Everything posted by nochchi
-
போர் நிறுத்தம்: இஸ்ரேலிடம் எடுபடாத அமெரிக்காவின் ராஜ தந்திரம் - பைடன் முன்னுள்ள புதிய சவால் என்ன?
இஸ்ரவேல் தன்னைப் பாதுகாக்கும் உரித்துடையது என்று ஒருதலைப்பட்சமாகக் கொத்தளிப்பான சூழலில் கொடுத்த ஆதரவின் விளைவு. அப்போதே மனிதாபிமான அவலங்களைச் சீர்தூக்கிப் பார்க்காது ஆயுதங்களைக் கட்டற்று அள்ளி வழங்கியதன் பயனை இஸ்ரவேல் அனுபவிக்க, அதனால் ஏற்படும் அனைத்துல அழுத்த வலியைப் பங்காளராக அமெரிக்கா அனுபவிக்கிறது. நடப்பவற்றைப் பார்த்தால் பலஸ்தீத்தின் அழிவில் போர் நிறைவுறும்போலவே தெரிகிறது. அப்படியொரு நிலைதோன்றும்போது யுத்தம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தைக் கடந்திருக்கும். கடக்காமற் தணிக்கவே போலித்தனமான போர்நிறுத்த உச்சாடனம். அமெரிக்காவின் தொட்டிலையும் ஆட்டும் உத்தி தோல்விகண்டு வருகிறது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தகவலுக்கு நன்றி ஆழ்ந்த இரங்கல்கள்!
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
மிகச்சரியான உண்மை. யாழ்பாணனது மண்ணிருந்து ஒரு இளைஞி உதயமாவது நல்லவிடயம்.கலைத்துறையில் பல மேதைகளைக் கண்டமண் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதனது பிரதிபலிப்பே இது.
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
''சட்டம் ஒரு இருட்டறை'' அந்தக்காலத்தில் சிறிய தொலைக்காட்சிப் பெட்டியில் படமோடும்போது மணற்றரையிலேயிருந்து பார்த்தபடம். என்னோடு படம் பார்த்தவர்கள் பலரில்லை. பல்வேறு விடுதலைத் திசைகள் தேடிப்பறந்தனர். பின்னர் உரு சிலரை மட்டுமே சந்தித்துள்ளேன். சிலர் படகோடு கடலோடு கலந்த துயரமும் நடந்தது. காலங்கள் மாறினாலும் இன்றும் இந்தக் கதைதொடுக்கும் வினாக்களுக்கான பதில் நிறைவாகவில்லையல்லவா? சட்டத்தைத் தமக்குச் சாதகமாக வளைப்பது தொடர்கிறது. நன்றி நன்றி - யூரூப் உரு - ஒரு
-
இரண்டு சிறுவர்களையும் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ள இஸ்ரேல் இராணுவத்தினர்- வெளியாகியுள்ளது புதிய வீடியோ
உரிமைகளைப் பறித்து உயிர்களைப் பலியெடுத்து உயிர்வாழும் உலகு. இதில் சனநாயகமாம்... மனித உரிமையாம்.... மனித உரிமை சபையாம்.. மனித உரிமைக் காவலர்களாம்...
- இமாலயப் பிரகடனமும் மகா சங்கமும் – நிலாந்தன்.
-
மாதங்களில் நான் மார்கழி.
ஊரென்றால் உளமுருகும் திரு வெம்பாவை புலமென்பதால் உயிருருகும் பனிப்பாவை மாரி கழிகின்ற மார்கழியாள் என்றாலே மனதினிலே குளிரூடுருவிக் குறுக்கிவிடும் மாரியிலும் கதகதப்பில் களிப்பேற்றும் காலமதாய் யாவருக்கும் குதூகலமாய் அமையாது போனாலும் யாருக்கும் காத்திருக்காக் காலச் செயலதனைக் களிப்போடு நுகர்கின்ற காதலர்போல் பூமியிலே யாவரும் களிப்படைந்து களைப்படையச் செய்யாளோ நிறை மாதமெனும் மார்கழியாள்! மார்கழிக் கவிதந்த சுவியவர்களுக்குப் பாராட்டுகள்!
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்!
-
உறு மீன் வரும்வரை வாடி இருக்குமாம் கொக்கு.
விலைபோன தலைமைகளால் தமிழரது தலைவிதி தீர்மானிக்கப்படுவதைத் தமிழினம் விழிப்போடு எதிர்கொள்வதோடு, வழிப்போக்கராக இல்லாது வழியேற்படுத்தும் சக்திகளாக மாற வேண்டும்.
-
மக்களவைத் தேர்தலில் 295 முதல் 335 இடங்களில் வென்று பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்
மக்களவைத் தேர்தலில் 295 முதல் 335 இடங்களில் வென்று பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல் 27 DEC, 2023 | 12:01 PM புதுடெல்லி: வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில்இ 3-வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில்இ இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் அமைப்பு இணைந்துஇ கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. டிசம்பர் 15 முதல் டிசம்பர் 21 வரையில் நாடு முழுவதும் வாக்குரிமை பெற்றவர்களிடம் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 295 முதல் 335 தொகுதிகளில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி 165 முதல் 205 இடங்களைக் கைப்பற்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி அதிகபட்சமாக வட மாநிலங்களில் 180 இடங்களில் 150 – 160 இடங்களிலும் மேற்கு பிராந்தியங்களில் 78 இடங்களில் 45 -55 இடங்களிலும் கிழக்கு பிராந்தியங்களில் 153 இடங்களில் 80 -90 இடங்களிலும் தென் மாநிலங்களில் 132 இடங்களில் 20-30 இடங்களிலும் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தென்மாநிலங்களில் 70-80 இடங்களைக் கைப்பற்றும். கிழக்கில் 50-60 வடக்கில் 20-30 மேற்கில் 25-35 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பின்படி தென்மாநிலங்கள் பாஜக கூட்டணிக்கு பெரும் சவாலாக இருக்கும். பிஹார் பஞ்சாப் மகாராஷ்டிரா தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். எனினும் தேசிய அளவில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். பிரதமர் மோடியின் ஆட்சி திருப்தியளிப்பதாக 47.2 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.மக்களவைத் தேர்தலில் 295 முதல் 335 இடங்களில் வென்று பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல் | Virakesari.lk
-
கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது.
கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது. பிரேசிலின் சாவ் பாலோ அருகே உள்ள அதிபாயாவைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனது 39 வயது கணவரின் பிறப்புறுப்பை துண்டித்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கும் அப்பெண்ணின் 15 வயது மருமகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான நிலையில் 39வயதுடைய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
-
”அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்”- சீ.வீ. விக்னேஸ்வரன்
தமிழ் மக்களுக்குத் தொண்டாற்றுவதற்கான வேணவாவை ஐயா நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.
-
மனதும் இடம்பெயரும்
தமிழை உயிராகக்கொண்டு இறுதிக்காலம் வரை தமிழோடு பயணித்த இரு தமிழ்ச் சிற்பிகளால் தமிழுக்கு வரப்பெற்ற எழுத்தாளராக வலம்வரும் உங்களுக்கு வாழத்துகளும் பாராட்டுகளும். நூல் வெளியீடு சிறப்புற வாழ்த்துகள்.
-
மனித கடத்தல் ; தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் ; பிரான்ஸில் சிக்கி தவித்த 276 இந்தியர்கள் நாடு திரும்பினர்
மனித கடத்தல் ; தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் ; பிரான்ஸில் சிக்கி தவித்த 276 இந்தியர்கள் நாடு திரும்பினர் Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 10:22 AM மனித கடத்தல் முறைப்பாடு காரணமாக விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரான்ஸில் சிக்கித் தவித்த 276 இந்தியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மும்பையைச் சென்றடைந்துள்ளனர். இந்நிலையில், 27 பேர் பிரான்ஸில் தங்க அனுமதி கோரி உள்ளனர். லெஜெண்ட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து 11 சிறுவர்கள் (தனியாக) உட்பட 303 பேருடன் கடந்த வாரம் நிக்கரகுவாவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸின் வாட்ரிவிமான நிலையத்தில் தரையிறங்கிஉள்ளது. அதில் மனித கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பிரான்ஸ் அதிகாரிகள் அந்த விமானத்தை சுற்றி வளைத்தனர். அதில் இருந்தவர்களை விமான நிலையத்தில் தங்க வைத்தனர். பயணிகளில் இருவரிடம் பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் 4 நாட்களாக விசாரணை நடத்தினர். மேலும் பயணிகளிடம் நீதித்துறை விசாரணை நடைபெற்றது. இதில், பயணிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விமானம் அங்கிருந்து புறப்பட அனுமதி வழங்கினர். இதையடுத்து, நேற்று முன்தினம் வாட்ரி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு மும்பையை சென்றடைந்துள்ளது. இதில் 276 பயணிகள் மட்டுமே சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாவர். 5 சிறுவர்கள் உட்பட 25 பேர் பிரான்ஸிலேயே தங்க அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது. அங்கேயே தங்கி உள்ள அவர்கள் எந்த நாட்டினர் எனத் தெரியவில்லை. சர்வதேச சட்டப்படி, அடைக்கலம் கோருவோரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது.மேலும் ஆட்களை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்திய 2 பேர் பிரான்ஸிலேயே உள்ளனர். இந்த விமானத்தில் மும்பை வந்த பயணிகள் காலை 8.30 மணி அளவில் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளியில் சென்ற அவர்கள் தங்கள் முகத்தை மூடியபடியே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தங்கள் பயணம்குறித்த தகவலை ஊடகங்களிடம் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், “சொந்த செலவில் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என பிரான்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்" என ஒரு பயணி தெரிவித்தார். எனினும், இதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள், மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கரகுவா சென்று அங்கிருந்து அமெரிக்க எல்லைக்குள் நுழைவதுண்டு. இந்நிலையில் தான் நிக்கரகுவா சென்ற விமானம்தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. Hindutamil மனித கடத்தல் ; தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் ; பிரான்ஸில் சிக்கி தவித்த 276 இந்தியர்கள் நாடு திரும்பினர் | Virakesari.lk
-
போராளியின் இறுதி வெடி !
மீதுயர் மீளக் களங்களில் நடந்த காவியத் தாயே, உயிர் நிகரேகி தமிழினம் மீளத் தடைகளை உடைத்துத் தளகர்த்தராகி பல சாதனைகளின் நாயகரானீர். விடியலின் சுவாசம் தேடிய கபிலன் வரலாறாய் வாழும் பிள்ளையாய் மூவருக்கும் வீரவணக்கம்! நெஞ்சைப்பிழியும் நெடுதுயர் நேரத்தை கண்முன்னே காட்டிவிடும் பதிவு.
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி!
பின்தங்கிய பகுதிகளில் சென்று பல்கலைக் கழக நுளைவுக்காகத் தேர்வெல்லாம் எழுதலாம். ஆனால், சேவையாற்ற மட்டும் மறுப்பு. கல்விக் குமுகாயம் பொதுவாகச் சிந்திக்க வேண்டும். 2 - 3 ஆண்டுகளாவது சேவையாற்றிவிட்டு மாற்றலை கோரலாம் அல்லவா?
-
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கத்திடமிருந்து நாடு விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் - பேராயர்
ஊதி ஊதி எரியவிட்ட சிங்கள இனவாதத்தின் பெறுபேறுகளைத் தாம் அனுபவிக்கும்போது வலிக்கிறதுபோலும். இவர்களை ஆன்மீகவாதி என்று சுட்டுவது பொருந்தாதென நினைக்கிறேன். இவரொரு இனவாதி.இல்லையென்றால் இனஅழிப்புக்கு ஆதரவாகச் செயற்பட்டிரார்.
-
பராமரிப்பில்லாத ஆரியகுளம்!
திரு. மணிவண்ணன் செய்தவற்றை ஏன் தற்போதுள்ள நகரமுதல்வரது நிர்வாகம் பராமரிக்காதுள்ளது.இதிலும் அரசியல் பேதம் பார்க்கப்படுகிறது. நிகழ்கால முதல்வரான திரு.ஆர்னோல்டிற்கு கண் இல்லையா? அல்லது யாரோ ஒருவரது பதவிக்காலத்தில் செய்ததை அப்படியே அழியவிடும் நோக்கமாக இருக்காதா?இதற்கும் கயே குழுவுக்கும் தற்போது என்ன இழுபறி. நன்றி
-
ஜம்மு காஷ்மீர்: ராணுவம் விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேர் மரணம் - முகாமில் என்ன நடந்தது?
மனிதர்களை உயிரோடு தின்றுசெமிக்கும் அரச படைகளின் அட்டூளியங்கள் அழிவுறாத தொடர்துயரமாகும்.
-
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார் – ரசிகர்கள் இரங்கல்
ஆழ்ந்த இரங்கல்கள்!
-
தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!
தமிழ் மக்கள் இவளவுகாலமும் எவளவு பிழையா விளங்கி இந்த மனிதனைத் திட்டித்தீர்த்திருக்கினம். இனித்தானாமே அவர் தமிழர்பக்கமாக நின்று தீர்க்கமான முடிவை எடுக்கப்போறாராம். திருகோணமலையிற் தனக்கு வாக்குப்போட்ட மக்களுக்கே ஒன்றும் செய்யாதவரால் இனி எழும்ப முடியாத காலத்தில் என்னத்தை செய்ய உத்தேசம். என்ன கடைசியிலை இந்தியா கைகாட்டுற தலைக்குப் கைப்பெட்டியை வேண்கொண்டு கையைக் காட்டுவார். வேறென்னத்தை செய்யப்போகிறார்.
-
கிறிஸ்தவ மக்களுக்கு மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சந்திரகாந்தன் : இரா.சாணக்கியன் !
மாமனிதருக்கு அகமேந்திய நினைவு வணக்கம். சிறிலங்காவிடம் நீதியைப் பெறமுடியாது என்றுதானே அனைத்துலகிடம் தமிழினம் நீதியைக்கேட்கிறது. ஆனால் அனைத்துலக குமுகாயமும் வன்மையோடு நகர்வதையே காசா மற்றும் உக்ரேன் அழிவுகள் சுட்டுகின்றன. மக்களே தமக்கான நீதிக்காகப் போராடுவதையே உலகு விட்டுவைத்துள்ளது. அதனையும் இல்லாமற் செய்யும் வகையிலே சில புலத்துச் சிங்கங்கள் கொடிதூக்கியுள்ளனர்.
-
புதிய தரங்கொண்டகூட்டுத்தலைமை | இலக்கின் சிந்தனை | ஆய்வாளர்கள் பற்றிமாகரன்/அருஸ்
நன்றி - யூரூப்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஈழப்பிரியனவர்களே நன்றி. எனக்கும் இதே கேள்வியெழுந்தது. நீங்கள் கேட்டுள்ளீர்கள். நன்றி ஆழ்ந்த இரங்கல்கள்.
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
தாயகத்தை நேசிக்கும் எவரையும் சோதிக்கும் வாழ்வியல் அனுபவங்களாக எழுத்துக்கோர்வையுள் மயங்காது மனதினுள் வினாவையும், விரக்தியையும், இயலாமையையும் ஒருசேர எழுத்தர் வடித்துச்செல்கிறார். படிக்கும்போது மனம் கொத்தளித்து நொருங்கிவிடுகிறது. 32வயதில் அற்புதமான படைப்பினைத் தரும் விதம் செழிப்பு. தொடர்க நின் பணி. இணக்க அரசியல் பேசுவோரும் படித்துப் பகுத்தறியவேண்டிய பல பக்கங்கள் விரிகின்றன. நோக்குவார்களாயின் அவர்களிடமும், அவர்களிடம் உண்மையிருப்பின் கடந்து செல்லமுடியாத வினாத்தோன்றும். இதனை நூலுருவில் வெளியிட்டால் நன்று. இணைப்புக்கு நன்றி.