Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9910
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. விலை குறைக்க மாட்டாங்கள் படுபாவிகள் ஒரு பால்மாவின் விலை 2500 ரூபா குழந்தைகளுக்கு கொடுக்கும் பால்மா
  2. ம் விபரமாக எழுதுங்கள் பலருக்கு உதவலாம் அல்லவா
  3. அடுத்த நாள் குமார் அண்ணனிடம் இருந்து அழைப்பு வருகிறது................. ராஜா மாலை 6 மணிக்கு ரெடியாக இரு என‌ எனக்கோ கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை உடலில் ஒரு வித நடுக்கமும் பயமும் தொற்றிக்கொள்ள வீடுசென்று பையை எடுத்து அம்மா நான் யாழ்ப்பாணத்துக்கு வேலைக்கு போகிறேன் ஒரு மாதம் கழித்துதான் வீடு வருவேன். அம்மாவோ குறுக்கிட்டு நீதானே யாழ்ப்பாண பக்கமும் இனி தல வச்சி கூட‌படுக்கமாட்டன் என்ற சொன்ன நீ பிறகேன்? அங்க வேலைக்கு போற? இல்ல அம்மா இந்த கொன்றக் எடுத்தது எனக்கு தெரிந்த எஞ்சினியர் அவர்ர கட்டிடம் தான் கட்டப்போறம் அங்க வேலைக்கு ஆட்கள் இல்ல தெரியும் தானே சம்பளம் வேற கூட கிடைக்கும் . அம்மாவோ அவங்க உங்கள அடிச்சு துரத்தாதவரைக்கும் சரி சீமேந்து அதிகம் அளையாத உனக்கு அலர்ஜிக் குணம் இருக்கிறது அல்லவா ஓம் அம்மா எல்லோரும் கவனமாக இருங்க அப்பா தங்கச்சியை பார்த்துக்கொள்ளுங்க என அழ முடியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். ( நான் யாழ்ப்பாணம் ஏன் செல்ல மாட்டேன் என்பதற்க்கான காரணம் அங்கே வேலை அதிகம் என சொல்லி எங்களை ஒருவர் கட்டிட வேலைக்கு அனுப்பி இருந்தார் அங்கு சென்றோம். அங்கே சென்றவுடன் எங்களை வேலைக்கு எடுத்தவர் மிகவும் அருவருக்கத்தக்கதாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தினார் . ஒரு நாள் வேலை செய்து அந்த நாளுக்கான கூலியை வாங்கி அடுத்த நாளே பஸ் பிடித்து ஊருக்கு வந்தோம் ) இன்று அவரோ எங்களது ஊரில் அவரது மகன் வைத்தியர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார் காலம் பொல்லாதது. கதைக்கு வருவோம்................ மெயின் வீதி வந்ததும் அங்கே வான் வருகிறது மெதுவாக‌ கதவை திறந்த குமார் அண்ண. உள்ள வா யாரும் பாரக்கலயே என கேட்டார் இல்ல அண்ண சந்தேகமும் இல்ல உள்ளே ஏறியதும் அந்த வான் நிறையவே ஆட்கள் மிக நெருக்கமாக இருந்தனர். வான் ஒரு இடத்தில் போய் நின்றது சிம் அட்டைகளை மாற்றி விட சொன்னார்கள் பழைய சிம்மை வீசிய உடனே வான் மீண்டும் புறப்பட்டது போகும் வழியில் தகவல்கள் இன்னுமொருவருக்கும் தகவல் பரிமாறப்பட்டே வந்த‌து. அவர்களும் எங்களைப்போலவே வருகிறவர்கள் என‌ ஊகித்துக்கொண்டேன். இரவு வரை ஓடிய வான் அதிகாலை 4 மணிக்கு நின்றது சிலர் ஆட்டோக்களில் ஏற்றிச்செல்லப்பட்டனர் மறைவான இடங்களுக்கு சிலர் வானுக்குள் இருந்தனர். நானும் ஒரு பத்துப்பேர் வானுக்குள் இருந்து ஆட்டோக்களில் மாற்றப்பட்டு ஒரு நாள் முளுக்க வாகனத்திலே சுற்றினோம் எங்கேயும் தங்காமல் தங்கினால் சந்தேகம் வந்துவிடும் என்பதால் அடுத்த நாள் அதிகாலை ஆட்டோ ஓர் காட்டுப்பகுதிக்கு சென்றது. அங்கே போனபோதுதான் பார்த்தேன் அங்கே 45 பேர் வரை இருந்தார்கள் விடிவதற்குள் படகில் ஏறி ஆகவேண்டும் என சொன்னார் .ஒருவர் சிறிய படகில் ஏற்றி ஏற்றி ஆட்களை படகிற்கு அனுப்பினார்கள் படகும் பார்க்க மிக பெரிதாக இருந்தது மொத்தமாக ஆட்கள் ஏறிய பின்னர் ஆட்கள் கணக்கெடுக்கப்பட்டது 30 பேர்தான் போக கூடிய படகில் 45 பேர். ஏற்றப்பட்டனர் ஆட்கள் அதிகமாகவே இருந்தார்கள் . அதில் 6 பெண்களும் 4 குழந்தைகளும் அடக்கம். எல்லோரும் ஒரு தொகைப்பணத்தை கொடுத்தே வந்திருக்கிறார்கள் அந்த பணத்தை வைத்தே படகு வாங்கி அதை சரி பார்த்து பொருட்கள் அத்தனையும் வாங்கி உள்ளே வைத்திருக்கிறார்கள் என்பதும் படகில் ஏறிய போதே தெரிந்தது. படகில் ஏறிய எங்களை உள்ளே விறகு அடுக்குவது போல அடுக்கிவிட்டார்கள் ஐஸ் வைக்கும் அறையென நினைக்கிறேன் யாரும் அதிகம் சத்தம் போடக்கூடாது வெளியிலும் வரக்கூடாது பாத்றூம் கிடையாது அப்படி அவசரம் என்றால் ஒருவர் மட்டும் வெளியில் வந்து படகின் பின் ப‌குதியில் கழித்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும் நான் குமார் அண்ணனை பார்க்க அவர் கண்ணைக்காட்டி சத்தம் போடாமல் இரு சர்வதேச கடல் வந்த பிறகு விளக்கமாக சொல்கிறேன் என்றார். அவரும் அந்த படகை இயக்கக்போகும் ஒருவர் என எனக்கு அப்போதுதான் தெரிந்தது . படகு எல்லோரின் பெருமூச்சின் ஆசுவாசத்தில் சில தூரம் செல்ல தூரத்தில் பெரும் இரைச்சல் சத்தம் கேட்க கடற்படைப்படை படகோ நினைக்க‌ கடற்படைப்படகு எங்கள் படகை நோக்கி நீரைக்கிளித்து சத்தத்துடன் இரைந்து வருகிறது. தொடரும் ..........
  4. இதுக்கு தான் இந்த பெரிசுகளோடு சேரக்கூடாது என்று வியாபார தந்திரம் ஐயா😛
  5. எத்தனை புதைகுழி களை பார்த்தாச்சு என்ன நடந்து இருக்கிறது செம்மணியையும் இப்படித்தான் சொன்னாங்க இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலிப்பதை தவிர வேறு ஒன்றும் எனக்கு தெரியவில்லை
  6. வந்து இறங்கினால் போதும் அவர்களுக்கு பணம் கிடைக்கும் என்ற நப்பாசைதான்
  7. நன்றி அண்ண ஓம் அண்ண நன்றி யாழின் வாசகன் யாழ் இயங்காமல் போய்விடக்கூடாது என வேலை இடத்தில் இருந்து எழுதுகிறேன் அண்ண நன்றி அப்படியா அக்கா மிக்க நன்றி
  8. அடுத்த நாள் குமார் அண்ணையை காண்கிறேன் என்ன அண்ண என்னமாதிரி ஏதும் விளக்கம் தெரிந்ததா? காசு ஏதும் கொடுக்கணுமா? அப்படி ஒன்றூம் இல்ல நான் மூணூ பேரை சிபாரிசு செய்திருக்கிறன் போய் இறங்கி கொடுத்தா போதும். சரி அண்ண மொத்தம் எத்தன பேரு? எனக்கும் கடலுக்க போய் பழக்க இல்ல. கடல் கொந்தளிச்சா என்ன நடக்கும் ? கடல் கொந்தளிச்சா என்ன! ...............................கடலில் விழுந்து சாகிறதான் என்றார் அவர்! காசு கொடுத்தா வாங்கி வாங்கி வந்திருக்க இந்த உசிர??............... இந்த வசனம் ஒரு தடவை என்னை யோசிக்க வைத்து விட்டது அப்படியெல்லாம் நடக்காதுடா 30 பேர் வரும் போல ஒரு நாலைஞ்சு சிம் காட் வாங்கு ...........................வீட்டில சொல்லிட்டயா? எங்க சொன்னா விடமாட்டாங்களே துணீஞ்சு ஒரு முடிவ எடு என சொல்லிவிட்டு அவசரமாக அவர் சென்று விட்டார். எனக்கு யோசனையோ உலகத்தை விட பெரிசாக தோன்றியது . துணிந்து முடிவெடுத்து விட்டேன் போவதென ஆனால் வீட்டில சொல்வதில்லை என முடிவெடுத்தேன் சில உடுப்புக்களை மாத்திரம் பையில் வைத்திருந்தேன் தேவையான மருந்துகள் பனடோல் சித்தாலபே என்பனவற்றை வைத்திருந்தேன் . எப்ப சொல்வார் என்ற யோசனையில் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை தூக்கம் இல்லை யோசனை மட்டும் இருந்தது அம்மாவோ என்ன தம்பி சுகம் இல்லையா? இல்ல அம்மா அப்படி ஒன்றும் இல்ல என சொல்லி நகர்ந்துவிடுவேன் நான் ஏன் எதற்க்காக செல்ல வேண்டும் என்ற கேள்வி என் ஆழ் மனதில் தோன்றினாலும் விடையோ குடும்பம் நன்றாக இருக்க நல்ல வாழ்க்கை சகோதரங்களுக்கு அமைத்துக்கொடுக்க‌ வேண்டும் என்ற பதில் மட்டுமே மனது சொல்லிக்கொண்டிருந்தது. சிலநேரம் நாம் துணிந்து எடுக்கும் முடிவுகள் தலைகீழாக மாறூம் போதே நாம் பிழயான முடிவைத்தான் சரியாக எடுத்து இருக்கிறமோ என எண்ணத்தோன்றுகிறது குமார் அண்ணையிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை............... தொடரும்................................ உயிர் @suvy
  9. யாழ்ப்பாணத்துல முட்டி மோதுறாங்களாம் ஆனால் யாரோ ஒருத்தன் கோடிக்கணக்கில் அடிச்சுட்டு கிளம்பி இருக்கான் 30 லட்சம் , 15லட்சம் கொடுத்த கடிதங்கள் பிரசுரமாகிறது முகநூலில்
  10. நானும் அம்பாறைதான் சொல்லியிருந்தால் தகவல் கொடுத்து இருப்பேனே ஆளைப்பற்றி இதானால் தான் யாழில் கூட யாரும் உதவி செய்ய சொன்னால் கூட பணம் அனுப்பி முன் நிற்பதில்லை நான் மற்றபடி இங்குள்ள மக்களை திருப்திப்படுத்த அந்த கடவுளால் கூட முடியாத காரியம்
  11. என்னமாதிரி ராஜா படகு ஒன்று வெளிக்கிடப்போகுது போவமா? என்று கேட்டார் குமார் அண்ண‌ ? எங்க அண்ண அவுஸ்ரேலியாதான் ம்கும் உங்களுக்கு செய்தி தெரியாதோ? இப்ப கடற்படை எங்க கப்பல் கிளம்பினாலும் அங்க வந்து அள்ளிக்கொண்டு போய் கோட்ஸ்ல ஒப்படைச்சு ஜெயிலில போட்டு கேச போடுறான் நாள் மாதம், வருசக்கணக்கா இழுபட என்னால முடியாது. இந்த முறை அப்படி நடக்காது என்ன நம்பு ம் உங்கள நம்பலாம் நீங்கதான் கடலையே கரைச்சு குடிச்சவர் ஆச்சே. ம் சொல்லுறன் குமார் அண்ண! என்று சொல்ல சரி ஆனால் இதைப்பற்றி மூச்சும் விடக்கூடாது சரி அண்ண யாரிட்டயும் சொல்ல மாட்டன் . இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்க நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு கடலாலும் , வானாலும் நாட்டை விட்டு ஓடிக்கொண்டே இருந்தார்கள் பொருட்கள் இல்லை , பொருட்கள் அதிக விலை தட்டுப்பாடு நாள் முழுக்க வரிசை என மக்கள் மனதையும் வாழ்க்கையையும் தினம் தினம் வாட்டி வதைத்தது. எவரிடம் கேட்டாலும் இந்த நாட்டில் இருப்பதை விட எங்கேயாவது ஓடி விடலாம் போய் விடலாம் என சொல்வார்கள் ( இந்த கால கட்டத்தில் இலங்கையில் நின்றவர்களுக்கு அதன் வலி புரியும்) நானும் நாட்டில் நடக்கும் விசயங்களை பார்த்து பேசாமல் படகு ஏறலாம் என நினைத்து அம்மாவிடம் சொன்னேன் அம்மா நானும் படகு ஏறி வேற நாட்டுக்கு போகப்போகிறன். அம்மாவோ உனக்கு என்ன விசரோ நாட்டில நடக்கிறது தெரியாதா செய்தி வாசிக்கலயா புடிச்சு புடிச்சு உள்ள போடுறத்த பார்க்கலயா? அங்க போனாலும் அவனுகள் எடுக்க மாட்டன் என்றூ சொல்லி விளம்பரமா போடுறாங்க............ ம் அப்ப என்னதான் செய்யுற இந்த நாட்டில?? என்று கோபத்தில் கேள்வி கேட்டு நானும் சைக்கிளை எடுத்து கிளம்பி விட்டன் போகும் வழியில் நண்பனை காண்கிறேன் என்ன நண்பா கேஸ் எப்படி போகிறது? நம்மள நடுத்தெருவில தான் நிப்பாட்ட போறாங்கள் என்றான். ஏன்டா? இன்னும் தீர்ப்பு கிடைக்கலையா? இல்லடா மாதம் மாதம் பிற்போட்டுக் கொண்டே இருக்கானுகள். வேற வேலையும் எடுக்க இயலாது வேற நாட்டுக்கும் போக இயலாது என சலிப்பாக சொன்னான் அவன் . அவன்ற விசாரணையோ போலியான நியமனக்கடிதத்தை வைத்து வேலை எடுத்த என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுவரை நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் அந்த வழக்கு நிலுவை வழக்கு போல இழுத்துக்கொண்டே போய்கொண்டிருந்தது அவனது போலிக்கடிதத்தை அச்சடித்தது யார் என ( தெரியும்) கண்டுபிடிக்க முடியாத அரசாங்கம் , பொலிஸ் அதை வைத்து வேலை எடுத்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருடக்கணக்காக வக்கீலுக்கு காசு வாங்கிக்கொடுக்கும் வேலையை செய்தது. நம்ம நாட்டு டிசைன் அப்படி விசித்திரமான‌ நாடும்தானே. சரிடா நீ என்ன செய்யப்போறா? அவன் என்னிடம் கேட்க நான் நாட்டை விட்டுப்போகப்போறன் மச்சி....................................... என்ன? படகு ஏறப்போறன் என்று சொல்ல............................................................. உனக்கு ஒரே பகிடிதான்டா என சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்தோம். தொடரும் உயிர்...............................................................
  12. இப்ப மட்டும் சொப்பன சுந்தரியை யார் வச்சி இருக்கார் சைனாவும் , இந்தியாவும் தானே இந்த நாட்டுக்கு நல்லது நடக்க இந்த விடாக்கண்டனுகள் விடமாட்டானுகள்
  13. இந்த வருடம் இருவர் இறந்து போனார்கள் ஒருவருக்கு யானை அடித்து இறந்து போனார் மற்றவருக்கு பாம்பு கடித்து இறந்து போனார் நான் எதற்க்காக சொல்ல முனைகிறேன் என்றால் அந்த பெரிய வைத்திய சாலையில் கூட மருந்துகள் தட்டுப்பாடு நிலவியதை
  14. உன்மையாக ஒரு கணம் உங்கள் முகம் வந்து போனது மறக்க முடியுமா உங்களை அதற்காகவே சொன்னன் அண்ண உங்களை போல ஒருவர் போல
  15. கடந்த மாதம் எனது தந்தைக்கு மீண்டும் நெஞ்சுவலி (காட் அட்டாக்) கதிர்காமம் நடந்து சென்றவர். வந்தது அவரது தம்பி இறந்த செயதியை அறிந்து கதிர்காம ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அங்கு அந்த மருத்துவ வசதி இல்லை மீண்டும் திஸ்ஸமகாராம எனும் ஊரில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்று 7 நாட்களின் பின்னர் ஊசி எல்லாம் போட்ட பிறகே அவரை கொண்டு வந்தோம் அடுத்த செக்கப் இருக்கிறது அதன் பின்னரே தெரியும் முடிவு என வைத்தியர் அருள்நிதி சொன்னவர் மட்டக்களப்பு. @தமிழ் சிறி அண்ண
  16. இதுவரை 124 பேர் வரை ஏமாந்த செய்தி பரவுகிறது கனடா ஆசையில் பல கோடி பணம் வன்னியில்தான் @நிழலி
  17. பிக்குகளே பிளே பாய்யாக இருக்கும் போது அந்த காஞ்ச ராணுவ வீரரும் என்ன செய்வார்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.