Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. இல்லை, தனிநாடோ அல்லது சமஸ்டியோ பற்றி நான் கூறவில்லை, ஒரு நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் இருக்கும் உரிமைகளுடன் அனைத்து மக்களும் வாழ வேன்டும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் ஜனநாயக விழுமியங்களை பேண வேண்டும். ஒருவர் மீது அடக்குமுறையினை சாதி, மத, இன என்ற அடிப்படையில் அடக்குமுறைகள் கூடாது (Discrimination). எனது கருத்தினை ஐலன்ட் தவறாகவே புரிந்து கொள்வதனால் அதனடிப்படையான கருத்தினடிப்படையில் உள்ளது உங்கள் கருத்து.
  2. இந்த பதிவில் கூறப்பட்டதனை போல Break out trade எடுப்பத்துதான் எனது நோக்கம் அதில் AUDJPY ascending triangle breakout ஆகி விட்டது, அதன் 99.250 எல்லை ஆசிய சந்தை உயர் விலையும் ஒன்றே, தற்போது விலை 99.800 அளவில் உள்ளது, விலை மீண்டும் 99.250 வரும்போது எவ்வாறு செயற்படுகிறது என்பதனை பொறுத்து வர்த்தகம் செய்யவுள்ளேன்.
  3. இல்லை சட்ட ரீதியான பாதுகாப்பினை! நான்நினைக்கிறேன் நீங்கள் தனிப்பட்ட ரீதியில் எனது கருத்தினை எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் என, உங்கள் கருத்தும் நல்ல கருத்துத்தான்.
  4. பெரும்பாலும் இந்த பெயரளவு சமஸ்டி என்பதால் இலங்கை அரசிற்கு பாதகத்தினை விட சாதகமே அதிகம் என நினைக்கிறேன், உதாரனமாக வட கிழக்கு சிறுபான்மை மக்களிடம் வித்க்கப்படும் வரியில் வரும் வருமானத்தினை அப்பகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசிடமே கையேந்த வேண்டியிருக்கும் (பொதுவாக) கிட்டதட்ட இப்போதுள்ள நிலமைதான் ஆனால் பெயரளவில் சமஸ்டி என்றிருக்கும். இங்கு இலங்கையிலுள்ள பிரச்சினை என்னவென்றால் என்னதான் அபிவிருத்தியினை பெரும்பான்மை பிபுலம் கொண்ட அரசின் மூலமாக பெற்றாலும் அதே அரசினால் ஒரே இரவில் நடுத்தெருவிற்கு வரவேண்டிய் நிலை ஏற்படும், உதாரணமாக 83 இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜே ஆரின் ஆசியுடன் தமிழர்கள் மேல் மேற்கொண்ட கலவரத்தில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் (மில்லியனா பில்லியனா என சரியாக நினைவில்லை) தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது, இவ்வாறு அரசினால் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சட்ட ரீதியான பாதுகாப்பினை பெறமுடியாத நிலை காணப்படுகிறது. என்னைப்பொருத்தவரை இப்படி மீனை பெறுவதனை விட தூண்டிலை பெற அனைத்து பாதுகாப்பற்ற சிறுபான்மையின மக்களும் முயற்சிக்க வேண்டும், அத்துடன் உரிமைகளை (பாதுகாப்பும் சம உரிமையும்) மக்கள் இரந்து பெறும் நிலையில் ஒரு நாடு கீழிறங்குவது மிகவும் ஆபத்தான நிலைக்கு ஜனநாயகத்தினை தள்ளுகின்ற நிலையாகும்.
  5. சிகப்பு பெட்டியினால் சுட்டிக்காட்டப்பட்ட பகுதி திங்கள் (வாரத்தின் முதல் நாள்) ஆசிய சந்தை வியாபார நேரம், இதன் நேரம் டோக்கியோ சந்தை நேரம் ஆகும், ஆனால் ஆசிய சந்தை சிட்னி சந்தை நேரத்தில் ஆரம்பிக்கும் அதிலிருந்து 2 மணி நேரத்தின் பின்னர் ஆரம்பிக்கும் GMT + 12 ஆக இருக்கும் என கருதுகிறேன். இந்த வாரத்தில் இந்த சிகப்பு பெட்டியில் விலைகள் Support & resistance போல் செயற்படும், AUDJPY இனை தவிர்த்து மற்ற இரு சந்தைகளும் இந்த சிகப்பு வலயத்திற்குள்ளேயே இருக்கின்றது, AUDJPY இந்த வலயத்தினை கடந்து மேலேறி உள்ளது, தங்கமும் AUDJPY வாங்கும் உத்தேசத்தில் இருந்தாலும் இந்த வார முதல் நாள் ஆசிய சந்தைநிலவரத்தினடிப்படையிலேயே வர்த்தகம் செய்வதுண்டு, இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்னர் இணைக்கிறேன்.
  6. இந்த வாரம் இரண்டு வகையான சந்தைகளில் (நாணய சந்தை, பொருள் சந்தை - commodity) இல் மட்டும் ஈடுபட உள்ளேன், US S&P 500 தற்போது பக்கவாட்டாக நகர்கிறது இதனை Choppy market action என கூறுவார்கள், இந்த வகை சந்தைகளில் வர்த்தகம் ஈடுபடுவது இலாபகரம்ற்றது அத்துடன் இது ஒரு Accumulation or Distribution பண்பை கொண்டுள்ளது இதில் range break trade சாதகமான விளைவை ஏற்படுத்தும். AUDJPY & GOLD chart pattern breaks out trade இல் ஈடுபடுவதுதான் நோக்கம், பொதுவாக திங்கள் கிழமை ஆசிய சந்தை நிகழ்வு குறித்த வார த்திற்கான சந்தை போக்கினை தீர்மானிக்கும் என்பார்கள் அதனடிப்படையில் எனது வர்த்தகத்தினை மேற்கொள்வது வழமை, எனது முறைமையான வர்த்தக முறையினை (எனது சொந்த முறைமை அல்ல) பின்னர் விள்க்குகிறேன், அது தொடர்பான தொழினுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கோரினால் அதனை பதிவிட முயற்சிக்கிறேன், ஆனால் வர்த்தகத்தில் வெற்றி தோல்வி எனபதனை நிகழ்தகவினடிப்படையில் அணுக வேண்டும் என்பார்கள். அனைத்து முறைமையும் அனைவருக்கும் பொருந்துவதில்லை, இந்த உத்தியினை பயன்படுத்துவதற்கு முன்னர் இதனை back test and forward test செய்து அதன் தரவினை பயன்படுத்தி risk ruin simulator இன் அடிப்படையில் உங்கள் risk இனை தீர்மானிக்கவும் (இந்த கணிப்பில் உங்களது கணக்கு பேணப்படுவதனை உறுதி செய்த பின்) இந்த கணிப்பி இணையத்தளத்தில் பல பக்கங்களில் உள்ளது கூகிளில் தேடலாம். பொதுவாக எனது முறைமையினை கூறாமைக்கு காரனம் சுயநலம் அல்ல, இதில் உள்ள risk இனை உணராமல் மற்றவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதற்கு நான் காரணம் எனும் எண்ணத்தில்தான், ஆனால் இதனை முயற்சிப்பவர்கள் அது அவர்களது தனிப்பட்ட முடிவு மற்றும் அதனால் ஏற்படும் இலாப நட்டங்களுக்கு நானோ அல்லது யாழ் இணயமோ பொறுப்பல்ல.
  7. இஸ்லாமியர்களி இந்த தந்திரோபாயம் இலங்கை உள்நாட்டு போர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது என்பது உண்மைதான், ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் எக்காலத்திற்கும் பொருந்தும், சிங்கள கட்சிகளை நேரடியாக ஆதரிக்காமல் அவர்க்ளை கையாளும் இந்தியாவினை கொள்கைகளை செய்வதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் மாஸ்ர பிளான்😁. சாமியினை (இந்தியா) நேரடியாக கும்பிடாமல் எதுக்கு ஆசாமியினை(தனித்தனி கட்சிகளை) கும்பிட வேண்டும்?😁 இந்தியா; சஜித்திற்கு ஆதரவு கொடுக்கச்சொன்னால், சஜித்திற்கு ஆதரவு கொடுப்பதை விட்டு விட்டு அஜித்திற்கு (தமிழ் பொது வேட்பாளர்/ அனுர குமார?) ஆதரவு கொடுப்பதை பற்றி தமிழ் அரசியல்வாதிகள் பேசக்கூடாது. 😁
  8. இந்த தளபதியினை ஒரு மாதம் கூட தனது பதவியினை நிறைவு செய்ய அனுமதிக்கவில்லை, முப்படைகளின் தலமையாக உள்ள செலன்ஸ்கி புதிய தொழில்னுட்பங்களும் பயிற்சிகளும் போரில் மாற்றம் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையில் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார், உக்கிரேன் படையினருக்கு நேட்டோவின் அதி சிறந்த இராணுவ தளபாடங்களுக்கும் இராணுவ பயிற்சிகளும் வழங்கி போரினை முன்னெடுத்தாலும் போரில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை, அதற்கான காரணக்களை உதவி வழ்ங்கும் நாடுகளுக்கு கூற வேன்டிய நிலையில் இவ்வாறான பலிக்கடாக்கள் தேவைப்படுகிறது. பல தளபதிகளை வேலை நீக்கம் செய்து தவறு தளபதிகளின் மேல் என்பதாக காட்ட முயற்சிப்பது ஒரு புறம் இராணுவ முக்கியத்துவம் அற்ற சாகச இராணுவ நடவடிக்கைகளை ஒரு சினிமா சாசகசம் போல செய்து மென்மேலும் இராணுவத்திற்கு நெருக்கடி கொடுப்பது என ஒரு குழப்பகரமான் சூழ்நிலைக்குள் உக்கிரேனிய படையினரை வைத்துள்ளார், ஒவ்வொரு மேற்கு இராணுவ தளபாடம் வரும் போது அது தொடர்பான மிகைப்படுத்தலுடன் போரில் குதிக்கும் உக்கிரேனிய படைகளை சோவியத் கால இராணுவ சாதனங்களை வைத்தே இரஸ்ஸியா, அவற்றினை வெற்றி கொள்வதற்கு T72 இரக டாங்கிகளின் சாதனைகளை உதாரணமாக கூறலாம். புதிய தளபாடங்களும் பயிற்சிகளும் ஆரம்பத்தில் ஊடக கவனம் பெற்றாலும் காலப்போக்கில் அவை காணாமல் போவதற்கு காரணம் இரஸ்சியாவின் தகவமைப்பு திறமைதான் காரணம். போரில் இந்த தளபாடங்கள் உக்கிரேனிய துருப்பினர்களை குழப்பத்தினை உருவாக்குவதாக கூறுகிறார்கள். இறந்துபோன உக்கிரேனிய F-16 விமானி ஒரு அனுபவமிக்க விமானி என கூறுகிறார்கள், அவர் F-16 பயிற்சி பெற்றவர், உக்கிரேன் கூறுவது போல விமானியின் தவறு என கூறி அந்த வீரரை அவமானப்படுத்தியுள்ளார்கள், அதற்கான நொண்டிச்சாட்டாக இரு வேறுபட்ட கருவிகளின் அமைப்புகளுக்கு தகவமைக்க முடியாமை என ஒரு புறம் கூறினாலும் வானிலிருந்து வானிற்கு பாயும் ஏவுகணை தாக்குதலை வேறுபட்ட வேக இலக்குகளின் மீதான தாக்குதலை சரியாக கணிக்கமுடியாமையினாலேயே இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது, இவ்வாறான குற்றச்சாட்டு இதுதான முதல் தடவை அல்ல, இவரைப்போல ஒரு சிறந்த விமானியின் இறப்பிற்கும் இவ்வாறான குற்றச்சாட்டே முன்னரும் வைக்கப்பட்டிருந்தது, இது ஒரு உக்கிரேனிய வழமையான நொண்டிச்சாட்டாக உள்ளது போல இருக்கிறது. மறுவளமாக மேற்கு தன்னிடம் உள்ள அனைத்து சிறந்த அதி நவீன ஆயுதங்களையும் உக்கிரேனிற்கு வழங்கிவிட்டு அதற்கான பலனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது, இது மேற்கின் பொறுமையினை சோதிப்பதாக உள்ளது, மேற்கிற்கு நேரடி வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் பல சிறந்த வீரர்களை அவர்கள் இறந்த பின்னரும் அவமானப்படுத்துவதும் தளபதிகளை மாற்றுவதும் தொடர்வதால் ஒரு கட்டத்தின் பின் மேற்கு பொறுமையிழந்து போரை முடிவிற்கு கொண்டு வர முனையலாம், ஆனால் கரீசு அம்மையார் (இவர்தான் வெல்வார் என நான் கணிக்கிறேன்) தொடர்ந்து உக்கிரேனிற்கான உதவி தொடரும் என கூறியுள்ளார். இந்த போரை மேற்கு நாடுகள் அனுசரிப்பதற்கு காரணம் அமெரிக்க நிர்பந்தம், இந்த போரில் யார் வென்றாலும் தோற்றாலும் இவர்கள் அனுப்புகின்ற ஆயுதங்கள் ஒரு நாள் தம் தாய் நாட்டிற்கே திரும்ப வரும்.
  9. நாங்கள் முன்பு செலன்ஸ்கி வேறு நாட்டில் தஞ்சம் கோருவார் என விவாதித்திருந்தோம், அதனை நீங்கள் மறுத்திருந்தீர்கள், ஆனால் தற்போது நான் கூறவில்லை இணையத்தில்தான் கலாய்க்கிறார்கள் செலன்ஸ்கி one way ticket இல்தான் அமெரிக்கா செல்வதாக😁, செலண்சிகியின் பதவிக்காலம் முடிந்தும் பதவியினை விட்டு விலகாமல் இருப்பவர் எதற்காக ஓட வேண்டும்? அண்மையில் கூட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் 50 பில்லியன் இரஸ்சியாவின் பணத்தினை (வாக்குறுதி கொடுக்கப்பட்ட) தருமாறு வேன்டுகோள் விடுத்திருந்தார், நாட்டை விட்டு ஓடுபவராக இருந்தால் எதற்காக இதெல்லாம் செய்கிறார்?
  10. செம்ரெம்பரில் செலன்ஸ்கி அமெரிக்கா செல்கிறார், திரும்பி உக்கிரேன் போக மாட்டார் என கூறுமளவிற்கு தற்போதய நிலமை மோசமாக உள்ளது என்பது உண்மை, உக்கிரேனிற்கு ஆயுத பிரச்சினை இல்லை ஆளணிப்பற்றாக்குறை, கோட கால முடிவிற்குள் 60000 உக்கிரேனியர்களூக்கு உக்கிரேனில் ஐரோப்பிய ஒன்றியம் உக்கிரேனிற்குள் வைத்து பயிற்சி வளங்கப்படவுள்ளதாக கூறுகிறார்கள், அதில் வெளிநாட்டு இராட்ணுவத்தினரைஅழைத்து வந்து பயிற்சி வளங்கப்பட்ட பின்னர் உக்கிரேனிற்காக போரிட வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தப்படலாம்.
  11. அண்மையில் வேலையில் ஐரோப்பிய பின்புலம் உள்ள பெண்மணி ஒருவர் கேட்டார் இந்தியாவில் ஒரே பாலின திருமணம் எப்போதிருந்து அமுலில் உள்ளது என கேட்டார், எனக்கு தெரியாது அங்கு ஒரே பாலின திருமனத்திற்கு ஏன் தடை போடப்போகிறார்கள் என கேட்டேன் (விஸ்ணு கதை தெரிந்தமையால் புராண இதிகாசங்களிலேயே இருக்கின்றமையால் இந்த பிரச்சினை இருக்காது என நினைத்தேன்) கூகிளில் தேடி விட்டு கூறினார் இல்லை, அனுமதி இல்லை என கூறினார். ஒருவரது விருப்பு வெறுப்பு என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயம், அதே போல சுயநிர்ணய உரிமை என்பது அனைத்து சமூகங்களுக்கும் உண்டு, அதனை வைத்து சிறப்பாக செயற்பட்டால் நாடு வளர்ச்சிப்பாதையில் செல்லும், அவர்கள் பிரிந்து போய்விடுவார்களோ என பயப்பிடும் அளவிற்கு எம்மில் ஏதாவது தவறு இருந்தால்தான் அதற்கு கவலைப்படவேன்டும், இப்படியான ஆக்கிரமிப்பு சிந்தனையாளர்கள் தமது குடும்பத்தில் உள்ள உறவுகளிடமும் நம்ம்பிக்கையற்றே இருப்பார்கள், ஆனால் இவர் இந்த வகையினை சேர்ந்தவரா இல்லையா என்பதனை காலம்தான் பதில் சொல்லும்.
  12. ஒரு ஊடகவியலாளாரின்? பொறுப்பற்ற கருத்து. ஊடகங்களால் மக்களினை தம் விருப்பத்திற்கேற்ப திருப்ப முடியும் இதனைதான் த்ற்போதய ஊடகத்துறை உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலிலும் செய்கிறார்கள், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க தயாராக இருந்த வண்ணம் இதனை செய்யவேண்டும்
  13. பெரும்பாலும் இரு நாட்டின் எல்லைப்பகுதிகளில் ஜாமர்கள் இருந்திருக்கலாம், எதிர்பாராத வேறு எல்லைகளினூடாக ஊடுருவல் செய்திருக்கவும் வாய்ப்பு இருக்கலாம். தற்போது இரஸ்சியா தனது நாட்டினை சுற்றி எதிரிகளை உருவாக்கிவிட்டுள்ளது, போலந்து படையினர் (தன்னார்வலர் எனும் போர்வையில்) பெருமளவில் இந்த போரில் ஈடுபடுகிறார்கள் என கூறுகிறார்கள். உக்கிரேனிய படைகளின் தற்காப்பு நிலைகளுக்கிடையேயான தொடர்பாடல் பிரச்சினை நிலவுவதாக கூறுகிறார்கள், இது ஒருங்கிணைந்த தாக்குதலை பாதிப்பதாக கூறுகிறார்கள், இது ஒரு எதிர்மறையான தாக்கமாக உக்கிரேனுக்கு இருந்தாலும் வெறு நேச நாட்டு எல்லைகள் இந்த யுத்தத்திற்கு பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் அது உக்கிரேனுக்கு சாதகமான அம்சமாக இருக்கும், அவை மோசமான அத்துமீறலாக இல்லாதவரை பிரச்சினை வராது என கருதுகிறேன். ஆனால் இந்த போரை தொடர்வதால் உக்கிரேனிற்கும், இரஸ்சியாவிற்கும் பெரிதாக நன்மைகள் கிடைக்காது; ஆனால் பெருமளவில் இழப்புகள் தொடர்கதையாகும், ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம், பாதிக்கப்படுவது இரண்டு நாடுகளும்தான், ஒரு காலத்தில் இணைந்து பயணித்தவர்கள் இலகுவாக சமசரமாக முடியும், ஆனால் அதனை மற்றவர்கள் விரும்பமாட்டார்கள் ஏனென்றால் இந்த போரினால் அவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள்.
  14. பிபிசி இன் இந்த வகை பிரச்சார வகை கட்டுரைகள் மக்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே யதார்த்தங்களில் இருந்து திசை திருப்ப முடியும், உண்மைகளை கூறுவதனால் போரின் மீதான வெறுப்பு இன்னும் அதிகமாகிவிடும் என்பதற்காக இவ்வாறான பிரச்சார கட்டுரைகளை பதிவிடுகிறார்கள் என கருதுகிறேன். கடந்த திங்களன்று F-16 இனை உக்கிரேன் இழந்தது, அதனை வெளியிட முடியாதவாறான நிலை உக்கிரேனுக்கு இருந்தது, அதற்குக்காரணம் மேற்கு நாடுகள் இந்த இழப்பினால் எதிர்கால உதவிகளை நிறுத்தி விடலாம் என்பதாலோ அல்லது உக்கிரேனால் சொல்லமுடியாத வேறு ஏதாவது காரணம் இருந்திருக்கலாம், ஆனால் வோல்ஸ்ரிட் ஜெனல் இந்த செய்தியினை வெளியிட அதன் பின் உக்கிரேன் விமானியின் தவறு என முதலில் கூறி தற்போது தமது பேற்றியாட்டின் மூலம் சுட்டு வீழ்த்தியதாக கூற்கிறார்கள், உண்மை நிலவரம் உக்கிரேனிற்கு மட்டும் தெரிந்திருக்கலாம். மேற்கு ஊடகங்கள் கேர்க்ஸ் ஊடுருவலுக்கு கொடுத்த பிரச்சாரத்தில் ஒரு பங்காவது அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றி விவாதித்திருந்தால் தற்போது கிழக்கு உக்கிரேன் மற்றும் கேர்க்ஸில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது, உக்கிரேனிய வீரர்கள் உண்மைநிலவரங்கள் பகிரப்படவேண்டும் என கோரிக்கை விடும் நிலைக்கு நிலவரங்கள் ஏற்பட்டிருக்காது. உக்கிரேனிய வீரர்கள் இராணுவ கட்டமைப்பு மறு சீரமைக்கவேண்டும் என கோருகிறார்கள் என கூறப்படுகிறது, உயர் பதவி வகீக்கும் இராணுவ உத்தியோகத்தர்களின் தகுதியின்மை களநிலவரத்தினை பாதிப்பதாக கருதுகிறார்கள், இவ்வகையான குழப்பநிலை ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இராணுவத்தின் பண்பாகப்பார்க்கப்படுகின்றது, தற்போது உக்கிரேன் இராணுவம் ஒரு கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது, இவ்வாறான கட்டுரைகளால் இவ்வகையான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.
  15. 2009 இல் சிட்னியில் இலங்கையில் நிகழும் மனித அழிவை தடுத்து நிறுத்த கோரி மக்கள் பல வெளிநாட்டு தூதரங்களுக்கு மனுக்கொடுத்தார்கள், இந்திய தூதரகத்திற்கு மனுக்கொடுத்த போது அதனை அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த நிகழ்வுகளை முன்னின்று நிகழ்த்திய ஒரு மாணவர் (25 வயதிற்கு மேலான அவர் வெளிநாட்டு மாணவராக கல்வி கற்று கொண்டிருந்தார் என நினைக்கிறேன்), உடனடியாக ஒரு கோசம் ஒன்றினை ஆரம்பித்தார்; "சோனியா, மாபியா!" என அவரை பின்பற்றி மற்றவர்களும் அவர் சோனியா என கூற மற்றவர்கள் மாபியா என கூற அங்கு நின்ற மற்றொருவர் வேண்டாம் என்றார், அவர் கூறிய உடல்மொழியில் அந்த கோசம் எவ்வளவு அருவருக்கதக்கதாக இருந்தது என்பதனை கோசமிட்டவர் உணர்ந்து உடன் நிறுத்திவிட்டார் (ஆனால் அவர் இதனை முன் கூட்டியே திட்டமிட்டே வந்திருப்பார் என நினைக்கிறேன்). படித்தவர்கள்தான் மற்றவர்களை தமது சுய நலஙளுக்காக தவறாக வழிநடத்துவார்கள், இந்த நிகழ்வில் சில சுயநலமிகள் தங்கள் விருப்பத்தினை மற்றவர்களை உசுப்பேற்றி நிகத்தியுள்ளார்கள், கலகக்காரர்கள் வெறும் அம்பு மட்டும்தான். இதில் கலகம் செய்தவர்கள் உண்மையாக தமது சமூகத்திற்கு நன்மை செய்ய விரும்பியிருப்பார்கள், ஆனால் இந்த தவறாக வழிநடத்துபவர்கள் ஒரு இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் மாதிரி தாம் சார்ந்த சமூகத்தினை கூட விற்று வயிறு வளப்பவர்கள், அவர்கள் உள்ளேயும் இருப்பார்கள் வெளியேயும் இருப்பார்கள், மோசமானவர்கள். எமது சமூகம் பல சமூக பீடைகளால் பீடிக்கப்பட்டுள்ள சமூகம், ரசோதரன் கூறுவது போல ஆதிக்க வெறியினை எம்மை நல்வழி படுத்தும் மதங்களூடாகவே பெறுகிறார்கள், இஸ்லாமியர்களை குறை கூறும் நாம் அவர்களவிற்கு இல்லை என்ற்றாலும் அதே அடிப்படை பண்புகள் அவர்களை குறை கூறும் இவர்களிடமும் உள்ளது.
  16. இந்த இங்கிலாந்துக்காரன் உலகத்தை பிடிக்க வெளிகிடாமல் இருந்திருந்தால் பிரச்சினை எங்களுக்கு வந்திருக்காது😁.
  17. முட்டை வீசுவது ஒரு வகையில் மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காக, இங்கு தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் மேல் இவ்வாறு நிகழ்த்தப்பட்டமையாலேயே இதனை பேசு பொருளாக்குகிறார்கள் ஆனால் இதே விடயங்களை கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் மீது நிகழ்த்தப்பட்டால் அதனை சரியான செயல் என கூறியிருப்பார்கள் ( இப்போது இவர்களால் தமது மானம் கப்பலேறிவிட்டது என்பதால் இந்த கவலையாக இருக்கலாம்). மற்ற இனத்தவர்களும் இவ்வாறு மற்றவர்கலை கேவலப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவதுண்டு, அவர்கலை கண்டிக்காமல் அவர்களுக்கு ஊக்கமளிக்க சன்மானமும் வழங்குவார்கள். இதனால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய திரை உலகம் முழுவதும் இந்த அவமதிப்பிற்கெதிராக இனி புலம்பெயர் தேசங்களில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளமாட்டோம் என இவர்களை புறக்கணிப்பார்களா? எமது புராண இதிகாசங்களிலே கூட இவ்வாறு ஒருவரை அவமதிக்கும் போது கண்ணன் வந்து காப்பாற்றுவதாக கூறப்பட்டுள்ளது, இதனை கேட்டு வளரும் குழந்தைகள் அதே மாதிரி செய்யாமல் வேறுமாதிரி நடந்தால்தானே தவறு.
  18. செலன்ஸ்கி மேற்கிற்கு நெருக்கடி கொடுக்கிறார் என நினைக்கிறேன், இரஸ்சிய உக்கிரேன் போரில் உக்கிரேனிற்கு தோல்வி ஏற்பட்டால் அது மேற்கின் தோல்வி என்பது உலகிற்கே தெரியும், அதனால் செலன்ஸ்கி தற்போதய போரில் இரஸ்சிய ஊடுருவலுக்கு மட்டும் ஈடுபாடு காட்டுவதுடன் இந்த போரில் மேற்கின் அதி நவீன ஆயுதங்களை சோவியத் கால ஆயுதங்கள் மூலம் அழிவடைய செய்வதன் மூலம். கேர்க்ஸ் போரில் அமெரிக்க, இங்கிலாந்து டாங்கிகளை இரஸ்சியாவின் T72 (புலிகளால் இந்திய இராணுவத்தின் இந்த டாங்கிகளை சாதாரண RPG அழிக்கப்பட்ட மிக பழைமையான) டாங்கிகள் வேட்டையாடுகின்றது, இதற்கு மேல் இரஸ்சிய டாங்கியின் REA கவச பாதுகாப்பினை மேற்கு டாங்கிகளிற்கு விளக்குமாற்றிற்கு பட்டு குஞ்சம் கட்டுவது போல் செய்து மேலும் அசிங்கப்படுத்துகிறார்கள் உக்கிரேனியர்கள். இதனை உக்கிரேன் திட்டமிட்டே செய்கிறதா என எனக்கு சந்தேகம் உண்டு, இரஸ்சியாவினையும் அதே நேரத்தில் உத்தரவு போடும் மேற்கையும் சமகாலத்தில் அசிங்கப்படுத்தவேண்டும், அதே நேரத்தில் மீள முடியாத இராஜதந்திர நெருக்கடியினை மேற்கிற்கு ஒருங்கே கொடுப்பதாகவும் இருக்கவேண்டும். மேற்கு விரும்பாத விடயத்தினை உக்கிரேன் செய்யும்போது அதனை வெளிப்படையாக கண்டித்தால் மேற்கின் கொளகை ரீதியான தோல்வியினை ஒப்பு கொள்ளவேண்டும் எனும் நிலை, அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக உக்கிரேன் பல இடங்களில் பெருமளவினை இழப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு நெருக்கடியினை ஏற்படுத்தி தனக்கு தேவையானவற்றை பெறும் முயற்சியில் ஈடுபடுகிறது என நினைக்கிறேன். மேற்கிடமிருந்து எந்த வித கட்டுப்பாடற்ற நிதி மற்றும் ஆயுதம், ஆயுத பயன்பாடு (நீண்ட தூர ஏவுகணைகள்) என்பவற்றினை பெறுவதே நோக்கமாக இருக்கலாம். செலன்ஸ்கி தற்போது மேற்கின் கைப்புள்ள இல்லை, தற்போது மேற்குதான் செலன்ஸ்கியின் கைப்புள்ள, இரஸ்சியாவினை மேற்கு வென்றாலும் உக்கிரேனிடம் மேற்கு தோற்றுத்தானாகவேண்டும். ஆனால் உக்கிரேனிடம் தோற்றாலும் அது வெளியில் தெரியாது அதனாலசிங்கமாக இருக்காது.
  19. போரில் ஈடுபடுவர்களுக்கு போர் தொடர்பான பார்வைக்கும் அந்த போரினை வெளியிலிருந்து பார்ப்பவர்களாகிய நாங்கள் ஒரு விளையாட்டின் வெற்றி தோல்வி போல போரினை வரையறுத்து போரினை பார்க்கும் பார்வைக்குமிடையான வித்தியாசம் அது. இந்த போரே ஒரு தேவையற்ற போர், இதற்கான விலையினை எல்லோரும் ஏற்கனவே கொடுக்க தொடங்கியாகிவிட்டது, இங்கு வெற்றி தோல்வி இருப்பதில்லை முடிவுதான் உண்டு; இதிலீடுபடுவர்களுக்கு என்ன நன்மை? இந்த கேர்க்ஸ் போர் கூட ஒரு அமெரிக்க தேர்தலுக்கான போராக நான் கருதுகிறேன் (எனது கருத்து).
  20. கேர்க்ஸ் பிராந்தியத்தில் உக்கிரேன் தொடர்ந்தும் தாக்குதல் நடத்துகிறது (ஆனால் ஆச்சரிய தாக்குதல் பலன் முடிவடைந்தமையால் மிகவும் மந்தமான முன்னேற்றம்) அதன் தொடர் முன்னேற்றத்தினை தடுக்க இரஸ்சியா பாதுகாப்பு அகழிகளை உருவாக்கு ஒப்பீட்டளவில் குறைந்த படையினரை வைத்து நிலமையினை சமாளிக்கிறது, மேலும் நகர முடியாமையால் உக்கிரேனையும் மேற்கையும் தூண்டி இன்னொரு களமுனையினை திறந்து அதிலும் மேலும் துருப்புகலையும் ஆயுத தளபாடங்களயும் ஈடுபடுத்தி அதனை சிதறடிப்பதற்காக இரஸ்சியா இப்படி பொறியில் மாட்டி விடுகிறது போல இருக்கிறது, இவர்களும் புரியாமல் இன்னொரு களத்தை திறந்து இன்னுமொரு ஆப்பினை இழுத்துவிட்டு முழிக்கப்போகிறார்கள்.
  21. இரண்டும் வேறுபட்ட கருத்துடையது, நீங்கள் கூறுவது பயனற்றது என்பதான பொருள்படும் ஆனால் ஐன்ஸ்ரினது கருத்து ஒரே விடயத்தினை செய்து வேறு பட்ட முடிவுகளை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.
  22. செலன்ஸ்கியிடம் எல்லோரும் கைதட்டுகிறார்கள் என ஆடையில்லாத மன்னன் ஆக வேண்டாம், பார்த்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள சொல்லியிருப்பார்.
  23. பகுத்தறிவு சிந்தனைகள் பற்றிய தெளிவு எமது சமூகத்தில் மிக குறைவாக உள்ளதாக கருதுகிறேன், அறிஞர் அண்ணாவை பற்றியோ பெரியாரை பற்றியோ அறியாதவனாகவே இது வரை உள்ளேன், அதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறமுடியாது, நாமாகவே அந்த முயற்சிகளை தவிர்த்துவிடுகிறோம் பூனைகலை போல கண் மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட வேண்டும் என்று விருபுகிறோம். டொமினிக் ஜீவா போன்றோரின் இலக்கியங்கள் வெளி வந்திருந்தாலும் அது வாசகர்களுக்கு ஏனோ எட்டவில்லை, அதற்கு காரணம் என்ன என தெரிய்ஃவில்லை (நானும் வாசிக்கவில்லை). ஆனால் மறு வளமாக ஆதிக்க வெறியர்களை பாடசாலை கல்வி புத்தகத்தில் சிறந்த மனிதர்களாக போற்றப்படுகின்ற நிலை காணப்படுகிறது. பொதுவாக ஆதிக்க வெறியர்கள் தம்மால் அடக்கப்படும் சமூகத்தில் பெண்கள் மேற்கொள்ளும் வன்முறைகளை ஒரு ஆதிக்க அடையாளமாக பயன்படுத்துகிரார்கள், இதற்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை சமூகம் போலவோ அல்லது சில சமூகங்கள் செய்ததை போல தமிழ் சமுகம் தமக்குள்ளேயே ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் நிகழ்த்தியதாக இந்த இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. பெண்களின் கல்வி இந்த ஆதிக்க சமூகத்தில் குறைவாக இருப்பதே இது போன்ற நிலை நிலவுவதாக நம்புகிறேன், திட்டமிட்டே ஆணாதிக்க சிந்தனையூடாக பெண்களின் கல்வி மறுக்கப்படும் அதே சமூகத்தில் பிறக்கும் குழந்தைகளை நலவழிப்படுத்த முடியாத ஒரு உடைந்து போன சமூகத்தினை இந்த பெண்கள் விட்டு செல்லுகின்ற நிலை காணப்படுகிறது. பாடசாலைகளில் கூட இந்த ஆதிக்க வெறியர்களின் சாதனை ( யாழ்பாணிய சாதியத்தின் தந்தை என அழைக்கப்படுகின்றவர்) என சைவத்தினை வளர்க்க வேற்று மதத்தினருடன் வாதித்ததாக கூறப்படுவதற்கு (அந்த கதை பாட புத்தகத்தில் இல்லை) ஆசிரியர்கள் கூறும் முகம் சுழிக்க வைக்கின்ற கதை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரியாதவர்களுக்காக பாடப்புத்தகத்தில் போற்றப்படும் மனிதர் ஒரு கல்லில் அமர்ந்திருந்த நேரம் அவ்வழியாக சென்ற பிரித்தானிய நண்பர் அவரை பார்த்து நீங்கள் கல்லை வழிபடுகிறீர்கள் தற்போது அதே கல்லில் அமர்ந்திருகிறீர்களே என கேட்டாரம் அதற்கு இவர் இதற்கான பதிலை சந்தர்ப்பம் வரும்போது கூறுகிறேன் என கூறினாராம். பின்னொரு நாள் அதே பிரித்தானியர் அவரது மனைவி மற்றும் மக்ளுடன் போகும் போது இவர் அந்த பிரித்தானியரை அவரது அந்த கேள்வியினை நினைவு படுத்திவிட்டு அவரது குடும்ப உறவை இழிவு படுத்தும்விதமாக பிரித்தானியரை பார்த்து கேள்வி ஒன்றினை கேட்டதாக ஆசிரியர்கள் பெருமையாக கூறும் நிலை கானப்படும் சமூகத்தில் இருக்கிறோம். இவ்வாறு உடைந்து போன சமூகங்களில் பெண்கள் கல்வி நிலை மேம்பட்டாலே ஏதாவது மாற்றம் நிகழலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.