Everything posted by nochchi
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
நந்தனவர்கள் விரைவில் நலம்பெற வேண்டுகின்றேன். தாயகம் சென்று வந்து ஒருவருக்கும் இதேநிலை என்று கூறினார். அது இங்கிருக்கும்போது வெளிக்காட்டாது தாயகம் சென்று திரும்பியதும் வெளிக்காட்டியிருக்கலாம். என்னதான் மருத்துவத்துறையும் உடற்கூற்றியலும் முன்னேறி நவீன கருவிகளோடு இருந்தாலும் மனித உடல் அப்படியேதானே இருக்கிறது. அவதானமாக உடல் நலத்தை பேணுதல் வேண்டும். சொல்லாம் செய்வது கடினம். ஆனால், ஒரு கட்டத்தில் அவையே எம்மைச் செயற்படுமாறு கட்டுப்படுத்திவிடும்.
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
நான் நினைத்தேன் இந்தத் தொடர்தரும் வலியென. ஆனால் நீங்கள் சுட்டியிருப்பது..?
-
தமிழ் மக்கள் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமிது
இதனை, அதாவது அரசுத்தலைவர் தேர்தல் தொடர்பான இந்தக் கருத்தை எவளவுதூரம் எமது மக்களும், அரசியற் கட்சிகளும் கணித்து நகரப்போகின்றன என்பதிலேயே தமிழினத்தின் இருப்பை உறுதிப்படுத்த அல்லது தமிழரும் ஒரு காத்திரமான சக்தி என்பதை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும்.கடந்த காலங்களைப்போல் கையூட்டைப் பெற்றுவிட்டுக் கைகாட்டும் அரசியல்வாதிகள் போல் கடந்து போகப்போகின்றார்களா?
-
துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் பயணித்த விமானம் பிரான்ஸில் தரையிறக்கம்; கடத்தலா என விசாரணை
உண்மைதான். ஆனால்,வட அமெரிக்க எல்லைக் காவற்படைகள் ஈரடுக்கு விழிப்புநிலைக்கு வந்திருக்குமே. பாவம் இவர்கள்.சொத்துகளை விற்றுவிட்டும் புறப்பட்டிருப்பர். இவர்களோடு எத்தனை இந்திய அரசினது உளவாளிகளோ.
-
செக் குடியரசின் தலைநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் : 10 பேர் பலி
காசாவோடு ஒப்பிட்டால் சிறிய துயரம்தான். ஆனால், ஐரோப்பிய நாடல்லவா. அதனால், மிகத்துயரமான சாவுகள் என்று எல்லா ஊடகமும் ஒப்பாரி வைக்கிறார்கள். ஆழ்ந்த இரங்கல். ஆயுத அனுமதிப்பத்திர அனுமதியை ஒவ்வொரு ஆறுமாதமும் புதுப்பித்தல், ஒவ்வொரு முறையும் உளவியல் மதிப்பீட்டு அறிக்கைக் கோருதல் போன்ற விதிகளை நடைமுறைக்கொண்டுவந்தால் இது போன்ற அவலங்களைக் குறைக்கலாம். தடுக்கேலாது. தடுத்தால் ஆயுத வியாபாரிகளின் பிழைப்பு என்னாவது. காசாவுக்கும் பராக்குக்கும் இடையில் ஒரு 4000கி.மீ தூரம் இருக்குமா?
-
துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் பயணித்த விமானம் பிரான்ஸில் தரையிறக்கம்; கடத்தலா என விசாரணை
கப்பலை வேண்டிப் போய் இறங்கின காலம் போய் விமானத்தையே அமர்த்தி அகதிகளாகப்போகும் நிலைக்கு உலகம், உலக மாந்தரை வளர்த்துவிட்டுடிருப்பதே 21ஆம் நூற்றாண்டின் பெருமையாக இருக்குமோ. மோடியின் அரசு அசுர வளர்ச்சிதான்.
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
மனதிலிருக்கும் துயரை, ஆற்றாமையை வெளிப்படுத்திய தருணம். என்னம்மாவையும் இங்கே காண்கிறேன். பல அம்மாக்காள் விதைத்துவிட்டும் தொலைத்துவிட்டும் மனங்களிலே துயரத்தோடும் சுவாலையோடும், ஓர்மத்தோடும் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களது ஆத்மபலமாகவே எம்தேசம் இன்னும் வாழவும் எழவும் துடிக்கிறது. துடிப்புகள் ஓயாது. நெஞ்சையூடறுத்துச் செல்லும் எழுத்து அல்ல எமது வாழ்வின் பதிவு. இணைப்புக்கு நன்றி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவினது மனிதஉரிமைக் காவலர் வேடம் கிழிந்து தொங்குகிறது.
-
வவுனியாவில் ஆசிரியர்களுக்கிடையே அடிதடி!
மாணாக்கருக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டை செயன்முறை விளக்கத்தோடு இயம்பியுள்ளனர்.
-
எப்போது வினாத் தொடுப்பீர்!
படித்துக் கருத்தைப் பதிவுசெய்த அல்வாயானவர்களுக்கும், நன்றியியம்பிய கப்பித்தனவர்களுக்கும் நட்பார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
-
யாழில்.புளியமரங்களை நட பணிப்பு
இலுப்பைவிதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் சமையலுக்கும், அதனது கழிவாக வருவது, 'அரப்பு' இதனை உடலில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. தேசிக்காய்,சிகைக்காய் மற்றும் அரப்பையும் சேர்த்து அவித்துத் தலைக்கு வைத்து முழுகுவதோடு, அரப்பால் உடலில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. நன்றி
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
நல்லது,அதேவேளை உங்கள் அரசியல்வாதிகளால் சுருட்டுப்பட்டு, பினாமிகளின் பெயரில் உள்நாடு வெளிநாடென உள்ள சொத்துகளை எப்போது பறிமுதல் செய்யவீர்கள்!
-
யாழில்.புளியமரங்களை நட பணிப்பு
தகவலுக்கு நன்றி. இலுப்பெண்ணை உணவுத்தேவைகளுக்குப் பாவிப்பதில்லையா?
-
யாழில்.புளியமரங்களை நட பணிப்பு
அண்மையில் ஒரு அன்பரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, இலுப்பெண்ணை பேசுபொருளாகிவிட, தான் உண்டதேயில்லை என்று அவர் சொன்னார். இப்போதும் யாழில் இலுப்பெண்ணை கிடைக்கிறதா?
-
ஜேர்மனியில்... பூப்பந்தாட்ட தரவரிசையில், முன்னிலை வகிக்கும் ஈழத்தமிழ் சிறார்கள்.
செய்தியாக்கி இணைத்த தமிழ்சிறியவர்களுக்கு நன்றி. வளர்ந்துவரும் இளைய வீர வீராங்கனைகளுக்கு வாழ்த்தும். பாராட்டும். தமிழியின் அப்பா எங்கு பூப்பந்தாட்டம் நடந்தாலும், அழைத்துச் சென்று பங்குபற்ற வைப்பவர். அவரது முயற்சி பயன்கொடுக்கிறது. அயராது முயற்சிக்கும் பெற்றோருக்கும் பாராட்டு உரித்தாகுக.
-
எப்போது வினாத் தொடுப்பீர்!
குமரசாமிஐயா அவர்களே பாராட்டுக்கு நன்றி.பட இணைப்புக்கும் நன்றி. நகர வீதிகளில் தொங்கும் மின் ஒளித் தோரணங்களும், நகர மையத்தை அலங்கரிக்கும் உயரமான போன்றனவற்றைப் பார்க்கும்போது மனதில் மகிழ்வு வரவில்லை. அந்த மரம்கூட இன்னொரு மரத்தின் அழிப்பில் உருவான அடையாளம் தானே! ஈழப்பிரியன் அவர்களே பாராட்டுக்கு நன்றி.
-
எப்போது வினாத் தொடுப்பீர்!
படித்து விருப்புப் புன்னகைகளை வழங்கிய நிலாமதி,சுவி,நுணாவிலான்,தமிழ்சிறி,ஏராளன் மற்றும் குமரசாமி ஐயா ஆகியோருக்கும், நன்றியியம்பிய ஈழப்பிரியனவர்களுக்கும் நட்பார்ந்த நன்றிகள் உரித்தாகுக. சுவியவர்களே பாராட்டுக்கு நன்றி. நுணாவிலானவர்களே பாராட்டுக்கு நன்றி. இந்த உலகு அமைதிபெற நாடுகள் நினைத்தாலும், ஆயுத வியாபாரிகளும், ஆதிக்க அரசுகளும் விடமாட்டார்கள்.
-
கிளிநொச்சி: தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் நினைவுரை Kaviyalahan
கிளிநொச்சி: தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் நினைவுரை Kaviyalahan/Anton Balasingam memorial speech பாலா அண்ணாவின் நினைவு நிகழ்வில் குணா.கவியழகனின் நினைவுரை. ஒவ்வொருவரும் உரைக்கும் விடயங்களை உள்வாங்கித் தெளிவடையவும் தேடவும் உதவும் என்ற நோக்கில் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்
-
இலங்கைக்குப் பெருமை சேர்த்த `புசாந்தன்`
வாழ்த்துகள்!
-
மத்திய தரைக்கடல் விபத்துக்கள் : இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகினது சுரண்டாலாதிக்க முனைப்புகள் பிரசவிக்கும் அவலங்களே இந்தச் சாவுகளாகும். உலகின் ஆதிக்க சக்திகளின் முடிவு மட்டுமே அகதிகளில்லாத உலகிற்கான சாத்தியத்தை உருவாக்கும். ஆனால், உலகம் அணி பிரிந்து, அணி பிரிந்து அகதிகளைப் பிரசவிப்பது தொடர்கிறது. உலகம் சனநாயகத்தையும், பன்முகத் தன்மையையும் போதிக்க முற்படுவதைவிடுத்து தாம் முதலில் கடைப்பிடித்தாலே உலகு அமைதியை நோக்கித் திரும்பும். அகதிகள் உருவாக்கம் நிற்கும். நன்றி
-
சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி
அப்பத்துக் காத்திருக்கும் குரங்குகளாக... ஆப்பிழுத்த குரங்காக...
-
சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி
வரலாற்றுத் திரிப்பும், கண்மூடித்தனமான அறிக்கைகளும் கூட தமிழரது விடியலுக்கு எதிரானதே.
-
துவாரகா உரையாற்றியதாக...
Operation Duwaraka ஒரு புலனாய்வுச் சதி: ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெயப்பாதுகாவலர் திரியோடு தொடர்புடைய உரையாடலைக் கொண்டுள்ளது. நன்றி-யூரூப். தலைப்புப் பொருத்தமாக இல்லையென்பது எனது பார்வை. ஊடகங்கள் தமது பிழைப்புக்காகவே தலைப்புகளைத் தடம்மாற்றி வைக்கின்றன. இதுவும் ஒரு சாபக்கேடன போக்கே. நன்றி
-
சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி
ஏதோ இந்தியா முதல்தடவையாகத் தமிழருக்கு எதிராகச் செயற்படுவதுபோல் சுட்டுவது ஏனோ?
-
துவாரகா உரையாற்றியதாக...
Prabhakaran’s Daughter Dwaraka is No more - Who is Fake Duwaraka? - Advocate Johnson Expose திரியோடு தொடர்புடைய காணொளியாதலால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்