Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5709
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by nochchi

  1. 2124இல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி இதனை இடித்துப் உலகப்பெரும் பள்ளிவாசலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுகிறார்கள்.
  2. இதனை ஒருவகை பின்கதவு அரசியலாகவே நோக்கலாம். தலைமைகள்(ஆலோசனை - நரியார்) தம்மீதான கல்லெறிதல்களைத் திசைதிருப்பி, இராசதந்திரக் கருத்துருவாக்கத்துக்கான களத்தை அமைக்கும் செயற்பாடாகும்.
  3. பயனுள்ள தகவல்களுக்கும் நேரத்துக்கும் நன்றி. எனக்கும் மருந்து தராட்டிக் கோபமாத்தானிருக்கிறது. எனது மகள் உங்கள் நன்மைக்கே என்று சொல்லுவார். முந்திச் சின்னத் தலையிடி என்றாலே எங்க குளிசையென்று தேடுவன். மகள் சுட்டியபின்னர் தேவையென்றால் மட்டுமே எடுப்பது. எனது மருத்துவரும் உடனே மருந்து தரமாட்டார். 2ஆம் திகதி எனது பேத்தியாருக்குத் திடீரென எந்தவிதச் சத்தமும் இல்லாமல் வலிப்பு வந்து அவசரஉதவியை அழைத்தால் விளக்கி வாறதுக்கே 20நிமிடங்கள். அவை வந்து சில நிமிடங்களின் பிள்ளையும் கண்விழித்து அழுதபின்னரே நிம்மதி வந்தது. ஆனால், முதலுதவி மருத்துவரோ அம்மா ஓமென்றால்தான் மருந்தென்று கூறிப் பின் மருந்துகொடுத்துக் கொண்டுபோய் பரிசோதித்துவிட்டு 8மணித்தியாலம் சும்மாதான் வைத்திருந்து, பிறகு காய்ச்சல் வரும்போதே மருந்து கொடுத்தார்கள். பின்னர் ஒரு நுஊபு எடுத்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். மருந்தெதுவும் கொடுக்கவில்லை. காய்ச்சல் இருந்தால் மட்டும் வேண்டிப்பாவிப்பதற்கான சீட்டைக் கொடுத்துவிட்டுள்ளார்கள். இன்றைய உலகில் ஒருபுறம் பொறுமையின்மை மறுபுறம் தேடலின்மை அல்லது தெரிந்ததையே செய்யப் பொறுமையில்லை. ஆனால் எமது அஞ்சறைப்பெட்டகத்தினுள்ளேயே சில நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடிய பல அருமருந்துகள் உள்ளன. யேர்மனியர்கள் இன்று அவற்றைநோக்கி நகர்ந்துள்ளதை அங்காடிகளில் உள்ள பல்வேறு பொருட்களினூடாக(பச்சை மஞ்சள் முதல்... ) அவதானிக்கலாம்.
  4. பல கதைகளைப் படைத்தளித்த தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி. பல கதைகளைப் படைத்தளித்த தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி. பல்வேறு விடயங்களின் தாக்கமே பழமொழி கதையாகியது. மீண்டும் நன்றி.
  5. தமிழினத்துக்கு ஒரு நல்ல தலைமையென்பது வெறும் கனவே. ஆனால் இருக்கும் கைத்தடிகளில் ஊன்றி எழ வேண்டியதேவை தமிழினத்துக்கான சாபக்கேடாகும். அரசியலரங்கில் எந்ததடியை வைத்திருப்பது எதை முறிப்பது என்பதைத் தாயகம் வாழ் தமிழர் பட்டறிவின் வழியே தமது வாக்குபலத்தைப் பாவித்து முடிவுசெய்ய வேண்டும்.
  6. இறைமையைத் தமிழ்மொழிபேசும் மக்களோடு பகிர்ந்துகொண்டு நாட்டை வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்கத் துணியாது, 100ஆண்டுகளாகச் சிங்கள பேரினவாதத்தைக் கொம்புசீவிப் பதவிக் குளிரில் படுத்துண்டு உறங்கியதன் விளைவாக வெளியாரிடம் இறைமையை இழந்து தட்டேத்தும் நிலை. ஆனாலும், தமிழ்மொழிபேசும் மக்களுக்கான தீர்வு 'நாடகம்' போடுவதிலேயே குறி. இன்று டொலர், நாளை, யூரோ, நாளை மறுதினம் யுவான், ரூபிள்................ எனத்தொடர்கதையாகப் போகிறது. புலத்துத் தமிழ் முதலீட்டாளர்கள் எந்த பணத்திலாம் முலிடப்போகிறார்களென ஊர்கிழவி உரத்துக்கேட்கிறாள்.
  7. இது தவிர்க்க முடியாத ஒரு சூழலாகும். ஆனால் இதனை எப்படிக் கையாளுதல் என்ன என்பதிலேயே தங்கியுள்ளது.
  8. வாசித்த மற்றும் பச்சைப்புள்ளி வழங்கி ஊக்குவித்த உறவுகளுக்கு நன்றி.
  9. தேசிய பூங்காக்களுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் டொலர்களில் பணம் செலுத்த அனுமதி Posted on January 4, 2023 by தென்னவள் 12 0 யால தேசிய பூங்கா உள்ளிட்ட தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு இம்மாதம் முதல் டொலர்களில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும் என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. யால தேசிய பூங்காவில் இருந்து இந்த நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத் தெரிவித்தார். நாட்டுக்கு தேவையான டொலர்களை ஈட்டிக் கொள்வதற்காக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். மேலும், யால தேசிய பூங்காவிற்கு செல்வதற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் யாலவிற்கு வருகை தருவதால் அதற்கான வசதிகளை மேம்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய பூங்காக்களுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் டொலர்களில் பணம் செலுத்த அனுமதி – குறியீடு (kuriyeedu.com)
  10. இணைப்புக்கு நன்றி. சீமானது உரையை சில ஆண்டுகளின் பின் பார்த்தேன். நன்றாக உள்ளது. இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பற்ற நிதானம் நன்றாக இருக்கிறது.
  11. அவர் கூறுவதில் உண்மை உள்ளதுதானே. 1. குமுகாய அவலங்கள் கூடும் 2. குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும். 3. சட்டரீதியான விற்பனை, எவரும் வாங்கலாம். இதன் வழியாக ஏற்படும் பக்கவிளவுகளால் காவல்துறைக்கு, சிறைத்தறைக்கு, சட்டவாளர்களுக்கு, மருத்துவத்துறைக்கு மற்றும் வியாபாரிகளுக்கு என வேலைவாய்ப்புப் பெருகும்தானே. அம்மணி முதலில் வடமாகாணத்தை இலக்குவைத்துத் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பயிர்ச்செய்கையை மீட்டெடுக்க முடியுமா என்று சிந்திக்கலாம்.
  12. தற்போது உலகு வாய்மூடி மௌனியாக. உலகில் பலம்வாந்த தலைவராக மோதி. சிறுபான்மைகளின் கதி அதோ கதிதான்.
  13. நாஸிகளை மிஞ்சும் வகையில் உலகு தற்போதும் இன அழிப்புகளை எதிர்கொண்டே வருகிறது. நாஸி என்ற சொற்பிரயோகத்தை ஏதோ பாலபாடம் போல் சொல்லும் மேற்காலோ அல்லது கிழக்காலோ இன அழிவுகளையோ, ஆக்கிரமிப்பகளையோ மற்றும் நிலப்பறிப்பகளையோ தடுக்கமுடியவில்லை. நாஸிகளால் வதைபட்ட யூதர்கள் இன்று பலஸ்தீனத்தில் என்ன செய்கிறார்கள். இதை உலகு கேட்கிறதா? உலகென்பதே இன்று பொய்மைகளின் கூட்டாக உள்ளது. நீலிக் கண்ணீர் வடித்தபடி ஏழை நாடுகளின் குருதியிற் கைகளைக் கழுவுகின்றன. நாம் உலகில் மிகச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமென்ற வகையிலே, உலகில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களுக்காக் குரல்கொடுப்பதும் கரம்கோர்ப்பதுமே வலிமைமிகு பெரும் வல்லாதிக்க மற்றும் பிராந்திய சக்திகளையும் எதிர்கொள்ள வாய்ப்பாகும். நன்றி
  14. மோடி மஸ்தான் ஆட்சியும் ஆசீர்வாதமும் இருக்கு தொடருங்கோ... தொடருங்கோ
  15. உண்மைதான். ஆனால் மேலும் இழுபட்டுச்செல்லும். காலங்கடத்திகளுக்குக் களமாகும்.
  16. கோழியும் ஆமையும் - நிமிடக்கதை பங்குனி வெயில் உச்சியில் அறைந்தது. கடற்கரையை அண்டிய குடிலில் தொங்கிய கடகத்திலிருந்து பாய்ந்த கோழி கொக்கரித்தபடி நின்றது. தரையேறி முட்டைகளைப் பத்திரப்படுத்திவிட்டு அவ்வழியே நடந்து கொண்டிருந்த ஆமை நின்று கோழியைப் பார்த்தது. கோழி '' என்ன பார்க்கிறாய்,, என்று கேட்டது. ஆமையோ ''ஏனிந்தக் கலவரம்! என்றது. கோழி தான் முட்டை போட்ட சோம்பல் முறிக்க என்றது. ஆமையோ சிரித்துவிட்டு விரைந்து கடலோடு கலந்தது. நன்றி
  17. பாதிப்பிற்குள்ளான இனமென்ற வகையிலே இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டியது. ஆனால் அவர்களோ குழாயடியில்... பிறகெப்படி இவற்றைச் சிந்திப்பதற்கு நேரம். நன்றி
  18. சொந்தப் பணம் இல்லாமல் அல்ல. இது போன்ற ஆடம்பரங்களை ஏன் சொந்தப்பணத்தில் செய்ய வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையின் விளைவு. அதைவிட அவர்களிடம் இல்லாத பணமா? ராயபக்ச அன்ட் கொம்பனி மற்றும் சக கொம்பனிகளின் முதலீடுகளை சிறிலங்கா அரசு என்ன முடக்கியாவிட்டது. சும்மா நாடகம் ஆடுகிறார்கள். அவர்கள் 15 -20 ஆண்டுகளுக்குள் அரசின் உயரடுக்குப் பதவிகளிலும், 80வீதத்துக்கு மேற்பட்ட அரச நிறுவனங்களில் தமது உறவுகளையும் கொண்டவர்கள் மட்டுமன்றித் தனியார் நிறுவனங்களிற் பங்குதாரர்களாகவும் இருந்தவர்களிடம் இல்லாத செல்வமா? வன்னியிற் தமிழீழ நடைமுறை அரசினது வைப்பகத்தில் இருந்து கையகப்படுத்திய வெளிநாட்டுப் பணமுட்பட தங்க ஆபரணங்களின் கணக்கே காட்டப்படவில்லை. பலவீனமான நாடுகளைச் சுரண்டலுக்கேற்ப வளைத்தெடுத்தல் அல்லது முறித்துவிடுதல் என்பதே கோட்பாடு என்ற அமெரிக்காவினது சனநாயகத்தை உலகமே அறிந்ததுதானே. இதில் கோத்தாவையும் தேவைக்கேற்ப கையாளும்.
  19. மட்டக்களப்பில் 180 தற்கொலை சம்பவங்கள் பதிவு – திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் Posted on January 1, 2023 by தென்னவள் 12 0 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சுமார் 180க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. தற்கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வுகள் மாவட்டத்தின் எந்தவொரு கிராம மற்றும் நகர மட்டத்திலும் நடைபெறாமை குறித்து உண்மையில் கவலையளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வயது வித்தியாசமின்றி சிறியோர், பெரியோர், படித்தவர்கள், பாமரர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் இன்று தற்கொலை கலாசாரங்கள் மேலோங்கியிருப்பது நமது மாவட்டத்துக்கு நல்லதொரு சகுணமல்ல என்றே தோன்றுகிறது. ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து, அவனை அழுத்துவதால்தான் தற்கொலைக்கு தூண்டப்படுகிறான். தற்போது தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணங்களாக குடும்ப பிரச்சினை, காதல் பிரச்சினை, மன அழுத்தம், பரீட்சையில் தோல்வி, கணவன் – மனைவி முரண்பாடு, வறுமை, போதை மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமை என அடுக்கிக்கொண்டே போகலாம். சிறு சிறு காரணங்களுக்கு கூட மனமுடைந்து போய்விடுவதற்கான காரணங்களை கண்டறிய இயலாமல் தடுமாறுகிறோம். தற்கொலை என்ற ஒரு நிமிட எண்ணம் எல்லோருக்கும் உடனே வருவதில்லை. பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பும்போது அரவணைக்க, தோள் கொடுக்கவென யாரும் இல்லாமல், தனிமையில் வாடும் சந்தர்ப்பத்தில் இம்மாதிரியான முடிவை நோக்கி பலர் செல்கின்றனர். உங்களிடம் யாராவது ‘வாழ்க்கை போற போக்கை பார்த்தால் பேசாம செத்துடலாம் போல இருக்கு’ என்று சொன்னால், அதன் பாரதூரம் அறியாமல் அவர்களை கடந்து செல்லாதீர்கள். இதுவும் தற்கொலை எண்ணத்தின் முதல் அறிகுறிதான். மனதில் ஏற்படும் விரக்தி, கோபம், இக்கால பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கையை பற்றிய பயம் என்பவையே அவர்களை இப்படி பேச வைக்கிறது. சரி, உங்கள் நெருங்கிய நண்பரோ அல்லது உறவினரோ, ஏன், உங்களுக்கு நெருக்கமான நபராக இருக்கலாம். இப்படி ஒரு முடிவெடுக்கப் போகிறார்கள் என தெரிந்தால் என்ன செய்வீர்கள்? கண்டிப்பாக தடுக்கத்தான் முயற்சி செய்வோம். அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவோம். ஆறுதல் சொல்வோம். மனதை மாற்ற முயற்சி செய்வோம். இப்படி செய்வதன் மூலம் தற்கொலையை தடுக்க முயற்சிப்போம். நாளுக்கு நாள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிற நிலையில், அதைத் தடுக்கும் முயற்சியில் நாம் இறங்கவில்லையென்றால், மாவட்டத்தின் நிலைமை என்னாவது? அரச, அரச சார்பற்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளான நீங்கள், இது தொடர்பாக கலந்தாலோசித்து, தற்கொலை முயற்சியிலிருந்து மக்களை பாதுகாக்க வழிகோலுங்கள் என்றார். மட்டக்களப்பில் 180 தற்கொலை சம்பவங்கள் பதிவு – திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் – குறியீடு (kuriyeedu.com)
  20. கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Posted on January 1, 2023 by தென்னவள் 14 0 புதுவருட தினமான இன்றும் (ஜன 1) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2142ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம், அவர்களது போராட்ட பந்தலுக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி தேவை என்பதோடு அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இறையாண்மையுடனான தீர்வே பாதிக்கப்பட்டோருக்கு தேவை என தெரிவித்து, மாதிரி வாக்களிப்பையும் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை எந்தத் தமிழரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் தீர்வை எவ்வாறு காண்பது? தெற்கு சூடான், எரித்திரியா, கொசோவா, கிழக்கு திமோர் ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த ஐ.நா.வின் கண்காணிப்பு வாக்கெடுப்பு ஒன்றே சிறந்த வழி. நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம், ஒரு மத்தியஸ்த பாத்திரத்தை வகிக்க விரும்புவதை இப்போது நாம் காண்கிறோம். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக மீண்டும் வருவதற்கு இரகசியமாக செயற்பட்டு வருகின்றார். நாங்கள் அதை எதிர்க்கவில்லை. ஆனால், மேற்கு தேச அரசியல் கட்டமைப்பை மேசைக்கு கொண்டு வர விரும்புகிறோம். ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு எங்களிடம் 3 சாத்தியமான அரசியல் தீர்வுகள் உள்ளன. தமிழர் இறையாண்மை, மேற்கத்திய பாணி ஜனநாயகம், ரணில் – சம்பந்தன் ஒப்பந்தத்தில் இருந்து தீர்வு… இதைத்தான் எங்கள் பதாகையில் எழுதியுள்ளோம். முழு உலகமும், குறிப்பாக, இலங்கை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் பெரும்பங்கை ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பினை நடத்துவதில் பங்கு வகிக்கும் என நம்புகிறோம். புலம்பெயர் தமிழ் மக்கள், எமது தமிழ் இறையாண்மை மிக்க தேசத்தில் முதலீடு செய்து, அபிவிருத்தி செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றமையால், அரசியல் தீர்வு விடயத்தில் எமது நேரத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை என்றனர். கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – குறியீடு (kuriyeedu.com)
  21. கடந்த பொழுதுகளை கற்றுக்கொண்டு வருகின்ற பொழுதுகளை வாஞ்சையுடன் வரவேற்போம்! யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  22.  ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்வு என்ற போர்வையில் 2023இலும் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள்.  ரணில அரசுத்தலைவராகச் சிறுசிறு சலசலப்புகளோடு தொடர்வார்.  தமிழ்த் தலைமைகள் நம்பினோம் ஏமாற்றிவிட்டார்கள் என்று கைவிரிப்பர்.  வட-கிழக்கிலும், தெற்கிலும் புதிய அரசியற் கூட்டுகள் உருவாகும்.  இலங்கையில் பொருளாதாரம் மேலும் மோசமடைவதோடு நாடு மேலும் பலவீனமாகும்.  உலகெங்கிலும் பொருண்மிய மந்த நிலை தொடரும்.  ருஸ்ய – உக்ரேன் போர் தொடரும். கிரிமியா உக்ரேனிடம் வீழுமானால் போர் முடிவுக்குவரும் தொடக்கப் புள்ளியாகும்.  இந்தியாவில் இந்துத்வாவும் தமிழகத்தில் திராவிடமும் கோலோச்சும்.  பலஸ்தீனர்கள் மீது கடும் அழுத்தங்களை இஸ்ரேல் மேற்கொள்ளும்.  ருஸ்யா - சீனா - இந்தியா - துருக்கி ஆகியன தமது பொருண்மிய நலன்நோக்கி ஒன்றிணைந்து பயணிப்பர். இது பலமடைந்தால், மேற்கின் பொருண்மியச் சமநிலையுட்படப் பங்குச் சந்தைகளில் தாக்கமேற்படும்  உலகிற் சிறுபான்மை இனங்கள் தொடர்ந்து நசுக்கப்படும்.  யேர்மனியில் வலதுசாரிகளின் பலம் அதிகரிக்கும்.ஊதிய உயர்வு கிடைக்காது.
  23. இலங்கையில் இந்த மதப்பிரசங்கிகளின் தலையீடுகளும் ஒரு சாபக்கேடாகத் தொடர்கிறது.
  24. ஆழிப் பேரலை சுனாமியில் அழிந்த ‘ஆச்சே’ தேசத்தின் சுதந்திர கனவு !– ஐங்கரன் Digital News Team பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி , ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை 2005 ஏற்றுக் கொண்டது. விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் அச்சே மக்களின் போராட்டம் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது. ஆச்சே மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்து போராடினர். தற்போது இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் உள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன. கொடிய போரினால் சிந்திய குருதிகளுக்கும், சிதைவடைந்த தேசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை சுனாமியின் அழிவுகளும், ஆச்சே விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை நிறுத்த வழிகோலியது என்பது உண்மையே. சுதந்திர ஆச்சே இயக்கம் ; 1976 மற்றும் 2005 க்கு இடையில் சுதந்திர ஆச்சே இயக்கம் -Free Aceh Movement – அல்லது “GAM” – Gerakan Aceh Merdeka ஆச்சே மாகாணத்தை சுதந்திரமாக மாற்றும் குறிக்கோளுடன் போராடியது. 2003இல் இந்தோனேசியாவின் ஒரு பாரிய இராணுவ தாக்குதல் நடவடிக்கையும், பின்னர் 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை சுனாமியின் அழிவுகளும், ஆச்சே விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை நிறுத்தியதாக அறிவித்தது. அதன்பின் ஹெல்சிங்கி அமைதி உடன்படிக்கையைக் கொண்டு வந்ததன் மூலம் ஆயுத போராட்டம் முழுமையாக முடிவுற்றது. ஆச்சே மாநிலம் இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளுக்கு இடையே கலாச்சார, மத வேறுபாடு உள்ளது. பெரும்பாலான இந்தோனேசியாவில் நடைமுறையில் உள்ள இஸ்லாத்தின் மிகவும் பழமைவாத வடிவமானது ஆச்சேவிலும் பரவலாக நடைமுறையில் உள்ளது. முன்னால் அதிபர் சுஹார்டோவின் 1965-1998 ஆட்சியில் பரந்த தேசியவாத கொள்கைகள் குறிப்பாக ஆச்சேவில் பிரபலமடையவில்லை. அங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ‘இந்தோனேசிய கலாச்சாரத்தை’ ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கையால் பலர் வெறுப்படைந்தனர். ஜகார்த்தாவில் உள்ள தலைவர்கள் ஆச்சேவின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அத்துடன் ஆச்சேவின் உள்ளூர் தேவைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து சிறிதளவு அல்லது அனுதாபம் கூட காட்டவில்லை என்ற பரவலான உணர்வு இந்த மாகாணத்தில் உள்ளது. ஆதிக்க தேசிய மையவாதம் : சுஹார்டோ அரசாங்கத்தின் ஆதிக்க தேசிய மையவாதப் போக்குகளை எதிர்த்து, 4 டிசம்பர் 1976 இல் சுதந்திர ஆச்சே இயக்கத்தை உருவாக்கி, சுதந்திரத்தை அறிவிக்க வழிவகுத்தது. “நவ-காலனித்துவ” அரசாங்கத்திடமிருந்து மதம் மற்றும் கலாச்சாரம் ஆச்சேவிற்குள் அதிகரித்து வரும் ஜாவானிய குடியேற்றங்களின் முக்கிய அச்சுறுத்தல்களாகின. ஆச்சேவின் கணிசமான இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் நியாயமற்ற விநியோகம் சர்ச்சைக்குரிய மற்றொரு விடயமாக இருந்தது. 1979 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தோனேசிய இராணுவ ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஆச்சே இயக்கத்தை நசுக்கத் தொடங்கியது. அதன் பல தலைவர்கள் நாடுகடத்தப்பட்டனர், பல நூறு பேர் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சுதந்திர ஆச்சே இயக்கத்தை பின்பற்றுபவர்கள் சிதறடிக்கப்பட்டு நிலத்தடி சிறைக்கு தள்ளப்பட்டனர். லிபிய கடாபியின் ஆதரவு : 1985 இல், ஆச்சே இயக்கத்திற்கு லிபிய ஆதரவு கிடைக்கப் பெற்றது. ஏகாதிபத்தியம், இனவாதம், சியோனிசம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான தேசியவாத போராட்டங்களை ஆதரிக்கும் கேணல் கடாபியின் உதவிகளை இவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். லிபியா பின்னர் ஆச்சே இயக்கத்துக்கு தொடர்ந்து நிதியளித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் ஆச்சே இயக்கம்ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கும், மிகவும் தேவையான இராணுவப் பயிற்சியைப் பெறக்கூடிய ஒரு சரணாலயமாக லிபியா விளங்கியது. 1986 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் லிபியாவால் பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை சுமார் 1,000 முதல் 2,000 பேர் இருந்ததாகக் கூறினர். அதே சமயம் இந்தோனேசிய இராணுவத்தின் அறிக்கையில் படி 600 முதல் 800 வரை இருப்பதாகக் கூறினர். 1989 மற்றும் 1998 க்கு இடைப்பட்ட காலகட்டம் இந்தோனேசிய இராணுவத்தின் கொடூரமான நடவடிக்கை சகாப்தம் என அறியப்பட்டது. ஏனெனில் இந்தோனேசிய இராணுவம் அதன் கிளர்ச்சி-எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கிவிட்டது. இந்த நடவடிக்கையால் ஒரு கொரில்லாப் படையான ஆச்சே இயக்கத்தை அழிப்பதில் தந்திரோபாயமாக வெற்றி பெற்றாலும், 1998 இன் பிற்பகுதியில் ஜனாதிபதி ஹபிபியின் உத்தரவின்படி இந்தோனேசிய இராணுவம் ஆச்சேவிலிருந்து கிட்டத்தட்ட முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டது. இதன் பின்னர் ஆச்சே இயக்கம் தன்னை மீண்டும் நிலைநிறுத்த உதவியது. ஆயினும் முக்கியமான ஆச்சே இயக்க தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். சுஹார்டோவின் வீழ்ச்சி 1999 ஆம் ஆண்டில், ஜாவாவில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சுஹார்டோவின் வீழ்ச்சியால் ஒரு பலமற்ற மத்திய அரசாங்கம் சுதந்திர ஆச்சே இயக்கத்திற்கு ஒரு நன்மையை அளித்தது எனலாம். 1999 இல் துருப்புக்கள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், மோசமான பாதுகாப்பு நிலைமையால் மேலும் வீரர்களை மீண்டும் களத்தில் இறக்க வழிவகுத்தது. ஜனாதிபதி மேகாவதி சுகர்னோபுத்ரியின் பதவிக் காலத்தில் 2001-2004துருப்புக்களின் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்ததாக நம்பப்படுகிறது. அச்சேவில் இந்தோனேசிய தாக்குதல் மே 19, 2003 இல் தொடங்கப்பட்டது, கிட்டத்தட்ட ஒரு வருடம் நீடித்தது. 1975 ஆம் ஆண்டு கிழக்கு திமோர் படையெடுப்பிற்குப் பிறகு இந்தோனேசிய இராணுவத்தின் மிகப்பெரிய தாக்குதல் இதுவும் ஒன்றாகும். இது ஆச்சே இயக்கத்தை கடுமையாக முடக்கியது. ஆயினும் ஆச்சே முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் 70 சதவீதத்தை ஆச்சே இயக்கம் கட்டுப்படுத்த முடிந்தது. 1999 ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசாங்கத்திற்கும் ஆச்சே இயக்கத்துக்கும் இடையிலான முதல் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த செயல்முறையானது மனிதாபிமான உரையாடல் மையம் என்ற ஒரு தனியார் இராஜதந்திர அமைப்பால் தொடங்கப்பட்டது, இது 2003 வரை இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுக்களை நடாத்த எளிதாக்கியது. 2001 மற்றும் 2002 இல் நடந்த இந்தோனேசிய பாதுகாப்பு படையின் அடக்குமுறைகளால் பல ஆயிரம் பொதுமக்கள் இறந்தனர். இம்மோதல்களால் 15,000 பேர் வரை கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசிய ஆட்சியின் கீழ் சிறப்பு சுயாட்சியை ஏற்றுக்கொள்வதற்கு ஆச்சே இயக்கத்துக்கு இறுதி எச்சரிக்கையையும் அக்காலத்தில் விடுக்கப்பட்டது. ஆச்சேயில் கொடூர இராணுவச் சட்டம்: மே 18, 2003 அன்று நள்ளிரவுக்குப் பிறகு, ஜனாதிபதி மேகாவதி சுகர்னோபுத்ரி, 12வது இந்தோனேசிய இராணுவத் தலைவரான ஜெனரல் எண்ட்ரியார்டோனோ சுடர்டோவுக்கு பிரிவினைவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி வழங்கினார். ஜெனரல் சுதார்டோ ஆச்சேயில் இராணுவச் சட்டத்தை விதித்தார். ஜூன் 2003 இல்,ஆச்சேவில் உள்ள அனைத்து மக்களையும் வேறுபடுத்துவதற்காக ஒரு புதிய அடையாள அட்டையை அறிவித்தது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி நிறுவனங்களுக்கு நடவடிக்கைகளை நிறுத்தவும், அப்பகுதியை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டது. இந்தோனேசிய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தன. போரின் போது 2,000 பேர் கொல்லப்பட்டதாக முதலில் மதிப்பிடப்பட்டது. ஆனால் சர்வதேச மனித உரிமை குழுக்கள் மற்றும் அரச சார்பற்ற மனித உரிமைகள் ஆணையம் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் பல்லாயிரம் என்று கூறுனர். இந்தோனேசிய இராணுவ படையெடுப்பு : நவம்பர் 2003 இல் இராணுவச் சட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையின்படி, இந்தோனேசிய இராணுவம் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் போது பரவலான மனித உரிமை மீறல்களைச் செய்தது. இராணுவச் சட்டத்தின் முதல் ஏழு மாதங்களில் 100,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் நடந்ததாக அறிவித்தனர். இந்த இராணுவ நடவடிக்கையின் போது பரவலான பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்ததாக மலேசியாவில் உள்ள ஆச்சே அகதிகள் தெரிவித்தனர். இந்தோனேசிய இராணுவத்தின் உறுப்பினர்கள் கடினமான விசாரணைகளும் , கொடூரமான சித்ரவதைகளையும் மேற்கொண்டதாக கருதப்படுகிறது. இதன்பின் இநதோனேசிய அரசாங்கம் பாரிய தாக்குதலைத் தொடங்கி ஆச்சே மாகாணத்தில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியது. இந்த காலகட்டத்தில், ஆச்சே இயக்கம் கடுமையாக முடக்கப்பட்டது, அதன் தளபதி அப்துல்லா சியாஃபி அரசாங்கத்தால் பதுங்கியிருந்து கொல்லப்பட்டார், அதே நேரத்தில் டெங்கு ஜமைக்கா மற்றும் இஷாக் டாட் போன்ற பல்வேறு பிராந்திய தளபதிகளும் கொல்லப்பட்டனர். டோக்கியோ அமைதி பேச்சு : இந்தோனேசிய அரசாங்கத்தால் ஆச்சே இயக்கம் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவும், இரண்டு வாரங்களுக்குள் ஆச்சேவுக்கு சிறப்பு சுயாட்சியை ஏற்கவும் ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டது. ஸ்வீடனை தளமாகக் கொண்ட ஆச்சே இயக்கத்தின் ஆச்சே இயக்க தலைவர்கள் இறுதி எச்சரிக்கையை ஏற்க மறுத்தனர். ஆனால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆயுத மோதலைத் தவிர்க்கவும், டோக்கியோவில் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்கவும் இரு தரப்பையும் வலியுறுத்தின. மே 16, 2003 அன்று, அரசாங்கம் தன்னாட்சி வழங்குவதே ஆச்சே இயக்கத்துக்கு அளிக்கும் இறுதி சலுகை என்றும், இறுதி எச்சரிக்கையை நிராகரிப்பது இயக்கத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியது. ஆச்சே இயக்க தலைவர்கள் மற்றும் பேச்சுவார்த்தையாளர்கள் இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்தனர். சுனாமி 2004 பேரழிவு : ஆச்சே இயக்க அறிக்கைகளின் மூலம், 2003-2005 அரசாங்கத் தாக்குதலின் போது அதன் இயக்க வலிமையில் 50% இழந்தது என ஒப்புக்கொண்டது. 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஆச்சே மாகாணத்தை தாக்கியபோதும் கிளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. டிசம்பர் 2004 இல் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிக்குப் பிறகு, ஆச்சே இயக்கம் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்தது, சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்கள் மோதலைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். சுனாமிக்குப் பிறகு, இந்தோனேசிய அரசாங்கம் ஆச்சே பகுதியை சர்வதேச நிவாரண முயற்சிகளுக்குத் திறந்தது. சுனாமியின் பின்னர் இவ் மோதல் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. முந்தைய சமாதான முயற்சிகள் பலவும் தோல்வியடைந்தன, ஆனால் சுனாமியின் பின் இரு தரப்பும் மோதலில் இராணுவ ரீதியாக வெற்றிபெற இயலாமை மற்றும், குறிப்பாக, இந்தோனேசியாவில் அமைதியைப் பாதுகாக்க ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோவின் விருப்பம் உட்பட பல காரணங்களால், ஒரு சமாதான உடன்படிக்கை எட்டப்பட்டது. இதன்மூலம் 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தின் விளைவுடன் ஆச்சேயில் 30 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது. பின்லாந்து சமாதானப் பேச்சுவார்த்தை : 29 வருட போருக்குப் பிறகு 2005. சுஹார்டோவிற்குப் பிந்தைய இந்தோனேசியா மற்றும் தாராளவாத-ஜனநாயக சீர்திருத்த காலம் ஆகும். அத்துடன் இந்தோனேசிய இராணுவத்தில் பதவி மாற்றங்கள் சமாதானப் பேச்சுக்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்க உதவியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோ மற்றும் துணைத் தலைவர் ஜூசுஃப் கல்லா ஆகியோரின் அமைதி தீர்வுக்கான பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கவை. அதே நேரத்தில், ஆச்சே இயக்க தலைமை தனக்கு கிடைக்கக்கூடிய விருப்பங்களை மறுபரிசீலனை செய்தது, மேலும் இந்தோனேசிய இராணுவம் கிளர்ச்சி இயக்கத்தை கணிசமான அழுத்தத்திற்கு உட்படுத்தியது, இது ஆச்சே இயக்கம் முழு சுதந்திரம் இல்லாத முடிவை ஏற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தியது. முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அஹ்திசாரி தலைமையில், நெருக்கடி மேலாண்மை முன்முயற்சியால் சமாதானப் பேச்சுக்கள் எளிதாக்கப்பட்டன. இதன் விளைவாக அமைதி ஒப்பந்தம் 15 ஆகஸ்ட் 2005 அன்று கையொப்பமிடப்பட்டது. ஒப்பந்தத்தின் கீழ், இந்தோனேசியா குடியரசின் கீழ் ஆச்சே சிறப்பு சுயாட்சியைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஹெல்சின்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஹெல்சின்கி அமைதி புரிந்துணர்வு ஒப்பந்த முடிவுகளால் மோதலுக்கு அமைதியான தீர்வு கிடைத்ததாக அறிவித்தனர். இதன்படி ஆச்சேவுக்கு சிறப்பு சுயாட்சி வழங்கப்பட்டது. ஆச்சே இயக்கத்தின் நிராயுதபாணியாக்கமும், ஆச்சே இயக்கத்தின் சுதந்திரக் கோரிக்கையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அத்துடன் அவசியமற்ற இந்தோனேசிய துருப்புக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்பின் அமைதிக்கான ஆச்சே கண்காணிப்பு பணியகத்தால் பிராந்திய தேர்தல்களும் நடாத்தப்பட்டது. பல ஆண்டுகளாக விடுதலையை மூச்சாக கொண்டு போராடி ஆச்சே தேசம் , கொடிய போரினால் சிந்திய குருதிகளுக்கும், சிதைவடைந்த தேசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை சுனாமியின் அழிவுகளும், ஆச்சே விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை நிறுத்த வழிகோலியது என்பது உண்மையே. ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை ஏற்றுக் கொண்ட அச்சே தேச வரலாறு, விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது எனலாம். Thinakkural.lk
  25. வண்ண உள்ளாடை முதல் கரடி ஆட்டம் வரை – விநோதமான புத்தாண்டு பாரம்பரியங்கள் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி மீது நமக்கு ஒவ்வொரு புத்தாண்டிலும் நம்பிக்கை வருகிறது. ஆண்டின் முதல் நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுடன் அதிர்ஷ்டத்தை வரவேற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கடைபிடிக்கப்படும் விசித்திரமான பாரம்பரிய கொண்டாட்டாங்களைப் பார்க்கலாம். புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நாம் ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வருடத்தின் முதல் நாள் என்பதால் அந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களுக்கு தெரிந்த கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறார்கள். ஆனால் இப்படியெல்லாமா புத்தாண்டை தொடங்குவார்கள் என வினோதமாக பார்க்க வைக்கும் சில நிகழ்வுகளும் உலகம் முழுவது நடைபெறுகிறது. சோளக்காட்டு பொம்மை எரிப்பு தென்னமெரிக்க நாடான ஈக்குவடோரில் புத்தாண்டை கொண்டாட சோளக்காட்டு பொம்மைகளை எரிக்கும் வினோத பழக்கம் இருக்கிறது. அந்த சோளக்காட்டு பொம்மைகளுடன் பழைய கெட்ட நினைவுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும், காகிதங்களையுன் எரிக்கின்றனர். இவ்வாறு நள்ளிரவில் சோளக்காட்டு பொம்மைகளை எரித்து நெருப்பின் ஒளியில் புத்தாண்டை வரவேற்பதன் மூலம், பழைய மோசமான நிலையை எரித்து புதிதாக பிறக்க முற்படுவது தான் இந்த கொண்டாட்டம். உடைந்த தட்டுகள் டென்மார்கில் ஒருவர் புத்தாண்டு அன்று எழும் போது அவரது வீட்டு வாசலில் எத்தனை உடைந்த தட்டுகளைப் பார்கிறாரோ அவ்வளவு அதிர்ஷ்டம் எந்த ஆண்டு அவருக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த உடைந்த தட்டுகாள் எங்கிருந்து வரும்? அவரவர் வீடுகளில் இருக்கும் பயன்படுத்தப்படாத தட்டுகளை இவ்வாறு நண்பர்கள் மற்றும் விருப்பமான உறவினர்கள் வீட்டு வாசலில் உடைத்து போடுவர். அதிகமான நண்பர்களைக் கொண்டவர் வாசலில் அதிக தட்டு இருப்பது லாஜிக். அதிக தட்டுகள் அதிக அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் என்பது நம்பிக்கை. 108 மணியோசைகள் ஜப்பானில் புத்தாண்டு அன்று 108 முறை மணி அடிக்கப்படுகிறது. இப்படி 108 மணியோசையைக் கேட்பவர்களின் பாவங்கள் கழுவப்பட்டு அனைவருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது ஒரு புத்த பாரம்பரியம். தவிர, சிரித்தபடி மகிழ்வாக இருப்பது ஆண்டு முழுவதும் நம்மை மகிழ்வாக இருக்கச் செய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை. கலர் உள்ளாடைகள் அணிவது புத்தாண்டு குறித்து உலகம் இருக்கும் நம்பிக்கைகளில் இது விநோதமான ஒன்று. நாம் எந்த நிற உள்ளாடை அணிகிறோம் என்பது கூட நமக்கு அந்த ஆண்டு எப்படி அமையும் என்பதைத் தீர்மானிக்குமாம். இந்த ஆண்டில் நாம் அதிக அன்பை நாடுகிறோம் என்றால் சிகப்பு நிற உள்ளாடை அணிய வேண்டுமாம். நமக்கு செல்வம் வேண்டுமென்றால் மஞ்சள் நிறமும் அமைதி வேண்டுமென்றால் வெள்ளை நிறத்திலும் உள்ளாடை அணிய வேண்டுமாம்! வட்டமான பொருட்கள் பிலிப்பைன்ஸ் மக்களின் நம்பிக்கையும் மிகவும் வினோதமானது தான். புத்தாண்டு பிறக்கும் இரவில் தங்களைச் சுற்றி வட்டமான பொருட்களை வைத்துக்கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பது அவர்களின் நம்பிக்கை. நாணயங்கள் முதல் வளையங்கள் வரை பல வகையான பொருட்களை தங்களை சுற்றி வைத்துக்கொள்வது அதிர்ஷ்டம் தான். வீட்டு உபயோக பொருட்களை தூக்கி எரியும் பழக்கம் புத்தாண்டு அன்று புதிதாக வாழ்க்கையைத் தொடங்க பழைய பொருட்களை தூக்கி எரியும் பழக்கம் என்பது பரவலாக உலக நாடுகளில் பார்க்க முடியும். இத்தாலியில் மக்கள் தங்களது பழைய சோபா, பீரோ, நாற்காலி என உபயோகமற்ற வீட்டு உபயோக பொருட்களை தூக்கி எரிவது வழக்கமாம். பொருட்களை ஜன்னல் வழியாக வீசி அது உடைவதைப் பார்த்து சந்தோஷப்படுகின்றனர். காகித குப்பையை எரியும் மக்கள் வெள்ளைக் காகிதங்களையும் வண்ண வண்ண சிறிய காகிதங்களையும் தங்களது ஜன்னல் வழியாக வீசி எரிந்து புத்தாண்டை வரவேற்கின்றனர் அர்ஜென்டினா மக்கள். இது போல காகிதங்களை எரிவது பழைய விஷயங்களைத் துறந்துவிட்டு புதிய வாழ்க்கைகுள் நுழைவதைத்தான் குறிக்கிறது. மிருகங்களிடம் பேசுங்கள்; கரடி ஆட்டம் போடுங்கள் ரோமானிய விவசாயிகள் புத்தாண்டு அன்று தங்களது விலங்குகளுடன் நேரம் செலவிடுகின்றனர். அவற்றுடன் பேசி அவற்றை மகிழ்வாக வைத்திருந்தால் தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகின்றனர். ரோமானிய மக்கள் புத்தாண்டு அன்று கரடி வேஷமிட்டு ஆடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படி ஆடினால் தீய சக்திகள் தங்களை அண்டாது என்பது அவர்களின் நம்பிக்கை. ரோமானியாவின் இதிகாச கதைகளில் கரடிகள் மக்களைக் காக்கும் ஹீரோக்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் பருப்பு – ஸ்பெயின் திராட்சை பிரேசிலில் புத்தாண்டு அன்று லென்டில் (மைசூர் பருப்பு) எனப்படும் பருப்பை சாப்பிட்டால் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர். அது தவிர மாதுளை மற்றும் சிக்கன் உண்பதையும் பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர். இதேப் போல ஸ்பெயின் மக்கள் புத்தாண்டு பிறந்ததும் திராட்சை சாப்பிட்டால் அதிர்ஷ்டம் பிறக்கும் என நம்புகின்றனர். Thinakkural.lk
      • 1
      • Like
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.