Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. நிர்வாகத்தினருக்கு வணக்கம், என்னால் 'விருப்பு' சுட்டியையையோ அல்லது வேறுவகைப் பிரதிபலிப்பகளையோ சொடுக்க முடியவில்லை. ஏனென்று அறியவிரும்புகிறேன். நன்றி
  2. முதலில் கதிகலங்கவைத்த செய்தியினூடாக யாழ்களத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த பதிவாளராகிவிட்ட தமிழ்சிறியவர்களுக்குப் பாராட்டு. ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக ஜம்பவான்களெனத் தமக்குத் தாமே நாமம் சூட்டியவர்களின் வண்டவாளமும் வாய்வீச்சும் தண்டவாளத்தில் ஏறித் தடாலடியாகக் கடலுள் வீழ்ந்த நிலை ஒன்று. அதேவேளை ஊடகங்கள் தனது பணியைத் தனது மக்களது நலன்கருதி செயற்பட்டால் எவளவு மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பது இரண்டு. யாழ்க்களமானது அனைத்துலகிலும் எப்படி அவதானிக்கப்படுகிறது என்பதற்கான அளவுகோலாகவும் அமைந்துள்ளது மூன்று. இதனை நாம் பத்தோடு பதினொன்றாகக் கடந்துபோக முடியாதென்பதையும் மனம்கொள்ளல் நன்று. கருத்துகளிலே பகிரும் விடயங்கள் எப்போதும் ஒரேமாதிரி இருக்கவேண்டும் என்றில்லையானபோதும், இனமாக ஒரு பொதுமைப்பண்பியலைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துவதாவே தோன்றுகிறது. எனவே இனநலன் சார்ந்து பதியப்படும் பதிவுகள் உற்றுநோக்கி உறவுகளை வளர்த்தெடுக்கும் புள்ளிகளாக அமைய வேண்டுமென்பதே எனது பார்வையாகும். மொழியால் ஒன்றித்து, மதங்களோடு ஒத்திசைவாக அணுகி எமது அவலத்தைக் களைந்து தமிழீழத்தை மீட்டெடுகச் சிந்திக்கும் பொறுப்புணர்வோடு, யாழ் களத்தின் நோக்கத்தை மெய்நிலையாக்கிட இந்தச் செய்தித்திரியும் சுட்டுகிறது. அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. ஏப்பிரல் 1 என்பதற்காக இப்படிப் பீதியைக்கிளப்பி விடுகிறீங்களே ஐயா!
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விருப்பையும் நன்றியையும் வழங்கி உற்சாகமூட்டும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி.
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நாம் நாமாக இருப்பதே எமக்கு நன்மை. அதேவேளை மனித உயிர்களின் அழிவினை யார் ஏற்படுத்தினாலும் கண்டித்தல் அவசியம். மேற்குலகின் நகர்வுகளனைத்தும் தலைமைப்பாத்திரம் மாறிவிடுமோ என்ற ஐயத்தின் வெளிபாடே. யூகோசிலாவியாவை மேற்குத் துண்டாடியதபோல்(அதற்கான கரணியங்களும் இருந்தன) உக்கிரேன் துண்டாடப்படுமானால் மேற்கின் பாத்திரம் ஆட்டம்காணலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒருவேளை நாங்களும் மதவாதக் கண்ணாடியூடாக நோக்கியதன் விளைவாகவும் இருக்கலாம்.
  6. படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. படித்தமைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.இன்றைய சூழலை கையாளும் திறனற்ற தலைமைகளால் ஒன்றும் செய்யமுடியாது. மக்கள் போராடினால் மட்டுமே மாற்றம்வரும்.
  7. முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும் ------------------------- முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும் பாடுகள் ஒன்றானபோதும் கோடுகள் வெவ்வேறானது! முள்ளிவாய்க்காலிலே கொள்ளியிட அனைத்துலகும் ஒன்றாய் நின்றது நன்றாய் அள்ளியும் கொடுத்தது! உக்கிரேனென்றதும் உலகம் மூன்றாய் நான்காய் முகம் காட்டி நடக்கிறது! எல்லா உயிர்களும் ஒன்றெனச் சொல்கிறோம் பதின்மூன்று ஆண்டுகள் முன் இவர்கள் எங்கே போயினர் பனியாய் உறைந்து போயா கிடந்தனர்! மேற்கின் தெருவெங்கும் கெஞ்சியும் அழுதும் யுத்தத்தை நிறுத்தக் கேட்டோம் நாங்கள் அப்பாவி மக்களின் அழிவைத் தடுக்க அனைத்துலகின் படிகளில் நின்றோம் ஆனாலும் நடந்தது என்ன வார்த்தைகளாலே கூறிட முடியுமா(?) கொலைக்கருவிகள் கொடுத்தனர் பலர் கொலைக்கான அறிவும் கொடுத்தனர் கொலைக்கான வேவும் சொன்னார்கள் கிட்டநின்று திட்டங்கள் தீட்டீயே கொத்துக் கொத்தாக் கொன்றிடவென்றே மேற்கின் கூலிகள் வழி காட்டின எல்லாம் எம்மினக் கொலைக்காகவே! பாதுகாப்புச் சபையும் ஐநா மன்றும் ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ கூட்டணியும் ஜீ ஏழு நாடுகள் குழுவும் உக்கிரேனென்றதும் உடனே கூடுது ருஸ்யாவைப் பார்த்துக் கடுமையாய் சாடியே கண்டனம் செய்தே தடைகளை போட்டன! மனித உயிர்கள் ஒன்றெனும் அதனை மதித்து நடத்தல் அரசுகளின் கடனென்றும் அடிக்கடி கூறிடும் ஐநாவே பதின்மூன்றாண்டின் முன் எங்கேபோனது உன் சமன்பாடு! முள்ளிவாய்க்காலில் உன் முகம் இழந்து போனாயே! உக்கிரேன் மக்களின் இழப்புச் சரியன்று எல்லாவுயிர்களும் எமக்குப் பெரிதே என்ற உணர்விலே வாழும் தமிழனோ பல்லுயிரோம்பிடும் பண்பினைக் கொண்டவன் பல்லாண்டுகாலமாய் அழிவினைக் கண்டவன் இன்றேனும் எங்களின் நிலைதனைப் பாரீர் காலம் கடந்து கண்ணீரும் காய்ந்தே போனது இனியேனும் உங்கள் சமன்பாடு சரியானால் எங்கள் இனத்தின் அழிவும் ஓயலாம் எங்கே ஒருமுறை சிந்திப்பீரா எம்மின அவலத்தை ஏற்றிடுவீரா? அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. சுவியவர்களின் கதை சிறப்பாக நகர்ந்து நடந்து செல்கிறது. காத்திருக்வைக்காது தொடர்ந்து எழுதியமை மேலும் சிறப்பு. பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.
  9. தமிழ்சிறி அவர்களே! நலமேகி நகை சூழ இன்னும் பல்லாண்டு இனிதாக வாழிய வாழிய வாழியவே!
  10. வெற்றுவரச்சென்றவரே சென்றதிசை மீளவில்லை சென்றுவிட்டீர்! நினைவுகளாய் வாழ்ந்து எம் நிலம் மீட்க உறுதிதரும் வீரர்களே வீரவணக்கம்!
  11. அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய சர்னா, சாத்திரியார், சிறீராம், மைத்திரேயி, யாசினி, சின்னப்பு ஆகியோரோடு வாலி மற்றும் கரும்பு ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  12. ஏராளன், குறும்பன், மதுகா ஆகியோருடன் அக்னியஷ்த்ரா அவர்களுக்கும் நலமும் வளமும் சூடிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  13. நிழலி அவர்களுக்கு இனிய இந்நன்நாளில் வளம் சூழ நலம் சூடி வாழிய வாழிய வாழியவே!
  14. சசி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அதேவேளைஅண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  15. தமிழர்களை இறைச்சியாக்கி உண்ணத்தயங்காத காடையர்கள். இன்றுவரை இந்தப்படுகொலைகளுக்கு ஒரு வருத்தம் தெரிவித்துள்ளார்களா? அல்லது வெட்கித்துள்ளார்களா? இவை மனித மனம் கொண்டோருக்கே தோன்றக்கூடிய நல்லெண்ணமாகும்.
  16. இந்தக் (அனுபவக்) கதையை ஒரே மூச்சில் வாசித்தபோது பல இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன். ஒரு அங்கதம் கலந்த கதைநகர்வு. அனுபவத்தை இப்படிச் சொல்லும் உங்களுக்குள் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். இதைப் படித்தகாலத்தில் இப்படியொரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. நேரமொதுக்கி உறவுகளோடு எழுதிப்பகிர்ந்தமைக்கு நன்றி.
  17. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு இந்தத் திரியிலே ஒரே காணொளி இருதடவைகள் தரவேற்றம் பெற்றுவிட்டது. தயவுசெய்து ஒன்றை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
  18. ஞாலவெளியிலும் காலவெளியிலும் கரைந்தவிடாத மானுட ஞானிகளே ஈழவெளியெங்கும் உறங்காது இனவிடுதலையை தேடிய வீரர்களே சிரம்தாழ்த்தி அகமேந்தி நிற்கின்றோம்!
  19. பொதுவாக அனைத்துலக மட்டத்தில் பாவனையில் இருக்கும் ஆங்கிலவழி மாதங்களே பொருத்தமானது. யனவரி 1என்றால் மார்கழி16 அல்லது 17ஆக இருக்கும். எனவே இது ஒரு குழப்பமானதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதேவேளை இளையவர்கள் எப்படி இதை எடுப்பார்கள் என்றும் பார்க்க வேண்டும்.
  20. தமிழினத்தின் மனமெங்கும் துளிராய் நிமிர்ந்து தளிராய் எழுந்து கிளையாய் பரந்து உறைந்துவிட்ட உயிர்சுடர்களே வீரவணக்கம்.
  21. தொடர்ச்சியாக எம் தலைவனைத் தேடியிணைக்கும் தமிழ்சிறி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
  22. ஈரநினைவுகளாய் வீரர் நினைவுகள் ஈகத்தில் உயர்ந்த எம் தேசப்புதல்வரை வணங்கியபடியே எம்வாழ்வு நகர மீண்டுமொரு ஆண்டு கடந்து போகையில் புதிய ஆண்டிலே ஈகத்தின் பயனாய் எம் தேசம் நிமிரட்டும் எம்மாவீரர்களே! உறுதியோடு உங்கள் ஈகத்தின் பெயரால் நிமிரும் எம் தேசம்!வீரவணக்கம்!
  23. மண்ணுக்காய் உயிரீந்து மலருக்குள் முகம் காட்டி மானத்தை காத்த எம் வீரரே ஒருநாளும் மறவோமே வீரரே! வலியோடு வாழ்ந்தாலும் வழியொன்று காண்போமே வீரரே! மாவீரரே மாவீரரே மாவீரரே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.