Everything posted by வாத்தியார்
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
சரி என்னுடைய கருத்தும் அது தான் தமிழ் நாட்டில் சீமான் தலைமையில் அவரது கட்சசி வளர்ந்தே வருகின்றது . அடுத்த சட்டசபைத் தேர்தலில் (2026) சீமானின் நா த க 12 விழுக்காடு வாக்குகளுக்கு மேலே👍 பெற்று உங்கள் பந்தயத்திற்கு நான் ரெடி தோற்றால் அதாவது சீமான் 12 விழுக்காடு வாக்குக்களை பெறாவிட்டால் நான் இந்தக் களத்தில் நீங்கள் சொல்லும் ஒத்தை யூரோவை நன்கொடையாக அளிக்கின்றேன். 🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது யார் செய்த சதியோ😂 காத்து எங்கள் பக்கம் வீசுமா 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வைப்போம் என்று யோசிக்கிறேன் இண்டைக்கு வைத்தால் நாளைக்கு வேலை செய்யும் என்ன மாதிரி .... ஆனால் கொஞ்சம் செலவாகும் யோசித்து முடிவைச் சொல்லுங்கோ 😂😇 கதையோட கதையா முதல்வர் நந்தனாருக்கும் அரசவைக் கவிஞர் புலவர் அவர்களுக்கும் இதர முன்னாள் முதல்வர்கள். அரசவை உறுப்பினர்களுக்கும் அடியேனின் வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கும் அவன்தாழ் வணங்கி அவன் புகழ்பாடும் புலவருக்கும் ஏனைய முனிவர்கள், தேவர்கள், வீரர்கள் எனக் களமாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விரைவில் மாற்றம் ஒன்று வராதா என எங்கும் மனித குலத்தவர்களுக்கான பதில் ..... காத்திருங்கள்.... கலங்காதீர்கள்..... கவலையை மறந்து..... கலகலப்பாக இருங்கள்.... உங்களுக்கான நேரம் வரும் ஆனால் வராமலும் விடலாம் ... .😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யுவர் ஆர்னர் IPL கிரிக்கெட்டு ஒரு சூதாட்டம் அந்த விளையாட்டில் எல்லோராலும் வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாது ஒருவர் அல்லது இருவர் சரி அதையும் மீறிச் சென்றால் மூன்று அல்லது நான்கு பேரால்தான் எப்போதுமே சரியாகக் கணிக்க முடியும்🤣 . எப்போதும் எல்லோரும் கணிப்பிடும்படி விளையாடினால் சூதாட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடும்.😇 காசு பணம் துட்டு காசு பணம் துட்டு அப்ப டியே ரிப்பீட்டு.😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நலங்கிள்ளி என்று ஒரு மன்னன்..... 😂சங்க காலத்து மன்னன்..... கோவூர் கிழார் என்ற புலவர்😂 அவனை மட்டுமே பின்தொடர்ந்து..... அவன் புகழ் பாடி வந்தார்..... ஒருமுறை மந்திரி ஒருவர் கேட்ட கேள்விக்கு..... கிழார் , நான் நலங்கிள்ளி கூட்டத்துக் கலைஞன்....... பிறரைப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்பாதவன்........... அவனை மட்டுமே பாடுவேன். “அவன் தாள் வாழ்க”. என்று மட்டுமே பதில் கூறினார் அது போல இங்கே எங்கள் புலவர் முதல்வர் நந்தனாரையே பின்தொடர்வது அவருடைய புகழ் பாட என்பதே அன்றி வேறொன்றுமல்ல😇 வாழ்க முதல்வர் புகழ்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்தும் தனது முதல்வர் பதவியைத் தக்க வைத்த தளபதி நந்தனாருக்கு வாழ்த்துக்கள் 😂. மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் 🤣 முதல்வரின் புகழ் பாட புலவர்களையும் தன் பரிவாரங்களுடன் அழைத்துச் செல்கின்றார் 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
96 ஓட்டங்களுக்கு மேல் பஞ்சாப் அணி இலகுவாக அடைந்து விடும். இன்று எந்த அணி வென்றாலும் RCB அணியில் இன்று பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதை Tim David 🏏 வென்றுவிட்டார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை எந்த அணி வென்றாலும்..... மகிழ்ச்சி 🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புதிய முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் 🙏👍😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு மாதிரி மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு தண்ணியைக் காட்டி விட்டு படைத்தளபதி நந்தனார் ஆட்சியைக் கைப்பற்றி விட்டாரா ...... 😂 அல்லது மன்னர் தனது பதவியைக் காப்பாற்ற....... பலமுறை படைத் தளபதியை ஒற்றனாக எதிரிகளிடம் அனுப்ப.... எதிரிகள் படைத்தளபதிக்கு ஆசை காட்டி..... மன்னருக்கு மோசம் செய்ய வைத்து விட்டார்களா.... 🤣 என்ற சந்தேகம் படை வீரர்கள்களிடம் காணப்படுகின்றது விரைவில் தனது படையணியைத் திரட்டி ஆட்சியைக் கைப்பற்ற மன்னர் கங்கணம் கட்டி ஒற்றைக் காலில் நிற்பதாக ஒரு செய்தி கூறுகின்றது 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்து போர்க்களத்தில் தனது போர்வாளுடன் முன்னணியில் எதிரிகளின் சிம்மசொப்பனமாக😅 வலம் வரும் எங்கள் மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு எங்கள் வாழ்த்துக்கள்😂
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
கடலில் அதிக தூரம் நீந்திக் கடக்கவேண்டிய நிலை வந்தால் களைப்புவரும்போது ஒரு சிறு துரும்பாவது கிடைக்காதா என்று நினைக்கும் நிலையில் தான் ஈழத்தமிழர்களின் நிலையும் இப்போது இருக்கின்றது. கிடைத்ததை பற்றிக் கொண்டு அவர்கள் தங்களின் இருப்பைத் தக்க வைப்பதில் என்ன தவறு இருக்கின்றது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்லை அதையும் நான் கவனித்தேன் அணியின் தலைவராக பல இடங்களில் சிறப்பாகச் செயற்பட்டது உண்மை. சிறப்பாக விளையாடியதும் உண்மை இருந்தாலும் கிரிக்கெட் வாரியம் அவரைச் சிறந்த வீரராக தேர்ந்தெடுத்தது சரியல்ல அந்தப் பந்து வீச்சாளர் சிறப்பாகச் செயற்பட்டதை யாரும் பெரிதாக எடுக்கவில்லை தல மட்டுமே பெரிதாகத் தெரிந்தது அது தான் எனது ஆதங்கம்🙏
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
என்னைப்பொறுத்தளவில் இந்திய நாட்டு அரசியல் மட்டுமே எப்போதும் இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது- இனியும் இருக்கும் . தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஒரு நாளும் இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்க முடியாது . ஆனால் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஈழத் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியும் என்று பரப்புரை செய்து தன் அரசியல் வாழ்வைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களின் ஒருவர் தான் சீமான். சரி அவர் தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு ஈழத் தமிழர்களை முன்னிறுத்துவதால் அவருடைய வளர்ச்சி குறையவில்லை ஒவ்வொரு தேர்தலிலும் அவருடைய வாக்கு வங்கி மேலே செல்கின்றதே , அப்படியென்றால் தமிழ் நாட்டு மக்களிடையே ஈழத் தமிழ் மக்கள் மீது இருக்கும் கரிசனை அதிகரிக்கின்றது என்றுதானே எடுக்க வேண்டும். தமிழ் நாட்டு மக்களிடம் ஈழப்போராட்டத்தின் மீது கரிசனை இருக்கும் வரை ஈழப்போராட்டம் தக்க வைக்கப்படும்.. இந்தக் கரிசனை தக்க வைக்கப்பட வேண்டும். சீமான் சுயநல அரசியல் செய்தாலும்..... இன்றைய நிலையில் தமிழ் நாட்டு மக்களை ஈழப் போராட்டத்தின்பால் ஈர்த்து வைத்திருக்கும் ஒரு கருவியாக நாங்கள் சீமானைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ம் ம் பின்ன கடைசிக் காலத்திலாவது ஒரு வெற்றியை தக்க வைத்ததால் தானே தல தல யா இருக்கலாம் எனக்கு ஒரு சந்தேகம் இவரும் அவாளைப்போல தமிழ் நாட்டின் மூனா ஆக நினைப்பாரோ😛
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
முதல் தலைமுறை பட்ட கஷ்டங்களினால் அனுபவத்தினால் இரண்டாம் தலைமுறை சற்றுப் பிறழ்வின்பால் சென்றாலும்.... மூன்றாம் தலைமுறையை காப்பாறும் முயற்சியில் ஆவது முதலாவது தலைமுறையினர் ஈடுபடுவார்கள் என நான் நினைக்கின்றேன் அப்போது மம்மி டாடி வராது அப்பா அம்மா என்ற சத்தம் வருவதற்கான அறிகுறிகள் எம்மிடையே அதிகமாக காணப்படுகின்றது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான்கு சுற்று பந்து வீச்சில் 13 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து ஓட்டங்களை அதிகமாக கட்டுப்படுத்திய பந்து வீச்சாளரைக் கௌரவிக்காமல் சென்னையின் தல யைக் கௌரவிக்கக் காத்துக் கொண்டிருந்த மாதிரி தல க்கு கௌரவம் கிடைத்தது கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் கிடைத்த ஒரு பலத்த அவமானம். இதில் இருந்து தெரிய வரும் ஒரு விடையம் என்ன வென்றால் பணம் பார்ப்பதற்கான ஒரு நிகழ்வே இந்த ஐ பீ எல் சென்னை முதற் சுற்றில் வெளியேறினால் வியாபாரம் பாதிக்கப்படும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் வீரப்பையன்👍 மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன்🙏 தனது படைத்த தளபதியின் வீர தீர சாதனைகளால்😇 எதிரிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார் வாழ்க மன்னர் புகழ் 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமா சென்னையின் தல இன்று பத்துக்கட்டளைகளை தனது படையணிக்கு பிறப்பித்து அந்தக் கட்டளைகளை கண்ணும் கருத்துமாகப் பின் பற்றினால்( இன்னும் பல தோல்விகளை அட சி கருமம் கருமம் )😂 மேலும் பல வெற்றிகளை பெற்று முன்னேறலாம் என அறிக்கை விட்டுள்ளார்😗
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளையான் விளையாட்டில் யார் யாரைத் தெரிவு செய்தார்கள் என்ற விபரத்தைத் தந்தால் தான் இன்று இரவு நல்ல கனவு வருமா ...அல்லது கெட்ட கனவு வருமா..... எண்டு ஒரு முடிவுக்கு வரலாம் 😂🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்று மகா மன்னர் அடித்த குத்துக் கரணம் இன்று அவரின் முடியைக் காப்பாற்றியுள்ளது 😇 படைத் தளபதியை எதிரிகளின் கோட்டைக்குள் அனுப்பி அவர்களுக்கு 😂 பலத்த சேதத்தை ஏற்படுத்தி இன்றும் மன்னராகத் திகழ்கின்றார் 🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன மாயமோ இது என்ன மாயமோ SRH காரத் தம்பி ஏன்னா ஒரு விளாசல் பாத்து அப்பன் பாத்து 😂
-
வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் - பிரதமர்
இது மிகவும் தப்பான செய்தி 80 களுக்கு முன்னர் காரைநகரின் சனத்தொகை அண்ணளவாக 40 000 இப்போது அண்ணளவாக 9000 அல்லது 8ஆயிரம் என்று தான் நாங்கள் அறிந்தோம். தேசிய மக்கள் சக்தியில் இணைந்திருக்கும் காரைநகர் வாழ் மக்கள் இதை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை யா படித்த மக்கள் வாழும் இடம் என்று வேறை அம்மையார் புகாழாரம் சூட்டி விட்டுச் செல்கின்றார்... அம்மையார் கல்வியமைச்சரும் அவர் தானே இதைப்பற்றி எந்த ஆய்வும் இல்லாமல் பத்திரிகைகளும் அப்படியே அதையே செய்தி ஆக்கி இருப்பது இன்னும் கவலைக்குரியது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மன்னர் கையை விரித்து விட்டாரே கவனிக்க வில்லையா 😂 அவருக்கு தனது படைத் தளபதியை சிம்மாசனத்தில் அமர்த்தும் ஆசை வந்து விட்டது ஆனால் எதிரி நாட்டுப் படையோ தளபதியை எதிர்த்து முன்னேற முனைப்பாகச் செயற்படுகின்றது 😃.👇 நாளை களத்தில் தெரிந்துவிடும் 😜