Everything posted by Sabesh
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இல்லை. அவர்களின் மனநிலை மற்றும் இழுத்தடிப்பு பற்றி கூற வந்தேன். நாங்கள் விடையங்களை நேரடியாக கதைத்து செய்ய நினைப்போம் ஆனால் அங்கிருப்பவர்கள் அப்படியல்ல. ஒரு விடையத்தை நேரடியாக சொல்ல கூட மாட்டார்கள். அவர்கள் சூட்சமமாக காய் நகர்த்துவார்கள். அப்பாவித்தனமாக இருக்கிறார்கள் போல வெளிப்பார்வைக்கு தெரியும்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
வீட்டுக்கு வீடு வாசற்படி தான்...உங்களின் கோபம் புரிகிறது. அதுவும் ஒரு முக்கால் பரப்புக்காக
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
உண்மையில் நேரடி அனுபவம் இல்லை. மற்றவர்களின் கருத்துக்கள், தற்போது வரும் யூடூபில் பார்க்கும் காணொளிகளை வைத்து ஒரு ஊகமே . சும்மா இருந்த காணிகளை அதன் உரிமையாளரிடம் அனுமதி பெற்று செய்தும் அடிதடியா?
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இனி இந்த யூடூபில் வரும் விடயங்களையும் நம்ப முடியாது போலுள்ளது. சில ஒருங்கிணைத்த பண்ணைகளை பார்த்தது அங்கு செல்லும் போது சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. உங்களின் அனுபவத்தை பார்த்த போது வீண் கற்பனைகள் இல்லாதிருப்பது மனசுக்கும் உடலுக்கும் நன்மையென்று நினைக்கிறேன். டென்மார்க் அல்லது நோர்வே பெண் ஒருவர் வன்னியில் ஒரு பெரிய பண்ணை நடத்துவதாக கிட்டடியில் ஒரு யூடூபில் பார்த்தேன். அது பற்றி நீங்கள் கேள்வி பட்டீர்களோ? காணி வாங்கும் விடையத்தை நீங்கள் கைவிட்டது நல்லது ... அங்கு முழுமையாக சென்று இருக்கும் வரைக்கும் காணி வாங்குவது வீண் மன உளைச்சல். ஒருங்கிணைத்த பண்ணை வைக்க விரும்பினால், நிறைய தோட்ட காணிகள் வெறுமனே தரிசுபத்தி இருக்கிறது. ஒரு ஐந்து பத்து வருட குத்தகைக்கு எடுத்து செய்து பார்க்கலாம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அங்கு சென்று இருப்பதென்று முடிவானால், இது எழுத்தில் தேவை இல்லாத விடையம் என்று நினைக்கிறேன். வீண் வம்பு ;)
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
எங்களுக்கு சலிப்பு எதுவும் இல்லை... நீங்கள் விலாவரியாக எழுதுங்கள். வாசிக்க ஆர்வமாகவும் பிரயோசனமாகவும் உள்ளது. எனக்கும் உங்களை, இணையவனை போன்று அங்கு போவது பற்றிய சிந்தனை இருக்கிற படியால் பல விடையங்களை அறிய முடிகிறது.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இவர் இதுக்கு சரிவர மாட்டார். எடுத்த எடுப்பிலேயே ஐயாயிரம் பத்தாயிரம் ஆர் குடுப்பினம். முதல் அங்கே போய் அப்படி செய்ய வேணும் இப்பிடி செய்ய வேணும் என்று நீங்கள் பெரிய சமூக சேவையாளி போல காட்ட வேண்டும். அங்கு இருக்கும் குறைகளை புதிதாக நடப்பது போல கூற வேண்டும். ஒரு பெரிய காணி இருக்கு நிறைய பேருக்கு வேலை குடுக்கலாம் ஆனால் திருத்த வேண்டும் என்று ஒரு ஐநூறு ஆயிரம் வாங்க வேணும். 3 மாதத்தில் திருத்திய காணிக்குள் நரி வருது எலி வருது எண்டு சுத்தி அடைக்க ஆயிரம் இரண்டாயிரம் எண்டு வாங்க வேண்டும். பிறகு கொஞ்ச படங்களை போட வேணும் ... பக்கத்து தோட்ட படமென்றாலும் பரவாயில்லை இதை இன்னும் பெருசாக்க உளவு இயந்திரம் வேணும் சிறிய கிண்டி வேண்டும் என்று ஒரு ஐயாயிரம் ஆறாயிரம் வாங்கி பிறகு அடிச்ச வெளிக்கு பெயிண்ட் அடிக்க வாகன பராமரிப்புக்கென்று புதிதான ஆர்வலர்களிடம் ஒரு ஐநூறு ஆயிரம் வாங்கி இப்பிடி படிப்படியா 2 வருடத்தில் இருபதாயிரம் முப்பதாயிரம் pounds ஐ வாங்காமல் எடுத்த எடுப்பிலேயே .... நீங்கள் இதுக்கு சரி வர மாட்டீர்கள்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
உங்கள் இன்றைய பதிவை வாசிக்க ஆர்வமாக வந்து அங்கு உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டது சற்று மன இறுக்கத்தை கொடுக்கிறது. மறு பக்கத்தில் சிறிது சந்தோசம் காரணம் அங்கு உள்ளவர்களில் 99% பொறுப்புணர்ச்சியோ, உழைத்து முன்னேற ஆர்வம் அற்றவர்கள் என்று நான் விவாதிக்கும் கருத்துக்கு வலு சேர்ந்திருப்பது உங்கள் அனுபவம்.
-
தையல்கடை.
சுவி அண்ணா, அடுத்த கதையை பின்னத் தொடங்குங்கோ :)
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
அது உங்களின் வயது, அனுபவம். அவர்களும் எதிர்காலத்தில் இந்த அனுபவத்தினை பாடமாக வைத்து அதற்கேற்ற முடிவுகள் எடுப்பார்கள். வயது போனாக்களின் இம்சை பெரும் இம்சையா இருக்கு 🤣
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
எனக்கு இந்த சிந்தனை/கனவு 10 வருடங்களுக்கு மேலாக இருந்தது. இதை அப்பப்போ மனைவி, நெருங்கிய நண்பர்களுடன் பகிரும்போது அங்கை போய் எண்ணத்தை செய்ய போறாய்... நடைமுறைச்சாத்தியமானதை கதை என்ற பதில்களுடன் இப்ப கதைக்கலாம் ஆனால் அந்த நேரத்தில் கால மாற்றத்தில் எதுவும் நடக்காது என்ற பதிலும் வந்தது . எனக்கும் உங்களைப்போலவே சிந்தனைகள் இருந்தாலும் எனது ஊரில் வசிப்பிப்பதே ஆர்வமாக இருந்தது, மற்றும்படி, அனைத்தும் நீங்கள் கூறியது போலவே அமைதியான பெரிய காணியில் சிறிய அடக்கமான வீட்டுடன் மரங்களுடன் சோலையாக வாழ்ந்து, முடிந்தால் கல்வி மேம்பாட்டுக்கு தேவையானவர்களுக்கு ஆர்வமானவர்களுக்கு உதவுதல். பத்து வருடங்களின் பின்னர் எனது மனைவிக்கு நான் அங்கு போய் இருப்பேன் என்ற நம்பிக்கை கூடுதலாக இருக்கிறது. நண்பர்கள் சிலர் உறவினர்கள் சிலர் தாங்கள் அங்கு போய் அநேகமான பகுதியை வாழ்ந்து அனுபவிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டனர். எனக்கு என்னும் சிறிது காலம் இருப்பதால் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. நான் திடமாக அங்கு செல்லும் வரை அங்கு எந்த ஏற்படும் செய்வதாக நோக்கமும் இல்லை. ஆனால் இப்போது முட்டுக்கட்டை போடுவது பிள்ளைகள்.... என்னோட இருக்க வேணும் உன்னோட இருக்க வேணும் என்று போட்டி. அங்கை போக வேண்டாம் வேணுமானால் மூன்று மாதம் மட்டுமே போகலாம் என்பது அவர்களின் தற்போதைய கருத்து. அவர்களுக்கு பதின்ம வயது என்பதால் ஆழம் புரியாத வயது. இருபதுகளுக்கு வந்ததும், எனது தொல்லை தாங்காமல் அவர்களே துரத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
உண்மை தான் கட்டணம் அறவிடுகிறார்கள் ஆனால் துளியும் துப்பரவு இல்லை
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
இன்று தான் இப்பதிவைப் பார்த்தேன் சிறி அண்ணா.. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் விபத்து பற்றி எழுதியபோது, விபத்தை ஏற்படுத்தியவன் மிகவும் மனம் வருந்தியதாக நீங்கள் எழுதி வாசித்தது போல உள்ளது. எனது அபிப்பிராயம் அவனுக்கு குற்ற உணர்வு. நானும் எந்த வித எதிர்பார்ப்புமின்றி எதாவது உதவிகள் அல்லது யாரையாவது மன்னித்து விட்டு, பின்னர் அவர்கள் அதை மதிக்காது, அல்லது அல்லது அதை பொருட்படுத்தாது கடந்து செல்லும் போது பயங்கர கோபம் வரும்... அது மனித மனித இயல்பு போல... எந்த வித எதிர்பார்ப்பும் இல்லது பெருந்தன்மையாக செய்திருப்போம். இப்போதெல்லாம் அப்படியானவர்களை கடந்து செல்ல முயற்சித்து வெற்றியும் கண்டு இருக்கிறேன் மன உளைச்சலும் பட்டிருக்கிறேன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
பம்பாய் கொழும்பு இல் உங்கள் போன் ஐபாட் தப்பி வந்தது பெரிய விடையம் தான்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
கையில் கொண்டு செல்ல நாங்கள் நினைத்திருக்கும் சிறிய luggage ஐ நான் கொடுப்பதில்லை காரணம் அதில் தான் முக்கியமான பொருட்களை வைத்திருபப்து. சும்மா கைய விசுக்கி கொண்டு சிறிய பாக் பேக் உடன் போக விருப்பமென்றாலும், எது எங்கே வைத்திருக்கிறோம் என்றே தெரியாது என்பதால் கொடுக்க விரும்புவதில்லை. உங்களின் பதிவின் பின்னர், அதையும் செக்கின் பண்ண தயாராக செல்ல வேண்டும்
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
சிறப்பான அனுபவ/பயணப் பதிவு ஈழப்பிரியன் அண்ணா. கோடை கால வாகன பயணத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வெளிக்கிடுவது வளமை. ஆனால் பனி காலங்களில் ஓரளவு ஏற்பாடுகள் இருக்கும், குளிருக்கு போர்க்கவென, மெழுகுதிரிகள், லைட்டர், சிறிய சவல், பூஸ்ட்டர் கேபிள், அது மாதிரி.
-
வெள்ளித் தேரோட்டி...
வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் ஆகுமென்ற நம்பிக்கையுடன்...
-
தையல்கடை.
அருமையான தையல் சுவி அண்ணா...இன்று தான் முழுவதுமாக வாசித்து முடித்தேன். நன்றி அண்ணா
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இதென்ன கேள்வி... ஆறு மாதமாய் எவ்வளவு சுதந்திரமாய் இருந்திருப்பினம்
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
சா... என்ன ஒரு எழுத்து சுவி அண்ணா....👌 முதல் பகுதியை பார்த்தது நீளமாக இருக்கு, இது நமக்கு சரி வராதென்று நினைத்த படியே வாசிக்க ஆரம்பித்து, 12 பகுதிகளையும் ஒரே மூச்சில் வசித்தது விட்டேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு படம் பார்த்தது போன்ற உணர்வைத் தந்து விட்டீர்கள். இயல்பிலேயே பழிவாங்கும் (revenge) மனஇயல்போ என்னமோ இறுதி முடிவு பிடிக்கவில்லை. இறுதியில் பாவப்பட்டது தாயம்மா தான் 😒
-
கருத்து படங்கள்
வடக்கிலிருந்து கையால் குப்பை தொட்டிக்குள் போடுவதிலும் பார்க்க தெற்கில் இருந்து காலால் உதைத்து குப்பை தொட்டிக்குள் தள்ளினால் இன்னும் சிறப்பு
-
பாவத்தின் சம்பளம்
மிகவும் சிறப்பான கதை .... மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் அந்த கிழிந்த பக்கங்களில் என்ன இருந்திருக்கும் என்ற குடைச்சல் தான் ....
-
ஐம்பதில் ஆசை
ஒரு நாளுக்கு மூன்று அவித்த முட்டைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கே... இதில குறைவான உணவு என்று வேற 😉
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
பெட்டிக்கை சுடாமல் கடகத்துக்கை சுட்டு இருக்கிறார் 😉
-
ஐம்பதில் ஆசை
இறுகி இருப்பது போன்ற உணர்வு என்றால் ஸ்ட்ரெட்சிங் காணாது என்று நினைக்கிறேன்