-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
தமிழர்களிடம் எதிரான கருத்து நிலை உருவாகாமல் அடக்கி வாசிக்கும் புதுடில்லி
nochchi replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
நிழலியவர்களின் கூற்று மெய்நிலையடைந்து வருகிறது. அடுத்த பெப்ரவரிக்குள் தீர்வு. தமிழரிடம் உள்ளதும் உருவுப்பட இருக்கும் சூழலில் புலம் பெயர்ஸ் முதலாளிகள் சிறிலங்காவில் பெட்டிகளோடு நிற்கிறார்கள். 🤔🤔🤔 -
அதிகாரப் பங்கீடின்றி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்யலாமா?
nochchi replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
இணைப்புக்கு நன்றி பாவம் இந்தக் கட்டுரையாளரும் எத்தனை விடயங்களைச் சுட்டி எழுதுகிறார். ஆனால் இந்தத் தமிழ்க் கட்சி **மண்டைகளுக்குப் புரிகிறதா என்றால் இல்லை. புலம்பெயர்ந்தோர் என்ன செய்வது? அதனையும் தேவையில்லை என்றல்லவா அறிவியக்கமோ ஏதோ அரசியல் இயக்கமோ ஏதோ ஒன்று சொல்கிறதாமே.!! -
அதைப்பற்றிப் பெற்று ஆண்டு அனுபவித்தவனும் கதைக்கான், (அவளவு நன்றியுணர்வு) கொடுத்து அடிமாடுகளும் கதைக்காதுகள். பிறகென்ன இப்படியே நாயிழுவைதான். இந்த நாயிழுவையில் பலகிராமங்கள் சிங்களத்தின் வசமாகியிருக்கும். பிறகு வடக்காவது கிழக்காவது இணைப்பாவது. ஆனால், பிறகு அடிவிழ அந்தநேரம் நானாமார் வடக்கை நோக்கி ஓடிப்போகக்கூடாது என்பதையும் மனதில்வைத்து வடகிழக்குப் பிரிப்பை உரத்துப் பேசுங்கோ.
-
மறைமுகமான சமாதான துாதுவராக செயற்படுகின்றாரா சொல்ஹெய்ம்?-அகிலன்
nochchi replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
அவர் தமிழ் இனப்படுகொலை அல்லது தமிழின அழிப்புக் குறித்து எங்காவது ஒரு கவலையாவது தெரிவித்திருக்கிறாரா(?) இந்த நிலையில் இவரது சமாதான முயற்சியை நம்பமுடியுமா? ரணிலையும் சிறிலங்காவையும் மீட்கும் வேலையில் அனுபவசாலிகளான சம் சும்முடனான தனியான பேச்சுத் தெளிவாக உணர்த்துவது மீண்டும் ஒருதடவை தமிழருக்கு ஆப்புத்தயார். -
மறைமுகமான சமாதான துாதுவராக செயற்படுகின்றாரா சொல்ஹெய்ம்?-அகிலன்
nochchi replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
-
அண்மையில் ஒரு சில இளையோரிடம் புதின் அவர்களது யுத்தபேரிகை பற்றிக் கேட்டபோது, அவர்கள் சொன்னவிடயம். புதினுக்கு மூளை மாறிவிட்டதாக.... இதனை யாரையும் புண்படுத்தும் நோக்கிற பகிரவில்லை. இதற்கு இப்படியும் விளத்தம் கொடுக்கலாம். அதாவது, அவர்களை மேற்குலக ஊடகங்கள் மூளைச்சலவை செய்துவிட்டதாக...... இளையவர்கள் இன்றிருக்கும் மின்னியல் ஊடக வாய்ப்புகளைவிட்டுத் தனியே மேற்குலக ஊடகங்களை மட்டுமா பார்பார்கள் என்றும் சிந்திக்கவேண்டியுள்ளது. நன்றி
-
நீங்கள் சுட்டியிருப்பது உண்மை. ஆனால், சில விடயங்கள் ஒரு நகர்வில் நடந்துவிடாது. நடக்கவும் விடமாட்டார்கள். குறிப்பாக அரச புலனாய்வு, அயலகப் புலனாய்வு மற்றும் அரச ஒட்டுண்ணிகளெனப் பெரும் தடைதாண்டல்கள் உள்ளன. ஆனால், இவையனைத்தையும் கடந்து இதுபோன்றதொரு கட்டமைப்பு அமையவேண்டியது அவசியம் என்பதை மக்கள் மத்தியிற் பரவலாக்கம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், எம்மினத்தினத்தினுள்ளே தடையாக இருப்போரை வெளிப்படுத்தல் போன்றனவற்றின் ஊடாகச் சாத்தியமாக்க முயலவேண்டும். 35ற்க்கு மேற்பட்ட ஆயுதப்போராட்ட அமைப்புகள் நின்ற ஒரு களத்திலே ஏற்பட்ட மாற்றம்போல் இலகுவாக அடைய முடியாது. இன்று அரசியல் கட்சிகளும் தனிநபர்க் கட்சிகளாகப் எண்ணிக்கையளவில் ஊதிப் பெருகிவரும் சூழலில், என்றுமில்லாதவகையில் ஒரு புலமையாளர் கட்டமைப்பின் தேவையும் அதிகரித்துள்ளதெனலாம். நன்றி
-
உண்மை, பத்தியெழுத்தர்கள், அரசியல் மற்றும் குமுகாலச் செயற்பாட்டாளர்களெனப் பலராலும் அண்மைக்காலத்திற் சுட்டுப்படும் விடயமாகத் தமிழர்தொடர்பான அரசியற் தீர்வுவிடயங்கள் பூட்டிய கதவினுள் முடங்கக் கூடாதென்பதாகவே இருந்தவருகிறது. இப்படியானதொரு புலமையாளர் குழு பன்முகத்தரப்பினது ஒருங்கிணைவில் அமைக்கப்படுவது அவசியமானது. காலம் கடந்தாலும் இனிவரும் காலத்திலாவது தனியோட்டங்களையும் சுழித்தோடல்களையும் கட்டுப்படுத்துவதோடு, ஒரு தேசமாகச் சிந்தித்து ஒரு அணியாக நிற்கிறோம் என்பதையும் நாம் இதுபோன்ற கட்டமைப்பின் ஊடாகக் கட்சிகளைக் கடந்து உறுதிப்படுத்தலாம். நன்றி
-
யாழ். கள உறவுகள் அனைவருக்கும், நத்தார் தின வாழ்த்துக்கள்.
nochchi replied to தமிழ் சிறி's topic in வாழிய வாழியவே
ஊர்களைக் கடந்தோம் தேசத்தைக் கடந்தோம் தேனினும் இனிய தெம் தெம்மாங்குத் தமிழாலே உலகெங்கும் வாழ் தமிழர் - நாம் உயிர்த் தமிழால் உறவானோம்! கள உறவுகளே நத்தார் தின நல்வாழ்த்தினை உங்கள் அனைவரோடும் பகிந்துகொள்கின்றேன். நன்றி -
10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை
nochchi replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
தந்தை செல்வா முதல் சம்பந்தர்...வரையா அல்லது இன்னும் எத்தனைபேர் விழுந்தால் தீர்வு தருவார்கள்? -
எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்
nochchi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
வழியற்ற சிங்களத் தலைமைகளுக்கும் தமிழரது வாக்குத் தேவை. தமிழ்த் தiமைகளுக்கு சுகபோக அனுபவிப்புக்குத் தமிழரது வாக்குத் தேவை. அதனால் இப்போது பேச்சுத்தேவை. -
10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை
nochchi replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அப்படியென்றால், தீர்வுக்கு இன்னொரு ஆயுதப்போர் வரவேண்டுமா? -
10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை
nochchi replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
சிறிலங்காவில் ஒரு நேர்மையான, மனிதாபிமானமுள்ள சிங்களத்தலைமையொன்று தோன்றி தமது இனத்தின் மீதான களங்கத்தைப் பொறுப்புடன் ஏற்றுப் புதியபாதையில் நகராதென்று சொல்கிறீர்களா? -
முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன்
nochchi replied to nochchi's topic in நிகழ்வும் அகழ்வும்
நன்றி, நீங்கள் இப்படிக் கூறுகிறீர்கள். ஆனால், கதைவேறுமாதிரிப் போகிறதே. சந்திப்புக்கள் தீவிரமாக நடப்பதாகத் தெரிகிறதே. -
10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை
nochchi replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இணைப்புக்கு நன்றி, தமிழீழவர்களது இனக்கொலைக்கான வழக்குகளும் சிறிலங்காவால் நடாத்தப்படும் காலம் வருமா? -
முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன்
nochchi replied to nochchi's topic in நிகழ்வும் அகழ்வும்
நன்றி, நீங்கள் சுட்டியிருப்பதே யதார்த்தம். ஆனால் இவர்கள் போன்றோருக்கு, குறிப்பாக எரிக்சொல்கைம் அவர்களுக்கு சிறிலங்கா அரசுமீது கொஞ்சமும் கோபமோ அல்லது தனது சமாதான முயற்சியால் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் ஓருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தவர்கள் என்ற எண்ணப்பாடோ அற்றவராகவல்லா திரிகிறார். நரியோடு கூட்டுச்சேரும் ஓநாய் குறித்துத் தமிழரசியல்வாதிகள் விழிப்புடன் இருப்பதே நன்று. 'விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி' என்று வாசித்த ஞாபகம். -
முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன் Posted on December 14, 2022 by சமர்வீரன் 35 0 தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு செய்த உடன்பாடுகளைத் தூக்கியெறிந்த சந்தர்ப்பங்கள் பல(1918 – 1965) ஆனால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டில் எட்டப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கூடச் சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டதே வரலாறு. இந்திய – இலங்கை ஒப்பந்தமானது பாதிக்கப்பட்ட தரப்பினது ஆலோசனைகளை நிராகரித்து இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாக உருவாகியிருந்தது. அதில் தமிழர் தாயகமான இணைந்த வட-கிழக்கு என்ற விடயம் சேர்க்கப்பட்டிருந்தது. அதனை மக்கள் விடுதலை முன்னணி(JVP) என்ற சிவப்புக்கொடியினுள் ஒழிந்திருக்கும் சிங்கள இனவாதக் கட்சியானது சிறிலங்கா சிங்கள நீதிமன்றில் வழக்கொன்றின் ஊடாக வடக்கு, கிழக்கு எனத் தனித்தனி மாகாணங்கள் ஆக்கப்பட்டுள்ளன. அதேவேளை இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காணி மற்றும் காவற்றுறை அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அவற்றை வழங்கக்கூடாது என்று அரசிலிருக்கும் அமைச்சர்களே குரலெழுப்புகின்றனர். வட மாகாணசபையின் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சிப்பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் வட மாகாணசபையால், வட மாகாண நிதியத்திற்கான திட்டவரைபு முன்மொழியப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோது அது நிராகரிக்கப்பட்டுத் தூக்கி எறியப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களது “சுதுமலைப் பிரகடணம்” என்று சுட்டப்படும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பான கொள்கைவிளக்க உரையிற் கூறப்பட்ட விடயங்கள் பின்னாளிற் தமிழினத்தின் அனுபவமானது. அவரது உரைப்பகுதியிலிருந்து, இந்த உடன்படிக்கையின் மூலம் நிரந்தரத்தீர்வு வரும் என்று நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாதப் பிசாசு இந்த உடன்படிக்கையை விழுங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தமிழீழ மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தரத்தீர்வைத் தமிழீழத் தனியரசு மட்டும்தான் தரமுடியும் என்பதுதான் எனது கணிப்பும் மாறாத நம்பிக்கையுமாகும்’ என்பதோடு தமிழினத்தின் பாதுகாப்பை இந்தியாவின் கைகளில் அளித்தமையும், அதன் பின்னான இந்தியப் படைகளின் காலமென்பது இருண்டகாலமாகக் கடந்துவிடத் தமிழினம் தனது விடுதலை நோக்கிய பயணத்தில் வீறுடன் தொடர்ந்தது. அமைதிப்புறா வேடமிட்டு வந்த சந்திரிகா அரசும் தமிழின அழிப்பில் எந்த சிங்களத் தலைமைக்கும் தாம் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாபெரும் புலப்பெயர்வையும் இனஅழிப்பையும் மேற்கொண்டதை வரலாறு பதிவுசெய்துகொண்டது. பின்னாளில் சிறிலங்காப்படைகள் தீச்சுவாலையை மூட்டியதன் விளைவாக படைவலுவிலான முதுகெலும்பு முறிந்த நிலையில், புலிகளது படைவலு மேலோங்கியிருந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைப் படலத்தைக் கையிலெடுத்தனர். இம்முறை நோர்வே சமாதான முன்னெடுப்பில் களமிறங்கிச் செயற்படலானது. சிறிலங்கா அரசானது சமாதானச் செயற்பாடுகளை நேர்மையாகக் கையாளாது என்பதைத் குறிப்பிட்டவாறு தமிழர் தலைமை சமாதானத்தை நோக்கிய தனது மெய்நிலையை வெளிப்படுத்தியதோடு, அதனைக் கடைப்பிடித்துச் செயற்படலாயிற்று. ஆனால், மறுவளமாகச் சிறிலங்கா அரசதரப்பும் இந்திய – மேற்குலகக் கூட்டும் சமாதானத்தை தமிழினத்தின் இருப்பை தகர்க்கும் பொறியாகப் பயன்படுத்தியதோடு, படைவலுச் சமநிலையை மாற்றியமைத்ததோடு, புலிகள் மீதான தடையையும் ஏற்படுத்திச் சமாதான முன்னெடுப்புகளைப் பலவீனப்படுத்தியமையைத் தமிழினம் மனம்கொள்ள வேண்டும். இறுதியாக 2006ஆம் ஆண்டு ஒருதலைப்பட்சமாக சமாதான ஒப்பந்தத்தை கிழித்தெறிந்துவிட்டு மாபெரும் தமிழின அழிப்போடு 2009இல் ஆயுதப்போர் மௌனித்துவிடத் தமிழின அழிப்புத்தொடர்கிறது. தமிழின அழிப்பின் விளைவாக ஊதிப்பெருத்துவிட்ட படைத்துறை செலவினங்களோடு, போர் ஓய்ந்துவிட்ட 13 ஆண்டுகளிற் ஊழல்களும் சேர்ந்துவிட நாட்டில் பெரும் பொருண்மிய நெருக்கடி சூழ்ந்துகொண்டது. அந்தச் சூழலில் ஏற்பட்ட சிங்கள மக்களின் எழுச்சியின் விளைவாக, வீழ்த்த முடியாத முடிசூடா மன்னனாக வந்த கோத்தபாய ராயபக்ச அரசுத் தலைவர் பதவியிலிருந்து தப்பியோட, நாடாளுமன்றுக்குத் தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவாகி ஒரே ஒரு இருக்கையை மட்டும் கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க(ஐ.தே.க) அரசுத்தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சீனாவைப் பெருமளவிற் சார்ந்திருந்த ராயபக்சாக்களுக்கு மாற்றாக மேற்கின் சார்புநிலையாளரான ரணில் விக்கிரமசிங்க அரசுத் தலைவராகியுள்ளமை மேற்குலகிற்குச் சாதகமாகியுள்ளது. இந்தச் சூழலைத் தக்கவைக்கத் தமிழர்கள் மீண்டும் பலியிடப்படக்கூடிய வாய்ப்பே தென்படுகிறது. அமெரிக்கா முதல் யப்பான் என மேற்கிலிருந்து கீழ்த்திசைவரையான இராயதந்திரிகளின் வருகை ஒன்றும் புதிதல்ல. ஆனாற் தமிழினம் உற்றுநோக்க வேண்டிய வரவாக இருப்பவர் யாரென்றால் முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்கைம் ஆவார். சனாதிபதிக்கான காலநிலை ஆலோசகர் என்ற போர்வையில் எரிக் சொல்கைம் அவர்கள் களமிறங்கியுள்ளதை எச்சரிக்கை மணியாகவே கொள்ளவேண்டியுள்ளமை தமிழினத்தின் பட்டறிவாகும். சமாதானத் தூதுவராக அவர் ஆற்றிய பணியின் பயனாகத் தமிழினம் எந்தவொரு அனுகூலத்தையும் பெறவில்லை என்பது உலகறிந்த உண்மை. பேச்சுவார்த்தை என்ற போர்வையில் சமாதானப் பொறியினுள் இழுத்துவிடப்பட்டதன் விளைவாக நடைமுறை அரசைக்கொண்டிருந்த தமிழர்தேசம் தனி அரசுக்கே உரித்தான பல்வேறு நிர்வாகக் கட்டமைப்புகளோடு உருப்பெற்றிருந்த தாயகம் சிதைவடைந்ததோடு, மாபெரும் இனஅழிப்பையும் சந்தித்ததோடு, அது முள்ளிவாய்காலில் தரித்துவிடப் 13ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. 13 ஆண்டுகளில் இலங்கையானது தள்ளாடித் தள்ளாடி நகர்ந்தபோதும் கடந்த இரண்டு ஆண்டுகள், குறிப்பாகக் கோத்தபாய ராயபக்சவினது ஆட்சிக்காலம் பெரும் பொருண்மியச் சரிவுடன் கூடிய இன்னல் நிறைந்தகாலமாக மாறியது. இக்காலத்திற் புலம்பெயர் இலங்கையர் என்ற சொல்லாடலோடு தமிழர்களது பொருண்மிய முதலீடுகளை கவரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. எரிக் சொல்கைம் அவர்கள் கூட புலத்திலே உள்ள தமிழர்களிடம் அப்படியானதொரு கருத்தை முன்வைத்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே தமிழினம் எரிக் சொல்கைம் அவர்களது மாறுவேடத்திலான மீள்வருகை குறித்து விழிப்புடன் இருத்தல் அவசியமாக உள்ளது. முள்ளிவாய்க்கால் முதற் பாகத்தில் தமிழரது ஆயுதபலத்தை சிதைத்தழித்ததுபோல், தமிழினத்தின் அரசியற் கோட்பாட்டையும் இல்லாதொழிக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலோடு முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகத்திற் களமிறங்கியுள்ளாரா(?) என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஏனென்றால், எரிக் சொல்கைம் அவர்கள் இந்தப் 13ஆண்டுகளில் சமாதானத்தூதுவராக இருந்தவர் என்றவகையிலே, தனது பணிக்காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்துப் பேசியுள்ளாரா? தமிழின அழிப்புக் குறித்து கவலையையாவது தெரிவித்துள்ளாரா? காணாமற்போன தமிழர்கள் மற்றும் கையளிக்கப்பட்ட சிறுவர்களுட்படப் 13 ஆண்டுகளாகியும் விடையறிய முடியாதிருக்கும் நிலைகுறித்து அவரது நிலைப்பாட்டை விளக்கியுள்ளாரா? சேர்ந்து வாழ முயற்சியுங்கள் என்று சொன்னதைத் தவிர, தமிழினத்தின் அழிவுக்கு ஒருவகையில் தானும் கரணியமானவர் என்ற சிந்தனையின்றி சிறிலங்கா அரசியல்வாதிகள் போலவே பேசும் எரிக் சொல்கைம் அவர்களது வருகை ஐயத்திற்குரியதே. அது இரண்டாம் முள்ளிவாய்க்காலில் கொண்டு சென்றுவிடும் ஆபத்திற்குரியதாகவே நோக்க வேண்டியுள்ளது. தமது உறவுகளைப் பறிகொடுத்துவிட்டும், விடுதலைக்காக விதைத்துவிட்டும், கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கென்றே தெரியாது தேடியலைந்துகொண்டிருப்பது அரசியல்வாதிகளல்ல. அப்பாவி மக்களே. அந்த மக்களுக்கு அரசியற் களநிலவர உண்மைநிலை தெரியவேண்டும். எனவே, இனிவரும் காலங்களில் தமிழினத்தின் எந்தவொரு தரப்பும், தமிழரது அரசியற்தீர்வு தொடர்பான விடயங்களை மூடிய கதவினுள் பேசும்நிலை மாற்றப்பட வேண்டும். வெளிப்படையான அணுகுமுறைகள் மட்டுமே இன்றைய தேவையாகும். அதனூடாக மட்டுமே இன்னொரு முள்ளிவாய்க்காலைத் தமிழினம்; தவிர்க்கமுடியும். நன்றி மா.பு.பாஸ்கரன் (ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவரும் ‘கார்த்திகைத் தீபம்’ நவம்பர் 2022, இதழ் 9இல் வெளியான ‘முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?’ கட்டுரையைக் குறியீடு இணையத்தில் பிரசுரித்துள்ளோம்) முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன் – குறியீடு (kuriyeedu.com)