Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. அமெரிக்க சந்தைநேர முடிவில் விலை மீண்டும் முந்தய நிலைக்கு திரும்பிவிட்டது, ஆனாலும் இப்போது 1824 முக்கிய வலயமாக மாறிவிட்டது, விலை 1824 அண்மிக்கும் போது விற்பனை அதிகமாக இருக்க வாய்ப்பு அதிகம், அதே நேரம் விலை 1824 கடந்து விட்டால் மீண்டும் 1857 முக்கிய வலயமாக குறுங்காலத்திற்கு இருக்க வாய்ப்புள்ளது. கடந்த 3 வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக இறங்கி செல்கிறது, ஆனாலும் விலை 1800 இல் தக்க வைக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் வாரம் 1824 விலை புதிய Resistance area வரும் பட்சத்தில் விலை 1800 கீழிறங்க வாய்ப்புள்ளது, ஆனால் நாள் வரைபடத்தில் வாரத்தின் கடைசி நாள் 1800 வலயத்தில் ஸ்பிரிங் புறந்தள்ளலுடன் முடிந்துள்ளது மிக சாதகமான அறிகுறி திங்கள் கிழமை தங்கத்தின் விலை அதிகரிப்புடன் தொடங்க வாய்ப்புள்ளது. 1808 இல் மூடியுள்ள சந்தை திங்கள் கிழமை ஆரம்பிக்கும்போது 1815 ( 1815 ஆகத்தானிருக்கவேண்டும் என்றில்லை ஆனால் இந்த வாரத்தின் கடைசிநாளின் உயர்ந்த விலையினை விட அதிகமாக இருத்தல்) இல் ஆரம்பித்து (Gap up) நாளின் முடிவு வரை 1808 எட்டாமல் முடிந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  2. இன்று தங்கத்தின் விலை Down side break out ஆகியுள்ளது. இன்னும் அமெரிக்க சந்தை நேரம் (Session) உள்ளது.
  3. கடந்த 9 நாள்கள் தங்கம் descending channel விலை செல்கிறது (Daily chart), பொதுவாக விலை break out ஆவதனை எதிர்பார்த்துள்ளமையால் தங்கத்தினை வர்த்தகம் செய்யவில்லை, விலை break out ஆகும் போது விலை ஏறலாம் (Upside break out) அல்லது விலை இறங்கலாம் (Down side break out).
  4. இரஸ்சிய தங்கத்தின் மீதான தடை எவ்வாறான தாக்கத்தினை, தங்கவிலையில் ஏற்படுத்தும்? யாழ்கள உறவுகளின் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.
  5. தங்கத்தினை விற்றுள்ளேன் தற்போதயநிலையில் 1857 வலயத்தில்.
  6. பங்கு சந்தையில் தாக்குபிடிக்க முக்கிய விடயமாக உளவியலை புரிந்து வைத்திருக்கவேண்டியது முக்கியம் என்பார்கள், ஆரம்பத்தில் சக மனிதர்களை புரிந்து கொள்வதுதான் கடினமான விடயம் என நினைத்ததுண்டு, பின்னர் பங்கு வர்த்தகத்திலீடுபட ஆரம்பித்த பின்னரே என்னைபற்றியே என்னால் இதுவரை காலமும் புரிந்து கொள்ளவில்லை என எண்ணத்தூண்டும். எமது சிந்தனையில் கடுமையாக உழத்தால்தான் பணம் வரும் என நினைப்போம் இலகுவாக வரும் பணத்தினை தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்போம். அதனால் அதனை எப்படியாவது திரும்பவும் இழந்து விடுவோம், கட்டு கோப்பாக சிறிது சிறிதாக அனைத்து trading Rules ஐயும் பின்பற்றி கட்டியெழுப்பும் கணக்கினை கண்மூடித்தனமாக ஒரு நாளிலே இழந்து விடுவோம். trading இல் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது அதன் process மட்டும் முக்கியத்துவம் கொடுக்க சொல்வார்கள், ஆனால் நடைமுறயில் பணத்தின் வருகையும் இழப்புமே பெரும்பாலும் என்னை ஒவ்வொரு வர்த்தகத்தினையும் தூண்டி தவறான முடிவுகளை எடுக்க வைத்துள்ளது. உதாரணமாக சொந்த பணத்தில் இழப்பு ஏற்பட்டால் அதனை குறுகிய காலத்தில் மீட்டு விட பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு இன்னும் பாதகமான நிலையினை அடைதல். சாதாரணமாக வர்த்தகத்தில் ஆண்டிற்கு மொத்த முதலீட்டில் 10 இலிருந்து 20 வீதம் வரையான இலாபம் யதார்த்தமானது அதனையே எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் முதலிடுவார்கள், ஆனால் பங்கு வர்த்தகத்தில் மட்டும் 5000 முதலினை ஒரு வருடத்திற்குள் 100000 ஆக வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் நீங்கள் மிக தெளிவாகவே ஆரம்பத்தில் செயற்படுவது போல் உள்ளது உங்களது வர்த்தகங்களை பார்க்கும் போது, என்னை பொறுத்தவரை அவசரப்பட்டு பின்வாங்க தேவையில்லை என கருதுகிறேன். இழப்புகள் ஏற்படும் பொழுது உங்களது Risk இனை பல மடங்காக குறையுங்கள் என துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
  7. நீங்கள் கூறின ProShares UltraPro எதனூடாக வர்த்தகம் செகிறீர்கள்? மிகவும் ஆர்வமாகவுள்ளது. மேலும், தங்கம் மேலே சொன்னது போல 1857 மற்றும் 1872 வலயங்களை அண்மிக்கும் போது எவ்வாறு செயற்படுகிறது என காத்திருக்கின்றேன். பொதுவாக வார இறுதி நாளில் சிறிய வர்த்தகர்களை சிக்கும் வேலையினை செய்வார்கள் என கூறுவார்கள். உதாரணமாக விலைகள் அதிகரித்து வாங்க தூண்டுவார்கள் வார இறுதியில், பின்னர் திங்கள்கிழமை விலையினை மிகவும் குறைத்து சிறிய வர்த்தகர்களை சிக்கலில் மாட்டி விடுவார்கள் என கூறப்படுகிறது. அதனை Bull trap என கூறுவார்கள், அதற்கு எதிர்மாறான செயற்பாட்டினை Bear trap என கூறுவார்கள். அது மட்டுமில்லாமல் பெருமளவானவர்கள் வார இறுதியில் தமது இலாபங்களை எடுத்து கொள்வார்கள்.
  8. தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பாக டொலரின் வட்டி விகிதம் எதிர்பார்க்கப்பட்ட 0.50% அதிகரிப்பினை விட 0.75% விகிதமாக அதிகரித்தும் தங்கம் விலை உயர்ந்துள்ளது, 1857 வரை செல்லலாம் என நினைக்கிறேன்(inverted Head and Shoulder chart pattern). 1800 வலயம் தொடர்ந்து பேணப்படுகிறது, 1857, 1872 வலயங்கள் குறுங்காலத்தில் முக்கிய வலயங்களாக இருக்கலாம். நேற்று ஜப்பான மத்திய வங்கி பணமுறிகளை வாங்குவதான அறிவிப்பின் வாங்காப்பட்ட EURJPY trade ஆரம்பத்தில் இலாபத்தில் இருந்த நிலையில் மேலும் இரண்டு trade எடுத்திருந்தேன் (Pyramiding), அமெரிக்க வர்த்தக நேரமளவில் அதன் stop loss ஏற்பட்டுவிட்டது. சொந்த பணத்திலிருந்து 8% வரை இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழப்பினை மீட்டெடுக்க இரண்டு வாரங்கள் எடுக்கும் என நினைக்கிறேன். சந்தை Fundamental க்கு நேரெதிராக செயற்படுகிறது.
  9. இணையவன் நீங்கள் கூறியது போல தங்கத்தில் முதலீடு செய்து விட்டீர்களா? தங்கம் 1800 வலயத்திலிலுள்ளது அதனை விட்டு கீழிறங்கினால் அடுத்த முக்கிய வலயம் 1785. தங்கம் 1800 வலயத்தினை தக்க வைத்தால் 1920 வரை செல்லலாம். இது எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே தவறாக இருக்கலாம். அனைத்து நாடுகளும் QT இல கவனம் செலுத்த ஜப்பான் மட்டும் தொடர்ந்தும் பணமுறிகளை வாங்க முனைவது ஒரு நல்ல அணுகுமுறையாக உள்ளதாக கருதுகிறேன் (Liquidity). முன்னர் போலல்லாது பணவீக்கம் 4% இந்த காலத்திற்கு ஆரோக்கியமான அளவு என கூறப்படுகிறது (முன்பு 1.5 - 2). அரசுகள் சிறிது காலத்திற்கு தமது கடுமையான Monetary policy கைவிடுவது நல்லதாக இருக்கலாம். உதாரணமாக அவுஸ்ரேலியாவில் பணவீக்கம் 5.1 % உள்ளது, அதே நேரம் வேலையின்மை 3.9 ஆக மட்டுமே உள்ளது பெற்றோல் விலை அதிகரிப்பால் பணவீகம் அதிகரித்துள்ளது தெளிவாகத்தெரிகிறது. https://www.abs.gov.au/statistics/economy/price-indexes-and-inflation/consumer-price-index-australia/latest-release பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் முயற்சியில், திரவத்தன்மை வற்றினால் பொருளாதாரம், பணவீக்கத்தினால் ஏற்படும் பாதிப்பினை விட அதிகமான பாதிப்பினை ஏற்படுத்துமோ என எண்ணத்தூண்டுகிறது.
  10. இணையவன், கடஞ்சா, ஈழப்பிரியன், விசுகு தகவலுக்கு நன்றி. நேற்று எனது பெரிய தங்க முதலீட்டினை ஐரோப்பிய சந்தை தொடங்குவதற்கு முன்னராக திட்டமிட்டபடியே மூடிவிட்டேன், அத்தோடு தங்க முதலீட்டில் Stop loss போடாத காரணத்தினால் தங்க முதலீட்டில் ஏற்படும் இழப்பினை ஈடு கட்டுவதற்காக (Hedging) EURJPY வாங்கியிருந்த்திருந்தேன் EURJPY இலாபமும், தங்க முதலீட்டு நட்டம் முந்தய நாளினை விட குறைந்திருந்தமையால் மிக குறைந்த நட்டத்துடன் அனைத்து வர்த்தகங்களையும் மூடக்கூடியதாகவிருந்தது. பின்னர் சில EURJPY trade எடுத்திருந்தேன் அவை சரியாக செல்லவில்லை, பின்னர் ஒரு EURJPY trade அனைத்து இழப்புகளையும் ஈடுகட்டி இலாபத்தில் இருந்த நிலையில் அதனை அப்படியே விட்டு விட்டேன் இன்று காலையில் பார்த்த போது, அனைத்து எடுக்கப்படாத இலாபமும் இழக்கப்பட்டு Stop loss எட்டி விட்டது. அதன் பின்னர் ஒரு EURJPY trade எடுத்துள்ளேன்((Long).
  11. தங்கம் 1800 வலயத்தினை விட்டு கீழிறங்கு பட்சத்தில் முன்பு கூறியது போல 1300 இல் தங்கத்தினை வாங்குவதற்கான வாய்ப்புகள் (Technical analysis) அதிகமாகவுள்ளது. பொதுவாக fundamental analysis அடிப்படையில் செய்யப்படும் முதலீடுகள் அவ்வளவாக எனக்கு சரிவருவதில்லை, நானும் தங்கத்தில் (American session) 1832 முக்கிய வலயத்தில் தங்கத்தினை முன்பு கூறியது போல பெருமளவில் வாங்கியிருந்தேன் (Big position size - bad trade). இப்போது கிழக்காசிய சந்தை விற்பனைகளுக்காக காத்திருக்கிறேன் (Liquidity), சிறிய நட்டத்துடன் வெளியேற ( இது வரை காலமும் சிறுக சிறுக Technical analysis மூலம் சேர்த்த இலாபம் அனைத்தையும் தங்க Fundamental முதலீட்டில் இழந்து விட்டேன், அத்துடன் எனது சொந்த பணத்திலும் இழப்பு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது) ஆனால் தங்கம் 1800 நிலையினை தக்க வைத்தால் 1920 வரை உயரலாம். மேலே கூறப்பட்டவை அனைத்தும் சொந்த அபிப்பிராயம் (தவறாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்)
  12. பொருளாதார அடிப்படை கட்டமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் (Macro economic) 1. பணவீக்கம் 2. பொருளாதார மந்த நிலை 3. சந்தையில் திரவ நிலை குறைதல் (Liquidity) Global liquidity index 85% இலிருந்து 40% சரிந்துள்ளது, இது முதலீடு, வங்கித்துறை மற்றும் சாதாரண மக்களின் செலவீடுகளில் (House hold expense) தாக்கம் செலுத்தும். அனைத்து முதலீட்டு சந்தைகளிலும் திரவத்தன்மை குரைவினால் முதலீடுகள் வற்றி போயுள்ள நிலமையே பங்கு சந்தை, கிரிப்டோ என்பவற்றின் சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. சாதாரண மக்கள் கடனட்டை, வீட்டுக்கடன் என பெருமளவிலான கடனதிகரிப்பு மேலதிக சுமையினை பொருளாதாரத்தில் ஏற்படுத்துகிறது. அவர்கள் ஊதிய உயர்வு அதிகரிப்பு இன்மை அத்துடன், பணவீக்கம் அதனால் ஏற்படப்போகும் வட்டி விகித உயர்வு பொருளாதார சரிவிற்கு வழிசமைக்கும். அத்துடன் வங்கிகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் பட்சத்தில் 50% வரை சந்தை சரிவு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதில் அரசியல் வேண்டாம் என்பதால அதற்கான காரணங்களை கூறவில்லை. வரும் புதனன்று வட்டி விகித அதிகரிப்பு 0.50% ஏற்படலாம் என எதிவு கூறப்பட்ட அதே வேளை 0.75% இனை முதலீட்டாளர்கள் எதிபார்க்கிறார்கள், அவ்வாறு நிகழ்ந்தால் நடைமுறையில் தங்கம் விலை கடுமையாக பாதிக்கும். ஆனால் கடந்த காலங்களில் அப்படியே நேரடியாக தங்க விலை சரிவினை ஏற்படுத்த வில்லை. அத்துடன் தங்க விலை வீழ்ச்சி அடையும் எனும்பட்சத்தில் எதிர் வரும் புதன் கிழமைக்கு முன்பாக தங்க விலையில் அதிகரிப்பு காணப்படலாம் (Distribution).
  13. அமெரிக்க பணவீக்க அறிவிப்பு வெளியாகியிருந்தது, கடந்த மாத பணவீக்க அளவிலிருந்து 0.1% பணவீக்கம் அதிகரித்துள்ளது (1.88% ?) அதனால் தங்கத்தின் விலை 2.01% அதிகரித்துள்ளது. இது பணவீக்கத்தின் அதிகரிப்பினை விட சிறிய அதிகரிப்பு காணப்படுகிறது. நான் முன்பு கூறியது போல தங்கம் முக்கிய விலை புள்ளியிலிருந்து கீழிறங்கவில்லை, இது தங்கத்தின் பலத்தினை காட்டுகிறதாக உணர்கிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). இது வரை காலமும் தங்கத்தினை விற்பதில் மட்டும் ஆர்வம் காட்டியிருந்தேன் (Short), ஏனெனில் அதன் Trend அப்படி (ஏற்கனவே எனது கணக்கின் லிங் இணைத்துள்ளேன்). ஆனால் கடைசி தங்க Trade இல் தங்கத்தினை வாங்கியிருந்தேன் ( பணவீக்க அறிவிப்பிற்கு முன்னதாக). தங்கம் விலை இறங்கலாம் எனும் எனது அபிபிராயத்திலிருந்து விலை ஏறலாம எனும் அபிப்பிராயத்திற்கு வந்துள்ளேன். இன்று கிழக்காசிய சந்தையின் நிலவரத்தினை (Low liquidity) பயன்படுத்தி தங்கத்தின் விலையினை சடுதியாக சரிக்க முற்பட்டால் (Stop hunt), தங்கத்தினை அதிகளவில் வாங்கலாம் என கருதுகிறேன் (தவறான அணுகுமுறையாக இருக்கலாம்). தகவலுக்கு நன்றி,
  14. EURJPY trade மூடிவிட்டேன், தொடர்ந்தும் விற்பதற்கு ஏற்ப விலை ஏற்றத்தினை எதிர்பார்த்துள்ளேன், ஆனால் ஜுலை மாதமளவில் 0.25, செப்டெம்பரில் 0.5 அதனை தொடர்ந்து வருட இறுதியில் 0.25 வட்டி வீதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிரது, அதற்கு முன்னர் விலை சடுதியாக இறங்கலாம் என எதிர்பார்க்கிறேன், தொடர்ந்து எழுதுங்கள்.
  15. ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தவில்லை 0.0% வட்டி விகிதம் (எதிர்பார்க்காத முடிவு), வாங்கி வைத்திருந்த யூரோ ஜென்னை குறைந்த இலாபத்தில் விற்று விட்டு, புதிதாக யூரோ ஜென்னை விற்றுள்ளேன்.
  16. இந்த கருத்து பதிந்த போது யூரோ வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்றதன் அடிப்படையில் முதற்தடவையாக 10% கணக்கினை உபயோகித்து EURJPY Short செய்திருந்தேன், வாங்காமல் ஏன் விற்றேன் என்றால் கடந்த வாரம் முழுவதுமாக விலை அதிகரித்த வண்ணமே இருந்தமையால் Market makers விலை உயர்வதற்கு முன்னர் விலையினை கீழிறக்கி stop loss hunt செய்வார்கள் என்ற அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொண்டு அனைத்தும் பலனளிக்கவில்லை, ஆனால் நேற்று இரவிலிருந்து பெரிய தொகையில் வைத்திருந்த trade இனை 5 மணித்தியாலத்திற்கு முன்னராக மூடிவிட்டேன் (தொடர்ச்சியாகக்கண்காணிக்க முடியாமையால்), ஆனால் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் விலை இறங்கியுள்ளது, ஒரு சிறிய தொகுதி வாங்கியுள்ளேன் விலையேறும் எனும் அடிப்படையில் சில நிமிடங்கள் உள்ளது அறிவிப்பு வெளியாவதற்கு. வட்டி விகித அறிவிப்பு சாதகமாக வந்தால் விலை உயரும் போது உயர்வில் மந்தநிலை காணப்பட்டால் தற்போதய trade விற்று விட்டு எதிர் trade செய்யவுள்ளேன்.
  17. யுரோ நாணயம் தொடர்பாக யாழ்கள அங்கத்தவர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். தொழில்னுட்ப ரீதியாக (Technical analysis) (மாதவரைபடத்தில்) கடந்த 4 மாதத்திற்கு முன் யூரோ ஜென் 126 இலிருந்து உயர்ந்து செல்கிறது, அதன் எல்லை 174 ஆகவுள்ளது. இன்று வட்டி விகித அறிவிப்பு வெளியாகவுள்ளது, இந்த நிலையில் கடந்த பங்குனி மாதத்தித்திலிருந்த பணவீக்கம் 1.9% இலிருந்து 8% இற்கு அதிகரித்துள்ளது (இரஸ்சிய - உக்கிரேன் யுத்த உபயம்). முதலீட்டாளர்கள் மத்தியில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுவதால் யூரோ நாணய இணைகள் வாங்குவது பரவலாகக்காணப்படுகிறது. பணவீக்க விகிதம் 5.1% உள்ள அவுஸ்ரேலியா இந்த வாரம் எதிர்பார்ப்பான 0.25 புள்ளி அதிகரிப்புக்கு பதிலாக 0.50% அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறான நிலையில் யுரோ நாணயம் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இணைய செய்திகளில் 0.50% -0.75% புள்ளிகள் வரை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சந்தை, யுரோ நாணய இணைகள் விலை அதிகரிப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை இனங்காட்டுகிறது. இதுவரை காலமும் Anchored inflation expectations என கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்திக்கொண்டிருந்த ஐரோப்பிய மத்திய வங்கி முதற் தடவையாக De-Anchored inflation expectations என பேச ஆரம்பித்துள்ளது. வட்டி விகிதம் உயர்த்துவதற்கு சாத்தியமுண்டா இல்லையா?
  18. சந்தை நடவடிக்கை ஏறுமுகமாகவோ அல்லது இறங்கு முகமாகவோ அன்றி, பக்கவாட்டாக நிகழ்கிறது அதனால் மேற்கூறிய உத்தி அதிக பலனழிக்கவில்லை. அதனால் மே 24 இல் இருந்து Market making எனும் உத்தியினை கடைப்பிடித்துள்ளேன். https://www.myfxbook.com/members/GreedFTrader/live-acc/9531745
  19. தங்க விலை தொடர்பான மிகவும் சுவாரசியமான ஒளிப்பதிவு.
  20. தங்கம் விலை அதிகரிக்கலாம் அல்லது விலை சரியலாம் என கருதுகிறேன், வ்ரும் வாரத்திற்கான Trade analysis. எதிர்வரும் காலத்தில் எனது வர்த்தக நடவடிக்கைகளுக்கான Trade analysis இனை வார இறுதியில் யூருயூப்பில் தரவேற்ற முயற்சிக்கிறேன். இனி யாழின் மூலமாக உங்களது நெறிப்படுத்தலை பெறமுடியாதலால், எனது வர்த்தக நடவடிக்கையின் சாதக பாதகங்களை நீங்கள் குறித்த ஒளிப்பதிவின் கீழ் முடிந்தால் இணைக்கவும். வார இறுதிகளில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் தலா 12 மணித்தியாலங்கள் வேலை செய்வதால் சில வார இறுதியில் பதிவிட முடியாத நிலை ஏற்படலாம்.
  21. https://www.barchart.com/etfs-funds/quotes/GLD/put-call-ratios எதிர்வரும் ஆண்டு ஆரம்பம் வரை தங்கத்தின் market sentiment பாதகமாகவுள்ளது போல உள்ளது (உறுதியாக சொல்ல முடியாதுள்ளது).
  22. உலக பொருளாதாரம் தனது இறங்கு முகத்தினை ஆரம்பித்துள்ளதா (Bear Market)? அல்லது இது ஒரு தற்காலிக பின்னடைவா (Market Correct)? தற்காலிக பின்னடைவு என்றால் முதலீட்டிற்கு வாய்ப்பான நேரம் ஆனால் சந்தை சரிவு நிலையினை அடைந்தால் அது எவ்வளவு தூரம் செல்லும் என தெரியாது. DOW theory இன் படி சந்தை ஆகக்கூடுதலான விலையிலிருந்து 20% விலை வீழ்ச்சி அடைந்தால் சந்தை இறங்குமுகம் என குறிப்பிடுகிறது, அத்துடன் தற்காலிக பின்னடைவு எனில் அதிக பட்சம் 3 மாதங்கள் வரை நீழும் எனககூறுகிறது, ஏற்கனவே 3 மாதங்களுக்கு மேலாக விலைகள் சரிவடைந்து செல்லுகிறது. அத்துடன் நஸ்டாக் குறியீடு 20% மேலாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் S&P 500, DIJ இன்னும் 20% அளவு கோலை எட்டவில்லை. கடந்த மாதம் 10 வருட பண முறியும் 2 வருட பண முறியும் வட்டி வீதன் 2.40, 2.42 எட்டியது Market recession முன்னோடி அறிகுறி எனக்கூறப்படுகிறது, இவ்வாறு கடந்த 9 Market recession ஐயும் சரியாக எதிர்வு கூறியுள்ளது. ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது எவ்வளவு தூரம் விலை சரிவடயும் என்பதுதான் முக்கிய விடயமாகவுள்ளது( 2019 இல் விலை 27% சரிவடைந்தது ஒரு வருடத்திற்குள்ளாகவே விலை மீண்டும் உயர்ந்து விட்டது). இரஸ்சிய உக்கிரேனிய போர் உலக பொருளாதாரத்தினை வெகுவாகப்பாதிக்கின்றது, எமது நிறுவனத்தில் பங்குனி மாத ஆரம்பத்தில் (யுத்த ஆரம்ப காலத்தில்) கூடிய கூட்டத்தில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் வருகை யுத்தத்தினால் பாதிப்புறும் ஆனால் 3 மாத இருப்பு இருப்பதனால் சமாளித்துவிடலாம் என கூறப்பட்டது, ஆனால் தற்போது அனைத்து மூலப்பொருளும் இக்கட்டான அளவுநிலைக்கு ஏற்கனவே சென்றுவிட்டது. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா, இந்த போரை முடிவுக்கு கொண்டுவராமல் மக்களையும் உலக பொருளாதாரத்தினை அழிக்கிறார்கள் (இரஸ்சியாவினை மட்டும் குறைகூறவில்லை மேற்கு நாட்டினையும் சேர்த்துதான் சொல்கிறேன்)
  23. Stop loss இனை குறைக்க முடியாவிட்டாலும் Position size கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன், Risk of Ruin என்பது உங்களது trading system உங்களது trading account இனில் உள்ள காசு முழுவதும் இழக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதா என தெரிவிக்கும் அத்துடன், குறிப்பிட்ட எண்ணிக்கையான trade பின்னர் உங்களது கணக்கின் எதிர்கால நிலுவையினை தெரிவிக்கும். இந்த திரியில் முன்னர் ஒரு தளத்தின் இணைப்பினை இணைத்திருந்தேன், அத்தளத்திற்கு சென்று MS EXCEL தரவிறக்கிக்கொள்ளலாம். எனது AUDNZD trade இல் 1 break even மற்றது stop loss. பல்லடியம் உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பித்த போது விலை எகிறும் என Fundamental analysis இல் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் விலை தொடர்ச்சியாக இறங்கி வருகிறது, கடந்த 3 மாதகாலமாக விலை இறங்குகிறது, 1900 விலையில் வாங்குவதற்கு தீர்மானித்துள்ளேன் ( தற்போது 2000 இல் உள்ளது 1900 தொழில்னுட்ப ரீதியாக வலுவானநிலையில் உள்ளபடியால்). சில நேரங்களில் உலக பொருளாதார சூழ்நிலையான Macro economics (Fundamental analysis) இற்கும் சந்தை நடவடிக்கையும் நேரெதிராக இருக்கிறது, இதனால்தான் தொழில்னுட்ப ரீதியான (Technical)சந்தை அணுகுமுறை சாதகமாகவுள்ளது. சமீபகாலமாக Fundamental analysis இற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனூடே தொழில்னுட்ப ரீதியாக சந்தையினை அணுகுகிறேன், அத்னாலேயே AUNZD bullish market view இல் தொடர்ச்சியாக இழப்பு ஏற்பட்ட போதும் தொடர்ந்தும் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறேன். Trend following என்ற அடிப்படையில் AUDNZD இனை அணுகுகிறேன், இது தவறான முடிவாக இருக்கலாம். இந்த வகை உத்தியினை ரிச்சர்ட் டென்னிஸ் பாவித்திருந்தார், இஅவர்து வர்த்தக நடவடிக்கையில் 95% இழப்பினையும் வெறும் 5% மட்டுமே இலாபத்தினையும் வழங்கும் என கூறுவார்கள், அவரது அந்த 5% இலாப நடவடிக்கை 95% இழப்பினை ஈடு செய்வதுடன் மேலதிகமாக அவருக்கு இலாபத்தினையும் ஈட்டி கொடுத்திருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.