Everything posted by வாத்தியார்
-
அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு
எது இருக்கின்றதோ இல்லையோ😅 அவரிடம் இருக்கும் ஒரு தனித்த தன்மை (கெத்து என்றும் சொல்லலாம் பயம் இன்மை என்றும் சொல்லலாம்) வேறு எந்தத் தமிழ் பா உ க்களிடமும் நான் காணவில்லை தேர்தலில் வென்று பத்து நாட்களில் இலங்கை முழுவதும் அவரது கருத்துக்கள் ஒலிக்கின்றன இது ஒரு வரலாற்றுச் சாதனை 👌
-
அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு
பலர் எதிர்பார்க்கின்றார்கள். அர்ச்சுனாவின் பதவியை எப்படியாவது பறித்து விட மாட்டார்களா என்று ஏங்குபவர்களும் இருக்கின்றார்கள். பதவி பறிப்பு நடைபெற முன்னர் என்ன நடக்கும் ? சரி அவருடைய பதவி பறிக்கப்பட்டால் அடுத்து என்ன நடக்கும் ?🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பிரபா, வாதவூரான் ,வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள் போட்டியை திறம்பட நடத்திய கந்தப்பு அண்ணைக்கு பாராட்டுக்கள்
-
பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா!
அவ்வாறு நான் செய்தது தவறாக இருந்தால் மன்னிக்கவும் என்று வந்திருக்க வேண்டும். அவர் தழமிழ்த் தேசியவாதி தான் தமிழ்த் தேசத்தில் வாழும் மக்களுக்கான அரசியல் செய்பவரைத் தேசியவாதி என்று தானே அழைக்க வேண்டும் . அதை விட செய்யாத குற்றத்திற்காக மன்னிப்பு கோருவது என்பது எல்லோராலும் முடியாது இங்கேயும் DR, அர்ச்சுனா தன்னை வேறுபடுத்தியே நிற்கின்றார்
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
சரி ஈழத் தமிழர்களுக்கு ஒரு திடமான தீர்வை தர அனுரவிற்கு ஒரு விருப்பம் இருந்தால்.... அதை அவருடைய கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும்.... பின்னர் அதை பௌத்த மத தலைவர்களிடம் தெரிவித்து ஆசி பெற வேண்டும்... அதன் பின்னர் சர்வ ஜன வாக்கெடுப்பிற்கு சிங்கள மக்களிடம் செல்ல வேண்டும்.... அதுவும் கிடைத்தால் உயர் நீதி மன்றில் அனுமதி பெற வேண்டும்.... பாராளு மன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டும்... இப்படிப் பல சிக்கல்களை அவிழ்த்து தீர்வு கிடைப்பது கடினம் JR தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு தேசம்... இல்லை.... ஒரு பிடி மண் கூடச் சொந்தமாக இருக்கக் கூடாது...... என நினைத்து நிறைவேற்றிய சட்டமூலம் 78 இல்...
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
கடற்கரையில் ஒதுங்கும் இந்த மட்டிகளை மணலுக்குள் இருந்து தேடி பொறுக்கி எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து கிட்டத்தட்ட இறைச்சிக்கறி போல சமைத்து சாப்பிடுபவர்களும் உள்ளனர்
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இன்னுமொரு விடயம் பல ஊடகங்கள் தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள் உட்பட சில்லறை ஊடகங்களும் அனைத்தும் உண்மைக்குப் புறம்பான செய்தியை பரப்பி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் அமரும் வரியையில் 8 ஆம் இலக்க இருக்கை எதிர்க்கட்சித் தலைவருக்கானது தானா என்பதே முதலாவது கேள்வி அப்படியானால் வரலாற்றில் இடம்பெற்ற எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தில் அதே இலக்க இருக்கையில் தான் அமர்ந்திருந்தார்களா ? சென்ற அரசாங்கத்தில் ரணில் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்த எதிக் கட்சித் தலைவரான சஜித் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்ற காலத்தில் இருந்து அந்த இருக்கையில் தானாம் அமர்ந்திருப்பார்
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இதைத்தான் DR. அர்ச்சுனா அவர்கள் "மாற்றத்தானே வந்தகிருக்கின்றோம்" ! என்று கூறியுள்ளார்
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
DR. அர்ச்சுனா அவர்கள் சிங்கள மக்களுக்கு இன்னும் பல செய்திகளைக் கூறிவிட்டுத்தான் தமிழ் மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பார் என்று நினைக்கிறேன் . முதலில் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் எதிர் கட்சித் தலைவர் எங்கே இருப்பார் என்று முதன் முதலாகப் பாராளுமன்றத்திற்குச் சென்றவர் யாருக்காவது தெரியுமா ? அப்படி இருக்கும் பொது ஒருவர் அமர்ந்த இடத்திலிருந்து அவரை அகற்றுவதற்கான முயற்சி ஒரு சாதாரண அரச ஊழியரால் முன்னெடுக்கப்படுவது சரியா ? அப்படியான நிலைமையில் யாரும் இடத்தைவிட்டு அகல்வதற்கு முன்வரமாட்டார்கள் குறைந்தது சஜித் அவர்கள் கூட இதைப்பற்றி வாய் திறக்காத நிலையில் ஊடகங்களும் ஒட்டுண்ணிகளும் இந்த நிகழ்வைப் பெரிதாக்க முயல்வதில் இருந்து அவர்களின் நோக்கம் மக்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
செய்த பாராளு மன்றத்தில் ஒரு மக்கள் பிரதிநிதியைக் கட்டுப்படுத்தவும் அல்லது அறிவுறுத்தும் தகுதி சபாநாயகருக்கு மட்டும் உள்ளது அது தெரியாமல் அந்த சாதாரண பாராளுமன்ற ஊழியர் மக்கள் பிரதிநிதிக்கு அறிவுறுத்த வந்ததன் நோக்கம் என்ன மக்கள் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் குரல் கொடுப்பதற்கும் கேள்விகளைக் கேட்பதற்கும் தான் இங்கே எங்கே நாகரீகம் அடிபட்டது சபா நாயக்கர் தெரிவு முடிந்த பின்னர் அவர்ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்களுக்குத் தெரிந்த விடையம் உங்களுக்குத் தெரியவில்லை அர்ச்சுனா பாராளுமன்றம் என்றது பலருக்கும் பிடிக்கவில்லை குற்றம் காண்கின்றார்கள்
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது!
நான் நினைப்பது இந்த NPP யின் அரசு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தராமல் ஏமாற்றி விட்டு அடுத்து வேறு ஒரு கட்சியிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் பொழுது அதாவது அடுத்த தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்து வெளியேறும் பொழுது அடுத்த நூறு வருடங்களுக்கு அவர்களுடைய எதிர்காலம் இருட்டினில் கவிழ்ந்து விடும் .
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஒருவருடைய இயல்பான குணங்களையோ நடை உடை பாவனைகளையோ யாராலும் மாற்ற முடியாது. என்னைப்பொறுத்தளவில் பாராளு மனத்திற்குத் தெரிவாக முன்னரே DR. அர்ச்சுனா அவர்களை மக்கள் இப்படித்தான் அறிந்து கொண்டார்கள் அதுவே அவரின் அடையாளம் மக்களுக்குத் துரோகம் இழைக்காத எந்த ஒரு மனிதனையும் தமிழர்கள் தலைவனாக ஏற்காத தயாராக இருக்கின்றார்கள் என்பதற்கு DR.அர்ச்சுனா அவர்கள் ஒரு உதாரணம் அவரைப் பின்பற்றி ஆயிரம் அர்ச்சுனாக்கள் உருவாக வேண்டும்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
40 ஆயிரம் சவப்பெட்டிகளுடன் வருவேன் .......... என்பதைவிடவா இது பெரிது
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது!
கேட்க வாசிக்க நன்றாக இருந்தாலும் இவர்கள் மீதான நம்பிக்கை என்பது மட்டும் என்னவோ இன்னும் என் போன்ற பலரதும் மனதிலும் தோன்றவில்லை நம்பிக்கையே வாழ்க்கை என்று தொடரவும் முடியவில்லை. சிங்கள பௌத்த அரசுகள் பல இவர்களுக்கு முன்னே வந்து பல வாக்குறுதிகளை ஈழத் தமிழ் மக்களின் முன் வைத்து ஏமாற்றிய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெள்ளை வேட்டியுடன் முகத்தை எல்லாவற்றையும் நாம் இழந்து விட்டோம் என்ற தோரணயில் இறுக்கமாக வைத்துக் கொண்டு தேசியம் தமிழினம் என்று உரக்க அனல்பறக்க பாராளுமன்றத்தில் உரையாற்றி விட்டுப் பின்கதவால் சிங்கள அமைச்சர்களுடன் இது தான் எங்கள் அரசியல் எனக் கைலாகு கொடுக்கும் தேசிய வியாபாரிகளைவிட இந்தக் கோமாளி DR. அர்ச்சுனா எவ்வளவோ மேல் என நான் நினைக்கின்றேன் காமெடிக் பீசுகள் எங்குதான் இல்லை காமெடிக் பீசுகளுக்குத் தான் இப்போது வாக்குகள் அதிகமாக கிடைக்கின்றன
-
சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
தேசிய பட்டியலில் கிடைத்தது ஒன்று எதற்கு இரண்டிற்கு அடிபிடி இவருக்கு நாட்டு நடப்புத் தெரியாதா
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன் தோல்வியைத் தழுவி அரசியல் தொழிலை விட்டுவிட்டு தனது அப்புக்காத்து வேலையை மட்டுமே செய்ய உள்ளதால் மோகன் அண்ணை சேர்வரை மாத்தும் போது செலவைக் கட்டுப்படுத்தலாம். உறவுகளுக்குள் பெரிதாக உரசல் வராது😂
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
அனுர என்ற தனிப்பட்ட ஒருவருடைய சிந்தனை என்பது ஒன்றாகவும் அவர் தங்கியிருக்கும் அமைப்பின் சிந்தனை என்பது வேறாகவும் அவர் சார்ந்த ஒட்டு மொத்த மக்களின் சிந்தனை என்பது இன்னுமொரு வேறுபாடாகவும் இருக்கலாம். இந்தச் சிந்தனைகளில் பலதோ அல்லது ஓர் சிலதோ ஒரு இடத்தில் சந்திக்கும்போது ஒரு தீர்வுக்கு அவர்கள் வரலாம். ஆனால் அந்தத் தீர்வு என்பது அவர் சார்ந்த ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பாக இருக்காவிட்டால் அது அவருடைய இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் . ஆகவே அவர் வழங்கும் தீர்வு என்பது அவர் சார்ந்த ஒட்டுமொத்த மக்களின் விருப்பமானதொரு தீர்வாகவே இருக்க வாய்ப்பு இருக்கலாம். ஆகவே தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இலவு காத்த கிளியின் நிலைகுத் தள்ளப்படலாம்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
கட்டாயம் அவர் தான் தேசியப்பட்டியல் மூலம் செல்வார் அவருடைய கட்சி தான் இந்த முடிவை எடுக்கும். ஆனாலும் அந்தக் கட்சிக்காரர்கள் அல்லது முடிவை எடுத்தவர்கள் யார் என்று மட்டும் கேட்கக்கூடாது அப்படிக் கேட்டால் சுமிக்கு கேட்ட கோபம் வரும்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பையன்.... நான் அறிந்தவரையில் அரசியலில் ஒருவரை நம்புவது என்பது சரியானது அல்ல. மக்களின் தேவையறிந்து அவற்றை யார் நிறைவு செய்கின்றார்களோ அவர்களே மக்களின் தெரிவிலும் முன் நிற்பார்கள். இது காலத்துக்கு கால வேறுபாடும். மக்களின் அன்றைய தேவையைப் பொறுத்த உள்ளது.🙂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஜீ இப்படி எங்களையெல்லாம் நையாண்டி செய்தால்..... ஏழு பைத்தியங்கள் இங்கே உலாவுகின்றன😎
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை பையன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சென்ற தேர்தலில் மாபெரும் தவறை இழைத்தவர்கள். கிழக்கில் இருந்து ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைச் செய்யாதவர்கள் மக்கள் காத்திருந்து பதில் சொல்லியுள்ளார்கள்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இனி மற்றவர்கள் எதைக் கேட்கின்றார்கள் என்பதை ஆராயவேண்டிய அவசியமில்லை மக்களே தீர்மானித்து விட்டார்கள் இதை கடந்த அரசாங்கங்களின் முன்னிலையில் தேர்தலுக்கு முன்னரே சுமந்திரன் ஐயா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இனப்பிரச்சனைக்கு முன்னர் வகுப்பு வாதம் களையப்பட வேண்டும் தொழில் ரீதியான வேறுபாடுகள் களையப்பட வேண்டும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் இப்படி நிறையவே தங்களுக்குள் தீர்க்கப்படாத அவலங்களை தேசியம் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொண்டு இனப்பிரச்சனைக்கான தீர்வை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது .இதுவரை எந்த ஒரு மேட்டுக் குடி அரசியல்வாதியும் யோசிக்கவில்லையே
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் அதற்கு இணங்க மக்கள் வாழட்டும் நான் பிறந்த வீட்டில், அதன் சூழலில் சிங்களம் படித்த தமிழ் பட்டதாரிகள் பலரும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இல்லாத அறிவா எங்களிடம் இருக்கின்றது . அங்கிருக்கும் மக்கள் தயார் நாங்கள் தான் இன்னும் எதோ ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றோம்