Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. Tesla, Inc. (TSLA) Currency in USD Valuation measures4 Market cap (intra-day) 1.02T Enterprise value 1.02T Trailing P/E 330.20 Forward P/E 121.95 PEG ratio (5-yr expected) 2.67 Price/sales (ttm) 24.67 Price/book (mrq) 37.75 Enterprise value/revenue 21.67 Enterprise value/EBITDA 138.83 Trading information Stock price history Beta (5Y monthly) 2.04 52-week change 3 52.07% S&P500 52-week change 3 27.89% 52-week high 3 1,243.49 52-week low 3 539.49 50-day moving average 3 1,071.42 200-day moving average 3 787.15 Share statistics Avg vol (3-month) 3 26.82M Avg vol (10-day) 3 24.56M Shares outstanding 5 1B Implied shares outstanding 6 N/A Float 8 809.17M % held by insiders 1 19.96% % held by institutions 1 42.37% Shares short (14 Dec 2021) 4 25.82M Short ratio (14 Dec 2021) 4 1.06 Short % of float (14 Dec 2021) 4 3.16% Short % of shares outstanding (14 Dec 2021) 4 2.57% Shares short (prior month 14 Nov 2021) 4 25.7M Dividends & splits Forward annual dividend rate 4 N/A Forward annual dividend yield 4 N/A Trailing annual dividend rate 3 N/A Trailing annual dividend yield 3 N/A 5-year average dividend yield 4 N/A Payout ratio 4 0.00% Dividend date 3 N/A Ex-dividend date 4 N/A Last split factor 2 5:1 Last split date 3 30 Aug 2020 Financial highlights Fiscal year Fiscal year ends 30 Dec 2020 Most-recent quarter (mrq) 29 Sept 2021 Profitability Profit margin 7.40% Operating margin (ttm) 9.79% Management effectiveness Return on assets (ttm) 5.54% Return on equity (ttm) 15.64% Income statement Revenue (ttm) 46.85B Revenue per share (ttm) 48.27 Quarterly revenue growth (yoy) 56.80% Gross profit (ttm) 6.63B EBITDA 7.27B Net income avi to common (ttm) 3.47B Diluted EPS (ttm) 3.06 Quarterly earnings growth (yoy) 388.80% Balance sheet Total cash (mrq) 16.09B Total cash per share (mrq) 16.03 Total debt (mrq) 10.16B Total debt/equity (mrq) 35.65 Current ratio (mrq) 1.38 Book value per share (mrq) 26.94 Cash flow statement Operating cash flow (ttm) 9.93B Levered free cash flow (ttm) 4.64B Rivian Automotive, Inc. (RIVN) Currency in USD Valuation measures4 Market cap (intra-day) 102.19B Enterprise value 98.72B Trailing P/E N/A Forward P/E N/A PEG ratio (5-yr expected) N/A Price/sales (ttm) N/A Price/book (mrq) N/A Enterprise value/revenue N/A Enterprise value/EBITDA -62.84 Trading information Stock price history Beta (5Y monthly) N/A 52-week change 3 0.66% S&P500 52-week change 3 27.89% 52-week high 3 179.47 52-week low 3 88.40 50-day moving average 3 114.52 200-day moving average 3 114.52 Share statistics Avg vol (3-month) 3 26.52M Avg vol (10-day) 3 9.75M Shares outstanding 5 883.4M Implied shares outstanding 6 N/A Float 8 484.15M % held by insiders 1 16.88% % held by institutions 1 37.94% Shares short (14 Dec 2021) 4 19.61M Short ratio (14 Dec 2021) 4 0.72 Short % of float (14 Dec 2021) 4 5.17% Short % of shares outstanding (14 Dec 2021) 4 2.18% Shares short (prior month 14 Nov 2021) 4 6.35M Dividends & splits Forward annual dividend rate 4 N/A Forward annual dividend yield 4 N/A Trailing annual dividend rate 3 N/A Trailing annual dividend yield 3 N/A 5-year average dividend yield 4 N/A Payout ratio 4 0.00% Dividend date 3 N/A Ex-dividend date 4 N/A Last split factor 2 N/A Last split date 3 N/A Financial highlights Fiscal year Fiscal year ends 30 Dec 2020 Most-recent quarter (mrq) 29 Sept 2021 Profitability Profit margin 0.00% Operating margin (ttm) -211,900.00% Management effectiveness Return on assets (ttm) N/A Return on equity (ttm) N/A Income statement Revenue (ttm) 1M Revenue per share (ttm) 0.01 Quarterly revenue growth (yoy) N/A Gross profit (ttm) N/A EBITDA -2.03B Net income avi to common (ttm) -2.58B Diluted EPS (ttm) -25.37 Quarterly earnings growth (yoy) N/A Balance sheet Total cash (mrq) 5.16B Total cash per share (mrq) 5.73 Total debt (mrq) 3.19B Total debt/equity (mrq) 74.43 Current ratio (mrq) 5.11 Book value per share (mrq) -35.53 Cash flow statement Operating cash flow (ttm) -1.8B Levered free cash flow (ttm) N/A GameStop Corp. (GME) Currency in USD Valuation measures4 Market cap (intra-day) 12.14B Enterprise value 11.40B Trailing P/E N/A Forward P/E N/A PEG ratio (5-yr expected) N/A Price/sales (ttm) 1.89 Price/book (mrq) 6.92 Enterprise value/revenue 1.94 Enterprise value/EBITDA -103.97 Trading information Stock price history Beta (5Y monthly) -1.90 52-week change 3 711.06% S&P500 52-week change 3 27.89% 52-week high 3 483.00 52-week low 3 17.08 50-day moving average 3 181.83 200-day moving average 3 185.49 Share statistics Avg vol (3-month) 3 2.35M Avg vol (10-day) 3 1.47M Shares outstanding 5 76.35M Implied shares outstanding 6 76.49M Float 8 62.49M % held by insiders 1 17.98% % held by institutions 1 28.40% Shares short (14 Dec 2021) 4 8.61M Short ratio (14 Dec 2021) 4 3.11 Short % of float (14 Dec 2021) 4 18.57% Short % of shares outstanding (14 Dec 2021) 4 11.28% Shares short (prior month 14 Nov 2021) 4 6.78M Dividends & splits Forward annual dividend rate 4 N/A Forward annual dividend yield 4 N/A Trailing annual dividend rate 3 0.00 Trailing annual dividend yield 3 0.00% 5-year average dividend yield 4 N/A Payout ratio 4 0.00% Dividend date 3 28 Mar 2019 Ex-dividend date 4 13 Mar 2019 Last split factor 2 2:1 Last split date 3 18 Mar 2007 Financial highlights Fiscal year Fiscal year ends 29 Jan 2021 Most-recent quarter (mrq) 29 Oct 2021 Profitability Profit margin -2.61% Operating margin (ttm) -2.86% Management effectiveness Return on assets (ttm) -3.31% Return on equity (ttm) -14.71% Income statement Revenue (ttm) 5.88B Revenue per share (ttm) 84.04 Quarterly revenue growth (yoy) 29.10% Gross profit (ttm) 1.26B EBITDA -95.6M Net income avi to common (ttm) -153.5M Diluted EPS (ttm) -2.19 Quarterly earnings growth (yoy) N/A Balance sheet Total cash (mrq) 1.41B Total cash per share (mrq) 18.6 Total debt (mrq) 667.8M Total debt/equity (mrq) 38.05 Current ratio (mrq) 1.90 Book value per share (mrq) 23.24 Cash flow statement Operating cash flow (ttm) -159.2M Levered free cash flow (ttm) -168.14M
  2. நன்றி ஈழப்பிரியன், எனது CFD இல் இந்த பங்கு இல்லை அதனால் என்னால் வாங்க இயலாது, மேலும் இந்த பங்கு மிக அண்மையில் வெளிவந்த பங்கு போல் உள்ளது அதனால் இதனது Technical analysis கணிக்க இயலாது, கோசான், கடன்சா இந்த பங்கு தொடர்பாக ஏதாவது தெரியுமா?
  3. பைசர் order மூடிவிட்டேன் stop loss எட்டுவதற்கு முன்பாகவே,அமெரிக்க சந்தை பொதுவாக நல்ல நிலையில் இருந்த போதும் சுகாதார துறை அடி வாங்குகிறது (கடந்த இரண்டு நாளில்) குறிப்பாக திங்கள் கிழமை XLV Index இடைவெளிவிட்டு (Gap down)ஆரம்பித்தது, அந்த துறையின் பலவீனத்தை காட்டுகிறது, ஆனால் நிபுணர்கள் வாங்கும் ஆலோசனைகள் கூறுகிறார்கள். https://www.cnbc.com/video/2022/01/03/jim-cramer-pharma-stocks-are-cheap-i-would-own-pfizer.html
  4. பங்கு சந்தையில் இடப்படும் நீண்ட கால முதலீடு சராசரியாக 10% என மேலோட்டமாக கூறுவார்கள், ஆனால் நடைமுறையில் சிறிது அதிகமாக இருக்கலாம் உதாரணமாக DJIA Index இல் 2010 இல் $1000 முதலிட்டிருந்தால் 2020 இல் கிட்டத்தட்ட $3600 கடந்த 10 ஆண்டுகளில் ஈட்டியிருக்கலாம், அதாவது ஆண்டு ஒன்றிற்கு 36% . பொதுவாக பங்கு சந்தையின் Benchmark 10%, சில்லறை முதலீட்டாளர்கள், இதனை முறியடிக்க ஆபத்து நிறைந்த ஆனால் அதிக இலாபம் ஈட்டும் சிறிய நிறுவனங்களில் (Penny stock) முதலிடுவதுண்டு. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், Index, சில்லறை வர்த்தகர்களை விட குறைந்த ஆபத்துடன் அதிக் இலாபத்தை ஈட்டியிருக்கும். ஆனால் ஒரு சில சில்லறை வர்த்தகர்கள் விதி விலக்கு, ஆனால் பெரும்பாலான சில்லறை வர்த்தகள் நிலை அப்படியிருப்பதில்லை. நான் இந்த பெரும்பாலான சில்லறை வர்த்தகர்களுக்குள் அடங்குவேன். உங்களது Portfolio உடன் சந்தையில் நீங்கள் வாங்கிய பங்கு ஆதிக்கம் செலுத்தும் குறியீட்டின் (Index) பெறுபேற்றுடன் ஒப்பிட்டு பார்த்து உங்களது முதலீட்டு தாக்கத்தினை அறிந்து கொள்ளலாம். உங்கள் ஆலோசனைக்கு நன்றி, XLV எனப்படுகின்ற Index இல் 3 வது இடத்தில் பைசர் உள்ளது 1.UNH 2.JNJ முதல் இரண்டு பங்குகளும், XLV Index விலை அதிகர்த்து செல்ல பைசர் விலை மெதுவாக சரிந்து செல்கிறது, ஆனால் PE பார்க்கும் போது, பைசர், மற்ற பங்குகளை விட மலிவான பங்காக காணப்படுகிறது. UNH 16.11, JNJ 25.52, ANZ 107.57 பைசர் 16.87 அத்துடன் Profit margin மற்ற நிறுவனங்களை விட அதிகமாகவுள்ளது. சுகாதார பங்குகளும் அதன் குறியீடும் விலை அதிகரித்து செல்லும் போது பைசர் அவற்றை விட மலிவாகவும் சிறப்பாக செயற்பட்டாலும் விலை சரிவடைகிறது இது ஒரு Divergence.
  5. மேலே உள்ள வரை படத்தில் 3 பங்குகளை அவதானித்தவகையில், பேபால் செயற்பாடு விலை இறங்குமுகமாக இருந்தாலும் வாங்கும் நடவடிக்கை மாதிரி காணப்பட்டமையால் விலை மேலே உள்ள மன்சள் கோட்டினை உடைத்து மேலேறினால் வாங்கலாம் (நன்றி ஈழப்பிரியன்) எனவும், அதே போல் அப்பிள் கீழே உள்ள மன்சள் கோட்டினை உடைத்தால் விற்கலாம் எனவும் கருதினேன், இரண்டும் Counter trend trade. ஆப்பிள் Technical analysis RSI Divergence அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அப்பிளின் செயற்பாட்டிற்கு வேலையாளர்களின் போராட்டம் தடங்கலாக உள்ளதை அறிந்தேன் ( பொதுவாக Technical analysis மட்டுமே கவனம் செலுத்துவதுண்டு யாழில் உங்கள் எல்லோரிடமும் கற்றுக்கொண்டபின் தற்போது Fundamental analysis Top down analysis -நன்றி கோசான், Bottom up analysis- நன்றி கடன்சா கவனம் செலுத்த தொடங்கியுள்ளேன்) மூன்றாவது பங்கு பைசர் Technical analysis இந்த வகை வர்த்தகத்தை பாடப்புத்தக வர்த்தகம் என்பார்கள் (Bullish Flag) ஆனால் விலை கொடிப்பகுதியை உடைக்காமலேயே வாங்கிவிட்டேன், இது ஒரு தவறான முடிவு, உயர்ந்து செல்லும் ஒரு பங்கின் ஆதிக்க நகர்வின் (Impulsive Move) பின் விலை எதிர்புறமாக மெதுவாக பக்கவாட்டாக(Correction move) நகரும் அதனை இளைப்பாறும் கட்டம் என்பார்கள் பின் மீண்டும் ஆதிக்க நகர்வை தொடங்கும் அதன் போது கொடிப்பகுதியை அதிக பங்குகளின் எண்ணிக்கயில் உடைக்கும், முக்கியமாக எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும். உடைப்பின் போது பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது போலியான உடைப்பு. உடைப்பு நிகழாமல் வாங்கினமைக்கான காரணம் CFD Pending order அனுமதிக்கவில்லை(Only market order), இங்கு அமெரிக்க சந்தை நேரம் நள்ளிரவுக்குமேல் ஆரம்பிப்பதால் வேறு தெரிவு இல்லை. நீல வர்ணத்தில் குறிப்பிட்ட முக்கிய வலயத்திற்கு மேலாக அவசர வெளியேற்றம் உள்ளதால் இந்த வர்த்தகம் தோல்வியில் முடிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனது வர்த்தக நடவடிக்கையை மற்றவர்களுடன் பகிரும் போது அதில் உள்ள தவறுகளை மற்றவர்கள் சுட்டி காட்ட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. யாழில் உள்ள மற்ற திரிகளில் உள்ள ஒரு சமநிலையான கருத்தோட்டம் இந்த திரியிலும் வேண்டும் அது அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாக்கும். இந்த பைசர் வர்த்தகம் கோசான் உங்களது Top down analysis பங்களிப்பும் உள்ளது. மற்ற இரு வர்த்தகங்களை தவிர்த்துவிட்டு பைசர் வர்த்தகத்தை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் Trading with trend. இந்த வர்த்தகம் பற்றிய உங்கள் அனைவரது கருத்துகளும் என்ன?
  6. மிக சிறந்த சிந்தனை (Good Idea) பங்கின் விலை இதற்குமேல் இறங்குவதற்கு வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது ஒரு சிறப்பான திட்டம்.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாதகமாக இருந்தால் மிக பெரிய அள்வில் இலாபம் ஈட்டுவீர்கள். எதிர்பாராத வகையில் திட்டம் நிறைவேறாமல் போனால் இழப்பை மட்டுப்படுத்துவதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? (Hedging) உங்களது Portfolio இல் Counter Trend திட்டம் அதிகமாக உள்ளதாக உணர்கிறேன் (எனது கணிப்பு தவறாக இருக்கலாம்). உதாரணமாக உல்லாசப்பயணம், பிட் கொயின். https://www.youtube.com/watch?v=oXno18pOHgo பங்கு சந்தை வெற்றிக்கு தேவையான ஆய்வு (Research, Fundamental analysis), திட்டம் (Plan), சரியான நேரத்தில் முதலிடுதல் (Technical analysis), இவற்றுடன் முக்கியமாக உள்வியல் (Trading psychology), பணமுகாமைத்துவம் (Risk Management). உங்களது இந்த திட்டத்தினை Top down analysis என்பார்கள். நுண்பொருளாதாரத்தில் (Macro Economic) ஏற்படும் மாற்றத்தினைஅடிப்படையாகக்கொண்ட திட்டம்.சிறப்பான திட்டம் என்பதற்கு மாற்று கருத்தில்லை, கால கணிப்பு தவறான பட்சத்தில் உங்கள் இழப்புகளை தாங்கும் வலு உங்களுக்கிருந்தால் இந்த வர்த்தகத்தில் ஒரு தவறுமில்லை. மேலே உள்ள காணொளியில் 6 பில்லியனை இழப்பதற்கு காரணம் அவரது திட்டம் தவறானது ஆனாலும் குளிர்காலம் வரும் வரை அவர் பொறுத்திருந்தால் அவருக்கு இன்னொரு சந்த்தர்ப்பம் கிடைத்திருக்கும் ஆனால் அவர் இழப்பை குறைக்க மேலும் வாங்கியமை மூலம் Double down (Beginners mistake). அவராகவே தனக்கான ஆப்பை இழுத்தார். அவரது திட்டத்தில் stop loss இல்லை, Double down மூலம் மேலும் ஆபத்தினை அதிகரித்தார் ( no risk management) அதன் மூலம் Margin call ஏற்பட்டது, இதற்கெல்லாம் காரணம் எமது உளவியல் தான் காரணம். இவர் அனுபவம் உள்ள Trader ஆக இருந்தாலும் புதிதாக வர்த்தகத்திலீடுபடுபவர்கள் போல் தவறு செய்துள்ளார். பெரும்பாலும் பெரிய வர்த்தகர்கள் மனநிலை வேட்டையாளர்கள் போல் இருக்கும் என்பார்கள், அவர்கள் கூட இறுக்கமான சூழ்நிலையில் சதாரண மனிதர்கள் போலவே சிந்திப்பார்கள். இதற்கு உதாரணமாக ஒரு கதை மகா பாரதத்தில் கூறுவார்கள் மனிதர்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே சிந்திப்பார்கள். அர்யுனன் கர்ணன் மேல் உள்ள கடுப்பில் ஊரான் காசில் (துரியோதனன் காசில்) கர்ணன் படம் காட்டுகிறான் என பார்ப்பவர்களிடம் அவதூறு சொல்லிக்கொண்டிருந்தார், அதனை கேட்ட கிருஸ்ணர் அர்யுனனிடம் 3 மலைகளை கொடுத்து (தங்கம், வெள்ளி, வைரம்) அந்தி சாய்வதற்குள் மக்களுக்கு தானமாக கொடுத்துவிடு என்றார். அவர் மக்களை அழைத்து வரிசையாக விட்டு அந்த மலைகளை உடைத்து தானம் வழங்க தொடங்கினார் அந்தி சாயும் நேரம் வந்து விட்டது அவரால் ஒரு சிறு பங்கினைதான் தானமாக வழங்க முடிந்தது, அர்யுனன் சோர்ந்து போய் தன்னால் இயலாது என கிருஸ்ணரிடம் கூறிவிட்டான். கிருஸ்ணர் கர்ணணை கூப்பிட்டு அந்தி சாய்வதற்குள் அந்த 3 மலைகளையும் தானம் வழங்க கூறினார்,கர்ணண் மூவரை கூப்பிட்டு தலா ஒவ்வொருவருக்கும் ஒரு மலை தானமாக வழங்கிவிட்டார். அர்யுனன் உண்மையில் மனரீதியாக கொடுப்பதற்கு தயாரில்லை. இழப்பின் அளவு பெரிதாக இருக்கும் போது என்னால் சிந்திக்க முடிவதில்லை. முதல் 3 காணொளியில் இரண்டு வார பயிற்சியுடன் (1.Trading Idea, Fundamental analysis, Technical analysis, Risk management, Trading psychology) ஆரம்ப வர்த்தகர்களை மிகவும் கடினமான 2008 காலப்பகுதியில் செயற்பட வைத்துள்ளார்கள்.
  7. இது தங்கத்தின் வரைபடம் ( கால அளவு தினம் அல்ல வாரம்), முன்பு ஏற்கனவே குறிப்பிட்டிருந்த (XRP வரைபடம்) Symmetric Triangular Chart Pattern. இதன் பொதுவான அமசம் Trend continuation Pattern, தற்போது இது தங்கத்தில் Up trend இல் காணப்படுகிறது. பொதுவாக விலை மேலாக உடைக்கும் (Break out) ஆனால் விதி விலக்குகளும் உண்டு. குறுங்கால வர்த்தகர்கள் இதன் உடைப்பின் பின்னரே வர்த்தகத்தில் ஈடுபடுவர் (Break out Traders). இந்த வரைபடம் விலை மேலாக உடைக்கும் என கோடிகாட்டி விட்டது, ஆனாலும் உடைப்பின் பின்னர் வர்த்தகத்தில் ஈடுபடுவது சரியானது. மேற்குறிப்பிட்ட விடயம் சரியாக இருப்பின் அமெரிக்க டொலர் சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு, அப்படி அமெரிக்க டொலர் சரிவு ஏற்படுவதற்கு ஏற்ப ஏதாவது நிலவரம் உள்ளதா?
  8. உண்மையாக எனக்கு இந்த கிரிப்டோ தொடர்பான அடிப்படை அறிவு கூட கிடையாது, கிரிப்டோ trade செய்வதுண்டு, அது கூட 2 அல்லது 3 தடவை தான், யாழின் மூலமே அது நிகழ்ந்தது, தெளிவான விளக்கம். ஓரளவுக்கு புரிதல் ஏற்பட்டுள்ளது, நன்றி.
  9. கிரிப்டோ நாணயங்கள் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது , quantitative easing என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி தனது நாணய வழங்கல்களை உள்நாட்டில் அதிகரிக்கும் நடவடிக்கையாகும், கிரிப்டோவுக்கும் quantitative easing என்ன சம்பந்தம் என்பது புரியவில்லை? கடஜ்சா. கிரிப்டோ நாணயத்தின் விலை கேள்வி வழங்கல் அடிப்படையில்தானே தீர்மானிக்கப்படுகிறது? stable கிரிப்டோ எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
  10. பங்கு சந்தையில் ட்ரெண்ட் இனை உனது நண்பனாக்கு என்பார்கள், பேபால் இறங்கு முகமாக செல்கிறது (Down Trend) இறங்கு முகமாக செல்லும் போது அது Lower low மற்றும் Lower high என்ற அமைப்பின உருவாக்கும், தற்பொதய இறுதி Lower low 178 ஆகும், அதற்கு முன்னரான Lower low 200 ஆகும், Lower high 215 ஆகும். 200 மற்றும் 215 வலயங்களை வரைபடத்தில் நீல நிறத்தில் குறிப்பிட்டுள்ளேன். முதலில் குறிப்பிடும்போது பொதுவாக இறங்குமுகமாக உள்ள இந்த பங்கினை விற்பதற்கு 200,215 வலயம் முக்கிய வலயமாகும், வாங்குவதானால் 215 முக்கிய வலயமாகும். (மன்னிக்கவும் 200 அல்ல 215) அதனால்தான் கடந்த வாரம் குறிப்பிட்டது போல விலை குறித்த பகுதியில் (196) மட்டுபடுத்தப்பட்ட போது அந்த பங்கினை விற்றிருந்தேன், ஆனால் விலை 178 விட்டு கீழிறங்கினால்தான் பொதுவாக விற்பார்கள் ஏனெனில் தற்போது 178 பகுதிதான் Support.(Short @ 192 cover @ 188) Up trend என்பது Higher high and higher low தற்போதய Lower high 196 ஆகும், விலை 196 இனை கடந்தால் தொழில்னுட்ப ரீதியாக trend மாறிவிடும் (Down trend to Up trend).இது ஆரம்பகால மாற்றம் ஆகும்.உடனடியாக விலை ஏறுமுகமாக மாறிவிட்டது என எடுத்து கொள்ள முடியாது ஏனெனில் சில சமயம் விலை பக்க வாட்டாக நகர ஆரம்பிக்கும், ஆனால் இத்தகைய மாற்றமே ட்ரெண்ட் மாற்றத்தின் அடிப்படை. https://www.forex.academy/135-all-about-the-trending-market/ தற்போதய Lower high 196 ஆகும்,Lower low 178 ஆகும். விலை 196 கடந்தால் வாங்குவேன், விலை 178 விட கீழிறங்கினால் விற்பேன். நீங்கள் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் வாங்குவதனால் அதனது பெறுமதியினை அடிப்படையாகக்கொண்டு வாங்குகிறீர்கள் (Warren Buffett போல), அதனால் குறுங்கால அடிப்படையில் ஏற்படும் விலை மாற்றங்கள் உங்களை பாதிக்காது, உங்களது பங்கு தொடர்பான ஆராய்சியினை Fundamental analysis என்பார்கள். மேலே நான் குறிப்பிட்டது குறுங்கால முறையில் முதலிடுவது (Technical analysis). ஆனால் Technical analysis தொடர்பான புரிதல் இருந்தால் உஙகள் நீண்டகால முதலீடு மிகவும் இலகுவாக இருக்கும் என்பது எனது கருத்து.
  11. ஈழப்பிரியன், பேபால் விலை Gap up விலை அதிஅகரிப்புடன் 192 கடந்து விட்டது,முதலில் விலை 192 மேலாக உயர்ந்து சென்றால் வாங்க எண்ணியிருந்தேன் பின்னர் அந்த உடைப்பின் போது பரிமாற்றப்பட்ட பங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் வாங்கவில்லை விலை 200 முக்கியமாக உள்ளது இப்பகுதியில் விலை உயர்ந்தால் வாங்கலாம் என எண்ணி உள்ளேன் இல்லையெனில் விற்கலாம் என எண்ணியுள்ளேன். ஆனால் எந்த முடிவும் உறுதியாக இல்லை ஏனெனில் விற்பனை நேரத்தில் நித்திரை கொள்வேன், ஆனால் சந்தை முடியும் முன்பாக எழுந்துவிடுவேன்.
  12. பிட் கொயின் தற்காலிகமாக 62000 அடைந்தால் அதன் இறங்கு முகம் முடிவுக்கு வந்துவிடும், 52000 - 54000 விலை பகுதி விற்பதற்கான முக்கிய வலயமாகவுள்ளது விலை 54000 கடந்து மேலேறி 59000 அடைந்தால் பிட் கொயின் மீண்டும் பலமான நிலைக்கு வந்து விடும். உங்களது கணிப்பான 0.50 மிகவும் துல்லியமாக உள்ளது, Technical analysis பரிட்சயமில்லாமலே உங்களால் கணிக்க முடிந்த்துள்ளது. Technical analysis அடிப்படை அறிவு போதுமானது சந்தையில் சிறப்பாக செயல்பட முடியும், உங்களது Fundamental analysis உடன் Technical analysis பயன்படுத்தினால் சரியான Entry, Exit தீர்மானிக்கலாம் ஒப்பீட்டளவில் Fundamental analysis விட Technical analysis மிக இலகுவானது.
  13. இதனை Symmetrical Triangle Pattern என கூறுவார்கள். விலை அதிகரித்து செல்லும்போது விலையானது உயரும் போது மலை குன்று போலவும் அதே விலை இறங்கும் பள்ளத்தாக்கு போலவும் உருவாகும் இதனை Swing high, Swing low என சொல்வார்கள். இந்த குன்றுகளின் உச்சிகளை இணைத்து கோடு வரைந்தால விலை மேலிருந்து கீழ் நோக்கி சரிந்து செல்லும், அதேபோல் கீழே உள்ள பள்ளத்தாக்குகளை இணைத்து கோடு வரைந்தால் அந்த கோடு உயர்ந்து செல்லும். இந்த நிகழ்வானது விலை உயர்ந்து செல்லும் போது தற்காலிகமாக விலை ஒரு கூம்பு வடிவ நிலைக்கு செல்லும், ஒரு கட்டத்தில் விலை இந்த வடிவிலிருந்து உடைத்து மேலெழும், அதனால் இதனை Continuation pattern என அழைப்பார்கள். சில சமயம் விலை கீழிறங்கும், இந்த உடைப்பு கூம்பகத்தின் முதல் 33% விகிதத்தில் நிகழ்ந்தால் அதிக தாக்கம் ஏற்படுத்தும் என்பது ஒரு கணிப்பு அதனை விட குறைந்தால் அது போலியானதான உடைப்பு என்பார்கள். மேலோட்டமாக பார்க்கும் போது இந்த விலை கீழிறங்கல் போலியானதாக தோன்றுகிறதா? (30%-28%) தெரியவில்லை ஆனால் அதே சமயம் இந்த உடைப்பு உண்மையாகவிருந்தால் குறைந்த பட்சம் விலை 0.42 C அண்மிக்கலாம், 0.28C விலை மிகவும் பலமாக உள்ளதால் Stop loss 0.28C கீழ் போடலாம் என கருதுகிறேன். ஆனால் RSI over sold காட்டுகிறது விலை தற்காலிகமாகவாது மேலேறலாம், அது தற்காலிகமானது என எண்ணுகிறேன், எனது பார்வையில் அனைத்து கிரிப்டோவும் இறங்கு முக காலமாக இதனை நோக்குகிறேன் (Market cycle), பிட் கொயினை 54000 இல் விற்பதற்காக காத்திருக்கிறேன் (Trading with the Trend). பொதுவாக எனது கணிப்பு தவறானது, எது சரியென உங்களுக்கு தோன்றுகிறதோ அதனை செய்யுங்கள்.
  14. வார இறுதியில் வரை படத்துடன் பதிகிறேன்
  15. 29.11.21 பிட் கொயின் வர்த்தகத்தில் ஈடுபட்டேன், அதே தினம் யூரோ ஜப்பான் விற்றல் வர்த்தகமும் எடுத்திருந்தேன் , பிட் கொயினை 57000 விலையில் விற்றிருந்தேன், முன்பு பதிவிட்ட பதிவில் கூறியது போல 40000 வரை காத்திருக்கவில்லை மிக சிறிய இலாபத்துடன் அந்த வர்த்தகத்தை மூடிவிட்டேன்.
  16. பயமும் , பேராசையும் கொண்டதுதான் சந்தை உங்களைப்போல் சிலரால் மட்டுமே அதனை சந்தை ஆபாயத்தினடிப்படையில் அணுக முடிகிறது அதனால்தான் சந்தையில் வெற்றியாளராக முடிகிறது, இந்த நிலையில் நான் மட்டுமல்ல எனது வட இந்திய நண்பர்களும் இருந்திருக்கிறார்கள் அதில் குறிப்பாக ஒரு நண்பர் அவர் WHN எனும் சக்தி துறையிலுள்ள ஒரு நிறுவனத்தில் முதலிட்டிருந்தார் (6 அல்லது 7 வருடங்களுக்கு முன்னர்). அந்த காலகட்டத்தில் நான் தினவர்த்தகம் அவுஸ்ரேலிய பங்கு சந்தையில் ஈடுபட்டிருந்தேன், என்னிடம் அவர் கேட்டு கொண்டதன்படி ஒவ்வொரு தினம் சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னராக வட்ஸபில் எந்த நிறுவனங்களில் என்ன விலையில் வாங்குவது, அதன் Stop, take profit என்பதை தெரிவித்து விடுவதுண்டு. அவ்வாறு ஏற்கனவே வாங்கி விற்ற நிறுவனம்தான் அது, என் மூலமே அவருக்கு அந்த நிறுவனம் அறிமுகமானது, ஆனால் நான் குறித்த தினம் முடியும்போது என்னிடம் எந்த பங்குகளும் இருப்பதில்லை, இந்த பங்கினை வாங்கின எனது நண்பர் எவ்வாறு இந்த பங்கில் சிக்கினார் என்பது சரியாக நினைவில் இல்லை, பொதுவாக எனது நண்பர் எனது தகவலை திரட்டி என்னை விட அதிக விலைக்கு பங்குகளை பொதுவாக விற்றுவிடும் திறமைசாலி. அந்த பங்கினை ஆரம்பத்தில் என்ன விலைக்கு வாங்கினார் என்பது நினைவில்லை ஆனால் விலை குறைந்த பின் மீண்டும் ஒரு தொகுதி வாங்கினார்(Averaging down , Beginners mistake). இதன் மூலம் சராசரி விலை 1.2 C ஆக உள்ளதாகக்கூறுவார், அத்துடன் உன்னால்தான் இந்த பங்கில் சிக்கிக்கொண்டேன் என கூறுவார். அந்த பங்கின் விலை சில காலத்தினபின் அதிகரிக்க தொடங்கி ஒரு நாள் 1.9 C வியாபாரம் முடிவடைந்தது அந்த கால கட்டத்தில் அந்த பங்கின் அதிக பட்ச விலை 2.0 C ஆகவே எனது நண்பரிடம் சொன்னேன் அதை இலாபத்துடன் மறு நாள் விற்று விடுங்கள் என்று.அதற்கு அவர் சொன்னார் இல்லை இந்த பங்கு 14 C வரை செல்லும் அதனால் விற்கமாட்டேன் என்றார். மறு நாள் சந்தை ஆரம்பித்தி விலை 2.2 C வரை சென்றது அதன் வரைபடதை அவதானித்த போது Buying climax கவனிக்க முடிந்தது. எனது நண்பர் பணியிடத்திலிருந்தார் அவருக்கு தொலைபேசியில் நிலமையை கூறி என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்டேன் அவர் பதட்டப்படாமல் மீண்டும் கூறினார் இது 14 C போகும் என கூறினார், அதுதான் அவரது சிறப்பம்சம் என்னால் ஒரு அளவுக்குமேல் இலாபமோ நட்டமோ ஏற்பட்டால் பதற்றமடைந்துவிடுவேன் ஆனால் அவர் ஒரு திறமைசாலி. அன்றுதான் அதன் அதுயுச்ச விலை அதன்பின் நிகழ்ந்த சம்பவம் நினைவில் இல்லை, விலை நாளாக நாளாக தேய் பிறை போல் தேய்ந்து கடைசியில் அதன் விற்பனையை நிறுத்திவிட்டார்கள்.அதில் அவர் பெருந்தொகை பணம் இழந்ததாகக்கூறினார். மூன்றாம் நபராகப்பார்க்கும்போது எங்களால் உணர முடிந்த விடயங்கள் சம்பந்த பட்டவர்களாக இருக்கும் போது எமது மூளை அதனை அறிவுபூர்வமாக சிந்திக்க விடாது, கீழே உள்ள காணொளியில் உள்ள வயதானவர் நட்டத்தை குறைக்க அறிவுறுத்தும் போது கோபமடைகிறார்.
  17. உங்களது பதிவின் பின்னர் பேபாலை அவதானித்தேன், மிக குறுகிய காலத்தில் சில சாதக பண்புகள் தெரிகிறது 186 இறுதி விலையில் சந்தை மூடியுள்ளது, அத்துடன் விலை வீழ்ச்சி காலத்தில் அதிகமான பங்குகள் விற்பனையாகியுள்ளது, வாங்கும் தரப்பு வெவ்வேறு விலை மட்டங்களில் வாங்கியிருக்கலாம் ( பொதுவாக விலை பக்கவாட்டாக நகரும் ). இப்போது வழங்கல் விலை 192 உள்ளது விலை பொதுவாக இந்த புள்ளியில் திரும்ப சந்தர்ப்பம் உண்டு ( எனது கணிப்பு பெரும்பாலும் தவறாகவே உள்ளது) அது மீண்டும் 180 விலையின தொட முயற்சித்து அந்த விலையை உடைக்க முடியாவிட்டால் மீண்டும் மேலேறி 192 கடந்து 200 நோக்கி செல்லும் இது தவிர 215, 225, 250 முக்கிய வலயங்களாகக்குறுகிய காலத்தில் உள்ளது, எனது கருத்தினை கொண்டு முடிவு எடுக்கமாட்டீர்கள் என தெரியும், இருந்தாலும் எனது கருத்தினை பதிகிறேன். விலை 192 திரும்பாமல் மேலேறினால் இன்னுமொரு பகுதி வாங்குவார்கள் இவ்வாறு முக்கிய வ்லயங்களை கடக்கும் போது சிறிது சிறிதாக இருப்பினை அதிகரித்து (scale in) அத்துடன் உயர்த்தி சந்தை ஆபாயத்தை நீக்குவதுடன் (Trailing stop) தேவையான நேரத்தில் இலாபங்களையும் சிறிது சிறிதாக பதிவும் செய்வார்கள் (Scale out). 180 கீழ் விலை சென்றால் அதனை விற்கலாம் அப்பிள் விலை குறுங்காலத்திற்கு கீழிறங்குவதற்கு சாத்திய கூறுகள் காணப்படுகிறது 147 மட்டத்தில் எவ்வாறு செயற்படுகிறது என அவதானிக்கிறேன், RSI Divergence gap not filled in intraday.
  18. நன்றி, Fundamental Analysis என்பது நீண்ட கால முதலீட்டிற்கு அவசியமான விடயம், பல தடவை நீண்ட கால முதலீட்டில் முயற்சித்து நட்ட ஏற்பட்டதுண்டு குறிப்பாக penny stocks, Fundamental Analysis அடிப்படைகள் தெரியாது அத்துடன் அது தொடர்பான தகவல் திரட்டுவது கால விரயம் கொண்டது. ஆரம்பத்தில் penny stocks முதலிடுவதுண்டு, அப்போது கிரிப்டோ இல்லை, அதற்கு பதிலாக penny stocks முதலிடுவது கிரிப்டோ போன்றதே, மிகவும் ஆபத்தான அதே வேளை முதலீடு பல மடங்காக அதிக வாய்ப்புள்ள துறை.. தேவையான Fundamental Analysis தகவல்களை ஒரு இணையத்தளத்தில் பெறுவதுண்டு, அதில் உறுப்பினர்களாக உள்ள் சாதாரண வாசகர்கள் தாம் வாங்கிய பங்குகளிற்கு உள்ள ஒளியமயமான எதிர்காலத்தினை பற்றி பத்தி பத்தியாக எழுதுவார்கள். அந்த குறித்த பங்கின் விலை 0.004 C என்றவாறான நிலையில் இருக்கும் விலை மெதுவாக உயரும், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் விலை அதிகரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அவர்களது கூச்சல் அதிகரிக்கும் ஆனால் சடுதியாக அவர்களது தொனி மாறி அது எவ்வளவு மோசமான பங்கு என பத்தி பத்தியாக எழுத தொடங்குவார்கள், அந்த காலகட்டத்திற்கு சற்று முன்பாக அவர்கள் அந்த பங்கிற்கு சாதகமாக அதியுச்ச கூச்சல் போட்ட காலத்தில்தான் அந்த பங்கினை வாங்கியிருந்திருப்பேன், அவர்களது சுருதி மாறி விட்டிருக்கும் அதே போல் பங்கின் விலையும் மாறத்தொடங்கும் அந்த பங்கிற்கு அதியுச்ச விலையினை கொடுத்து வாங்கிய நான் காத்திருப்பேன் விலைகுறைந்த பட்சமாக இலாபமும் இல்லாமல் நட்டமுமில்லாமல் வெளியேற, ஒரு காலகட்டத்திற்கு மேல் அந்த பங்கு காணாமல் போய்விடும் அத்துடன் எனது பணமும் காணாமல் போய்விடும், அல்லது ஒரு அளவிற்கு மேல் நட்டத்தினால் ஏற்படும் வலி தாங்கமுடியாமல் வெளியேறிவிடுவதுண்டு. காலப்போக்கில் புரிந்து கொண்டது அவர்கள் செய்தது Fundamental analysis அல்ல Pump and Dump. ஆரம்ப்த்தில் நினைப்பதுண்டு இவர்களால் எவ்வாறு நிம்மதியாக நித்திரை கொள்ள முடிகிறது என்று, ஆனால் தவறு அவர்களதல்ல, எனதுதான், அடிப்படைகளை புரிந்து கொள்ள தேவையான நடவடிக்கையை செய்யாமல் எனது சோம்பல் குணத்தினால் மற்றவர்களை பின் தொடர்ந்து விட்டு பின்னர் நட்டம் ஏற்பட்டவுடன் அவர்களை குறை சொல்வது தவறு.
  19. மேலோட்டமாக பார்க்கும்போது அப்பிள் வாங்குவதற்கு உகப்பாக உள்ளதாக கருதுகிறேன் 155 மற்றும் 147 வாங்குவத்ற்கு ஏற்ற வலயங்களாக உள்ளது, இது எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே. 138 stop
  20. துறைசார் சந்தை நிலவரம் சாதகமாக உள்ள போதும் பேபால் மற்றும் சூமின் விலை ஏன் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைகிறது என புரியவில்லை, அவுஸ்திரேலியாவில் ஆப்டர் பே இதே போல் சமீத்தில் சரிவு கண்டுள்ளது ஆனால் பேபால் போல் அல்லாமல் ஒரு சிறிய சரிவு மட்டுமே.
  21. பேபாலின் மொத்த பங்குகள் 1.17 பில்லியன், அதனுள் ஏறத்தாழ 16.5 மில்லியன் பங்குகள் சந்தையில் மிதக்கவிடப்பட்டுள்ளது, தற்போதய நாளாந்த பங்குகள் விற்பனை மிதக்கவிடப்பட்டுள்ள பங்குகளின் அளவினை விட குறைவாக உள்ளதனால் தற்போதய சந்தை விலை குறைவாக உள்ளது (கடைசியாக 12.4 மில்லியன் விற்பனையாகியுள்ளது அதுவும் இறங்குமுகம்) மிதக்கவிடப்பட்டுள்ள பங்குகளின் அளவினிலே Short interest உள்ளது நிலமை மாறினால் விலை சடுதியாக உயரலாம்(Short squeeze) . குறிப்பாக Tech index நல்லநிலையில் உயர்வதால் எதிர்காலத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் இந்த பங்கின் முக்கிய வலயமான 300 எடுத்து செல்லலாம் எனெனில் இதன் பீட்ட 1.24 அதாவது சந்தை மாற்றத்திற்கு அதிகமான மாற்றத்தை ஏற்படுத்தும், இதன் விலை ஒரு கட்டத்தின் சரிவது தடுக்கப்பட்டு பின்னர் மெதுவாக வாங்கப்படுகின்றநிலை ஏற்பட்டால் விலை எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகலாம். சூமின் சந்தையில் மிதக்க விடப்பட்ட பங்குகள் 8 மில்லியன், Short interest 9 millions, Beta 0.08 இந்த பங்கில் Short squeeze வாய்ப்பு அதிகம்.சூமின் நாளாந்த பங்கு விறபனை ஏறத்தாழ அரைவாசியாக மிதக்க விடப்பட்டுள்ள பங்குகளின் அளவில் உள்ளது நிலமை சாதகமாறும் போது விலை ஏறலாம் ஆனால் இதன் பீட்டா குறைவாக இருபதனால் அந்த துறசார் பங்குகளைப்போல் அதிகரிக்குமா? என்பது தெரியவில்லை.
  22. BITCOIN - CHICAGO MERCANTILE EXCHANGE Code-133741 FUTURES ONLY POSITIONS AS OF 11/23/21 | --------------------------------------------------------------| NONREPORTABLE NON-COMMERCIAL | COMMERCIAL | TOTAL | POSITIONS --------------------------|-----------------|-----------------|----------------- LONG | SHORT |SPREADS | LONG | SHORT | LONG | SHORT | LONG | SHORT -------------------------------------------------------------------------------- (5 Bitcoins) OPEN INTEREST: 14,357 COMMITMENTS 9,054 9,214 2,243 966 237 12,263 11,694 2,094 2,663 CHANGES FROM 11/16/21 (CHANGE IN OPEN INTEREST: 709) 405 -913 -70 288 -84 623 -1,067 86 1,776 PERCENT OF OPEN INTEREST FOR EACH CATEGORY OF TRADERS 63.1 64.2 15.6 6.7 1.7 85.4 81.5 14.6 18.5 NUMBER OF TRADERS IN EACH CATEGORY (TOTAL TRADERS: 94) 44 36 30 3 5 63 62 பிட் கோயின் விற்பவர்களைவிட வாங்குபவர்கள் அதிகரித்துள்ளார்கள்
  23. வாங்குவதற்காகவா(Long) அல்லது விற்பதற்காகவா(Short)? எனது அபிப்பிராயத்தின்படி இரண்டும் Runaway Gap இடம்பெற்றுள்ளது, இது இந்த இரண்டு பங்குகளின் வலிமையற்றதன்மையை காட்டுகிறது, குறைந்த பட்சம் குறுகிய காலமாவது இந்த நிலை தொடரலாம், ஆனால் பேபால் முக்கிய வலயத்தில் உள்ளது (Support) விலை இந்த வலயத்திலிருந்து கீழிறங்கினால் விற்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.