Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9910
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. நமக்கு டவுன்லோட்தான் நல்ல திரைக்கதை நகர்வு என்று சொல்லலாம் தான் நிம்மதி மன நிறைவுக்கு எதுவும் செய்யலாம் என்ற மனநிலையான மனிதர்களை வைத்து எடுத்திருக்கிறார்கள் பார்க்கலாம் விறு விறுப்பாக இருந்தது
  2. பிறந்த நாள் வாழ்த்துக்களும் அப்பாடா சந்தேகம் தீர்ந்தது 😉
  3. இங்கயும் அடிக்கும் வெயில் தாங்கமுடியல தண்ணி குடிக்க சொல்லுறாங்க குடிச்சால் நாமளும் மர்கியா வா??
  4. இப்பபெல்லாம் அரசியல் வாதியென்றாலே அரைலூசி மாதிரித்தான் தெரியுது எனக்குமட்டும் தானா??
  5. ஆனால் காத்தான் குடி படுகொலையை மட்டும் தூக்கி க்கொண்டு வருவாங்கள் பக்கத்து ஊரான எங்கள் ஊரில் அகதிகளாக தஞ்சமடைந்த உறவுகள் அதிகம் . வீரமுனை வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, திராய்க்கேணி மல்வத்தை மல்லிகைத்தீவு சம்மாந்துறை அட்டப்பள்ளம், நிந்தவூர், என ப்ல கிராமங்களில் இருந்து வந்து கோயில்களிலும் , மைதானங்களீலும் குடிசைகள் கொட்டில்கள் அமைத்து வாழ்ந்துவந்தார்கள் அப்ப வயது எனக்கு 6 அவை யாவும் நினைவில்
  6. அவளின் போண் மெதுவாக உறுமிக்கொண்டிருந்தது மகள் போண் அடிக்கிறது.... அவளுக்கு விளங்கவில்லை பாத்றூமில் இருந்தாள் போணூக்கு பதிலை வழங்க நான் எடுத்தேன் எதிரே உள்ளவர் பணத்தை உடனடியாக கட்டுங்கள் என்று கடும் தொனியில் எச்சரித்து போண் பண்ணுனா எடுக்க மாட்டீங்களோ? என அதட்டினார் . அதற்கிடையில் மகள் வந்து ஏன் அப்பா நீங்கள் போண் எடுத்த நீங்கள்? சும்மா இருக்க மாட்டீங்களா உங்கட போணா இல்லையே என்ற போண்தானே ஏன் நீங்க எடுத்த நீங்கள் என என்னை கோபமாக கேட்டாள். என்ன பிரச்சினையென‌ நான் கேட்க ம‌கள் ஒன்றுமில்லை என அவள்மழுப்புகிறாள் . ஒரு வயதுக்கு பிறகு முதுமை ஒன்றை விரும்பும் ஆனால் அந்த முதுமை விரும்புவதை நாம் வாழ முடியாமல் தங்கி வாழ்வது என்பது மிக கொடுமையாக இருக்கும் எதாவது செய்வதென்றால் கூட கூட இருப்பவர்களிடம் ஆயிரம் முறை கேட்க வேண்டும். இத்தனைக்கும் உழைக்கும் போதும் பிள்ளைகளை வளர்க்கும் போது ஆயிரம் முடிவுகளை துணிந்து எடுத்திருப்போம். ஆனால் முதுமை வந்ததும் எங்கோ ஊர் மூலையில் யாருக்கும் தேவையற்ற பொருள் போல முடங்கி இருப்போம் தேவைப்படும் போது மட்டும் பாவிப்பது போல. அனுபவம் கூட அமைதியாகிவிடுகிறது. டீவிக்கு முன்னால் ஒரு பொம்மை போல பேரப்பிள்ளைகளுடன் ஓர் வாழ்க்கை. கொரோனா காலம் முடிந்த பிறகு கொழும்பில் வாழ்வது மிக சிரமாக இருந்தது தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டதும் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு, உக்கிரேன் போர் என உலகை சரித்துக்கொண்டிருந்தது வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாராப் பிரச்சினைகள் , பெற்றோல் பிரச்சினை , எரிவாயு , மண்ணெண்ணெய் பிரச்சினை இப்படி இருக்க இந்த பிரச்சினைகளுக்குள் கொழும்பில் வாழ்வதென்பது மிக சவாலகவே இருந்தது மகளின் கணவருக்கும் வேலை நின்று போக ஒருவர் உழைப்பில் வாழ்வது குடும்பத்தில் பணத்தட்டுப்பாட்டால் ஆட்கள் மீது எரிந்து வீழ்வது மட்டும் மிஞ்சி இருந்தது குழந்தைகள் படிக்க வேண்டும் , நீர் கட்டணம் , மின்சாரக்கட்டணம் வீட்டு வாடகை என பணத்தேவை அதிகரிக்கவே மகள் ஏதோ நிறுவனத்தில் கடன் பட்டிருக்கிறாள் என புரிந்து கொண்டேன். மாலை நேரம் வெளிநாட்டில் இருக்கும் மகனிடம் கேட்கிறாள் மகள். அண்ணா அவசரமாக பணம் கொஞ்சம் அனுப்பு என அவனோ அக்கா இங்கயும் நிலமை மோசம் அப்பா எக்கவுண்ட்ல பணம் இருக்கிறதுதானே அவசரத்துக்கு தானே வாங்கி எடு என மகன் சொல்லி இருப்பான் போல அவளோ அப்பாகிட்ட எப்படி பணம் கேட்பது என மகள் சொல்வது என் காதில் வீழ்கிறது. எனக்கும் என் முதுமைக்கும் ஓய்வும் நிம்மதியும் அமைதியான இடமும் தொந்தரவற்ற வாழ்க்கையும் தேவைப்படுகிறது இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என உள்மனம் சொல்கிறது. வீட்டை விட்டு வெளிக்கிடும் எண்ணம் என்னைத் தொற்றிக்கொள்கிறது. அந்த கண்ணாடி மேசையில் அந்த வங்கி அட்டையை வைத்துவிட்டு அதன் ரகசிய இலக்கத்தையும் எழுதி வைத்துவிட்டு கண்ணாடியை பார்க்க அதற்கு முகம் காட்டத்தெரியவில்லை. ஆனால் பெயருக்கும் அதுவும் கண்ணாடி மேசையே என்னைபோல. குழந்தைகளை மெதுவாக கொஞ்சிவிட்டு நன்றாக படியுங்கள் அம்மப்பா குப்பைகளைக்கொட்டிவிட்டு வருகிறேன் என ஒரு பையில் சில உடுப்புக்களை எடுத்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தங்கி வாழ ஓர் இடம் உண்டு எனக்கொரு இடமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். சரணாலயம் தொடரும் ........
  7. உண்மையும் தான் இலங்கையை எடுத்துக்கொண்டால் பல வைத்தியங்களுக்கான மருத்துவர்கள் இல்லை பலர் வெளிநாடு சென்றுவிட்டார்கள்
  8. இப்ப எங்க பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்தான சாப்பாடு கொடுக்க முடிகிறது பிள்ளை விரும்புன சாப்பாடு கூட வாங்கி கொடுக்க முடியாமல் பல பெற்றோர்கள் இந்த மனநிலை யாருக்கும் வரவே கூடாது
  9. இலங்கையில் இது சாதாரணம் தானே அவர் வெளிநாட்டில் வாழ்வார் விசாரணை தொடரும் பின்பு குற்றமற்றவர் என தீர்ப்பு வரும் நாட்டுக்கு வருவார்
  10. ம் சில நேரம் உயிர் பயத்தில் எடுக்கும் முடிவுகள் தானே இப்ப சில குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு மீண்டும் செல்கிறது கடலால் நன்றி கொழும்பான் கருத்து பகிர்வுக்கு நன்றி அண்ணா கருத்துக்கு சிலர் காணமல் போனவர்களும் உண்டு இதுவரைக்கும் தொடர்பு இல்லை அநேகமாக இறந்து போயிருப்பார்கள் பல வருடங்கள் ஆகிவிட்டது இந்த தீவுக்கு போனவர்கள் கூட இறந்ததாகவே செய்தி பரவியது 1 மாதங்கள் கழிந்த பின்பே தெரியும் அவர்கள் உயிருடன் இருப்பது
  11. சத்தமா சொல்லாதீங்க லைன் கட்ட போறாங்கள் இங்க களத்தில உசிரு முக்கியம் குமாரு வர வர செய்திகளை பார்க்க மண்டை விறைக்குது அங்கால இன்னொரு கேசும் 54 மனைவியின் தங்கையுடனும் ஓட்டமாம் அது வேற கேஸ் யாழிலதான்
  12. புது மாத்தாளன் பகுதியில் சிறிய விகாரை கட்டி முடிக்கப்பட்டு விட்டது தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்
  13. நான் போகவில்லை அண்ண மீண்டும் மத்திய கிழக்கு செல்லவே நினைத்து இருக்கிறன். மீண்டும் விலைவாசி கூடிய நிலையில் நாடு என்னுடன் இருந்தவர்கள் மீண்டும் சென்று விட்டார்கள் வயலில் நட்டம் நீர் இல்லை பசளை இல்லை கூலிகள் அதிகள் ( குத்தகை, வெட்டும் மெசின்,உழவு ) உங்களுக்கு தெரிந்த ஏதாவது நிறுவனங்கள் கம்பனிகள் இருந்தால் சொல்லுங்கள் ம் நீங்கள் சொல்வது உன்மைதான் சில ஆண்டுகளுக்கு முன்னர் 2009 பிறகு படகில் சென்று பப்புவா நியு கினியா தீவில் இருப்பவர்கள் இன்னுமிருக்கிறார்கள் , அவுஸ்ரேலியா சென்று உள்வாங்கப்பட்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் முட்டாள்த்தனமான முடிவுகளை துணிந்து எடுக்கிறார்கள் . சிலர் உயிர் பயத்தால் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் நன்றி அக்கா கருத்துக்கு
  14. இந்த தீவு பற்றியும் அங்கே நடந்த சம்பவங்கள் அது பற்றி செய்தி அண்மையில் BBCவெளியிட்டது நீங்கள் அறிந்திருப்பீர்கள் யாழிலும் இணைக்கப்பட்டது என நினைக்கிறன் ஆனால் போனவர்களுக்கு அது என்ன தீவு என தெரியவில்லை நன்றி அண்ணை உங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும் இல்லை அண்ண நான் போகல ஊரில ஒரு குறூப் போய் திரும்பி வந்தது அவர்களை வைத்து எழுதியது தான் அந்த கதை ஆனால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களில் சிலர் படகில் இறக்க தூக்கி எறிந்துவிட்டு சென்ற சம்பவங்களும் நடந்து இருக்கிறதாம் அதை நான் எழுதவில்லை . ம் அந்த தீவு பற்றி அவர்கள் ஊருக்கு வந்த போதே நான் கேட்டு இருந்தன் அட்கன் பிறகு தீவில் பிரச்சினை எழுதுள்ளது BBC செய்தி க்காரர்கள் சென்று இருக்கிறார்கள் அது தெரிந்து இருக்கும் என நினைக்கிறன்
  15. நன்றி அண்ணை உங்கள் ஊக்கத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஏராளன் உங்கள் கருத்துக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி அக்கா யாழ் களம் இயங்காமல் போக கூடாது என்பதற்க்காக நடந்த சம்பவம் ஒன்றை கதையாக எழுதினேன் நான் வேலை செய்யும் பாடசாலையில் இருந்தே எழுதுகிறேன் மீண்டும் நன்றிகள்
  16. நீர்க்கட்டணம் , மின் கட்டணம் , அடுத்தது Gas சிலிண்டர் பெற்றோல் இப்படி மீண்டும் வரிசையில் நிற்போம்
  17. அவர்கள் எங்களை படகில் இருந்து இறக்கி நிலப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் போது சந்தோசமாக இருந்தது ஆளாளுக்கு நாம் வந்து சேர்ந்துவிட்டோம். என பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க ஒருவன் வந்து கேட்டான் எந்த இடம் எந்த நாடு (அவுஸ்ரேலியாவா) என கேளுங்கள்? என ஆனால் எந்த பதில் இல்லாமல் உள்ளே செல்ல செல்ல அங்கேயும் சிறிய சிறிய கொட்டில்கள் அமைந்திருந்தன எங்களை கண்டதும் அங்கிருந்து பலர் வெளியே வந்தார்கள். அவர்களின் உடை நடை பாவனை அனைத்தையும் பார்க்க அவர்களும் இலங்கைத்தமிழர்கள் போலவே தோன்றியது பெயர்களை பதிந்த பின்னர் எங்களைப்பற்றி விசாரித்தார்கள் அவர்கள் . நாங்களும் அவர்களை பற்றி விசாரிக்க அடுக்கடுக்காக குண்டுகளை போட்டார்கள் அந்த தீவைப்பற்றி. அதுவரைக்கும் எங்களுக்கு எந்த மருத்துவ வசதிகளும் அவர்கள் செய்யவில்லை பெயர்களையும் நாடையும் பதிந்து விட்டு மூன்று பேருக்கு ஒரு கொட்டகை வீதம் தந்தார்கள் உணவு மட்டும் மூன்று வேளையும் கிடைக்கும் அதுவும் அரை அவியலாக இருக்கும் . இப்படி நாட்கள் செல்ல செல்ல எங்களுக்கு முன்னர் வந்தவர்களுக்கும் எங்களுக்கும் பழக்கமாக அவர்களுடன் உரையாட அவர்கள் வந்து 3,4 வருடங்கள் ஆவதாகவும் அது ஒரு அமெரிக்க , பிரித்தானியா நாட்டுக்கு செந்தமான தீவு எனவும் அங்கே இராணுவத்தினர் பயிற்ச்சி பெறும் தீவு எனவும் சொன்னார்கள் . அப்போதுதான் மொத்தமாக நாங்களும் ஏமாந்தது தெரியவந்தது அவர்கள் பெரிய மனவிரக்தியில் இருந்தார்கள் நாட்டுக்கு பணம் அனுப்பவும் முடியல்ல அங்கு என்ன நிலையில் இருக்குதோ தெரியல , குழ்ந்தைகள் நிலை என்னவாக இருக்குமோ என்ற நினைப்பில் மன விரக்தியில் இருந்தார்கள் . சில நாட்களில் ஒரு பெண் மொழிபெயர்ப்பாளர் வருவார் லண்டனில் இருந்து அவ மொழிபெயர்ப்புச்செய்து யார் யார் நாட்டுக்குக்கு போக போறிங்கள் என கேட்பா எனவும் சொன்னார்கள் மீண்டும் நாடா? என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் யாரும் நாட்டுக்கு செல்ல யாருக்கும் மனதில்லை நானோ குமார் அண்ணனின் கொட்டிலுக்கு போய் என்ன அண்ண இப்படி செய்திட்டியள் என கேட்க ராஜா அவுஸ்ரேலியா போனா உடனே நாட்டுக்கு அனுப்புறான். அதான் இஞ்சால பக்கம் போகலாம் என முடிவெடுத்தம் என சொன்னார். எனக்கும் பிள்ளை குட்டிகள் இருக்கு என்று சொன்னார் நல்லபடியாக இங்கவாவது வந்து சேர்ந்தோமே கவலையை விடு என சொன்னார் வந்தவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என சொல்ல என்ன செய்ய இப்ப ஊருக்கு போவமா என கேட்கிரார் அவர். இப்படி மூன்று மாதங்கள் சென்றன சாப்பாடு படுக்கை வேற ஒன்றுமே இல்லை அடுத்தநாள் அந்த மொழி பெயர்ப்பாளர் பெண்மணி வரவோ (அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்) நானும் குமார் அண்ணனும் இன்னும் 8 பேரும் ஊருக்குச் செல்ல போகிறோம் சொன்னவுடன் எங்களுக்கான பயணம் தயாராக்கப்பட்டது . இலங்கை அரசாங்கத்திற்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டது . ஒரு தொகைப்பணமும் கொடுப்பதாக சொன்னார்கள். எங்களை ஏற்றி ஒரு நிலப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பு படையினருடன் விமானநிலையம் கொண்டு சென்று சில பாதுகாப்பு பத்திரங்களை தந்து விமானத்தில் ஏற்றி இலங்கைக்கான பயணத்தை தொடர அனுமதியளிக்க இலங்கைகான எங்களது விமான பயணம் தொடர்ந்தது. பல மணிநேரப்பறப்பின் பின் இலங்கையை வந்து இறங்க நாங்கள் அனைவரும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் (10பேரும்) கைது செய்யப்பட்டு நீதிமன்றம் கூட்டிச்செல்லப்பட்டு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்படுகிறோம். அந்த செய்தி நாட்டும் நாட்டு மக்களுக்கும் தெரியவரவே எங்கள் எல்லோர் வீட்டுக்கும் தெரிய வந்திருக்கிறது. நாங்கள் படகேறிய செய்தி விசாரணைகள் ஆரம்பமாகிறது எங்கிருந்து யார்? எவ்வளவு பணம்? எங்கிருந்து சென்றீர்கள் மொத்தம் எத்தனை பேர்? என விசாரணை தொடர்கிறது புலனாய்வு பிரிவினரால் நாட்டில் ஏற்பட்ட பொருளாத பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேறினோம் என எல்லோரும் ஒருமித்த பதிலை சொல்ல வீட்டில் எங்கள் உறவினர்கள் வழக்கறிஞர்களுடன் வழக்காடி சரீர பிணையிலும் மீண்டும் நாட்டை விட்டு செல்லமுடியாது விசாரணை முடியும் வரையும் என எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறோம். வீட்டை அடைந்ததும் அந்த கிராம சேவகர், பொலிஸ்நிலையத்திற்கும் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது கண்காணிப்புக்குள் நாங்கள். நான் வீட்டை அடைந்ததும் குடும்பத்தினருக்கும் எனக்குமான மனக்கசப்புக்கள் வருகிறது சொல்லாமல் போனதற்கும் ஏதாவது நடுக்கடலில் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற அக்கறையில் அன்றிலிருந்து நான் வெளியில் பெரிதாக நடமாடுவதில்லை ஆனால் நீதிமன்றம் விசாரணை என அடிக்கடி நீர்கொழும்பு போவதும் வருவதுமாக இருக்கும் இப்படி 2 வருடங்கள் கடந்து விட்டது இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ என மனது நினைத்தாலும் என்னுடன் வந்த குமார் அண்ண மீன்பிடிக்கு சென்றவர் கடலில் மீண்டும் காணாமல் போகிறார் மீண்டும் நான் விசாரணைக்காக அழைக்கப்படுகிறேன் பொலிசாரால் இரண்டு நாட்களின் பின்னரே குமார் செல்லும் படகு முதலாளி படகு கடல் கொந்தளிப்பால் தொடர்பில்லாமல் போனது அவர்கள் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு வருகிறார்கள் என சொன்வுடனே என்னை விடுவிக்கிறார்கள். வீடு வந்ததும் அம்மாவோ தலையை தடவி நீ வராமலே இருந்திருக்கலாம் எனசொல்லி விட்டு வழக்கு முடிய பாஸ்போட்டை எடு என சொல்லி விட்டு உள்ளே செல்கிறார். நன்றி...... வாசித்து படகில் பயணித்தவர்களுக்கும் நன்றி
  18. ம் எங்கேயாவது சென்று ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை தான்
  19. ம் ரகு அண்ண தினந்தோறும் நடக்கும் சம்பவங்களை வைத்தே சொன்னேன் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலையை. ஒட்டு மொத்த இலங்கையையும் பெளத்தமயமாக்கலிலே முன் நிற்கிறார்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை காணாமல் அதாவது இழுத்தடிப்பு ஒரு புறம் நிலப்பிடிப்பு கடந்த சில நாட்களில் இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள்!!! திருகோணமலை பெரியகுளம் உச்சிபிள்ளையார் மலையில் விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அங்கிருந்த நாகதம்பிரான்சிலை தகர்த்து எறியப்பட்டிருக்கிறது . மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதியில் மீண்டும் புத்தர்சிலை வைக்கப்பட்டு இருக்கின்றது. மட்டக்களப்பு குடும்பிமலை (தொப்பிகல) சூழலிலும் புதிய புத்தர் குடியமர்த்தப்பட்டு இருக்கின்றார். யாழ்ப்பாணம் பறாளாய் முருகன் ஆலய சூழலிலுள்ள அரச மரம் பௌத்த மதத்திற்குரிய அடையாளம் என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய மீள் நிறுவல் பெளத்த மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல் எனத் தெரிவித்து கச்சல்சமளங்குளத்தில் அடாத்து விகாரை அமைத்து வருகின்ற கல்கமுவ சந்தபோதி பிக்குவும், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவரும் உச்சநீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை நடாத்தி இருக்கின்றது. குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடு நடத்த சென்ற பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவை கூட மீறி பொலிசார் கண்முன்னேயே தாக்கப்பட்டு இருக்கின்றார்கள் . திருகோணமலையில் 6,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பானமுர திலகவன்ச என்கிற பிக்கு தென்னமரவாடி மற்றும் சிங்கபுர பகுதி மக்களின் 162 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சிக்கின்றார். அதே போல சங்கமலை பகுதியிலும் காணிகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இராணுவத்தினருக்காக செம்பியன்ப்பற்று, கட்டைக்காடு, முள்ளியான் உட்பட வடமராட்சி கிழக்கு எங்கும் தொடர்ச்சியாக காணிகளை அபகரிக்க முயலுகின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அக்கரைவெளியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 1,500 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க மகாவலி அதிகாரசபை முயற்சிக்க தொடங்கி இருக்கின்றது . இந்த பகுதியில் மட்டும் 11 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் படி காணி வழங்கப்பட்டு இருக்கின்றது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து அடாவடியில் ஈடுபட்டிருக்கின்றனர். வவுனியாவடக்கு நயினாமடுவில் சீன நிறுவனம் ஒன்று சீனி தொழிற்சாலையமைக்க சுமார் 7500ஏக்கர் காணி வழங்க ஏற்பாடு நடக்கிறது. யாழ்ப்பாண தீவக நிலப்பரப்பை மத்தியரசின் அதிகார சபை கட்டமைப்புக்குள் கொண்டுவர தேவையான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டிருகின்றது . யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கர் காணியை வனவள திணைக்கள கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வரைபடம் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது . கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி் விடயம், கண்டும் காணாது விடப்பட்டுள்ளது. திரு ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற சம நேரத்தில் மேற்படி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவது போன்ற பாசாங்கைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதானது தனது நலன்களுக்கு அவசியமானதாக திரு ரணில் விக்ரமசிங்கே நினைக்கிறார். இதை எங்கள் பெரும்பாலான பிரதிநிதிகள் புரிந்து கொள்ளவில்லை . குறைந்த பட்சம் ஆக்கிரமிப்புகள் மற்றும் அத்துமீறல்களை கூட தடுக்க முடியாத வெற்று பேச்சுக்களால் என்ன பயன் என்பதையாவது சொல்ல வேண்டும்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.