-
Posts
2867 -
Joined
-
Last visited
-
Days Won
4
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by கற்பகதரு
-
டெல்லி செல்லத் தயாராகும்... தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !!
கற்பகதரு replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
வல்லவனுக்கு ஆங்கில உதவி செய்து 33,000 ஏக்கர் நிலத்தை கண்டுபிடிக்க உதவிய புண்ணியவானுக்கு நன்றி. -
டெல்லி செல்லத் தயாராகும்... தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !!
கற்பகதரு replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஆதாரம் தந்திருத்தேனே? சண்டே ரைம்ஸ் —- ஓ… ஆங்கிலத்தில் உள்ளதால் புரியவில்லையா? துறைமுகத்தை சுற்றியுள்ள நிலமும் சேர்த்து என்றுள்ளது. யாராவது வல்லவனுக்கு மொழிபெயர்த்து உதவ மாட்டீர்களா? -
டெல்லி செல்லத் தயாராகும்... தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !!
கற்பகதரு replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கருணா அம்மான் சுற்றுலா போன காலத்தில் வயிறு நிறைத்தவர்களை இன்னமும் நினைவில் இருக்கிறது. வித்தியாசமாக செய்யக்கூடிய பத்து ஆலோசனைகளை அப்படியே எடுத்து விடலாமே? அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகத்தில் 33,000 ஏக்கர் நிலத்தை கொடுக்க மூன்று பில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள சூடு ஆறமுதல் அடுத்த நகர்வு ஆரம்பம். ஆதாரம்: https://www.sundaytimes.lk/210808/business-times/us-firm-to-develop-oil-refinery-at-trincomalee-harbour-site-451516.html சுமந்திரனின் இரகசிய நகர்வுகள் வேலைசெய்ய ஆரம்பித்திருக்கின்றன. பசிலின் மறுவரவும் இதனோடு சம்பந்தப்பட்டதாகவே தெரிகிறது. -
“240 கணினிகள் கொள்வனவு விடயத்தில் முறைப்பாடு செய்தவரிடம் கணினிகள் கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்றவர் என தொழிநுட்ப குழு பரிந்துரைத்துள்ளது. எனவே தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே மேற்கொள்வனவு இடம்பெற்றது எனத் தெரிவித்தார்.” முறைப்பாடு செய்தவரின் கணணிகளும் அவற்றிற்கான சேவையும் தேவையான தொழில்நுட்பத்தை கொண்டிருக்காத காரணத்தால் தொழிநுட்ப குழு முறைப்பாடு செய்தவரை நிராகரித்துள்ளது. அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
-
தமிழர்களை தமிழர்களே கண்டுகொள்வதில்லை. தமக்கு பெருத்த இலாபம் இல்லாமல் தமிழர்கள் மற்றவர்களுக்கு உதவுவது குறைவு. முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களை சகோதரன், சகோதரி என்று அழைத்து ஒருவருக்கு ஒருவர் உதவுவது அதிகம். மதம் பரப்பும் கிறீஸ்தவர்களும், சீக்கியர்களும், யூதர்களும் கூட தம்மவர்களுக்கு உதவுவது அதிகம். இந்த பண்பாடு மதநம்பிக்கைகளில் இருந்து வருவதாகவே தெருகிறது.
-
ஸ்ரீசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றனர் - செல்வம் அடைக்கலநாதன்
கற்பகதரு replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
பலருக்கு அவர் கடவுளாகிவிட்டார். அடுத்த நூற்றாண்டில் கோவில்களிலும் இருப்பார் போலவே தெரிகிறது. வேறு சிலர் அவரை கடவுளும் இல்லை மனிதரும் இல்லை என்கிறார்கள். இரகசியமாக காட்டிக்கொடுப்பதையெல்லாம் தலைமைப்பீடம் கலந்தாலோசித்து முடிவெடுத்து செய்வது அபூர்மானதாகவே இருக்கும். -
ஸ்ரீசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றனர் - செல்வம் அடைக்கலநாதன்
கற்பகதரு replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தேசியத்தலைவர் ரெலோவிடம் தஞ்சம் அடைந்திருந்த நேரம் குட்டிமணி தங்கதுரையை அவர்தான் இரகசியமாக காட்டிக்கொடுத்தார் என்பதுதானே அறியக்கிடைத்த தகவல்? அது பழைய கதையா? இருவரும் என்றால். …. தேசியத்தலைவரும் பிழை செய்தார் என்கிறீர்களா? இது காலம்கடந்த ஞானமல்லவா? -
"இந்தியாவிடம் கேளுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்"
கற்பகதரு replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
காலம்கடந்த ஞானம் -
"இந்தியாவிடம் கேளுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்"
கற்பகதரு replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
-
https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைச்_சோனகர் இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் (Sri Lankan Moors) எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள்தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள்.[1][2][3][4][5] இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது. https://ta.m.wikipedia.org/wiki/அராபியர் அராபியர் (அரபு மொழி: عرب, ʿarab) எனப்படுபவர்கள் பல்லின, கலாச்சார இனக்குழுக்களாவர்.[21] இவர்கள் அதிகமாக வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவின் கொம்பு, இந்து சமுத்திர தீவுகள் மற்றும் கொமொரோசு, அமெரிக்காக்கள், மேற்கு ஐரோப்பா, இந்தோனேசியா, இசுரேல், துருக்கி, ஈரான்[22] உட்பட்ட பிரதேசங்களிலும் அறபு உலகிலும் வாழ்கின்றனர்.
-
https://ta.m.wikipedia.org/wiki/அரபுத்_தமிழ்_எழுத்துமுறை தமிழ்நாட்டில் குடியேறிய அரபிகள் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் அதனை அரபி எழுத்துக்களினாலும் எழுதினர். இதுவே அரபுத் தமிழ் எனப் பெயர் பெறலாயிற்று.[சான்று தேவை]தமிழில் உள்ள ள, ழ, ண, ட போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் ஒலி இல்லாததால் அவற்றிற்கு சற்று முன்பின் சம ஒலியுள்ள அரபி எழுத்துக்களுக்கு சில அடையாளங்களை அதிகப்படியாகச் சேர்த்து அவ்வொலிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அரபுத் தமிழிலோ அரபி எழுத்துக்கள் 28 உடன் 8 எழுத்துக்கள் மேற்கொண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. அரபுத் தமிழுக்கு முன்னோடியாக இருப்பது அரபு வங்காள மொழியாகும். இதைப் பற்றி இப்னு கல்தூனும் தம்முடைய உலக வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு முன்னர்த் தென் கிழக்கு ஆப்ரிக்காவில் தன்சானியா நாட்டில் சுவாஹிலி மொழி, அரபி எழுத்துக்களினாலும் எழுதப்பட்டது. மலேசியாவிலும் "ஜாவி" மொழி அரபி எழுத்துக்களால் தாம் எழுதப்பட்டு வருகிறது. துருக்கி மொழி துவக்கத்தில் அரபி லிபியில் தான் எழுதப்பட்டு வந்தது, பின்னர் முஸ்தபா கமால் காலத்திலயே அதனை உரோம லிபியில் எழுதும் பழக்கம் புகுத்தப்பட்டது. உஸ்பெக் மொழியும் அரபி லிபியிலயே எழுதப்பட்டு வந்தது. இப்போது ரோம லிபியில் எழுதப்பட்டு வருகிறது. கேரளத்திலும் அரபு மலையாளத்தில் பல நூல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மொழியான ஹிந்தியை அரபி எழுத்துக்களில் எழுதத் துவங்கியதன் விளைவாகவே உருது தோன்றியது. அரபு தமிழில் ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட சமய நூல்கள் வெளிவந்துள்ளன. திருக்குரானுக்கு தமிழில் விளக்கவுரை எழுதக்கூடாது என மார்க்க விற்பன்னர்கள் பெரிதும் வற்புறுத்தி வந்ததன் காரணமாக அரபுத் தமிழில் தப்சீர்களும், ஏனைய இஸ்லாமிய நூல்களும் வெளிவரலாயின. குர்ஆனின் அரபுத் தமிழ் விரி உரைகளான தப்சீர் பத் ஹுல்கரீம், தப்சீர் பத் ஹுல் ரஹீம், புதூ ஹாதூர் ரஹ்மானியா பீதப்சீரி கலாமிர் ராப்பானியா ஆகியவை பிரசித்தி பெற்ற நூலாகும். இவை காயல்பட்டனத்திலிருந்து வெளிவந்தவை. காயல்பட்டணம் ஷாம் சிஹாபுதீன் வலி அவர்கள் அரபுத் தமிழில் பல பாமாலைகள் இயற்றியுள்ளனர். கி. பி.1889 ஆம் ஆண்டில் "கஷ்பூர் ரான் பீ கல்பில் ஜான்" என்ற ஒரு வார ஏடும், கி பி 1906 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து "அஜாயிபுல் அக்பர் (செய்தி வினோதம்) என்று ஒரு வார ஏடும் வெளிவந்துள்ளன. பொதுவாக ஆண்களைவிட பெண்கள்தாம் இவ்வரபுத் தமிழை அதிகமாக எழுதப் படிக்க தெரிந்திருந்தனர். அக்காலத்தில் கடிதங்கள் கூட அரபுத் தமிழில் எழுதப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இது பிரபல்யமாக இருந்தது. தமிழ்நாட்டில் இதில் பல பாரிசி, உருது சொற்கள் கலந்து விட்ட பொழுது இலங்கையில் இது தன் நிலைகுலையாது இருந்தது. கி.பி 8 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை அரபுத் தமிழ் சிறப்புற்று விளங்கியது. அச்சுப் பொறி வந்த பின் இதன் மதிப்பு மங்கலாயிற்று. மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பேச்சு வழக்கில் உள்ள சாதாரண சொற்களாக இருந்ததாலும் இதனுடைய நடையும், பழங்காலத்தாயிருந்ததாலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் இதனை வன்மையாகத் தாக்கினர். இழித்தும் கூறினார். அதன் காரணமாகவும் அரபி மதராசாக்களில் இது வழகொழிந்ததால் தமிழ்நாட்டில் முஸ்லிம் பொது மக்களிடத்திலும், பெண்களிடத்திலும் இந்நூல்களைப் படிக்கும் ஆர்வம் அற்று போய் விட்டது. எனினும் இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் இது இன்றும் மதிப்புடன் விளங்குகிறது." அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்று இதனை அங்குள்ள முஸ்லிம்கள் போற்றுகின்றனர்.[சான்று தேவை] அங்கு தோன்றிய செய்கு முஸ்தபா ஆலிம் வலி " பதுகுர் ரஹ்மான் பி தப்சீர் இல் குரான்" என்ற பெயருடன் அரபுத் தமிழில் திருக்குரானுக்கு ஒரு விரிவுரை எழுதி உள்ளார். அதில் ஐந்து அத்தியாயங்களே அச்சில் வெளிவந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கடல்வழி வணிகத்துக்குத் தமிழகம் வந்த முஸ்லீம் வணிகர்கள் இஸ்லாம் தோன்றிய காலத்திலேயே தமிழகத்தின் பெருவழி என்றழைக்கப்பட்ட பாதையில் கள்ளிக்கோட்டையில் இருந்து புலிகட் வரை பரவி வாழ்ந்து தமிழக வ்ணிகமும் இஸ்லாமியக் கொள்கைகளும் கிழக்காசியாவில் பரவக் காரணமாக இருந்தார்கள். அவர்களே அரபிக் தமிழ் வரிவடிவத்தை உருவாக்கித் தென் தமிழகத்திலும் இலங்கையிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து போற்றி வளர்த்து பள்ளிகளின் இளஞ் சிறார்களுக்கும் சிறூமிகளுக்கும் கற்பித்து வந்ததாக இணைப்பில் உள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
-
ஒன்றுமே வெட்டிவீழ்த்தவில்லை சோழமகாராஜா. நான் சொல்வதும் நீங்கள் சொல்வதும் ஒன்றே. அவர்கள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. அவர்களும் உங்கள் அழிவை பற்றி அக்கறைப்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து சாப்பாட்டு பொட்டலங்கள் வந்தது பற்றி மகிழ்ந்து எழுதியருந்தீ்ர்கள். பரிதாபமான நிலைதான், இரக்கத்தில் அதாவது தந்தார்கள்.
-
வடக்கில் அசத்தும் ஈ பி டி பி யின் "சொர்ணா அக்காக்கள்"
கற்பகதரு replied to ரஞ்சித்'s topic in அரசியல் அலசல்
விடுதலை பெற்று தருகிறோம் என்று எத்தனை அப்பாவிகளை, குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என்றும் பாராமல் கொலைக்களத்தில் உங்கள் கனவுகளுக்காக பலிகொடுத்திருக்கிறீர்கள்? அதைப்பற்றி சிறுதும் குற்ற உணர்வின்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவகையிலும் உதவும் நோக்கமில்லாமலும் அதே பழைய குரூர மிருகமனப்பான்மையுடன் இருக்கும் உங்களைப் போன்றவர்களில் எவரும் இரக்கப்படப்போவதில்லை. -
வடக்கில் அசத்தும் ஈ பி டி பி யின் "சொர்ணா அக்காக்கள்"
கற்பகதரு replied to ரஞ்சித்'s topic in அரசியல் அலசல்
ஆயுதப்போரட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு அவர்கள் பற்றி துளியும் அக்கறையில்லை என்று தெரிகிறது. ஆயுதப்போராட்டத்தில் மற்றவர்களை பலிகொடுத்து உங்களுக்கு தேவையானதை பெற்றுகொண்டதுடன் உங்கள் தேவை நிறைவேறிற்று, இல்லையா? முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் உங்கள் பங்களிப்பை வரலாறு மன்னிக்காது. கருணாவையும் கொண்டுதிரிந்தவர் நீங்கள் என்பதை மறக்காதீர்கள்.