Everything posted by ரதி
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள் தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்
-
யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?
தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும் அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார் அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்
- யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
ஏன் அண்ணா
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
சரியான திட்டமிடல் இல்லாமலும்,எதோ ஒரு காரணத்திற்காகவும் அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்புறது...கேட்டால் சிங்கள அரசு ஒன்றும் தருவதில்லை என்று சொல்றது. 9 மணிக்கு வேலைக்கு 9 மணிக்கு தான் வீட்டை இருந்து வெளிக்கிடுறது...12 மணி எண்டவுடனே வீட்ட சாப்பிட ஓடி வாறது,5 மணி என்றவுடனே பறக்கிறது, இடையிடையே சொந்த அலுவல்கள் என்று வெளிக்கிடுவது ,பத்தாததற்கு ஆளாளுக்கு அரட்டை சிங்கள பகுதிகளில் ஒரு நாளில் முடிக்கிற வேலையை தமிழர் பகுதிகளில் 6 மாதத்திற்கு இழுத்தடிக்கிறது ...பிறகு நேரமின்மையால் வேலை முடியல்ல என்று குற்றம் சொல்றது
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கூட்டத்திற்கு போனவைக்கு வடையும் ,பற்றீசும்,தேநீரும் கொண்டு வந்து வைச்ச உடனே அதை காலி செய்வதிலே குறியாயிருந்தினம் என்று ஒருவர் பேட்டி கொடுத்திருக்கார் 🤣
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
நீங்கள் முட்டாள் ஆகுவீர்களா இல்லையா என்று 4 வருசம் பொறுத்திருந்தால் தெரியும் 🙂
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
தலைவரோடு இருக்கும் போது கருணா செய்த தவறு என்ன?...நீங்களும் ,இங்கு உள்ள சிலர் மாதிரி எழுத ஒன்றும் இல்லா விட்டால் இவரை பற்றி தான் எழுதுவீர்கள் என்று தெரியும்
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
சிங்களவர்களும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் ...அரச வேலைகளுக்கு அவசியம்
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
இந்த புத்தர் சிலை வைச்சு கிட்டதட்ட 2 வருசமாம் இப்ப வந்து கூப்பாடு போடினம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
ஷோபாசக்தி நடித்த சொர்க்கவாசல்
அட அது சோபாசக்தியே !...நான் எங்கேயோ பாத்தா மாதிரி இருக்கே என்று யோசிச்சனான்😎
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
உப்படியான கதைகளை சொல்லித் தானே வாக்கு கேட்டு இருப்பார்
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
அட😊 தேர்தலில் வென்ற பின் சாணக்கியன் கதைக்க வெளிக்கிட்டார்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
மேய்ச்சல் நிலங்களில் அவர்கள் நிரந்தரமாய் குடியேறவில்லை...அந்த நிலங்களில் அந்தந்த பருவங்களுக்கேற்ப பயிர் செய்து விட்டு ,விளைந்தவுடன் இடத்தை விட்டு போய் விடுவார்கள் என்று தான் கேள்விப்பட்டேன் ..ஆனால் தற்போதைய அரசு வந்த பின் இப்படியான செய்திகளை காணவில்லை
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நான், அவரின் ரசிகை இல்லை ...ஆனால்,தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அதிகார வெறியில் ஆடுபவர்களுக்கு இவரை போல கேள்வி கேட்பவர்கள் அவசியம். முறையான அனுமதி இல்லாமல் அங்கு போக முடியாது என்று அவருக்குத் தெரியும்...போனது அவர்களுக்கு பயம் காட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இவர் செய்தது சரி என்று தான் சொல்கிறார்கள் ....ஏதோ ஒரு தேவைக்காய் அன்றாடம் வைத்தியசாலைக்கு போய் வருபவர்களுக்கு தான் அங்கு காவலிருப்பவர்கள் செய்யும் அநியாயம் தெரியும்.இந்த வைத்தியசாலை காவலில் இருக்கும் கொம்பனி யாருடையது என்பதும் , அந்த காவலில் இருப்பவர்கள் எத்தனை பேரை காலால் எட்டி உதைத்து அடித்து இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்கும். அல்லது தெரிந்திருந்தாலும்,அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை இங்கு அர்ஜுனாவை எதிர்ப்பது தானே முக்கியம் என்று எழுதி கொண்டு இருக்கிறீர்கள். நீங்களும்,மற்றவர்கள் மாதிரி ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காய் அவர் செய்யும் எல்லா செயல்களையும் எதிர்ப்பது ஆச்சரியமளிக்கிறது .
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
முந்தி சிங்களவர்கள் அடாத்தாக தமிழர் பகுதிகளை அபகரிக்க முயன்றார்கள்..அதை எதிர்த்து புலிகள் போராடினார்கள். அதில் நியாயம் இருந்தது.....தற்போதும் இப்படியான அடாத்தான குடியேற்றங்கள் நடக்கின்றனவா?
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இங்கு யாழில் மட்டும் இல்லை. பொதுவாய் தமிழருக்கு பொறாமை,ஈகோ.சக தமிழனை முன்னேற விட மாட்டான் ...தானும் முன்னேற மாட்டான் ...ச.மூ ஒரு ஊழல்வாதி ஒழுங்காய் வைத்தியசாலையை நிர்வகிக்க தெரியாது ...தன்னுடன் பணி புரியும் ஊழியர்களை எப்படி கையாளுவது என்று தெரியாது....இந்த ஊழியர்கள் விடயத்தில் அவரே ஆரம்பத்தில் கதைத்து சுமுகமான முடிவு எடுத்துருந்தால் அவர்கள் ஏன் கொழுப்பிற்கு போய் முறையிடுகிறார்கள். அர்ஜுனா,தன்னை சேர் போட சொல்லி விட்டார் என்று பந்தை திருப்பி விட்டார் ...பத்தரைமாத்து தங்கமாயிட்டார்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஒருவருக்கு மனநோய் இருக்குதோ ,இல்லையோ அவர்களை பார்த்து "பைத்தியம்" என்று சொல்பவர்களுக்கு தான் உண்மையான மனநோய்...அர்ஜுனாவிற்கு பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் இருக்கலாம்...பப்பிளிசிட்டி விரும்புவராய் இருக்கலாம் ..அது அவரில் உள்ள குறை அர்ஜுனா,ச.மூ பார்க்க போனவுடனே என்னை சேர் என்று கூப்பிடு என்று என்று சொல்லி இருக்க மாட்டார்...நான் காணொளி முழுமையாய் பார்க்கவில்லை...அவர்களுக்குள் புடுங்குப்பாடு நடந்த பிறகு தான் அப்படி சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன் படிக்காத முன்னால் எம்பி அங்கயன் ,டக்கி போன்றோர் போகும் போது விழுந்து ,விழுந்து கவனித்த ச..மூ க்கு அர்ஜுனாவை கண்டதும் உதறல் எடுக்குது. லண்டனில் ஒரு வைத்தியர் இருக்கார் ...அவர் ஒரு பப்பிளிசிட்டி பிரியர் ...எப்படியாவது அவர் அர்ஜுனா தேர்தலில் தோத்து விடுவார் என்று காத்து கிடந்தார்...அவர் தேர்தலில் வென்றதும் காணும் ...இவ்வளவு காலமும் யாழில் மருந்து தட்டுப்பாடு,எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தது ..ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை ....அர்ஜுனா ஏதாவது செய்து விடப் போகிறார் என்ற பயத்தில் மருந்துக்கள் வேண்டுனால் தன்னை தொடர்பு கொள்ளட்டாம்...இவ்வளவு காலமும் எங்கே இருந்தார்கள். செய்கிறார்களோ ,இல்லையோ பயப்படுகிறார்களே அது தான் அந்த மக்களுக்குத் தேவை
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
தகவலுக்கு நன்றி ...கேதீஸ்வரன் மேல் பிழை இல்லை என்றால் ஏன் அவர் அர்ஜுனா மீது மான ,நஷ்ட வழக்கு போடவில்லை? சத்தியமூர்த்தி உங்கள் நண்பரா 😜
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
என்னுடைய சந்தேகம் என்னவென்றால்,ஜேவிபி இலங்கையர்கள் அனைவரும் சமம் ...அவைவரையும் சமமாய் நடத்துவோம் என்று சொல்கிறார்கள்....அப்படியாயின் தமிழர்களுக்கு மட்டும் ஏன் காணி ,நிலம் ,அதிகாரம்?...மற்ற பிரதேசங்களில் வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா?...புலிகள் இருக்கும் வரைக்கும் இந்த கோரிக்கையில் நியாயம் இருந்தது...தற்போதும் கேட்பது நியாயமானதா?
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சத்தியமூர்த்திக்கு தன் பதவிக்கேற்ற மாதிரி நடந்து கொள்ள தெரியாது...பப்ளிக்காய் தனது மு.புத்தகத்தில் அர்ஜுனாவுக்கு வோட்டு போட தனக்கு என்ன விசரோ😎 என்று தேர்தலுக்கு முன்பு எழுதினவர் ...சும் தான் இந்த தடவையும் வெல்லுவார்...தன்னுடைய ராஜ்ஜியம் என்று நினைச்சிருப்பார்...எல்லாம் பூச்சியமாயிட்டுது😬...உடனே பிரதேசவாதத்தை கையில் எடுத்து கொண்டு கோசம் போடுகிறார். எனக்கு முதலில் சத்தியமூர்த்தி மேல் நல்ல அபிப்பிராயம்,நம்பிக்கை இருந்தது....யாழிலும் முன்பு ஆதரவாய் எழுதியிருந்தேன் ...ஒரு சில கட்டுரைகள் துறை சார்ந்த நிபுணர்களால் எழுதப்பட்டதை வாசித்தவுடன்,அதை விட அங்கிருந்து வரும் தகவல்கள் அவருக்கு நல்லதொரு பாடம் படிப்பிக்க வேண்டும்...அது யார் படிப்பித்தாலும் சரி😧 சத்தியமூர்த்தி தானே கேதீஸ்வரன் போதைப் பொருள் விற்றதாக சொன்ன நினைவு....இருவருக்கும் இடையிலும் பிரச்சனை அல்லவா .
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அத்தானிடம் சொல்லி விடுகிறேன்...நான் உறுதியாய் சொல்கிறேன் நீங்கள் வேறு ஒருவரை நான் என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் ..கோசானையும் அப்படி தான் நினைத்து இருப்பீர்கள்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எனக்கு பிடித்திருந்தது...வெள்ளைக்கார நாட்டில் நிக்கிற பீலிங் இருந்தது...வெளிநாட்டு பயணிகள் வரும் இடத்தை விட மற்றைய இடங்கள் அமைதியாய் இருந்தது ..அங்கிருக்கும் மக்கள் சோம்பேறிகளாவும்,துவேசம் பிடித்தவர்களாய் இருப்பார்களோ என்று ஒரு சந்தேகம் ...ஜெர்மனியின் மற்ற இடங்களையும் வந்து பார்க்க வேண்டும் என்று ஆவல்
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ஏன் உருவாக்கி இருக்க வேண்டும் ?...நான் பெரிசா ?,நீ பெரிசா என்று அடித்திகிட்டு சாவதற்கா ...அரைவாசி தமிழ் சனம் ஏற்கனவே இல்லை .மிச்சம் இருக்கும் தமிழ் சனத்தையும் நாட்டை விட்டு துரத்துவது தான் உங்கள் திட்டம் என்று நினைக்கிறேன்