Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9910
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. ஒட்டு மொத்த தமிழர்களையும் பௌத்தர்கள் என்று எழுதி எடுக்காத வரைக்கும் ஓகே அதுவரை கேள்விக்குறியே
  2. மீண்டும் பெட்ரோலுக்கும் தண்ணீருக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மீண்டும் விலைவாசி முருங்கை மரத்தில் ஏறி உள்ளது🙄🙄
  3. முல்லைத்தீவில் சிசேரியன் பண்ணிய பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்துள்ளார்கள் வயிற்றில் வலி உண்டாகி பெண் வைத்தியசாலைக்கு சென்று முறையிட ஸ்கேன் செய்து பார்த்ததில் துணி இருந்தது தெரிய வர மீண்டும் ஒப்பரேசன் செய்து துணி அகற்றப்பட்டது 😒😒
  4. ஆஹா அவக்கு ஒரு கடிதம் போட்டு அங்கு போய் சூட்டிங்ல இறங்க வேண்டியதுதான் ஒரு பதில் தான் போட்டன் திரிக்கு இப்ப எல்லோரும் லைன் கட்டுறாங்க ஆக எனக்கே முதல் உரிமை அருணாசலத்தாரை இந்தப்பக்கம் எட்டிப்பாக்க வைக்காதீர்கள் பிறகு ஓவியம் கீறினார் சோலி முடிஞ்சு போச்சு @Kavi arunasalam அவ்வளவுதான்😛😛 எதுக்கும் தூர நிற்கவும்
  5. மழை மெதுவாக கடலில் குறையவே வெளிச்சம் தெரிந்த பகுதியை உற்றுப்பார்க்கிறேன் அங்கே மணல் திடலும் காடும் போல் காட்சி அழித்தாலும் முற்றாக கண்ணுக்கு தெரியவில்லை மழை ஓய்ந்ததும் படகில் இருந்தவர்கள் அனைவரும் கண்டு கொள்கிறார்கள் அது ஒரு தீவு போலவே காணப்பட்டது. அந்த இடத்துக்கு செல்லுங்கள் அங்கே இறங்கிவிடலாம். படகை ஓட்டியவர்களோ நாம் செல்ல வேண்டிய இடம் அது இல்லை அமைதியாக இருங்கள் என சொல்ல. படகில் இருந்தவர்கள் உடன்படவில்லை சோறும் இல்லை தண்ணியும் இல்லை இனியும் பயணம் செய்ய முடியாது படகை அந்த இடத்துக்கு செலுத்துங்கள் என சொல்லி சண்டை இட்டார்கள் கடைசியில் அந்த இடத்தை நோக்கி படகை செலுத்த படகு கரையை சென்றடையடைமுடியாதவாறு பாறைகள் தண்ணீருக்கு மேலே தெரிந்தது படகில் முன்னே பாறைகள் மோதாதவாறு ஒருவர் நின்ற பார்த்த வண்ணம் படகை மெதுவாக செலுத்தி கொஞ்ச தூரம் செல்லவே. அந்த தீவில் இருந்து ஆயுதங்களுடன் ஒரு படை கரையை வந்தடைகிறது எங்களது படகு சத்தத்திற்கும் கரையை கண்டு குக்கிரலிட்ட சத்தத்திற்கும் . படகை கொண்டு வரவேண்டாம் சென்று விடுங்கள் சென்று விடுங்கள் சைகைகளை காண்பிக்கிறார்கள். ..............படகில் இருந்தவர்கள் அனைவரும் பயந்து நடுங்கினார்கள் கடல் கொள்ளையர்களாக இருக்குமோ! என ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே சீருடை அணிந்துள்ளதால் நான் உணர்ந்துகொண்டேன் அது ஏதோ நாட்டுக்குரிய தீவு எனவும் அங்கே முகாம் அமைத்திருக்கிறார்கள் எனவும் தெரிந்தது. அவர்களோ சைகை மூலம் மீண்டும் மீண்டும் இங்கே வரவேண்டாம் என சைகை காட்டிக்கொண்டார்கள். நாங்களும் விடுவதாக இல்லை கைகளை கூப்பிய வண்ணம் பல மணி நேரம் இருந்தோம். அவர்கள் எந்த சமிக்கையும் காட்டவில்லை வேற வழி என்ன செய்வது என யோசித்து படகில் இருந்த டீசல் கான்களை எடுத்து ஊற்றி நெருப்பு வைத்துக்கொள்ளப்போகிறோம் என நாங்கள் சைகை காட்ட அதன் பின்னரே அவர்கள் சிறிய படகை ஒன்றை அனுப்பினார்கள் மூவருடன். வந்தவர்கள் ஆங்கிலத்தில் பேச இங்கே ஆங்கிலத்தில் அவர்களுடன் சரளமாக உரையாட யாரும் இல்லை ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தோம் பிளீஸ் கெல் மீ ,பிளீஸ் கெல் மீ . ஆனால் உள்ளே இருந்த பெண்ணுக்கு ஓரளவு ஆங்கிலம் புரியும் என்ற படியால் அவருடன் மெதுவாகவே உரையாடினாள் அவரோ நீங்கள் இங்கே வரவேண்டாம் போதிய உணவும் தண்ணீர் டீசல் எல்லாம் தருகிறோம் ஒரு வரைபடமும் தருகிறோம் வேற நாட்டுக்கு சென்று விடுங்கள் என்றார். அவர் சொன்னதும் அவள் அதை மொழி மாற்றம் செய்து சொல்ல ஆளாளுக்கு மறுப்புத்தான் தெரிவித்தார்கள் படகில் இருந்தவர்கள். அவருக்கு நாங்கள் சொன்னது புரிந்தது. அதாவது வேற நாட்டுக்கு செல்ல மாட்டோம் என்பது. கொஞ்ச நேரத்தின் பின் தொடர்புகளை எடுத்துக்கேட்கிறார் அந்த இராணுவ வீரர் அவர் கேட்டு பல மணி நேரம் சுமார் 5 மணித்தியாலங்கள் கழித்தே பதில் வருகிறது அதுவரைக்கும் படகில் எல்லோரையும் அமர்ந்து விடுமாறும் அறிவுறுத்தல் கொடுத்து ஆட்களை எண்ணி கணக்கெடுக்க சென்னார்கள். அவருக்கு பதில் வருகிறது தொலைத்தொடர்பில் கரையில் இருந்து படகுகள் வருகிறது அந்த படகில் ஆட்களை மாற்றி மாற்றி ஏற்றுகிறார்கள் நாங்கள் கொண்டு சென்ற படகு பழுதடைந்த படகாக மாற்றப்படுகிறது. கரையை எங்கள் கால்கள் தொடும் போதே ஊசலாடிய உயிர்கள் எல்லாம் எல்லோர் உடல்கள் மீது மீள் சேர்கிறது அதுவரைக்கும் அது எந்த நாடு எந்த தீவு என ஒருவருக்கும் தெரியவில்லை. அதற்கிடையில் ஊரில் படகில் சென்றவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக செய்தி பரவி இருக்கிறது. தொடரும்...... @suvy ஒரு பகுதி மீதமுள்ளது 🚢🚢🚢
  6. நன்றி சுவி அண்ணா உங்க ஆதரவுக்கும் நன்றி அண்ண உங்கள் ஆதரவுக்கும் நன்றி சிறிய மகள் நலம் என்ன சிவராத்திரியாக இரவு கழிகிறது நடந்த சம்பவம் கதையாக வருகிறது நன்றி அக்கா
  7. நல்லது உங்க அதிஸ்ரம் அப்படி இங்க சுத்து மாத்து தான் அதாவது நேரலையாக குலுக்கல் இல்லை அதுதான் பிரச்சினை ம் எந்த நாளும் இல்ல எப்பவாவது ஒரு நாள் அது போக விலை கூட்டியதால் எடுப்பதில்லை நான் ஆனால் முஸ்லீம்கள் அள்ளி அள்ளி எடுக்கிறார்கள்
  8. அந்த புள்ள பயப்படாம இருக்கணும் ஆண்டவரே எந்த மணியை சொல்கிறாரோ தெரியலயே😛 அதாவது நெடுக்கர் விவரமானவர் அலசி ஆராய்ஞ்சு தான் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் நிழலி அவரே வந்து ஆஜராகி உள்ளார் அப்ப போட்டோவையும் இணைப்பார் இணைத்தவுடன் திரிக்கு பூட்டு போட வேண்டியது தான் விவரமான ஆளுயா 😛 இதுக்குள்ள இது வேறயா 😛😛
  9. அப்படியில்லை ஆண்களுக்கென்றால் உடன ஓடி வந்து உள்ள புகுந்து உழக்கிவிட்டு போவார்
  10. பெரிய இடம் போல அதான் மெதுவாக மறைக்கப்பார்க்கிறார்கள் சிறுமி துன்புறுத்தப்பட்டட்காக சொல்லப்படுகிறது பாலியல் ரீதியாக
  11. கடைசில சர்ச் ஒன்றும் கோவில் ஒன்றும் கட்டணும் போல திரியுல இப்படித்தான் நாம இழுபட்டு கிடக்கிறம் பிரச்சினைக்குரிய தீர்வை காணாம இன்னொரு பிரச்சினையை கொண்டு வந்து சொருகுவது பிள்ளைகளூக்கு விருப்பமான பாடத்தை பிள்ளையை படிக்க விடுவதில்லை பெற்றோருக்காக பிள்ளை படிக்க வெளிக்கிட பல்கலைக்கழகத்திற்கும் ,கல்லூரிக்கு செல்வதற்குமான ரிசல்ட் கிடைக்காமையால் பிள்ளை அலைய வேண்டிய பிற தேவைகளுக்கு அடிமையாக வேண்டியது விருப்பமான பாடங்கள் தற்போது இணைப்பாடங்களை அதிகமாக சேர்த்திருக்கிறது ஆனால் படிக்காமல் இஞ்சினியர் , வைத்தியர் என்ற கனவுக்குள் பிள்ளையை இறக்கி விடுவது இன்று வரைக்கும் பல்கலைக்கழகத்தில் இறந்த பிள்ளைகளின் எண்ணீக்கையை வைத்துப்பார்த்தால் தெரியும் , புரியும் இரு நாட்களுக்கு முன்னர் பட்டம்பெற்ற மாணவி உயிரிழந்தார் தந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிரச்சினையால் இது எத்தனை பேருக்கு தெரியும்
  12. உங்களுக்காகவே எழுதணூம் போல தோன்றுகிறது நன்றி அண்ண ஊக்குவிப்புக்கு 😍 இப்படி பயணம் தொடர அடிக்கடி அடிக்கடி எழுந்து பார்ப்பதும் ஏதாவது ஊரோ, மலையோ , காடோ தெரிகிறதா என அழுவதுமாக பார்த்துக்கொண்டே இருக்க‌ படகு எஞ்சின் மொத்தமாக பழுதாகி விடுகிறது. என்ன செய்வதென ஒன்றும் புரியவில்லை .குமார் அண்ணை சந்திக்க ஒன்றூ மெசின மொத்தமா பிரிக்கணூம் , வெல்ட்ட மாத்தணூம் ஒயில மாத்தணூம் என்கிறார் அது செய்யவே ரெண்டு நாளுக்கு மேல் ஆகிடும் போல என்கிறார் யாரிட்டையும் சொல்லாத எனவும் சொல்லி விட்டார் நானோ உங்கள நம்பி வந்தன் இப்படி மொத்தமா கொண்டு நடுக்கடலில் விட்டு விட்டுத்தீங்களே என நான் அழ அழாதே சரி பண்ணிருவன் உனக்கு என்மேல நம்பிக்கை இல்லையா என அவர் கேட்க பதில் சொல்ல முடியாமல் விம்மி விம்மி அழுகிறேன் நான். படகு நங்கூரமிடப்படுகிறது உதவிக்கு யாரும் இல்லை எந்த கப்பலும் கண்ணில் படவில்லை படகில் உள்ளவர்கள் படகு நிற்பதைக்கண்டு ஏன் படகு நிற்கிறது என்ன பிரச்சினை என கேட்க சிறிய பழுதாம் சரி செய்ய நிறுத்தி உள்ளார்கள் என சொல்கிறார்கள் என சொன்னேன் அன்றைய‌ நாள் படகு திருத்தி முடியவில்லை எல்லோர் மனதிலும் கலவரம் எழ இறந்து விடுவோமோ! என்ற அச்சம் உடல் முழுவதும் மொத்தபேரையும் தொற்றிக்கொள்கிறது அடுத்தநாள் படகு கொஞ்சம் தயாரானது போல இருந்தாலும் எஞ்சின் ஆரம்பித்து ஆரம்பித்து நிற்கிறது அதுவரை அந்த படகு பிணம் இல்லாத வீடு போல சத்தம் இல்லாமல் அழுது கொண்டிருந்தது . பகல் ஒரு மணி அளவில் படகு தயாரானது எங்கே இருக்குறோம் எந்தக்கடலில் இருக்குறோம் எதுவும் தெரியவில்லை படகு பயணிக்கிறது ஒரு சந்தோசம் அந்த சந்தோசத்திற்கு சந்தோசத்தை எப்படி சொல்வதென எனக்கு புரியவில்லை சமைக்க உணவுகள் இல்லை இருந்த உணவும் கஞ்சியுமாக 20 வது நாளை எட்டுகிறது படகு. பயணம் பருப்பை காச்சி குடிக்க ஆரம்பிக்கிறோம் அரிசி இல்லை மிஞ்சியது பருப்பு மட்டுமே மரக்கறி இல்லை படகு நிற்கும் நேரத்தில் பிடித்த சிறிய மீன்கள் அதையும் உப்பு தண்ணீரில் அவித்து சாப்பிட ஆரம்பித்தோம். கடல் பயணம் எவ்வளவு கொடுரமானது என அனுபவம் பாடமாக அமைகிறது இனி யார் யார் மெதுவாக இறக்கப்போகிறார்கள் என்ற கேள்வி அடுத்து எழுகிறது சாவைத்தழுவும் பயணங்களே இனி அமையும் என எண்ணி என் மனது பதபதைக்கிறது அப்போது தொலைவில் வானம் இருள்கிறது அடுத்த சோதனை எங்களை மெதுவாக தொட இருக்கிறது அப்போதுதான் பக்கத்தில் இருந்து பார்க்கிறேன் மழைக்கு நீரை எடுக்கும் காட்சி மழை வர போகிறது என்ற சந்தோசம் வந்தாலும் காற்றினால் எழும் அலைகளுக்கு படகு என்ன ஆகப்போகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. மழை மெதுவாக கடலினுள் பெய்து வருவது தெரிகிறது மழை படகை அடைந்ததும் அந்த நீர் உட‌ல் மீது படும் போது ஆனந்தமாக இருந்தது எங்கள் கண்ணீருடன். பொலித்தீன் பைகளை வைத்து நீரை சேகரிக்க மின்னல் உண்டாகி சத்தம் காதை கிழிக்க சில வேளைகளில் வெட்ட வெளியில் மின்னல் அடிக்கலாம் உள்ள வாங்க என சொல்கிறார்கள் படகை செலுத்துபவர்கள் ஆனால் இவர்களோ போற உயிர் எங்கு போனால் என்ன? அவர்களுக்கு பதிலை சொல்லி விட்டு மழையில் நனைகிறார்கள் அந்த நேரத்தில் கரை எது கடல் என எது என தெரியவில்லை எங்களை சுற்றி மொத்தமாக தண்ணீர் நிறைந்த இருள் காடுகளாகவே தெரிந்தது அப்போது அந்த மழைக்குள் பல மைல் தூரத்தில் வெளிச்சம் ஒன்று என் கண்ணுக்கு தெரிந்து அணைகிறது தொடரும்...............
  13. ஒரு தடவை போய் சாப்பிட்டு ருசியை சொல்லவும்
  14. இலங்கையில் தற்போது டிக்கட் ஒன்று40 ரூபாவாக உயர்த்தியுள்ளார்கள் இரண்டு டிக்கெட் 44கோடியை பரிசாக வந்துள்ளது ஆனால் இன்னும் விழவில்லை யாருக்கோ அதிஷ்டம்?? எனக்கு 40 தவிர விழுவதில்லை இப்படித்தான் நம்ம அதிஷ்ரம் சுத்துகிறது
  15. அவர் ஈழம் பிடிக்க நினைக்கிறார் இங்க உள்ளவன் நாடு வேண்டாம் நல்ல நிம்மதியான வாழ்க்கை வேண்டும் என் கிற மனநிலையில் இருக்கிறான் என இன்னும் பலருக்கு புரியவில்லை புரியப்போவதுமில்லை . இங்கே அரசியல் வாதிகள் புண்ணை சொறிந்துகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பிரச்சினைக்கு தீர்வு இன்னுமொரு பிரச்சினைதான் இங்குள்ள மக்களுக்கு சிங்கள அரசியல் வாதிகள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் .
  16. மிக்க நன்றி இருவருக்கும் அன்றைய நாள் படகு ஓரத்தில் பொலித்தீனினால் ஒரு மறைப்பு கட்டப்பட்டது காலைக்கடன் கழிக்க‌ படகும் நகர்கிறது சர்வதேச கடலுக்குள் நுழைந்து விட்டோம்........ கவலை இல்லை இனிமே என்கிறார்கள் படகை செலுத்துபவர்கள். ஆனால் வாந்தியும் தலைசுற்றும் நின்றபாடிலில்லை மதியம் வரை ஓடிய படகை நிறுத்திவிட்டு சமைக்க ஆயத்தமானார்கள் நங்கூரத்திற்கு சீ அங்கர்( Sea Anchor) என்றூ சொல்லப்படுகின்ற பரசூட் வடிவிலான ஓர் பொருளை (படங்கினால் ஆன ஒன்றை) கடலிலில் மிதக்க விட படகு ஆடாமல் அசையாமல் இருந்தது. படகு எஞ்சினும் தனது சூட்டை மெதுவாக குறைத்துக்கொள்கிறது. சோறும் கறியும் சமைத்தார்கள் ஆனால் சாப்பிட யாருக்கும் மனதில்லை காரணம் வாந்தி. இருந்தாலும் சாப்பிட்டே ஆகவேண்டும் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாட்டை சாப்பிட தொண்டை நோவு அனைவரையும் தடுத்தது நீரே அதிகம் தேவைப்பட்டது ஆனால் நீரை அதிகம் பாவிக்க வேண்டாம் என சொன்னார்கள் குளிப்பு இல்லை பல் துலக்கல் இல்லை வறண்ட உதடு உப்புக்காற்றில் பிசுபிசுத்துப்போன உடல்கள் மரத்துப்போன தலைமுடி இறந்து கொண்டிருக்கும் நம்பிக்கையற்ற மனது இப்படி கடல் பயணம் தொடர்கிறது எல்லோர் மனதிலும் ஏன் வந்தோம்? இலங்கையில் இருந்து செத்து இருக்கலாம் என்ற மனநிலை தோன்றியது. இப்படி பகல் இரவு படகு ஓட்டமாகவே எங்களுக்கு நகர்ந்தது நாட்களும் நகர்கிறது. என்னை தவிர மற்றவர்களை கூட்டி வந்த ஏஜன்சிக்கும் வந்தவர்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது அதாவது 15 நாட்களில் செல்லலாம் என சொல்லியே கூட்டி வந்திருக்கிறார். ஆனால் கடல் பயணத்தை சொல்ல முடியாதல்லவா முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் கடல் வாழ்க்கையும். நானும் அப்போதுதான் கடலில் இறங்கி தங்கி நின்று மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்க்கையையும் எண்ணிப்பார்க்கிறேன் எத்தனை கப்பல்கள் குறுக்கே செல்கிறது அதிலிருந்து பாதுகாப்பாக வலை, வள்ளங்களை காப்பாற்ற வேண்டும் காற்று , மழை புயல் என எத்தனை சாவால்களை கடந்து அவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள் சிலவேளை புயலில் சிக்கி , படகு பழுதாகி காணாமலும் போகிறார்கள். குறுக்கே எத்தனை கப்பலகள் போனாலும் சைகை காட்டியும் அவர்களும் காணாதவர்கள் போல கடந்து விடுகிறார்கள் . நாட்கள் செல்ல செல்ல உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது .எஞ்சினும் அடிக்கடி பழுதாகி விடுகிறது எந்த நேரமும் இயங்கிக்கொண்டிருப்பதால். அப்போது படகில் இருக்கும் அனைவருக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்படுகிறது இனிமேல் ஒரு நேரக்கஞ்சிதான் கிடைக்கும் தண்ணீரும் அதிகம் இல்லை அதனால் தண்ணீரை இன்னும் சிக்கமாக பாவியுங்கள் என. படகும் அடிக்கடி பழுதாகி விட எங்களுக்குள் ஏதாவது நாட்டுக்கு செல்லலாம் என நினைத்திருந்த கனவு மெதுவாக கலைகிறது எங்கோ காடோ அல்லது மணல் மேடோ தெரிந்தால் அங்கே இறங்கி இறந்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டோம். (கோபம் மட்டும் கொந்தளிக்கிறது கடல் போல) தொடரும் ................................
  17. யுத்தம் முடிவடைந்து இத்தனை ஆண்டுகள் நாம் எங்கு நிற்கிறோம் ? ஏதாவது பெரிய மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதா ? எ ப்போது எம் மக்களுக்கான போராட்டம் முடிவுற்றதோ அன்றிலிருந்து எனது நாடு , எமது நாடு என்ற சிந்தனை எனக்கு இல்லை மாறாக இங்கே பிறந்து இருக்கிறேன் இறக்கும் வரைக்கும் வாழ்ந்துவிட்டு போகலாம் வாடகைக்கு இருப்பது போலவே இப்ப நான் ஊருல காதால் கேட்க முடிந்தது தற்போது அநேக தாதியராக இருக்கும் பலர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் . வெளிநாட்டில் வயோதிபர்களை பாராமரிப்பதாக கேள்வியும் பட்டேன் காரணம் எம் (பிள்ளைகள்) இளைய சமுதாயமாவது உலகில் எங்கோ ஓர் மூலையில் நல்ல பழக்கங்களையும் நல்ல பிரஜைகளாகவும் ஆகட்டும் அவர்கள் எதிர்காலமாவாது நன்றாக இருக்கட்டும் என சொல்கிறார்கள் இப்படி பலர் சிந்தனையும் இப்ப வெளிநாடுகளுக்கு செல்ல முயல்பவர்கள் லிஸ்ட் எம்பசிக்களிக்களில் நிற்பவர்களை நீங்கள் பார்த்தால் புரியும். நீங்க சொன்ன நம்ம நாடு அதெல்லாம் போய்விட்டது வீடு வளவு காணிகளை இழந்தால் இங்கே அகதிதான் இது இன்னும் பல யுகங்கள் போகும் அதுவரைக்கும் என்ன செய்ய முடியும்
  18. முடியுமாக இருந்தால் ஈழம் மீதும் அவ்வளவு அக்கறை உள்ள உலகில் உள்ள பெரும் பணக்காரர்கள் இணைந்து ஒரு தீவை வாங்கி அங்கே இங்குள்ள மக்களை எடுத்து குடியேற வைக்க முயலுங்கள் ஏனென்றால் இங்குள்ள சனம் நாட்டை விட்டு வெளியேறவே எத்தனிக்கிறது . சிங்களமும் எமக்கு தீர்வை தராது எம் அரசியல் வாதிகளூம் அதை பெற்றுக்கொடுக்கவோ, மாட்டார்கள் , அதை சிங்கள் மக்களும் விரும்ப மாட்டார்கள் தமிழருக்கு தீர்வை தர உதாரணமாக குருந்தூர் மலை, மனித புதைகுழிகள் எல்லா விசாரணைகளும் , நீதிமன்ற தீர்ப்புக்களும் சான்று நீங்கள் இப்படித்தான் இலங்கையில் வாழ முடியும் என சிங்களம் எமக்கு சொல்லாமல் சொல்கிறது. மாறாக மீண்டும் போராட வெளிக்கிட இங்க பொடியன்களும் இல்லை போராட போராட்ட எண்ணங்களும் மக்கள் மனதில் இல்லை . சிந்தனை செயல் அத்தனையும் மாற்றப்பட்டு உள்ளது. பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலை போல
  19. திரும்பவும் முதலில இருந்தா ?? நான் நினைத்து இருந்தன் ரகுநாதன் கொஞ்சம் விபரமானவர் ஈழம் பற்றிய இப்பவரைக்கும் உள்ள தகவல்கள் தெரிந்தவர் என ஆக நீங்களும் கப்பல் பார்த்த ஆள் தான் போல கிடக்கு சரி ஆரம்பிச்ச பிறகு சொல்லுங்க அதுக்குள்ள இங்குள்ள ஒட்டு மொத்த தமிழ் சனமும் வெளில போயிடுமோ என்ற கவலை எனக்கு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.