்த சம்பவத்திற்கிடையே பலருடைய கையினை குலுக்கியிருந்தேன். இங்கு இலங்கை கோருவது வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான நன் கொடை என நினைக்கிறேன், அத்துடன் எதிர்காலத்தில் வரவுள்ள நட்டத்திற்குமான நட்ட ஈடு.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அனைவருடனும் கதைக்க வேண்டும், சிங்களத்துடன் உடன்பாடு எட்டப்படும் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும், சிங்களம் எப்போதும் ஒப்பந்தங்களை சின்னப்பிள்ளைகள் பேப்பரை கிழிப்பது போல கிழித்துவிடுவார்கள், அப்படி கிழிக்கும் போது யாராவது பக்கத்திலிருந்து ஒரு போடு போடுவதற்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இருக்க வேண்டும். தற்போது இலங்கை அதிபர் இந்தியாவிற்கு ஓடோடி போய் இந்திய பாதுகாப்பிற்கு எதிராக செயற்படமாட்டோம் என கூறி இந்தியாவினை மகிழ்விக்க இந்திய நலத்திட்டத்தினை இலங்கையில் செயல்படுத்துவதிற்கு தயாரக உள்ளோம் என கூறியுள்ளார், பொதுவாக எமது நலனிற்காக மற்றவர்களை நாடி செல்லுகின்ற நிலையில் இந்திய நலனிற்க்காக இந்தியாவிற்கு ஓடிப்போன இலங்கை அதிபரை வழிக்கு கொண்டுவர இந்தியா போன்ற மூன்றாம் தரப்பு வேண்டும். உக்கிரேன் இரஸ்சிய போரில் சம்பந்தப்பட்ட இரண்டாம் தரப்பான இரஸ்சியாவினை விட்டு விட்டு அமைதி முயற்சியில் ஈடுபடுகின்ற உலகில் சிங்களத்துடன் மட்டுமே பேசுவோம் என இருந்தால் எமக்கு எதுவும் கிடைக்காது.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இதனை பற்றி பேசுவதில் பிரயோசனம் இல்லை, அது ஒரு தவிர்க்க முடியாத இயற்கையியல் விதி, அதில் பெயர்கள் மட்டுமே வித்தியாசமாக இருக்கும்.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
அவர் நிறைவேற்றுவதாக கூறியவை எவை? நான் நினைகிறேன் அவர் கூறிய விடயங்கள் பொதுச்சேவையின் தரத்தினை உயர்த்தல், ஊழல் அற்ற ஆட்சி, பயங்கரவாத தடை சட்ட நீகம், பொருளாதார வளர்ச்சி, சிறுபான்மையினரின் மொழியுரிமை. இதற்கு முன்னரிருந்த ஜனாதிபதிகள் இதனைவிட ஜனரஞ்சகமான வாக்குறுதிகளை வழங்கினார்கள், பொதுச்சேவை தரமுயர்த்தல், அபிவிருத்தி, பயங்கரவாத தடைசட்டம் நீக்கம், இனப்பிரச்சினை தீர்வு, ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பவை இலங்கை அரசியலின் வழமையான cliche தானே? எனக்கு தெரிந்து புதிதாக புதிய ஜனாதிபதி எதுவும் கூறிய மாதிரி தெரியவில்லை, அல்லது நான் ஏதாவதை தவற விட்டுள்ளேனா?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
புலிகள் அமைப்பு ஒரு மோசமான அமைப்பாகவும், அதன் தலைவரை பொல் பொட்டிற்கு இணையாக கூறுகின்ற இந்த உலகு, அந்த அமைப்பினை பெரும்பாலான நாடுகள் தடை செய்துள்ளன ஆனாலும் இலங்கையிலுள்ள பெரும்பாலான தமிழர்கள் அவர்களால் ஏதோ ஒரு வகையால் பாதிக்கப்பட்டாலும், ஆனாலும் அவர்களையே ஆதரித்த, ஆதரிக்கின்ற நிலையே காணப்படுகிறது. அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள், புலிகளின் மீதான வெறுபினால் அல்ல ஒரு ஆதங்கத்திலேயே. அடக்குமுறைகளிற்குள்ளாக்கும் இலங்கை அரசிற்கோ, அல்லது அதற்கெதிராக போராடிய எந்த ஒரு போராட்ட அமைப்புகளுக்கோ எந்தவகையிலும் தொடர்பற்றவனாக இருந்து வெறும் பத்திரிகை செய்திகளினூடாக இலங்கை அரசியலினை பார்க்கும் வெறும் பார்வையாளனாக எனது பார்வையில் புலிகள் மற்ற எந்த தரப்பினையும் விட அதிக அழுத்தத்திற்குள் செயற்பட்டவர்களாக தோன்றுகிறது. மற்ற போராளி அமைப்புகள், மற்றும் இராணுவத்தில் உள்ளது போல கேளிக்கைகள் (அவை என்னவென கூற தேவையில்லை என கருதுகிறேன்) புலிகள் அமைப்பில் தடை செய்யப்பட்ட விடயங்களாக உள்ளன, அவர்கள் போரில் வென்றாலும் அதற்கு கொடுக்கும் விலையுடன் சேர்ந்து அவர்களால் போரில் கொல்லப்பட்ட எதிரணி வீரர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் எனும் உணர்வு, அது ஏற்படுத்தும் மன அளுத்தம் (சக தோழர்கள் இறப்பினால் ஏற்படும் சோகம் கண்ணீரில் கரைந்துவிடும் ஆனால் இந்த கொலைகள் ஏற்படுத்தும் வலிகளை வேறு வழிகளில் வடிகாலிட முடியாது) இவைகளை எவ்வாறு போராளிகள் எதிர்கொள்ளுகிறார்கள் என ஒரு சாதாரண பொதுமகனாக நினைத்து பார்ப்பதுண்டு. போர் மனிதர்களை மிருகமாக்குகின்றது, நாங்கள் எமக்கு நெருக்கமானவர்களின் மீதுதான் குற்றம் காணுகிறோம், அந்த குற்றத்திற்கு காரணமானவர்களாக இருந்து கொண்டு. ஒரு இராணுவ நிர்வாகத்தில் எந்தவித ஜனநாயகப்பண்புகளும் பேணப்பட முடியாதது, சாத்தியமுமில்லை. அந்த நிர்வாகத்திற்குட்பட்ட மக்களின் நிலை கடினமான ஒன்றாக இருக்கும், அதற்கு மாற்றீடாக இராணுவத்துறை சம்பந்தமற்றவர்களை பணிகமர்த்தி அவற்றினை செயற்படுத்தும்போது வருகின்றவர்களும் தவறாக இருந்தால் மக்களின் நிலை மோசமாகிவிடும். விமர்சனங்களின் மூலம் எதிர்காலத்தில் இது போல நிகழாமல் இருப்பதற்கான விமர்சனமாக இதனை பார்ப்பதாக கூறும் நாம் எம்மீதான எந்தவித சுய விமர்சனமுமில்லாமல் எமது தவறுகளுக்கு பலிக்கடா தேடுகின்றோம். அதற்காக தம்மீதான விமர்சனங்களை எதிகொள்ளும் சக்தியற்ற பலவீனமானவர்களாக இருந்த புலிகளின் அதிகார வெறியினை நியாயப்படுத்தவில்லை.
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
இந்த படத்திற்கு கொடுக்கும் இப்படியான மறைமுக விளம்பரத்தினை பார்த்துவிட்டு படத்தினை பார்க்க முயற்சிக்கிறேன் (சிறிது சிறிதாக), இதுவரை 15 நிமிட படம் பார்த்துள்ளேன் ஆனால் பெரிதாக கூச்சல்கள் இல்லை (அமேசனில்).
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
இதே இந்தியாதான் இவர் ஆட்சிக்கு வரக்கூடாதென்பதற்காக ரணிலையும் சஜித்தையும் கூட்டணி வைக்க முயற்சித்தது.