Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Sabesh

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,198
 • Joined

Everything posted by Sabesh

 1. ஓரளவு தங்கள் தேவைகளை தாங்களாகவே நிவர்த்தி செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு ஒரு சிறு வருமானம் ஈட்டக்கூடிய கைத்தொழில்கள் பற்றிய கலந்துரையாடலும், அவர்களுக்கு அதில் ஆர்வமும் ஊக்கமும் இருப்பின் அதற்கான வழிவகைகள் செய்து கொடுக்க முயற்சிக்கலாம்.
 2. முயற்சி வெற்றி பெற்று எந்த விதமான தடைகளுமின்றி பயணிக்க வாழ்த்துக்கள். மேலே பலர் கூறியது போல நிறைய நடைமுறைச்சிக்கல் ஏற்படும். உதாரணமாக என்னை முன்னிறுத்தவில்லை அவரை முன்னிறுத்தவில்லை (பேர் புகழுக்கு ஆசைப்படும் ஒரு கூட்டம்) எப்போதுவுமே இருக்கும். அதன் ஒரு அங்கம், சிபாரிசுகள் வரும். தங்கள் சிபாரிசு செய்த ஒருத்தருக்கு உதவி செய்யவில்லை என்றால் கோபம் வரும். அதுவே மற்றவர்களை நேர்மையற்றவர்கள் போல வெளிக்காட்ட முன்னிற்பார்கள். பயனாளிகளை தெரிவு செய்யும் போது, சிபார்சுகளைத் தவிர்த்து, தேவையின் அடிப்படையில் ஒரு குழுவாக (9 பேரில் 5 பேர் போன்று) பனையளிகளைத் தெரிவு செய்வது அவசியம். அடுத்தது முக்கியமானது: பெரிய அளவில் உதவி வழங்குவதாகவும் ஆனால் தங்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்று சில திணிப்புக்கள் வரும். இவைகளுக்கு ஆரம்பத்திலேயே தெளிவான ஒரு யாப்பு, வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம். பலர் கூறும் இன்னொரு கருத்து வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது. இது தனிப்பட்ட உதவிக்கு பொருந்தும் ஆனால் ஒரு அமைப்புக்கு பொருந்தாது. பயனாளிகளை பொதுவெளியில் அடையாள படுத்தக் கூடாது என்று போர் கொடி தூக்கப்படும். என் அனுபவத்தில் அடையாள படுத்தத்தாமல் விடுவது பல பிரச்சனைகளுக்கு தொடக்கப் புள்ளி. உதாரணம்: ஒரு பயனாளி பல இடங்களில் உதவி பெறுதல், தெரிந்தவர்களுக்கு மட்டும் உதவி வழங்கியமை போன்ற குற்ற சாட்டு போன்றவை.
 3. ஒரு நல்ல குக்கிங் சணலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. கவனிக்காமல் விட்ட திரியை திண்ணையில் எழுதி கவனத்தை இங்கு திருப்பிய நிழலிக்கும் நன்றி
 4. கண்மணி அக்கா, தமிழினி குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 5. 2 வயது பிள்ளை தனியாக வனகங்களுக்குள் ஓடினால் அவர்களின் உயரத்திற்கு சரியாக தெரியாது. பெற்றோரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம். 2 வயசு பிள்ளையை எப்பவும் கையைப் பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும். இந்த விபத்து பெற்றோருக்கும், அந்த வாகனத்தை ஒட்டியவருக்கும் வாழ்க்கை முழுவதும் மனதில் வலியையும் , கவலையையும் கொடுக்கும்.
 6. யாயினி , உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் :(
 7. உண்மையாக கூட இருக்கலாம் ஆனால் மீடியா காரர் "இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். தொண்டரும் ஆவார்" இதை செருகி விட்டதால், அந்த முதியவரின் பெருந்தன்மை கேள்விக்கு உள்ளாகி விட்டது
 8. நாங்கள் 40-50 வைத்துக் கொண்டே பேசாம இருக்கிறோம்... இவர்கள் 1-2 வைச்சு கொண்டு கொக்கரிக்கிறார்கள் 3 நாட்கள் பூட்டி வைச்சு என்ன பலன்?
 9. மொத்தத்தில் புலம்பெயர்ந்து இருப்பவர்கள் எதிர்பார்ப்பதை எழுத மாட்டிங்களா? அப்போ உங்களுக்கு இங்கு எதிரிகள் தான் அதிகம் இருப்பார்கள்
 10. "நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம்" இதைப் பார்த்தவுடன் நானும் இதைத்தான் நினைத்தேன். மலேசிய கம்போடியா பக்கம் ஹோட்டல் வாசலில் எழுதியிருப்பார்கள் துரியன் பழம் இந்த பக்கம் வர கூடாது என்று... ஆனாலும் சாப்பிட்டு பார்க்க வேண்டுமென்று தெருவோர கடையில் வாங்கி அதிலேயே சாப்பிட்டோம்... சொல்லிக் கொள்ளுற அளவுக்கு சுவை இல்லை. எங்கள் பலாப்பழத்திற்கு கிட்டவும் வராது .
 11. மிகவும் சிறப்பான கதை .... மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் அந்த கிழிந்த பக்கங்களில் என்ன இருந்திருக்கும் என்ற குடைச்சல் தான் ....
 12. ஒரு நாளுக்கு மூன்று அவித்த முட்டைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கே... இதில குறைவான உணவு என்று வேற
 13. பெட்டிக்கை சுடாமல் கடகத்துக்கை சுட்டு இருக்கிறார்
 14. இறுகி இருப்பது போன்ற உணர்வு என்றால் ஸ்ட்ரெட்சிங் காணாது என்று நினைக்கிறேன்
 15. அவ்வளவு நேரமாக பிள்ளையை காணவில்லை என்றால் உடனடியாக அப்பாடசாலை மற்றும் பாடசாலை பேருந்து போக்குவரத்து சேவையை தொடர்பு கொள்ளாமல் பிள்ளையை தேடி இருக்கிறார்கள். இங்கும் முன்னொரு போது குறித்த நேரத்தில் பிள்ளை வீட்டுக்கு வரவில்லை என்றது பெற்றோர் பாடசாலைக்கு தொடர்பு கொண்டு குறித்த பாடசாலை பேருந்து போக்குவரத்துக்கு சேவைக்கு தொடர்பு கொண்ட பொழுது உடனடியாக பேருந்துகள் தரித்து வைக்கும் இடம் சென்று பிள்ளை பின் இருக்கையில் தூங்கி எழுந்து இருந்தது
 16. வீட்டுக்கு வீடு வாசற்படி போல இது எல்லா ஊரிலும் உள்ள ஒரு பிரச்னையாக உள்ளது. எமது ஊர் பாடசாலையும் அதே தான். அதே போல பாடசாலையில் ஊர் ஆசிரியர் மார் கற்பித்தும் அவர்கள் தங்களது சுயநல சே(தே)வைகளைத்தான் சிறப்பாக செய்கிறார்கள். அதில் நீ பெரிதா நான் பெரிதா என்ற போட்டி வேறை.... கவனிக்க வேண்டிய விடயம் சிறப்பாக செய்வதற்கு போட்டி இல்லை... எப்படி கெடுப்பது என்பதற்குத்தான் போட்டி. அதற்குமேல் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாங்கள் ஊருக்கு போகும் போது கெத்து காட்டுவதற்கென்று திட்டமிட்டு நிகழ்ச்சிகளை போட்டி ஆசிரியர்களினூடாக சிறப்பாக முன்னெடுக்கிறார்கள்.
 17. சிறப்பு... நீங்கள் கதையை நகர்த்திய விதம் தொடர்ந்து வாசிக்க வேண்டும் போன்று ஆர்வத்தை தூண்டியது.... நான் வாசித்த ஒழுங்கு பகுதி 2 பகுதி 4 பகுதி 1 பகுதி 3 திரும்ப பகுதி 4 என் என்று மட்டும் கேட்க வேண்டாம் lol தொடர்ந்து எழுதுங்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.