Everything posted by வாத்தியார்
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
இந்தத் திரி ஆரம்பித்த போதே எழுத வேண்டும் என்று நினைத்த ஒரு வரி அர்ஜுனா ஒரு விசச் செடி அல்ல விஷயம் தெரியாத சாடியும் அல்ல அரசியலில் பக்குவம் பெறாத ஒரு மனிதன் இது தான் உண்மை அதனால் என்னுடைய வேண்டுகோள் தலையங்கத்தை மாற்றி விடுங்கள் ஓணாண்டியார்
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
இல்லை இருந்தாலும் பதிலுக்கு நன்றி 😂
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
நிச்சயமாக... தேர்தலின் முன்னர் அவரின் நடவடிக்கைகளை கவனித்து வைத்தியர் அர்ச்சுனாவை.... அவர் இப்படித்தான்.... என்ற பார்வையில் தான் எனது ஆதரவை அவருக்கு வழங்கியிருந்தேன். தேர்தலில் வென்ற பின்னரும்.... சரி.... வெற்றிக் களிப்பில் சில வார்த்தைப் பிரயோகங்கள் வரும் என்று நினைத்தேன் . ஆனாலும் அவர் தொடர்ந்தும் பாராளு மன்றத்தில் செய்த காரியங்கள் (முதல் நாள் அல்ல சஜித்துடனான முரண்பாடும் அல்ல) எனக்குச் சரியாகப் படவில்லை. சக தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களை நையாண்டி செய்வது ஒரு உதாரணம். பின்னர் அதன் உச்ச கட்டமாக தன்னைவிடப் பெரியவர்கள் இந்த மன்றத்தில் இல்லை என்ற தொனியில் கேம் கேட்டார் அத்துடன் இஸ்லாமியர்கள் இழிவானவர்கள் என்ற அவரின் கருத்து இன்னும் காட்டமானது அவர் தனது பிழைகளை திருத்தி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலைச் செய்வார் என்ற நம்பிக்கை மனதில் ஒரு மூலையில் இருந்தாலும்..... இப்படியான பிழைகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது அவர் தனது குறைகளை சரி செய்து மீண்டு வரும் போது எனது ஆதரவு எப்போதும் அவருக்கு கிடைக்கும்.
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
நான் பத்து வருடங்கள் புகை பிடித்து அதை விட்டு பத்து வருடங்கள் ஆகிய பின்னர் மீண்டும் புகைத்தலுக்கு அடிமையாகி 20 வருடங்கள் ஆகிய பின்னர் இப்போது பத்து மாதங்களாக பிடிப்பதில்லை எனக்குப் பத்தொன்பது வயதாகி இருந்த போது முதன் முதலில் புகை பிடிக்க ஆரம்பித்தேன் . இப்போது முக்கியமான கேள்வி..... எனக்கு எத்தனை வயது இப்போது ? 😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல் நான்கு அணிகளில் ஒன்றாகவரும் KKR அணி (கேள்வி 72 ) குழு நிலையில்( 73 ஆவது கேள்வி) கடைசியாக வரும் என்பது ..... உங்கள் விருப்பம் ..... எதற்கும் ஒருமுறை சரி பாருங்கள் மாறி எழுதியிருக்கலாம் சுவைப்பிரியர்🙏
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
நானும் அவருடை இந்த மாதிரியான கருத்துக்களை வன்மையாக் கண்டிக்கின்றேன் அவருக்கான எனது ஆதரவையும் வாபஸ் பெற்றுவிட்டேன் நாங்கள் தமிழர்களும் இனவாதம் பேசுபவர்கள் தான் என்பதற்கு அண்மையில் இவர் பேசும் உரைகள் ஆதாரம். இஸ்லாமியர்கள் மீது இவர் மிகவும் காட்டமாக உள்ளார் என்பது கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமே
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் அடி மட்டத்தில் ஆதரவு இல்லை . முன்பெல்லாம் ஒரு ஊர் என்றால் வட்டாரத்திற்கு ஒரு தலைவர் அவருக்கு கீழே ஆயிரம் தொண்டர்கள் என இருப்பார்கள் இப்போது கட்சிக்கே சம்பந்தமில்லாத ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்து அவர் மூலம் வாக்குக்களை சேகரிக்கும் முறையைப் பின்பற்றி எல்லோரும் மூக்குடைபடுகின்றார்கள்
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியையும் உடைக்கப் பலராலும் முயற்சி செய்தும் முடியவில்லை. ஐயா காப்பாற்றி வைத்திருக்கின்றார் அப்படியே இதையும் நீங்கள் வைத்திருங்கள் கிழக்கில் தமிழரசின் பா ஊக்களில் இருவர் அடுத்த பாராளு மன்றத் தேர்தலில் கட்சி மாற வாய்ப்பு உள்ளது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையன் தம்பி வணக்கம் 71 வது கேள்விக்கான பதில் நீங்கள் எழுதவில்லை
-
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அது ஊரில் வாழ்ந்த அப்பம்மா கூறியது ஊரில் இருந்து மாப்பிள்ளையை இறக்குமதி செய்வது..... சரியாகப்படவில்லை என்று நினைத்து..... இங்கேயே தெரியாத... அறிமுகம் இல்லாத.... மாப்பிள்ளைகளிடம் மாட்டுப்பட்டவர்களும் இருக்கின்றார்கள்
-
தூத்துகுடி கொத்தனாரு….
நாங்கள் தான் எல்லாவற்றிலும் பின் தங்கியவர்கள் ஆச்சே இதையும் கடந்து போவம்
-
அவளைத்தொடுவானேன்....???
அருமையான யதார்த்தமான கருத்துக்கள் கதையும் நல்லாத்தான் போகுது அண்ணா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- 'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ப்ளீஸ் கிவ் அஸ் சம் ரைம் யா வி ஆல் வில் ஜோயின்ட் வித் யு பட் நொவ் வி ஆர் இன் தி டிஸ்கஷன் அபவுட் கொப்பிஅண்ட் பேஸ்டிங் 😂🤣😇- மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
சரி அப்படி என்றால் எல்லா ட்றோலரிலும் இருக்கும் கருவிகள் சரியான செயற்திறன் உள்ளனவா எனப் பரிசோதிக்க வேண்டும். ஏன் எனில் அப்பாவி மீனவர்களை ஏமாற்ற பல உத்திகளையும் அந்த எஜமானர்கள் கையாள்வார்கள். அப்பாவி மீனவர்களை ஏமாற்ற என்பதை எஜமானர்கள் பணம் சம்பாதிக்க என்று வாசியுங்கள்- ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
தமிழ் நாட்டு அரசியல் எப்போது சாம்பாராகவே இருக்கும் அதில் எது இல்லை எது இருந்தது என்பது சாப்பிட்ட பின்னரே தெரியும் ஐ மீன் தேர்தல் முடிந்த பின்னரே யார் யாருடன் உண்மையில் கூட்டணி வைத்துள்ளார்கள் என்பது தெரிய வரும்- மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
உண்மையில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு இந்த கடல் எல்லை பிரச்சனை தெரிய வாய்ப்புக் குறைவாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன் கிடைக்கும் இடம் எல்லாம் மீன்களை அள்ளினால் அவர்களுக்கு எஜமானர்களிடம் இருந்து சம்பளம் அதிகமாக கிடைக்கும் பல எஜமானர்கள் அரசியலில் பெரும் புள்ளிகளாக இருப்பதால் இது அரசியல் பிரச்சனையாக வர வாய்ப்புக்கள் குறைகின்றன இப்போ விஜய் போய் தன்னுடைய மூக்கைத் தானே உடைக்கப் போகின்றாரா ?- யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது?
எத்தனை புதுப் புதுக் கடைகளைக் கொண்டு வந்தாலும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் வித்தியாசமான சுவைகளை அவர்களால் தரமுடியாது இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு வித்தியாசமான சுவை ஒரே உணவில் இருக்கும். அதைவிட சிறு கிராமங்களில் இருக்கும் சிறிய சாப்பாட்டுக்கு கடைகளில் இருக்கும் சுவை கிட்டத்தட்ட வீட்டுச் சமையலைப் போலவே இருக்கும்.- மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
இங்கே மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் எந்த நஷ்டமும் இல்லாதபோது என்ன நடவடிக்கையை யார் எடுப்பது ஈழத்து தமிழன் இப்போது இழிவான நிலையில் இலங்கையில் வாழ்கின்றான் நாங்கள் .........- 'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
ஈழத்து தமிழ் மீனவர்களும் தமிழ் நாட்டு மீனவர்களும் ஒன்று சேராமல் அவர்களை பிரித்து மோதல்களை உருவாக்கும் நோக்கம் மட்டுமே இந்தப்பிரச்சனையில் எனக்குப் பெரிதாகத் தெரிகின்றது முடித்து வைக்க வேண்டுமென்றால் எப்போதோ நடந்திருக்கும்- பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக இலங்கை அறிவிப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வைக்கும் முயற்சியாகவும் இருக்கலாம் தானே புத்தன் ஐயா- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டியில் வெற்றி பெற்ற முதல் அறுவருக்கும் இரண்டாம் இடத்தைப் பிடித்த அடுத்த இருவருக்கும் மூன்றாம் இடத்தைப் பிடித்த அந்த நால்வருக்கும் வாழ்த்துக்கள் . கிருபர் ஜீ மீண்டும் சளைக்காமல் போட்டியைத் திறம்பட கொண்டு நடாத்தியுள்ளார் 🙏 வாழ்த்துக்கள் பந்து போட்டவர்கள் சமனாக விக்கெட்டுக்களை கைப்பற்றி அத்துடன் சமனான ஓட்டங்களை கொடுத்ததால் ஓட்ட விகிதம் தான் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இது எப்போதும் நடைமுறையில் உள்ளதா அல்லது இந்திய அணியினர் அதை தங்களுக்குச் சாதகமாகப் பாவித்துள்ளார்களா- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
NZ.46/0-6overs😁- "யூடியூபர்" கிருஷ்ணாவுக்கு அர்ச்சுனா வைத்த ஆப்பு! | Archunaramanathan speech in parliament
எப்போதும் யாரும் இப்படியான தனி நபர்கள் ஊடாக யாருக்கும் உதவும் நோக்கத்துடன் நிதி உதவிகளை வழங்க வேண்டாம் நீங்களோ அல்லது உங்களால் முடியாவிட்டால் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஊடாக( ஊர் மன்றங்கள் , கிராம அலுவலககர்கள். உறவினர்கள்கள்) என அந்த உறவிற்கு நேரடியாக செய்வது நல்லது. ஒருமுறை உதவி செய்தால் அடுத்தமுறை உதவி செய்யும் முன்னர் ஏற்கனவே செய்த உதவி கிடைத்ததா என உறுதி செய்துகொள்ளுங்கள் - 'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.