Everything posted by வாத்தியார்
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
சுவிஸ்--- இத்தாலி 1------0
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியன் அண்ணையும் யசோதரனும் கவனியுங்கோ இந்தியா அணிக்காரங்கள் பந்து போடேக்கை சும்மா சும்மா எல்லாம் அம்பெய்யர்மாரை வெருட்டுவாங்கள்😋 சில வேலை அவங்களும் அவுட் எண்டு சொல்லிபோடுவாங்கள்😂 நான் கொஞ்ச நேரம் இத்தாலி பந்தாடிக்குது பாத்துட்டு வாறன்😎
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோலி வேளைக்கு போயிருந்தால் கட்டாயம் 200 தாண்டியிருக்கும் இந்தியா இப்ப தென்னாபிரிக்க வாண வேடிக்கை தொடங்கப்போகுது😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
7பந்து இன்னும் இருக்க கோலி போயிட்டார்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் சொன்னான் பட்டேல் போட்டார் கோலி நிக்கிறார் 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஹலோ ஹலோ பையன்🤣 இந்த விளையாட்டில் மட்டும் கோலி நிண்டு அடிப்பதன் நோக்கம் என்ன என்று உங்களுக்கு தெரியவில்லை😎 இப்ப இந்திய அணி அவற்றை கையுக்குள் அவர் போகவும் மாட்டார் அடிக்கவும் மாட்டார் வேறை ஆட்களை வந்து அடிக்கவும் விடமாட்டார் இருந்து பாருங்கோ தன்ரை கையாலையே கப்பைத் தூக்கி தென்னாப்பிரிக்காட்டை கொடுப்பார்🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எப்போதும் சிங்கம் சிங்கிளாத் தான் நிற்கும்👍😎
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாங்கள் அந்தப்பக்கம் செல்வதால் அந்த அணிகள் தோற்கின்றனவா? அல்லது தோற்கும் அணியை நோக்கி நாங்கள் செல்கின்றோமா ?😧😂 இனி இந்தியா பக்கம் சாய்ந்தால் தென் ஆப்பிரிக்கா வெல்லுமா 😅
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
25 /1 கோலி காலி 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆப்கானும் போயிட்டுது இனி இண்டைக்கு இங்கிலாந்தை பிடித்துத் தொங்குவது என முடிவெடுத்தாச்சுது👍😂
-
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி.
முறுக்கு மீசையும் நீண்ட தாடியும் ஒரு குறியும் இருந்தால் கட்டாயம் அது ஒரு ஆண் இல்லை. அதே வேளை மீசை முளைத்த பெண்கள் எல்லோரும் ஆண்களும் அல்ல. அவர் ஆண்களை போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருந்தால் அவருக்கு எதோ குறைகள் இருக்கின்றது என்று வாதாடுவது கொடுமை . மனிதன் தன்னை எப்படி உணர்கின்றானோ அப்படியே வாழ நினைப்பதில் தவறுகள் எதுவுமில்லையே. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் ஆனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது
-
மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உடல் சிதறி பலி!
கட்டுப்பாடுகள் நிறைந்த ஐரோப்பிய நாடுகளிலும் இப்படியான விபத்துக்கள் நடக்கின்றன. ஆனாலும் இலங்கையைப் போன்ற லஞ்சத்தில் ஊறிய காவல் துறை இருக்கும் நாடுகளில் அதிகமாகவே நடைபெறுகின்றன. கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார் மற்றும் நீதித்த துறை பாராபட்சம் இல்லாமல் மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள், வேகக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள், அதிக நேரம் தொடர்ந்து களைப்பாறாமல் வாகனம் செலுத்துபவர்கள், என எல்லோருக்கும் அதி கூடிய தண்டனை வழங்கினால் சிறிது அளவில் விபத்துக்கள் குறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஐரோப்பா கண்டத்திற்கும் ஐரோப்பிய யூனியனுக்கு வித்தியாசங்கள் உள்ளன. ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் 27 நாடுகள் தற்சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன. இவை இன்னும் விரிவாக்கமடையும். அந்தக்காலத்து சோவியத் ஒன்றியத்தின் உதைபந்தாட்ட அணியில் உக்கிரையின் வீரர்களும் இருந்தார்கள் . சோவியத் உடைந்த பின்னர் 1996 இலிருந்து உக்கிரையின் ஐரோப்பிய கிண்ணத்திற்கான விளையாட்டுக்களில் (தெரிவுப்போட்டிகள்) பங்குபற்றி வருகின்றது 2012 போலந்து மற்றும் உக்கிரையின் நாடுகளில் ஐரோப்பியக் கிண்ணத்திற்கான இறுதி விளையாட்டுக்கள் நடைபெற்றபோது முதல் சுற்றிலேயே வெளியேறியது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆப்கான் அவுசை அடிக்கும் என்று கனவு யாரும் காணவில்லை இந்தியாவிடம் அவுஸ் அடி வாங்கும் என்ற எண்ணமும் பலருக்கும் இருக்கவில்லை இப்படியே முதல் சுற்றில் SL NZ PaK என்று பல அணிகளும் பலவீனமானது என்று யாரும் நினைக்கவில்லை கிரிக்கெட்டு பணக்காரன் விளையாட்டு---- மழை வந்தால் விளையாடின விளையாட்டு எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை----- கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் பலமாக இருந்தால் மழை மட்டுமல்ல---- சுனாமியே வந்து எல்லாவற்றையும் குழப்பிவிடும்----- ஜாக்கிரதை கண்ணா ஜாக்கிரதை.....😂😂🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கே யார் வெல்வார்கள் என்று சொல்ல முடியாமல் உள்ளது மூன்று அமெரிக்கர்களும் முன்னணியில் நிற்பார்களா என்று சொல்லவும் முடியாது ஆனால் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளியே போகின்றோம் என்ற நிலையில் இருத்த மாதிரி இருந்து இப்போது அரை இறுதிக்கு வந்து இந்தியாவுடன் மோத இருக்கும் நிலை உண்மையில் அவர்களின் திறமையை மட்டுமல்ல அதிர்ஷ்ட்டத்தையும் காட்டுகின்றது. இப்போது எனது கணிப்பு இறுதி விளையாட்டு இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்
-
UEFA Nations League
ஐரோப்பிய உதைபந்தாட்டக் கழகம் ஐரோப்பாவில் உள்ள 55 நாடுகளையும் வரிசைப்படுத்தி நான்கு லீக் குகளை உருவாக்கி ஒவ்வொரு லீக்கிலும் 4குழுக்களை உருவாக்கினர்லீக் Dயில் மட்டும் இரு குழுக்கள். லீக் ABCD என்பன அவை A யில் திறமை வாய்ந்த அணிகள் B அதற்கு அடுத்த திறமை வாய்ந்த அணிகள் பின்னர் C என Dயில் மிகவும் பலம் குறைந்த நாடுகளின் அணிகள் உள்வாங்கப்பட்டன இதை UEFA Nations League என அழைக்கின்றார்கள் இந்த லீக் விளையாட்டுக்களில் பலமாக விளையாடும் அணிகள் ஒரு லீக் ( B;C;D ) மேலேயும் பலம் குறைந்த அணிகள் ஒரு லீக்( ABC)கீழேயும் இறக்கி ஏற்றப்படுவார்கள். பின்னர் ஐரோப்பிய அணிகள் இந்த விளையாட்டுக்களின் அடிப்படையில் 1இலிருந்து 55 வரை வரிசைப்படுத்தப்படுவார்கள் இந்த லீக் விளையாட்டுக்களின் அடிப்படையில் தான் 2024 ஐரோப்பிய கிண்ணத்திற்கான தெரிவு விளையாட்டுக்களின் குழுக்கள் அமைக்கப்படுகின்றன பத்துக் குழுக்களாகப் பிரிக்கப்பட்ட தெரிவு அணிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும் விளையாட்டு நடைபெறும் நாடான ஜெர்மனியும் 2024 ஐரோப்பிய உதைபந்தாட்டக் கிண்ணத்திற்கான விளையாட்டிற்கு நேரடியாக தெரிவு செய்யப்பட்டார்கள் இன்னும் மூன்று இடத்திற்கான தெரிவுகள் இன்னுமொரு பிரத்தியேகமான சுற்று விளையாட்டுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டார்கள் சிக்கல் நாடுகளுக்கான அணிகள் விளையாடும் பொது அந்த அந்த அணி விளையாடிய குழுக்களில் முதலாவதாக வரும் 12 அணிகள் இந்தச் சுற்ருக்குத் தெரிவாகும் அணிகளாகும். ஆனால் குழு மட்டத்தில் முதலாக வந்தவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 20 அணிகளில் இருந்தால் அந்த அந்த அணிகளுக்குப் பதிலாக அந்த அணிக்கு அடுத்ததாக அந்தக் குழுவில் இருக்கும் அணி அல்லது திறமை வாய்ந்த அணி தேர்வு செய்யப்படும். 2024 நேரடித் தேர்வுக்கான சுற்றில் உக்கிரையின் குழு சி யில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி விளையாடிய குழுவில் மூன்றாவதாக வந்ததால் நேரடியாகத் தெரிவாகவில்லை ஆனால் ஐரோப்பிய நாடுகளின் அணிகளிற்கான சுற்று விளையாட்டுக்களில் ஸ்கொட்லாந்து விளையாடிய குழுவில் இரண்டாவதாக வந்தது ஸ்கொட்லாந்து தனது நேரடித் தேர்வுக்கான விளையாட்டுக்களில் வென்று அடுத்த சுற்றுக்கு நேரடியாகத் தெரிவானதால் அந்த இடத்திற்கு உக்கிரையின் வந்து தகுதிச் சுற்றுக்குத் தெரிவாகி பின்னர் இறுதிச் சுற்றிலும் இப்போது விளையாடுகின்றன பின்வரும் அணிகள் அந்தச் சுற்ருக்குத் தெரிவாகின குழு A போலந்து , வேல்ஸ் . பின்லாந்து . எஸ்த்துலாந்து குழு B இசுரயேல் ஐஸ்லாந்து . போஸ்னியா ஹெர்செகோவீனா . உக்கிரையினா குழு C ஜோர்ஜியா . லக்ஸம்பேர்க் . கிரீஸ் . கசக்ஸ்தான் இந்த அணிகள் தங்கள் குழுக்களில் இருக்கும் அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்ற மூன்று அணிகளில் ஒன்று தான் உக்கிரையினா மற்றயவை போலந்து , ஜோர்ஜியாஇப்படித்தான் 24 அணிகளும் தெரிவாகின ரஸ்யா உக்கிரையைனை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சாட்டிய ஐரோப்பிய உதைப்பந்தாட்டக் கழகம் ரஸ்யாவை ஐரோப்பிய நாடுகளுக்கான லீக் விளையாட்டுக்களில் தடை செய்தது யுத்தம் காரணமாக உக்கிரையினை வேற்று நாட்டு மைதானங்களில் தங்கள் குழு விளையாட்டுக்களை விளையாட அனுமதி வழங்கியது கு சா அண்ணை எங்கேயோ ஒரு கேள்வி கேட்ட மாதிரி இருந்தது இப்போது அந்தக் கேள்வியைக் காணவில்லை அதனால் தான் இந்தத் திரி தொடங்கப்பட்டது
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
நடந்து எனக்கு முதல் எனது ஏழாவது பரம்பரை 1800( 1) இல் பிறந்தால் அவருக்கு 25 இல் ஒரு மகன் பிறக்கின்றான் 1825 2 அந்த மகனுக்கு ஒரு மகன் 25 இல் 1850 3 அவருக்கும் ஒரு மகன் 25 இல் 1875 4 1875 இல் பிறந்த எனது மூதாதை தனது 25 இல் ஒரு மகனைப் பெற்றுக் கொள்கின்றார் அப்போது 1900 5 1925 6 1950 7 என்று 150 வருடங்களில் 7பரம்பரையைக் காணலாம் அந்தக்காலத்தில் குழந்தைப் பருவத்திலேயே திருமணங்கள் நடந்து வந்திருப்பதால் 150 வருடங்களை விடக் குறைந்த வருடங்களிலேயே 7அல்லது 8பரம்பரையினரைக் காணலாம் நான் 25 வயதில் தந்தை எனக்கும் ஒரு பேத்தி இப்போது இருக்கின்றாள் எனது அப்பா இன்றும் உயிருடன் இருந்தால் அவருக்கு 100 வயது தனது 100 வது வயதில் பூட்டப்பிள்ளையைக் கொண்டிருப்பார்🙏
-
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
உண்மை தான் இந்தியர்கள் மட்டுமல்ல எல்லா நாட்டவரும் தங்கள் வசதிக்கேற்ப சம்பளம் கொடுப்பார்கள். 85 இல் நான் ஜெர்மனி வந்து முதல் வேலை செய்தது இத்தாலி பீசா கடை ஒரு நாள் பத்து மணி நேரம் வேலை நாள் சம்பளம் 20 ஜெர்மன் மார்க் அதாவது மணித்தியாலம் இரண்டு மார்க் இப்போது கட்டாய சம்பளம் மணித்தியாலம் 12 யூரோ வேலை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இந்தச் சம்பளம் கொடுத்தே ஆக வேண்டும்🙃
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்னுடைய கணிப்பின் படியும் சனி தான் தெரியவரும்😂 ஆனால் எந்த இந்தியா?...... கிழக்கு இந்தியா😋 தோத்து..... மேற்கு இந்தியா👌 வென்றது....... என்று தெரிய வரும்.🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எங்களுக்கு எம்மதமும் சம்மதம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாழ்த்துக்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
"ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்−மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. என்று அன்று உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடு கூடாது என்று ஒளவையார் பாடியிருந்தார். ஆனால் இன்று உலகம் ஆண், பெண்,அல்லது அதற்கும் மேல் என நீ எதுவாக இருந்தாலும் மனிதனே என்ற முடிவிற்கு வந்து அதிக காலம் ஆகி விட்டது உலகம் முழுவதும் ஓரினச் சேர்க்கை வந்து விட்டது இனி மனித குல உற்பத்திக்கு ஆபத்து வந்து விட்டது என்று ஒரு பாலர் அஞ்சுகின்றனர் அதனால் உலகிற்கே ஆபத்து என்று ஒருபடி மேலே சென்று கூச்சல் இடுகின்றனர் இன்னொரு பாலர் யாரும் யாரையும் நேசிக்கலாம் விரும்பியவர்களுடன் சேர்ந்து வாழலாம் . குழந்தை பெறுவது தான் மனித குலத்தின் தொழிலா? என்று வாதாடுகின்றனர். உலகத்தை மனிதன் உருவாக்க வில்லை இது தான் உண்மை. இந்த உலகத்தில் நடப்பவை எல்லாம் உங்களுக்கானது அல்ல. ஆனால் இங்கே உனக்கு என்ன வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்கலாம். இந்த விதிப்படி ஆண் ஆண் / பெண் பெண் / அதற்கும் மேலானவர்கள்/ உண்மையில் மனித குலம் அதற்கும் மேலானவர்களே- பிறரின் கையடக்கத் தொலைபேசி சிம் அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி; சந்தேகநபருக்கு விளக்கமறியல்
கட்டாயம் இப்படி நடப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. சிம் அட்டைகள் திருடப்பட்டு அடுத்தவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் இலங்கையில் நடக்கின்றது. இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒருமுறை சம்பந்தமே இல்லாத அழைப்புக்கள் சிங்கள மொழியில் எனது கைது தொலைபேசிக்கு வந்தன அட்டை வாங்கியது யாழ்ப்பாணத்தில்.... ஒரு முறை சிங்களத்தில் போலீஸ் கூட அழைத்தது.... அத்துடன் அந்த அட்டையை மாற்றிவிட்டேன்..... - ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.