Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. உண்மை, தமிழகத்திரைத்துறை ஆடம்பரங்களுக்கு அளிக்கும் முன்னுரிமையை ஆக்கங்களுக்குக்கொடுப்பதில்லை என்பது தொடர்ந்துவரும் நிலை. விஜய் அல்லது அஜித் போன்றவர்கள் நடித்திருந்தால் ஆகா ஓகோ என்று பேசப்பட்டிருக்கலாம். இன்று இயற்கையைகாக்க அரசுகளும் ஆர்வலர்களும் படும்பட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் 'காடு' . சுவியவர்களுக்கு நன்றி
  2. விமர்சனத்தை படித்துக் கருத்தையும், விருப்பையும் பதிவுசெய்து உற்சாகமூட்டும் சுவியவர்களுக்கும், ஈழப்பிரியனவ்ர்களுக்கும் மற்றும் வாசித்த உறவுகளுக்கும் நட்பார்ந்த நன்றி.
  3. வணக்கம், காடு திரைவிமர்சனம் வண்ணத்திரை பகுதியிற் பதிந்துள்ளேன். அகவை26க்கான பகுதியில் மாற்றி இணைத்துவிட முடியுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... உயிரிகளின் வாழ்வானது காட்டிலேயே மையங்கொள்கிறது. என்னதான் மனிதன் புதிய தேடல்களுள் முகிழ்ந்து மகிழ்ந்தாலும் மன ஆறுதலுக்காக எங்கே போகின்றான். இயற்கையை நோக்கித்தானே. இயற்கை என்றதும் முதலில் எம்முன் தோன்றுவது காடும் மலையும் அவற்றின் வனப்பும் அமைதியுமே எனில் மிகையன்று. எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை நேற்று எப்போதாவது வீட்டிலே போடப்படும் தொலைக்காட்சியிலே ஆதவன் காணொளியலையினூடாகப் பார்த்தேன். காட்டையே வாழ்வாகக் கொண்ட மக்கட் கூட்டத்திலே நண்பர்கள் இருவர். ஒருவன் காட்டைப் பாதுகாக்க நினைக்கும் கதாநாயகன். மற்றவனோ நண்பனைப் பணயம் வைத்துக் காட்டதிகாரியாகிக் காட்டையழித்து மரங்களைக் கடத்தத் துணைபோகும் ஒருவன் என இருவருக்கிடையே நிகழும் சில சம்பவங்களின் தொகுப்பாக நகர்ந்தாலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதைப் பேசப்படும் சொல்லியங்களூடாகவும் எளிமையாக வாழும் மக்களின் வாழ்வியல் ஊடாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. காடும் காடுசார்ந்த கிராமமுமாகக் கதை படமாக்கப்பட்டிருக்கிறது. இடையிடையே இளையோடும் காதல், காதலன் கைதானபோது ஏற்படும் தவிப்பு, நண்பனை அப்பாவியாக நம்பும் நண்பனான கதாநாயகன், காட்டைப் பாதுகாக்க நினைத்துக் ஏமாறும் காட்டு அதிகாரி எனப் பாத்திரங்களின் இயல்பான நடிப்பெனப் பார்க்கக்கூடிய படமாக உள்ளது. கதாநாயகன் சிறைப்படுத்தப்படுவதும் அந்தச் சிறைக்கு நந்தாவாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பும் காட்சிகளும் வலுவானவை. சிறையிலே கூத்துக் கலைஞராக வரும் நடிகரின் இயல்பான நடிப்பெனப் பல்வேறு சம்பவங்களையும் சொல்லி நகர்கிறது. சிறைக் கலவரத்தையும் உயிரிழப்பையும் தவிர்க்கத் தானே சாவை ஏற்கும் நந்தாவின் துணிவும் மனிதாபிமானமும் ஒருவகை. அது சேகுவேரா அவர்கள் சாவை எதிர்கொண்டதை நினைவுபடுத்துவதாய் உள்ளது.கைதிகளிடையேயான கூட்டு வாசிப்பு இன்றைய நவீன உலகில் அருகிவரும் வாசிப்புக்கலை குறித்த பதிவாகக்கருதலாம். கருணா என்ற பெயர்தாங்கி வில்லனாக வரும் பாத்திரம் எம் தேசத்தையும் நிiவுபடுத்தி நகர்கிறது. மரங்கள் குறித்தும் காடு குறித்தும் கதாநாயகன் பேசும் சொல்லியங்கள் நோக்குதற்குரியவை.எட்டுத் திக்கும் எங்கள் பக்கம் என்று தொடங்கும் பாடல் எழுச்சிப்பாடல்கள் போன்று உள்ளது. விதார்த்(வேலு)சம்ஸ்கிருதி செனாய் (பூங்கொடி) முத்துக்குமார்(கருணா) நந்தா (சமுத்திரக்கனி) என பெரும் ஆரவாரமில்லாத நடிகர்களை வைத்து நல்லதொரு கருவைப் படமாக்கியுள்ளார். பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருந்தால் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். இயற்கையை மீட்டெடுக்க முனைவோருக்கு காடு திரைக்கதை ஆதரவாக நிற்கிறது. ஸ்ராலின் இராமலிங்கம் அவர்கள் எழுதி இயக்க, கே என்பவர் இசையமைக்க நேருநகர் நந்து என்பவர் தயாரித்துள்ளார். குறிப்பு: இதனை எழுதத் தூண்டியவர் வீரப்பனவர்கள். யாழிலே உள்ள திரியிலே அவரது மகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதான செய்தியைப் படித்தபோது இதனை எழுதத் தோன்றியது. நானொரு திரைப்பட விமர்சகனல்ல. ஒரு பார்வையாளனாக எழுதியுள்ளேன் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  5. சிலவற்றை மாற்றமுடியாது. மாற்றமடையாதது குயிலின் குரலோசை.ஆண்மயிலின் நடனம். யானையின் பிளிறல்.புலியின் உறுமல், சிங்கத்தின் கர்சனை, எனப் பல உள்ளன. ஆனால் முன்னவர் செய்த அரசியல் பிழையென்றால் அதிலே தொங்குவதை விடுத்து பின்னவர் நல்லதைச் செய்யலாம் அல்லவா? நன்றி
  6. என்னுடன் சிரியாவைச் சேர்ந்த குர்திஸ் இனத்து முசுலிம் ஒருவர் வேலை செய்கிறார். அவர் ஒரு குர்திஸ் என்னோடு உரையாடுவார். கடந்த வியாழன் உரையாடும்போது தனது மகனதும் மகளினதும் பிந்தநாளை ஒரு சிலநண்பர்களோடு கொண்டாட உள்ளதாகக் கூறினார். அப்போ நான் மண்டபத்திலா என்று கேட்க, இல்லை வீட்டிலே என்றார். வீடு காணுமா என்றேன் மெய்பாட்டினூடாகச் சமாளிக்கலாம் என்றவர். தனது நண்பனுக்கு எட்டுப் பிள்ளைகள் என்றார்.நான்கு சிரியாவிலும் நான்கு துருக்கியிலும் பிறந்ததாகக் கூறினார். அப்போ நான் இங்கு என்றேன். இங்கு இல்லை என்றார். இங்கும் நாலென்றால்.... யேர்மனியில் ஒரு சிறிய முசுலிம் கிராமம் உதயமாகிவிடும். இதுதான் யதார்த்தம். நாமோ இருவராக வந்து ஒருவரோடு அல்லது இருவரோடு மட்டுப்படுத்தி நிற்க அவர்கள் சுயமாக விட்டுள்ளார்கள். மற்றவரைக் குறைகூறி யாது பயன். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா... என்ற கணியன் பூங்குன்றானாரவர்களது வரிகள் நினைவுக்கு வருகின்றன. நன்றி
  7. இதனை எப்படித் தமிழினம் கடந்து செல்லவேணடும் என்பதற்கான எந்த அறிவூட்டலோ தெளிவூட்டலோ இல்லை. தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளோ தமக்குள் குத்திமுறிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களோ அன்றாடப் பிரச்சினைகளோடு போராடும் அவலநிலை. இதில் எப்படியொரு நிலைபேறான அரசியல் முனையைத் திறப்பதெனச் சிந்திக்காதவரை மாற்றங்கள் வராது. குறைந்த பட்சம் யாழ். இந்துவில் நடந்த கருத்தாடலையாவது செவிமடுப்பார்களா? நன்றி
  8. தமிழ்த் தேசிய அரசிலின் மௌனத்தைக் கலைக்க முயலும் வளரிளம் தலைமுறையே தலைவணங்குகின்றேன். நன்றி
  9. ஏன் தமிழ்த்தேசிய சார்பு நிலை வாக்குகள் ஈ.ம.ஜ.க வைநோக்கிச் செல்கின்றன என்பதற்கான ஒரு சிறந்த பார்வை. இனியாவது தமிழ்த் தேசியம் பேசும்(பேசும்) கட்சிகள் சிந்திக்க வேண்டும். சும் மைப்பற்றிய பார்வையை பல யாழ்க்கள உறவுகளே பல ஆண்டுகளின் புட்டுபுட்டு வைத்துவிட்டார்கள். அவற்றினது தொகுப்பாகவே இந்தக் கட்டுரை அமைத்துள்ளபோன்று உள்ளது. நன்றி
  10. தமிழினம் சுழியத்தில் இருந்தே எல்லாவற்றையும் தொடரவேண்டிய நிலை. தமிழினத்தின் ஈகங்களை ஈடுவைத்து வாழும் தமிழரின் தலைமைகள் என்றுகூறும் ஈன அரசியற் கூட்டம் அழிந்தொழிந்து புதியதொரு தலைமை முன்வரும்வரை இதுபோன்ற ******* மாறிமாறிப் பிதற்றுவது தொடரும். நாமும் பெருமூச்சோடு கடந்துவிடுவதைத்தவிர எதைத்தான் செய்யப்போகின்றோம். நன்றி
  11. குமுகாயத்தின் சாரளங்களாக விரியும் இலக்கியப் பரப்பிலே சிறுகதை, குறுநாவல் என்பன விரைந்து வாசிக்கவும், இன்றைய அவசர உலகுக்குமான ஒரு படைப்பலகாகத் திகழ்கின்றது. அந்த அலகுக்கூடாக மயிலம்மாவை அழகோடு நகர்த்தியது அருமை. காதல், காமம் என்று அல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியலில் இளையோடும் நுட்பமான தவறுகளையும் யதார்த்தமான பார்வையுள் வாசகனிடம் கொண்டுவருதல் சிறப்பு. வாமனின் பயிலரங்கு சற்று நெருடலானபோதும், அதனை அனுமதித்த மயிலம்மாவின் தாகமும் கரணியமாகிறது. இலக்கிய நயத்தோடும், இளமைத்துள்ளலோடும் படைத்துள்ளமை சிறப்பு. உங்கள் குறுநாவலூடாக வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிராமத்துக்குச் சென்றுவர வைத்துவிட்டீர்கள். யாழ்க் களத்தின் "கதைவாரிதி,, என்றே தங்களை அழைக்கலாம் என்பது எனது பார்வை. சுவியவர்களே தொடரட்டும் உங்கள் எழுத்தாக்கப்பணி. யாழ்க்கள ஓவியரின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஓவியங்கள் குறுநாவலுக்கு மற்றொரு சிறப்பு. இப்படிப் பல படைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் யாழுக்கும், அதன் நெறியாளர்களுக்கும் மற்றும் இலக்கியக் கடலிலே யாழெனும் படகின் சுக்கானைப் பிடித்து நகர்த்திவரும் மோகன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
  12. ஆழந்த இரங்கல். மனித உயிர்களை அழிப்பதற்கான கருவிகளின் தொழிற்றுறைக்கு நல்லவாய்ப்பு. அதில் ரஸ்யாவுக்கும் பங்குண்டு. ஆனால், உலகெங்கும் சிறிய இனங்களை,தேசங்களை அழித்துச் சுரண்டிப்பெருக்கும் சக்திகளுக்கு பெரும் சவாலாக இஸ்லாமிய மதத்தூய்மைவாதமானது மாறியுள்ளது. அது படிப்படியாக உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளது. யேர்மனிய உள்த்துறை அமைச்சர் நான்ஸி ஃபேஸர் அவர்கள், யேர்மனியும் இஸ்லாமிய பயங்கரவாத ஆபத்துள் உள்ளதாக ரஸ்யாவில் நடைபெற்ற தாக்குதலின் பின் கூறியுள்ளார். இன்று உலகில் எங்குமே பாதுகாப்பென்பது கேள்விக்குறியே. உலகம் இனங்களையும் மதங்களையும் தம்பாட்டில் வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி. அவரவர் தமது தேசஎல்லைகளுள் சுதந்திரமாக வாழவிடும்போதுமட்டுமே உலக அமைதி தோன்றும். இல்லையேல் இவை தொடர்கதையே. நன்றி
  13. நேற்றும் அழித்தனர் எழுந்தோம் இன்றும் அழிக்கிறார்கள் எழுகின்றோம் நாளையும் எழுவோம் தலைவா நின் நாமமே அடிநாதமாய் நிமிரும் காலத்தேரேறி வரும் மக்கள்படை தமிழீழத் தேரிழுத்துத் தம் கடன் நிறைப்பர்! நன்னிச்சோழனவர்களே தொடரட்டும் உங்கள் பணி.
  14. ஆழ்ந்த இரங்கல், மெதுவாகக் கொன்றுவிட்டார்கள். ராஜீவுக்காக ஒரு இனத்தையே அழித்த மாபாதக அரசு. இந்த அரசிடம் நீதியை எதிர்பார்ப்பது எவளவு மடமை என்பதை சாந்தன் தனது உயிரீகத்தூடாக மீண்டும் நிறுவியுள்ளார்.
  15. அதானியூடாக இலங்கைக்குள் அமெரிக்கா. மகிந்த வழியில் நெத்தன்யாகு. சீரடையுமா சீனப்பொருளாதாரம்? வேல்தர்மா நன்றி - யூரூப்
  16. இஸ்ரேலின் உத்தியை உக்ரைனில் பயன்படுத்திய ரஸ்யா | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் | இலக்கு | ILC திரியோடு தொடர்புடைய விடயங்கள் உரையாடப்படுவதால் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி - யூரூப்
  17. ரஞ்சித் அவர்களே தொடருழைப்புக்கு நன்றி. கணிப்புகளைச் சொல்லத் தெரிந்தவர்கள் அந்தக்கு கணிப்புக் ஏற்ப ஏன் செயற்படாது விட்டார்கள். கொழும்போடும் இந்தியாவோடும் குறுகியதன் விளைவு. மீண்டும் அதேபுள்ளியிற் தமிழ்தலைமைகள்(?) நிற்கின்றன. இமாலயச் செயலணி இலங்கையர்கள் இவற்றைப் படித்தறிய வேண்டும்.
  18. தகவலுக்கு நன்றி ஆழ்ந்த இரங்கல்கள்!
  19. ஈழப்பிரியனவர்களே நன்றி. எனக்கும் இதே கேள்வியெழுந்தது. நீங்கள் கேட்டுள்ளீர்கள். நன்றி ஆழ்ந்த இரங்கல்கள்.
  20. தாயகத்தை நேசிக்கும் எவரையும் சோதிக்கும் வாழ்வியல் அனுபவங்களாக எழுத்துக்கோர்வையுள் மயங்காது மனதினுள் வினாவையும், விரக்தியையும், இயலாமையையும் ஒருசேர எழுத்தர் வடித்துச்செல்கிறார். படிக்கும்போது மனம் கொத்தளித்து நொருங்கிவிடுகிறது. 32வயதில் அற்புதமான படைப்பினைத் தரும் விதம் செழிப்பு. தொடர்க நின் பணி. இணக்க அரசியல் பேசுவோரும் படித்துப் பகுத்தறியவேண்டிய பல பக்கங்கள் விரிகின்றன. நோக்குவார்களாயின் அவர்களிடமும், அவர்களிடம் உண்மையிருப்பின் கடந்து செல்லமுடியாத வினாத்தோன்றும். இதனை நூலுருவில் வெளியிட்டால் நன்று. இணைப்புக்கு நன்றி.
  21. நந்தனவர்கள் விரைவில் நலம்பெற வேண்டுகின்றேன். தாயகம் சென்று வந்து ஒருவருக்கும் இதேநிலை என்று கூறினார். அது இங்கிருக்கும்போது வெளிக்காட்டாது தாயகம் சென்று திரும்பியதும் வெளிக்காட்டியிருக்கலாம். என்னதான் மருத்துவத்துறையும் உடற்கூற்றியலும் முன்னேறி நவீன கருவிகளோடு இருந்தாலும் மனித உடல் அப்படியேதானே இருக்கிறது. அவதானமாக உடல் நலத்தை பேணுதல் வேண்டும். சொல்லாம் செய்வது கடினம். ஆனால், ஒரு கட்டத்தில் அவையே எம்மைச் செயற்படுமாறு கட்டுப்படுத்திவிடும்.
  22. நான் நினைத்தேன் இந்தத் தொடர்தரும் வலியென. ஆனால் நீங்கள் சுட்டியிருப்பது..?
  23. மனதிலிருக்கும் துயரை, ஆற்றாமையை வெளிப்படுத்திய தருணம். என்னம்மாவையும் இங்கே காண்கிறேன். பல அம்மாக்காள் விதைத்துவிட்டும் தொலைத்துவிட்டும் மனங்களிலே துயரத்தோடும் சுவாலையோடும், ஓர்மத்தோடும் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களது ஆத்மபலமாகவே எம்தேசம் இன்னும் வாழவும் எழவும் துடிக்கிறது. துடிப்புகள் ஓயாது. நெஞ்சையூடறுத்துச் செல்லும் எழுத்து அல்ல எமது வாழ்வின் பதிவு. இணைப்புக்கு நன்றி
  24. அமெரிக்காவினது மனிதஉரிமைக் காவலர் வேடம் கிழிந்து தொங்குகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.