உண்மை. அதனை சாத்தியமாக்கி மக்களை ஊக்குவித்து வழிநடத்தும் தலைமை தேவை.
மாற்றம் ஏற்பட திவாலாவது மட்டுமே ஒரே வழியல்ல. திவாலாவது மாற்றத்தை கொண்டுவரக்கூடியது, ஆனால் மாற்றம் உண்டாகாமால் திவாலாகி வாழும் நாடுகளாக, சோமாலியா, சியரா லியோன் ஆகிய இருக்கின்றன. இலங்கையும் அவ்வாறாக தொடரக்கூடும்.
தமக்கு இலாபம் இல்லாத இடத்தில் இந்தியா, சீனா உட்பட எந்த நாடும் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதில்லை. திவாலான இலங்கை பயனற்ற நாடாக மாறும் போது, எல்லா நாடுகளும் கைவிடும் சாத்தியமே அதிகம்.
உண்மையல்ல. அமைச்சர்களே பகிரங்கமாக அரசை விமரிசித்து பதவி இழக்கும் அளவுக்கு இராஜபக்ஷ அரசு செல்வாக்கு இழந்துவிட்டது. கூட்டம் கூடி கோத்தபாயவை வரவேற்ற மக்கள் இப்போது இராணுவம் நிற்க கூடியதாக கூக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்க கூடும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் எதிர்க்கட்சி அழைக்க கொழும்பை முடக்கும் அளவுக்கு மக்கள் கூடும் காட்சிகளை காணக்கிடைக்கிறது. நாமல் இராஜபக்ஷ தாம் செல்வாக்கு இழந்துவிட்டதாக பகிரங்மாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.