Everything posted by ரதி
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
உண்மையை சொல்ல போனால் தமிழ்சிறி நீங்கள் எழுந்து நடப்பீர்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை ...வேலைக்கு போவதையிட்டு மிக்க மகிழ்ச்சி ...உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு சபாஷ் ...உங்கள் குடும்பத்தினரும் உங்களுக்கு பக்க பலமாய் இருந்திருப்பார்கள் ...வாழ்த்துக்கள்
-
தையல்கடை.
அதில்லை யாயினி பல வருடங்களுக்கு முன்பு நானும் எனது நண்பியும், அவரது தமக்கையின் சிறு குழந்தைகளும் லா சப்பலால் போகும் போது அங்கிருந்த அண்ணாமார் ,தம்பிமார் ,அங்கிள்மார் எல்லோரும் ஆவென்று பேயை பார்த்த மாதிரி பார்த்தார்கள்...இப்ப நிலமை என்ன மாதிரி என்று தெரியாது
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள் ...அமெரிக்காவில் இருந்து எத்தனையோ பேர் பல வித காரணங்களுக்காய் வேறு நாடுகளில் போய் குடியிருக்கிறார்கள் ...அதற்காய் அமெரிக்கா வாழ தகுதியில்லாத நாடு என்றாகிவிடுமா?..எல்லோரும் தங்கள், தங்கள் வசதிக்கு ஏற்ப வாழ்க்கையை தெரிவு செய்கிறார்கள்...அது பிழையில்லை ...ஆனால் அதற்கு பிறகு தாங்கள் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவர்கள் மாறி எழுதுகிறார்கள் பாருங்கோ அதைத் தான் நான் உட்பட பலர் பிழை என்கிறார்கள்
-
தையல்கடை.
சுவி அண்ணா கதையை முழு மூச்சாக வாசித்து முடித்தேன்...இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம். எனக்கு ஒரு சந்தேகம் பிரான்சில் தமிழ் உணவங்களில் தமிழ் பெண்கள் தனியாய் போய் சாப்பிடுவார்களா?
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
இந்த திரியில் நீங்கள் எழுதிய கருத்தில் பிழை இருந்ததால் அதை சுட்டிக் காட்ட வேண்டிய தேவை எனக்கிருக்கிறது....நீங்கள் எழுதிய எல்லா கருத்தையும் ஆமோதிக்க நான் உங்கள் வால் இல்லை ...அதான் இரண்டு ,மூன்று பேர் இருக்கினமே நீங்கள் என்ன எழுதினாலும் பின்னால் வெட்கமே இல்லாமல் வால்பிடித்து கொண்டு இருப்பினமே அவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் எழுதுவது எல்லாம் சரியாய் இருக்கும் ...உங்களை போன்றவர்களுக்கு ஆமா சாமி போடுவர்களைத் தானை பிடிக்கும் அந்த திரியில் எனக்கு பதில் கொடுத்தீர்களா?...சுட்ட தோசையையே திருப்பி ,திருப்பி நீங்கள் சுட்டதையா சொல்கிறீர்கள் ...உங்களுக்கு உலக அரசியல் தெரிந்தளவிற்கு உள்ளூர் அரசியல் தெரியவில்லை ...நன்றி . வணக்கம்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
கருத்துக்கு பதில் எழுத முடியா விட்டால் ஒதுங்கி இருப்பது உங்களுக்கு மரியாதையை தரும்...அந்தந்த திரிகளில் பதில் கருத்து எழுத முடியாமல் ஓடி விட்டு கள உறவு எழுதிய சுய ஆக்கத்தில் தேவையில்லாமல் சாணக்கியனையும்,,பிள்ளையானையும் இழுத்து எழுதி இருப்பது கருத்து வறுமையை காட்டுது
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
உங்கள் கருத்தில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை ...நான் கண்டது ,கேட்டதை தான் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் ...அவர்கள் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாட்டில் இருக்கிறார்கள் ...அடிபட்டு திருந்த கொஞ்ச காலம் எடுக்கும்...புலம் பேர்ந்தவர்கள் கண்டபாட்டுக்கு காசு அனுப்பி அவர்களை பழுதாக்கமால் இருந்தால் அவர்கள் சீக்கிரம் திருந்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு..புலம் பேர் பணக்காரர்கள் , அவர்களை சார்ந்து ஊரில் இருப்பவர்களால் தான் இந்த வர்க்க வேறுபாடுகள் உருவாகின. மற்றப்படி உங்களை ஜஜ் பண்ண வேண்டிய தேவை எனக்கில்லை....நன்றி
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நல்ல தலைப்பு விசுகு அண்ணா ...தொடருங்கள் வாசிக்க ஆவல்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நீங்கள் அவுசில் நல்ல நிலையில் இருக்கிறீர்கள் ...ஊரில் இருந்து அவுசுக்கு ஹொலிடே வந்த ஒருவர் உங்களிடம் அப்படி செய்யாதே ,இப்படி செய்யாதே என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? விடுமுறைக்கு வந்து இருக்கின்ற இவர் ,இங்கு இருக்க போவதுமில்லை இவர் யார் எனக்கு புத்திமதி சொல்ல என்று தான் நினைப்பீர்கள் ...அங்கிருப்பார்களது மனநிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் சொல்வது ,செய்வது சரி . மருந்துக்கள் ,பொருட்கள் தட்டுப்பாடு , இல்லா விட்டாலும் அங்குள்ளவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள்...அவர்களும் மனிதர்கள் தானே
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
இங்க பாருடா குயின் எலிசபெத் பேரன் இங்கிலீசில எல்லாம் திட்டுறார் ...உங்கட பெரிய படிப்பிக்கும்,பணத்திற்கும் என்ன மண்ணாங்கட்டிக்கு உங்கட காசை கொண்டு போய் பிச்சைகார நாட்டில கொண்டு போய் கொட்டுகிறீர்கள் ...போய் அமெரிக்காவில் கொட்டலாமே?...உங்களை தங்க தாம்பாளம் வைச்சு கூப்பிடினம். அங்க போய் இருக்க போவதுமில்லை .அங்கிருங்ப்பவர்களுக்காய் ஒரு மண்ணாங்கட்டியும் புடுங்க போவதுமில்லை ..ஆனால் இங்கிருந்து கொண்டு உங்களுக்கு தமிழீழமும் ,சுயாட்சியும்,மண்ணாங்கட்டியும் வேண்டும் நீங்கள் அங்கே போய் வீடுகள் ,காணிகள் வாங்கேலை என்று யார் அழுதா?...உங்கள் பணக்காரத்தனத்தை காட்டுவதற்காய் அங்கே போய் வீடுகள் ,காணிகள் அறா விலைக்கு வாங்கிப் போட்டு ,அங்கேயிருப்பவர்களை இவற்றை வாங்க முடியாத நிலைக்கு தள்ளுவது உங்களை போல ஆட்கள் தான்....சிங்களவன் இனவாதி தான் அதில் எந்த மாற்றுக கருத்துமில்லை ...அவர்கள் ஒரு காலத்தில் திருந்த வாய்ப்புண்டு ...ஆனால் உங்களை மாதிரி பண திமிர் பிடித்த ஆட்களால் தமிழருக்கு அழிவு...உங்களை போன்றவர்களுக்கு அங்கிருக்கும் தமிழர்களை பற்றி எந்த வித அக்கறையும் இல்லை ...நாடு நல்ல கீழ் நிலைக்கு போகோணும் அதை விஸ்கியை குடித்து கொண்டு உங்களை மாதிரி ஆட்கள் ரசிக்கோணும் நீங்கள் எழுதினது தான் அதே உங்களுக்கே திரும்பி சொல்கிறேன் ...உங்களை வைத்து மற்றவர்களை எடை போட வேண்டாம்...உங்கள் பணக்கார மேற் தட்டு வர்க்கத்தை வைத்து மற்றவரை எடை போட வேண்டாம்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
வேறு நாட்டினர் எந்த நாட்டுக்கு போய் குடியேறினாலும் தாம் பிறந்த நாட்டை மறக்க மாட்டார்கள் . தாம் பிறந்த நாட்டுக்கு நன்றி விசுவாசமாய்த் தான் இருப்பார்கள்...உதாரணத்திற்கு இந்தியர்கள் ஐந்தாம் தலைமுறையாய் இங்கு வாழ்ந்தாலும் , ஐந்தாம் தலைமுறை குழந்தைக்கும் அவர்களது பாஷை தெரிந்திருக்கும் ,தங்கள் மூதாதையர்களது நாட்டை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் நாம், இலவசக் கல்வியில் படித்து,இலவச மருத்துவம் எல்லாம் பாவித்து வளர்ந்து விட்டு எந்த விதத்திலும் போரில் பாதிக்க படாமல் [என்னையும் சேர்த்து தான் ] இங்கு வந்து அடைக்கலம் கோரி புகலிடம் எடுத்த பின் அது ஒரு நாடா? அங்கு மனிசன் இருப்பானா என்று சீன் காட்டுவோம்... எந்த விதத்திலாவது நாம் பிறந்த நாட்டுக்கு ஏதாவது செய்து இருப்போமா என்று பார்த்தால் இல்லை. முந்தி போரை குற்றம் சாட்டினார்கள்...இப்ப பொருளாதாரத்தை குற்றம் சாட்டுகிறார்கள் ...ஊரில் போய் இருக்க விருப்பமில்லாவிட்டால் போக வேண்டாம் ....யாராவது உங்களை வெத்திலை பாக்கு வைத்து அழைத்தார்களா? வளர்ந்துவரும் நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் இருக்கும் தான்..போர்,ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் ,கொரோனா , அதை விட ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் அதனால் நாடு பாதிக்கப்பட்டு இருக்குது என்பது உண்மை தான் ...அந்த நேரத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டது என்பது உண்மை தான் ...அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதை விட்டு , எம்மால் எப்படி உதவலாம் என்பதை விட்டுட்டு உதவ விருப்பம் இல்லாட்டில் பேசாமல் இருப்பது நல்லது . அங்கு இருப்பவர்கள் மனிசர்கள் இல்லையா?...அங்கு இருக்கும் பெரிய பணக்காரர்களுக்கும், பெரும் பதவியில் இருப்பவர்களுக்கும் நாட்டை விட்டு போவது நாகரீகமாய் போய் விட்டது ...ஒருவர் போனால் அவர்களை பார்த்து தாமும் போக வெளிக்கிடுவது , வெளி நாட்டு மோகத்திற்காய் ஆயிரம் கதைகள் சொல்ல வேண்டி இருக்குது ஊர் ஆகோ ,ஓகோ என்று இருக்குது என்று சொல்ல வரவில்லை ஆனால் இப்ப ஊரை விட்டு வெளிக்கிடுபவர்கள் எல்லோரும் அந்த நேரத்தில் போரினால் பாதிக்க படாமல் ஒருத்தரை பார்த்து மற்றவர்கள் வெளிக்கிடும் ஆட்கள்....ஓவர் பில்டப் விடும் ஆட்கள்
- திரும்பும் வரலாறு!
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது ...தமிழர்களை விட சிங்களவர்களது உபசரிப்பு நன்றாக இருந்தது என்று அவர் சொல்லவில்லையா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது யார் புள்ளிகள் இடுகிறார்கள் என்று ஒருத்தரும் பார்க்க முடியாது யாயினி
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
சீச்சீ ...அப்படி எல்லாம் மூட கூடாது உங்கட கருத்தையும் சொல்லுங்கோ நந்தன்🤣
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
என்னுடைய கணிப்பு அவரது இரண்டாவது மனைவி தான்... ஆளை விட்டு கொலை செய்து உள்ளார்...என்ன நடக்குது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு புதிய கருத்துக்கள் சில மாதங்களாய் விலை செய்யவில்லை ...எனக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாமதத்திற்கு மன்னிக்கவும் ஈழப்பிரியன் அண்ணா ...மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பச்சை குத்துறதே தேவையில்லாத ஆணி தான்...இப்ப யார் குத்திடுறது என்பதை பார்க்கேலாமல் மறைச்சு இருக்கினம் என்று நினைக்கிறன் ..அப்படி மறைச்சால் போல தங்களுக்கு விரும்பினவர்களுக்கு பச்சை குத்தாமல் இருக்கப் போயினமோ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி ...இப்ப யார் , யாருக்கு பச்சை குத்தி இருக்கினம் என்று விடுப்பு பார்க்கேலாதோ
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்திற்கு ,என்னால் கருத்துக்களை திருத்தவோ பச்சை போடவோ முடியவில்லை.கவனிக்கவும்
-
இரத்த சரித்திரம்
விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பான்ஞ் ஐயாவுக்கும், புலவருக்கு ,வாதவூரானுக்கும் இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இதைத் தான் அந்த நேரமே அந்த திரி பற்றி நான் சொன்னேன் ...ரஞ்சித் போன்றவர்களுக்கு ஒருவரும் எதிர் கருத்து எழுத கூடாது ...தாம் சொல்வது தான் சரி . அதை அப்படியே கேள்வி கேட்க்காமல் அனைவரும் ஏற்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள்...ஒரு பக்க சார்பாய் எழுதி அல்லது நடந்து கொண்டு அதை மற்றவர்கள் கேக்கிறார்கள் இல்லை என்ட புலம்பல் வேற ...சரதேசமும், நாங்களும் விரல் சூப்பும் பாப்பாக்கள் ஏன்டா நினைப்பு
-
நானும் அந்த போதைவஸ்துகாரனும்
உங்களது கை தேர்ந்த எழுத்து நடை ...தொடருங்கள் கொழும்பான்