Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5737
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by nochchi

  1. கொடுத்த வெளிநாடுகளும் கூட்டு இனக்கொலையாளிகளும் தமிழினப்படுகொலையை ஏற்க மறுப்பதன் அடிப்படையே, சிறிலங்கா தங்களையும் காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் சிறிலங்காவைப் பாதுகாத்துத் தமக்கு தற்காப்புநிலையெடுக்கிறார்கள். உண்மையான இதயசுத்தியோடு மனித உரிமைகள் குறித்துக் கவலைப்படுவதாயின் திருமதி கயேந்தினி பாபு அவர்களது இந்தப் பதிவை ஏற்று விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அதுதான் நீதிக்கான நேர்மையான அணுகுமுறையாக இருக்கமுடியும். ஆனால் செய்வார்களா? அல்லது இதுபோன்ற வாழும் சாட்சிகளையும் அழிக்கத் துணைபோவார்களா? நன்றி
  2. இணைப்புக்கு நன்றி. படைப்பாளர்களுக்குப் பாராட்டுகள்.
  3. மனதுக்குள் வேதனைகள் புதையுண்டு நிற்கும் காலத்தில் தமிழகத்திற் புதையுண்டுபோன அரியபல பொகிசங்கள் கிடைத்துள்ளமை மகிழ்வைத்தருகிறது. தமிழ் அழியாது. தமிழை ஏளனம் செய்வோரே கற்றுக்கொள்ளும் நிலை இந்தியாவில் தோன்றும். சோழ மன்னர்களது செயலால் தமிழ் மீண்டுவருகிறது. இந்திய ஆரிய உயர்வர்க்கத்தினருக்கு உவப்பான செய்தியல்ல. ஆனால், வரலாற்றை மறைத்துவிமுடியாதபடி ஆலயங்களில் இருந்து வெளிவருகின்றன. இணைப்புகளுக்கு நன்றி.
  4. உண்மையில் இந்தத் வரலாற்றுத் தொடரைப் படிக்கும்போது திரு அமிர்தலிங்கம் அவர்களது நிலையை அறியமுடிகிறது. இங்குதான் உண்மைகளை அறிந்தவர்கள் அது எதுவாயினும் தயங்காது பதிவிடுவது தெளிவை ஏற்படுத்தும்.
  5. அன்பார்ந்த நட்புடன் றஞ்சித் அவர்களுக்கு மிகச்சிறந்ததொரு செயலைச் செய்துவருகின்றீர்கள். எமது தலைமுறை அறியாத அரசியல் வரலாற்று நகர்வுகளையும், எமது அடுத்தலைமுறை அறிந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய அரசியற் தந்திரோபாயங்களையும் கொண்டதாக இந்தத் வரலாற்று விரிப்புத் திகழ்கிறது. முழுமையடையும்போது இதனை யாழ்க்களம் சார்பாகப் பிரதியாக்கம் செய்து கைகளிற் கிடைக்கச் செய்தால் சிறப்பாக இருக்கும். நிதியை நாமே போட்டுச் செய்துவிடலாம். உங்கள் பொன்னான நேரத்துக்கு கரங்களை நன்றியோடு பற்றுகின்றேன். தமிழினம் கொண்டாடும் ஒரு வரலாற்று நாயகனின் காலத்தில் தமிழினத்திற்காக எதையுமே செய்யாது ஓடிவந்தோமே என்ற வருத்தமும் மேலெழுந்து வாட்டுகிறது. கருத்துகளைப் பதியாவிடினும் படிக்கின்றோம். தொடருங்கள்.... உழைப்பிற்கான பெறுமதியைக் காலம் பதிவுசெய்யும். நன்றி
  6. தன்னையும், தனது அடுத்தலைமுறையையும் அர்பணித்துவிட்டுத் தமிழரது மனமெங்கும் வாழும் வீரத்தலைவன் 'மேதகு' வே.பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்!
  7. தங்கள் நேரத்திற்கும் தகவலுக்கும் நன்றி. பயனுள்ள தகவல். வெய்யிலின் வேகத்தைப் பார்த்துக் கடந்த ஆண்டு ஒரு இளைஞர் எதிர்காலத்தில் பாம்புகளும் வரலாமெனக் கூறினார். யாரறிவார்.
  8. கொலைசெய்யும் தலைமைகளை அதே மக்கள்தானே தேர்வு செய்கிறார்கள்? எப்படி மாற்றம் வரும்.
  9. கடவுச்சீட்டைத் திருடிச் சென்றார்கள் என்ற போர்வையில் தமிழரை உளவுபார்க்கவும் குழப்பங்களை ஏற்படுத்தவும் பயிற்றுவிக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
  10. இலங்கைத்தீவிலே தமிழினத்தினது சாபக்கேடே தொலைநோக்கும் பொதுநலநோக்கில் நிகழ்நிலைச்சூழலை கையாளமுடியாத தமிழர்தரப்புத் தலைமைகளே. வெறுமனே சிறீலங்காவையும் இந்திய அரசவிசுவாசத்தையும் பேணியவாறு தமினத்தைக் கரையேற்றநினைப்பது'மண்குதிரையை நம்பி ஆற்றில் இறக்(ங்)குவதற்கு ஒப்பானது' என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.
  11. ஒரு நாட்டின் பிரதமராக இந்தக் கருத்து, ஏதோ பெரிய சாதனை செய்ததுபோல் காட்டும்முயற்சியாக இருக்கிறது. யாழ்ப்பாணம் சென்றதற்கான உண்மையான வெளிப்பாடாகத் தமிழர்கள் வீடுகளில் தேனும் பாலும் ஓடத்தேவையில்லை. அந்த மக்கள் தமது சொந்தவளவில், ஆக்கிரமிப்புப் படைகளின் அச்சுறுத்தலின்றி இருப்பதற்கான ஏற்பாட்டைச் செய்திருப்பின் இந்தக் கூற்றுப் பெருமைபெற்றிருக்கும். ஒரு உல்லாசப்பயணியின் பயணம்போல் அமைந்ததேயென்றி தமிழருக்கு ஏதும் நன்மைகள் விளைந்தனவா?
  12. ஒரேமூச்சில் படித்துமுடித்தேன். சிறப்பு. ஒவ்வொரு கட்டத்தையும் அதனுள் வாழ்ந்து செல்வதுபோல் எழுதியமையைப் பார்க்கும்போது கற்பனை என்று சொல்லமுடியாத அளவுக்கு நகர்கிறது. நிர்மலா கதிரவனது கூடலை வடித்தமை அந்தக்காலகட்டத்தைக் கடந்த 50 – 60ஐக் கடந்தோருக்கு கற்பனைக் குதிரைகளைப் பின்னோக்கிப் ஓடவிட்டு இரசிக்கும் வகையாகும். ஒரு பெரும் நாவலுக்கு நிகரான கனதியைத் தொட்டுநிற்கிறது. உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும். நேரம்கிடைக்கும்போது நிச்சயம் வாசிப்பேன்.கதைகள் மனிதர்களை மட்டுமல்ல காலத்தையும் மீட்கின்றன. வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக. நன்றி
  13. Thaainilam- Land Grabbing The Real Pandemic for the Tamils in Sri Lanka - A Documentary (Feb 2022) அண்மைக்காலத்தில் தாயகத்தின் நில ஆக்கிரமிப்புத் தொடர்பாகவந்த பதிவாக உள்ளது. எமது தாயகத்தின் நிலப்பறிப்போடு தொடர்புடைய அனைவரும், குறிப்பாக எமது வளரிளம் தமிழர்கள் அறியவேண்டிய பல விடயங்கள்(முழுமையா இல்லாதபோதும்) உள்ளன. இதனை திண்ணையில் பகிர்ந்த ஏராளனவர்களுக்கு நன்றி நன்றி - யூரூப் சிறுபிழைதிருத்தம்
  14. யஸ்ரின் அவர்களுக்கு, மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் படிப்போருக்கு ஆர்வமேற்படும் எழுத்துநடையோடு எழுதியமைக்கும், நேரத்துக்கும் பாராட்டுடனான நன்றி. இந்தக் கட்டுரையைப் படித்தபோது எனது மனதிற் தோன்றியதை பதிகின்றேன். யுத்தம் எப்போதுமே கொடுமைகள் சூழ்ந்த வயல்களாகவும் சாக்க்காடுகள் ஊடாக நகரும் பெரும் அரக்கனாகவும் தோற்றம்கொண்டு ஆடியபோதும். முடிவில் சமரசங்களை எட்டத்தவறவில்லை. ஆனால் மிகவும் சிறிய நாடான இலங்கைத்தீவில் போர்முடிவுற்ற 14ஆண்டுகளில், போர்காலம் தடுத்துவைத்திருந்த நில ஆக்கிரமிப்பும்,பண்பாட்டு அடையாள அழிப்புமாக வேகமாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத்தொடர்கிறது. ஏன்? இலங்கை அவளவு சக்திவாய்ந்த நாடா? அல்லது உலகின் செல்லப்பிள்ளையா? அல்லது உலகம் ஈழத்தமிழினம் அழிவதை விரும்பி மௌனித்திருக்கிறதா? நன்றி
  15. போர்க்காலத்தில் இவரது செய்திகளைத் தேடி படித்துப்பார்த்துள்ளேன். சிறந்ததொரு ஊடகவியலாளர். அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
  16. அழிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் அத்திபாரங்கள் பிடுங்கப்படுகின்றனவா ? - ஸ்ரீநேசன் Published By: VISHNU 12 APR, 2023 | 05:16 PM பௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பௌத்த பிக்குகளின் கோரிக்கையில், தமிழர் தேச அத்திவாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பில் வைத்து புதன்கிழமை (12.4.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை சிங்கள அடிப்படைவாத ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். தற்போது,பாரிய தமிழின அழிப்பின் பின்னர், தமிழர் தேச அத்திவாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை தொடர்ந்து மேற்கொள்கின்றனர். தமிழின ஒடுக்கு முறையானது அச்சுறுத்தல், மிரட்டல், இன அழிப்பு, சொத்தழிப்பு, வெளியேற்றல், அகதிகளாக்கல்,நாட்டை விட்டு அகற்றல், ஆக்கிரமித்தல்,சிங்கள மயமாக்கல் என்ற பொறிமுறைகளில் நடைபெற்றன. 1948 இல் இருந்து இன்று வரை அப்பொறிமுறைகள் நடைபெறுகின்றன.2009 இல் இன அழிப்புப் பொறி முறை அதியுச்சமாக நடை பெற்றது. கடத்தல், கப்பம் பறித்தல்,காணாமல் ஆக்குதல், வதைத்தல் வன்புணர்வாடல், அழித்தல், சடலங்களைக் காணாமல் ஒளித்தல், சாட்சியங்களை அழித்தல், மிரட்டல் என்ற அடிப்படையில் அது தொடர்ந்தது. இப்படியாகத் தமிழர் தேசம் பேரின அராஜகர்களால் முடியுமான வரை அழிக்கப்பட்டது. தற்போது அழிக்கப்பட்ட தேசத்தின் அத்திவாரக்கற்கள் பிடுங்கப்படும் இறுதிச் செயற்பாடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்றன. பௌத்தசாசன, மகாவலி, வனவள, வனசீவராசிகள் அமைச்சுகள் போன்றவற்றின் வழிப்படுத்தலில் தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வன வளத்திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம் போன்ற வற்றின் செயற்படுத்தலில், பௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள் படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கில் தமிழர்களின் விடுதலைப்புலிகள் என்ற பலமான சக்தி மெளனிக்கப்பட்டதன் பின்னர், சிங்கள பெளத்த மயமாக்கல் பொறிமுறை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவில் வெடுக்கு நாறிமலை, முல்லைத்தீவில் குருந்தூர், மலை, மட்டக்களப்பில் குசலான மலை, நெலுக்கல் மலை, திருகோணமலை கன்னியா, கோணேஸ்வரர் ஆலயம், அம்பாறையில் சங்கமான்கண்டி, மாணிக்கமடு, கஞ்சி குடிச்சாறு போன்ற இடங்களில் தமிழர் கலாசார அத்திவாரங்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு சிங்கள பெளத்த கலாசாரத்தினை செயற்கையாக நடுகின்ற பலவந்தமான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அரசின் அதிகாரம், பெளத்த பிக்குகளின் ஆணை, படையினரின் கெடுபிடிகள், அடக்கு முறைகள் மத்தியில் தொல்லியல் என்ற போர் வையில் ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன. தமிழர்கள் தமிழ்த் தேசியக்கட்சிகள், தமிழ் சிவில் அமைப்புகள், மதத்தலைவர்கள் 24 மணித்தியாலம்களும் விழிப்புடன் இருந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் பலமான போரியல் சக்தி பலவீனமான பின்புதான் இப்படியான ஆக்கிரமிப்புகள் தீவிரம் அடைந்துள்ளன. எனவே தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள்? என்பதற்கான நியாயத்தினை தற்போது பேரினவாதிகள் மீண்டும் இளைய சந்ததியினருக்கு வெளிக்காட்டி வருகின்றனர். தமிழ் இளைஞர்,யுவதிகளை போராட்டத்தை நோக்கித் தள்ளியவர்கள் சிங்களப் பேரினவாதிகளேயன்றித் தமிழர்கள் அல்லர். தமிழர்களின் அகிம்சையான போராட்டத்தை சிங்கள அரசு ஒடுக்கியதால், இளைஞர்கள் அகிம்சையில் நம்பிக்கை இழந்து ஆயுதங்களை ஏந்த வேண்டி ஏற்பட்டது. இப்போது சிங்கள இனவாதம் அதனையே மீண்டும் செய்து வருகின்றது. குட்டக் குட்ட குனிந்து கொடுப்பவன் மடையன் என்பார்கள். அன்று சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து முப்பதாண்டுகளாகக் குட்டுப்பட்ட தமிழர்கள் நிமிர்ந்த போது அது ஆயுதப் போராட்டமாக வெடித்தது என்பதை அதிகார வர்க்கம் மறக்கக் கூடாது. 2009 இன் பின்னர் மீண்டும் தமிழர்களுக்கு குட்டுகள் விழுந்த வண்ணம் உள்ளன. 14 ஆண்டுகளாக மீண்டும் குட்டுகள் தொடர்கின்றன. யுத்த சகதிக்குள் மறைந்து போன உண்மைகள் நீதிகள் இன்னும் வெளிக்கவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னும் வழங்கவில்லை. அன்பின் வடிவான கௌதம புத்தரின் சிலைகள்,வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ளன.அடுத்த தேர்தலுக்கான அடிப்படைவாத செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. சிங்கள பௌத்தத்தின் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் கலாசாரங்கள் பிடுங்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கல தீவிரமடைந்துள்ளன. இணக்க அரசியல்,அபிவிருத்தி அரசியல்,மண்மீட்பு அரசியல் என்று புலம்பி பதவி சுகம்,பணசுகம் அனுபவிக்கிறார்கள் தமிழின எடுபிடி அரசியல்வாதிகள். தினமும் போராட வேண்டிய நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களை மீண்டும் அடக்கி ஒடுக்குவதற்கும், பயங்கரவாதிகளாக சித்திரிப்பதற்கும் பயங்ரமான சட்டத்தைக் கொணர சிங்கள அதிகார வர்க்கம் துடிக்கிறது. அதற்குத் தலைகளாட்ட தமிழர் விரோதத் தமிழ் அமைச்சர்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுக்கோ சலுகைகளில் கொண்டாட்டம், மக்களுக்கோ உரிமைக்கான போராட்டம் தொடர்கிறது. என தெரிவித்துள்ளார். அழிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் அத்திபாரங்கள் பிடுங்கப்படுகின்றனவா ? - ஸ்ரீநேசன் | Virakesari.lk
  17. தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை உரத்து பேசும் 'யாத்திசை' Published By: PONMALAR 11 APR, 2023 | 01:02 PM தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் தென் திசையை குறிப்பிடும் சங்க கால சொல்லான 'யாத்திசை' எனும் பெயரில் தமிழில் புதிய படைப்பொன்று வரவிருக்கிறது. இதன் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. எயினர்கள், ரணதீர பாண்டியன், போர்க்களம், சங்கக் கால தமிழில் உரையாடல், விறலியர் ஆட்டம் எனும் நாட்டியத்தை ஆடும் தேவரடியார்கள்... என பல விடயங்கள் இடம் பெற்றிருந்ததால், இந்த முன்னோட்டத்திற்கு உலக தமிழர்களிடையே ஆச்சரியப்படும் வகையிலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இந்நிலையில் வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் மற்றும் சிக்ஸ் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே ஜே கணேஷ் தயாரித்திருக்கும் 'யாத்திசை' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் திரளாக பங்குபற்றினர். அறிமுக இயக்குநர் தரணி ராஜேந்திரன் பேசுகையில், '' நான்காண்டுகளுக்கு முன்னால் தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்பை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 'யாத்திசை' படத்தின் கதையை உருவாக்கினேன். இதனை கதையாக யாரிடம் சொன்னாலும்... எந்த தயாரிப்பாளரிடம் சொன்னாலும் அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. ஆனால் எம்முடைய தயாரிப்பாளர் கே. ஜே. கணேஷ், என் மீதும் எங்கள் குழுவின் மீதும் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தார். முதலில் எம்முடன் படத்தொகுப்பாளர் மகேந்திரன் அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து இந்த படைப்பை செழுமைப்படுத்தினோம். நாங்கள் கண்ட கனவு தான் இந்த யாத்திசை. ஏழாம் நூற்றாண்டில் நடைபெறுகிற.. வரலாற்று ஆவணங்களை தழுவிய புனைவு கதை இது. இதற்காக அந்த காலகட்டத்திய மக்களின் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், உடை, உணவு, அரசியல், மொழி.. ஆகியவற்றில் பார்வையாளர்களுக்கு நம்பகத் தன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காக எங்களுடைய தேடலை தொடங்கினோம். அதிலும் குறிப்பாக அந்த காலகட்டத்தில் மொழியை மீளுருவாக்கம் செய்து கதாபாத்திரங்கள் பேச வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது... அனைவரும் இது தற்போதைய காலகட்டத்தை பார்வையாளர்களுக்கு புரியாமல் போய்விடுவதற்கான வாய்ப்பு அதிகம் என தெரிவித்தனர். இந்த சிக்கல் தற்போது வரை நீடிக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் இது தொடர்பாக எம்மிடம் பேசுகையில், ''திரைப்படம் என்பது வணிகம் சார்ந்த படைப்பாக இருந்தாலும், அதனுள் ஒரு கலை அம்சம் பொதிந்திருக்கிறது. இந்த படைப்பின் ஜீவன் மொழிதான். தொல்குடிகள் பேசிய அந்த மொழிகள்தான் இதன் உயிர். அது எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்'' என்றார். தொடக்கத்தில் இந்த திரைப்படத்திற்கு ஏராளமான தடைகள் இருந்தது. ஆனால் தற்போது இந்த திரைப்படம் தயாராகி, முன்னோட்டம் வெளியானது. இதற்கு எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டு ஆதரவளித்திருக்கிறார்கள். இதனை எங்களின் முதல் வெற்றியாக காண்கிறோம். யாத்திசை தமிழ் சினிமாவைக் கடந்து, இந்திய சினிமாவில் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும். ஏனெனில் இது ஒரு புதிய முயற்சி. இந்த திரைப்படம் விமர்சகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கருத்தியல் ரீதியாக விவாதத்தை உண்டாக்கும். மாற்று சினிமா குறித்த சிந்தனையை தூண்டும். '' என்றார். எயினர் மற்றும் பெரும்பள்ளி எனும் தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் சக்தி மித்திரன், சேயோன், குரு சோமசுந்தரம், சந்திரகுமார், ராஜலட்சுமி, செம்மலர் அன்னம், சுபத்ரா, சமர், விஜய் சேயோன், ரூபி, ராஜசேகர், வைதேகி, சீனு என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். வரலாற்று காலகட்டத்த்திய திரைப்படமாக தயாராகி இருக்கும் இதனை 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாக்கியலட்சுமி' ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் தயாரிப்பாளரான கே. ஜே. கணேஷ் தயாரித்திருக்கிறார் இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது. தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை உரத்து பேசும் 'யாத்திசை' | Virakesari.lk
  18. வாலியவர்களே சுட்டியமைக்கு நன்றி. யேசுவையே கொன்றவர்கள் மற்றவர்களை வாழவிடவா போகிறார்கள்.
  19. என்ன நரியாரைக் கதிரை இருத்திவிட்டு, குள்ளநரி பூங்கொத்தோட.... அடுத்த தேர்தலில் நிற்கும் திட்டத்தோடுபோல் தெரிகிறது.
  20. யேசு அமைதியின் போதனையாளரெனத் தொடரும் இவர்களால் எப்படி இன்னொரு மதத்தினர் தொழும்போது அதனைக் குழப்பியடித்து குருதிக்கறைகளால் வேதாகமத்தை எழுதுமுடிகிறது.
  21. நல்ல மனிதர்களும், நல்ல குமுகாயமும், நல்ல சூழலும் அமைந்துவிட்டால் அவர்களது அரசியலை எதைவைத்து நகர்த்துவது. எனவே அரசியல்வாதிகள் குமுகாய உட்கட்டுமானத்தின் தளம்பலைப் பெரிதாக எடுத்து நடவடிக்கைகளில் இறங்கமாட்டார்கள். அவர்களுக்கும் அரசுக்கும் மக்கள் எப்போதும் அல்லாடிக்கொண்டு ஒரு அரைகுறை வளத்தோடும், பிரச்சினைகளோடும் வாழ்தலே வாய்ப்பானது என்ற தெளிவோடு நடப்பவர்கள். எந்தத் தமிழ் அரசியற் கட்சியிடமாவது இறுதிக்கட்ட இன அழிப்புக் கொடுமைகளின் பதிவுகளோ, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களது தகவற்றிரட்டோ இருக்கிறதா? கிராமசபை முதல் மாகாணசபை வரை ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்தவர்களால் இதைக்கூடச் செய்யமுயவில்லை என்பதே சிங்களத்துக்கு செம்புதூக்கும் அரசியலே. நாடாளுமன்ற மேசைகளை உரையாற்றி உடைப்பது வெறும் பாசாங்கு மட்டுமே. இன்றிருக்கும் எந்தவொரு அரசியற்கட்சியாலும் ஒருபயனும் இல்லை. இன்னும் கால்நூற்றாண்டு கடக்கும்போது பெருமளவான தமிழர் பகுதிகள் அரைச்சிங்களமயமாகிவிடும் சூழலே தென்படுகிறது. குமுகாயக் குற்றங்கள் மலிந்தவிடும் நாடாக இலங்கைத்தீவு மாறி நீண்டநாட்களாவிட்டதோடு, இன்று தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள வெளிநாட்டு மோகமும்(குறிப்பு: இதைவைத்து என்னிடம் கேட்கவேண்டாம். நீரென்ன தாயகத்திலா இருந்து எழுதுகிறீர் என்று என்பதையும் அறியத்தருகின்றேன்) ஒரு கரணியமாகிக் குமுகாயச் சிந்தனை மலினமாகிவிட்டது போன்றனவும், எமதினம் பலவீனமாவதற்கு அடிப்படையாக உள்ளன. எடுத்துக்காட்டிற்காக.... அண்மையில் அறிந்த ஒரு விடயத்தை தொடர்கின்றேன். திருமணமான ஒரு பெண்மணி ஒருகோடி செலவுசெய்து ஸ்கண்டினேவியன் நாடொன்றில் தஞ்சம். அவரைக்கூப்பிட இவ இனிச்சில சட்டவரம்புகளைக் கடக்கவேண்டும். எவளவு காலமென்று தெரியாது. இதனிடையே அந்தப்பெண்மணிக்கு வருத்தம் வேறாம். கணவரோ அங்கே. அவர் ஆட்டோ ஓடுவதும் தண்ணியடிப்பதும் பொழுதுபோக்குவதுமாக இருக்கிறார். எமது குடும்பங்கள் இந்தநிலைக்கு எப்படி எத்தனித்தன என்பதே பெரும் வினா? இது ஒரு தெரிந்த சீரழிவு. இப்படி எத்தனை இருக்கிறதோ? இங்கே குறைந்தபட்சம் குமுகாய ஆர்வலர்கள், கல்விமான்கள், உளவியலாளர்கள், ஊடகத்துறையினர் என இணைந்து பரந்துபட்ட கருத்தியல் தளத்தை உருவாக்கி குமுகாய விழிப்புணர்வையும், பாலியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதோடு, பெற்றோரை இழந்தோ, பிரிந்தோ வாழும் குழந்தைகளை கிராமிய, நகரக் கட்டமைப்புகள் சிறுவர் காப்பு வலையமைப்பை நிறுவித் தரவுநிரலாக்கம் செய்து வாரமொரு தடவையாவது அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி உரையாடி அவர்களது நிலையை அறியவும் உதவவும் முன்வருவார்களாயின் 90வீதக் கொடுமைகளைத் தடுக்கலாம். இது தனியொருவரால் முடியாது. ஒட்டுமொத்த குமுகாயமும் மாந்த நேயத்தோடு குழந்தைகளை நோக்கும்போது மட்டுமே சாத்தியமாகும்.
  22. நன்றி, யாழினது கம்பீரத்தைப் பாடும் அழகான கவிப்படையல். பல உறவுகளது உள்ளக்கிடக்கையும் கூட.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.