Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5737
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by nochchi

  1. சுவி அவர்களுக்கு, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி
  2. பூபதித்தாயே வணங்குகின்றோம்! வாழ்வுத் தேடலில் சுழன்றிடும் தாய்மையின் வரம்பினை உடைத்து வரலாற்றுத் தாயாகி தேசத் துயரினை நெஞ்சினில் ஏந்தியே பாசத் தாயாகிப் பசியேற்று நோன்பிருந்து தமிழீழத்து வெளியெங்கும் நிறைந்தாயே தாயே! நீதிக்காய் இன்னும் கண்திறக்கவில்லை என்று நீதியே சாவுக்குள் நிலையிழந்து கிடந்தாலும் நீதிக்காய் நீண்ட காத்திருப்பு நிச்சயமாய் ஒருநாள் பெருந்தீயாய் எழுகின்ற வேளைவரும் காலமதில் மாமாங்க முன்றலிலே ஒளிதோன்றும் தாயே! நின் பசிதீரும் அப்போது பகலாகும் தாயகமே நிழலரசை இழந்த இனம் நிலையரைசைக் கையேற்கும் எம் இளைய தலைமுறையோ தாயகனின் சிந்தனையை புதிய திசைவழியே பதியமிடும் காலமதில் நின் முகமாக நிலம் பூக்கும்! நிலம் பூக்கும் நீர் நிலைகள் வழிந்தோடும் பாவலரும் ஆடலரும் கூடியுந்தன் புகழுரைப்பர் தமிழீழப் பெண்களது தனித்துவத்தின் குறியீடாய் தமிழ் உலகு உள்ளவரை வாழும் புகழ்படைத்த எழுச்சியின் வடிவான பூபதித்தாயே வணங்குகின்றோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. மைத்துனரின் இழப்பால் துயருற்றிருக்கும் தமிழ்சிறி அவர்களோடும், அவரது பிரவால் துயருற்றிருக்கும் உறவுகளோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
  4. தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா. Posted on March 19, 2023 by சமர்வீரன் 572 0 தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா. – குறியீடு (kuriyeedu.com)
  5. இணையவலை உலகில் தமிழில் உரையாடல் வெளிக்கான கருத்தாடல்களைச் செய்வதற்கான களமாகவும், கருத்துமோதல்களையும் தெளிவுகளையும் ஏற்படுத்தும் களமாகவும், சிந்திக்க, சிரிக்க, படிக்க, எழுத, படைக்க எனப் பல்வகைமைகளிலும் ஒட்டி உறவாடிச் செல்லும் உறவாகப் பயணிக்கும் உனக்கு அகவை 25. உறவுகள் வருவதும் போவதுமானபோதும் நீ மட்டும் நிமிர்வோடும் தெளிவோடும் தமிழுக்கு ஆற்றிவரும் பணி ஒப்பிடமுடியாதது. உனது பணி இன்னும் பல்லாண்டு தொடர வாழ்த்துகின்றேன். வாழிய வாழிய வாழியவே! இதனைப் பல சிரமங்களுக்கு மத்தியில் நகர்த்திவந்த மோகன் அவர்களதும் மற்றும் அனைத்து நிர்வாகத்தினரதும் கரங்களை நன்றியோடு பற்றிக்கொள்கின்றேன். தொடரட்டும் உங்கள் பணி. "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" என்ற வள்ளுவப்பெருந்தகையின் ஈரடிகள் யாழுக்குச் சமர்ப்பணம். அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. வணக்கம் தமிழ்சிறி அவர்களே, சிலவேளைகளில் நேரம் ஒத்துழைப்பதில்லை. ஆனாலும் யாழில் எழுதாவிட்டாலும் பார்க்காமல்விடுவதில்லை. நேரமில்லாவிடினும் எட்டிப்பார்த்துவிட்டாவது போவதுண்டு. சோர்வேற்படும்போது சரி பிழைகளுக்கப்பால் சிலரது கருத்துகளை வாசிப்பதே உற்சாகம் தரும். சிலவேளையில் நான் யோசிப்பதுண்டு, எமது முன்னோரது அங்கத உணர்வு எங்கேபோனது. இந்த அவசர உலகத்துள் அமிழ்ந்தழிந்து போனதா என்று, ஆனால் யாழைப்பார்க்கும்போது அப்படியில்லையென்று எண்ணுவதுண்டு. அப்படி அழகான எழுத்துநடைகொண்ட எழுத்தர்களை யாழ்க்களம் இனம்காட்டிவருகிறது. சிந்திக்க, சிரிக்க, கற்றுக்கொள்ள..... இன்னும் பலவாக எம்மை இணைக்கும் யாழே இன்னும் பல்லாண்டு வாழ்க. நீங்கள் எப்படி? உடல்நலம் சீராகிவிட்டதா?
  7. ஓவியத்தைப் படைப்பது ஒரு கலை. அதனை விளங்கிக்கொள்ளலும் ஒரு கலையே. சிறப்பான பார்வை. 25இல் உள்ள எண்களை யாழ். என்னும் இசைக்கருவி போல் வடிவமைத்து அதில்... தேவையான அளவுடன் வெள்ளி மற்றும் தங்க நிறங்களில்... மெரு கூட்டியமை இன்னும் சிறப்பாக உள்ளது.எனக்கும் முதலில் தோன்றியது இந்த 25உம் யாழும்தான். நான் உங்களவு ஆழமாகப் பார்க்கவில்லை.
  8. யாழ்களத்தின் தடுமாற்றமற்ற இயங்குநிலையின் அத்திவாரமே இதுதான். தொடரட்டும் உங்களனைவரதும் பணி. நிமிரட்டும் தமிழும் தமிழரும் தமிழர்தேசமும் நின்றுநிலைக்கட்டும்.
  9. புலத்திலே கலைத்திறன்களோடு வளரிளம் தமிழர்கள்-5.3.2023. Posted on March 13, 2023 by சமர்வீரன் 299 0 தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும் நடைபெற்றதைத் தொடர்ந்து வடமத்திய மாநிலத்துக்கான போட்டி 05.03.2023ஆம் நாளன்று கற்றிங்கள் நகரத்திலே நடைபெற்றது. தமிழர் கலைகளிற் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகளோடு தமிழாலாய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களென ஒருங்கிணைந்ததோடு, அரங்காற்றுவோரும் கலைச் சுவைஞர்களுமாக அரங்கும் மண்டபமும் தமிழர் கலைகளோடு ஒன்றித்திருந்தமை சிறப்பு. கலைத்திறன் போட்டியிலே துணிவோடும் ஆர்வத்தோடும் பங்கேற்றவர்களுக்கான மதிப்பளிப்பு ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் வழங்கப்பட்டது. 9:00மணிக்கு மங்கலவிளக்கேற்றலோடு தொடங்கிய போட்டி, கலைத்திறனை வெளிப்படுத்தி முதல் முன்றுநிலைகளைத் தமிதாக்கிய வெற்றியாளருக்கான மதிப்பளிப்பைத் தொடர்ந்து நாளை எம் தேசம் விடியும் என்ற நம்பிக்கையோடு மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி நிறைவுற்றது. புலத்திலே கலைத்திறன்களோடு வளரிளம் தமிழர்கள்-5.3.2023. – குறியீடு (kuriyeedu.com) புலத்திலே கலைத்திறனோடு களமாடும் வளரிளம் தமிழர்கள் Posted on March 22, 2023 by சமர்வீரன் 181 0 தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும், வடமத்திய மாநிலத்துக்கான போட்டி 05.03.2023ஆம் நாளன்று கற்றிங்கன் நகரத்திலும் நடைபெற்றதைத் தொடர்ந்து தென்மாநிலத்துக்கான போட்டி 11.03.2023அன்று ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது. தமிழர் கலைகளிற் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகளோடு தமிழாலாய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களென ஒருங்கிணைந்ததோடு, அரங்காற்றுவோரும் கலைச்சுவைஞர்களுமாக அரங்கும் மண்டபமும் தமிழர் கலைகளோடு ஒன்றித்திருந்தமை சிறப்பு. கலைத்திறன் போட்டியிலே துணிவோடும் ஆர்வத்தோடும் பங்கேற்றவர்களுக்கான மதிப்பளிப்பு ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் வழங்கப்பட்டது. 9:00மணிக்கு மங்கலவிளக்கேற்றலோடு தொடங்கிய போட்டி, கலைத்திறனை வெளிப்படுத்தி முதல் மூன்றுநிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளருக்கான மதிப்பளிப்பைத் தொடர்ந்து நாளை எம் தேசம் விடியும் என்ற நம்பிக்கையோடு தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி நிறைவுற்றது. புலத்திலே கலைத்திறனோடு களமாடும் வளரிளம் தமிழர்கள் – குறியீடு (kuriyeedu.com) தமிழ்க்கலைகளோடு கலைத்திறனில் களமாடும் வளரிளம் தமிழர்களின் எழுகை -18.03.2023 Posted on March 26, 2023 by சமர்வீரன் 121 0 தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் 19.02.2023, 04.03.2023, 05.03.2023 மற்றும் 11.03.2023 ஆகிய நாட்களில் முறையே வட, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்வாண்டிற்கான கலைத்திறன் போட்டியின் நிறைவாகத் தென்மேற்கு மாநிலத்திற்கான போட்டி 18.03.2023ஆம் நாளன்று சுள்ஸ்பாக் – நியூவைலர் நகரில் நடைபெற்றது. தமிழர் கலைகளிற் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகளோடு தமிழாலாய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களென மண்டபம் நிறைந்திருக்க, அரங்காற்றுவோரும் கலைச்சுவைஞர்களுமாக அரங்கும் மண்டபமும் தமிழர் கலைகளோடு ஒன்றித்திருந்தமை சிறப்பு. கலைத்திறன் போட்டியிலே துணிவோடும் ஆர்வத்தோடும் பங்கேற்ற போட்டியாளர்களுக்கான மதிப்பளிப்பு ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் வழங்கப்பட்டது. 9:00 மணிக்கு மங்கலவிளக்கேற்றலோடு தொடங்கிய போட்டியில் கலைத்திறனை வெளிப்படுத்தி மாநில மட்டத்தில் முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்கள் அரங்கிற்கு அழைத்துப் பாராட்டப்பட்டன. அதேவேளை குழுநிலை மற்றும் தனியொருவருக்கான போட்டியென இருபிரிவுகளிலும் முதல் மூன்று நிலைகளைப்பெற்ற வெற்றியாளருக்கு மதிப்பளிப்புப் போட்டியரங்கிலே வழங்கப்பட்டது. போட்டியின் நிறைவில் நாளை எம் தேசம் விடியும் என்ற நம்பிக்கையோடு தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி நிறைவுற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப்பொறிமுறைக்குட்பட்ட ஐந்து மாநிலங்களிலும் முதல் மூன்றுநிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்கள் 33ஆவது அகவை நிறைவுவிழா அரங்குகளில் சிறப்பான மதிப்பளிப்பைப் பெறவுள்ளன. தமிழ்க்கலைகளோடு கலைத்திறனில் களமாடும் வளரிளம் தமிழர்களின் எழுகை -18.03.2023 – குறியீடு (kuriyeedu.com)
  10. வணக்கம் குமாரசாமி ஐயா, இவை ஐந்து மாநிலங்களிலே நடைபெற்றுள்ளன என இந்தச் செய்தியூடாக அறிந்துகொண்டேன். நேரமின்மையால் ஏனையவற்றை இணைக்க முடியவில்லை. நீங்கள் சுட்டும் இங்கே ஒளிர்கின்ற மாற்றுக்கருத்து மாணிக்கத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் உங்களது விழிப்புநிலைக்கு எனது மனமார்நத பாரராட்டுகள். இருபிரிவென்று மாநிலங்களை சுட்டுகிறீங்களா? நன்றி
  11. கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம் Posted on February 21, 2023 by சமர்வீரன் 149 0 தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான போட்டி திட்டமிட்டவாறு 19.02.2023அன்று ஞாயிற்றுக்கிழமை தமிழாலயங்களின் பங்கேற்போடு சிறப்பாகக் கனோவர் நகரிலே நடைபெற்றது. அகவணக்கத்தோடு தொடங்கிய போட்டி போட்டியாளர்களின் உற்சாகமான பங்கேற்போடு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் என மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு நடைபெற்றது. பங்கேற்புக்கான மதிப்பளிப்புகள் ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் வழங்கப்பட்டது. வெற்றியாளர்களின் நிலைகள் அறிவிக்கப்பட்டது. அதேவேளை அவர்களுக்கான மதிப்பளிப்பு எமது 33ஆவது அகவை நிறைவு விழா அரங்கிலே வழங்கப்படவுள்ளது. போட்டி முடியும்வரை அமைதியாக இருந்த மக்கள் திரள் நிறைவாகத் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வடமாநிலத் தமிழாலயங்களிடையான கலைத்திறன் போட்டி 2023 நிறைவுற்றது. கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம் – குறியீடு (kuriyeedu.com) தமிழர் கலைகளின் சங்கமமாய் கலைத்திறன் – மத்தியநிலம்.04.03.2023 Posted on March 13, 2023 by சமர்வீரன் 180 0 எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிஇ இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியைத் தொடர்ந்து மத்திய மாநிலத்திற்கான போட்டி 04.03.2023ஆம் நாளன்று முன்சன்கிளாட்பாக் நகரத்திலே நடைபெற்றது. தமிழர் கலைகளிற் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகளோடு தமிழாலாய மாணவர்கள்இ பெற்றோர்கள்இ ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களென ஒருங்கிணைந்ததோடுஇ அரங்காற்றுவோரும் கலைச் சுவைஞர்களுமாக அரங்கும் மண்டபமும் தமிழர் கலைகளோடு ஒன்றித்திருந்தமை சிறப்பு. கலைத்திறன் போட்டியிலே துணிவோடும் ஆர்வத்தோடும் பங்கேற்றவர்களுக்கான மதிப்பளிப்பு ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் வழங்கப்பட்டது. 09:00மணிக்கு மங்கலவிளக்கேற்றலோடு தொடங்கிய போட்டிஇ கலைத்திறனை வெளிப்படுத்தி முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகளும் நடைபெற்றதைத் தொடர்ந்துஇ நாளை எம் தேசம் விடியும் என்ற நம்பிக்கையோடு மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி நிறைவுற்றது. தமிழர் கலைகளின் சங்கமமாய் கலைத்திறன் – மத்தியநிலம்.04.03.2023 – குறியீடு (kuriyeedu.com)
  12. கிருபனவர்களே இணைப்புக்கு நன்றி, சோபா சக்தியவர்களது புலிவெறுப்பை ஓரமாக வைத்துவிட்டு ஒரு வாசகனாக நேர்மையோடு வாசிப்புக்குட்படுத்தவேண்டிய பதிவு.
  13. சீட்டுக்காசு, கடைதிறத்தல், நிர்வகித்தல், ஊழியர்களின் செயற்பாடு, மேலாடையை எப்படி அளவெடுக்கும் தொழில் நுட்பம், ஊடல் கூடல் என ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பதுபோல் நகர்த்தியமை சிறப்பு. சுவியவர்களே பாராட்டுகள். யாழினது எழுதாற்றல் கொண்டோரில்,நீங்கள் மக்களது வாழ்வியலை படைப்பதில் தனித்தன்மையுடையவர். நன்றி
  14. ஐ. நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்-பிரித்தானியா.(காணொளி) Posted on February 17, 2023 by சமர்வீரன் 145 0 மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் இன்று காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக, பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர் ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து Conservative, Labour தலைமையகங்களில் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு மனு கையளிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, எமது நீதிக்காய் காத்திரமான பங்களிப்பை வலியுறுத்தியவாறு தொடரும் பயணமானது, இன்று மாலை Labour கட்சியை சார்ந்தவரும் பாராளுமன்ற உறுப்பினருமான Siobhain McDonagh அவர்களுடைய அலுவகத்தில் சந்திப்பினை தொடர்ந்து முதலாவது நாளுக்கான ஈருருளிப்பயணம் முடிவு பெறும் . தொடர்ந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக 06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது. Video Player 00:00 02:00 ஐ. நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்-பிரித்தானியா.(காணொளி) – குறியீடு (kuriyeedu.com)
      • 1
      • Like
  15. ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்- யேர்மனி Posted on February 14, 2023 by சமர்வீரன் ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்- யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
  16. நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரியானதும் உற்றுநோக்க வேண்டியதும்............. சிங்களத்தின் இன அழிப்பு நடைபெற்றபோதும், தமிழரது அரசியற் செயற்பாடுகள் பக்கச்சார்பானதாக இருந்தபோதும் இவளவு மோசமான குழப்பம் இருக்கவில்லை. ஆனால் ஒரு சில புதிய வரவுகளின் பின்னர் கட்சிகளின் சிதைவுநிலை, ஒற்றுமையோ புரிந்துணர்வோ இன்மையெனச் சிங்கள-இந்தியக் கூட்டுகள் விரும்பும் நிழ்ச்சி நிரலில் தமிழரது அனைத்துவித அரசியற் செயற்பாடுகளும் நகர்கிறது. ஒரு மாநகரசபையையே ஒற்றுமையாக நடாத்தமுடியாதவர்கள் எப்படி ஒரு நாட்டை என்ன வினாவைத் தமிழரைப்பார்த்து அனைவரும் கேட்கும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்ட இந்த அரசியல்வாதிகளைத் தமிழினம் துரத்தாதவரை மீட்சியில்லை. சிங்களக் கட்சிகளைநோக்கி மக்கள் போவதன் கரணியமும் இதுதானோ!
  17. சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர Posted on February 5, 2023 by தென்னவள் 29 0 உள்ளூராட்சி சபைகளுக்குரிய தேர்தல் நடைபெறுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவை செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த 20 வருடங்களின் பின்னர் பேரினவாத தேசிய கட்சிகள் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் தமிழ் முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் தனித்துப் போட்டியிடுகின்றன. சில உள்ளூராட்சி சபைகளில் பிரதேச மட்டத்தில் செல்வாக்கு பெற்றுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் இணைந்தும் போட்டியிடுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்தும் ஒரு சில கட்சிகளுடன் இணைந்தும் போட்டியிடுகின்றது. தமது கட்சிக்கான ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி இருந்தார். இதன்போது அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்றி மாநகரசபை மற்றும் பிரதேச சபை தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் செல்வாக்கை முறியடிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸம், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இன்னும் சில அமைப்புகளும் இணைந்து தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அக்கரைப்பற்று மாநகர சபைக்கும், அக்கரைப்பற்று பிரதேச சபைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தனித்துப் போட்டியின்றமை அக்கட்சி தமிழ் முஸ்லிம் பிரதேசங்களிலே காலூன்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை உணர முடிகின்றது. இதேபோன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை பிரதேச சபை உள்ளிட்ட அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மழையையும் பாராது கூட்டத்தில் கலந்து கொண்டமை கவனத்திற்குரியது. பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தி தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை, சாய்ந்தமருது ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேற்படி பிரதேசங்களில் நடைபெற்ற கூட்டங்களில் அவருடைய கருத்துக்களை கேட்பதற்கு பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டமை அநுரகுமார திஸாநாயக்காவுக்கு மகிழ்ச்சியாக காணப்பட்டது. கூட்டங்களில் அவர் மிகவும் சுவாரஸ்யமாகவும், சிரத்தையுடனும் உரையாற்றினார். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பொதுக் கூட்டங்களை நடத்தி இருக்கின்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளும் இன்னும் எந்தவொரு கூட்டத்தினையும் நடத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையை அவதானிக்கின்றபோது, முஸ்லிம் வாக்காளர்கள் முஸ்லிம் கட்சிகளை விட்டும் தூரமாய் போகின்றார்களா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது. முஸ்லிம் கட்சிகளின் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் மிகப்பெரிய அளவில் அதிருப்தியுடன் இருக்கின்றனர். தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்குகின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. தேர்தல் காலங்களில் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களை குறிப்பிட்டு வாக்குகளை பெற்றுக் கொள்வதும், தேர்தல் முடிவடைந்தன் பின்னர் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வதும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழக்கமான ஒன்றாகும். இவர்களின் இந்த நடவடிக்கைகளினால் அவர்கள் தனிப்பட்ட வகையில் பயன்களை அடைந்து கொண்டனலே அல்லாமல் முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி நாடு கூட எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை ஒழுக்காற்று நடவடிக்கைகளில் இருந்து விடுவித்தமையும், கட்சியின் பதவிகளை வழங்கியதில் காட்டிய வேகத்தையும் பார்க்கின்ற போது மறுக்க முடியாத நாடகமாகவே தெரிகின்றது. ஆயினும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கி, உடனடியாக பதவியும் வழங்கியமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடையே பலத்த விமர்சனங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றன. சமூகம் சார்ந்த அல்லது கட்சியயுடன் தொடர்புடைய விவகாரங்களில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமளன்ற உறுப்பினரும் எதிரும் புதிருமாக அடிக்கடி செயற்படுவதும், விமர்சனங்களை முன்வைப்பதும், பின்னர் அதை மறந்து மன்னித்தோம் என்பதும், கட்சியை காப்பாற்ற வேண்டுமென்பதும், மன்னிப்பு கேட்டார்கள் என்று கதை கூறுவதும் கட்சியின் ஆதரவாளர்களை ஏமாற்றுகின்ற திட்டமிடப்பட்ட நாடகம் என்றே கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் தமக்கான செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு களமாகவும் உள்ளுராட்சி சபை தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் பார்க்க வேண்டியுள்ளது. மறுபுறத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் அக்கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருக்கின்றார். இந்நிலையில் அவரோடு நெருங்கி செய்யப்பட்ட ஆதரவாளர்கள் பலரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல கட்சிகளில் இணைந்து போட்டியிட்டும், செயற்பட்டும் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளிலும் போட்டியிடுகின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் நெற்கதிர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாளராக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இவ்வாறு தமக்கு நெருக்கமானவர்களை பல கட்சிகளிலும் பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடச் செய்து அவர்களை வெற்றி பெறச் செய்வதோடு, இறுதியில் சபையின் அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொள்வதற்கும் சூட்சமான முறையில் திட்டமிட்டுச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இவ்வாறு பல கட்சிகளிலும் போட்டியிடும் முஷரப்புக்கு நெருக்கமானவர்கள் இரவு வேளைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கின்ற நிலையில் சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திஸாநாயக்கவும் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை முன்னிலைப்படுத்தி தமது ஆதரவுகளை அதிகரித்துக் கொள்வதற்கான செயல்பாட்டில் இறங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தல் சஜித் பிரேமதாஸவிற்கும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே பலத்த போட்டியாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. சிறுபான்மையினரின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும் வாக்குகளாகவும் இருக்கப் போகின்றன. எவ்வாறாயினும் உள்ளூராட்சி சபை தேர்தல் முஸ்லிம் கட்சிகள் நெருப்புக்கொள்ளியால் தலையை சொறியும் ஒன்றாக ஏற்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எம்.எஸ்.தீன் சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர – குறியீடு (kuriyeedu.com)
  18. காவல்(துறை) இல்லாத காணி நிர்வாகத்தை’முழுமையான’ அதிகாரப்பகிர்வு எனலாமா? Posted on February 12, 2023 by தென்னவள் 13 0 அரைப்பரப்புக் காணிக்கே எல்லைகளைச் சரியாக வரையறுத்து வேலி கட்டி வாழ்பவர்கள் தமிழர்கள். இவர்கள் தங்கள் காணியை எவரும் அபகரிக்க விடமாட்டார்கள். மற்றவர் காணியையும் அபகரிக்க மாட்டார்கள். காவல்(துறை) இல்லாத காணி அதிகாரத்தை, முழுமையான அதிகாரப் பகிர்வு என்று இவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வர்? தமிழ்த் தேசிய தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்தப் பத்தியை எழுத ஆரம்பிக்கும்போது, கடந்த வாரம் இதே பத்தியில் குறிப்பிட்ட இரண்டு விடயங்களை முன்னிறுத்திச் செல்வது பொருத்தம்போல தெரிகிறது. ‘சிங்கள் இனவாதிகள், கோதபாயவின் அறிவாளிகள் (வியத்மக), பௌத்த மகா சங்கங்கள் தனித்தனியாக 13ம் திருத்தத்தை அமல் செய்யக்கூடாதென கூற ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் இனி கூட்டாகக் களத்தில் குதிக்க வேண்டியதுதான் மிச்சம்” என்று தெரிவித்தது இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. ’13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென ரணில் உண்மையாகவே விரும்புகிறாரா, அல்லது இதனை பகிரங்கமாகக் கூறி சிங்கள தரப்பின் எதிர்ப்பை லாபமாக்கி, இதற்கு (13ம் திருத்தம்) முடிவு கட்டவிரும்புகிறாரா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்” என்று தெரிவித்திருந்த சந்தேகத்துக்கும் விடை கிடைத்துவிட்டது. இப்போது இன்னொரு அணியும் 13ம் திருத்த நடைமுறைக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணிலை தாங்கள் ஜனாதிபதியாக்கவில்லையென்று சாடியுள்ளார். கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் ரணிலைச் சந்தித்தபோது 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று அவர் உறுதியளித்ததாக செய்திகள் வந்தன. இதனை உறுதிப்படுத்துவது போன்று தமிழ் தேசிய அரசியல் கட்சிகளைச் சந்தித்தபோது அவர்களிடம் ஜெய்சங்கர் ரணிலின் உத்தரவாதத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்றும் ரணிலை வலியுறுத்த வேண்டுமெனவும் ஜெய்சங்கர் கூறிச் சென்றார். ஜனாதிபதி கதிரையில் அமர்ந்துள்ள ரணில் உண்மையாகவும் நேர்மையாகவும் 13ம் திருத்தத்தை செயற்படுத்த விரும்புபவராகவிருந்தால், அதற்கான ஏற்பாடுகளை தமக்கான நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆரம்பித்திருக்கலாம். அவ்வாறு செய்யாது, அதனை முழுமையாகச் செயற்படுத்துவேனென்று சந்தர்ப்பம் கிடைத்த ஒவ்வொரு வெளியிலும் அழுத்திக் கூறி வந்தபோது நியாயமான சந்தேகம் பல தரப்பிலும் ஏற்பட்டது. சிங்கள பௌத்த இனவாதிகளை உசுப்பேற்றி 13ம் திருத்தத்துக்கு எதிராக களமிறக்குவதே அவரது நோக்கமாக இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது. ஷவியத்மக| பிரமுகரான கடற்படை முன்னாள் அட்மிரல் சரத் வீரசேகர, பெரமுனவிலிருந்து வெளியேறியுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய மூவரும் 13ம் திருத்தத்தை எதி;ர்க்கும் புதிய அணியொன்றை அடையாளம் காட்டியுள்ளனர். இவர்கள் மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவுமிருப்பதால் உள்ளும் புறமும் இப்போது இவர்களுடைய செயற்பாடுகள் 13ம் திருத்தத்துக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் தென்னிலங்கை மக்களை எவ்வளவு தூரம் இவர்களால் இவ்விடயத்தில் கூட்டிணைக்க முடியுமென்று நிச்சயமாக சொல்ல முடியாது. பொருளாதாரப் பிரச்சனையாலும் வாழ்வாதார நெருக்கடியாலும், ஒருவேளை உணவுக்காகவும் திண்டாடும் நிலைமையிலுள்ள அப்பாவிப் பொதுமக்கள் 13க்கென அறகலயவை உருவாக்குவார்களா என்பதற்கு உத்தரவாதமில்லை. கோதபாயவை வெளியேற்றுவதற்கு காலிமுகத்திடலில் இயங்கிய அறகலயவின் பின்பலமாகவிருந்த ஜே.வி.பி. 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இப்போது ஆதரவு வழங்கி வருகிறது. இந்த மனமாற்றம் எதன் அடிப்படையிலானது என்பது புரியாதது. மக்களுக்கு அதிகாரப் பகிர்வினால் நன்மை கிடைக்குமென்றால் அது நல்லது என்பது இவர்களின் கருத்து. இதற்குப் போட்டியாக, 13ஐ அமல்படுத்தினால், ‘மீண்டும் இரத்த ஆறு ஓடும்” என்று சரத் – விமல் – உதய மும்மணிகள் கூட்டாக அச்சுறுத்தி வருகின்றனர். மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்று கூறிவருவதன் வழியாக முன்னரும் இனவன்செயல்கள், இனஅழிப்புகள் என்பவற்றை முன்னின்று நடத்தியவர்கள் தாங்களே என்று இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதை அவதானிக்க முடிகிறது. பெப்ரவரி மாதம் 4ம் திகதி சிங்கள தேசத்தின் சுதந்திர தின விழாவின்போது இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக தாம் எடுத்துவரும் செயற்பாடுகளை பகிரங்கமாக அறிவிப்பேன் என்று பல தடவை கூறிவந்த ரணில், அன்றைய நிகழ்வில் உரையாற்றாது தப்பிக் கொண்டார். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து நிகழ்த்திய இவ்வைபவம், சிங்கள தேச அரசின் படைபலத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி அரங்காக காட்சியளித்தது. அன்றிரவு நாட்டு மக்களுக்கு ஒலி ஒளி ஊடகங்கள் வாயிலாக உரையாற்றிய ரணில், வழமையான பாணியில் இனப்பிரச்சனைத் தீர்வை தொட்டுச் சென்றார். இதனால், 8ம் திகதிய நாடாளுமன்ற கொள்கை விளக்க உரை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அறிவிப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ‘நான் ஒருபோதும் செய்ய முடியாதவற்றைக் கூறமாட்டேன்” என்று சத்தியவான் பாணியில் தமது உரையை ஆரம்பித்த ரணில், சம்பந்தனும் தானும் நாடாளுமன்றத்தில் இருக்கும் காலத்திலேயே இனப்பிரச்சனைக்கு இறுதியான தீர்வை வழங்குவோம் என்று குறிப்பிட்டபோது அதில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிந்தது. ஆனால், 13ம் திருத்தம் முழுமையாக அமலாகும் என்று இரண்டு மாதங்களாக அவர் கூறிவந்ததன் அர்த்தத்தை, அடுத்த சில நிமிடங்களில் ஒரு வரியில் இல்லாமற் செய்தார். ‘பொலிஸ் (காவற்துறை) அதிகாரங்கள் தொடர்பாக எந்தவித மாற்றமும் இடம்பெற மாட்டாது” என்பதுவே அந்த அறிவிப்பு. மாகாணங்களுக்குப் பொறுப்பாக ஒவ்வொரு பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனமாவார் என்பதும், மத்திய அரசினது பொலிஸ்மா அதிபரின் நேரடி நிர்வாகத்தில் அவர்கள் பணி புரிவார்கள் என்பதும் இதனூடாக தெளிவுபடுத்தப்பட்டது. 13ம் திருத்தத்தின் கீழான மாகாண சபை முறைமை என்பது அதிகாரப் பகிர்வுக்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் காவற்துறை அதிகாரமும், காணி அதிகாரமுமே முக்கியமானவை. ஜே.ஆர் – ராஜிவ் ஒப்பந்தம் இடம்பெற்று 35 ஆண்டுகள் முடிவடைந்த போதிலும் இவ்விரு அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. இதனாலேயே தமிழர் பூர்வீக நிலங்கள் அரசாங்க திணைக்களங்களால் தம்மி~;டப்படி அபகரிக்கப்பட்டு வந்தன. இன்றும் அந்நிலையே தொடர்கிறது. காவற்துறை இதற்குத் துணைபோவதாகவே இயங்கி வருகிறது. அதிகாரங்கள் இல்லாத மாகாண சபைகளால் அந்தந்த பிரதேச மக்கள் உப்புச் சப்பில்லாத நிர்வாகத்தில் இருந்து வருகின்றனர். வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த மற்றைய ஏழு மாகாண சபைகளும் இதனால் பாதிக்கப்படவில்லை. அவை சிங்களப் பிரதேசங்களில் சிங்கள ஆட்சி பீடத்தின் முகவர் அமைப்புகளாக அந்தந்த மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. ஆனால், வடக்கு கிழக்கு மாகாண சபைகள் அதிகாரமின்றி ஆளுனரின் விருப்புக்கேற்றவாறும், மத்திய அரசின் கடும்போக்குக்கு அடிபணிந்தும் இயங்கி வந்தன. இந்நிலை மாறுவதற்காகவே காவல் மற்றும் காணி அதிகாரங்கள் அனைத்து மாகாண சபைகளுக்கும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. மீண்டும் இரத்த ஆறு ஓடுமென்று தமிழருக்கு கொலைப் பயமுறுத்தல் விடுபவர்கள், காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவது போலவும், இதனால் நாடு துண்டாடப்படுமெனவும், தமிழருக்கு தனிநாடு கிடைக்கப் போவதாகவும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஏமாற்று அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அடிபணிந்தவராக தம்மைக் காட்டிக் கொள்ளும் ரணில் காவற்துறை அதிகாரங்கள் இல்லாத மாகாண சபை முறைமையை முழுமையான அதிகார நிர்வாகமென ஏமாற்றி செயற்படுத்த முனைகிறார். முழுமையான என்பதில் காவற்துறை இல்லையென்றால் எஞ்சியிருப்பது காணி அதிகாரந்தான். அதற்கும்கூட ரணில் ஒரு பூட்டுப்போட எண்ணியுள்ளார். காணி விவகாரங்களுக்கு தேசிய காணிச்சபை ஒன்று தாபிக்கப்படுமென்றும் அதன் வழியாக தேசிய காணிக்கொள்கை வரைபு தயாரிக்கப்படுமென்றும் 8ம் திகதிய கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார். இது மட்டுமன்றி, மாகாண சபைகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் ஒருங்கிணைப்புப் பணிகளை நடைமுறைப்படுத்த நவீன முறையில் மாவட்ட அபிவிருத்திச் சபை முறைமையினை எதிர்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளார். 1981ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அமல்படுத்தி தோற்றுப்போன மாவட்டச் சபை முறைமையை மீண்டும் தூசு தட்டி எடுத்துவர ரணில் விழைகிறார். இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால் மீண்டும் மாவட்ட அமைச்சர்கள் நியமனமாகலாம். அவர்கள் ஆட்சியிலுள்ள அரசியல் தரப்பினராகவே இருப்பர். மாகாண சபைக்கொரு முதலமைச்சர், அதற்கொரு ஆளுனர், அதற்கும் அப்பால் மாவட்ட சபைகள், அவற்றுக்கு மாவட்ட அமைச்சர்கள்…. வேதாளம் மீண்டும் முருக்க மரத்தில் ஏறிய கதைதான். மாவட்ட அமைச்சர்கள் முறைதான் ரணிலின் திட்டமெனில், வடக்கில் ஐந்து மாவட்ட சபைகளும் கிழக்கில் மூன்று மாவட்டசபைகளும் உருவாகும். இவைளில் சில தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் அமையும் வாய்ப்புண்டு. மொத்தத்தி;ல், இனப்பிரச்சனைக்கான தீர்வு அல்லது தீர்வுப் பொதியென்பது பூச்சியமாகவே அமையலாம். காவற்துறை அதிகாரமில்லாத, தேசிய காணிச்சபை நிர்வகிக்கும் காணி அதிகார மாகாண சபை முறைதான் ரணில் நாடும் இனப்பிரச்சனைத் தீர்வு என்பது தெரிகிறது. இதனைத்தான், ‘நீங்கள் உங்களுக்கே விளக்காக இருங்கள்” என்று 8ம் திகதிய உரையில் குறிப்பிட்டாரோ? அரைப்பரப்புக் காணிக்கே எல்லைகளைச் சரியாக வரையறுத்து வேலி கட்டி வாழ்பவர்கள் தமிழர்கள். இவர்கள் தங்கள் காணியை எவரும் அபகரிக்க விடமாட்டார்கள். மற்றவர் காணியையும் அபகரிக்க மாட்டார்கள். காவல்(துறை) இல்லாத காணி அதிகாரத்தை, முழுமையான அதிகாரப் பகிர்வு என்று இவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வர்? தமிழ்த் தேசிய தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள்? பனங்காட்டான் காவல்(துறை) இல்லாத காணி நிர்வாகத்தை’முழுமையான’ அதிகாரப்பகிர்வு எனலாமா? – குறியீடு (kuriyeedu.com)
  19. தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 06.03.2023, திங்கள்-சுவிஸ். Posted on December 28, 2022 by சமர்வீரன் # தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 06.03.2023, திங்கள்-சுவிஸ். – குறியீடு (kuriyeedu.com)
  20. மிரண்டுபோயுள்ள சிங்களதேசம்! சர்வதேசமே அதிர்ந்த தமிழரின் எழுச்சி | Nijakkan | தமிழர் எழுச்சி பேரணி செய்தி உள்ளடக்கங்களுக்கு அப்பால் தமிழ் ஊடகங்கள் வைக்கும் தலைப்புகள் நகைப்பிற்கிடமானதாக இருப்பதை ஏன் உணர மறுக்கின்றனர். ஊடகங்கள் தொடர்ந்தும் இந்தக் கருத்தியல் தவறினைச் செய்வது குறித்து சிந்திக்கமாட்டார்களா? நன்றி நன்றி - யூரூப்
  21. நீங்கள் சுட்டியிருப்பது நாம் சந்தித்ததும் சந்தித்துக்கொண்டிருப்பதும்தான். ஆனால், யுத்தத்திற்கும் இயற்கை அழிவிற்கும் இடையேயான தூரம் பெரியது. இன்று அவர்களுக்கு நாளை எமக்காகவும் இருக்கலாம். இன்னொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளவேண்டும். துருக்கி ஐரோ ஆசியச் சந்திப்பில் ஐரோப்பாவுக்கு அருகிலே இருக்கிறது. ஐரோப்பியர்களின் உல்லாசப்பயண வலயங்களில் மிகக்கிட்ட உள்ள ஒன்று எனப்பல அனுகூலங்களைக் கொண்டுள்ளமையும் உதவிகள் விரைந்திடக் கரணியமாகின்றன. எம்மீதான அழிப்பு நடவடிக்கை என்பது முழு வணிக உலகினதும் கரம்கோர்ப்பிலும், தமிழகத்தில் அப்போது ஆட்சியிலிருந்தோரதும், எமது மிதவாதத் தலைவர்களது ஒப்புதலோடும் நடாத்தப்பட்டது என்பது நீங்களும் அறிந்ததே. துருக்கியும்கூட சிறிலங்காவிற்கு உதவியது ஒன்றும் மறைநிலையல்லவே. எனவே சிந்திப்போம். நன்றி
  22. உண்மை. இப்படித்தான் நானும் சிந்திப்பதுண்டு, ஒரு கட்டத்தின் பின்னர் மனிதமனங்கள் சிலவற்றைக் கடந்து சென்றுவிடும் குவியநிலைக்கு வந்துவிடுவதால், என் துன்பத்தைவிடவா என்று செல்லவே தோன்றுகிறது. காலங்கள் கடந்து காயங்கள் ஆறிவிட்டாலும் தளும்புகள் மறைவதில்லையல்லவா? கீழே பிபிசியின் கட்டுரையை படித்தபோது மனம் ஏதோ செய்கிறது.
  23. எந்த மனதையும் கரைத்துவிடும் காட்சி, இனவழிப்புப் போராலும் சுனாமியாலும் நாமும் இதுபோன்ற பல துயரங்களை கண்டுவந்திருந்தாலும் இந்தக் குழந்தைகள் என்ன செய்தார்கள். இனி என்ன செய்வார்கள்? உண்மை.
  24. சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- பிரித்தானியா Posted on February 12, 2023 by சமர்வீரன் 81 0 கடந்த வாரம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி வழங்கும் உலக சமூகத்தோடு பிரித்தானிய தமிழ் மக்களும் இணைந்து கரம் கொடுக்கும் பணியை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்து வருகின்றது. சிரியா,துருக்கி,குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- பிரித்தானியா – குறியீடு (kuriyeedu.com)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.